25 செப்டம்பர், 2010

எந்திரன் - திரை விமர்சனம்! (Endhiran Movie Review 5+)

சிவாஜி வெற்றிக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், இயக்குனர் ஷங்கரும் இணையும் படம். சன் பிக்சர்ஸ் கலாநிதிமாறன் முதல்முறையாக பெரும் பொருட்செலவில் தயாரித்திருக்கும் படம். இதனால் பெரிய எதிர்ப்பார்ப்புக்கு உள்ளாகியிருக்கிறது. வழக்கமான காதல், சண்டை, மசாலா படம்தான். இண்டரெஸ்டிங்காக சொல்லியிருப்பதில்தான் இயக்குனர் ஷங்கரின் அனுபவம் வெளிப்படுகிறது.

நாட்டை காப்பாற்ற வேண்டும். கெட்டவர்களை ஒழிக்க வேண்டும் என்பது விஞ்ஞானி ரஜினியின் இலட்சியம். தனி மனிதனாக தன்னால் வில்லன்களை எதிர்கொள்ள முடியாது என்பதால் தன்னை போலவே உருவ அமைப்பு கொண்ட ஒரு ரோபோவை விஞ்ஞானி ரஜினி உருவாக்குகிறார். ஒரு எதிர்பாராத நேரத்தில் உலக அழகி ஐஸ்வர்யாராயை பார்த்து காதலிக்க தொடங்குகிறார். காதலிக்க தொடங்கிய ரஜினி கடமையை மறக்கிறார். இவருடைய ஆல்டர் ஈகோவான ரோபோவும் அதே ஐஸ்வர்யாராயை தான் உருவாக்கப்பட்டதற்கான காரணத்தை மறந்து காதலிக்கத் தொடங்குகிறது. இந்த காதலில் இருந்து வெளிவந்து விஞ்ஞானியும், ரோபோவும் எப்படி வில்லன்களை பழிவாங்குகிறார்கள் என்று சாதாரணமாக சொன்னாலும் ஷங்கரின் விஷூவல் ட்ரீட் என்னவென்பதை வெள்ளித்திரையில் காணுங்கள்.

குறுந்தாடியும், ஸ்பெக்ஸுமாக ஒரு விஞ்ஞானியை கண் முன்பாக நிறுத்துகிறார் ரஜினி. ஐஸ்வர்யாராயை பார்த்ததுமே காதலிப்பது, இவரைப்போலவே ரோபோவும் ஐஸ்வர்யாராயை ஜொள்ளுவிடுவது போன்ற காட்சிகளில் ரஜினியின் இளமை ஊஞ்சலாடுகிறது. இடைவேளைக்கு பிறகு காதலை மறந்து கடமையை செய்ய இரு ரஜினிகளும் கிளம்புவது என்று எந்திரன் மந்திரனாகி பட்டையை கிளப்புகிறார்.

ஐஸ்வர்யா ராய்க்கு பெரியதாக வேலை இல்லை. ரெண்டு ரஜினிகளையும் மாறி மாறி காதலிக்கிறார். கடைசியில் விஞ்ஞானியை கைப்பிடிக்கிறார். இவரை காதலுக்கும், பாடலுக்கும் மட்டுமே ஷங்கர் பயன்படுத்தி இருக்கிறார். உலக அழகி. ம்ம்ம்.. விஷுவலி ப்யூட்டிபுல். வில்லனாக டேனி டென்ஸோங்க்பா நடித்திருக்கிறார். இவர் இந்தியில் பல படங்களில் கலக்கியவர். கருணாஸ் சந்தானம் காமெடி பரவாயில்லை. முக்கியமாக ஹனீபா, கலாபவன் மணி நடிப்பு அட்டகாசம். மனிதபாம்புகளாய் மாறி ரஜினி கலக்கும் காட்சிகள் கிராபிக்ஸ் சூப்பர். படம் நெடுக நிறைய கேரக்டர்கள். ஆனால் எதுவுமே மனதில் பதியவில்லை. ரெண்டு ரஜினி மட்டுமே பதிகிறார்கள்.

ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்கள் ஆல்ரெடி ஹிட். சுட்டி சுட்டி ரோபோ, காதல் அணுக்கள் பாடல்களை ரசிகர்கள் மட்டுமன்றி, என்னுடைய திரையுலக நண்பர்களும் விரும்பி கேட்கிறார்கள். பின்னணி இசையிலும் ஆஸ்கார் நாயகன் பின்னி பெடலெடுத்திருக்கிறார். குறிப்பாக ரோபோவின் காதல் காட்சிகள், கிளைமேக்ஸ். சண்டை காட்சிகளை வடிவமைத்த பீட்டர் ஹெயினுக்கு பாராட்டுகள்.

