23 அக்டோபர், 2010

சிங்கத்தின் தீபாவளி ஸ்டார்ட்ஸ்...

இந்த தீபாவளிக்கு என்ன ஸ்பெஷல்?

3டி மேக்ஸ் புடவை..

மல்டி மசகலி சல்வார்..

குந்தன் ஒர்க் சுரிதார் மெட்டீரியல்..

காட்டன் மஸ்லின் சட்டை..

பொந்தூர் வேட்டி..

பிளாக்பெர்ரி பெர்ல்3ஜி9100..

ஸ்டேண்டர்ட் மார்க் பட்டாசுகள்..

பாசிப்பருப்பு அல்வா, முள்ளு முறுக்கு..

உங்கள் சாய்ஸ் என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

ஆனால் காமிக்ஸ் ரசிகர்களின் பல்லாண்டுகால வனவாசம் இந்த தீபாவளியோடு முடிவுக்கு வருகிறது.

என்னது காமிக்ஸா? குழந்தைகள்லாம் படிக்குமே.. அதுவா? என்று முகம் சுளிக்கிறீர்களா?

வெயிட் பண்ணுங்க ஜெண்டில்மேன். உங்களுக்காக ஒரு தகவல்..

இன்றைய தேதியில் தமிழில் காமிக்ஸ் படிப்பவர்கள் அனைவரும் இருபது வயதுக்கு மேற்பட்டவர்களாகவே 80 சதவிகிதம் பேர் இருக்கிறார்கள் என்று ஏதோ ஒரு அமைப்பின் ஏதோ ஒரு கணக்கெடுப்பு கூறுகிறது.

இது நிச்சயமாக குழந்தைகள் சமாச்சாரம் அல்ல.

ஏனெனில்..

1960களின் இறுதியில் 'மாலைமதி காமிக்ஸ்' வெளிவந்து கொண்டிருந்தது. ஒரு இதழின் விலை 75 காசு. உங்கள் தாத்தாவோ, அப்பாவோ அந்த காலத்தில் வாங்கி பரண் மேல் போட்டு வைத்திருந்தார்களேயானால் தூசு தட்டி எடுத்து வையுங்கள். ஒரு இதழ் இன்று பிரிமீயம் ரேட்டில் 4000 ரூபாய் வரை விலை போக வாய்ப்புண்டு.

1987ல் வெளிவந்த லயன் காமிக்ஸ் தீபாவளி மலரின் விலை ரூ.10. இன்று அதனுடைய மதிப்பு ஆயிரம் மடங்கு மார்க்கெட்டில் உயர்ந்திருக்கிறது. ஏனெனில் சமீபத்தில் அந்தப் புத்தகத்தை ஒரு நண்பர் ரூ.10,000 கொடுத்து வாங்கியிருக்கிறார்.

நான் கூட சில ஆயிரங்களை கொட்டி, மிஸ்ஸாகிவிட்ட பழைய சில காமிக்ஸ்களை வாங்கி சேகரித்து வைத்திருக்கிறேன். உடனே சேல்ஸுக்கு கிடைக்குமா? படிக்க கிடைக்குமா? என்று பின்னூட்டம் போட்டு டார்ச்சர் செய்து தொலைக்காதீர்கள். காமிக்ஸ் விஷயத்தில் நான் ஒரு தீவிர சைக்கோ.

காமிக்ஸ் என்பது Passion சார்.. Passion.. ஸ்டேம்ப் கலெக்சன், காயின் கலெக்சன் மாதிரி..

70களிலும், 80களிலும் குழந்தைகளாக இருந்து ஒண்ணரை ரூபாய் இல்லாமல் காமிக்ஸ் வாங்க முடியாதவர்கள் இன்று லட்சம் லட்சமாக சம்பாதிக்கிறார்கள். தாங்கள் இழந்துவிட்ட பால்யகால ஒண்ணரை ரூபாய் பரவசத்தை இன்று ஆயிரங்களில், லட்சங்களில் வாங்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள் இந்த நேற்றைய குழந்தைகள்.

