October 27, 2010

பொய் சொல்லலாமா நெடுமாறன் அய்யா?


அய்யா பழ. நெடுமாறன் அவர்களின் பேட்டி ஒன்றினை சமீபத்தில் படிக்க நேர்ந்தது :

கேள்வி: இலங்கையில் சகோதர யுத்தம் நடக்காமல் இருந்திருந்தால், வரலாறு வேறு வடிவம் பெற்றிருக்கும் என முதல்வர் ஆதங்கப்படுவதிலும் உண்மை இருக்கிறதே..?

பதில் : சரியாகச் சொன்னால், 1986 மே மாதத்தில் மதுரையில் 'டெசோ' மாநாடு முடிந்த பிறகு, ஈழத்தில் போராளிகளுக்குள் மோதல் ஏற்பட்டது. இந்தியஅரசின் 'ரா' உளவுத் துறைதான் அதற்குக் காரணம். 'டெலோ' இயக்கத்துக்கு ஏராளமான ஆயுதங்களைக் கொடுத்து, புலிகளுடன் மோதும்படி தூண்டிவிட்டது 'ரா'. 

அதன்படி, அவர்கள் ஆங்காங்கே விடுதலைப் புலிகளை சுட்டார்கள். சிலரைப் பிடித்துக்கொண்டு போனார்கள். அப்போது விடுதலைப் புலிகளின் சார்பில் இது குறித்து 'டெலோ' தலைவர் சிறீசபாரத்தினத்துடன் பேச்சு நடத்த கேப்டன் லிங்கம் அனுப்பிவைக்கப்பட்டார். அந்த லிங்கத்தின் இரு கண்களையும் தோண்டி எடுத்து, அவரைக் கொடூரமாகக் கொலை செய்தார் சிறீசபாரத்தினம். இதற்கு பதிலடியாகத்தான் புலிகளின் தாக்குதல் நடந்தது. போராளிகளுக்கு இடையிலான மோதலுக்கு உண்மையான காரணம் 'ரா' உளவுத் துறைதான் என்பதை கருணாநிதி ஆரம்பம் முதலே மறைத்துப் பேசுகிறார்.

தமிழகத்தில் அனைத்துப் போராளி இயக்கங்களும் இயங்கியபோதுகூட அவர்களுக்கு இடையில் பிளவை ஏற்படுத்த முயன்றது கருணாநிதிதான். எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது 1983 ஜூலையில் எல்லா போராளிக் குழுக்களின் தலைவர்களையும் அழைத்து ஒற்றுமையை உண்டாக்க முனைந்தார். இந்தத் தகவலை அறிந்ததும், அது வரை போராளிக் குழுவினரை சந்திப்பதைத் தவிர்த்துவந்த கருணாநிதி, எம்.ஜி.ஆரை சந்திப்பதற்கு முந்தைய நாளில் தன்னை வந்து சந்திக்குமாறு போராளித் தலைவர்களை அழைத்தார். 

அவரது அழைப்பை ஏற்று, டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எஃப்., ஈரோஸ் குழுவினர் சென்றனர். அந்த சந்திப்பைப்பற்றி பத்திரிகைகளுக்கு அறிவித்து விளம்பரமும் தேடிக்கொண்டார் கருணாநிதி. ஆனால், முதலில் அழைத்த எம்.ஜி.ஆரை புலிகள் மட்டுமே திட்டமிட்டபடி சந்தித்தனர்.

ஆக, தமிழ்நாட்டில் தி.மு.க-வுக்கும் அ.தி.மு.க-வுக்கும் இடையிலான போட்டா போட்டியில் போராளி இயக்கங்களைப் பிளவுபடுத்தியவர் கருணாநிதிதான். பல முறை தனது கட்சிக் கண்ணோட்டத்தில் ஈழத் தமிழர்களைப் பிளவுபடுத்தியவரும் இவரேதான். தனது பதவியைக் காப்பாற்றிக்கொள்வதற்காகப் போலியான காரணங்களை இப்போது தேடிப் பிடிக்கிறார் அவர். போராளிகளின் சகோதரச் சண்டையை ஒரு குற்றமாகவும் காரணமாகவும் சொல்லும் இவர், முதலில் தன் குடும்பத்தில் நடக்கும் சகோதரச் சண்டையை நிறுத்திக் காட்டட்டுமே! 

அய்யா சொல்வதின் அடிப்படையில் பார்த்தோமானால், 'டெசோ' மாநாட்டின் விளைவாகவே, போராளிக் குழுக்களுக்குள்ளாக ஈழத்தில் மோதல் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. ஏனெனில் மாநாடு முடிந்தப்பிறகே 'டெலோ' இயக்கத்துக்கு ஆயுதங்களை கொடுத்து புலிகளுடன் மோதும்படி 'ரா' தூண்டிவிட்டதாக நெடுமாறன் சொல்கிறார். அதையடுத்தே விடுதலைப்புலிகளை சுட்டார்கள். லிங்கத்தினை கொடூரமாக சபாரத்தினம் கொலை செய்தார். புலிகளின் தாக்குதல் பதிலுக்கு நடந்தது என்று கதையையும் சொல்கிறார்.

எப்படி ஒரு மனிதரால் இப்படி அடுக்கடுக்காக பொய்களை அள்ளிக் கொட்ட முடியுமென்று தெரியவில்லை. ஒருவேளை ஈழத்தாயின் அருட்தொண்டராக மாறிப்போனதால் ஏற்பட்ட மாற்றம் இதுவாவென்று தெரியவில்லை.

இப்போது 'டெசோ'வை நெடுமாறன் இழுப்பதற்கு காரணம், கலைஞர் டெசோவின் தலைவராக இருந்தார் என்பதைத் தவிர வேறொன்றுமில்லை.

டெசோ மாநாடு மதுரையில் 4-5-1986 அன்று நடந்தது. இம்மாநாட்டின் நோக்கம். வெறுமனே தமிழ்நாட்டு தமிழர்கள் மட்டுமல்லாது, இந்தியா முழுக்க இருக்கும் ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் ஈழத்தில் இனப்படுகொலை நடப்பதை தெரிவித்து, தமிழர்களுக்கு ஆதரவு தேடுவதே ஆகும். ஆயினும் கடைசிவரை இந்நோக்கம் நிறைவேறவேயில்லை. அதற்கு யார் காரணமென்ற உள்விவகாரங்களில் இப்போது நாம் நுழைய வேண்டியதில்லை.

