4 அக்டோபர், 2010

ஸ்ரீராமருக்கே ஜெயம்!

இராமர் பாலம் கட்டப்பட்டபோது எடுத்த வண்ணப்படம். அணில் அப்போது வேலையில் பிஸியாக இருந்ததால் படத்தில் இல்லை.

உலகம் போற்றும் உத்தம பாரதம் புண்ணியபூமிதான் என்பதை மீண்டுமொரு முறை அலகாபாத் உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பின் வாயிலாக உறுதி செய்திருக்கிறது. மாட்சிமை பொருந்திய இந்த உயர்நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அடங்கிய குழு மூன்றில் இரண்டு பங்கு நியாயமான தீர்ப்பினை வழங்கியிருக்கிறது. தீர்ப்பு வழங்கிய இருவரில் தரம்வீர் ஷர்மா மற்றும் சுதிர் அகர்வால் இருவரும் புண்ணிய மதத்தைச் சார்ந்தவர்கள். மீதியிருக்கும் ஒருவரான சிக்பத் உல்லா கான் மட்டும் முல்லா மதத்தைச் சார்ந்தவர். நாட்டை ஆளும் அண்டோமேனியாவின் மிஷினரி மதத்தைச் சார்ந்தவர் யாரும் இந்த குழுவில் இல்லை என்பதே ஹிந்துக்களுக்கு ஆறுதலான ஒரு விஷயம்.

ஷர்மா மற்றும் அகர்வால் இருவரும் ஸ்ரீராமரின் பிறப்பை உறுதி செய்திருக்கிறார்கள். அயோத்தியில் பாபரால் கட்டப்பட்ட கட்டடத்தின் முக்கியமான பகுதியில்தான் தசரதபிரானின் அரண்மனை இருந்ததாகவும், குறிப்பாக மசூதியின் முக்கியமான கோபுர மாடம் இருந்தப் பகுதியில்தான் ஸ்ரீராமர் அவதரித்ததாகவும் தங்களது தீர்ப்பில் உறுதியாக சொல்லியிருக்கிறார்கள் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் ஹிந்து மாநிலம், உலகுக்கு தத்து தந்திருக்கும் உலகப்புகழ் தங்கத்தாரகை வழக்கம்போல தீர்ப்பினை வரவேற்று ஹிந்து மக்களின் வயிற்றில் பால்வார்த்திருக்கிறார். அகிலம் காக்கும் அம்மா கரசேவைக்கு செங்கல் அனுப்பி வைத்தவர் ஆயிற்றே? அவரிடமிருந்து மாற்று விமர்சனம் வந்திருந்தால்தான் நாம் ஆச்சரியம் கொள்ள ஏதுவாக அமைந்திருக்கும். ஸ்ரீமான் அத்வானி, ஸ்ரீமான் நரேந்திரமோடி வரிசையில் ஹிந்துஸ்தானத்தின் ஹிந்துமக்களுக்கு அபிமான தலைவராக புரட்சித்தலைவி தங்கத்தாரகை அவர்கள்தான் விளங்குகிறார் என்பது மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது.

அம்மாவின் அறிவுப்பூர்வமான அறிக்கை விடுத்திருக்கும் விளைவு தமிழ் ஹிந்துச்சூழலில் மிக முக்கியமானது. முன்னாள் திம்மிக்களாக விளங்கிய ஸ்ரீமான் கோபாலசாமி, ஸ்ரீமான் நெடுமாறன் ஆகியோர் இத்தீர்ப்பு குறித்து கிஞ்சித்தும் வாய்திறந்துவிட முடியாதபடி புரட்சித்தலைவியின் அறிக்கை அவர்களது வாயை திருநூல் கொண்டு கட்டிப்போட்டிருக்கிறது. உளறலுக்குப் பெயர்போன கம்யூனிஸ்டுகளும் கூட அம்மாவின் புண்ணியக் கட்டுப்பாட்டில் இருப்பதால் வழக்கமான உளறலை உளறித்தள்ளாமல் வாய்மூடி மவுனிகளாக மாறினார்கள். நம்மூர் தேசியத் திராவிட திம்மிக்கும் வேறு வழியில்லை, தீர்ப்பை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்.

