August 9, 2010

PUSH - PULL?

சாமானிய சென்னைத் தமிழனுக்கு ஒரு கலவரமான விஷயமொன்று உண்டு. அதாவது கண்ணாடியால் அலங்கரிக்கப்பட்ட கடைக்கதவுகளை கண்டதுமே “ஒருவேளை ரேட்டு கூடுதலாய் இருக்குமோ?” என்று சந்தேகத்தோடே அணுகுவான். எனவேதான் ஐனாக்ஸுகளையும், சத்தியம்களையும் அனாயசமாக புறக்கணிக்கிறான். கிட்டத்தட்ட இதே டிக்கெட் ரேட்டு கொண்ட குரோம்பேட்டை வெற்றிக்கு ஓடுகிறான்.

நமக்கு இந்த ஃபீவர் கொஞ்சம் அதிகமாகவே உண்டு. ஏழெட்டு வருடங்களுக்கு முன்பாக பஸ்ஸில் போகும்போதெல்லாம் வேளச்சேரியில் ஒரு மென்ஸ் பியூட்டி பார்லரை ஏக்கமாகப் பார்ப்பேன். கலரிங், ஹேர்மசாஜ், ப்ளீச்சிங்கெல்லாம் செய்யப்படுவதாக போர்டில் அறிவித்திருக்கும் அதிநவீன ஆணழகுக் கடை அது. அங்கே கட்டிங் + ஷேவிங் செய்துக்கொள்ள எவ்வளவு கட்டணம் என்று தெரியாததால், நீண்டநாட்களாக அந்நிலையத்தை புறக்கணித்து வந்தேன். ப்ளூ கலர் சீட்டுக் கிழிந்த – கடைக்கு பெயர் கூட இல்லாத சலூன் மோகன் அண்ணனிடமே ஒன்றரை மாதத்துக்கு ஒருமுறை சிகை அலங்காரம் நமக்கு வழக்கமாக நடைபெறும். இதற்கான செலவு ரூ.35/- (வரிகள் உட்பட).

நண்பன் ஒருவன் மூலமாக அந்த ஆணழகுக் கடையின் அந்நாளைய ரேட்டை பின்னாளில் அறிய முடிந்தது. குளிர்சாதனவசதி செய்யப்பட்ட அக்கடையில் கட்டிங் + ஷேவிங்குக்கு ரூ.40/- தான் கட்டணமாம். அதாவது மணி அண்ணன் கடையைவிட விட ரூ.5/- தான் அதிகம். கட்டிங் முடித்து ஷாம்பூ போட்டு ஹீட்டரும் முடிக்கு போட்டுவிடுவார்களாம். எனவே அந்த 5 ரூபாயைக்கூட அதிகமென்று சொல்ல ஏதுமில்லை. இப்போது அந்தக்கடை அங்கு இல்லை. என்ன செய்வது? வடை போயே போயிந்தி...

லேண்ட்மார்க் மாதிரி புத்தகக்கடை தொடங்கி சாதாரண ஓட்டல்கள் வரை பலவற்றையும் நாம் அச்சத்தோடு புறக்கணிக்க இந்தக் கண்ணாடி அலங்கரிப்பு மேட்டரே காரணமாக இருக்கிறது. ஆடம்பரத்தை கண்டு அஞ்சுகிறோம்.

முன்பு தேனாம்பேட்டை எல்டாம்ஸ் ரோட்டில் ஒரு டிசைனிங் செண்டரில் வேலை பார்த்து வந்தேன். ஸ்க்ரீன் பிரிண்டிங் தொழில் பிரபலமாக இருந்த காலக்கட்டம் அது. மினி ஆஃப்செட் சந்தைக்குள் நுழைந்துக் கொண்டிருந்தது. விசிட்டிங் கார்ட், லெட்டர்பேட், லோகோ, பிரிண்ட் ஆட் என்று அங்கே டிசைனிங் செய்துக் கொண்டிருந்தோம். ஆட் ஏஜென்ஸி செய்யும் வேலைகளை விட அதிகமாக, ஆனால் கொஞ்சம் குறைந்த விலையில் செய்துத் தந்துக் கொண்டிருந்தோம்.

முதலாளிக்கு நல்ல லாபம். ஆனால் ஆபிஸ் மட்டும் மீடியம் பட்ஜெட் படங்களின் க்ளைமேக்ஸில் வரும் கொடவுனைப் போல கொஞ்சம் டொங்காக இருக்கும். ஒருநாள் முதலாளியிடம் கேட்டேன். “உங்களுக்கு வர்ற லாபம் லெவலுக்கு எங்களுக்கு சம்பளம் கொடுக்கிறதில்லை. அதை விடுங்க. ஆனா ஆபிஸை கொஞ்சம் கண்ணாடி, கிண்ணாடி போட்டு கூலிங் பேப்பரெல்லாம் ஒட்டி, கஸ்டமர்கள் வந்துபோக குஜாலான எஃபெக்ட்டைக் கொடுக்கலாமில்லே?”

