October 1, 2010

எந்திரன் (ஐ.எஸ்.ஓ. 9001 தரச்சான்று பெற்ற ஒரே விமர்சனம்)

திரையில் ஒரு ரஜினி தெரிந்தாலே வான வேடிக்கைதான். திரை முழுக்க நூற்றுக்கணக்கான ரஜினிகள் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தால்? வேறென்ன.. அதகளம்தான். இதுவரை இந்தியத் திரையுலகம் காணாத பிரம்மாண்டம். துல்லியமான தொழில்நுட்பம். சன்பிக்சர்ஸின் முதல் தயாரிப்பே சூப்பர் டூப்பர் ஹிட்டுதான்!

எந்திரன் ஷங்கர் படமா, கலாநிதிமாறன் படமா? என்றெல்லாம் கேள்வியே எழவில்லை. இது முழுக்க முழுக்க ரஜினி படம். அண்ணாமலை, பாட்ஷாவுக்கு பிறகு முதுகில் சுமந்த இமேஜ் மூட்டையை இறக்கிவைத்துவிட்டு, கேஷூவலாக நடித்துத் தள்ளியிருக்கிறார். ரஜினிதான் இருக்கிறாரே? கதைக்கு ரொம்பவும் மெனக்கெட வேண்டாமென்று ஷங்கர் முடிவெடுத்திருக்கலாம். ரஜினியின் கரிஷ்மா மீது பாரத்தைப் போட்டுவிட்டு, சீன்களை செதுக்கியிருக்கிறார். ஒவ்வொரு பிரேமுக்கும் விசிலும், கைத்தட்டலும்.. சந்திரனுக்கே கேட்குமளவுக்கு கரகோஷம்.

குறிப்பாக வில்லன் ரோபோ. பாடி லேங்குவேஜூக்காக ரஜினி ரொம்ப மெனக்கெடவில்லை. மூன்று முகம் அலெக்ஸ் பாண்டியனை அச்சுஅசலாக பிரசண்ட் செய்கிறார். வசீகரன் கேரக்டருக்கு சந்திரமுகி ரஜினி. 'ரொமான்ஸ்' ரோபோவுக்கு மட்டும் அந்நியன் ரெமோவை கடன் வாங்கியிருக்கிறார். சண்டைக் காட்சிகளிலும் அந்நியன் நெடி அதிகம்.

முதல் பாதி டைட்டாக பேக்கப் செய்யப்பட்ட காமெடி மசாலா. இரண்டாம் பாதி ஆக்‌ஷன் பேக்கேஜ் என்றாலும் ஆங்காங்கே லைட்டாக தொய்வு. ஷங்கருக்கு ஓவர் கிராபிக்ஸ் ஆர்வம். அசத்தலான படத்துக்கு திருஷ்டிபொட்டாக க்ளைமேக்ஸ். இராம.நாராயணன் கொஞ்சம் ஹைடெக்காக, தாராளாமாக செலவழித்து எடுத்தால் இதைவிட பர்ஃபெக்டான க்ளைமேக்ஸை எடுத்துவிடுவார். ரஜினி இருக்க காமெடிக்கு தனியாக மூளையைக் கசக்க வேண்டுமாவென்று ஷங்கர் அசட்டையாக இருந்திருக்கிறார். சந்தானமும், கருணாஸும் கிச்சுகிச்சு கூட மூட்டவில்லை. "என் கிட்டே இல்லாதது அவனுங்க கிட்டே என்ன இருக்கு?" என்று தன்னுடைய பாஸை, ரோபோ கலாய்க்கும் சீன் சூப்பர். இந்த காமெடியை க்ளைமேக்ஸில் நெகிழ்ச்சிக்காக கண்டினியூ செய்திருப்பதிலும் ஷங்கரின் அனுபவம் பளீர்.

ஹாலிவுட்காரர்கள் கூட படம்பிடிக்க முடியாத பெரு நாட்டில் பாடல்காட்சி படப்பிடிப்பு, அயல்நாட்டுத் தரத்தில் இசைக்கோர்ப்பு, உலக அழகி ஹீரோயின் என்றெல்லாம் தினம் தினம் சன்பிக்சர்ஸ் டுமீல் விட்டுக் கொண்டிருந்தாலும், படம் பார்க்கும்போது ரஜினி இருக்க, அதெல்லாம் எதுக்கு என்று தோன்றுகிறது. ஐஸ்வர்யாராயை பேஸ்மெண்டாக வைத்துதான் திரைக்கதை என்றாலும்கூட சதாவை ஹீரோயினாக போட்டிருந்தாலும் இதே எஃபெக்ட் கிடைத்திருக்கும்.

