12 ஆகஸ்ட், 2010

பாணா காத்தாடி!

“காதலிக்கும் பெண்ணிடம் பரிசு கொடுத்து காதலை சொல்ல விழைகிறான் காதலன். அவன் கொடுக்கும் பரிசு ஒரு காண்டம். அதிர்ச்சி காதலிக்கு மட்டுமல்ல, காதலனுக்கும்தான்!” – இந்த ஒன்லைனரைப் பிடித்து, பரபரவென்று நூல் விட்டு உயர பறக்கிறது பாணா காத்தாடி. களவாணிக்குப் பிறகு வரவேற்கப்பட வேண்டிய இன்னொரு மீடியம் பட்ஜெட் படம்.

காத்தாடி சீசனெல்லாம் சென்னையில் 15 வருடங்களுக்கு முன்பான அற்புதம். இப்போது சென்னைப் பசங்களுக்கு காத்தாடியில் அவ்வளவு பெரிய விருப்பமெல்லாம் எதுவுமில்லை. காத்தாடி மட்டுமல்ல, பம்பரம், கில்லியெல்லாம் கூட கொஞ்சம் கொஞ்சமாக வழக்கொழிந்துக் கொண்டிருக்கிறது.

சாந்தி தியேட்டர் வாசலில் புரட்சிப்புயல் முரளி ரசிகர்மன்றத்தினர், தங்கள் தலைவரின் மகனான அறிமுகநாயகன் அதர்வாவுக்கு அட்டகாசமாக கட்டவுட் வைத்திருக்கிறார்கள்.

ஒரு ஓட்டலில் ஹீரோவையும், ஹீரோயினையும் பார்க்கிறார் முரளி. ஹீரோவைத் தனியாகக் கூப்பிட்டு சொல்கிறார்.

“அந்தப் பொண்ணு மேலே காதல் வந்திருச்சின்னா உடனே சொல்லிடு. இல்லேன்னா என்னை மாதிரி உனக்கும் இதயத்துலே ஓட்டை விழுந்திடும்”

“நீங்க யாரு சார்?”

“நான் இதயம் ராஜா. மெடிக்கல் காலேஜ்லே ஃபைனல் இயர் படிக்கிறேன்” சொல்லிவிட்டு, ஒரு 192 புத்தக நோட்டை எடுத்துக்கொண்டு முரளி கிளம்புகிறார்.

தியேட்டரில் விசிலும், கைத்தட்டலும் ஓய ஐந்து நிமிடங்கள் ஆகிறது. எல்லா காட்சிகளையும் இதுமாதிரி எள்ளல்தன்மையோடே அணுகியிருப்பது இயக்குனரின் புத்திசாலித்தனம்.

சினிமாக்களும், பத்திரிகைகளும் மெட்ராஸ் பாஷை என்ற ஒரு வினோத பாஷையை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். “இன்னாம்மே வாம்மே போம்மே இஸ்த்துக்கிணு வலிச்சுக்கிணு” என்று ஏகப்பட்ட சொல்லாடல்கள் நிறைந்த பாஷை அது. குறிப்பாக சொல்ல வேண்டுமானால் அந்த காலத்து டி.டி.யில் செவ்வாய்க்கிழமை நாடகம் இயக்கிய பார்ப்பனர்கள் உருவாக்கிய கருத்தாக்கம் என்று கூட சொல்லலாம். விசு படங்களின் மெட்ராஸ் பாஷையையும் இங்கே நினைவுப்படுத்திக் கொள்ளலாம். இவர்களுக்கெல்லாம் சென்னை பாஷை இதுதானென்று பேசி நடித்துக்காட்டிய லூசுமோகனை முதலில் உதைக்க வேண்டும். கருணாஸ் பேசி நடிக்கிறார் பாருங்கள். அதுதான் ஒரிஜினல் சென்னைத் தமிழ்.

இஸ்துக்கினி, வலிச்சிக்கினு, நாஷ்டா மாதிரி சொல்லாடல்கள் எல்லாமே சென்னைத்தமிழில் இருக்கும்தான். இல்லையென்று மறுக்கமுடியாது. ஆனால் ஊடகங்களில் கட்டமைத்து வைக்கப்பட்டிருக்குமளவுக்கு லூசுத்தனமான தொடர்மொழியில் இருக்கவே இருக்காது. எங்கள் ஊர் தமிழ் எப்படியிருக்குமென்று மிகச்சரியாக, துல்லியமாக எடுத்துக்காட்டிய படம் ஜனநாதனின் ‘ஈ’. இப்போது ‘பாணா காத்தாடி’. எதைப் பேசுவதற்கு முன்பாகவும் ‘...த்தா’ போட்டுதான் பேசுவோம். சில நேரம் அம்மாவிடம் பேசும்போதே கூட அந்த வார்த்தையைப் போட்டு பேசிவிடுவதுண்டு. பாணா காத்தாடியில் மிகையில்லாத சென்னை வசனங்கள், சென்னைக்காரன் என்ற முறையில் படத்தை மனதுக்கு நெருக்கமாக உணரமுடிகிறது.

