31 மே, 2010

மாஞ்சா வேலு!

அந்த இயக்குனரை வைத்து தொடர்ச்சியாக இரண்டு ஹிட் படங்களை கொடுத்த தயாரிப்பாளர் அவர். மூன்றாவது படத்துக்கு திட்டமிடும்போது ஈகோ மோதல். படங்களின் வெற்றி இயக்குனருடையதா, தயாரிப்பாளருடையதா என்பது குறித்த சர்ச்சை. புது இயக்குனரை உருவாக்கி ஹிட் அடித்து காட்டுகிறேன் என்று தயாரிப்பாளர் விரலை சொடுக்குகிறார். வேறு தயாரிப்பாளரின் படத்தை இயக்கி நான் தலைநிமிர்ந்துக் கொள்கிறேன் என்று இயக்குனர் பதிலுக்கு பஞ்ச் டயலாக் அடிக்கிறார்.

அடுத்த தயாரிப்புக்கு மும்முரமாக கதை கேட்க ஆரம்பிக்கிறார் தயாரிப்பாளர். முந்தைய இயக்குனரின் அசிஸ்டெண்டாக இருந்த ஒருவர் கதை சொல்ல வருகிறார். கதையை கேட்ட தயாரிப்பாளருக்கு கடுமையான எரிச்சல். இதையெல்லாம் படமா எடுத்தா வேலைக்கு ஆகுமா?

மறுநாள் இரண்டாவதாக இன்னொரு இளைஞர் கதை சொல்ல வருகிறார். கதை பிரமாதம். உடனே ஆரம்பிச்சுடலாமா? ஹீரோவா சரத்குமாரை போடலாமா? பட்ஜெட்டை பத்தி கவலையே இல்லை! தயாரிப்பாளர் உற்சாகமடைகிறார்.

இளைஞர் மென்மையாக புன்னகைத்தவாறே சொல்கிறார். “நேத்து ஒருத்தரு சொன்னாரில்லை. அதே கதைதான் சார் இது. அவரு என்னோட நண்பர்தான். நல்லா படமெடுப்பாரு. ஆனா சரியா கதை சொல்ல தெரியாது. அவரை நம்பி வாய்ப்பு கொடுங்க!”

தயாரிப்பாளர் இவரை நம்பி அவருக்கு வாய்ப்பு கொடுத்தார். படம் சூப்பர் டூப்பர் ஹிட்!

படத்தின் பெயர் ‘ஜெண்டில்மேன்!’

முதலில் கதை சொன்ன இளைஞரின் பெயர் இன்னேரம் உங்களுக்கு தெரிந்திருக்கும். இரண்டாவதாக அதே கதையை தன் பாணியில் சொல்லி வாய்ப்பு வாங்கியவர் வெங்கடேஷ். வாய்வழியாக சினிமாவில் வேலை பார்ப்பவர்கள் மூலமாக சொல்லப்படும் கதை இது. நிஜமாவென்று தெரியாது.

வெங்கடேஷுக்கு மசாலா படம் மட்டும்தான் எடுக்கத் தெரியும் என்று இதுவரை அவர் எடுத்த எல்லா படங்களையும் பார்த்தால் தெரிகிறது. கொடுத்த பட்ஜெட்டில் கனகச்சிதமாக யார் கால்ஷீட்டையும் வீணாக்காமல் நறுக்கென்று படமெடுப்பவர் என்று கடந்த பதினைந்து ஆண்டுகளில் பெயரெடுத்திருக்கிறார். இவரை வைத்து படமெடுத்தால் லாபம் கொட்டுகிறதோ இல்லையோ, நஷ்டம் நிச்சயமாக இருக்காது என்று தயாரிப்பாளர்கள் நம்புகிறார்கள். அங்காடித்தெரு மூலமாக நல்ல நடிகராகவும் அவதாரம் எடுத்திருக்கிறார்.

எனவேதான் அருண்விஜய்யின் எதிர்காலத்தை வெங்கடேஷிடம் தந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். அருண்விஜய் திறமையான நடிகர். புத்தன், பாண்டவர் பூமி போன்ற படங்களில் அவரது நடிப்பாற்றல் நன்றாக வெளிபட்டிருந்தது. நடனமும் அருமையாக ஆடுவாரென்று ப்ரியம் போன்ற படங்களில் தெரிந்தது. சுந்தர் சி இயக்கிய முதல் படத்தின் ஹீரோ இவர். ஏனோ செண்டிமெண்டலாக பதினைந்து ஆண்டுகளாகியும் மேலே வரமுடியாமல் தவித்துக் கொண்டிருந்தார். தவம் படத்தின் விளம்பரப் பணிகளின் போது இவரது கமிட்மெண்டான உழைப்பை நேரிலேயே கண்டிருக்கிறேன்.

