29 அக்டோபர், 2010

வலையுலக ப்ரைவஸி!

நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் சென்னையில் ஒரு பதிவர் சந்திப்பு நடந்தது. பதிவுலகுக்கு புதியவனாக, ஆர்வக்கோளாறோடு அந்த சந்திப்பில் கலந்து கொண்டேன். சந்திப்பில் கலந்துகொண்ட பெரியவர் ஒருவர் என்னைப் பற்றி கொஞ்சம் 'பர்சனலாக' விசாரித்தார்.

"கல்யாணம் ஆயிடிச்சா?"

அப்போது நான் புதுமாப்பிள்ளை. அந்த ஜோரில் "ஆயிடிச்சி சார்!"

"லவ் மேராஜா? அரேஞ்ச்ட் மேரேஜா?"

"அரேஞ்ச்ட் மேரேஜ்தான் சார்!"

"பொண்ணு சொந்தமா? அசலா?"

"கொஞ்சம் தூரத்து சொந்தம் சார். என்னோட ஒண்ணு விட்டு அண்ணனோட ஒண்ணு விட்ட மச்சினிச்சி!"

அவ்வளவுதான் நடந்தது விவாதம். அடுத்த ஓரிரு நாட்களிலேயே "சாதி மதத்தை எதிர்க்கும் பகுத்தறிவாளர்கள் சொந்த சாதியில்தான் திருமணம் செய்துக் கொள்கிறார்கள்" என்று பெரியவரால் என்னைச் சுட்டி ஒரு பதிவில் எழுதப்பட்டது.

"அய்யிரு யாரும் பொண்ணு தரலை. என் சாதிக்காரன் தான் எனக்கு பொண்ணு தந்தான். எந்த அய்யிராவது பொண்ணுதர ரெடியா இருந்தா இன்னொரு கல்யாணம் பண்ணிக்க ரெடி" என்று சூடாகப் பதில் அளித்தேன்.

இப்போது நண்பர் ராஜனின் முறை.

பதிவர் சந்திப்புகளிலும், சுக-துக்க விழாக்களிலும் பகிர்ந்துகொள்ளும் 'பர்சனல்' தகவல்கள் பொதுவாக பதிவர் வட்டத்தில் பரிமாறக் கொள்ளப் படுவதில்லை. செந்தழல் ரவி, பாலபாரதி, அதிஷா, சுகுணாதிவாகர், வரவரையான், முத்து (தமிழினி), குழலி, கோவி.கண்ணன் உள்ளிட்ட பல நண்பர்களுக்கு என்னைப் பற்றிய 'பர்சனல்' தகவல்கள் தெரியும். அவர்களைப் பற்றி எனக்கும் தெரியும். இவர்களில் சிலர் என் இல்ல விழாக்களுக்கும் வந்ததுண்டு. சுகுணாதிவாகரின் திருமணம், செந்தழல் ரவி இல்ல நிகழ்ச்சி, கோவி.கண்ணன் இல்ல புதுமனைபுகுவிழா போன்ற தனிப்பட்ட பல நிகழ்ச்சிகளுக்கு நானும் சென்றிருக்கிறேன். ஆயினும் தனிப்பட்ட விஷயங்களை நட்புக்கு மரியாதை தந்து யாரும் பொதுவில் வைத்ததில்லை. இது ஒரு வலையுலகப் பண்பாடாகவே அனுசரிக்கப் படுகிறது.

இப்போது ராஜனின் திருமணம் எப்படி நடந்தது, மண்டபத்துக்கு பணம் கட்டியது யார், அய்யிரு மந்திரம் ஓதினாரா என்றெல்லாம் பதிவுகளிலும், பின்னூட்டங்களிலும் விஸ்தாரமாக அலசப்படுகிறது. அடுத்தவர் வீட்டு விவகாரங்களை - அதுவும் நண்பர்கள் வீட்டு விவகாரங்களை பொதுவில் வைத்து பேசுவது கேவலமாக இல்லையா?