ஹீரோ அதர்வா ஸ்கூல் ஸ்டூடண்ட். ஹீரோயின் சமந்தா காலேஜ் ஸ்டூடண்ட். எட்டு வயதில்தான் அம்மா ஸ்கூல்லே சேர்த்தாங்க என்று ஹீரோ ஒரு காட்சியில் சொல்கிறார். சென்னையில் இது சகஜமான ஒன்றுதான். பத்தொன்பது வயதில் +2 படிக்கும் மாணவர்களை இங்கே சகஜமாக காணலாம். அதுபோலவே கவுன்சிலர், போலிஸ் ஸ்டேஷன், யூத்களின் நைட் ரவுண்ட்ஸ் என்று சென்னையை நன்கு அவதானித்து, நச்சென்று பதிவாக்கியிருக்கும் இயக்குனரை மலர்ச்செண்டு கொடுத்து வரவேற்கலாம்.

புதுமுக நாயகன் அதர்வா அட்டகாசம். அழகாகவும் இருக்கிறார். கொஞ்சம் சதைபோட்டு ஆக்‌ஷனில் இறங்கினால் ‘பஞ்ச் டயலாக்’ எல்லாம் அடித்து மிகவிரைவில் நாளைய முதல்வர் ஆகிவிடலாம். சமந்தா. வாவ். குட்டிக் கண்கள். சின்ன உதடுகள். கூர்மையான நாசி. குள்ளமாய், கைக்கு அடக்கமாய். பார்த்த்துமே கன்னத்தைக் கிள்ளி கொஞ்சத்தூண்டும் அழகோ அழகு.

கதையைப் பற்றி பெரியதாக மெனக்கெடவில்லை. ‘காதல்’ படங்களுக்கு கதை எதற்கு? விறுவிறுப்பான திரைக்கதை போதுமே. இந்த ஃபார்முலாவை அப்படியே பிடித்துக்கொண்டு மாஞ்சா போட்டிருக்கிறார்கள். ஆடியன்ஸுக்கு புதுசாக எதையாவது காட்டவேண்டுமென்ற ஆர்வத்தில் குஜராத் காத்தாடி திருவிழாவை காட்டியிருக்கிறார்கள். அவ்வளவாக ஈர்க்கவில்லை.

சமீபத்தில் வந்து பெரிய வெற்றி பெற்ற வெண்ணிலா கபடிக்குழுவின் க்ளைமேக்ஸ் ஷாக் டெக்னிக்கை இயக்குனர் தேர்ந்தெடுத்த்து பெரிய துரதிருஷ்டம். படத்துக்கு பெரிய திருஷ்டி க்ளைமேக்ஸ். ஹீரோ மீது அனுதாபம் வருவதற்குப் பதிலாக இயக்குனர் மீது ஆத்திரம்தான் வருகிறது.

பாணா காத்தாடி – க்ளைமேக்ஸ் வரை தாக்குப்பிடித்து, கடைசிநொடியில் டீலில் அறுபடுகிறது!

16 கருத்துகள்:

 1. பாஸ்,

  யுவன் ஷஙர் ராஜா மியூசிக் பற்றி நீங்கள் ஏன் எழுதவில்லை ?

  பின்னணி இசை & 4 பாடல்கள் அருமை.

  பதிலளிநீக்கு
 2. //வழக்கொழிந்துக் கொண்டிருக்கிறது//
  ஒற்று மிகுமா தல? ( நாங்களும் கண்டுபிடிப்போம்ல மிஸ்பேக்!!!)

  எனக்கு ஒரு ஜோக் ஞாபகம் வருது.. " பெண்களுக்கு 'ச்' வேணுமா வேண்டாமா"ன்னு

  பதிலளிநீக்கு
 3. //புரட்சிப்புயல் முரளி//

  அப்போ வைகோ??!!!

  பதிலளிநீக்கு
 4. //கொஞ்சம் சதைபோட்டு ஆக்‌ஷனில் இறங்கினால் ‘பஞ்ச் டயலாக்’ எல்லாம் அடித்து மிகவிரைவில் நாளைய முதல்வர் ஆகிவிடலாம் //

  அப்டின்னா இப்பல்லாம் இந்தி, இங்கிலீசு இத்யாதி எதிர்ப்புப் போராட்டம், அப்புறம் திடீர்னு மேடையில வெச்சு வீரவாள் கொடுத்து திரும்ப வாங்கி போஸ் கொடுக்குறது இதெல்லாம் தேவையில்லையா?!!!!!