"ஸ்ரீராமர் எந்த கல்லூரியில் பொறியியல் படித்தார்?" என்று முன்பு எள்ளிநகையாடிய மூத்த திராவிடத் திம்மி இப்போது எங்கேபோய் தன் முகத்தை வைத்துக் கொள்ளப் போகிறார் என்பதுதான் இப்போது ஹிந்துமக்கள் முன்பாக வைக்கப்பட்டிருக்கும் இன்றியமையாத கேள்வியாக இருக்கிறது. மாட்சிமை பொருந்திய நீதிபதிகளே ஸ்ரீராமர் பதினேழு இலட்சத்து இருபத்தி எட்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக அயோத்தியில் அவதரித்ததை ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். அனேகமாக அவர்களிடம் சாட்சியாக தசரதபிரானின் திருமனைவியர்க்கு பிரசவம் பார்த்த கூனிக்கிழவி வழங்கிய பிறப்புச் சான்றிதழ், நம் தரப்பு வழக்கறிஞர்கள் மூலமாக சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் என்று தீர்ப்பினைக் கண்ட திருக்கணத்திலேயே உணர்ந்தோம்.

தீர்ப்பினை ஜீரணிக்க இயலாத தீயசக்தியான மூத்தத் திம்மி இப்போது ஒரு அறிக்கை விட்டிருக்கிறது. பதினேழு இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பாக ஸ்ரீராமர் பிறந்ததையே உறுதிப்படுத்திவிட்டார்கள் ஆரியர்கள். வெறும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ராஜராஜசோழன் மறைந்ததை உறுதிப்படுத்த திராவிடர்களிடம் ஆவணங்கள் இல்லையே என்று புலம்பித் தள்ளியிருக்கிறது. மூத்தத் திம்மிக்கு இது முதல் அடி. அடுத்த அடியை மாட்சிமை பொருந்திய உச்சநீதிமன்றம் இன்னும் சில காலத்தில் வழங்க இருக்கிறது. ஸ்ரீராமர் தலைமையில் ஸ்ரீலட்சுமணர், ஸ்ரீஆஞ்சநேயர், ஸ்ரீசுக்ரீவர் மற்றும் ஸ்ரீவானரப்படையைச் சேர்ந்த பொறியியல் அறிஞர்கள் பதினேழு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பாக ஸ்ரீராமேஸ்வரத்திலிருந்து, ஸ்ரீஇலங்கைக்கு கட்டிய பாலம் குறித்தான வழக்கில் இந்த ஸ்ரீத்தீர்ப்பு கிடைக்கும் என எதிர்ப்பார்க்கலாம்.

ஸ்ரீராமர் பிறந்ததையே ஆதாரப்பூர்வமாக, அறிவியல்பூர்வமாக, ஆவணப்பூர்வமாக நிரூபித்தவர்கள் ஹிந்துஸ்தானத்தின் புனித எண்பது கோடி ஹிந்துக்கள். ஸ்ரீராமர் பாலம் கட்டியதையா நிரூபிக்க முடியாமல் தோல்வி அடைவார்கள். ஸ்ரீராமர் எந்த கல்லூரியில் படித்தார்? என்ன பட்டம் வாங்கினார்? என்பதையெல்லாம் ஸ்ரீ ஹிந்துக்களின் வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்றத்தில் பல்கலைக்கழக ஆவணங்கள் மூலமாக நிரூபிப்பார்கள். அப்போது மூத்தத்திம்மியின் தீயக்கேள்விகளுக்கு திருவிடை கிடைக்கும். ஸ்ரீராமருக்கு பாலம் கட்ட உதவிய அணிலும் கூட நீதிப்படியேறி சாட்சி சொல்லத்தான் போகிறது. ஸ்ரீராமரின் பாலத்தை இடித்த மூத்தத் திம்மியே, அப்பாலத்தை வானரங்கள் துணைகொண்டு மீண்டும் கட்டிக் கொடுத்தாக வேண்டுமென்று தீர்ப்பு வரத்தான் போகிறது. அந்நாள்தான் ஹிந்துஸ்தானத்தின் எண்பதுகோடி ஹிந்துக்களின் வரலாற்றில் பொன்னாள்.

ஸ்ரீராமர் வானரங்கள் துணைகொண்டு பாலம் கட்டியபோது எடுத்த வண்ணப்படத்தை இங்கேயே பிரசுரித்திருக்கிறோம். இதையும் ஆதாரமாக எடுத்துக் கொண்டு உச்சநீதிமன்ற நீதிபதிகளால் நீதிநிலைநாட்டப்படுவது உறுதி. இறுதிவெற்றி ஸ்ரீராமருக்கே!