படத்தின் பலத்திற்கு மிக முக்கியமான பலம் ரத்னவேலுவின் கேமிரா. முதல்பாதல் இளமைக்கு ஏற்ப லொக்கேஷன், லைட்டிங், கலர், ஷாட்ஸ் என்று அமைத்தவர், அடுத்த பாதி ஆக்‌ஷனுக்கு டெர்ரர் மூடை கேமிராவிலேயே கொண்டு வந்திருக்கிறார். எக்சலெண்ட். அதுவும் பெருங்குடியில் செட் போட்டு எடுக்கப்பட்ட சண்டைக்காட்சிகள் அதகளம்.

குசேலனின் படுதோல்விக்கு பிறகு ஒரு காதல் மசாலா கதையில் நடிக்க முன்வந்திருப்பதற்கு ரஜினிக்கு பாராட்டுக்கள். அதே நேரத்தில் பதினெட்டு ஆண்டுகளாக ஒரே கதையை இதுவரை பத்து படமாக எடுத்திருக்கும் இயக்குனர் ஷங்கரையும் நாம் பாராட்டிதான் ஆகவேண்டும். ரோபோ காதலிப்பது என்பதெல்லாம் ஹாலிவுட் உலகபடங்களில் வந்த கதைதான் என்றாலும் தமிழில் ப்ரெஷ்ஷாக கொடுத்திருப்பதால் வரவேற்றே ஆகவேண்டும். ஆனால் மனிதர்களை போலவே ரோபோவும் காதலை சொல்ல ரோஜாபூவைதான் கொடுக்க வேண்டியிருக்கிறது போன்ற வழக்கமான டெம்ப்ளேட் காட்சிகளை தவிர்த்திருக்கலாம்.

இந்தப் படத்தை சன்பிக்சர்ஸ் தயாரிக்காமல் இருந்திருந்தால் இன்னும் பாராட்டி விமர்சனம் எழுதியிருப்பேன். கலாநிதிமாறன் தயாரித்திருப்பதாலேயே அடக்கி வாசிக்க வேண்டியிருக்கிறது.  படம் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே சன்பிக்சர்ஸ் லோகோ போடுவதாலேயே படத்தின் ஹைப் குறைகிறது. சைதை ராஜில் எனக்காக சிறப்புக் காட்சி போட்டார்கள். சவுண்ட் ஓக்கே. டிஜிட்டலில் திரையிடுகிறார்கள். ஆனால் பிலிம் தேய்ந்தது போல எபெக்ட். அந்த தியேட்டரில் இடைவேளையில் போடும் பாப்கார்ன் மட்டும்தான் நன்றாக இருக்கிறது. முட்டை பஜ்ஜியில் முட்டையே இல்லை.

எந்திரன் - கமர்சியல் மந்திரன்!

டிஸ்க்கி : நண்பர்களே / தோழர்களே / பிரெண்டுகளே! படம் பார்த்துதான் இணையத்தில் திரைவிமர்சனம் எழுதமுடியும் என்று நீங்கள் நினைத்தால்... உங்களைவிட பெரிய அறிவாளி வேறுயாரும் உலகத்தில் இருந்துவிட முடியாது.

22 கருத்துகள்:

 1. இரண்டல்ல, மூன்று ரஜினிகாந்த். ‘என் இனிய இயந்திரா’வின் சத்யா மாதிரி ஆப்டிக்கல் தந்திரங்களால் ப்போராவால் சிட்டியை தோற்கடிக்க உருவாக்கப்படுபவர் என்று ஊகிக்கிறேன். பெயர் ஐ-ரோபோவாக இருக்கலாம்.

  பதிலளிநீக்கு
 2. /// டிஸ்க்கி : நண்பர்களே / தோழர்களே / பிரெண்டுகளே! படம் பார்த்துதான் இணையத்தில் திரைவிமர்சனம் எழுதமுடியும் என்று நீங்கள் நினைத்தால்... உங்களைவிட பெரிய அறிவாளி வேறுயாரும் உலகத்தில் இருந்துவிட முடியாது.////

  இது டாப் !!!!!
  any உள்குத்து # டவுட் 1

  பதிலளிநீக்கு
 3. தல,

  எல்லாம் சரி, அது என்ன +5? எனக்கு ஒன்னும் புரியல?