வெங்கடேஷ் - அருண் விஜய்யின் முந்தைய கூட்டணி படைப்பான ’மலை மலை’ ஒரு குறைமசாலா பிரசவம். ஆனாலும் பி அண்ட் சியில் நன்றாகவே ரீச் ஆனது. வெங்கடேஷ் மேஜிக். இதே கூட்டணியின் மாஞ்சாவேலு ஒரு முழுமையான மசாலாவாக வந்திருக்கிறது. இன்னும் ஓரிரண்டு படங்கள் இதே டெம்போவில் வருமானால் அருண் விஜய்யும் மிகச்சுலபமாக முன்னணிக்கு வந்துவிடலாம். மினிமம் கேரண்டி வசூல் நாயகனாகி விடலாம்.

கருப்பழகிகளை தமிழர்கள் சீண்டமாட்டார்கள், மும்பையின் சிகப்பு இறக்குமதிகளுக்குதான் கோயில் கட்டுவார்கள் என்றொரு தவறான கருத்தாக்கம் நிலவுகிறது. சரோஜாதேவி, சரிதா, நதியா, ரஞ்சிதா, ரோஜா, சிம்ரன்-னென்று ஏராளமான கிளியோபாட்ராக்களை கண்மூடித்தனமாக ஆதரித்து இந்த கருத்தாக்கத்தை ஏற்கனவே தமிழர்கள் கட்டுடைத்திருக்கிறார்கள். ஹன்சிகாவும் இந்த லிஸ்டில் சேரலாம் (இவர் கருப்பு என்றுதான் மாஞ்சாவேலுவை கண்டு யூகிக்க முடிகிறது)

சுடிதாரிலும், தாவணியிலும் சுமாராக இருப்பவர், திடீரென்று ட்ரீம்ஸ் சாங் டூபீஸ்ஸில் ஜெனிபர் லோஃபஸ், நவோமி கேம்பல் ரேஞ்சுக்கு பளபளவென ஃப்லிம் காட்டுகிறார். வெய்யிலில் டேனிங் ஆகாத அவரது நெஞ்சுப்பகுதி ரசிகர்களை அசரடிக்கிறது. இடையும் அமோகம். விஜய் அல்லது அஜித்தோடு ஒரே ஒரு படத்தில் புக் ஆனாலும் சடாரென ஓவர் நைட்டில் முன்னணிக்கு வந்துவிடலாம்.

படத்தைப் பற்றி..

ம்ம்...

மசாலா வேலு!

10 கருத்துகள்:

 1. சார் எல்லாம் ஓகே.. பட் ஹீரோயின்க்கு இவ்ளோ பில்டப் குடுத்துட்டு, இளைய திலகம், நவரசத்தப் பத்தியெல்லாம் ஒன்னுமே சொல்லலியே..

  பதிலளிநீக்கு
 2. எனக்கும் ஒரு சில காட்சிகளில் அவரது கருப்பு டோன் கிறக்கத்தை தந்தது.

  சொல்லப்போனால் என் இப்போதைய கனவுகண்ணி சுனைனா இன்னும் 5 வருடம் அக்ழித்து எப்படி இருப்பார் என்பது போல் இருக்கிறார்.

  படம்...உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

  எப்படிங்க கார்த்திக்கை பற்றி சொல்ல மறந்தீங்க?

  பதிலளிநீக்கு
 3. //வெய்யிலில் டேனிங் ஆகாத அவரது நெஞ்சுப்பகுதி ரசிகர்களை அசரடிக்கிறது//
  அப்புடினா எண்ணுக சாமியோவ் .....

  பதிலளிநீக்கு
 4. தனிக்காட்டுராஜா!

  டேனிங் பற்றி விளக்கி ஒரு பதிவுபோட ஆசைதான். ஆனாலும் பதிவுலகம் சற்றுகாலமாக பெண்ணியவாதிகள் மற்றும் ஆணாதிக்க எதிரிகளால் ஆக்கிரமிக்கப் பட்டிருக்கிறது. நாம் பாட்டுக்கு ஏதாவது எழுதப்போகம், முதுகில் ஒட்டுமொத்தமாக டின் கட்டிவிடுவார்களோ என்று அஞ்சித் தொலைக்க வேண்டியிருக்கிறது :-(

  பதிலளிநீக்கு
 5. நல்ல பதிவு,

  நன்றி அதிஷா.

  பதிலளிநீக்கு
 6. நல்ல பதிவு,

  நன்றி King Viswa .

  பதிலளிநீக்கு
 7. லக்கி,

  உங்களுக்கு இல்லாத கருத்து சுதந்திரமா அடிச்சி ஆடுங்க

  பதிலளிநீக்கு
 8. வெங்கடேஷ் படம்னா காமெடி நல்லா இருக்கும்.

  அத பத்தி சொல்லவே இல்லையே?

  பதிலளிநீக்கு
 9. கருப்பழகி லிஸ்ட்டில் நம்ப சினேகாவை விட்டுப்புட்டியே தலைவா.

  பதிலளிநீக்கு