அம்மாநாட்டில் கலந்துகொண்ட அகில இந்திய தலைவர்கள் : பாஜக சார்பில் அடல்பிகாரி வாஜ்பாய், லோக்தளம் சார்பில் பகுகுணா, தெலுங்குதேசம் சார்பில் என்.டி.ஆர், சுப்பிரமணியசாமி உள்ளிட்ட தலைவர்களும், கம்யூனிஸ்ட் கட்சிகள், அஸ்ஸாம் கனபரிஷத், தேசிய மாநாட்டுக் கட்சி, காங்கிரஸ்-எஸ், ஜனதா உள்ளிட்ட ஏனைய தேசியநீரோட்ட கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டு ஈழத்தமிழர்களுக்கான தங்கள் ஆத்ரவினை வெளிப்படுத்தினர். விடுதலைப்புலிகள், தமிழர் விடுதலைக்கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எஃப், புளொட், ஈரோஸ், உள்ளிட்ட ஈழத்தமிழ் போராளி அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

இம்மாநாட்டுக்குப் பிறகே 'ரா' அமைப்பால் தூண்டிவிடப்பட்டு போராளிக் குழுக்களுக்குள் மோதல் ஏற்பட்டு சிறீசபாரத்தினம் கொல்லப்பட்டதாக நெடுமாறனின் பேட்டி வாயிலாக அறியமுடிகிறது. உண்மையில் மாநாடு முடிந்து மூன்று நாட்களில், 7-5-1986 அன்று சபாரத்தினம் கொல்லப்படுகிறார். நெடுமாறன் சொல்லும் 'ரா' தூண்டுதல், டெலோ இயக்கங்களுக்கு ஆயுதம், விடுதலைப்புலிகள் மீது தாக்குதல், ஆள்கடத்தல், புலிகள் சார்பாக லிங்கம் தூதுவராக அனுப்பப்பட்டு சபாரத்தினத்தால் கொல்லப்படுதல், பதிலுக்கு விடுதலைப்புலிகள் தாக்குதல், சபாரத்தினம் கொல்லப்படுதல் ஆகிய சம்பவங்கள் வெறும் மூன்று நாட்களில், தகவல் தொடர்பு தொழில்நுட்பம் பெரிதும் வளராத 1986ஆம் ஆண்டு நடைபெற்றதாக சொல்கிறார். இதைத்தான் ஊரில் சொல்கிறார்கள். கொஞ்சம் ஏமாந்தால் எருமை கூட ஏரோஃப்ளேன் ஓட்டுமென்று.

மாநாட்டு உரையிலேயே கலைஞர், டெலோவுக்கும் புலிகளுக்குமான சகோதர யுத்தம் தவிர்க்கப்பட வேண்டுமென்று பேசியிருக்கிறார். மாநாட்டுக்குப் பிறகாக 'ரா'வால் தூண்டப்பட்டு அவர்கள் மோதிக்கொள்வார்கள் என்று கலைஞர் ஜோசியம் பார்த்து பேசினாரா என்பதையும் நெடுமாறன் பேட்டியில் சொல்லியிருக்கலாம்.

உண்மையில் மாநாடு தொடங்குவதற்கு முன்பாகவே புலிகளுக்கும், டெலோவுக்குமான சண்டை நடந்துவந்தது. மாநாட்டு உரையில் வாஜ்பாய், என்.டி.ஆர் போன்றோர் கூட இந்த சண்டையை குறிப்பிட்டு போராளிக்குழுக்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமென்று ஆலோசனை சொல்லியிருந்தனர். இதெல்லாம் நன்கு தெரிந்தும், எப்படி வாய்கூசாமல் இப்படி நெடுமாறன் பேட்டி கொடுக்கிறார் என்று தெரியவில்லை. இத்தனைக்கும் டெசோவுக்கு செயலாளராக இருந்தவரே இந்த பழ.நெடுமாறன் தான்.

83ஆம் ஆண்டே ஈழப்போராளிகளை ஒருங்கிணைப்பதில் கலைஞர் முட்டுக்கட்டை போட்டதாக இந்த நெடுமாறன் சொல்கிறார். அது தெரிந்தும் 86ஆம் ஆண்டு டெசோவில் கலைஞர் தலைமையில் இவர் ஏன் செயல்பட்டார் என்பதை பேட்டியெடுத்த பத்திரிகையாளராவது கேட்டிருக்கலாம். அல்லது கேட்காமலேயே பழ.நெடுமாறன் அடுத்த வெடிகுண்டையும் வீசியிருக்கலாம்.

ஆரம்பத்திலிருந்தே 'ரா'வை கலைஞர் பாதுகாக்கிறார் என்று சொல்கிறார் நெடுமாறன். 86ல் ராஜீவின் காங்கிரஸ் இந்தியாவை ஆண்டது. 'ரா' ராஜீவின் கட்டுப்பாட்டில் இருந்தது. தமிழக எம்.ஜி.ஆர். அரசு, ராஜீவுக்கு முழுமையான நிபந்தனையற்ற ஆதரவை வாரி வாரி வழங்கியது (இன்றைய கலைஞர் அரசைப்போல). உச்சபட்சமாக இலங்கை - இந்திய ஒப்பந்த விவகாரத்திலும் கூட. நெடுமாறனோ எய்தவன் இருக்க, அம்பை நோகிறார். இந்த பச்சைப் பொய்களுக்குப் பின்னால் இவரது அரசியல் காழ்ப்புணர்ச்சிதான் காரணமாக இருக்கமுடியும். எம்.ஜி.ஆர் மாண்டுவிட்டார், கலைஞர் உயிரோடு இருக்கிறார் என்ற காரணத்துக்காக ஒருவரை புனிதராகவும், மற்றவரை அயோக்கியராகவும் சித்தரிப்பது என்னமாதிரியான சித்துவிளையாட்டு? எம்.ஜி.ஆர்.தான் போராளிக் குழுக்களுக்கு உண்மையான, பிரதிபலன் பாராமல் ஆதரவளித்தவர் என்று நெடுமாறன் நம்பியிருந்தால் அவர் பின்னால் போயிருக்க வேண்டியதுதானே? ஏன் கலைஞரின் பின்னால் அணிவகுத்து நின்றார். ஏனெனில் எம்.ஜி.ஆரின் புலி ஆதரவு நடவடிக்கைகளுக்குப் பின்னால் இருந்த நோக்கம் அப்போது நெடுமாறனுக்கு தெரியும்.

