19 ஆகஸ்ட், 2010

ஒரு அவசர உதவி!

இதைப் படிக்கும் எல்லோருமே ஒரு காலத்தில் நிச்சயமாக மாணவனாகவே இருந்திருப்பீர்கள். எனவேதான் உங்களிடம் இந்த உதவியைக் கோருகிறேன். ஆசிரியர்கள் யாராவது இந்தப் பதிவை வாசித்தாலும் உதவலாம்.

- உங்களுக்கு வாய்த்த ஆசிரியர் அல்லது இப்போது பணியில் இருக்கும் உங்களுக்கு தெரிந்த ஆசிரியர் யாராவது மிகச்சிறந்த ஆசிரியராக இருந்திருக்கலாம். நாடே போற்ற வேண்டிய அவரைப் பற்றிய தகவல்கள் உங்கள் ஊரைத்தவிர வேறு யாருக்கும் தெரியாமல் போயிருக்கலாம். அதுபோல யாராவது இருந்தால் தொடர்பு எண்ணோடு தந்து உதவுங்கள்.

- நீங்கள் பத்து அல்லது பண்ணிரெண்டாம் வகுப்பு படித்தபோது யாராவது ஒரு ஆசிரியர் உங்கள் எதிர்காலம் குறித்த அக்கறையோடு வழிகாட்டுதல் காட்டியிருக்கலாம். இதனால் உங்கள் வாழ்க்கையே மாறியிருக்கக்கூடும். அதுபோன்ற ஆசிரியர் மற்றும் உங்கள் அனுபவங்களை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

- ஆசிரியர்கள் குறித்து பாசிட்டாகவோ அல்லது நெகட்டிவ்வாகவோ உங்களுக்கு சில எண்ணங்கள் இருக்கக்கூடும். அதையும் தெரிவிக்கலாம்.


இதெல்லாம் ஏன் எதற்கு என்று நீங்கள் தொடர்பு கொண்டபின் மின்னஞ்சலில் தெரிவிக்கிறேன். என்னை தொடர்புகொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி : yuvakrishna@gmail.com

5 கருத்துகள்:

 1. கொஞ்ச நாளாகவே ரொம்ப ஓவரா அக்டிங் கொடுக்கற. போதும். சமூக சீர்திருத்த சிகாமணியா நடிச்சது போதும்.

  பதிலளிநீக்கு
 2. நண்பா ஒரு சின்ன விஷயம்
  இது என் பள்ளி பருவா ஆசிரியரை பற்றியது

  4 வது நான் இங்கிலீஷ் மீடியத்துல இருந்து தமிழ் மீடியத்துக்கு மார்னபோது
  ஒரு முறை என் ஆசிரியரிடம் சொன்ன நானும் இங்கிலீஷ் மீடியத்துல படிச்சவன்தாணு
  அப்ப எதோ ஒரு இங்கிலீஷ் வார்த்தைய தப்பா எழுதனதால அதர்க்கு அவர்
  "இங்கிலீஷ் மீடியத்துல படிச்சன்னு சொல்லதன்னு"
  சொன்னாரு அந்த ஒரு வார்த்த இப்பவரைக்கும்
  என்ன இங்கிலீஷ் முழுசா கத்துக்க முடியாதபடி வெருப்ப உண்டாக்கிருச்சு

  நா MCA முடிச்சு 2 வருசமா IT ல வேல பாத்தன்
  இங்கிலீஷ் பிரச்சநியாள என்னோட வேல போச்சு
  இப்ப ஒரு அக்கவுண்டன்டா பக்ஹரைன் இருக்குகன்

  ஆசிரியரை பத்தி நா தப்பா சொல்லள ஆனா
  பசங்களோட சின்ன வயசுல அவங்க மனசுல பதியரமாதிரி
  படிப்பு விசயத்துல எந்தவர்த்தையும் சொல்றதுக்கு முன்னாடி ஒரு முறை யோசிச்சு சொல்லனும்னு நினைக்குரன்

  பதிலளிநீக்கு
 3. நிறைய ஆசிரியர்கள் வழிகாட்டியாக இருந்திருக்கிறார்கள்

  குறிப்பாக துய யோவான் கல்லுரி, பாளையங்கோட்டை தமிழ் பேராசிரியர் முனைவர் திரு பா வளன் அரசு... இப்போது ஒய்வு பெற்றிருக்க வேண்டும்

  அவரை பற்றி சொல்றதுக்கு வார்த்தைகள் கிடையாது...

  1993 -1996 ல் அவரது மாணவனாக இருந்ததை பெருமையாக கருதுகிறேன்..

  அவரது வசிப்பிடம்... சமாதன புறம் அருகில், பாளையங்கோட்டை, திருநெல்வேலி.

  தொடர்பு நம்பர் தர இயலாமைக்கு வருந்துகிறேன்.... நான் தற்போது துபாயில்...

  college number
  நிறைய ஆசிரியர்கள் வழிகாட்டியாக இருந்திருக்கிறார்கள்
  குறிப்பாக துய யோவான் கல்லுரி, பாளையங்கோட்டை தமிழ் பேராசிரியர் முனைவர் திரு பா வளன் அரசு... இப்போது ஒய்வு பெற்றிருக்க வேண்டும்

  அவரை பற்றி சொல்றதுக்கு வார்த்தைகள் கிடையாது...

  1993 -1996 ல் அவரது மாணவனாக இருந்ததை பெருமையாக கருதுகிறேன்..
  அவரது வசிப்பிடம்... சமாதன புறம் அருகில், பாளையங்கோட்டை, திருநெல்வேலி.

  தொடர்பு நம்பர் தர இயலாமைக்கு வருந்துகிறேன்.... நான் தற்போது துபாயில்...

  St. John's College,
  Tirunelveli - 627 002
  Tamil Nadu,
  India
  Phone: 0462-2572218

  பதிலளிநீக்கு
 4. My teacher Mr.S. Udayakumar in A.R.R. Municipal Higher Secondary School, Kumbakonam - 612 001. He is a role model for a great teacher leads a simple life even now and morethan 25 years serving in this school and uplifting the poor students from that area.
  My cousin's friend Mr.Devadoss of Paramakkudi and working in a government school in Ramanathapuram who shown me the way to the future and the meaning of hardwork and benefits of the same. Only because of this person i came to know the hurdles of this society and depth of competition and now i became a complete personality to my satisfaction. If you want, i can ask my cousin his phone no., because now i am in Kuwait.

  பதிலளிநீக்கு
 5. அவசரத்துக்கு உதவியதற்கு மிக்க நன்றி தோழர்களே! எல்லாம் நல்லபடியாக முடிந்தது.

  பதிலளிநீக்கு