3 செப்டம்பர், 2010

டான் சீனு


டைட்டிலில் ரவிதேஜாவுக்கு மாஸ் ராஜா என்று தப்பாக பட்டம் தருகிறார்கள். அவர் மாஸ் மகாராஜா. ஜெமினி டிவியில் பார்க்கும் பழைய ரவிதேஜா படங்கள் ‘ஆவ்’ ரகம். அவரது முகம், நம்மூர் சத்யராஜூக்கு ஒப்பான கவர்ச்சி கொண்டது. முகலட்சணம் சுமார்தானென்றாலும் தேஜாவின் பரபரவென்ற உடல்மொழி, ‘கோயிந்தா’ பாணி டான்ஸ், நான்ஸ்டாப் காமெடியென்று, பார்க்க பார்க்க பிடிக்கும் ரகம் இவர்.

மசாலா என்ற பெயரில் தமிழில் சுவாமிஸ் கஃபே மசால்தோசை மசாலாவாக இட்டுக் கொண்டிருக்க, தெலுங்கிலோ செட்டிநாட்டு நாட்டுக்கோழி மசாலாவை, காரம் தூக்கலாக வறுத்துத் தள்ளுகிறார்கள். செண்டிமெண்ட், லாஜிக், கலைவடிவம், இத்யாதி, இத்யாதியெல்லாம் யாருக்கு வேண்டும்? படத்தை சுட்டோமா, பரபரவென்று மொளகா பஜ்ஜி மாதிரி விற்றுத் தீர்த்தோமாவென்று இருக்கிறது டோலிவுட்.

கதை ரொம்ப சிம்பிள். சிறுவயதில் அமிதாப்பின் டான் படத்தை முப்பது முறைக்கு மேல் பார்க்கிறான் சீனு. தானும் டான் ஆகவேண்டும் என்ற ஆவலில் டான் சீனுவாக மாறுகிறான். பெயர் மாற்றம் சுலபமானதே தவிர, ஹைதராபாத்தில் டான் ஆவது அவ்வளவு சுலபமல்ல. ஏற்கனவே ஏட்டிக்குப் போட்டியாக கவுண்டமணி – செந்தில் மாதிரி இரண்டு டான்கள். அந்த இரண்டு டான்களுக்கும், துபாயில் இருந்து ‘ஒர்க் ஆர்டர்’ கொடுக்கும் வி.கே.ராமசாமி பாணியில் இன்னொரு இண்டர்நேஷனல் டான் உண்டு. காட்சிக்கு காட்சி சரவெடி சிரிப்போடு அதிரடி க்ளைமேக்ஸ். மேட்டர் ஃபினிஷ்ட். இண்டர்வெல் ப்ளாக்கில் ஆரம்பிக்கும் குட்டி குட்டி சஸ்பென்ஸ்கள், இரண்டாம் பாதி முழுக்க ஆங்காங்கே தொடர்வது சுவாரஸ்யம்.

ரவிதேஜாவுக்கு ஒரு ஹீரோயின் என்றாலே உரசி உரசி தேய்த்துவிடுவார். ஒன்றுக்கு ரெண்டு. புகுந்து புகுந்து ஃபுட்பால் விளையாடுகிறார். ஷ்ரேயாவையே ஐஸ்வர்யாராய் ரேஞ்சுக்கு காட்டியிருக்கும் கேமிராமேனை இறுக்கி அணைச்சு உம்மா கொடுக்கலாம். ஜெர்மனி குளிரில் கூட அம்மணிக்கு வேர்க்கும் போல. ஹாயாக திரிகிறார். இன்னொரு ஹீரோயின் அஞ்சனா சுஹானி. சாதா காட்சிகளில் பார்ப்பதற்கு குத்துவிளக்கு மாதிரி இருப்பவர், பாடல் காட்சிகளில் நைட் லேம்ப் ஆகிவிடுகிறார்.