கலைஞர் மே 2009ல் தமிழகத்தின் ஆட்சிப்பொறுப்பில் இருந்தார் என்ற ஒரே காரணத்துக்காக கடந்தகால வரலாற்றினை தவறாக திரித்துப் பேசுவது எவ்வகையில் அரசியல் நேர்மையாகாது. 89ல் கூட அமைதிப்படைக்கு கலைஞர் கொடுத்த மரியாதை என்னவென்று ஊருக்கே தெரியும். ராஜீவ் கொலைப்பழி தம்மேல் விழுந்தபோது கூட விழுந்தபோது கூட திமுக எவ்வகையிலும் யாரையும் காட்டிக் கொடுத்ததில்லை.

83ஆம் ஆண்டு இனப்படுகொலை நடந்தபோது இங்கே இந்தியாவில் அதைத் தட்டிக் கேட்க என்ன நாதி இருந்தது? எந்தவித கண்டனங்களோ, நடவடிக்கைகளோ எடுக்கப்படாத நிலையில், மூன்றுமாதம் கழித்து செப்டம்பர் 83ல் தமிழக சட்டமன்றத்தில் இப்பிரச்சினையை கொண்டுவந்தவர் கலைஞர்தான். நெடுமாறனுக்கு சந்தேகமிருந்தால் சட்டமன்றப் பதிவேட்டினைப் பார்க்கட்டும். அதன்பிறகே எம்.ஜி.ஆர் சுறுசுறுப்பாகி, இந்திராவுக்கு தகவல் தெரிவித்து ஈழப்பிரச்சினையில் இந்தியாவின் தலையீடு ஏற்பட்டது என்பதும் வரலாறு. இன்றைய கலைஞர் 'ரெட்சிப்' சொருகப்பட்ட ரோபோவாக ஈழப்பிரச்சினையில் செயல்படுகிறார் என்பதற்காக, பழைய கலைஞரையும், அவரது உண்மையான அக்கறையையும் மறைத்து, மாறுபட்ட விதமாக சொல்வது நெடுமாறன் போன்ற மூத்த அரசியல்வாதிகளுக்கு அழகல்ல. ஏனெனில் அந்தகாலத்து கலைஞரை நெடுமாறனும் ஏற்றுக் கொண்டார். அவர் தலைமையில் 'டெசோ' அமைப்பிலும் செயல்பட்டார்.

பழ.நெடுமாறன் மாதிரியான இரட்டைநாக்கு கொண்டவர்கள்தான் உண்மையான ஈழத்தமிழ் ஆதரவாளர்கள் என்று அடையாளப்பட்டிருப்பது தமிழினத்துக்கு சாபக்கேடு. வரலாற்றில் நன்கு பதிவாகியிருக்கும் சம்பவங்களை சுயநலத்துக்காக வாய்க்கு வந்ததுபோல வளைத்துக் காட்டியவர்களால்தான் ஈழப்பிரச்சினை இழுபறியானது. இங்கே பாஜக ஜெயிக்கும், அதிமுக ஜெயிக்கும் என்று தவறான தோற்றத்தையும், எதிர்ப்பார்ப்பையும் அங்கிருப்பவர்களுக்கு தந்ததால்தான் அனைத்தும் நிகழ்ந்தது. கடைசியில் முள்ளிவாய்க்கால் நடந்தேறியது. இப்போதும் இவர்கள் திருந்தாமல் எஞ்சியிருக்கும் மக்களின் எதிர்காலத்தை கருத்தில் கொள்ளாமல் மாண்டவர்கள் மீது அரசியல் பிழைப்பு நடத்தி வருவது கேவலமானது.

இவர்களையும் நம்பும் சொற்பமான ஆட்களை நினைத்தால் பரிதாபம்தான் படவேண்டும்.

33 comments:

 1. அன்பின் லக்கி,

  நெடுமாறன் சொல்வதை விடுங்கள்...

  87 க்கு பிறகு புலிகள் மட்டுமே தமிழீழத்திறகு போராடும் ஒரே அமைப்பாக மாறியது.

  2009 வரை தனியே சுதந்திர ஈழத்திற்காக போராடியது.அப்படியிருக்கையில் அடிக்கடி சகோதர யுத்தத்தால் தான் புலிகள் தோற்றார்கள் என்று கலைஞர் சொல்வது சரியா..

  போரின் இறுதிகட்டத்திலும் சகோதர யுத்தம் என்றே ஒரே பல்லவியை திரும்ப திரும்ப பாடியதின் பின்னணி என்ன..?

  அன்புடன்
  அரவிந்தன்
  பெங்களுர்

  ReplyDelete
 2. அரவிந்தன்!

  சகோதர யுத்தத்தை தவிர்த்திருந்தால் நிச்சயம் 2009 வரை போராட வேண்டிய நிலைமை இருந்திருக்காது.

  85-86 காலக்கட்டத்தில் தமிழ் போராளிக்குழுக்களின் இராணுவ பலம், சிங்கள ராணுவத்தை விட கிட்டத்தட்ட இரு மடங்கு இருந்தது.

  கூட்டமைப்பாக போராடியிருந்தால் தமிழ் ஈழம் என்ன, இலங்கை முழுமையையுமே கூட தமிழ் குழுக்களால் கைப்பற்றியிருக்க முடியும். ஆனால் தங்களுக்குள் யார் தலைமை என்பதை தீர்மானிப்பதிலேயே அவர்களது ஆற்றல் வீணானது. இதற்குள்ளாக சிங்கள ராணுவமும் தனது பலத்தை இஸ்ரேல், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் இராணுவ உதவியோடு பெருக்கிக் கொண்டது.

  இப்படிப் பார்க்கையில் கலைஞர் சொல்வது சரிதானே?

  ReplyDelete
 3. Lucky, அவர்களின் புலி ஆதரவு நடவடிக்கைகளின் பின்னால் வேறு நோக்கம் இருந்தது என்பது எனக்கு புதிய செய்தி. இது பற்றிய மேலதிகத் தகவல்களை எதிர்பார்கின்றேன்.