கஷ்டப்பட்டு ஏதோ ஸ்டேட்டிஸ்டிக்ஸ் எல்லாம் அள்ளிவிட்டிருக்கோம். இப்போதாவது இது சீரியஸ் மேட்டர் என்று நம்புங்க ப்ளீஸ். ஏதோ பார்த்து போட்டு கொடுங்க சாமி.

ஓக்கே, கமிங் டூ த பாயிண்ட்..

மேலே நாம் குறிப்பிட்ட காமிக்ஸ் வெறியர்கள் சாதாரணமாகவே இரும்புக்கை மாயாவி, ஸ்பைடர் என்று வெறியாட்டம் ஆடக்கூடியவர்கள். நான்கைந்து தீபாவளிகளாக பெரியதாக 'ஸ்பெஷல்' எதுவும் இல்லாமல் முடங்கிக் கிடந்தவர்கள். இந்த தீபாவளிக்கு 854 பக்கங்களில், 200 ரூபாய் விலையில் இந்திய காமிக்ஸ் வரலாற்றிலேயே முதன் முறையாக 'லயன் ஜம்போ ஸ்பெஷல்' வெளிவருகிறது. கிட்டத்தட்ட 'எந்திரன்' ரிலீஸுக்கு இருந்த எதிர்ப்பார்ப்பு இந்த புக்குக்கும் இருக்கிறது என்றால் நம்புங்கள். 'தலைவா வா. தலைமையேற்க வா'வென்று காமிக்ஸ் ரசிகர்கள், லயன் காமிக்ஸ் ஆசிரியர் விஜயனுக்கு போஸ்டர் ஒட்டாததும், ஜம்போ ஸ்பெஷலுக்கு கட்டவுட் வைக்காததும்தான் பாக்கி.

854 பக்கமும் ஒரே கதைதான் என்பது இந்த ஸ்பெஷலின் ஸ்பெஷல். விஷ்ணுபுரத்தை மிஞ்சும் இந்த ஸ்பெஷலை கண்டால் ஜெயமோகன் நொந்துப் போவார். தீவிர காமிக்ஸ் ரசிகரான எஸ்.ராமகிருஷ்ணன் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுவார். எஸ்.ரா மட்டுமல்ல.. இயக்குனர் மிஸ்கின், நடிகர் பொன்வண்ணன் மாதிரி நிறைய வி.ஐ.பி. காமிக்ஸ் ரசிகர்கள் உண்டு.

ஆங்கிலத்தில் 'எக்ஸ்19' சீரியஸ் காமிக்ஸ் மிகப்பிரபலம். கிட்டத்தட்ட 20 ஆண்டுகாலம் தொடர்ச்சியாக தனித்தனி புத்தகங்களாக வந்து பெரும் வரவேற்பை பெற்றது. இந்த கதையிலிருந்துதான் 'வெற்றி விழா' திரைப்படத்தை பிரதாப் போத்தன் சுட்டார் என்று கூட கிசுகிசு உண்டு. கதையைப் படித்துப் பார்த்தால் அந்த கிசுகிசு உண்மைதான் என்றுகூட தோன்றும்.

கடற்கரையில் மயங்கிய நிலையில் விழுந்து கிடக்கிறான் ஹீரோ. முழித்ததும் தன் பெயர்கூட அவனுக்கு நினைவில்லை. தன் அடையாளத்தை தேடிப் புறப்பட்டவனுக்கு அடுத்தடுத்து பல அதிர்ச்சிகள். அவன் நல்லவனா கெட்டவனா கொலைகாரனா தேசத்துரோகியா கல்யாணமானவனா பொண்டாட்டி இருக்கிறாளா என்று குழம்பித் திரிய வேண்டிய சூழல். சில பேர் அவனை வரவேற்கிறார்கள். பலர் அவனை கொல்லத் துடிக்கிறார்கள். நினைவிழப்பதற்கு முன்பான வாழ்க்கையை தேடிச் செல்லும் நாயகனின் கதையில் சோகம், மகிழ்ச்சி, ஆக்‌ஷன் என்று எல்லா மசாலா செண்டிமெண்டுகளும் உண்டு. கட்டத்துக்கு கட்டம் ஒருவகையான இலக்கிய சோகம் இந்த கதை முழுக்க ஊடே வந்துகொண்டிருக்கும். ஒரு கட்டத்தில் 'சேது' படம் பார்க்கும் மனநிலை கூட தோன்றக்கூடும்.