  பதிலளிநீக்கு
 4. டிஸ்கி படிக்கிற வரைக்கும் எனக்கு மண்ட சுத்திருச்சுங்கோ....

  பதிலளிநீக்கு
 5. ///அதே நேரத்தில் பதினெட்டு ஆண்டுகளாக ஒரே கதையை இதுவரை பத்து படமாக எடுத்திருக்கும் இயக்குனர் ஷங்கரையும்///

  சரியான செருப்படி...

  இந்த பஞ்ச் காணாதா? இவனுங்களுக்கு

  பதிலளிநீக்கு
 6. //முட்டை பஜ்ஜியில் முட்டையே இல்லை.//

  விமர்சனத்தின் இந்த வரியை மிகவும் இரசித்தேன். கண்ணில் நீர் திரையிடுவதை தவிர்க்க இயலவில்லை. முதல் முறை படித்த இரவில் தூக்கம் வராமல் புரண்டு கொண்டே இருந்தேன்.

  பதிலளிநீக்கு
 7. சபாஷ்.. உங்கள் விமர்சனம்
  அருமை.
  பதிவை படிக்காமலயும்
  பின்னூட்டம் போடுவோம்ல..

  பதிலளிநீக்கு
 8. இன்டர்வெல்க்கு பிறகு வரும் கார் சேஸிங் சீன் பத்தி கொஞ்சம் சொல்லிருக்கலாம்.

  by
  படம் பார்த்த மாதிரியே பின்னூட்டம் போடுவோர் சங்கம்.

  பதிலளிநீக்கு
 9. //(Endhiran Movie Review 5+)//

  இதை மிகவும் ரசித்தேன்..

  பதிலளிநீக்கு
 10. விமர்சனத்தின் இந்த வரியை மிகவும் இரசித்தேன். கண்ணில் நீர் திரையிடுவதை தவிர்க்க இயலவில்லை. முதல் முறை படித்த இரவில் தூக்கம் வராமல் புரண்டு கொண்டே இருந்தேன்/

  Me too. :-))

  பதிலளிநீக்கு
 11. இது ஷங்கர் படம் என்பதால்
  1. கட்டாயம் ஹீரோ, ஹீரோயிகளுக்கு கூட பிறந்தவர்கள் இருக்க மாட்டார்கள்.

  2. ஹீரோயின் அம்மா, அப்பா இலக்கியம், கலை துறையை சேர்ந்த புதுமுகம் கட்டாயம் உண்டு.

  3. ஹீரோயினை மடக்க அவர் வீட்டுக்கு போவார். ஏதாவது சேட்டை செய்வார்.

  4.லஞ்சம் பற்றி லெக்சர் உண்டு.

  5. இட ஒதுக்கீடு பற்றி இருக்காது. ஏன்னா இது கருணாநிதி படம்.

  6. கட்டாயம் பல காட்சிகளில் சன் டீவி, தமிழ் முரசு பற்றிய காட்சி வரும்.

  7. கொஞ்சம் சண்டை.

  அவ்வுளவுதான் படம் ரெடி.

  இதுக்கு ஒரு பட்டு குஞ்சமா?

  பதிலளிநீக்கு
 12. குசேலனுக்கு பிறகு சிவாஜியை விட்டுவிட்டீர்களே உங்கள் கற்பனையில்.

  பதிலளிநீக்கு
 13. கொய்யால,,,, சாச்சுபுட்டியே மாச்சான் !!!

  பதிலளிநீக்கு
 14. நண்பர்களே / தோழர்களே / பிரெண்டுகளே! படம் பார்த்துதான் இணையத்தில் திரைவிமர்சனம் எழுதமுடியும் என்று நீங்கள் நினைத்தால்... உங்களைவிட பெரிய அறிவாளி வேறுயாரும் உலகத்தில் இருந்துவிட முடியாது.

  நீங்க ரொம்ப லேட்டு . . . எப்போவோ இங்க

  http://espradeep.blogspot.com/2010/08/blog-post_17.html

  செஞ்சுட்டாங்க

  பதிலளிநீக்கு
 15. பாதி ஜில்லு... பாதி ஜவ்வு.. நவீன விட்டலாசார்யா...

  பதிலளிநீக்கு
 16. Scientist Rajini builds a robot that is similar to himself as he does not confront villains as a human being.

  பதிலளிநீக்கு