  ReplyDelete
 4. appo kooda unga thalaivar UPA-la irundhu veliya vandhu, eelam thaan enaku perusu, paeran, magan ellam thoosu-nu solli veliya vandhurundhaa...234 thogudhiyum win pannirukulaamae...

  unga thalaivar sonia mundhaaniya pudicha kaarathunaala thaan ADMK, BJP-nu namba vaendiya kattayaathuku thalla pattom???

  eelam issue-ku letter pota unga thalaivar, cabinet-la ministries vaanga flight yeari ponaarae adha pathi oru vari eludhuradhu?

  nedumaaran, vaiko ellarium vindunga, lyrcist thamarai kaetaangalae kaelvi adha pathi oru vari eludhuradhu?

  always remember onething whoever supported J during last election, they were pushed to do so....unga thalaivar sonia mundhaanai-yae namaku podhum-nu pona appo, we didn't have any other choice...

  unga ellam pidhatral-kum thamarai anaikum sila naal munnadi vikatan-lyum badhil sollitaangaa...

  mudinjaa adhu-ku manasaatchi-ya thottu badhil sollunga....adhaavadhu eppadinaa unga thaanaya thalaivar Prabhakaran amma inga varama thorathi adicha appo oru padhivu poteengalae, appo DMK kannadiya kalati vachutu ulagatha paatheengalae, adhu maadhiri oru padhivu podunga....

  ReplyDelete
 5. Prabakaran is my friend, I'll worry if anything bad happens to him-nu, thanoda thunaviyaar-nu magal-a vachutu NDTV-ku paeti koduthutu...adutha naalae andharbalati adichaarae adha pathi oru vari eludhulaamae....

  neenga enna sappa kattu kattunaalum sonia, karuna (srilanka-la irukuravana sollula) inga namma karuna-va solluraen...ivanga 2 paer kailyum eela tamil ponnugal-oda yoni ratham padinjuru-ku.....adhukaana vinay-a avanga kandipa arupaanga...

  paavam neenga pulla kutti kaaran, andha kelavan-ku sappa kattu katti andha paavathula pangu vaangadheenga....

  ReplyDelete
 6. lucky,

  sariyaana saattai adi nedumaranukku

  ReplyDelete
 7. நல்ல பதிவு யுவகிருஷ்ணா ... !!!
  நம்ம நாட்டில் எப்பவுமே ஒரு ஆள் செத்து போயிட்டா, அவர் ரொம்ப நல்லவர் ஆகி விடுகிறார்.
  நாளைக்கே இதே நெடுமாறன் அய்யா அவர்கள் வேறு விதமாகவும் பேசலாம்...யார் காண !!!

  ReplyDelete
 8. யுவகிர்ஷ்ணன் கலைஞ்சருக்கு வக்காலத்து வாங்குவது ஏன் என்று தெரியவில்லை. நெடுமாறன் சொல்வதெல்லாம் பொய் என்று வைத்துக் கொள்வோம், கலைஞ்சர் சொல்வேதேல்லாம் அப்போது உண்மையா. டெசோ மாநாட்டுக்கு முன்னே டேலோக்கும் விடுதலைப்புலிகளுக்கும் பிணக்கு இருந்தாலும், டெசோ மாநாட்டுக்கு பிறகு ரா டேலோக்கு கொடுத்த தென்பு தான் விடுதலைப்புலிகள் மீது அவர்கள் நடத்திய குரூர தாக்குதல்களுக்கு காரணம் ஆகும்.

  அடுத்து 1989 -ல் விடுதலைப்புலிகள் தான் போராட்டத்துக்கு தலைமை தாங்கி வருகின்றனர், அனால் அவர்களை ஆதரிக்கும் மனப்பாங்கை இந்திய அரசுக்கு வரவில்லை. மாறாக அவர்களை ஒழிக்கவே அந்தகலகட்டத்தில் இலங்கை ராணுவத்துடன் சேர்ந்து தமிழினிப் படுகொலைகளில் ஈடுப்பட்டு வந்துள்ளது. யுவகிரிஷ்ணன் வெறும் பத்திரிக்கை செய்திகளை வைத்து கொண்டு உண்மை வரலாறை மறைக்கப் பார்கிறார். திடீர் என வரும் தேர்தலை மனதில் கொண்டு இந்தப் பதிவா... என்ன திமுக எவ்வளவு கொடுத்தது? எல்.சி.டி டிவியா

  ReplyDelete
 9. புளுகுனி அரசியல்வாதிகளின் பொய்களை கண்டுபிடிக்க புறப்பட்டிருக்கும் புதிய தலை முறை லக்கி லுக் வணக்கம்.

  உங்கள் அரசியல் பேட்டி ஆய்வுக் கண்டுபிடிப்பில் அய்யா நெடுமாறன் போல் இதுவரை பொய் சொன்ன மூத்த தமிழக அரசியல்வாதிகளின் பட்டியலையும் ஆதாரத்துடன் வெளியிட்டால் உங்கள் பேனாவில் நடுநிலை'மை' ஊற்றப்பட்டிருக்கிறது என்று நம்பலாம்.

  இல்லை என்றால் யாரையோ குளிர்விக்கவும், யாரையோ காயப்படுத்தவுமே திட்டமிட்டு எழுதப்பட்டுள்ள ஒருவித சுயநல எழுத்தோ என்றுதான் தமிழ் உலகம் சந்தேகப்படும்.

  நீங்கள் அரசியல் கள ஆய்வுப் புலி... எல்லாப் பொய் மூட்டைகளையும் தோலுரிக்காமல் விடமாட்டீர்கள்.

  நம்பலாமா...?

  எதிர்பார்ப்புடன்..அகிலன்.

  ReplyDelete
 10. கலைஞருக்கு ஜால்ரா அடிப்பது என்று முடிவு எடுத்த பிறகு, செவிடன் காதில் ஊதிய சங்குதான்.

  //இத்தனைக்கும் டெசோவுக்கு செயலாளராக இருந்தவரே இந்த பழ.நெடுமாறன் தான்//

  இவருக்கு தெரியாத உண்மைகள் உங்களுக்கு தெரிந்து விட்டதா என்ன!