ஓவியங்கள் ஒவ்வொன்றும் கல்வெட்டில் பொறிக்கப்பட வேண்டிய முத்துகள். இவ்வளவு சிறப்பான ஓவியங்களோடு உலகளவில் எந்த காமிக்ஸும் வந்ததில்லை என்று தாராளமாக பெட் கட்ட முடியும். ஒவ்வொரு கட்டத்திலும் ஓவியரின் துல்லியம், டீடெய்லிங் அபாரமாக அமைந்திருக்கும்.

ஆங்கிலத்தில் மொத்தம் 19 புத்தகங்களாக வெளிவந்தது.

தமிழில் 'இரத்தப் படலம்' என்று பெயரிட்டு மொழிமாற்றி லயன் காமிக்ஸ் வெளியிட்டு வந்தது. இப்போது ஒட்டுமொத்த 19 புத்தகங்களையும் ஒரே புத்தகமாக லயன் கொண்டு வருகிறது. இதுதான் லயன் ஜம்போ ஸ்பெஷல். 854 பக்கங்களில் காமிக்ஸ் என்று உலகளவில் இப்படியான ஒரு முயற்சி அனேகமாக இதுதான் முதல் தடவையாக இருக்கக்கூடும். ஆங்கிலத்திலேயே கூட ஒரே புத்தகமாக வந்ததில்லை. 19 புத்தகங்களையும் வாங்க ரூ.4000 வரை செலவு செய்ய வேண்டியிருக்கும்.

ஒரு சேல்ஸ்மேனின் லாவகத்தோடு இந்தப் பதிவினை எழுதி வருகிறேன். அனேகமாக இன்னேரம் இப்புத்தகத்தை வாங்கும் எண்ணம் உங்களுக்கு தோன்றியிருக்கலாம். சாரி ஜெண்டில்மேன். காமிக்ஸ் கலெக்டர்ஸ் ஸ்பெஷலான இந்தப் புத்தகம் கடைகளில் கிடைக்கவே கிடைக்காது.

வேறெப்படி வாங்குவது?

உடனடியாக ரூபாய் 230க்கு (புத்தகத்தின் விலை ரூ.200 + கூரியர் செலவு ரூ.30) மணி ஆர்டர் அல்லது "Prakash Publishers" என்ற பெயரில் காசோலை எடுத்து, Prakash Publishers, No 8/D-5, Chairman P.K.S.S.A Road, Amman Kovil Patti, Sivakasi, 626189 என்ற முகவரிக்கு அனுப்பலாம்.  04562 272649, 04562 320993 ஆகிய எண்களுக்கு (காலை 10.30 டூ மாலை 5.30) தொலைபேசியும் மேலதிக விவரங்களைப் பெறலாம்.

ஏற்கனவே 800 பிரதிகள் அட்வான்ஸ் புக்கிங் ஆகிவிட்டது. நிறைய பக்கங்கள் என்பதால் 'பைண்டிங்' செய்வது கொஞ்சம் சிரமம். எனவே 50, 50 புத்தகங்களாக தயார் செய்து முன்பதிவு செய்தவர்களுக்கு அனுப்பி வருகிறார்கள். முந்துவோருக்கு பிரதிகள் நிச்சயம் கிடைக்கும்.