சமரசங்களுக்கு இடையே கொஞ்சமேணும் கொள்கையைப் பாவிக்கும் சூழலில்தான் பலரும் இருக்கிறோம். ஏனெனில் இதே கொள்கையோடு எங்கள் அப்பன், ஆத்தா இருக்கவில்லை. எங்கள் கொள்கை எங்கள் குடும்பங்களுக்கு புதியது. அவர்கள் ஏற்றுக்கொள்ள நாளாகும். ஏற்றுக் கொள்ளாவிட்டால் குடும்பத்தை விட்டு வெளியே வருமளவுக்கு யாரும் நிர்மூடர்களாகவும் இல்லை. வலிமையான இந்தியக் குடும்ப கட்டுமான முறையில் எது சாத்தியமோ, அதைதான் செய்யக்கூடிய நிலையில் இருக்கிறோம்.

ராஜன் விஷயத்தில் பெரியவர் செய்திருக்கும் பெருந்தொண்டால், இனி பதிவர்கள் தங்கள் இல்ல நிகழ்ச்சிகளுக்கு மற்ற பதிவர்களை அழைக்க கொஞ்சம் அச்சப்படுவார்கள். அதிலும் 'பெரியவர்' கலந்துகொள்கிறார் என்றால், அழைத்தவர் வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டுதான் அடுத்த சில நாட்களுக்கு இருக்க முடியும் என்கிற நிலை ஏற்பட்டிருக்கிறது. 'ப்ரைவஸியான' மேட்டர்களை ரொம்ப நெருக்கமில்லாத பதிவர்களோடு யாரும் பகிர்ந்துகொள்ளாமல் இருப்பதே பாதுகாப்பான அம்சம். ராஜன் திருமணம் நமக்கெல்லாம் ஒரு பாடம்.

49 கருத்துகள்:

 1. இனியாவது பெரியவர் திருந்துவாரா.?

  பதிலளிநீக்கு
 2. எதைக் குறிப்பிடுகிறீர்கள். கிழக்குப் பதிப்பத்திற்கு எதிரே நடைபெற்றதே அதனையா...

  பதிலளிநீக்கு
 3. //ப்ரைவஸியான' மேட்டர்களை ரொம்ப நெருக்கமில்லாத பதிவர்களோடு யாரும் பகிர்ந்துகொள்ளாமல் இருப்பதே //

  ரொம்ப நல்லது!

  பதிலளிநீக்கு
 4. யார் அந்த பெரியவர்? சொன்னா நாங்களும் உஷாரா இருப்போம்ல...

  பதிலளிநீக்கு
 5. திருமணத்திற்க்கு வந்த பெரிய மனிதர் தொட்டிலை ஆட்டி விட்டு பிள்ளையையும் கிள்ளி விட்டு சென்றார்..! அந்த பெரிய மனிதரின் சின்ன புத்தியை நேர்த்தியாய் சமாளித்து இருக்கலாம்..! கிள்ளியதை வலிக்காத மாதிரி நடித்து கூட இருந்திருக்கலாம்..!ஆனால் ..! அவன் கிள்ளிட்டான்..கிள்ளிட்டான்னு கூச்சல் போடவே அந்த ’’பெரிய மனிதர்’’ தனது பரிவாரங்களுடன் கடிக்க ஆரம்பித்து விட்டார்...!

  பதிலளிநீக்கு
 6. எக்ஸ‌ல‌ன்ட் ல‌க்கி, க‌டைசி பாராகிராஃப் பெரும்பாலான‌ ச‌ராச‌ரி ப‌திவ‌ர்க‌ள் ம‌ன‌சுல‌ இருக்குற‌து, வார்த்தை மாறாம‌ எழுதிட்டீங்க‌..

  பதிலளிநீக்கு
 7. //"அய்யிரு யாரும் பொண்ணு தரலை. என் சாதிக்காரன் தான் எனக்கு பொண்ணு தந்தான். எந்த அய்யிராவது பொண்ணுதர ரெடியா இருந்தா இன்னொரு கல்யாணம் பண்ணிக்க ரெடி" என்று சூடாகப் பதில் அளித்தேன்.//

  அப்பவும் அய்யரு பொண்ணு தான் கேட்டதோ? வேற சாதியில தேடிப் பார்க்கத் தோணலையோ?

  பதிலளிநீக்கு
 8. திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் சந்திக்கும் பெரிசுகள் 'நேர்முக கேள்விகள்' எனக்குள் எரிச்சல் ஏற்படுத்தியதுண்டு.என்ன இன்டர்வியுவா?என்று முறைத்ததும் உண்டு.ஆனால் அதையே ஒரு பதிவாக போடுவது சுத்த அநாகரீகம்.அயோக்கியத்தனம்.