முதலாளி சொன்னார். “காசு பிரச்சினையில்லை. பண்ணிடலாம். ஆனா அப்படியெல்லாம் பண்ணோம்னா சாதாரண பிரிண்டர் உள்ளே வரவே தயங்குவானில்லையா?”.

நிஜம்தான். அதே தெருவில் ஆடம்பரமான அலுவலகத்தோடு, பிற்பாடு தொடங்கப்பட்ட சில டிசைன் சென்டர்கள் - எங்களைவிட குறைவான ரேட்டு வாங்கியும் கூட- தொடங்கப்பட்ட வேகத்தோடே மூடப்பட்டு விட்டன. “அங்கேல்லாம் ஏசி போட்டிருக்காங்க சார். அந்த செலவையும் சேர்த்து எங்ககிட்டேதானே வாங்குவாங்க” என்று ஒரு வாடிக்கையாளர் சொன்னார்.

இருப்பினும் ‘ரேட்’ குறித்த அச்சம் கொஞ்சம் அகன்றுவிட்டது. அது எப்படியெனில் ஏதோ ஒரு ஓட்டல் பாரில் முதன்முதலாக பீர் அடித்தபோது கிடைத்த சொகுசுதான் காரணம். இங்கிலீஷ் படங்களில் வருவதைப் போல மிதமான லைட்டிங், யூனிஃபார்ம் போட்ட சிப்பந்திகள், அவித்த வேர்க்கடலை பப்படம் ஃப்ரீ சைட் டிஷ் என்றெல்லாம் அனுபவித்துவிட்டு, பில்லைப் பார்த்தால்.. டாஸ்மாக் செலவை விட கொஞ்சமே கொஞ்சம் அதிகம். (ஹாட்டுக்கு இது வேலைக்கு ஆகாது என்பது வேறு விஷயம்)

எனவே இப்போது எந்த கடைக்குப் போனாலும் கண்ணாடி இருக்கிறதா, கூல் பேப்பர் ஒட்டப்பட்டிருக்கிறதா என்றெல்லாம் பெரியதாக மெனக்கெடுவது இல்லை. வாங்க விரும்புகிற பொருளின் விலையை மட்டும் விசாரித்துவிட்டு, மற்ற சாதாக்கடைகளின் ரேட்டை மனதுக்குள் ‘கம்பேர்’ செய்து கணக்கு போட்டுவிட்டு வாங்கிவிடுகிறேன்.

இங்கே விளம்பரம் செய்வதற்கு ஒரு அடிப்படை விதி உண்டு. இது இந்திய நுகர்வோர் மனநிலைக்கு கச்சிதமாகப் பொருந்தும் – பெரிய பிராண்டுகளுக்கு விதிவிலக்கு. எந்தப் பொருளை விளம்பரப் படுத்தினாலும், விளம்பரத்தில் ‘ரேட்டை’ குறிப்பிட்டுவிட்டால், அவ்விளம்பரம் மற்ற விளம்பரங்கள் ஏற்படும் தாக்கத்தைவிட டபுள் தாக்கத்தை ஏற்படுத்தும். யுனிவர்செல்லைவிட பூர்விகாவின் விற்பனை வருடாவருடம் அதிகரித்துக் கொண்டேச் செல்கிறது என்பதைவைத்து இந்த விளம்பர டெக்னிக்கின் அவசியத்தைப் புரிந்துகொள்ளலாம்.

முன்பெல்லாம் சட்டையோ, பேண்ட்டோ எடுக்கவேண்டுமானால் சரவணாவைத் தவிர வேறு கடை தெரியாது. இப்போது டெர்பீகாரன்கூட விளம்பரத்தில் விலையை குறிப்பிட்டு விடுவதால், அவன் கடைக்கு கண்ணாடி இருக்கிறது, ஏசி போட்டிருக்கிறான், கடைப்பெண் ஏர் ஹோஸ்டஸ் மாதிரி இருக்கிறாள் போன்ற மனத்தடை எதுவுமின்றி நேராக கடைக்குப் போய் எதையாவது வாங்கிவந்துவிட முடிகிறது.

ஆனாலும் இன்றும் கூட எனக்கு கண்ணாடி போட்ட ஆபிஸுக்கு ஏதாவது வேலையாகப் போகும்போது கொஞ்சம் படபடப்பாகத்தான் இருக்கும். வரவேற்பரையில் குஷன் வைத்த நாற்காலியில் உட்காரும்போது கொஞ்சம் அந்நியமாகவே ஃபீல் செய்கிறேன்.