ஜம்போ ஸ்பெஷலோடு லயன் காமிக்ஸாரின் தீபாவளி கொண்டாட்டம் முடிந்துவிடவில்லை. அடுத்தடுத்து அதிரடியாக சரக்குகளை இறக்க திட்டமிட்டிருக்கிறார்கள். அடுத்த மூன்று மாதங்களில் வெளிவர இருக்கும் புத்தகங்கள் : வெள்ளையாய் ஒரு வேதாளம் (சிக் பில்), சாத்தானின் தூதன் டாக்டர் செவன் (காரிகன்), காவல் கழுகு (டெக்ஸ் வில்லர்) ஆகியவை லயன் காமிக்ஸிலும், களிமண் மனிதர்கள் (இரும்புக் கை மாயாவி), கொலைகார கோமாளி (ஜானி நீரோ) ஆகியவை காமிக்ஸ் கிளாசிக்ஸ் பிராண்டிலும், விண்ணில் ஒரு குள்ளநரி (விங் கமாண்டர் ஜார்ஜ்), மரணத்தின் நிசப்தம் (ரிபோர்டர் ஜானி)  ஆகியவை முத்து காமிக்ஸ் பிராண்டிலும் வெளிவர இருக்கிறது. 75 ரூபாய் செலுத்தி மொத்தமாக இந்த 7 புத்தகங்களையும் கூட வாங்கிக் கொள்ளலாம்.

இந்த ஏழு புத்தகங்களுக்கு பிறகு தமிழ் காமிக்ஸுக்கு புத்துயிர் பாய்ச்சும் மிகப்பெரிய முயற்சி ஒன்று நடைபெறவிருக்கிறது. அது என்னவென்று ஜம்போ ஸ்பெஷலின் ஹாட்லைனில் ஆசிரியர் எஸ்.விஜயன் சொல்லியிருக்கிறார்.

ஹேப்பி தீபாவளி ஃபோக்ஸ்!

 காமிக்ஸ் குறித்த விரிவான, தொடர்ச்சியான தகவல்களுக்கு நண்பர் கிங்விஸ்வாவின் தமிழ் காமிக்ஸ் உலகம் வலைப்பூவை வாசிக்கலாம்!

 

36 கருத்துகள்:

 1. காமிக்ஸ் புத்தகங்கள் பற்றி விரிவான மற்றும் சுவாரஸ்யமான அலசல். தங்களுக்கும் இனிய முன்கூட்டிய தீபாவளி வாழத்துகள் யுவா சார்.

  பதிலளிநீக்கு
 2. நல்ல செய்தி
  நன்றி லக்கி

  --

  ஸ்பைடர் காமிக்ஸ் கலெக்‌ஷன் உண்டா

  பதிலளிநீக்கு
 3. boss, இங்க(ஸ்ரீ லங்கா) எப்படி வாங்குறது?? Plz show me a way!

  பதிலளிநீக்கு
 4. Thozhar, Vetri Vizha move is from the " The Bourne Identity" novel by Robert Ludlum. I don't whether Robert Ludlum got inspired from Comics.

  Tharani.

  பதிலளிநீக்கு
 5. >>854 பக்கங்களில் காமிக்ஸ் என்று உலகளவில் இப்படியான ஒரு முயற்சி அனேகமாக இதுதான் முதல் தடவையாக இருக்கக்கூடும்.
  - இல்லை :). உதாரணத்திற்கு: http://www.amazon.com/Amazing-Spider-Man-Omnibus-Vol-v/dp/0785124020/ref=sr_1_1?s=books&ie=UTF8&qid=1287837968&sr=1-1 . தமிழ் முயற்சியைக் குறை சொல்ல இல்லை...சும்மா தகவலுக்கு மட்டும்.

  இதைப் போல X-Men வரிசை இன்னும் பிரபலம். ஆங்கிலத்தில் பெரியவர்களுக்கு என்று தனிப்பட்ட காமிக்ஸ் உண்டு. Sin City படம் பார்த்திருப்பீர்களே?

  பதிலளிநீக்கு
 6. நானும் ஒரு தீவிர ரசிகன் காமிக்ஸ் புத்தகங்களுக்கு.
  அதன் அறுமை பெருமை புரியாத கிண்டலடித்த எனது நண்பனை புடிச்சு “மேடையில் ஒரு மன்மதன்”- படிடான்னு கூடவே இருந்தேன்.
  அவனும் இப்போ காமிக்ஸ் விரும்புறான்.
  கிட்டத்தட்ட காமிக்ஸ் படிக்காத எல்லோரும் சொல்லும் விசன கருத்து ”அது கொழந்த படிக்குறது.அதப்போயி நீ படிக்குறேயேப்பா.” அப்படி யாரு சொன்னாலும் நான் மறுத்து அவுங்களுக்கு ஒரு காமிக்ஸ கொடுத்து படிச்சு பாருன்னு சொல்லி மறக்காம திருப்பி வாங்கிருவேன்.
  மக்களுக்கு அது கொழந்தங்க படிக்கக்கூடிய ஆனா பெரியவங்களுக்கான புத்தகம்னு புரியவெக்கிறது ரொம்ப கஷ்டமா இருக்கு.
  அத கொழந்த படிக்குது.
  அத நாம எப்படி படிக்கிறதுன்னு நெனச்சு “அற்புத அனுபவத்த கோட்ட விட்டுவிடுகிறார்கள்”