  பதிலளிநீக்கு
 9. //அவர்கள் ஏற்றுக்கொள்ள நாளாகும். ஏற்றுக் கொள்ளாவிட்டால் குடும்பத்தை விட்டு வெளியே வருமளவுக்கு யாரும் நிர்மூடர்களாகவும் இல்லை. வலிமையான இந்தியக் குடும்ப கட்டுமான முறையில் எது சாத்தியமோ, அதைதான் செய்யக்கூடிய நிலையில் இருக்கிறோம்.//

  ம்ம்ம்.. நல்லா சொன்னீங்க.. இது எல்லோருக்கும் புரிந்தால் சரி.

  பதிலளிநீக்கு
 10. அன்புள்ள லக்கி

  நீங்கள் (வால் பையன் , ராஜன் உள்பட ) விமர்சிக்கும் எல்லா விஷயங்களுமே யாராவது ஒருவருடைய பர்சனல் தானே!

  அப்படி என்றால் உங்களுக்கு தெரிந்தவர்களுடைய பர்சனல் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டது, தெரியதவர்களுடைய பர்சனல் போட்டு கிழிக்கப்படும். அப்படிதானே?

  பதிலளிநீக்கு
 11. //யார் அந்த பெரியவர்? சொன்னா நாங்களும் உஷாரா இருப்போம்ல...///

  நேராக ரத்னா கபே செல்லவும். அங்கே வாயில் போண்டாவை கொமுக்கிக்கொண்டு ஒருவர் உட்கார்ந்திருப்பார். அவர்தான். ஹி ஹி

  பதிலளிநீக்கு
 12. ///அப்பவும் அய்யரு பொண்ணு தான் கேட்டதோ? வேற சாதியில தேடிப் பார்க்கத் தோணலையோ?

  1:31 PM, October 29, 2010
  ///

  கேட்டது அய்யங்கார் என்பதை கவனத்தில் கொள்க. அது அந்த சூழலுக்கேற்ப பயன்படுத்தப்பட்டது..( ஒருவேளை நான் லக்கியை மிமிக்ரை செய்கிறேனோ ?)

  பதிலளிநீக்கு
 13. //நீங்கள் (வால் பையன் , ராஜன் உள்பட ) விமர்சிக்கும் எல்லா விஷயங்களுமே யாராவது ஒருவருடைய பர்சனல் தானே!

  அப்படி என்றால் உங்களுக்கு தெரிந்தவர்களுடைய பர்சனல் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டது, தெரியதவர்களுடைய பர்சனல் போட்டு கிழிக்கப்படும். அப்படிதானே?///

  மத நம்பிக்கைகள் மற்றும் அதில் உள்ள மூடத்தனங்கள் எப்ப பர்சனல் விஷயங்களாச்சு ?

  பதிலளிநீக்கு
 14. //இனியாவது பெரியவர் திருந்துவாரா.?//

  யாரைப்பாத்து என்ன கேள்வி கேட்டீங்க அரவிந்தன் ?

  பதிலளிநீக்கு
 15. தமிழ்மணத்தின் வரலாற்றிலேயே அதிக நெகட்டிவ் ஓட்டு வாங்கி, தென்பெண்ணை பாலாறு போன்று அனைவரும் துப்பிய எச்சிலாற்றில் நீந்தி கரை சேர்ந்து முகத்தை துடைத்துக்கொண்டு அதில் ஒரு ஹைப்பர்லிங்கையும் கண்டவர் போண்டா மாதவன்.

  பதிலளிநீக்கு
 16. நல்லா சொன்னீங்க.. இது எல்லோருக்கும் புரிந்தால் சரி.

  பதிலளிநீக்கு
 17. பலருடய வாழ்வில் விளையாடியிருக்கிறார் அந்த மகான்!,

  மெரினா பீச்சில் உயிரோடு சிலை மாதிரி நிக்க வைக்கனும், காக்கா உட்கார இடமில்லாம சுத்திகிட்டு இருக்காம் அங்கே!

