8 நவம்பர், 2010

வ – குவார்ட்டர் கட்டிங்!

'குவார்ட்டர் கட்டிங்' – இலக்கியச்சுவையும், தமிழ் கவுச்சி வாடையும் மிகுந்த இந்த ஒரு வார்த்தையை வைத்துக் கொண்டு என்னென்னவோ விளையாட்டு காட்டலாம். 90 மில்லிக்காக தமிழையே விற்றுத் தீர்க்கவும் கல்தோன்றி மண்தோன்றா காலத்துக்குடியின் இன்றைய வழித்தோன்றல் தயாராக இருக்கிறான். அன்பார்ச்சுனேட்லி டாஸ்மாக் பார்களில் இப்போது 'கட்டிங்' போடுவதில்லை. பார் வாசலிலேயே நாயாக காத்திருந்து, 'பார்ட்னரை' கண்டுபிடித்து 'ஷேர்' போட்டு 'கட்டிங்' அடிக்க வேண்டியிருக்கிறது.

வ என்று வரிவிலக்குகாகவும், குவார்ட்டர் கட்டிங் என்று கதைக்கு நியாயம் செய்யும் தலைப்பாகவும் வைக்கப்பட்டு தீபாவளிக்கு வந்திருக்கும் படம் பெரும் தலைவலியையும், அலுப்பையும் ஏற்படுத்துகிறது. இந்த களைப்பைப் போக்க 'கட்டிங்' விடலாமென்றால், நம்ம 'கட்டிங் பார்ட்னர்' தலைதீபாவளிக்காக ஊருக்குப் போயிருக்கிறார். சொந்தக்கதை, சோகக்கதை எதற்கு? படத்தின் கதையைப் பார்ப்போம்.

ஒரு சுபயோக சுபதினத்தில் ஹீரோ கோயம்பேட்டில் வந்து இறங்குகிறார். நாளை காலை 4 மணிக்கு அவர் சவுதிக்கு விமானம் ஏற வேண்டும். சவுதியில் ஃபிகர் வெட்ட முடியாது என்ற சட்டச் சிக்கல் கூட அவருக்கு பிரச்சினையில்லை. சரக்கடிக்க முடியாது என்ற யதார்த்தம்தான் சுடுகிறது. கடைசியாக ஒரு 'குவார்ட்டர்' விட முடிவெடுக்கிறார். துரதிருஷ்டவசமாக தேர்தல் விடுமுறையாக டாஸ்மாக் 3 நாட்களுக்கு மூடியிருக்கிறது. ஒரு கட்டிங்குக்காக நாக்கைத் தொங்கபோட்டுக்கொண்டு சிட்டி முழுக்க அலைகிறார். அந்த இரவில் நடைபெறும் சம்பவங்கள்தான் 'வ'

மேற்கண்ட பாராவைப் படிக்கும்போது சுவாரஸ்யமான கதையாகவே தோன்றும். பலகீனமான மொக்கைத் திரைக்கதையால் தண்ணீர் கலந்து பீர் அடிப்பதுபோல படம் பப்பாடக்கர் ஆகிறது. ஒருவேளை வெங்கட்பிரபுவுக்கு இந்த 'லைன்' கிடைத்திருந்தால், பக்காவான சைட்டிஷ் பரிமாறி மஜாவான பார்ட்டியாக மாற்றியிருப்பார்.

தமிழ்ப்படம் ஹேங்ஓவரிலேயே இன்னமும் ஹீரோ சிவா இருப்பது உறுதியாகிறது. சுத்தமாக நடிக்க வராவிட்டாலும், அசால்ட்டான பாடி லேங்குவேஜ், குடிகார டயலாக் டெலிவரி என்று அவருக்கான பிளஸ் பாயிண்ட்ஸ் நிறைய. எஸ்.பி.பி.சரணின் நடிப்பு ஆச்சரியம். மாட்டு டாக்டராக வருகிறார். நிஜமாகவே கார்ட்டூன் பசுமாடு மாதிரி முகத்தோற்றம் அவருக்கு. சரண் போட்டு வரும் டிரஸ் எங்கே கிடைக்குமென்று தெரியவில்லை. கலக்கல் காம்பினேஷன்.

லேகா வாஷிங்டனுக்கு ஹீரோயின் மாதிரி ஒரு கேரக்டர். ஆனால் ஹீரோயின் அல்ல. ஜரூராக ஸ்டார்ட் ஆகும் படம், அங்கங்கே கார்பரேட் அடைப்பு ஆகி திணறிக் கொண்டிருக்கிறது என்றால், லேகா வந்ததுமே பஞ்சர் வேறு ஆகித் தொலைக்கிறது. லேகாவுக்கான பாடல் சன் மியூசிக்கில் தனியாகப் பார்த்தால் ஒருவேளை நன்றாக இருக்கக்கூடும். மாணிக்க விநாயகம் வேறு உச்சஸ்தாயி தொண்டையில் பாடி பாடி கழுத்தறுக்கும் காட்சிகள் ஏன் தான் இடை இடையே வந்து தொலைக்கிறதோ என்று நொந்துப்போக வேண்டியிருக்கிறது. கதையோடு அவரது காட்சியை இணைக்கிறோம் என்று க்ளைமேக்ஸில் ஏனோதானோவென்று வாந்தியெடுத்து வைக்கிறார்கள்.

