July 17, 2010

தில்லாலங்கடி - திரைவிமர்சனம்


தெலுங்கில் பெரும் வெற்றி பெற்ற ‘கிக்’ படத்தின் ரீமேக். சிங்கம் வெற்றிக்குப் பிறகு சன் பிக்சர்ஸ் வெளியிடும் படம். ரீமேக் கிங் ராஜாவும், அவரது தம்பி ரவியும் மீண்டும் இணையும் படம். எனவே பெரிய எதிர்ப்பார்ப்புக்கு உள்ளான படம். கிக் அடித்தார்களா இல்லை டக் அடித்தார்களா என்று பார்ப்போம்.

தன் நண்பனின் திருட்டு காதல் திருமணத்துக்கு உதவுகிறேன் பேர்விழி என்று, அவர்களின் ப்ளான் எல்லாவற்றையும் பெண்ணின் அம்மாவுக்கு தெரியபடுத்தி, கடைசி நேர சேஸிங், குழப்படி எல்லாவற்றையும் மீறி திருமணத்தை நடத்தி வைக்கிறான். ஏன் இப்படி செய்தான் என்று கேட்டால் “சும்மா ஓடி வந்து கல்யாணம் செய்து கொண்டால். அதிலென்ன கிக் இருக்கும் அதனால் தான் என்கிறான். இப்படி தான் செய்யும் பிரதி விஷயங்களிலும் கிக்குக்காக செய்யும் புத்திசாலி, ஜெயம்ரவி.

காதலியின் பிரிவிற்கு பிறகு அவன் மிகப் பெரிய கொள்ளைக்காரனாய் ஆக, அவனை தேடி போலீஸ் ஆபிஸர் ஷாம் அலைய, திருடன் ரவிக்கும், போலீஸ் ஷாமுக்கும் நடக்கும் கேட் & மவுஸ் கேமில் யார் வெற்றி பெற்றார்கள், ஏன் ரவி திருடனானான்?. ஹீரோயினுக்கும் அவனுககும் திருமணம் நடந்ததா? என்பது தான் கதை.

ரவி வழக்கம் போல அலட்டி கொள்ளாமல் மொன்னையாய் நடித்திருகிறார். படம் முழுக்க காமெடி செய்ய முயன்றிருக்கிறார். வரவில்லை. க்ளைமாக்ஸ் காட்சிகளில் கொஞ்சம் நடிக்க முயற்சி செய்திருக்கிறார்.

தமன்னா இன்னும் இன்னும் இளைத்துக்கொண்டே போகிறார். அழகாய் இருக்கிறார். ரவிக்கும், அவருக்கும் நடக்கும் காதல் போட்டி காட்சிகளில் நடிக்கவும் செய்கிறார். மனதை திறந்து காட்டவும் செய்கிறார்.

ரவியை துரத்தும் போலீஸ் ஆபீஸராய் 12பி ஷாம். அந்த வேடத்துக்கு அருமையாய் பொருந்தியிருக்கிறார். ஆனால் அவரது பேபி வாய்ஸ்தான் சொதப்புகிறது. அது தான் அவ்வளவாக பொருந்தவில்லை.

வழக்கம் போல் வடிவேலு தூள் பரத்துகிறார். அதிலும் ரவியிடம் மாட்டி கொண்டு அவர் படும் பாடும், அவரது ரியாக்‌ஷனும்.. தமன்னா ரவியை வெறுப்பேற்ற இவரை காதலிப்பதாய் சொல்ல, ரவியிடமே ஐடியா கேட்டு அது ஒவ்வொரு முறையும் சொதப்ப, காதல் வயப்படும் போதெல்லாம் பின்ணனியில் வயலின் வாசிக்கும் ஆட்கள் என்று சரி காமெடி.

ராஜசேகரின் ஒளிப்பதிவில் குறையொன்றுமில்லை. யுவன்ஷங்கர்ராஜா இசையில் மூன்று பாடல்கள் சூப்பர். இரண்டு பாடல்கள் ஓகே. ஒரே ஷாட்டில் படமாகியிருக்கும் பாடல் இப்படத்தின் ஸ்பெஷல் அட்ராக்‌ஷன் என்று சொன்னால் மிகையாகாது.