35 கருத்துகள்:

 1. RAAMA.GOPALAN-KITTA POATTU KUDUTHUDA VAENDIYADHAN.NAKKALU OVER-AAPOACHU..........

  பதிலளிநீக்கு
 2. பாபர்மசூதி இடிப்பு விவகாரம்-முஸ்லிம்கள் அமைதியாக இருந்தாலும் ஊடகங்கள் தூண்டிவிட்டு ஒரு வழி செய்துவிடும்

  பதிலளிநீக்கு
 3. இலைக்காரன் பாஸ்வெர்ட் இன்னுமா கெடைக்கல?

  :-)))...

  பதிலளிநீக்கு
 4. ஆகா!! ராமர் பிறந்ததை கண்டுபிடிச்சிடான்களா? அப்போ நாம
  (இலங்கைத் தமிழர்) எல்லாம் அரக்கர்தானா? என்ன கொடுமை லக்கி?
  :)

  பதிலளிநீக்கு
 5. ராமர் பாலம் என்ற மண் மேடு முன்றாக பிரிக்கப்பட்டு ஒன்று திராவிடத்திற்கு, ஒன்று சிறிலங்காவுக்கு, ஒன்று சங்கு பரிவாரிகளுக்கு. சேது சமுத்திர திட்டம் கோட்டின் தீர்ப்பு இப்படித்தான் வரும்.

  தீர்ப்பு 600 ஆண்டுகள் கழித்து வரும். வந்தா பார்க்கலாம்.

  பதிலளிநீக்கு
 6. Can u post a comment on Last Suffer Portrait like this?

  Definitely u won't because....
  U(as well as all here) know the reason....

  பதிலளிநீக்கு
 7. //தீர்ப்பினை ஜீரணிக்க இயலாத தீயசக்தியான மூத்தத் திம்மி இப்போது ஒரு அறிக்கை விட்டிருக்கிறது. பதினேழு இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பாக ஸ்ரீராமர் பிறந்ததையே உறுதிப்படுத்திவிட்டார்கள் ஆரியர்கள். வெறும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ராஜராஜசோழன் மறைந்ததை உறுதிப்படுத்த திராவிடர்களிடம் ஆவணங்கள் இல்லையே என்று புலம்பித் தள்ளியிருக்கிறது. மூத்தத் திம்மிக்கு இது முதல் அடி.//
  என்ன இருந்தாலும் மூத்த திம்மியை இவ்வளவு பாராட்டியிருக்கக் கூடாது தலைவரே , அவரே வெட்கமடைந்திருப்பார் , இதுவும் வஞ்சப் புகழ்ச்சி தான்

  பதிலளிநீக்கு
 8. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நம்பிக்கை. அதில் தலையிட நீங்கள் யார்? கிறிஸ்துவம் பற்றியோ அல்லது முஸ்லிம் பற்றியோ நீங்கள் இப்படி எழுத முடியுமா?

  பதிலளிநீக்கு
 9. இதுக்குப் பேருதான் ஊமை அடியா அடிக்கிறதா?!!!

  பதிலளிநீக்கு
 10. நகைச்சுவையாக எழுத முயற்சித்திருக்கிறீர்கள். better luck next time!

  பதிலளிநீக்கு
 11. :))))))))))))))
  வரிக்கு வரி சூப்பர் பா..
  உம்முடைய ஸ்ரீமான் மூளை
  முச்சூடும் ஸ்ரீஸ்ரீஸ்ரீ குசும்பப்பா :)

  பதிலளிநீக்கு
 12. Ramar matter Netthi adi. Aana sandhula side'la dimmieskku ice vacha maadhri theriyudhu. So namma orula inimel 10lakhs, 15lakhs varusham munnaadi nadantha vishyam ellaam veliyila varum nenaikiren. Neenga enna solreenga?

  பதிலளிநீக்கு
 13. // muslims a pathi ethavathu solrathu ..sonna suluku eduthuduvanga . //

  appadiye sollitu nalla irundha ivaru nejamave LUCKY dhan...