படமே மொக்கை என்றால் பாடல்கள் படுமொக்கை. இசை சக்கை. ஜான் விஜயின் ஒரு ஆக்‌ஷனே கொடுமை. இந்த அழகில் டபுள் ஆக்டிங் வேறு. துரத்துகிறார்கள். ஓடுகிறார்கள். துரத்துகிறார்கள். ஓடுகிறார்கள். பரபரவென்று ஓடியிருக்க வேண்டாமா படம்? ம்ஹூம். ஓபனிங் சீனில் இருந்து எண்ட் கார்ட் வரை செல்ஃப் எடுக்கும் என்று நம்பி நம்பி வெம்பிப் போகிறோம். 'ஓரம்போ' எடுத்த இயக்குனர்கள்தான் இவர்கள் என்று யாராவது முப்பாத்தம்மன் மீது கற்பூரம் ஏற்றி சத்தியம் செய்தால் கூட நம்பமுடியாது.

பாலியல் விடுதியைக் காட்டுகிறார்கள். ரசிகனுக்கு கொஞ்சம் கூட பாலியல் மூடு வரவில்லை. அதேபோல்தான் படமும். டைட்டிலில் மட்டுமே இருக்கும் போதை, படத்தின் உள்ளடக்கத்தில் துளியூண்டு கூட இல்லை. தனித்தனிக் காட்சியாக பார்த்தால் சிரிக்க முடிகிறது என்றாலும், ஒட்டுமொத்த படமென்றுப் பார்த்தால் குடிகாரன் எடுத்து வைத்த வாந்தியாகதான் இருக்கிறது. 4 மணிக்கு ஏர்போர்ட்டில் இருக்க வேண்டிய நாயகனுக்கு, குவார்ட்டர் கிடைக்காமல் வீணாகும் நேர நெருக்கடியை ரசிகனுக்கு சீன் பை சீனாக 'பாஸ்' செய்திருக்க வேண்டாமா? இதனாலேயே படம் ஃபெயில் ஆகுதுங்க சார்.

வ – வந்துடாதீங்க!

13 கருத்துகள்:

 1. குவார்ட்டர் பிளைட்'ல குடுப்பாங்கலே ..

  பதிலளிநீக்கு
 2. >>ஓரம்போ' எடுத்த இயக்குனர்கள்தான் இவர்கள் என்று யாராவது முப்பாத்தம்மன் மீது கற்பூரம் ஏற்றி சத்தியம் செய்தால் கூட நம்பமுடியாது.<<

  :((((

  பதிலளிநீக்கு
 3. கிக்குல மாட்டப்பாத்தேன்.
  நன்றி.

  பதிலளிநீக்கு
 4. //ஒருவேளை வெங்கட்பிரபுவுக்கு இந்த 'லைன்' கிடைத்திருந்தால், பக்காவான சைட்டிஷ் பரிமாறி மஜாவான பார்ட்டியாக மாற்றியிருப்பார்//

  :)))

  பதிலளிநீக்கு
 5. எதிர்பார்த்தது, அனுபவித்தது, கதை, ஹீரோ, சரண், ஜான் விஜய், பாடல்கள்.. அப்படியே சேம் பிஞ்ச் லக்கி.

  பதிலளிநீக்கு
 6. Naan patha bodhu, theater la rende peru...Naan en wife....

  En wife thittikkite irunda...escape aga ...enakku padam pudichi irukkunnu solli samalichen....

  பதிலளிநீக்கு
 7. //குவார்ட்டர் பிளைட்'ல குடுப்பாங்கலே .//

  என்னப்பா? படத்தையே முடிச்சுட்ட?

  பதிலளிநீக்கு
 8. "Harold and Kumar go to White Castle" ஹாலிவுட் படத்தின் பாதிப்பு போல் தெரிகிறது கதை.அதில் கஞ்சா அடித்துவிட்டு பர்கர் தேடி ராவெல்லாம் இரண்டு நண்பர்கள் அலைவது கதை. ஆனால் அது வெகு ஜாலியான சுவாரஸ்யமான படம். ரொம்ப எதிர்பார்த்தேன்..ஹும்ம்!

  பதிலளிநீக்கு
 9. [im]http://4.bp.blogspot.com/_x8A7Iz4rjIo/TFv4lCeCrBI/AAAAAAAAAD8/qBwJu8f0j9M/s1600/vomit.jpg[/im]

  பதிலளிநீக்கு
 10. படம் பார்த்து விட்டு வந்த வெறுப்பில் ராவாக ஒரு 1/2 விட்டு படுத்தேன்...

  இருந்த மப்பில் என் வாயிலிருந்து “வ” யூனிட்டிற்கு சூப்பர் “வசை” கிடைத்திருக்கும்........

  பதிலளிநீக்கு
 11. ஏப்பா இது ஒரு டைப்பான படமப்பா!ஜாலி மூடுல பாரு,நல்லாதாம்பா இருக்குது.தமிழுக்கு இது புதுசு.

  பதிலளிநீக்கு