இந்த ஆடம்பர கண்ணாடிக் கதவு விஷயத்தில் பெரிய பிரச்சினை என்னவென்றால் PUSH அல்லது PULL என்று ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார்கள். PUSH என்றால் அமுக்கித் தள்ளவும் என்று பாலாஜீஸ் ஈஸிவே டூ ஸ்பீக் இங்க்லீஷ் புத்தகத்தில் படித்து தெரிந்து கொண்டிருக்கிறேன். PULL என்றால் இழு என்றும் அதே புத்தகத்தில் குறிப்பிடப் பட்டிருக்கிறது. ஆனாலும் ‘PULL – தள்’ என்று மனம், ஏதோ ஒரு ஆங்கிலத்தமிழ் ஒப்பீட்டு வார்த்தை விளையாட்டை விளையாடி குழப்பிவிட்டிருக்கிறது. PULLஅ வேண்டிய இடத்தில் தள்ளித் தொலைத்துவிட்டு பலர் முன்னிலையில் அசிங்கப்பட்டுத் தொலைக்க வேண்டியிருக்கிறது. நம் பர்சனாலிட்டியும் பார்க்க புல் தடுக்கி பயில்வான் மாதிரி இருப்பதால், கண்ணாடிக் கதவோடு PULLU முள்ளு செய்துக் கொண்டிருக்கையில், பார்க்கிறவர்கள் எல்லாம் ஏதோ வாழைப்பழத் தோலில் வழுக்கி விழுந்தவனை பார்த்து சிரிப்பது மாதிரி அசட்டுச்சிரிப்பு சிரித்து தொலைக்கிறார்கள்.

22 comments:

 1. நல்ல எழுதியிருக்கீங்க லக்கி. இந்த கட்டுரை பற்றி நிறைய சொல்ல இருக்கிறது. வருகிறேன் மீண்டும்.

  ReplyDelete
 2. முன்பொருமுறை கவிதை அரங்க நிகழ்ச்சிகளைக் கலாய்த்து 'கழுதை அரங்கம்' என்று ஒளிபரப்பான ஏதோ ஒரு நிகழ்ச்சியில் கேட்ட ஞாபகம்...

  "PUSH -னா தள்ளு
  புரியலன்னா நில்லு"

  இது எப்படி இருக்கு!!! :)

  நீங்க சொல்றது நூத்துக்கு நூறு சரி லக்கி. நானும் இதேமாதிரி கண்ணாடி போட்ட கடைகளுக்குள்ள நுழையாமல் இதே மாதிரியான எண்ணங்களோட அலைஞ்சிருக்கேன்.

  ReplyDelete
 3. ஏறக்குறைய நீங்க சொன்ன எல்லாமே எனக்கு பொருந்தும். அட நான்தான் ஃபர்ஸ்ட்டு...

  ReplyDelete
 4. ணா..நம்புங்க..நேத்து கூட ஸ்டுடியோவுல ஒருத்தர் முதுக பதம் பார்த்தேன். இது வரை நெறைய பேர் கால பேத்துருக்கேன். உண்மையிலேயே சரியான கவனிப்பு.(வீட்டா விட பாலாஜீஸ் நல்லாயிருக்கும் போலயே)

  ReplyDelete
 5. VERY NICE POST

  கடைசி பத்தியில் வார்த்தை பிரயோகங்கள் அருமை.

  மனோ

  ReplyDelete
 6. நான்தான் பர்ஸ்ட்.

  ReplyDelete
 7. இதே பிரச்சனைதான்ங்க எனக்கும். இந்த Airtel, Aicell எந்த கஸ்டமர் கடைக்கு போய் ஒரு டவுட் கேக்கலாம்னு பார்த்தா, அங்கயெல்லாம் கலர் கலரா பொண்ணுங்க உட்கார்ந்துகிட்டு போண்ல யார் கூடயோ கடலைய போட்டுகிட்டு இருப்பாங்க. நல்ல டிரெஸ் போட்டு இருக்கிறவங்கலா இருந்தா, ஜம்முனு போய் நிக்கலாம். ஆனால் நம்மலோ ரெண்டு நாள் துவைக்காத சட்டை, ஒரு வாரம் துவைக்காத பேண்ட், தலைவாராத முடி இப்படி இருப்போம். அப்படியே போணாலும் பொண்ணுகிட்ட போய் என்னத்தடா டவுட் கேக்கறனு, உள்ள இருந்து நம்ம பெரிச்சாளி சொல்லும்.
  இதக்கூட விடுங்க சில பேங்குக்கு கூட போக முடியல... இத எங்க போய் சொல்ல...