  //83ஆம் ஆண்டே ஈழப்போராளிகளை ஒருங்கிணைப்பதில் கலைஞர் முட்டுக்கட்டை போட்டதாக இந்த நெடுமாறன் சொல்கிறார். அது தெரிந்தும் 86ஆம் ஆண்டு டெசோவில் கலைஞர் தலைமையில் இவர் ஏன் செயல்பட்டார் என்பதை பேட்டியெடுத்த பத்திரிகையாளராவது கேட்டிருக்கலாம்.//

  ஒரு பொறுப்பான நிலையில் இருக்கும் ஒருவர் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று முடிவு எடுக்க முடியாது. இது என்ன உங்கள் இணைய பதிப்பா? தேவை இல்லை என்றால் delete செய்வதற்கு?.

  ReplyDelete
 11. Please Yuva, I respect your blog and a regular reader but when it comes to my Thamizh Inam in Thamizh Eazham, I can never agree with you supporting Karuna and his gang.

  Why did Karuna support the liberation - for Votes what else, Please stop saying that Karuna had a great heart and now you are accusing Nedumaran? Who else is supporting the Thamizh Eazham other than Seeman, Vaiko and Nedumaran.

  Whatever Nedumaran says / said is irrelevent - who is now supporting Thamizh Eazham - not Karuna and his gang. Please remember that!

  ReplyDelete
 12. Adai thiru MuKa appave (in 90s) solla vendiyadu daane...thiru MuKa had plenty of time and if he had real intentions he could have changed the course of the civil war (or AT LEAST tried to). Every one knows thiru MuKa's priorities now. Why are we trying to twist the tales here!!

  He neither wanted a political solution nor a revolutionary solution in eelam. All he wanted was ministership for his kith and kin. No wonder his hands were tied up. No one can forget the MP resignation and his fasting dramas.

  Thevai aana time la udavi seiyadavan nanban illai...this is the moral of the story. Thiru MuKa avargal aatchiyi irundum, he did not do anything constructive to resolve the issue. Munnadi ippadi panninane ingara pazhan kadai pesaradu naala varalatrai mattra mudiyumaa?? All he did was try to make use of the isue.hope you would have read the story about "2 friends that met a bear in forest" in elementary school.

  ReplyDelete
 13. நல்ல கட்டுரை லக்கி, நண்பர் அரவிந்தன் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். கருணா போன்ற சகோதர கருங்காலிகளை வளர்த்து விட்டதும், பின்னர் அவரே புலிகளுக்கு எதிராக மாறி புலிகளின்(ஈழ தமிழர்களின்) அழிவிற்கான காரணமாகிபோனார் என்பது சமீப கால வரலாறு தானே. மேலும் மாறிவந்த காலகட்டங்களையும், உலகமாற்றங்களையும் கவனித்து தங்களை மாற்றிகொள்ளததும்கூட, இந்த நிலைக்கு காரணமென்பது வெளிப்படை. இல்லையெனில் 30 வருடத்திற்கும் மேலான வலிமையான போராட்டம் தோற்பதற்கு வாய்ப்பில்லை என்பது என் கருத்து.

  அன்புடன்
  ச.முருகவேல்
  ஆழ்வார்பேட்டை,
  சென்னை

  ReplyDelete
 14. இங்கே என்ன விவாதிப்பது என்று தெரியவில்லை. ஆனால் சில விஷயங்களை சொல்லிவிட்டு ஓடிவிடுகிறேன். வேறெதுவும் இப்போதைக்கு சொல்லத் தோன்றவில்லை. கலைஞரை திட்ட விரும்புபவர்கள் வரிசைக்கட்டி திட்டலாம். எனக்கு ஆட்சேபணை ஏதுமில்லை. நம்மால் அவரைத் தவிர வேறு யாரை திட்டமுடியும்? :-)

  1. கலைஞர் ஊர் ஊராக, வீதி வீதியாக பிச்சையெடுத்து போராளிக்குழுக்களுக்கு நிதி சேர்க்கிறார். விடுதலைப்புலிகள் மட்டும் எம்.ஜி.ஆருக்கு பயந்து அந்நிதியை மறுக்கிறார்கள். எம்.ஜி.ஆர் உடனே கலைஞருக்கு போட்டியாக புலிகளை மட்டும் அழைத்து 2 கோடி கொடுக்கிறார். போராளிக்குழுக்களிடையே மோதலுக்கு வித்திட்ட சம்பவங்களில் அதுவும் ஒன்று. இதற்கு காரணம் கலைஞரா? எம்.ஜி.ஆரா?

  கலைஞர் கொடுத்த பணம் மக்களிடம் உணர்வுரீதியாக வசூலித்து வாங்கியப் பணம். அப்பணத்தை மறுத்ததின் மூலமாக தமிழக மக்களை புலிகள் உதாசீனப்படுத்தினார்களா இல்லையா? தங்கள் பணத்தை புலிகள் வாங்கியிருந்தால் தமிழக மக்களுக்கு அவர்கள் மீது எவ்வளவு பெரிய ஒட்டுதல் ஏற்பட்டிருக்கும். 2009ல் அங்கே புலிகள் இயக்கம் கிட்டத்தட்ட அழிந்துவிட்ட நிலையில் இங்கே மக்களிடையே புரிந்துகொள்ள முடியாத மிகப்பெரிய மவுனம் இருந்ததற்கு அந்த ஒட்டுதல் இல்லாதது ஒரு முக்கியக் காரணமென்று நம்புகிறேன்.

  ReplyDelete
 15. 2. சகோதர யுத்தம் என்ற சொல்லை கலைஞர் கடைசிக்கட்டத்தில் மட்டும் பயன்படுத்தி இருந்தாரேயானால் அது நிச்சயமாக சப்பைக்கட்டுதான். ஆனால் அவர் 86லிருந்தே இதை வலியுறுத்தி வருகிறார். ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்பது உலகளவில் பல புரட்சிகளில் ஏற்கனவே நிரூபிக்கப்பட்ட உண்மைதானே? இலக்கினை அடைந்தபிறகு எந்த இயக்கத்துக்கு தலைமைப்பதவி என்பதை முடிவு செய்திருந்தால் 86லேயே ஈழம் நிச்சயமாக மலர்ந்திருக்கும்.