இரட்டை டான்களான ஷாயாஜியும், ஸ்ரீஹரியும் சீரியஸாக நடித்தாலும், திரைக்கதையமைப்பில் கோமாளிகள் தானென்பதால் ‘த்ரில்லிங்’ குறைவு. இவர்களை விட மெகா கோமாளி மெயின் வில்லன். எனவே க்ளைமேக்ஸில் கிடைக்க வேண்டிய ஆக்‌ஷன் டேஸ்ட் டோட்டலாக மிஸ்ஸிங். ஹீரோ, வில்லன்களே காமெடியன்கள் என்றால் காமெடியன்கள் படுத்தும் பாட்டை வேறு புதுசாக சொல்லவேண்டுமா? பிரம்மானந்தம் தலைமையில் ஒன்றுக்கு மூன்று பபூன்கள். வயிற்று வலிக்கு மாத்திரை வாங்கிக்கொண்டு தியேட்டருக்குள் நுழைவதைத் தவிர வேறுவழியில்லை.

ஏன் தான் இதுமாதிரி சப்ஜெக்ட்கள் நம் இளையதளபதிக்கும், அல்டிமேட் ஸ்டாருக்கும் மாட்ட மாட்டேங்கிறதோ என்று ஏக்கப் பெருமூச்சுதான் விடமுடிகிறது.

9 கருத்துகள்:

 1. //ஏன் தான் இதுமாதிரி சப்ஜெக்ட்கள் நம் இளையதளபதிக்கும், அல்டிமேட் ஸ்டாருக்கும் மாட்ட மாட்டேங்கிறதோ என்று ஏக்கப் பெருமூச்சுதான் விடமுடிகிறது.
  //

  அவங்க இமேஜ்க்கு இது எப்படி வரும். ஜெயம் ரவி வேணா இப்படி நடிக்கலாம்

  பதிலளிநீக்கு
 2. சூப்பர். ரவி தேஜா பற்றி யாரும் எழுதி தமிழில் நான் படித்ததில்லை. ரொம்ப நாட்களாக நான் எழுதவேண்டும் என்று நினைத்திருந்ததை எழுதிவிட்டீர்கள். :-)

  பதிலளிநீக்கு
 3. சகா, ப்ளீஸ் அந்த ஃபோட்டோக்களை எடுத்துவிட்டு மீண்டும் ஒரு முறை பதிவிடவும். எவ்வளவு முயற்சித்தும் பதிவை படிக்க முடியவில்லை

  பதிலளிநீக்கு
 4. தல,
  படம் உண்மையிலேயே சூப்பர் படம். இளையதளபதிக்கு ஏத்த படம். ஆனால் நடிக்க மாட்டார், கடைசியில் அவரோட குளோன்கள் பரத் அல்லது விஷால் நடித்து மொக்கையாகும்.
  நீங்க ரொம்ப லேட்டோ? இன்றையோட படம் மாத்திட்டாங்க. (அப்போ நேத்தைக்கு பார்த்தீங்களோ?).

  பதிலளிநீக்கு
 5. படம் பார்க்க ஆசைதான். ஆனால் தெலுங்கு‍ சுத்தமா வர லேது.
  ஜெ. பாபு
  கோவை

  பதிலளிநீக்கு
 6. //அவங்க இமேஜ்க்கு இது எப்படி வரும். ஜெயம் ரவி வேணா இப்படி நடிக்கலாம்//

  அவங்க இமேஜ் பார்த்து நடிச்சி கிழிக்கிறத தான் 10 வருஷமா பார்த்துகிட்டு இருக்கோமே.. அவங்க இது மாதிரி எதாவது ட்ரை பண்ணுன தான் உண்டு.. என்ன ஒன்னு இவங்க நடிச்சி படத்த கெடுதுடாம இருக்கனும்.. யுவா வேற படத்துல ஏகப்பட்ட காமடியன்கள் இருக்காங்கனு சொல்லி இருக்காரு. அவங்க எல்லாரோட வேலையும் இவங்களே பண்ணிடுவாங்க.. :)

  பதிலளிநீக்கு
 7. தல ...இப்படி ஆப்பு வெச்சுட்டீங்களே ! உங்க விமரசனத்த பாத்து நண்பர்களை கூட்டிகிட்டு போனா...படம் செம மொக்க ! இது தமிழ்ல வேற வரணுமா!!??చంపేస్తాను!

  better luck next time!(idha enakkey sollikitten :) vera enna vazhi!

  பதிலளிநீக்கு
 8. நானும் பார்த்தேன்.... பார்க்கலாம் ரகம்தான். ஆனால் ரவிதேஜாவிற்கு ஒரு பானியிக்கிறது... அது தெரியுமானால் எமாரபோவதில்லை

  பதிலளிநீக்கு