5 ஆகஸ்ட், 2010

உல்டா!

‘உல்டா’ என்றொரு அழகிய தமிழ் சொல்லாடலை என்னுடைய பதின்ம வயதுகளில் அடிக்கடி கேட்டு சிலாகித்திருக்கிறேன். அப்போதெல்லாம் ஏதாவது வித்தியாசமான காட்சிகள் சினிமாத் திரையில் தெரிந்தால், அப்படியே இங்கிலீஷ்லேருந்து ‘உல்டா’ பண்ணிட்டாண்டா என்று ஸ்பாட்டிலேயே கண்டுபிடித்து ரசிகர்கள் நொங்கெடுத்து விடுவார்கள்.

இதுமாதிரியெல்லாம் நொங்கெடுக்க ‘உல்டா’ ஒன்றும் தீண்டாமை மாதிரி பாவச்செயல் அல்ல. ‘உல்டா’ என்றொரு தொழில்நுட்பம் இல்லாது போயிருந்தால் விஜயகாந்த் இங்கே புரட்சிக்கலைஞர் ஆகியிருக்கவே முடியாது. தென்னாட்டு மைக்கேல் ஜாக்சனாக பிரபுதேவா உயர்ந்திருக்க முடியாது. கமல்ஹாசன் காட்ஃபாதர் ஆகியிருக்க மாட்டார். ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ஆகியிருக்க வாய்ப்பிருந்திருக்காது.

90களில் இதுபோல ’உல்டா’க்களை கண்டறிந்து கட்டுரை எழுதுவது இதழியலின் அத்தியாவசியத் தேவையாகக்கூட இருந்ததுண்டு. ‘வெண்ணிலவே வெண்ணிலவே’ பாட்டு ஹிட் ஆனபோது, மெட்ரோப்ரியா கூட குமுதத்தில், அப்பாடல் எந்த ஆங்கிலப் படத்திலிருந்து பிட் அடிக்கப்பட்டது என்று எழுதியிருந்தார். ‘உல்டா’ காட்சிகளை அமைப்பதில் வல்லவரான இயக்குனர் வசந்தே கூட வெறுத்துப் போய் ‘உல்டா’ என்ற பெயரில் ஒரு அருமையான சிறுகதையை விகடனில் எழுதியிருந்ததாக ஞாபகம்.

அமெரிக்க லத்தீன் இலக்கிய ரசனை கொண்ட என்னுடைய வாசகர்களே! மேற்கண்ட மூன்று பாராகிராப்புகளின் மூலமாக நான் உங்கள் மனதுக்குள் புகுந்து, உங்கள் மனோவோட்டத்தை மாற்ற முயற்சிக்கிறேன் என்பதை இன்னேரம் புரிந்துகொண்டிருப்பீர்கள். நான் ஆயிரக்கணக்கான இலக்கியங்களை படைத்து சோர்வு அடைந்துவிட்டிருப்பது உங்களுக்கு தெரியும்.

சோர்வடைந்தும் தொடர்ச்சியாக பிரிண்டிங் மிஷின் மாதிரி நான் படைப்புகளை படைத்துக்கொண்டே போவதற்கு நான் காரணமல்ல என்பதை நீங்கள் அவசியம் புரிந்துகொள்ள வேண்டும். என்னுள் மார்க்குவேஸும், டால்ஸ்டாயும், தஸ்தாவேஸ்கியும், இன்னும் ஏகப்பட்ட இலக்கிய அஸ்கு புஸ்குகளும் பேயாய் இறங்கி, புயலாய் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

ஏன் என்னால் மட்டும் உலகின் தலைச்சிறந்த எழுத்தாளன் ஆகமுடிந்திருக்கிறது, உங்களால் ஏன் முடியவில்லை என்று தீவிரமாக ரூம் போட்டோ, பாம் போட்டோ யோசித்துப் பாருங்கள். ஏனெனில் நீங்கள் நானில்லை. நான் நினைத்தாலும் அழித்துவிடமுடியாது என்னுடைய பிரபலத்துக்கு காரணமென்ன? ஏனெனில் நான் நீங்களில்லை.

தமிழின் முன்னணி பத்திரிகைகளும், தெலுங்கு பத்திரிகைகளும், கன்னட, மலையாள, அரபி, ஹீப்ரு, லத்தீன், ஜெர்மானிய, பிரெஞ்சு, அல்பேனிய, ஆப்ரகாமிய மற்றும் மூவாயிரத்து சொச்ச மொழிகளில் வெளிவந்துக் கொண்டிருக்கும் பத்திரிகைகளும், அம்மொழிகளில் எழுதிக் கொண்டிருக்கும் எழுத்தாளர்களும் என்னுடைய எழுத்துகளை ‘உல்டா’ அடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அவ்வப்போது கண்டறிந்து எனக்கு மின்னஞ்சல் அனுப்பிக் கொண்டிருக்கிறீர்கள்.