  3. 1993ல் வைகோவுக்காக புலிகள் கலைஞரை கொலை செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள் என்ற இந்திய உளவுத்துறையின் அறிக்கையை பத்திரிகைகளுக்கு கலைஞர் கொடுத்தார். அவ்வாறான திட்டம் புலிகளுக்கு இருந்ததா என்பதைப் பற்றி எனக்கு கருத்து எதுவுமில்லை. ஆனால் 91 திமுக தோல்விகக்குப் பிறகாக “வைகோதான் தமிழகத்தின் அடுத்த முதல்வர்/திமுக தலைவர்” என்று புலிகள் குறிப்பிட்டதாக ஒரு நம்பத்தகுந்த வெர்ஷன் இருக்கிறது. இருப்பினும் இந்த சம்பவங்களுக்குப் பிறகும் கூட ஜெயின் கமிஷனில் திமுக சாட்சி சொல்லியபோது புலிகளை மாட்டிவிட்டு தாங்கள் தப்பித்துக் கொள்ளவில்லை என்பதையும் நாம் பார்க்க வேண்டும்.

  ReplyDelete
 16. ‎4. திமுக / புலிகள் - இரண்டு அமைப்புகளையும் நாம் சம அளவில் நேசித்தேன்/நேசிக்கிறேன். திமுகவின் தவறுகளை எப்படி நட்பு வட்டத்தில் மட்டுமே விமர்சிக்கிறேனோ, அதுபோலவே புலிகளின் தவறுகளை என் மனச்சாட்சிக்கு நேர்மையான வகையிலேயே விமர்சிக்கிறேன். ஓரிரண்டு விமர்சனங்கள் இரு இயக்கங்களைப் பற்றியும் பொதுவெளியில் என்னை அறியாமல் விமர்சித்துவிட வேண்டிய சூழல் ஏற்பட்டு விடுகிறது. அவற்றில் புலிகள் குறித்த விமர்சனம் அதிகமாக இருக்கிறது என்பதை உங்கள் கருத்துகளில் புரிந்துகொள்கிறேன். ஏனெனில் புலிகள் இன்று தோற்றிருக்கிறார்கள். தோல்விக்கான காரணங்களை தேடும்போது அவர்களை விமர்சிக்க வேண்டிவருகிறது. 2001ல் திமுக தோற்றபோதும் இதுபோன்ற பல எதிர்மறை விமர்சனங்களை திமுக குறித்து நண்பர்களோடு பகிர்ந்துகொண்டிருக்கிறேன். எனவே இது இயல்பான விமர்சனங்கள் என்று நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

  5. இந்தப் பதிவு திமுக-புலிகள் உறவு குறித்ததல்ல. நெடுமாறன் மனதறிந்தே அவிழ்த்துவிடும் அப்பட்டமான பொய்கள் குறித்தது. என்னைப் பொறுத்தவரை காங்கிரஸ் காவாலி கூட்டத்தை விட நெடுமாறன் போன்றவர்களால் எஞ்சியிருக்கும் மக்களுக்கு அதிக ஆபத்து இருக்கிறது.

  ReplyDelete
 17. ஃபேஸ்புக்கில் இப்பதிவுக்கு ஷோபாசக்தி அளித்திருக்கும் பின்னூட்டம் :


  டெசோ மாட்டுக்கு 14 நாட்கள் முன்னமே (20.04.1986) புலிகள் டெலோ மீது தாக்குதலைத் தொடக்கினார்கள். மூன்று நாட்களுக்குள்ளேயே டெலோ சின்னாபின்னமாகியது. 200க்கும் மேற்பட்ட டெலோ போராளிகள் கொல்லப்பட்டார்கள். சபாரத்தினம் தலைமறைவானார். இரண்டு வாரங்களிற்குப் பிறகு 06.05.1986ல் அவர் கொல்லப்பட்டார். அதாவது டெசோ மாநாடு நடக்கையில் சபாரத்தினத்தைக் கொல்வதற்காகப் புலிகள் தேடிக்கொண்டிருந்தார்கள்.

  ReplyDelete
 18. நான் உகஙலுடன் உடன்படுகிறென் லாக்கி...(இதில் மத்திரம்..)

  ReplyDelete
 19. சபாரத்தினம் கொல்லபடக்கூடாது என கலைஞர் டெசோ மநாட்டிற்காக வந்த ஈழத்தலைவர்களை வேண்டி கேட்டதாக ஒரு செய்தியைப் படித்திருக்கிறேன்.

  ReplyDelete
 20. "ஏனெனில் எம்.ஜி.ஆரின் புலி ஆதரவு நடவடிக்கைகளுக்குப் பின்னால் இருந்த நோக்கம் அப்போது நெடுமாறனுக்கு தெரியும்."

  நீங்கள் தி மு கா வில் இருங்கள். கலைஞருக்கு துதி பாடுங்கள். அதற்காக எதற்கு எம்.ஜி.ஆரை தூற்றும் முயற்சி. அது என்ன நோக்கம் என்று விரிவாக எழுதுங்களேன். ஒருவர் இறந்து விட்டார், மற்றவர் இருக்கிறார் என்கிற காரணத்துக்காக இருப்பவருக்கு நீங்கள் துதி பாடுவதும் சித்து விளையாட்டே. நெடுமாறன் பேட்டிக்கு மட்டும் பதில் சொல்லுங்கள்  "ராஜீவ் கொலைப்பழி தம்மேல் விழுந்தபோது கூட விழுந்தபோது கூட திமுக எவ்வகையிலும் யாரையும் காட்டிக் கொடுத்ததில்லை."  காட்டி கொடுக்கவில்லை என்றால் பொருள் இவர்களுக்கு அனைத்தும் தெரியுமென்று தானே.

  "என்றால் பொருள் இவர்களையும் நம்பும் சொற்பமான ஆட்களை நினைத்தால் பரிதாபம்தான் படவேண்டும். "  எனக்கும் அதைதான் சொல்ல தோன்றுகிறது.

  ReplyDelete
 21. http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=8884:2010-05-24-11-08-02&catid=1105:09&Itemid=158

  கலைஞர் அன்றும் இன்றும்!