  பதிலளிநீக்கு
 7. இந்த பதிவை காப்பியடிச்சு என்னோட பதிவில் போட்டுக்கறேன்.

  பதிலளிநீக்கு
 8. வெளிநாட்டு வாசகர்கள் எப்படிப் பெற்றுக் கொள்ளலாம் என்பதை விபரமாகச் சொன்னால் நன்று

  பதிலளிநீக்கு
 9. லக்கீ,
  நீங்க வாங்குன காமிக்க இதுவரைக்கும் நீங்களே பலமுறை(என்னய மாதிரி) படிச்சிருப்பீங்க.
  ஏன் டமில் நாட்டுல மட்டும் இந்த நிலை ?
  யோசிச்சு மெதுவா 24/10/10 - ல பதில எனக்கு மெயில் பன்னுங்க.

  பதிலளிநீக்கு
 10. பதிவுக்கு நன்றி லக்கி.
  சிறிய வயதில் காமிக்ஸ் கதைகளில் நிறைய ஆர்வம். முன்பு முத்து காமிக்ஸ் இலங்கையில் பிரபலமாயிருந்தது. இப்பவெல்லாம் காமிக்ஸ் புத்தகங்களை காணக்கிடைப்பதில்லை.
  வரட்டும் வாசிப்போம்.

  பதிலளிநீக்கு
 11. நன்றி லக்கி... நானும் நீங்கள் சொன்ன ஒருவரில் அடக்கம்.... பழைய புத்தக கடையில் அப்ப ஒரு ஸ்கீம் உண்டு அதாவது ஐந்து ரூபாய் கொடுத்து மெம்பெர் ஆய்ட்டா போதும் ஐந்து காமிக்ஸ் எடுத்துக்கலாம் அப்பறம் அதை மாத்தி மாத்தி வாங்கிகிட்டே இருக்கலாம்.... அந்த ஐந்து ரூபாய சேக்கறதுக்கு ஒரு ரெண்டு மாசம். அந்த காமிக்ஸ் படிக்கும் சுகம் இந்த கால குழந்தைகளிடம் இல்லை.... அம்மாவை பொறுத்தவரை அவர்கள் பிள்ளைகள் அவர்களுக்கு என்றுமே கொழந்தைகள் தான் அது போல நாமும் காமிக்ஸ் என்றாலே குழந்தைகள் தான்.... அது ஒரு காலம் லக்கி.... லக்கி பீபுள் வி ஆர்

  பதிலளிநீக்கு
 12. Wow.... What a Sweeeeeeeeeet news. thanks lucky. This is amazing. Im also waiting for this Special Book.
  Really this is going to be a wonderful diwali.
  //இந்த ஏழு புத்தகங்களுக்கு பிறகு தமிழ் காமிக்ஸுக்கு புத்துயிர் பாய்ச்சும் மிகப்பெரிய முயற்சி ஒன்று நடைபெறவிருக்கிறது. அது என்னவென்று ஜம்போ ஸ்பெஷலின் ஹாட்லைனில் ஆசிரியர் எஸ்.விஜயன் சொல்லியிருக்கிறார்.//
  What is that special news????
  - jagan

  பதிலளிநீக்கு
 13. நான் ஒரு தீவிர காமிக்ஸ் வெறியன்.முத்து காமிக்ஸ்,லயன் காமிக்ஸ்,இந்திரஜால் காமிக்ஸ் என்று
  80 களில் வெளிவந்த ஒரு புக்கையும் விட்டு வைத்தது இல்லை.காலக்கொடுவினை.ஒரு புத்தகம் கூட கையிருப்பு இல்லை.இப்போது சிங்கப்பூரில் இருப்பதால் கையை பிசைந்து கொள்வதை தவிர வேறு வழியே இல்லையா ?