  பதிலளிநீக்கு
 5. தோழர் விந்தைமனிதன்!

  நாலு பின்னூட்டங்கள் தேவையில்லையே? ஒரே பின்னூட்டமாகவே இதை போட்டிருக்கலாம். தேவையின்றி பின்னூட்டங்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.

  பொதுவாக ஒவ்வொரு லைனையும் தனித்தனி பின்னூட்டமாக இட்டால் நான் பப்ளிஷ் செய்வதில்லை என்பதை இங்கே தகவலுக்காக தெரிவித்துக் கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
 6. விமர்சனம் நன்றாக இருக்கிறது. கமல் படங்களிலும் 'மெட்ராஷ் பாஷை' நன்றாக இருந்திருக்கிறது என்று நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 7. Hi Yuva,

  Neenga Kalavani padatha pukazhthatha padichuttu, antha padatha paakanum nu rumba avaloda poi paarthen..but that didnt impress me... Konjam emanthuten... athe maathiri ippo intha padathoda vimarsanatha padichen..Let me see how it is... :-)

  -SweetVoice (SV)

  பதிலளிநீக்கு
 8. ஸ்வீட் வாய்ஸ் அவர்களே!

  உங்கள் டேஸ்ட் புரிகிறது. நீங்கள் சினிமா விமர்சனங்கள் வாசிக்க ஏதுவான சைட் எங்கள் அண்ணன் ஊனாதானா அவர்களின் சைட்தான்.

  அண்ணனோட சைட் : http://truetamilans.blogspot.com

  அங்கே சென்று ஓரிரு சினிமா விமர்சனங்களை சாம்பிள் பார்த்து செட்டில் ஆகுக. நல்வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 9. சமந்தா. வாவ். குட்டிக் கண்கள். சின்ன உதடுகள். கூர்மையான நாசி. குள்ளமாய், கைக்கு அடக்கமாய். பார்த்த்துமே கன்னத்தைக் கிள்ளி கொஞ்சத்தூண்டும் அழகோ அழகு.

  overall i like ur review, but this paragraph was really amazing... "I guess we both have same taste " ? :)

  பதிலளிநீக்கு
 10. லக்கி சார்,

  Authentic மெட்ராஸ் பாஷை வேண்டுமென்றால்

  1 சில பழைய மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களைப் பார்க்க வேண்டும்.

  2 சில தேங்காய் மற்றும் சுருளி படங்களைப் பார்க்க வேண்டும்.

  3 ஷோபா நடித்த இயக்குனர் துரையின் 'பசி' பார்க்க வேண்டும்.

  நன்றி!

  சினிமா விரும்பி

  பதிலளிநீக்கு
 11. Enna sir, Nenga romba buzyya erukinganu nenaikuran !! ...that's why you have started the Cinema review. !! however i am big fan of your cinema review.
  In today's review, you have discussed about Chennai tamil and the style its been spoken. that's was really amazing...first time on internet for that matter even on any media.
  No body as differentiated the exact Chennai tamil ...What u said is absolutely right, for sure need to kill " loose mohan" for too much of exachurated language.

  And i also like the way you pot rate atharva & heroine ...sama comments thala ,..!! super appu.

  பதிலளிநீக்கு
 12. நல்லா இருக்கு lucky!

  இதையும் படித்துப் பாருங்கள்:
  http://konjampesalam.blogspot.com/2010/08/blog-post.html

  பதிலளிநீக்கு
 13. கண்டிப்பாக பார்க்கவேண்டும்.
  /கொஞ்சம் சதைபோட்டு ஆக்‌ஷனில் இறங்கினால் ‘பஞ்ச் டயலாக்’ எல்லாம் அடித்து மிகவிரைவில் நாளைய முதல்வர் ஆகிவிடலாம் //

  நச்

  பதிலளிநீக்கு
 14. நல்ல விமர்சனம். இதிலிருந்து கிளைமாக்ஸ் கொஞ்சம் சோகம்ன்னு தோனுது.நமக்கு ஒத்துவராது.

  அப்புறம் போட்டோ.. நல்லாயிருக்கு:)

  பதிலளிநீக்கு
 15. //களவாணிக்குப் பிறகு வரவேற்கப்பட வேண்டிய இன்னொரு மீடியம் பட்ஜெட் படம்.//
  சரியான காமெடி லைன், இன்னும் எத்தனை நாளைக்குதான் கதாநாயகி கதாபாத்திரத கேணச்சி மாதிரி காட்டுவானுன்களோ

  பதிலளிநீக்கு