  பதிலளிநீக்கு
 18. //அடுத்தவர் வீட்டு விவகாரங்களை - அதுவும் நண்பர்கள் வீட்டு விவகாரங்களை பொதுவில் வைத்து பேசுவது கேவலமாக இல்லையா?//

  //எங்கள் கொள்கை எங்கள் குடும்பங்களுக்கு புதியது. அவர்கள் ஏற்றுக்கொள்ள நாளாகும். ஏற்றுக் கொள்ளாவிட்டால் குடும்பத்தை விட்டு வெளியே வருமளவுக்கு யாரும் நிர்மூடர்களாகவும் இல்லை. வலிமையான இந்தியக் குடும்ப கட்டுமான முறையில் எது சாத்தியமோ, அதைதான் செய்யக்கூடிய நிலையில் இருக்கிறோம்.//

  //'ப்ரைவஸியான' மேட்டர்களை ரொம்ப நெருக்கமில்லாத பதிவர்களோடு யாரும் பகிர்ந்துகொள்ளாமல் இருப்பதே பாதுகாப்பான அம்சம். .//


  இவைகள் மிகுந்த கவனத்தில் எடுத்துக் கொள்ளப் படவேண்டியவைகள்.

  கருத்துக்களை செவ்வனே சொல்லப்பட்டிருக்கின்றன.

  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 19. பர்சனல் விஷயங்களை பொதுவுல பகிர்ந்துகொள்ள கூடாது.. சொல்லுறது யாரு லக்கி மாதிரி தெரியுது ரைட்டு...

  பதிவர்கள் சந்திப்பின் பொழுது நல்லவங்களுக்கு போன் போட்டு லைவ் ரிலே செய்யலாம்,
  அடுத்தவன் orkut idல போட்டோ திருடுவது,குடும்ப படங்களை திருடி மேட்டர் சைட்ல போடுறது எல்லாம் செய்யலாம்.. சுட்டி தேவைப்பட்டா சொல்லுங்க லக்கி குடுத்துடலாம்..

  பதிலளிநீக்கு
 20. கமெண்டு பாலோ அப்புக்கு.. கமெண்டு வருமா?

  பதிலளிநீக்கு
 21. //கமெண்டு பாலோ அப்புக்கு.. கமெண்டு வருமா?

  //
  ஏன் வராது

  பதிலளிநீக்கு
 22. //ராஜன் திருமணம் நமக்கெல்லாம் ஒரு பாடம்.//

  இனியும் பல பாடங்கள் நமக்கு வேண்டுமோ?

  வலையுலக வரலாறு மிகவும் வெளிச்சமாகவே இருக்கிறது. நன்றி.

  பதிலளிநீக்கு
 23. எனக்கும் நேர்முகத் தேர்வு நடத்தினாரு. இதுவரைக்கும் ஏதும் பதிவு வரலை.

  இப்ப வருமோ? அப்ப வருமோ?

  பதிலளிநீக்கு
 24. Why did n't u ask bride from other caste?
  Reddiyar
  Chettiyar
  Mukkulathor
  Vanniyar
  Vellalar
  Etc.,
  Etc.,
  கேட்டது ஒரு அய்யர் நு உங்களுக்கு எரிச்சல்..
  உங்களுக்கு உண்மையாக கேட்ட கேள்வி ய விட கேட்ட ஆளைத்தான் பிடிக்கல.
  ஏன் லவ் பண்ண நேரமில்லையா..
  சரி விடுங்க ..
  வேற சாதி பொண்ணு கிடைக்கிறவரைக்கும் கல்யாணம் பண்ணாம இருக்க வேண்டியது தான..

  பதிலளிநீக்கு
 25. ஏண்டா அனானி முண்டம்.. அதான் எந்த contextல கேட்டதுனு செந்தழல் எழுதியிருக்கிறத
  படிக்கலையா?

  பதிலளிநீக்கு
 26. நான் பதிவுலகிற்கு மிகவும் புதியவன். "தேசியத்தலைவரின் தாயார் பார்வதியம்மாள்" குறித்து டோண்டு போட்ட பதிவை எதேச்சையாகப் பார்த்து நெஞ்சு பொறுக்காமல் அதனை எதிர்த்து பின்னூட்டமிட்டேன். விடாமல் எல்லா விவாதத்திற்கும் பதில் சொன்னேன்.