  பதிலளிநீக்கு
 14. //ராமர் பாலம் என்ற மண் மேடு முன்றாக பிரிக்கப்பட்டு ஒன்று திராவிடத்திற்கு, ஒன்று சிறிலங்காவுக்கு, ஒன்று சங்கு பரிவாரிகளுக்கு. சேது சமுத்திர திட்டம் கோட்டின் தீர்ப்பு இப்படித்தான் வரும்.// Super.....

  பதிலளிநீக்கு
 15. Mr.Yuvakrishna,,

  we all have rights to speak what we think, why you blame hindu peoples, i think media is take more part to create problems. Since am hindu i have n number of friends which are from all major religions, since we didnt separate in the name of religion, why u people are break that relationships.... my humble request all media people and elder citizens of india, let us live with humanity and brotherhoodnes

  பதிலளிநீக்கு
 16. " இதையே நீங்க முஸ்லீம்ஷ், இயேசு பத்தி எழுத முடியாம? " இந்த கேள்விய தவிர வேற எதாவது பதில் இருந்த சொல்லுங்கப்பா!
  அவங்க என்ன அல்லா அயோத்தியில் பிறந்தார்னா சொல்றாங்க ! இல்ல அல்லா பாலம் கட்டினார்னா சொல்றாங்களா !
  நீங்க தானடா சொல்றீங்க !

  பதிலளிநீக்கு
 17. I usually dont give much importance to your evergreen support to DMK..

  but this piece of writing is excellent.

  HC verdict is more like our katta panchayat style.

  பதிலளிநீக்கு
 18. நந்தா,
  கொஞ்சமாவது இங்க்லீஷ் படிச்சிட்டு எழுதுங்க... that is "Last Supper" NOT 'Last Suffer' hahahahha

  பதிலளிநீக்கு
 19. நல்லா இருக்கு.

  கூடவே கருப்பு, வெள்ளை, சிவப்பு கரை வேட்டி கட்டிய கரசேவகர்கள், அவர்களின் தலைவி 80 கோடி ஹிந்துக்களின் தலைவி ஜெவின் கட்டளையை பாபர் மசூதியை இடத்து நிறைவேற்றினார்கள் எனும் படத்தை கூடவே போட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்

  பதிலளிநீக்கு
 20. லக்கி ! ரொம்ப நாள் கழிச்சு இங்க வந்தேன் ...சும்மா சொல்லக்கூடாது உங்க கட்டுரை மிக அருமை ! ராமர் பிறந்தார் என்பதற்கு எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை ...ஏன் ராமாயணத்தை எழுதிய வால்மீகிக்கே கிடைக்காத போது வேறு யாருக்கு கிடைத்து விடப்போகிறது ! லாஸ்ட் சப்பர் பற்றியும் முஸ்லிம்களை பற்றியும் எதற்கு இப்போ எழுத வேண்டும் ? எழுத வேண்டிய அவசியம் வரும் போது எழுதலாம் ! ஒரு நியாயமான கருத்தை ஆராயாமல் கண்மூடித்தனமாய் எதிர்க்கும் மதவாதிகள் சிந்திக்க வேண்டும் ! இந்த தீர்ப்பு முரண்பட்ட ஒன்று ! உங்கள் பூர்விக சொத்தில் ஒருவன் ஏதோ ஒரு மத சிலையை உங்களுக்கு தெரியாமல் வைத்து விட்டு பின்னாளில் அங்கு ஏன் பொருள் இருக்கிறது என்பதால் அது ஏன் சொத்து என்றால் என்ன நியாயம் ? வருட மசூதியை இடித்து விட்டு அங்கே ராமர் பிறந்தார் என்று நீதிபதிகள் சொல்வதில் என்ன ந்யாயம் இருக்கிறது ? ஏற்கனவே சிறுபான்மையினர் பெரும்பான்மையினர் மேல் உள்ள அச்சத்தை உறுதிபடுத்துவதாக உள்ளது இந்த தீர்ப்பு ! ஜெய் ஹிந்த்(ஹிந்து) !