எந்திரப்படையை அடக்க நகர் முழுக்க மின்சாரவாரியத்தின் துணைகொண்டு மின்சாரத்தை நிறுத்திவிடுகிறார் வசீகரன். பேட்டரி சார்ஜ் செய்யமுடியாமல் எந்திரர்கள் ஒழிந்துவிடுவார்கள் என்பது அவர் திட்டம். ஆனால் புத்திசாலி எந்திரன், சார்ஜூக்கு மாற்றுவழியை கண்டுபிடித்து, மீண்டும் எந்திரப்படையை சண்டைக்கு முன்னெடுப்பது எதிர்பாரா திருப்பம். முதல் பாதியில் வரும் டிரெயின் ஃபைட் ஆவ்ஸம். ரஜினியின் சுறுசுறுப்பைக் காண கண் ரெண்டும் போதாது.

கமலஹாசனோ, ஷாருக்கானோ நடித்திருந்தால் இவ்வளவு கலர்ஃபுல்லாக, கொண்டாட்டமாக எந்திரன் உருவாகியிருக்குமா என்பது சந்தேகமே. இடையில் அஜித்தை வைத்து ஷங்கர் ரோபோவை தயாரிப்பதாக கூட செய்தி வந்தது. ரோபோவாக அஜித் நடித்திருந்தால் இந்த உலகம் தாங்கியிருக்காது.

"அறுபது வயதுக் கிழவன் ஆக்‌ஷன் படத்தில் உலக அழகியோடு காதல் களியாட்டங்களில் ஈடுபடுகிறான்" என்று படம் வருவதற்கு முன்பாக எஸ்.எம்.எஸ்.களிலும், மின்னஞ்சல்களிலும் பெரிதும் கேலி பேசப்பட்டது. ஒரே ஒரு சீனில் கூட ரஜினியின் வயது தெரியாத அளவுக்கு ஒப்பனை, உடை அலங்காரங்கள் அபாரமாக இருக்கிறது. ஐஸ்வர்யாராயோடு ரொமான்ஸ் ரோபோ போடும் ஆட்டம், சான்ஸே இல்லை. விஜய்க்கு அஜித்தோ, சூர்யாவோ போட்டியல்ல. இளம் நாயகர்களுக்கு இன்னமும் டஃப் ஃபைட் கொடுப்பது தி ஒன் அண்ட் ஒன்லி ரஜினி.

எந்திரன் - சினிமா ரசிகர்களுக்கு நிஜமான தீபாவளி!

31 comments:

 1. I was waiting for this post since 4 AM GMT :-)

  ReplyDelete
 2. சூப்பர் விமர்சனம். நன்றி லக்கி.

  ReplyDelete
 3. i also saw the movie today.. ur view is very good..

  அசத்தலான படத்துக்கு திருஷ்டிபொட்டாக க்ளைமேக்ஸ். இராம.நாராயணன் கொஞ்சம் ஹைடெக்காக, தாராளாமாக செலவழித்து எடுத்தால் இதைவிட பர்ஃபெக்டான க்ளைமேக்ஸை எடுத்துவிடுவார்

  ReplyDelete
 4. // அயல்நாட்டுத் தரத்தில் இசைக்கோர்ப்பு// அதென்ன அயல்நாட்டுத்தரம்? சர்வதேசத்தரம் கேள்விப்பட்டிருக்கிறோம்.

  ReplyDelete
 5. படம் சூப்பர் ஹிட் என்ற உங்கள் விமர்சணத்தை படித்து பல இலக்கியவியாதிகளுக்கு வயிற்றெரிச்சல் வரலாம்

  ஜெலுசில் இலவசமாக தரவும்

  ReplyDelete
 6. ஆமா இந்த வாட்டி உண்மையிலயே படம் பாத்திங்க தானே பாஸ்?
  நம்ம ஊர்ல முதன் முதலா ஒரு தமிழ்ப்படம் ( எனக்குத் தெரிந்து ) big screenல பெஸ்ட் தியேட்டர் 'Savoy'ல போடுறாங்க.. ஆனா ஒரு வாரம் வெயிட் பண்ணனும் போல இருக்கு..