  கடைசியாக ""மாவீரன் பிரபாகரன் "இந்தியாவின்" பெருவாரியான மக்களின் மதிப்புக்கு பாத்திரமானவர் அல்லதான். ஆனால், "தமிழகத்தின்" பெருவாரியான மக்களின் மதிப்புக்கு பாத்திரமானவர் அவர். அம்மாவை திட்டினாலோ, அம்மாவுக்கு சிகிச்சை தரக்கூடாது என்றாலோ எந்த பிள்ளைக்கும் கோபம் வரத்தான் செய்யும். தமிழ் உணர்வுள்ள பல பேர் அவங்கள தன்னுடைய அம்மா போலதான் நினைகிறாங்க. இதுதான் டோண்-டூ கூட்டத்தின் எரிச்சலுக்கு காரணம்.

  இரண்டாயிரம் வருடங்களா அடக்கி ஒடுக்கியும் - இன்னும் அடிமையாகாம எதிர்த்து நிற்கிறார்களே என்கிற இயலாமைதான் டோண்டுவை இப்படி எழுத வைகிறது. டோண்-டூ கருத்து சுதந்திரம் என்ற பெயரில் "கருத்து பயங்கரவாதத்தை" செய்து வருகிறார். பத்திரிகை உலகில ஒரு சோ, அரசியலில் ஒரு சுப்ரமணிய சாமி, வலைப்பூவில் ஒரு டோண்-டூ - இன்னும் எத்தனைகாலத்துக்குதான் ஒன் மேன் ஆர்மி ஓடும்? கட்டைல போறவரைக்கும்தான? ஓடட்டுமே.""

  என்று கூறியபிறகு, வெறுத்துப்போய் - எனது பின்னூட்டங்களை தடைசெய்தார்.

  சரி அதோடு ஒழியட்டும் என்று நான் எனது வேலையைப் பார்க்கப் போய் விட்டேன். அதன் பிறகு, வினவு தளத்தில் பா.ம.க பற்றி வந்த ஒரு பதிவில் நான் பின்னூட்டமிட்டேன்.

  அங்கு வந்து எதுவும் சொல்லாத டோண்டு, வினவில் வந்த எனது பின்னூட்டங்களையே தொகுத்து "தனது சொந்த சாதிக்கு மட்டுமே சப்பைகட்டு கட்டும் முற்போக்கு பதிவர்கள்" என்று என்னைத் திட்டி தனியாக ஒரு பதிவே போட்டார்.

  http://dondu.blogspot.com/2010/05/blog-post_1924.html

  இதில் வியப்பு என்னவென்றால் - நான் எனது பதிவில் அதுவரை வெறும் 4 குறிப்புகள்தான் எழுதியிருந்தேன். அடுத்து நான் அதுவரை டோண்டு மற்றும் வினவு உட்பட 3 அல்லது 4 பதிவுகளில்தான் பின்னூட்டம் கூட போட்டிருந்தேன்.

  ஆக, பதிவுலகிற்கும் எனக்கும் பெரிதாக ஒரு தொடர்பும் இல்லாத நிலையில் - ஏதோ அவரை எதிர்த்து சில பின்னூட்டங்களைப் போட்டேன் என்பதற்காக என்னைப்போட்டு காய்ச்சி எடுத்தார் டோண்டு.

  மொத்தத்தில் நான் புரிந்து கொண்டது இதுதான். டோண்டு ஒரு பார்ப்பன வெறியர். அவர் அப்படி இருப்பது அவரது விருப்பம். ஆனால். பதிவுலகில் நுழையும் தமிழர்கள் எல்லோரும் பார்ப்பானின் காலை நக்கும் அடிமையாகவே இருக்க வேண்டும் என்று பேராசைக் கொள்கிறார். அதற்கு எதிராக இருப்பவர்களைத் தேடித்தேடி பழிவாங்குவதை ஒரு வேலையாகவே செய்கிறார்.

  இதற்கெல்லாம் அஞ்சும் நிலையில் நாம் இல்லை. பார்ப்பன எதிரிகளைக் கழுவிலேற்றிக் கொன்ற காலம் மலையேறிவிட்டது.