உல்டா தொடர்பான இதுபோன்ற மின்னஞ்சல்கள் எனக்கு ஒரு நாளைக்கு ஒரு லட்சமாவது வருவதால், கூகிள் நிறுவனம் என்னுடைய மின்னஞ்சலுக்கான இடத்தை ஒரு லட்சம் ஜிகா பைட்டாக உயர்த்தியிருக்கிறார்கள். ஷேக்ஸ்பியர் கூட அடையமுடியாத உயரமிது.

இதைப்போலவே என்னைப்போன்ற நோபல்தன்மை கொண்ட மாற்றுமொழி சமகாலப் படைப்பாளிகளுக்கும் அவர்களது படைப்பை நான் உல்டா அடிப்பது தொடர்பாக, அவரவரது ரசிகர்கள் அவரவர்க்கு மின்னஞ்சல் மழை பொழிந்துக் கொண்டிருப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன். அவர்கள் நானாக முடியாது என்றாலும் அவர்களும் எழுதுகிறார்கள் என்றவகையில் அவர்களை மதிக்கிறேன்.

இதுவரையில் இப்பதிவில் பதியப்பட்ட 280 வார்த்தைகளை வாசித்ததில் உங்களுக்கு ஒன்று புரிந்திருக்கும். இதுதான் உண்மை. பேருண்மை. இதை நேரிடையாக ஒப்புக்கொள்ள எனக்கு தயக்கமோ, வெட்கமோ, அருவருப்போ, ஆனந்தமோ, அகஞானமோ, புறத்தேடலோ, வேறு எந்த கருமாந்திரமோ தேவைப்படவில்லை. “உல்டா இன்றி அமையாது உலகு”

15 கருத்துகள்:

 1. ஐ உ(ல்)ட்டாலக்கடி!

  உல்டாவுக்குள்ளே இவ்வளவு விஷயம் இருக்கா!!  அன்புடன்,
  சுவாசிகா
  http://ksaw.me

  பதிலளிநீக்கு
 2. லக்கி உல்டாவை பத்தி உண்மைய சொல்லி இருக்கிங்க....

  பதிலளிநீக்கு
 3. எங்கேயோ கேட்டகுரல் மாதிரி இருக்கே! ஏதாவது உள்,வெளி,சைடு,நடு, முன், 'பின்' குத்துக்கள் இருக்கா????

  பதிலளிநீக்கு
 4. ///உங்களால் ஏன் முடியவில்லை என்று தீவிரமாக ரூம் போட்டோ, பாம் போட்டோ யோசித்துப் பாருங்கள். ///

  இதெல்லாம் தப்பு இல்லீங்களா ...???

  பதிலளிநீக்கு
 5. ///இதைப்போலவே என்னைப்போன்ற நோபல்தன்மை கொண்ட மாற்றுமொழி சமகாலப் படைப்பாளிகளுக்கும் அவர்களது படைப்பை நான் உல்டா அடிப்பது தொடர்பாக, அவரவரது ரசிகர்கள் அவரவர்க்கு மின்னஞ்சல் மழை பொழிந்துக் கொண்டிருப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன். ///

  ஆமாங்க.. நான் என்னோட மெயில் படிக்கரக்குனே ஒரு லட்சம் பேர நியமித்திருக்கிறேன்..!!

  பதிலளிநீக்கு
 6. உல்ட்டாவ பத்தி உல்ட்டாவா இல்லாம உண்மையா சொல்லியிருக்கீங்க தலைவா ...

  பதிலளிநீக்கு
 7. //‘உல்டா’ ஒன்றும் தீண்டாமை மாதிரி பாவச்செயல் அல்ல. ‘உல்டா’ என்றொரு தொழில்நுட்பம் இல்லாது போயிருந்தால்...//

  சரியா சொன்னீங்க... ("உல்டா" வுக்கு சரியான தமிழ் பதம் "தழுவல்" தானே??? சரியா???)

  பதிலளிநீக்கு
 8. ஒருவர் எழுதிய ஒரு வரி.. எப்படியெல்லாம் உல்டாவாக்கி பதிவாகிறது.. லக்கி.. செம பகடி.. சிலருக்கு புரியவில்லையோ..?

  பதிலளிநீக்கு
 9. “உல்டா இன்றி அமையாது உலகு”

  பதிலளிநீக்கு
 10. 'உட்டாலக்கடி'க்கும், 'உல்டா'விற்கும் என்ன வேறுபாடு ??
  யாரேனும் உதவுக ??

  பதிலளிநீக்கு
 11. சூப்பர் லக்கி பாஸ்!
  நல்லாவே புரியுது... ஆனா ஏன்...
  :)

  பதிலளிநீக்கு