18 அக்டோபர், 2010

இரண்டு கற்பழிப்பு செய்திகள்!

சமீபத்தில் வாசிக்கக் கிடைத்த இரண்டு கற்பழிப்பு செய்திகள் :-


ஒன்று :

ஜிம்பாப்வே நாட்டில் நடந்த சம்பவம் இது. புலவாயோ பஸ் ஸ்டேண்டில் 26 வயதான போலிஸ்காரர் ஒருவர் பஸ்ஸுக்காக நின்றிருந்தார். அப்போது ஒரு கார் அந்த வழியாக வந்தது. காருக்குள் மூன்று பெண்கள் இருந்திருக்கிறார்கள். லிப்ட் தருவதாக சொல்லி போலிஸ்காரரை ஏற்றிச் சென்றிருக்கிறார்கள்.

காருக்குள் போலிஸ்காரர் திடீரென மயக்கமாகியிருக்கிறார். அனேகமாக அப்பெண்கள் மயக்க மருந்து பயன்படுத்தியிருக்க வேண்டும். மயக்கம் தெளியும்போது மூன்று பெண்களும் அவரை பாலியல் வன்புணர்வு செய்வதை அரைமயக்க நிலையில் உணர்ந்திருக்கிறார். 'வேலை' முடிந்தபிறகு அவரை காரை விட்டு தூக்கி எறிந்திருக்கிறார்கள். அவரது மொபைல் போனும், பர்ஸூம் அப்பெண்களால் களவாடப் பட்டிருக்கிறது.

இச்சம்பவத்துக்கு முன்பாகவும் ஹராரே, மாஸ்லிங்கோ ஆகிய இடங்களில் இதைப்போன்ற சம்பவங்கள் நடந்திருப்பதாக ஜிம்பாப்வே நாட்டு காவல்துறை அறிவித்திருக்கிறது. கடந்த 11 மாதங்களில் ஜிம்பாப்வேயில் மட்டும் 6 ஆண்கள் இதுபோன்ற சம்பவங்களில் கற்பிழந்ததாக தெரிகிறது. சில இடங்களில் துப்பாக்கி முனையில் வற்புறுத்தி கற்பழிக்கப்பட்டதாகவும் காவல்துறை தெரிவிக்கிறது.


இரண்டு :

நவிமும்பையில் நடந்த சம்பவம் இது. சனிக்கிழமை இரவு ஒரு பள்ளி வளாகத்தில் ஆயுதபூஜை கொண்டாட்டம் நடைபெற்றிருக்கிறது. அப்போது 30 வயதான பெங்காலி பக்தை ஒருவர் உடல்நலம் குன்றி மயக்கமுற்றிருக்கிறார்.

அருகிலிருந்த மருத்துவமனையான லோட்டஸ் ஆஸ்பிட்டலில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவசர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அதிகாலை 2 மணியிலிருந்து 5 மணிக்குள்ளாக அங்கிருந்த ட்யூட்டி டாக்டர் விஷால் (வயது 26) என்பவரால் அரைமயக்க நிலையில் இருந்தபோது பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டவர், கத்தக்கூட திராணியின்றி இருந்த நிலையில் வலுக்கட்டாய உறவுக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கிறார். இத்தனைக்கும் அதே மருத்துவமனையில் அப்பெண்ணின் கணவரும் வேறு அறையில் இருந்திருக்கிறார்.


இந்த இரு சம்பவங்களின் அடிப்படையில், கருத்து கந்தசாமி ஆகி நாம் கருத்து எதையும் சொல்லப்போவதில்லை. இச்செய்திகளை வாசித்தபின்பு நீங்களே தேவையான கருத்துகளை சிந்தித்து விடுவீர்கள். ஆனால் முந்தைய சம்பவத்தை ஒப்பிட்டுப் பார்க்கும்போது அகலிகை காலத்திலிருந்து நம் பாரதம் கொஞ்சம் கூட முன்னேறவேயில்லை என்ற வேதனையை மட்டும் பகிர்ந்து கொள்கிறோம்.

12 கருத்துகள்:

 1. //ஆனால் முந்தைய சம்பவத்தை ஒப்பிட்டுப் பார்க்கும்போது அகலிகை காலத்திலிருந்து நம் பாரதம் கொஞ்சம் கூட முன்னேறவேயில்லை என்ற வேதனையை மட்டும் பகிர்ந்து கொள்கிறோம்.//

  அதேதான்.

  பதிலளிநீக்கு
 2. first incident : Andha police kitta thupakki (Gun R Pistol) illaya.....

  பதிலளிநீக்கு
 3. சரியான ஆர்.எஸ்.எஸ் கட்டுரை. நீங்களுமா லக்கி.

  பதிலளிநீக்கு
 4. இதனால் நமக்கு புரிவது என்னவென்றால். இந்திய ஆண்களை ஜிம்பாப்வே க்கும், அங்கிருக்கும் ஆண்களை இந்தியாவுக்கும் மாற்றிவிடுவது. இது எப்படி இருக்கு....

  பதிலளிநீக்கு
 5. first incident : Andha police kitta thupakki (Gun R Pistol) illaya.....

  Thupaki irunthathuthan pirachanaiye

  பதிலளிநீக்கு
 6. இனி ஆண்கள் உசாராய் இருக்க வேண்டும். இல்லையென்றால் கற்பு காணமல் போயிடும்.

  (ஆமாம் கற்பு இருக்கா?)

  ஆண்களை கற்பழிக்கும் பெண்கள்

  http://wp.me/pILtz-E

  பதிலளிநீக்கு
 7. கல்பனா
  கல்ப் அடித்துவிட்டு வா.
  காலைக்கடன் முடித்துவிட்டு வா

  கலிகாலபரணியே வா.
  திரிலோகசுந்தரியே வா.

  பரங்கிமலை ஜோதியே வா.
  குற்றால குறவஞ்சியே வா.

  டேய் எவன்டா அவன் கல்பனான்னு ஒரு ப்ரோபைல் ஆரம்பிச்சு பின்னூட்டம் போட்டவன்.

  பதிலளிநீக்கு
 8. பால பாடம் படிப்பவன்11:03 முற்பகல், அக்டோபர் 20, 2010

  //மயக்கம் தெளியும்போது மூன்று பெண்களும் அவரை பாலியல் வன்புணர்வு செய்வதை அரைமயக்க நிலையில் உணர்ந்திருக்கிறார்.//

  பு.த.செ.வி..

  மயக்க நிலையில் 'எழுந்திரு'ப்பது சாத்தியமா?

  பால பாடம் படிப்பவன்

  பதிலளிநீக்கு
 9. //டேய் எவன்டா அவன் கல்பனான்னு ஒரு ப்ரோபைல் ஆரம்பிச்சு பின்னூட்டம் போட்டவன்.//

  அந்த மருத்துவனைவிட மிகவும் கேவலமான கார்த்திகை மாதத்து பிராணிகள். விடுங்கள் VISA

  பதிலளிநீக்கு
 10. inruthaan madipakkam vilasamum vandiyin nambarum kidiththathu.ini lucky paadu jimbabve thaan.

  பதிலளிநீக்கு