  பதிலளிநீக்கு
 14. சைக்கோத்தனமான காமிக்ஸ் வெறியர்களின் பட்டியலில் என்னையும் இணைத்துக் கொள்கிறேன். சில வாரங்களுக்கு முன்பு லக்கிலுக் பட்டையைக் கிளப்பும் 'ஒரு கோச் வண்டியின் கதை' பதிப்பை ஒரு பழைய புத்தக கடையில் கண்டெடுத்தது இவ்வருடத்தின் ஆனந்தமான நேரங்களில் ஒன்று. ஜம்போ ஸ்பெஷல் பெரும் வெற்றியடைய வாழ்த்துகிறேன்!

  பதிலளிநீக்கு
 15. யுவா, வாரஇதழ்கள் ஒருமுறை படித்தால் பிறகு குப்பைதான்.
  ஆனால் காமிக்ஸ் அப்படியல்ல.
  திட்டமிடுதல் என்பது வியாபாரத்தில் மிகவும் அடிப்படை.
  ஆனால் தமிழ் காமிக்ஸ் உலகில்
  திட்டமிடாமல் உலாவருகிறது நம்ம காமிக்ஸ்.
  ஒரு வருடத்திற்கு இத்தனை என்று இல்லாமலும்,மாத இதழாக இல்லாமலும்
  வார இதழாக இல்லாமலும் தனிமனித சாம்ராஜ்யமாக திரு.விஜயன் அவர்கள்
  குழப்பி வைத்துவிட்டார்.
  மார்க்கெட்டிங்,விளம்பரம்,விளம்பர வருவாய் என்ற கோணத்தில் கவனம் செலுத்தி
  திட்டமிட்டு இதழ்கள் வெளியிட்டால் கண்டிப்பாக காமிக்ஸ் வெல்லும்.
  ரசிகர்கள் இல்லாமலில்லை.
  இங்கு வெல்லாததற்கும் புதிய ரசிகர்கள் உருவாகமல் போனதற்கும் ஒரே காரணம்
  திட்டமிடாதல் மட்டுமே.
  ஆனால் எனக்கு எத்தனை வயதானலும் காமிக்ஸ் படிப்பதை நிறுத்த மாட்டேன்.
  சிக்பில்.லூக்,டைகர்,டெக்ஸ் மற்றும் விடுபட்ட பெயர்கள் எல்லோரும்
  ஒரு திரைப்படம் கொடுக்கிற இன்பத்தைவிட அதிகமாக அளிப்பவர்கள்.
  காமிக்ஸ் வாழவும்,வளர்கவும் உறுதியாக ஆதரவளிக்கும்
  ரவி. நன்றி.
  (சில வரிகளை எடிட்செய்து போஸ்ட் செய்யுகள் ப்ளீஸ் :-)

  பதிலளிநீக்கு
 16. நினைவுகளை பின்னோக்கி எடுத்துச்சென்ற பதிவு... நன்றி
  சின்ன வயசுல பள்ளிகுடதுல படிக்கும் பொது ஒரு பாடத்திற்கும் இன்னொரு பாடத்திற்கும் இடையில் இருக்குற அந்த அஞ்சு நிமிசத்துல ஓடி போயி பக்கதுழு கடையில எதாச்சும் பெருசு படிசிகிட்டு இருக்கும் வாரமலர்... உயிரை தேடி ங்கிற காமிக்ஸ் தொடரை மட்டும் ஒரு ஓரமா நின்று அந்த பெருசுக்கு தெரியாமலேயே படிச்சிட்டு வகுப்புல போயி அத பசங்ககிட்ட மணிக்கணக்க விவரிக்கிற சுகம் இப்போ ஆயிரங்கள் கொடுத்து வாங்கி படிச்சாலும் கிடைக்குமா...