  ReplyDelete
 7. :)

  //ரோபோவாக அஜித் நடித்திருந்தால் இந்த உலகம் தாங்கியிருக்காது. //

  வன்மையாக கண்டிக்கிறேன் ....

  //"அறுபது வயதுக் கிழவன் ஆக்‌ஷன் படத்தில் உலக அழகியோடு காதல் களியாட்டங்களில் ஈடுபடுகிறான்" என்று படம் வருவதற்கு முன்பாக எஸ்.எம்.எஸ்.களிலும், மின்னஞ்சல்களிலும் பெரிதும் கேலி பேசப்பட்டது.//

  வேறு என்ன ..வைத்தெரிச்சல் தான் ...

  ReplyDelete
 8. ..//இளம் நாயகர்களுக்கு இன்னமும் டஃப் ஃபைட் கொடுப்பது தி ஒன் அண்ட் ஒன்லி ரஜினி//..

  - அதுதான் நம்ம சூப்பர் ஸ்டார்...

  கடைசியா பாத்த படம் உன்னைப்போல் ஒருவன்.. இப்ப எந்திரன் பாத்தே ஆகணும்னு தோணுது.. ம்ம்ம்ம்

  ReplyDelete
 9. உண்மை நிலையை படம் பிடித்து காட்டி இருக்கிறீர்கள்... நன்றி..

  அதுவும் கமல் ரசிகரான நீங்கள் இப்படி எழுதி இருப்பது உங்கள் நடுநிலையை காட்டுகிறது

  ReplyDelete
 10. லெனின்-கத்தார்2:01 PM, October 01, 2010

  sir,
  விமர்சனம் super. முதல் ஷோ பார்த்தேன் good. First half ரஜினி படம் மாதிரி இல்ல. வில்லன் ரோபோ வந்த பிறகு படம் சூடு வச்ச மீட்டர் மாதிரி ஓடுது. கிளைமாக்ஸ் நீங்க சொன்ன மாதிரி ஹைடெக் இராம.நாராயணன் (கொஞ்சம் blade போடறாங்க). over expectationல வந்த படம் 90% satisfied.

  ReplyDelete
 11. http://niyazpaarvai.blogspot.com/2010/10/blog-post.html

  SAME FEELING I LIKED THE MOVIE VERY VERY MUCH

  ReplyDelete
 12. ஹலோ ,ஹலோ,கொஞ்சம் நிந்து பேசுங்க.குதிக்காம..நிதானமா சொல்லுங்க.படம் பப்படம்,ஊத்திக்கும் என்று சொன்னவங்க எல்லாம்...எரிச்சல் படப்போறாங்க....படம் பாக்கலாம்னு சொல்றீங்க.அதுவும் கமல் ரசிகர்....உங்க தொழில் தர்மத்துக்கு பாராட்டு.

  ReplyDelete
 13. எந்திரன்- ரசிகர்களுக்கு சுவீட்டு, எதிரிகளுக்கு வேட்டு. வயது திறமைக்கு தடை இல்லை என்பதற்கு ரஜினியின் வேகமும் ஐஸின் நடனமும் உதாரணமாக கூறலாம்.

  ReplyDelete
 14. அருமையான விமர்சனம். ஆனால் கிராஃபிகஸை ஏன் கிண்டலடிக்கிறீர்களென புரியவில்லை. hollywood படங்களைக் காப்பி அடிக்காமல் ஷங்கர் செய்திருக்கும் மாயாஜாலங்களை பாராட்டத்தான் வேண்டும். :-)

  ReplyDelete
 15. படத்தை மேலோடியிலதானே பார்த்திங்க???

  ReplyDelete
 16. இப்படி அலப்படி பண்ற யுவ கிருஷ்ணா தான் அங்கே டிக்கெட் கிடைக்குது இங்கே டிக்கெட் கிடைக்குது ன்னு முதல் நாளே குரல் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்.

  ReplyDelete
 17. ரோபோவாக அஜித் நடித்திருந்தால் இந்த உலகம் தாங்கியிருக்காது.
  //

  கலக்கிட்டீங்க... ஒரு எட்டு இந்தப் பக்கம் வந்துட்டு போறது...

  http://sirippu.wordpress.com/2010/10/01/endhiran_review/

  ReplyDelete
 18. படம் நன்றாக இருப்பதில் மகிழ்ச்சியே. பார்க்க ஆவல் மிகுகிறது.