வழக்கமாய் அட்சரம் பிசகாமல் தெலுங்கு படங்களையே அப்படியே டிட்டோவாக இயக்கும் ஜெயம்ராஜா, இம்முறையும் அதையே பின்பற்றியிருப்பது பெரிய லெட்டவுன். காதலுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் திரைக்கதை அமைந்திருக்கிறது. முதல் பாதி முழுவதும் ரவி, தமன்னா காதல் சம்பந்தபட்ட காட்சிகளில் திரைக்கதையின் வேகம் அருமை. இரண்டாவது பாதியில் நடுவில் திரைக்கதை தூக்கு போட்டு தொங்கினாலும், போலீஸ் ஆபீஸருக்கும், ரவிக்கும் இடையே நடக்கும் கேட் அண்ட் மவுஸ் கேம் இண்ட்ரஸ்டிங்க். அவர் ஏன் கொள்ளைகாரனாய் மாறினார் என்பதற்கான காரணம் அரத பழசு. அதே போல் க்ளைமாக்ஸ் கொள்ளை காட்சிகள் காதில் பூ.

தில்லாலங்கடி - ‘தில்’லாலங்கடி!


விமர்சனம் எழுத ஊக்கம் : நண்பர் கேபிள்சங்கர்

20 comments:

 1. விமர்சனம் அருமை! ஆனால் படம் இன்னும் வெளியாகவில்லையே?

  ReplyDelete
 2. தோழர் நேற்று நீங்களும் ப்ரிவீயூவிற்கு வந்திருந்தீர்களா? தமன்னாவுக்கு வலது புறம் அமர்ந்து படம் பார்த்துக்கொண்டிருந்தேன். உங்களை பார்க்கவில்லையே!

  ReplyDelete
 3. படம் வெளி வந்து விட்டதா ? இங்க ஆகலியே...

  ReplyDelete
 4. தோழர் அதிஷா!

  நான், கேபிள், தண்டோரா, வண்ணத்துப்பூச்சி, உண்மைத்தமிழன், ரமேஷ்வைத்யா ஆகியோர் ப்ரிவ்யூ பார்க்கலாம் என்று வெறுங்கையை வீசிக்கொண்டு வந்திருந்தோம். சீட் புல்லாகி விட்டது என்று சொன்னார்கள். எனவே நான் தமன்னா மடியிலும், கேபிள் ஜெயம்ரவி மடியிலும் உட்கார்ந்து படம் பார்த்தோம். மற்றவர்களெல்லாம் அவரவருக்கு கிடைத்த மடியில் உட்கார்ந்து படம் பார்த்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். நீங்கள் யார் மடியில் உட்கார்ந்திருந்தீர்கள்?

  படத்தின் ஃபுல் ஸ்க்ரிப்டையும் தெலுங்கில் இருந்து வாங்கி அண்ணன் உண்மைதமிழன் தமிழாக்கம் செய்து கொண்டிருக்கிறார். விரைவில் ஒரு வாரமோ, ஒருமாதமோ கழித்து ஒண்ணே கிலோ மீட்டர் நீளத்துக்கு விமர்சனமாக பதிவேற்றுவார்.

  ReplyDelete
 5. அது எப்படி யுவா? நீங்க தமன்னா மடியில உட்கார்ந்து படம் பார்த்தப்போ, தமன்னா வலதுபுறம் உட்கார்ந்து பார்த்த அதிஷாவ பார்க்க முடியாம போச்சு?

  யுவா, படத்தை தானே பார்த்தீங்க?

  ReplyDelete
 6. இப்ப என்ன,, காசு குடுத்து படம் பார்க்கலாமா வேணாமா? இப்பவே சொல்லிட்டிங்கன்னா புக் பண்ண வசதியா இருக்கும்.. தமன்னாவ இல்ல.. படத்தை தான்..

  ReplyDelete
 7. பின்னூட்டங்கள் சுவாரசியமா இருக்கு

  ReplyDelete
 8. //Blogger அதிஷா said...