  ReplyDelete
 22. உண்மையில் கலைஞரும், நெடுமாறனும் சேர்ந்தே ஈழத்தை வைத்து அரசியல் பெரிய அளவில் செய்து, கடைசியாக சமாதியும் கட்டி விட்டனர். இது போதாது என்று இன்னும் சமாதி மேலேயும் அரசியல் செய்கின்றனர். வரலாறு நமக்கு உண்மையை சொல்லும். அப்போது, இந்த பெரிசுகள் இல்லாது போயிருக்கும். இது தெரிந்துதான் இந்த கெடு கெட்ட பெரிசுகள் இப்படி தமிழினத்தை இன்னும் புதை குழிக்குள் தள்ளிக் கொண்டிருக்கின்றனர்.

  ReplyDelete
 23. "தங்கள் பணத்தை புலிகள் வாங்கியிருந்தால் தமிழக மக்களுக்கு அவர்கள் மீது எவ்வளவு பெரிய ஒட்டுதல் ஏற்பட்டிருக்கும். 2009ல் அங்கே புலிகள் இயக்கம் கிட்டத்தட்ட அழிந்துவிட்ட நிலையில் இங்கே மக்களிடையே புரிந்துகொள்ள முடியாத மிகப்பெரிய மவுனம் இருந்ததற்கு அந்த ஒட்டுதல் இல்லாதது ஒரு முக்கியக் காரணமென்று நம்புகிறேன்"

  2009-il Thamizhaga mounaththirkku,media mattume karanam....

  Entha thamizh media-um(ungalai ponra media persons-m) makkalidam muzhumayaga porai eduththu sellave illai

  Athu mattume karanam.....
  (Enthiranukku kidaiththa vilamberaththil paathi kidaithirunthalum,eazham pizhaiththirukkum)

  ReplyDelete
 24. யுவா அவர்களுக்கு

  இந்த சுட்டியில் விடுதலை இராஜேந்திரன் அவர்கள் 2009-ல் மக்கள் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணல் உள்ளது. நேரம் இருந்தால் பார்க்கவும்.
  http://www.youtube.com/watch?v=sjb-cyeiXSI&feature=related

  ஹர்கிரட் சிங்கால் (Singh, Harkirat) எழுதப்பட்ட Intervention in Sri Lanka :The IPKF Experience Retold எ‌ன்ற புத்தகத்தையும் படித்து பார்க்கவும்.

  ReplyDelete
 25. கலைஞர் திட்டத்தை மாரனாலேயே புரிந்து கொள்ள முடியவில்லை என்பதுதான் உண்மை.அவர் விடும் அறிக்கை உண்மை என்று வாதிட்டால் நீங்க திசை மாரிப்போயிடுவீங்க.அதெல்லாம் அன்றன்றைய சூழலுக்கான சமாளிப்பு.அதை அடிப்படையாக வைத்து எழுதாதீர்கள்.

  ReplyDelete
 26. நடந்தது நடந்து முடிந்துவிட்டது, இறுதி கட்டத்தில் உங்க தலைவர் என்ன செய்தாரு? இது என்ன யுத்தம்

  அப்போ காங்கிரேசு கூட கூட்டணியில் இருந்த ஒரு மாதிரியும், காங்கிரேசு கூட கூட்டணியில் இல்லையின்னா ஒரு மாதிரியும் நடக்கும் உங்க தலைவரின் தமிழ் பற்று அருமை. நீங்க எல்லா ரெட்ட நாக்க பத்தி பேசறிங்க

  ReplyDelete
 27. இதே ஆய்வை நீங்கள் தினகரன் மற்றும் தா.கிருட்டிணன் விசயத்திலும் மேற்கொண்டு நீங்கள் ஒரு நேர்மையான பதிவர் என்பதை நிலை நிறுத்துங்கள் அண்ணா.

  ReplyDelete
 28. Lucky,

  Like the previous post on "Why cement prices are raising" where you painted a picture that the prices have increased because of Kalaignar housing scheme, i.e. all Rs.1800 crores being spent in one go, this post is also half-baked. As a journalist you didn't want to get into the depths of the issue, but rather want to prove your DMK allegiance and nothing more.

  The reason why English weeklies have sway over educated people is the depth to which they go into the issue. If you really want your posts to be widely read put some more effort in analysing and also presenting more facts. All the Best.

  ReplyDelete
 29. அன்புடன் லக்கிக்கு,
  ஈழத்தின் ஆயுதப் போராட்டம் அசாதாரண புறச்சூழலின் மத்தியில் அளப்பரிய ஆளுமை கொண்ட ஒருவரால் முன்னெடுக்கப்பட்டதாலேயே இப் போராட்டம் முப்பது ஆண்டு காலம் நீடித்தது.பல்வேறு சமூகப்பிளவுகள் உள்ள அண்ணளவாக மூண்டு மில்லியன் மக்கள் தொகையுள்ள் ஒரு மிகச்சிறிய தேசிய இனம் அத்தனை பிராந்திய,உலக வல்லரசுகளுக்கும் எதிராகவும்

  ReplyDelete
 30. செய்த அநீதிகள்,சூழ்ச்சிகள்,துரோகங்கள்
  பேசிச்சலித்த விடயங்கள்.அவர்களின் சாம,பேத,தான,தண்ட வழிமுறைகளுக்கு ஆட்பட்டு இப்போராட்டத்துக்கு அழிவைத்தேடித்தந்தவர்களூள் ஈழத்தமிழர்களும் உண்டு,இந்தியத்தமிழர்களும் உண்டு. இந்திய அதிகார வர்க்கத்தின் நிகழ்ச்சிநிரலில் ஈழப்போராட்டத்துக்கு எல்லைகள் உண்டு ஆரம்பம்முதலே.இலங்கையைஅல்ல யாழ்ப்பாணத்தை 2000மாம் ஆண்டில் ஓயாத அலைகள் நடவடிக்கைமூலம் புலிகள் மீள்க்கைப்பற்ற்றும் சூழல் உருவாகியபோது முற்றுகையிலிருந்த முப்பதினாயிரம் சிங்கள இராணுவ வீரர்களைக் காப்பாற்றும் பொருட்டும், புலிகளிடம் யாழ்ப்பாணம் வீழாதிருக்கவும் யாழ்ப்பாணத்தில் இந்திய இராணுவம் இலங்கைஅரசின் ஒப்புதலோடு தரையிறங்கத்தயாராக இருந்ததும்அதனால் புலிகள் அன்நடவடிக்கையை இடைநிறுத்தியதியதையும் நீங்கள் அறிந்திருக்கவில்லையா?"றோ"வின் வழிநடத்தலில் இயங்கிய சபாரத்தினம் கருனானிதிக்கும் நெருக்ககமாக இருந்தாரா,இல்லையா? மற்றும்படிக்கு இன்றைய சூழழில் எவரையும் அனேகமான ஈழத்தமிழன் நம்பவில்லை. இன்றைய வாழ்வியல் அவலமே அவன்முன் உள்ள சவால்.