  ஆமா, படம் வரும்முன்னாடி ஒண்ணு. வந்துகிட்டிருக்கும் போது ஒண்ணு. வந்த பின்னாடி ஒண்ணு. இன்னும் எத்தனை எழுதறதா உத்தேசம்? :-))

  ReplyDelete
 19. Please see this video to know rajini's work in the Enthiran movie...


  http://www.youtube.com/watch?v=zi0sfRQ9Bx0

  ReplyDelete
 20. Thanks 4 sharing Your Review - உங்கள் விமர்சனத்திற்கு நன்றி
  by
  TS

  டாப் 60 ரோபோட் எந்திரன் ஸ்டில் படங்கள்

  ReplyDelete
 21. ஐஸ்வர்யாராயோடு ரொமான்ஸ் ரோபோ போடும் ஆட்டம் ரஜனி போட்டதல்ல, ரோபோவின் முகமூடியுடன் பிரபுதேவா போட்டது.

  ReplyDelete
 22. Charu Comment on Endhiran: இது போன்ற குப்பையை தமிழ் சினிமா சரித்திரத்திலேயே பார்த்ததில்லை. தமிழ் சினிமாவின் நிரந்தர அவமானம்.

  கவுண்டர் : இந்த கொசுத்தொல்லை தாங்க முடியல!

  ReplyDelete
 23. லக்கி...

  மிக நேர்மையாக விமர்சித்து இருக்கிறீர்கள்....

  படம் அதகளம்...

  ரஜினியின் நடிப்பு படத்திற்கு படம் மெருகேறிக்கொண்டே போகிறது...

  ஸோ... உங்களுக்கு படம் பிடித்து விட்டது... நல்லது தான்..

  ReplyDelete
 24. US Box Officeல் லும் முதல் இடம் என செய்தி படித்தேன், உலக அளவில் படம் வெற்றி அடைந்தால் இவர் தான் உன்மையில் ”உலக நாயகன்”.

  ReplyDelete
 25. உண்மையை சொல்லுங்கள் ஒரு உன்னதமான இந்தியனாக.... படம் எதிர்பார்த்த அளவுக்கு ஒன்றும் இல்லை.... ஏ ஆர் ரஹ்மான் தன் வேலையை செய்திருக்கிறார் அற்புதமாக, ரஜினி தன் வேலையை செய்திருக்கிறார் அட்டகாசமாக, ரத்தினவேலு நன்றாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார்... டைரக்டர் ஷங்கர் பெயில் ஆகி இருக்கிறார்.... அவரது பணியில்... வரும் பாருங்கள் இன்னும் ஓரிரு நாளில் கலாநிதி மாறன் டைரக்டர் ஷங்கருக்கு சுளுக்கு.... தியேட்டர் தியேட்டராக ரஜினியும் ஷங்கரும் விளம்பரத்திற்கு செல்கிறார்கள் என்று... இது மற்றுமொரு ஆளவந்தான்.... கண்டிப்பாக தியேட்டர் உரிமையாளர்கள் கையை சுட்டு கொள்வார்கள்....

  ReplyDelete
 26. //எந்திரப்படையை அடக்க நகர் முழுக்க மின்சாரவாரியத்தின் துணைகொண்டு மின்சாரத்தை நிறுத்திவிடுகிறார் வசீகரன். பேட்டரி சார்ஜ் செய்யமுடியாமல் எந்திரர்கள் ஒழிந்துவிடுவார்கள் என்பது அவர் திட்டம். ஆனால் புத்திசாலி எந்திரன், சார்ஜூக்கு மாற்றுவழியை கண்டுபிடித்து, மீண்டும் எந்திரப்படையை சண்டைக்கு முன்னெடுப்பது எதிர்பாரா திருப்பம்.//

  :)))))))))))))

  ReplyDelete
 27. don't compare super star with mokka vijay.ungala pudichueukara orey reason'kaga decenta sollita

  ReplyDelete
 28. 150 கோடி பணம் ஒரு வீண் செலவு
  நம்ம ஊர்ல இன்னும் படிக்காத படிக்க முடியாத நிலைல இருக்க
  ஒரு 1000 மாணவர்களை படிக்க வைத்து இருக்கலாம்.
  சூப்பர் ஸ்டார்,சன் டிவி போன்ற பணம் இருக்கும் இடம் பணம் பெருகும்.,

  அனைத்து நடிகர்களும் சூர்யாவை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மையை
  சூர்யா - அஹரம் - விதை
  http://enpakkangal-rajagopal.blogspot.com/2010/10/blog-post_3041.html

  ReplyDelete