  பதிலளிநீக்கு
 27. சந்தோஷ், அவரு பண்ணுகிற அநியாயங்களை எல்லாம் வீடியோ வெச்சே லைவ் ரிலே பண்ணலாம், அப்பதான் "என்னோட குரல நல்லா டப்பிங் பண்ணியிருக்காங்க" என்று முதல்வன் ரகுவரன் மாதிரி அவரால எதையும் மறுக்க முடியாது

  பதிலளிநீக்கு
 28. நமக்கு வாய் ஜாஸ்த்தி...இனி பிளாஸ்டரோடதான் வரனும் போல...

  நல்ல பகிர்வும், அவசியமான எச்சரிக்கையும்.

  பதிலளிநீக்கு
 29. இந்த பெரியவர் மட்டும் இல்லை பதிவுலகில் பலபேர் தான் பாதிக்கப்பட்ட மாதிரி அடுத்தவரும் பாதிக்கப்படணும்னு நெனைக்கிற நல்லவிங்கதான்.

  பதிலளிநீக்கு
 30. ராஜன் ஒரு பதிவில் எழுதினார் வடகலை,தென்கலை புதிதாக இப்போது எச்சக்கலை என்று.அப்போது ஏற்ப்பட்ட வன்மம் அல்லது காண்டு இப்போது வெளிப்பட்டிருக்கிறது.காத்திருந்து,காலநேரம் பார்த்து,கழுத்தருப்பதில் அவர்களுக்கு நிகர் அவர்களேதான்.

  பதிலளிநீக்கு
 31. Lucky sir...
  What rajan and vaal payyan did is wrong... u can be an atheist.. but u cant hurt other people feeling. they are infamous writing vulgar. The same way they wanted to respect their parent's feelings, let them respect others'

  Mr. Bonda madhavan.. naay vaal.. u cant fix it...

  பதிலளிநீக்கு
 32. அய்யய்யோ மாட்டிக்கிட்டமேன்னு ஒரு பயம். என்ன பண்றதுன்னு தெரியாம டோண்டு பேரை சொல்லி விசயத்த திசை திருப்புற முயற்சிய இந்த பகுத்தறிவு கூட்டம் நல்லாவே பண்ணுது. மஞ்ச துண்டு பகுத்தறிவு பாசறைல இருந்து வந்த வாரிசு வேற என்ன பண்ணும். இதுக்கு மேல கேள்வி கேட்டா, சட்டைக்குள்ள பூணுல் தெரியுதுன்னு சொல்லி இதையும் திசை திருப்பிருவாங்க. இல்லை பாண்ட்ட கழட்டி சுன்னத் பண்ணிருக்கன்னு பாப்பாங்க. மானங்கெட்ட மனுசங்க

  பதிலளிநீக்கு
 33. When you guys write with a tone that all the practicing hindus are idiots, you might receive such post. When you can not bring a change within yourselves and at least within your family, it will be obvious that they will ask this question, irrespective whether you shared your personal info or not..I am not in support of that periavar, however would ask the same question, becos you criticize the religion (thats the only religion which allow) so much..
  It is not correct to expect that you bloggers are untouchable...you can say whatever and people should not question you...

  பதிலளிநீக்கு
 34. //சந்தோஷ், அவரு பண்ணுகிற அநியாயங்களை எல்லாம் வீடியோ வெச்சே லைவ் ரிலே பண்ணலாம், அப்பதான் "என்னோட குரல நல்லா டப்பிங் பண்ணியிருக்காங்க" என்று முதல்வன் ரகுவரன் மாதிரி அவரால எதையும் மறுக்க முடியாது //

  உடன்பிறப்பு நீங்க பதிவுலகத்துக்கு புதுசா?

  பதிலளிநீக்கு
 35. ராஜனும் வால் பையனும் குப்புற விழுந்துட்டு குண்டில மண்ணு ஒட்டல நு சொல்ல்றவனுங்க.... டேய் நீங்க விழுந்தது குப்புற டா எப்டி டா அங்க மண்ணு ஓட்டும்... இதே ராஜனும் வால்பையனும் எத்தனை பேரின் மனங்களை புண் படுத்தி இருக்கிறார்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு நம்பிக்கை உனக்கு புடிக்கவில்லையா ஒதுங்கு நீ என்ன நாட்டாமை.... ஆனா இவருக்குன்னு ஒரு நியாயம்... நெக்ஸ்ட் வால் இருக்கு டி உனக்கு.... செந்தழல் உனக்கும்தான்... அந்த ஆண்டவன் குடுப்பான் பாரு அடி அப்ப இருக்கு....