  ReplyDelete
 31. பாவம் என்ன சொல்ல முடியும்.
  சகோதர் அழகிரி ச்டாலின் போல இருக்க முடியாததால்.ஈழ தமிழர் வரலாறு மாறிவிட்டதென,
  சோனியாவை சொக்க தங்கமென சொன்னவர் சொல்ல கேட்க வெள்ளமென தமிழர்
  கூட்டம். நாளை காங்கிரசு கழட்டிவிட்டால் பாருங்கள் இவர் பேசுவதை.

  இன்னும் நெடுமாறன் காரணம் எனசொல்வது- வேடிக்கை. இன்னும் எத்தனை நாள் இந்த-கை-ய
  எத்தரை நம்ப?

  இராசீவ் இறந்து காங்கிரசு இல்லாதவரை புலிகள் அழியவில்லை.

  மேலும் புலிகள் எதிரிகளால் மட்டும் அழியவில்லை.

  சோனியாவும் ராசபக்சேவும் தமிழர் கண்ணுக்கு கருத்துக்கு எட்டாமல் பார்த்துக் கொள்ளும்
  தந்திரமான வாதம் - சோதர யுத்தமெனும் விடாபிடி பல்லவி.

  சரி யோக்ய புருசர்கள் நடுநிலையாளர் பக்கசார்பற்ற யாராவது இதுவரை மக்களை பார்த்துவர செய்தது உண்டா?

  சோனியாவுக்கு பிரபாகரன் இலக்கு.ராசபக்சேவுக்கு தமிழர் இலக்கு,
  செத்ததென்னமோ மொத்தமாய் தமிழினம்.

  கலைஞருக்கு என்ன இலக்கோ? சோதர யுத்தமெனும் பல்லவி.

  ஆனாலும் பாருங்க தமிழீழம் கிடைத்தால்,தமிழன் எல்லாரும் வருத்த படுவோமாம்
  கலைஞர் மட்டும் மகிழ்ச்சி அடைவாராம்,

  அதற்காகவது போர் நிறுத்தம் போல, தமிழீழம் கிடைத்தது என யாராவது சிதம்பரத்திடம்
  அறிவிக்க சொல்ல கூடாதா?
  பிறகு தமிழ் கிடைத்தது என யாராவது சொல்ல - கலைஞர் ஆமாம் அது மழை விட்டாலும் தூவானம் விடாத மாதிரி தமிழ் கிடைத்தாலும் தமிழீழம் கிடைக்காது இதைதான் பெரியார் அம்பேத்காரிடம் சொன்னார் என்று எதை சொன்னாலும் நம்பும் உடன்பிறப்புக்கு கடிதம் எழுதி விடுவார்.

  இத்துணை தமிழர் சாக நெடுமாறன் மட்டுமே காரணம். வேணும்னா வைகோவை சேத்துக்கலாம்.

  அதுக்கு்ம் முன்னாடி அப்பறம் பின்னாடி சோதர யுத்தம் காரணம்,
  வேறுகாரணம் எதையும் நினைக்காதீர் தமிழர்களே.
  இதைதான் எதையும் தாங்க சொன்னப்ப வங்க கடலோரம் தூங்கும் அண்ணாவும் சொன்னார்.

  ReplyDelete
 32. Enrique's Journey - An example for responsible journalism. This news series appeared in Los Angeles Times newspaper around 2003 and I had the good fortune of reading it when it was first published. I was simply amazed by the effort and coverage of the reporter. I have often wanted to benchmark Indian journalist against such a standard.

  No wonder this news series won two Pulitzer prize for it's depth and research.

  ReplyDelete
 33. நண்பர் யுவா,
  முதலில் நீங்கள் கரு"நாயின்" அல்லக்கையாய் இருக்க தடையேதும் இங்கில்லை, எனவே வள்ளல் வாத்யாரை நீங்கள் இழுக்க வேண்டாம். M .G .R ஒரு கூட்டத்திற்கு அழைப்புவிட்டதை தெரிந்தும் அதற்கு முதல் நாள் இந்த துரோகி கூட்டம் நடத்தும் போதே தெரியவில்லையா? புலிகள் நம் மக்களை பணம் தரும் வங்கியாக பார்க்கவில்லை. இன்று பல்லாயிரம் கோடி பணம் வைத்திருக்கும் துரோகியிடம் அன்று பணம் இல்லையா என்ன, ஊரெல்லாம் சென்று பிச்சைஎடுக்க? எது சகோதர யுத்தம்? தன் இனத்திற்காக போராடுவது மட்டுமே என்று எண்ணி, அதற்கு எதிர்மறையாக ரா விடமும், மற்ற நாய்களிடமும் தம் இனத்தை காட்டி கொடுப்பவனை வைத்து சமாதானம் சொல்ல அவர்கள் அரசியல் கட்சி நடத்தவில்லை. ஒருவர் விழுந்துவிட்டால் கை கொடுக்கவேண்டும், எழுவதற்கு. குட்டிமணியை பிடித்து இலங்கையிடம் கொடுத்த கொலைஞர் எங்கே? பிரபாகரன் ஐ கைது செய்தபோது இலங்கை கெஞ்சியும் அனுப்பாத வள்ளல் எங்கே? எழுத இடம் இருப்பதால் கக்க வேண்டாம் நஞ்சை. கொலைங்கருக்கு ஏற்கனவே ஜல்ப்பு, எனவே நீங்கள் நக்க வேண்டாம் அவர் கு......... (குட்டி) நெஞ்சை....

  (வெளியிடப்படுமா என்ற வினாவுடன்,
  சதீஷ்)

  ReplyDelete