  பதிலளிநீக்கு
 17. //ஹேப்பி தீபாவளி ஃபோக்ஸ்!//

  ஃபோக்ஸ் -னா சைக்கிள் சக்கரத்துல இருக்குமே கம்பி, அதுதான?!!!

  பதிலளிநீக்கு
 18. நன்றி லக்கி... நானும் புக் பண்ணிக்கறேன்...

  பதிலளிநீக்கு
 19. "ஹேப்பி தீபாவளி ஃபோக்ஸ்"

  சூப்பர் பதிவு

  பதிலளிநீக்கு
 20. நானும் ஒரு காமிக்ஸ் பிரியன். லேடி ஜேம்ஸ் பாண்ட் மாடஸ்தி தோன்றும் மாயச்சிலை. கருப்பு மாயாவி உலாவும் மரணக்கடல். இதெல்லாம் ரொம்ப காலம் முன்னாடி படிச்சது. தலைப்பு கரெக்ட்ன்னு நினைக்கிறேன். இப்போ என் காமிக்ஸ் வேட்கையை tinkle digest என்ற ஆங்கில காமிக் இதழை கொண்டு பூர்த்தி செய்கிறேன். நான் ஒரு தமிழ் வெறியன் என்றாலும், ஆங்கிலம் கற்பதை எதிர்க்கவில்லை. உங்கள் பிள்ளை எளிமையாக அதே நேரம் சந்தோசமாக ஆங்கிலம் கற்க சிறந்த காமிக் புத்தகம் tinkle digest. இது பலருக்கு தெரிந்திருக்கும்.

  பதிலளிநீக்கு
 21. வாவ்.. இந்த செய்தி உண்மையான தீபாவளி செய்தி.. தேங்க்ஸ்... பல வருடங்களுக்கு முன் - முன் பதிவு செய்துவிட்டு காத்திருக்கிறேன்...

  பதிலளிநீக்கு
 22. உங்க இந்தப் பதிவை என் வலைத்தளத்திலும் போட்டுக்கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
 23. தகவலுக்கு நன்றி நன்றி நன்றி

  பதிலளிநீக்கு
 24. தகவலுக்கு நன்றி லக்கி. நானும் புத்தகங்களுக்கு பதிவு செய்து விடுகிறேன்

  பதிலளிநீக்கு
 25. // கொலைகார கோமாளி (ஜானி நீரோ) //

  கொலைகாரக் கலைஞன் என்று நினைக்கிறேன்
  .

  பதிலளிநீக்கு
 26. hi, good new to all comics readers, XIII will be available on 27/10/2010 at Prakash publishers. Happy deepavali and reading.

  பதிலளிநீக்கு
 27. nalla entry to reentry of lion!!

  good shiva!! l like it!

  but have you got your copy!

  பதிலளிநீக்கு
 28. பகிர்விற்கு நன்றி. தமிழ் காமிக்ஸ் உலகத்துக்கான சுட்டி, மறைந்த காமிக்ஸ் ஆசிரியரான என் தாத்தா திரு.முல்லை தங்கராசன் அவர்களைப் பற்றிய சில பதிவுகளைக் காண உதவியது. ஆச்சர்யத்துடனும், சந்தோசத்துடனும் - நன்றிகள் பல.

  பதிலளிநீக்கு
 29. பகிர்விற்கு நன்றி. தமிழ் காமிக்ஸ் உலகத்துக்கான சுட்டி, மறைந்த காமிக்ஸ் ஆசிரியரான என் தாத்தா திரு.முல்லை தங்கராசன் அவர்களைப் பற்றிய சில பதிவுகளைக் காண உதவியது. ஆச்சர்யத்துடனும், சந்தோசத்துடனும் - நன்றிகள் பல.

  பதிலளிநீக்கு
 30. hi i'm living in london and i want to buy this book. please tell me a way

  பதிலளிநீக்கு
 31. Anna naan ilanghayil irukkira oru vasakan Ingu Irathapadalam1-18 kidaikkavillai mukkiyamaga yarlpanathil can you sent a small number of this collecter's special?

  பதிலளிநீக்கு