  பதிலளிநீக்கு
 21. Ayodhya Verdict: Apprehensions of a Secularist( courtesy Delhi Chronicle)

  Sixty years after the shadowy appearance of idols of Ram under the central dome of Babri Masjid, the Lucknow bench of the Allahabad High Court delivered its verdict on September 30, 2010. My first reaction after the pronouncement of the judgment was a sense of pride because of the maturity and restraint with which the people of India received the verdict and leaders of almost all political parties have exhorted the people to respect the verdict and maintain communal amity and calm. I salute the Indian masses for rising above communal sentiments and reposing their faith in the rule of law. Nevertheless, I am a bit perplexed about the verdict itself. One must keep it in mind that it was a vexed case involving the religious sentiments of the Hindus and the Muslims and the three-judge bench had an extremely challenging task before it.
  In view of this a section of the intelligentsia has welcomed the verdict with the hope that it may herald the end of the long-drawn enmity between the two major communities of India and help create an agreeable social milieu wherein the people, youths in particular, can focus on education and development. Though peace prevails throughout the country after the deliverance of the verdict, one of the litigants i.e. the Central Sunni Wakf Board representing the Muslim interests has expressed its partial dissatisfaction over the verdict and has also made it known that it shall appeal against the verdict in the Supreme Court. A day later the other two litigants viz. the Hindu Mahasabha and the Nirmohi Akhara too have announced their resolve to move the apex court because each one of them claims the ownership of the entire piece of land. Thus, if the honourable judges had thought to give a cue to the two communities to bury the antagonism over the disputed site by its trifurcation, the judicial settlement (that’s what the verdict is in actuality) has failed to achieve the desired objective.
  contd..

  பதிலளிநீக்கு
 22. It is true that no one should lose sight of the ground political realities. The Muslims in particular have suffered tremendously in terms of lives and properties because of the Ayodha dispute. The demolition of a 500-year old mosque, the ensuing genocide of the Muslims in Mumbai and other places immediately after the demolition in 1992 and the Gujarat pogrom a decade later will always remain as three grimy blots on the secular-democratic face of India. It is, therefore, understandable that some well meaning opinion makers and secular activists expect Muslims not to let slip this opportunity of reconciliation and be content with the one-third piece of land that has been apportioned to them as per the verdict. Some friends of the Muslims also suggest that they can also give up their claim over the one-third land by shifting the mosque to some other place. Such gestures, the advocates of reconciliation believe, will certainly help the community improve its image as the peace-loving, reasonable members of civilised societies not only in India but globally too.

  These are sincere propositions in the interest of communal harmony. Nonetheless, such reconciliation should have been done earlier and out of court. The out of court peaceful settlement could not be hammered out earlier and for that both the communities have to share the blame. The aggressive Hindu communalists carried out the entire campaign for the Ram temple in a completely fascist manner with the intention of creating a fear psychosis in the minds of the Muslims. Instead of peaceful reconciliation the Hindu chauvinists had tried to forcibly occupy the Babri Masjid. They first surreptitiously installed the idols under the main dome in 1949 and later committed the heinous crime of demolishing the mosque in 1992. Taking into consideration the fascist strategy of the campaigners of the Ram temple even reasonable and moderate Muslims had misgivings about initiating the process of negotiations lest their efforts might be construed as complete surrender in the face of brute force of majority.

  Added to this was the dim-witted stance of the Muslim fundamentalists that the site of the mosque was non-negotiable because a mosque would remain a mosque till the doomsday. The genuine Islamic scholars have often pointed out that there is no such injunction in the Quran and there were instances in Islamic history when the mosques had been relocated. Thus, it was because of the machinations of the fanatics on both the sides that a peaceful settlement of the dispute could not be reached out and exactly for that reason the litigants had agreed to abide by the court verdict in the title suit. The verdict instead of adjudicating upon the issue of ownership of the disputed land handed out a settlement that too on certain questionable grounds. As a result, despite being a proponent of reconciliation I have reservations about treating the verdict as a means of peaceful settlement.

  பதிலளிநீக்கு
 23. It is true that no one should lose sight of the ground political realities. The Muslims in particular have suffered tremendously in terms of lives and properties because of the Ayodha dispute. The demolition of a 500-year old mosque, the ensuing genocide of the Muslims in Mumbai and other places immediately after the demolition in 1992 and the Gujarat pogrom a decade later will always remain as three grimy blots on the secular-democratic face of India. It is, therefore, understandable that some well meaning opinion makers and secular activists expect Muslims not to let slip this opportunity of reconciliation and be content with the one-third piece of land that has been apportioned to them as per the verdict. Some friends of the Muslims also suggest that they can also give up their claim over the one-third land by shifting the mosque to some other place. Such gestures, the advocates of reconciliation believe, will certainly help the community improve its image as the peace-loving, reasonable members of civilised societies not only in India but globally too.

