21 ஜூன், 2010

புலிகள் வாழ்த்து - இணையப் புலிகள் நிலை என்ன?

நம் ஐபாடு புகழ் நவீன இணையப் புலிகளின் செம்மொழி மாநாட்டு புறக்கணிப்புக்குப் பின்னான அரசியலை ஏற்கனவே ஒரு பதிவில் சுட்டிக் காட்டியிருந்தோம். இம்மாநாடு கருணாநிதியால் நடத்தப்படுவது மட்டுமே அவர்களுக்குப் பிரச்சினை. ஈழத்தமிழர் துயரமெல்லாம் வெறும் சாக்கு என்பதே அப்பதிவில் நாம் அடிநாதமாக சொல்லியிருந்த விஷயம்.

குறிப்பாக டாக்டர் ராமதாஸ் திமுக பக்கமாக சாயும் நிலை கடந்த மாதம் ஏற்பட்டது. நம் இணையப்புலிகளின் செம்மொழி மாநாட்டு புறக்கணிப்பு ஸ்ருதி அப்போதே கொஞ்சம் குறைந்து காணப்பட்டது என்பதையும் இங்கே கணக்கில் எடுத்துக் கொண்டு இவர்களை இனம் காணவேண்டும்.

அடுத்ததாக மாநாட்டை வரவேற்று எழுதியவர்கள், பேசியவர்கள் அனைவரையும் பீட்ஸா, பர்கர் சாப்பிட்டபடியே ட்விட்டரிலும், பிளாக்கரிலும் தமிழின துரோகிகள் என்றும், பிரியாணி குஞ்சுகள் என்றும் முத்திரை குத்திக் கொண்டிருந்தார்கள்.

இப்போது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கு தமிழர்களின் அத்தாரிட்டியான புலிகள் அமைப்பே வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறது. கலைஞரும் இந்த அறிக்கையை மகிழ்ச்சியோடு வரவேற்று ‘உண்மை ஒரு நாள் வெளிவரும்’ என்று பஞ்ச் டயலாக் அடித்திருக்கிறார்.

புலிகளின் சம்பந்தப்பட்ட அறிவிக்கை வந்தபிறகு என்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்ட தமிழுணர்வாளர் ஒருவர், இவ்வமைப்பு கருணாநிதி ஏற்படுத்தியிருக்கும் புதிய விடுதலைப்புலிகள் அமைப்பாக இருக்கலாம் என்று ஐயம் தெரிவித்தார். மேலும் இது ‘ரா’வின் சதியாகவும் இருக்கக்கூடும் என்று அச்சமும் தெரிவித்தார். எனக்கென்னவோ அவ்வாறு தெரியவில்லை. புலிகளின் அதிகாரப்பூர்வ வானொலியான புலிகளின் குரலும், இது புலிகளின் அறிக்கையென்று யூன் 19 செய்திகளில் உறுதி செய்கிறது.

இச்சூழலில் நம் இணையப் புலிகள், விடுதலைப்புலிகள் அமைப்பையும் அதன் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களையும் தமிழினத் துரோகிகளாக அறிவிப்பார்களா அல்லது செம்மொழி மாநாட்டை வரவேற்பார்களா என்று ஏமாந்த தமிழுணர்வு சோணகிரிகள் சங்கத்தின் சார்பில் கேள்வி எழுப்புகிறோம்.

எனவே இணையப்புலிகளும் லெக்பீஸோடு பிரியாணி சாப்பிட கோவைக்கு வருவார்களா அல்லது வழக்கம்போல இணையத்தில் கண்ணறாவியாக கவிதைகள் எழுதுவார்களா என்று தெரிந்துகொள்ள ஆவலோடு காத்திருக்கிறோம்.

29 கருத்துகள்:

 1. இதைக்கேட்டு இப்போதே பல கட்சிகளுக்கு வயிற்றெரிச்சல் வரத்தொடங்கி விட்டது! இணையப் புலிகள் வழக்கம் போல தங்கள் ஆதங்கத்தை மாநாடு நடைபெறும்போது, வலைப்பூவில் கைவலிக்க தட்டிக் கொண்டிருப்பர் என்பது உறுதி! பாவம் Blogger-உம், Twitter-உம்.

  பதிலளிநீக்கு
 2. //இச்சூழலில் நம் இணையப் புலிகள், விடுதலைப்புலிகள் அமைப்பையும் அதன் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களையும் தமிழினத் துரோகிகளாக அறிவிப்பார்களா அல்லது செம்மொழி மாநாட்டை வரவேற்பார்களா என்று ஏமாந்த தமிழுணர்வு சோணகிரிகள் சங்கத்தின் சார்பில் கேள்வி
  எழுப்புகிறோம்.//

  KAATIRUNHU...KAATHIRUNTHU...KAALANGAL...POGUTHADI...

