20 டிசம்பர், 2010

நாகவல்லி!


நம்ம வீட்டு கல்யாணத்துலே நிச்சயமா இந்த 'மேட்டர்' நடந்திருக்கும். பந்தி பரிமாறி சரக்கெல்லாம் தீர்ந்துட்டிருக்கும். கடைசியா ஒரு பத்து, பதினைஞ்சி பேருக்கு சாம்பார், பொறியல், ஊறுகாய் எதுவுமே மிச்சமிருக்காது. சோறு மட்டும் ரெண்டு, மூணு கூடை எக்ஸ்ட்ராவா இருக்கும். சமையல்கார மாமா சட்டுபுட்டுன்னு ஒரு வேலை செய்வாரு. மீதமிருக்கிற கத்தரிக்காய், லொட்டு, லொசுக்கையெல்லாம் போட்டு ஒரு இண்ஸ்டண்ட் வத்தக்குழம்பு வெச்சுத் தருவாரு. டேஸ்ட் பிரமாதப்பட்டு விடும்.

நாகவல்லி அந்த வகை. பொன் வைத்த இடத்தில் பூ வைத்தமாதிரி சூப்பர்ஸ்டார் கேரக்டருக்கு வெங்கடேஷ். ஜோதிகா கேரக்டருக்கு அனுஷ்காவென்று கிடைத்த ஆட்களைப் போட்டு ஒருமாதிரியாக படத்தை தேத்திவிட்டார் இயக்குனர். பி.வாசுவுக்கு சமகாலப் போக்கில் படங்களை எடுக்க முடியவில்லையே தவிர, சந்திரமுகியை எத்தனை முறை வேண்டுமானாலும் திரும்ப திரும்ப பக்காவாக ரீமேக்க முடியுமென்று தோன்றுகிறது.

வெங்கடேஷ், ரஜினியை மேனரிஸம், உடையலங்காரம் என்று எல்லாவிதத்திலும் 'பிட்' அடித்திருக்கிறார். இருந்தாலும் சூப்பர்ஸ்டாரின் கம்பீரமும், வேகமும், ஸ்டைலும் வந்துவிடுமா என்ன? இரண்டாம் பாதியில் வரும் நெகட்டிவ் கேரக்டரில் அசத்துகிறார். குறிப்பாக க்ளைமேக்ஸ் டேன்ஸ். என்னதானிருந்தாலும் சந்திரமுகி ரஜினியை ரசித்தவர்களுக்கு, வெங்கடேஷை பார்க்க கொஞ்சம் பாவமாகதானிருக்கிறது. வேட்டையனைப் பார்த்துவிட்டு வெங்கடேஷைப் பார்க்க கொஞ்சம் காமெடியாகவும் இருக்கிறது.

அம்புலிமாமா கதைதான் என்பதால் லாஜிக் ஓட்டைகளை மன்னித்து விட்டுவிடலாம். இருந்தாலும் சில ஓட்டைகள் ஓஸோன் ஓட்டை மாதிரி அடைக்கவே முடியாத லெவலுக்கு ரொம்ப பெருசு. சாமியார் வரும் காட்சிகளையும், பேசும் வசனங்களையும் கண்டால் பகுத்தறிவுவாதிகளுக்கு பி.பி. எகிறி, அப்போலாவில் போய் அட்மிட் ஆகவேண்டியதுதான்.

அருந்ததியில் அட்டகாசப்படுத்தியதால் 'சந்திரமுகி' கேரக்டர் அனுஷ்காவுக்கு கிடைத்திருக்கிறது. அவரது அழகான அம்சமான சுழி கொண்ட வெண்ணிலவின் நிறம் கொண்ட பளீர் தொப்புளைத் தவிர்த்து வேறெதுவும் கவரும் அம்சம் இல்லை. அவரது காதலராக வரும் குணசேகரனை எங்கே போய் தேடிப் பிடித்தார்களோ தெரியவில்லை. செம த்ராபை.

க்ளைமேக்ஸுக்கு முந்திய அரைமணிநேரப் படம் திடுக் திருப்பங்களால் அசுரவேகம். இந்திரா சவுந்தர்ராஜன் கதை மாதிரி சற்றும் எதிர்பாராத 'கேரக்டர்' ஒன்று திடுமென்று உள்நுழைந்து படம் மொத்தத்தையும் ஆக்கிரமிக்கிறது. அதே பழைய சந்திரமுகி டெக்னிக்தான் என்றாலும், இதற்காகவே இலக்கில்லாமல் முதல் பாதியை ஓட்டிய பி.வாசுவை மன்னித்துவிடலாம்.

ஒருவேளை இந்தப் படத்தில் ரஜினி நடித்திருந்தால், பழைய சந்திரமுகியின் சாதனையை சர்வசாதாரணமாக முறியடித்திருக்கலாம். இருந்தாலும் ஓக்கே. நாகவல்லி நாராசமான படமல்ல. இரண்டரை மணி நேரம் களைப்படையாமல் சுவாரஸ்யமாக பார்க்க முடிகிறது.

நாகவல்லி - சந்திரமுகி ரிப்பீட்டேய்!

7 கருத்துகள்:

 1. தொப்புள் படம் போடவில்ல்லை. :(

  பதிலளிநீக்கு
 2. டுபுக்கு டோங்கிரி பற்றி விமர்சனத்தில் ஒன்றும் எழுதாது கவலையளிக்கிறது

  பதிலளிநீக்கு
 3. அனுக்ஷாவின் டக்கரான இடுப்பை தாண்டி கீழே வர முடியவில்லை என்பதால் விமர்சனம் படிக்கவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

  விமர்சனம் எழுதிவிட்டு கீழே அனுக்ஷாவின் புகைப்படத்தை இணைப்பது நல்ல பலனை தரலாம். அடுத்த முறை முயற்சிக்கவும்.

  பதிலளிநீக்கு
 4. எம்மாம் பெரிய அனுஷ்கா ஃபோட்டா...?

  பதிலளிநீக்கு
 5. /அனுக்ஷாவின் டக்கரான இடுப்பை தாண்டி கீழே வர முடியவில்லை என்பதால் விமர்சனம் படிக்கவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.//
  அதே அதே ...

  பதிலளிநீக்கு