  These are sincere propositions in the interest of communal harmony. Nonetheless, such reconciliation should have been done earlier and out of court. The out of court peaceful settlement could not be hammered out earlier and for that both the communities have to share the blame. The aggressive Hindu communalists carried out the entire campaign for the Ram temple in a completely fascist manner with the intention of creating a fear psychosis in the minds of the Muslims. Instead of peaceful reconciliation the Hindu chauvinists had tried to forcibly occupy the Babri Masjid. They first surreptitiously installed the idols under the main dome in 1949 and later committed the heinous crime of demolishing the mosque in 1992. Taking into consideration the fascist strategy of the campaigners of the Ram temple even reasonable and moderate Muslims had misgivings about initiating the process of negotiations lest their efforts might be construed as complete surrender in the face of brute force of majority.

  Added to this was the dim-witted stance of the Muslim fundamentalists that the site of the mosque was non-negotiable because a mosque would remain a mosque till the doomsday. The genuine Islamic scholars have often pointed out that there is no such injunction in the Quran and there were instances in Islamic history when the mosques had been relocated. Thus, it was because of the machinations of the fanatics on both the sides that a peaceful settlement of the dispute could not be reached out and exactly for that reason the litigants had agreed to abide by the court verdict in the title suit. The verdict instead of adjudicating upon the issue of ownership of the disputed land handed out a settlement that too on certain questionable grounds. As a result, despite being a proponent of reconciliation I have reservations about treating the verdict as a means of peaceful settlement.

  பதிலளிநீக்கு
 24. It is true that no one should lose sight of the ground political realities. The Muslims in particular have suffered tremendously in terms of lives and properties because of the Ayodha dispute. The demolition of a 500-year old mosque, the ensuing genocide of the Muslims in Mumbai and other places immediately after the demolition in 1992 and the Gujarat pogrom a decade later will always remain as three grimy blots on the secular-democratic face of India. It is, therefore, understandable that some well meaning opinion makers and secular activists expect Muslims not to let slip this opportunity of reconciliation and be content with the one-third piece of land that has been apportioned to them as per the verdict. Some friends of the Muslims also suggest that they can also give up their claim over the one-third land by shifting the mosque to some other place. Such gestures, the advocates of reconciliation believe, will certainly help the community improve its image as the peace-loving, reasonable members of civilised societies not only in India but globally too.

  These are sincere propositions in the interest of communal harmony. Nonetheless, such reconciliation should have been done earlier and out of court. The out of court peaceful settlement could not be hammered out earlier and for that both the communities have to share the blame. The aggressive Hindu communalists carried out the entire campaign for the Ram temple in a completely fascist manner with the intention of creating a fear psychosis in the minds of the Muslims. Instead of peaceful reconciliation the Hindu chauvinists had tried to forcibly occupy the Babri Masjid. They first surreptitiously installed the idols under the main dome in 1949 and later committed the heinous crime of demolishing the mosque in 1992. Taking into consideration the fascist strategy of the campaigners of the Ram temple even reasonable and moderate Muslims had misgivings about initiating the process of negotiations lest their efforts might be construed as complete surrender in the face of brute force of majority.
  contd..

  பதிலளிநீக்கு
 25. Added to this was the dim-witted stance of the Muslim fundamentalists that the site of the mosque was non-negotiable because a mosque would remain a mosque till the doomsday. The genuine Islamic scholars have often pointed out that there is no such injunction in the Quran and there were instances in Islamic history when the mosques had been relocated. Thus, it was because of the machinations of the fanatics on both the sides that a peaceful settlement of the dispute could not be reached out and exactly for that reason the litigants had agreed to abide by the court verdict in the title suit. The verdict instead of adjudicating upon the issue of ownership of the disputed land handed out a settlement that too on certain questionable grounds. As a result, despite being a proponent of reconciliation I have reservations about treating the verdict as a means of peaceful settlement.