  பதிலளிநீக்கு
 3. கட்டுரை அருமை. செம்மொழி மாநாட்டுக்கு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 4. செம்மொழி மாநாட்டுக்கு வாழ்த்துச் சொன்ன விடுதலைப்புலிகளும் மாநாட்டுக்கு வருவார்களா?
  அவர்களுக்கு அனுமதி உண்டா?

  பதிலளிநீக்கு
 5. நண்பர் விநாயகமுருகன் அவர்களே!

  தங்கள் வலைப்பூவில் செம்மொழி குறித்து தாங்கள் எழுதியிருந்த துணுக்குச்செய்தி படித்தேன். அபாரம். உங்களுக்கும் வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 6. ஒரு விசயம் யுவகிருஷ்ணா
  செம்மொழி மாநாட்டை எதிர்த்தால் அவர்கள் புலிகளின் ஆதரவாளரா?


  ஒரு நிருபர் முன்பு ஒருமுறை கலைஞரிடம் ஒரு கேள்வி கேட்டார். அவர் ஆட்சியின் குறைபாடை பற்றி ஏதோ சொன்னதாக நினைவு. அதற்கு கலைஞர் அவர்களுக்கு வந்ததே கோபம். நிருபர் மேல் பாய்ந்தார். நீ என்ன ஜெயா டி.வி ரிப்போர்ட்டரா எ‌ன்று கேட்டார்.எப்படி இருக்கு பாருங்கள்?


  செம்மொழி மாநாட்டை எதிர்த்தால் கடந்த ஆட்சியில் தஞ்சையில்
  நடந்த உலகத்தமிழ் மாநாடு ஒழுங்கா என்று கேட்டு வாயை அடைத்துவிடுகிறார்கள். அந்த மாநாடு இதைவிட கேவலம் என்பது வேறு விசயம்..


  எனக்கு பீட்ஸா, பர்கர் சாப்பிடும் பழக்கம் இ‌ல்லை. கலைஞர் சொன்னது போல உண்மை ஒருநாள் வெளிவரும் எ‌ன்று சொல்லமாட்டேன். ஒருவேளை உண்மைகளும், தீர்ப்புகளும் 25 ஆண்டுகள் கழித்து வெளிவரலாம். ஆனா‌‌‌ல் அப்போது ஆண்டர்சன்கள் செவ்வாய் கிரகத்தில் எங்காவது குடும்பத்தோடு ஜாலியாக டூர் சென்றிருப்பார்கள். உண்மைகள் ஒருபோதும் வெளிவராது.


  செம்மொழி குறித்து நான் துணுக்குற்று எழு‌திய செய்தியை படித்த தங்களுக்கு இன்னொருமுறை நன்றி.


  எல்லாம் இன்னும் மூன்று நாட்களுக்குத்தானே. பிறகு எல்லாரும் வேலையைப் பார்த்துக்கொண்டு கண்றாவி கவிதைகள் எழுத போய்விடுவார்கள். அல்லது இணையத்தில் சவீதா பாபி பற்றி ஆராய்ச்சி செய்ய போய்விடுவார்கள். இதுவும் கடந்துப்போகும்.

  பதிலளிநீக்கு
 7. லக்கி,
  என்னப்பா எழுத்தாளர் இன்னும் கருத்து சொல்ல காணோம்? எதுக்கும் wiki evidence எடுத்து வைங்க . தொர கேக்கபோறாரு

  பதிலளிநீக்கு
 8. //எனவே இணையப்புலிகளும் லெக்பீஸோடு பிரியாணி சாப்பிட கோவைக்கு வருவார்களா அல்லது வழக்கம்போல இணையத்தில் கண்ணறாவியாக கவிதைகள் எழுதுவார்களா என்று தெரிந்துகொள்ள ஆவலோடு காத்திருக்கிறோம்.//

  http://kuzhali.blogspot.com/2010/06/blog-post_22.html

  :)

  //இச்சூழலில் நம் இணையப் புலிகள், விடுதலைப்புலிகள் அமைப்பையும் அதன் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களையும் தமிழினத் துரோகிகளாக அறிவிப்பார்களா அல்லது செம்மொழி மாநாட்டை வரவேற்பார்களா என்று ஏமாந்த தமிழுணர்வு சோணகிரிகள் சங்கத்தின் சார்பில் கேள்வி எழுப்புகிறோம்.//