  --- Mani

  பதிலளிநீக்கு
 36. போண்டா மாதவனுக்கு கோபம் வந்து அனானி மற்றும் போலி பெயர்களில் "தனக்குத் தானே" பின்னூட்டமிடும் கூத்தை இங்கே பார்க்கவும்.

  http://dondu.blogspot.com/2010/10/blog-post_29.html

  பதிலளிநீக்கு
 37. சாரி நண்பா!!


  நேரில் சொல்ல வாய் வரமாட்டேங்குது நேத்திலேருந்து ஒரே போராட்டம். அதான் இப்போ மன்னிப்பு.

  உன்னுடன் ஏற்பட்ட மன வருத்தத்தில் தான் போனவருடம் முழுதும் பல பெயரில் பின்னூட்டமிட்டேன்.நீ கூட கோவிந்தன் கோனமலை என்ற பெயரில் நான் இடுவதாய் எழுதியிருந்தாய்.

  எல்லாம் அந்த ஆளோடிருந்த சகவாச தோசம். இப்படி தனிப்பதிவே இந்த மேட்டருக்கு போடுவேன்னு கொஞ்சம் கூட எதிர்பார்க்கலை.

  ( என் ஐடியில் போடவில்லை, இதையும் மட்டுறுத்தி விடு நண்பா)

  பதிலளிநீக்கு
 38. சந்தோஷ், நீங்க ஏன் ஒரு பக்கம் மட்டும் குற்றம் சாட்டுகிறீர்கள்? அவர் இன்னும் தொடர்ந்து செய்து கொண்டு இருக்கும் காரியங்களை பற்றி ஒரு வார்த்தை கூட உங்கள் பின்னூட்டத்தில் குறிப்பிடவில்லையே. எப்படியோ நீங்களாவது பதிவர் சந்திப்பு என்று எதிலாவது போய் மாட்டிக்காதீங்க

  பதிலளிநீக்கு
 39. வாய் கிழிய கடவுள் மறுப்பு, வழிபாடு மறுப்பு-ன்னு பெரிய பருப்பு மாதிரி பேசிப்புட்டு, இப்போ ஏதோ தனிமனித விருப்பு வெறுப்புக்கு மரியாதையை அளித்ததாக நல்லா புழுகுறீங்க நண்பா!. ஒரு பெரியவரோ, சிறியவரோ கேள்வி கேட்கும் பொழுது "இது போன்ற தனிப்பட்ட கேள்விகளுக்கு நான் பதில் சொல்வது இல்லை" என்று கூறியிருக்கலாமே. உங்கள் ஜாதியை உயர்த்தி பிடிக்க வழிந்து வழிந்து பதில் சொல்லி இருப்பீர்கள்.

  பதிலளிநீக்கு
 40. செந்தழல் ரவி, பாலபாரதி, அதிஷா, சுகுணாதிவாகர், வரவரையான், முத்து (தமிழினி), குழலி, கோவி.கண்ணன் எல்லாருமே ஒத்த கருத்துடையவர்களாயிற்றே? பிறகு பொதுவில் தனிப்பட்ட விஷயங்களைப் பகிர என்ன சந்தர்ப்பம் இருக்கபோகிறது?

  ஆனாலும் அய்யிரு பொண்ணுக்கு ஆசப்படறதுக்கு முன்னாடி நம்ப தகுதியையும் கொஞ்சம் யோசிக்கணுமில்லயா? ;-) கொஞ்சம் முயற்சியையாவது செய்யத்தெரிஞ்சுருக்கணும்.

  பதிலளிநீக்கு
 41. >வலிமையான இந்தியக் குடும்ப கட்டுமான முறையில் எது சாத்தியமோ, அதைதான் செய்யக்கூடிய நிலையில் இருக்கிறோம்.

  இதை ஏன் அடுத்தவர்களுக்கு உபதேசிக்கும்போது நினைக்கத்தோன்றுவது இல்லை? அல்லது கலப்புத்திருமணத்தை எல்லா பெற்றோர்களும் ஆதரிக்கிறார்களா?

  பதிலளிநீக்கு