  தோழர் நேற்று நீங்களும் ப்ரிவீயூவிற்கு வந்திருந்தீர்களா? தமன்னாவுக்கு வலது புறம் அமர்ந்து படம் பார்த்துக்கொண்டிருந்தேன். உங்களை பார்க்கவில்லையே!

  12:07 PM, July 17, 2010//

  இருட்டுல லக்கியை பார்த்து விட்டு தான் இந்த லந்தா..

  அது சரி லக்கி ஜெயம் ரவி உயிரோடு இருக்கிறாரா

  ReplyDelete
 9. லக்கி நான் நினக்கிறேன் நீங்க உட்கார்ந்து இருந்தது அதிஷாவின் மடியில்..அதான் அவர் இடது பக்கமே திரும்பி இருந்திருக்கிறார்.

  ReplyDelete
 10. சரி ஓட்டு.. கேபிள் டோட்டல் டாமேஜ்..:-))))

  ReplyDelete
 11. இன்னும் கொஞ்சம் எதிர்பார்க்குறேன்.. லக்கி உன்னிடமிருந்து.:)))

  ReplyDelete
 12. ஊஹூம்.. தல மாதிரி வரவில்லை தோழர். ஒரு வாக்கியப்பிழை கூட இல்லை. டைப்பிங் எரர் பத்தாது. இங்கிலிஷ் வார்த்தைகள் பத்தாது. இன்னும் நிறைய கத்துக்க வேண்டியதிருக்குது. :-))

  ReplyDelete
 13. அதிஷா செல்லம், நான் தமன்னாவுக்கு இடது புறம் உட்கார்ந்திருந்தேனே, கவனிக்கலையா என்னை.?

  ReplyDelete
 14. என்ன இப்படி கிளம்பிட்டாரு.....

  ReplyDelete
 15. முருகனடிமை12:45 PM, July 19, 2010

  எங்கியோ கேட்ட குரல்

  ReplyDelete
 16. ரவி வழக்கம் போல அலட்டி கொள்ளாமல் மொன்னையாய் நடித்திருகிறார். படம் முழுக்க காமெடி செய்ய முயன்றிருக்கிறார். வரவில்லை. //
  ஹிஹிஹி... பாவம். அழப் போறாரு.

  ReplyDelete
 17. @ஆமூகி\\ ஊஹூம்.. தல மாதிரி வரவில்லை தோழர். ஒரு வாக்கியப்பிழை கூட இல்லை. டைப்பிங் எரர் பத்தாது. இங்கிலிஷ் வார்த்தைகள் பத்தாது. இன்னும் நிறைய கத்துக்க வேண்டியதிருக்குது. :-))\\

  ரிபிட்ட்ட்ட்டேய் ...

  ReplyDelete
 18. படத்தை யாராவது பார்த்தீங்களாப்பா? நான் ரிசர்வ் பண்ணவா, வேணாமா புரியலயே...?

  யுவா, எனக்கு மட்டும் மெயில் பண்ணுங்க... அடுத்த ப்ரிவீயூ எங்க? ... லேட்டாதானே போகனும்...? கேபிள் கேஸ் மாதிரின்னா நான் வரல...

  ReplyDelete
 19. //அதிலும் ரவியிடம் மாட்டி கொண்டு அவர் படும் பாடும், அவரது ரியாக்‌ஷனும்.. தமன்னா ரவியை வெறுப்பேற்ற இவரை காதலிப்பதாய் சொல்ல, ரவியிடமே ஐடியா கேட்டு அது ஒவ்வொரு முறையும் சொதப்ப, காதல் வயப்படும் போதெல்லாம் பின்ணனியில் வயலின் வாசிக்கும் ஆட்கள் என்று சரி காமெடி.//
  ********************************
  அது என்ன சார் , உங்க விமர்சனமும், கேபிள் சங்கர் விமர்சனமும், அச்சுபிசகாமல்/ வரி விடாமல் அப்படியே ஒரே மாதிரி இருக்கு ...........

  http://cablesankar.blogspot.com/2010/07/blog-post_24.html

  ReplyDelete