  சோணகிரிகளுக்கு,
  http://govikannan.blogspot.com/2010/06/blog-post_22.html

  பதிலளிநீக்கு
 9. கருணா... கருணாநிதி ...சோனியா ...மன்மோகன் ...இவர்களின் ஆதரவாளர்கள் ...எதிர்பாளர்கள் ...எல்லோரும் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் ! இலங்கை தமிழர் மற்றும் இலங்கை சிங்களவர் பிரிவினையை மீண்டும் தூண்டாமல் ...அவர்களுக்கு எப்படி உதவ முடியும் என்று பாருங்கள் ! சும்மா துவேஷ பேச்சுக்களை பரிமாரிக்கொண்டிருந்தால் யாருக்கும் நன்மை கிடைக்காது !
  Ref: http://www.youtube.com/watch?v=BVTK7_QKHuE
  endrum anbudan..

  பதிலளிநீக்கு
 10. //இணையத்தில் கண்ணறாவியாக கவிதைகள் எழுதுவார்களா//
  21ஆம்தேதி 11மணிக்கு நடந்த கண்றாவிய பத்திதானே.

  பதிலளிநீக்கு
 11. 350 crores out. tamilzha wait and bear new taxes and price raise in all edible goods. tamilzhan illichchavayan. eththanaiyo adippadai vasathikal prachchinai irukka ippo ithu thevaiya?

  பதிலளிநீக்கு
 12. நீங்கள் அவமானப்படுத்த நினைப்பது யாரை... இன்றும் சொல்லுகிறேன்... தமிழனை கொன்று தமிழை காப்பற்ற முடியாது...

  பதிலளிநீக்கு
 13. மிகவும் அருமையாக சொல்லியுள்ளீர்கள்.. நான் தங்களின் முந்தய பதிவினை படித்தேன் .. நான் தங்களின் கருத்துக்களை வரவேற்கிறேன் ..

  பதிலளிநீக்கு
 14. நன்பர் லக்கி உங்களோட சந்தோசம் புரியுது...... வாழ்த்துக்கள் ஆனா நாளை தலைவர் வீட்டிற்கு கொண்டாட்ட நிகழ்வுக்குக் கூட புலிகள் அறிக்கை விடுவார்கள். இதில் ஆச்சரிப்பய என்ன இருக்கிறது....புலிகளின் பெயரால் பல காகிதப் புலிகள் உருவாக்கப்பட்டு விட்டார்கள்.

  பதிலளிநீக்கு
 15. குப்பன்_பண்ருட்டி11:00 முற்பகல், ஜூன் 23, 2010

  வந்துருச்சி கண்றாவி கவிதை.

  என்னவோ இந்த கவிதையால இணைய உலகத்தில் பொரட்சி வந்துட்ட மாதிரியும் செம்மொழி மாநாடு தோல்வியடைஞ்ச மாதிரியும் பிலிம் ..தாங்கலைடா சாமி

  இவரு அடிக்கடி சொல்ற மாதிரி இணைய உலகம் சிறிசு ராஜா...புரிஞ்சுக்கோ..வளந்துக்கோ..

  பதிலளிநீக்கு
 16. hi

  why dont u write an article abt tamil in internet age

  thr is an article in ju vi abt TACE- throw some light on it

  if sujatha were there rgt now he'd be the rgt person to discuss abt it to discuss technical terms which can be understood by common man

  i'm ashamed to write in english but i dont knw tamil typing. i hate transliteration. it is like speaking to your mother thru her sister :-)

  பதிலளிநீக்கு
 17. hi

  also y dont u start a discussion on things our edu minister should do to take tamil to next gen
  eg. mandatory tamil typing in schools, compulsory basic tamil/tamil literary appreciation in engineering/medical college.

  i dont know how many of us know to read tamil literature :-( even in anantha vikatan i never read valli's stuff because i cant read tamil 'seyyull'

  now being an IT person after yrs of work i have fullfilled my economic needs, travelled to places, finally i am in a place whr i stop n have a look at myself n search my identity. i see many of my colleages do the same. except for the language i speak n movies i dont have anything tamil arnd me. if "we" dont do anything on this another generation will be mislead that except for talking there is nothing to be proud of being tamil. i think u r getting my point - "we"should bring "tamil-belongingness" wht we shld do for that??? write an article on this pls

  பதிலளிநீக்கு
 18. தமிழா,என் இரத்தம் கண்டும் உன்னால் அரசியல் செய்யமுடிகிறதே...எப்படி? ஈழத்தவன் (ஈழத்தமிழன் அல்ல)

  பதிலளிநீக்கு
 19. தமிழ் எழுத்தாளர்கள் மற்றும் பதிப்பாளர்களின் பொருளாதார நிலைமை படு மோசமாக இருக்க 380 கோடிகளில் தமிழுக்கு மாநாடு. இது ஒரு நல்ல tragicomedy

  பதிலளிநீக்கு
 20. லக்கி,

  இந்த மாத பிரதோஷம் என்ன கிழமையில் வருகிறது.