  The most disturbing aspect of the verdict is the premise on which the honourable judges have arrived at the conclusion that the disputed site is indeed the birth place of Ram. One of the judges has even identified the exact location where the Lord was actually born and that is just under the main dome of the mosque where the covertly installed idols exist today. Though the honourable judges have made references to the report submitted by the Archaeological Survey of India, the report itself is far from flawless. Irfan Habib and Romila Thapar, the two most reputed historians have pointed out the anomalies in the report in question. Moreover, it speaks about the existence of a structure of Hindu religion on the site where the Babri Masjid was constructed in 1528 and not the exact site of the birth of Lord Ram. The senior most judge on the bench, Justice S. U. Khan has even mentioned that he is not a historian nor does he meet the criteria to go into archaeological findings. Then on what grounds the honourable judges have arrived at the conclusion that the disputed site is exactly the place of birth of Ram? It is the faith of the majority of Hindus who believe that Ram was born at the disputed site on which the verdict was delivered. In other words faith has been given precedence over law of the land and evidence. The verdict has thus set a perilous precedent.

  பதிலளிநீக்கு
 26. If the verdict goes uncontested it will be extremely difficult for liberal and secular activists to campaign for any cause having roots in democracy, human rights, gender equality or secularism because the orthodox sections of society might move the court citing the Ayodha verdict with the plea that primacy of faith should prevail upon secular laws of the land. It is a well known fact that almost all religions assign a secondary status to women. It is only the democratic and secular laws of the country that uphold gender equality. This might change because of the precedent of giving credence to matters of faith. There could be many other areas where religious beliefs would be cited to undermine the secular laws and human rights of the people.

  Another distressing factor involved in the verdict is treating Ram Lulla, the divine ghost, as a flesh-and-blood litigant in the case whose interests because of his infancy were represented by the Hindu Mahasabha! In fact those who are trained in jurisprudence can comment on this aspect more authentically whether such a bizarre development in the judicial history of India has any parallel. For the secularists it is bound to create myriad problems.

  There is another apprehension that the verdict might be interpreted by the Hindu Right to justify the hideous demolition of the mosque in 1992. It is reassuring that P. Chidambaram, the Union Minister for Home Affairs has stated in unambiguous terms that the verdict does not have any bearing on the incident of 1992 which was a criminal act. Nonetheless, one is justified in asking why the verdict has not mentioned the unfortunate demolition of the mosque in 1992 while two of the judges have opined that a Hindu structure was destroyed to construct a mosque in the sixteenth century. The peace loving and secular activists have a responsibility to ensure that the criminals of Babri mosque demolition do not go scot free and this verdict should not be used as a shield to justify that vandalism.

  For the reason of such anxieties a secularist like me heavy heartedly concede that the litigants should move the Supreme Court with the hope that the apex court might restore the primacy of law of the land over the matters of faith and re-establish the secular character of Indian polity.

  பதிலளிநீக்கு
 27. Sorry Lucky :) But I wanted to present this as people don't go by facts but on blind notions!

  Also,I'd like to pint that there are numerous people in India and other countries who talk ill about all religions ! So guys lets grow up!
  I remember this...in my school days..(even now)if I like Rajini ppl would start mocking me by talking ill about rajini and those would be kamal fans! I tell them that I am also a Kamal fan! then they wouldn;t have anything to say!
  now,when I looked into many of the comments I see that they follow this same kiddish style!Is this judgement based out of facts ...or based out of faith,belief of ppl!!??...thats the question of a rational,logical mind and not about anything!Chill!

  பதிலளிநீக்கு
 28. Sir,

  I have a doubt in this suit. it seems ram lalla vijarman is a group that has been admitted by court to represent "the child ram"(representing the idols that are present under the dome"

  1. i know that in themples where there is a devasthaanam board operating, the devasthanam is admitted to represent the Deity of the temple. but in this suite,
  - the idols themselves are placed illegallly.
  - there is no formal devasthaaanam like board
  does this mean , even i can represent "the child Ram" and gain custody of the land? - what will be the eligibility - to be hindu? Doesnt Ram allow members of other faith to follow him? So, any body can claim ownership.

  Actually,if Ram lalla vijarman had been denied land, it would have meant "Ram" himself losing the case ! Oh my god, it would have meant instant riots - causing atleast 100 times more loss to business and lives than any previous terrorist activites. !!

  there is another track from this question - the case is actually very easy to dispose off -

  - as per the land revenue records, the land is owned by government. so, the only court amissible contenders are the sunni wakf board(on the basis of mosque. i dont know for sure , even if they can be contenders).
  that is the sunni wakf board is requesting ownershipf of land from government.
  the court can easily cancel the case itself, and direct the government to decide on the matter.(congress would then sit on the case for as long as it will be in power)

  பதிலளிநீக்கு