  ReplyDelete
 8. பதிவு நல்ல இருக்கு........வாழ்த்துகள்

  ReplyDelete
 9. செம பாஸ்..

  லக்கியும், யுவகிருஷ்ணாவும் மட்டையா படுத்துக் கொண்டிருக்கிறார்கள் பதிவில்.

  ReplyDelete
 10. பதிவு நல்ல இருக்கு...

  ReplyDelete
 11. athai vita kodumai automatic sliding Glass door, chila samayam thirakkuma thirakkatha en payam veRa vanthudum

  ReplyDelete
 12. தலைப்பை பார்த்ததும் PUSH, PULL இணைய தொழில்நுட்பம் பற்றிய கட்டுரையோ என எண்ணினேன். கதவில் எழுதி ஒட்டியிருப்பதைப் படிக்காமல் தள்ளிப் பார்த்து விட்டு பிறகு இழுப்பது என் வழக்கம்.

  ReplyDelete
 13. நாலு பேர்2:43 AM, August 10, 2010

  ராஜன் கமல்:"இப்போ இங்க்லிஷ்ல எதோ சொன்னீங்களே என்ன அது?"

  மதன் கமல்:"Catch my Point?"

  ராஜன் கமல்: "ஷோக்கா சொன்னெ சார்..catch my point..அதெல்லாம் அப்படியே வர்ரதுதான் இல்லெ?"

  ReplyDelete
 14. நாலு பேர்2:58 AM, August 10, 2010

  முதல் முறை யு.எஸ் விமானம் ஏறியபோது என் சீட்டில் வைக்கப்பட்டிருந்த சின்ன தலையணை, டாய்லெட்ரி ஐட்டம்ஸ் பை எல்லத்தயும் பார்த்தூட்டு கொஞ்ச நேரம் நின்னுக்கிட்டே இருந்துட்டு பிறகு flight attendant கூப்பிட்டு யாரோ அவங்க பொருட்களை வுட்டுட்டு போய்ட்டாங்கன்னு சொல்லி ஒரே காமெடியா ஆகிப்போச்சு! இப்போ ஓயாம பறந்து பறந்து பறந்து பழகின பின்னால அப்பொ நடந்ததயும் பக்கதுல இருந்த பிகர் அமைதியா சிரிப்பை அடக்கினதயும் நெனச்சா சிரிப்புதான் வருது..தமிழன் கூச்ச சுபாவியாதான் வளர்ரோம் இல்ல?

  ReplyDelete
 15. Good post. This is one of the reasons i prefer a supermarket with all the prices tagged.

  For glass doors, this is what i observed. Generally For "push" the bars are in the horizontal position. For "pull" the bars are in vertical position.

  ReplyDelete
 16. புல் அடிச்சிட்டு Pull-லினால் இப்ப‌டித்தான்

  ReplyDelete
 17. Watch this video to know how girls open push doors :) http://www.facebook.com/profile.php?id=627123932#!/video/video.php?v=177137065433&ref=mf

  ReplyDelete
 18. அந்த push,pull பிரச்சனை இப்ப கூடத் தவிர்க்க முடியாமல் நிகழ்ந்துவிடுகிறது :)

  ReplyDelete
 19. SUPPER SIR. ROMBAVUM NANDRAGAVE EZUTHI IRUKKIRIIRKAL. ENAKKU MATTUMTHANN IPPADIYO ENDRU IRUNTHEN. AAHAA NAMAKKUM THUNAIUNTU ENDRU AANANDHAM ADAITHEN. NANDRI.

  ReplyDelete
 20. ரொம்ப உண்மை லக்கி.

  என்னோட அண்ணன் பஸ் ரூட் எடுத்து இருந்தாங்க.. பஸ் சாதா வண்டி மாதிரியே இருக்கும்.. நீங்க ஏன் மப்சல் வண்டி மாதிரி மாற்றி விடக்கூடாது என்று கேட்ட போது.. அதற்க்கு அவர் கூறியது.. "அப்படி எல்லாம் செய்தால் டிக்கெட் விலை அதிகம் என்று யாரும் ஏறமாட்டார்கள்" என்று கூறினார்... அதே தான் இதுவும்.

  ReplyDelete
 21. என்னங்க இவ்வளவு ஜாலியா எழுதறீங்க எங்க கத்துகிட்டீங்க?, இரத்தத்துல கலந்த விசயமுனு சொல்லாதீங்க, எங்களுக்கும் எப்படி எழுதறுதுன்ணு சொல்லி கொடுத்தீங்கன்னா, பின்னாடி சாரு மாறியோ சுஜாதா மாறியோ மாறி வண்டிய ஓட்டிப்போம், போம், போம்....

  ReplyDelete