  தமிழ்வானன்

  பதிலளிநீக்கு
 21. மக்களே,
  நிரம்ப நாட்களாக நானும் இந்த ஒலக சினிமா விமர்சனம் எதையாவது எழுதணும் என்றே நினைத்துக் கொண்டு இருந்தேன். இப்போது ஆரம்பித்தும் விட்டேன். இனிமேல் நான் ரசித்த ஒலக சினிமா காவியங்களை உங்களுக்கு பகிரவும் முடிவெடுத்துவிட்டேன்.

  இந்த வரிசையில் முதல் படமாக ஓல்ட் டாக்ஸ் Old Dogs 2009 என்ற படத்துடன் ஆரம்பித்துள்ளேன். இந்த படத்தை பொறுத்த வரையில் இந்த படத்தின் இயக்குனர் ஒரு முக்கிய காரணம். மேலும் படிக்க இங்கே செல்லவும்:

  வெடிகுண்டு வெங்கட்டின் ஒலக சினிமா

  பதிலளிநீக்கு
 22. ''தமிழா,என் இரத்தம் கண்டும் உன்னால் அரசியல் செய்யமுடிகிறதே...எப்படி? ஈழத்தவன் (ஈழத்தமிழன்)''

  இந்த பர்கர் இன மக்களின் (படுகர் இனமல்ல ) தொல்லை தாங்க முடியல்லப்பா

  பதிலளிநீக்கு
 23. Hi Dear
  We are eagerly waiting for your article regarding Chemmozhi Manadu Verti Katturai.

  பதிலளிநீக்கு
 24. தமிழுக்காகதானே மாநாடு நடந்தது, தமிழ் என்ன தழைத்து வளர்ந்துவிட்டதா...

  மாநாட்டில் உண்டு கொழித்தது கட்சியினரும், கருணாநிதி மட்டுமே!

  தமிழைப் புகழ்ந்து பாட தமிழ்நாட்டுக் கவிஞர் ஒருவர் கூட இல்லையே!!

  - ஜெகதீஸ்வரன்.
  http://sagotharan.wordpress.com

  பதிலளிநீக்கு
 25. மாநாட்டில் கலைஞரின் உமிழ் நீர் கூட தமிழ்நீர் என்று பெருமையோடு சொல்லிக்கொள்ளும் மானங்கெட்ட கவிஞர்களை விடவும். இணையப் புலிகளுக்கு மரியாதை அதிகம் தான்!.
  -ஜெகதீஸ்வரன்.
  http://sagotharan.wordpress.com

  பதிலளிநீக்கு
 26. தல ,ஒரு சிக்கல் ! என் தெலுகு நண்பர் கேட்ட கேள்வி இது ! LEAD என்ற ஆங்கில வார்த்தைக்கு தமிழில் என்ன வார்த்தை பொருத்தமாக இருக்கும் ? sales as in sales lead,prospective lead etc. உங்கள நம்பி வந்திருக்கேன் !

  பதிலளிநீக்கு
 27. பிஸாரே!

  மிகச்சரியாக மொழியாக்க முடியாது. ஆனால் ‘முன்னேற்றம்’ என்ற சொல்லை வைத்து காய்ன் செய்யலாம்.

  உதாரணத்துக்கு, நீங்கள் கொடுத்திருக்கும் ஆங்கிலப் பதத்தை ”விற்பனை முன்னேற்றத்தை உறுதி செய்பவராகவும், எதிர்கால வணிகத்தை பெருக்கும் திறன் கொண்டவராகவும்” என்றமாதிரியாக மொழியாக்கம் செய்யலாம்.

  எந்த காண்டெக்ஸ்ட்டில் அந்த சொல் வருகிறது என்பதைப் பொறுத்தே சரியாக மொழிமாற்ற முடியும்.

  பதிலளிநீக்கு
 28. நன்றி லக்கி ! என் மென்பொருள் நண்பர் ராமலிங்கம் இதற்கான சொல் :'துவக்கி' என்று அறிந்து வைத்துள்ளார்! செம்மொழியின் புதிய வார்த்தைகளை கற்று கொள்ளும் ஆவல் வந்து விட்டது!

  பதிலளிநீக்கு