5 அக்டோபர், 2010

திராவிட இயக்க கருவூலம்!


நமக்கெல்லாம் ஏதாவது குறிப்பெடுக்க வேண்டுமென்றால், அருகிலிருக்கும் உள்ளூர் நூலகத்துக்கு உடனே ஓடுவோம். முதல்வரும், அமைச்சர்களும் எங்கே போகிறார்கள்?

வேறெங்கு? திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையகம் அமைந்திருக்கும் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இருக்கும் பேராசிரியர் ஆய்வக நூல் நிலையத்துக்குதான். திமுக அறக்கட்டளையால் இலவசமாக நடத்தப்படும் இந்த நூல் நிலையம் 1987ஆம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வருகிறது. எல்லோரையுமே உள்ளே அனுமதித்து விடுவதில்லை. நிஜமாகவே ஏதோ குறிப்புக்காகவோ, ஆய்வுக்காகவோ அல்லது வேறு ஏதேனும் அவசரக் காரியங்களுக்கோ தேவைப்படுகிறது என்பதை விசாரித்து அறிந்துவிட்டே உள்ளே விடுகிறார்கள்.

பொதுவாக ஆய்வு மாணவர்களின் ஆராய்ச்சிக் குறிப்புகளுக்கும் உதவும் நோக்கத்தில் இந்நூலகம் நடத்தப்படுகிறது. ஆசிரியர்களும் தங்களது ஆய்வுக் கட்டுரைகளுக்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
சமூகம், இலக்கியம், வாழ்வியல் தொடர்பான நூல்கள் தோராயமாக 35,000 இருக்கிறது. அந்த காலத்து திராவிட நாடு, காஞ்சி, மன்றம், தென்றல் முதலான திராவிட இயக்க ஊடகங்களின் மொத்த இதழ்த் தொகுப்புகள் தொகுத்து வைக்கப்பட்டிருக்கின்றன. தி ஹிந்து, இண்டியன் எக்ஸ்பிரஸ், தினமணி, முரசொலி ஆகிய நாளேடுகளின் கடந்த முப்பதாண்டுகால முழு செய்தித்தாள்களும் இங்கே கிடைக்கும்.

திராவிட இயக்கநூல்களே பெருமளவு பாதுகாக்கப்பட்டு வைக்கப்பட்டிருக்கிறது. இவற்றையடுத்து தமிழ், தமிழர் வாழ்வியல் தொடர்பான பண்டைய நூல்கள் ஏராளம். பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் எழுதிய நூல்களும், அவர்கள் தொடர்பாக மற்றவர்கள் எழுதிய நூல்கள் அனைத்தும் தனித்தனி அடுக்குகளில் அடுக்கப்பட்டிருக்கின்றன.

நல்ல வசதியான பெரிய அரங்கு. அமர்ந்து குறிப்பெடுத்துக்கொள்ள வாகாக சிறப்பானமுறையில் மேஜை நாற்காலிகள் என்று வசதி செய்யப்பட்டிருக்கிறது. பேராசிரியர் ஆய்வக நூல் நிலையத்துக்குள் நுழைந்தால் தமிழகத்தின் எழுபத்தைந்து ஆண்டுகால வரலாற்றுக்குள் பிரவேசிக்கலாம்.

10 கருத்துகள்:

 1. நீங்க பெரிய ஆள்னு தெரியும் லக்கி...ஆனா இவ்ளோ பெரிய ஆள்னு..! இந்தியா வந்தா உங்கள பாக்கணுமே!!
  :)

  பதிலளிநீக்கு
 2. இன்று வரை எந்திரன் கரூரில் வெளியிடப்படவில்லை

  பதிலளிநீக்கு
 3. கட்சி சார்பற்ற எனக்கும் கூட பயனுள்ள வகையில் இந்த பதிவு அமைந்துள்ளது.. நன்றி

  பதிலளிநீக்கு
 4. நல்ல தகவலுக்கு நன்றி யுகி

  மயிலாடுதுறை சிவா...

  பதிலளிநீக்கு
 5. திராவிட இயக்க வரலாறு எல்லாம் கருவூலத்தில் தான் இருக்கிறது இப்ப. மனதில் இருந்து அகற்றி விட்டார்கள் திராவிட இயக்க பெருந்தலைவர்கள் என்கிறீர்கள் அதானே!

  பதிலளிநீக்கு
 6. Hi Yuva,

  I'm a silent reader of ur blog. I have a general doubt. I thought of asking you. I believe that, even if you dont know, u'll ask somebody and clear my doubt.

  I have a doubt on private insurance company. Assume, I have taken a policy for 25 yrs and expired at 20th yr. But, if that company doesnt exists at that time, what will happen to my claim settlement? From where, my nominees will get that amt?
  I dont know to whom I should ask this doubt. So, asking you. Please clarify.

  Thanks.
  Please

  பதிலளிநீக்கு
 7. அருமையான நூலகம். 1990 வரை அங்கே போட்டோகாப்பி மெஷின் இல்லாமல் இருந்தது. பின்னர் அதும் வந்தது. அதன் பின்னர் மிகவும் வசதியாக இருக்கின்றது. அருமையான தகவல் லக்கி!

  பதிலளிநீக்கு
 8. சிலிக்கன் சில்லு1:39 பிற்பகல், அக்டோபர் 09, 2010

  திராவிடர் வரலாறு, தமிழர் வரலாறு, ஈழ வரலாறு, திராவிடர் ஆரியர் வரலாறு, இவற்றை அறிந்துகொள்ள நல்ல நூல்கள் இணையதளங்கள் எவை என்று பட்டியலிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவற்றை சுருக்கமாக அறிய(timelines of important events) ஏதாவது விக்கி இருக்கிறதா லக்கி ?

  பதிலளிநீக்கு
 9. As for as private insurance company is concerned we cannot give any assurance at this stage.IRDA is the authority to give the claim in the absence of the company; but not fully. you can go the irda website and have a look

  பதிலளிநீக்கு