26 மே, 2010

என் முதல் பயணம் – நந்தினி ஜே.எஸ்

சினிமாவில் துரதிருஷ்டவசமாக பெண் இயக்குனர்கள் ரொம்ப குறைவு. தமிழ் சினிமாவில் என்றில்லை. உலகளவிலேயே பெண் இயக்குனர்கள் மிக மிகக்குறைவானவர்களாகவே இருக்கிறார்கள். தமிழில் எத்தனை பெண்கள் படமியக்கி இருக்கிறார்கள் என்று கொஞ்சம் விரல் விட்டு எண்ணிப் பார்த்தோமானால் ஐந்து விரல்களுக்கு மேல் எண்ணுவது கொஞ்சம் சிரமம்.

சினிமா அதிநிச்சயமாக ஒரு ஆணாதிக்க உலகம்.

ஒரு பெண் படம் இயக்க வரும்போது என்னமாதிரியான பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும் என்பதை கற்பனை செய்துகூட பார்க்க இயலவில்லை.

'திருதிரு துறுதுறு' படத்தை இயக்கிய ஜே.எஸ்.நந்தினி சொல்கிறார்.

“பலர் என்னிடம் அடிக்கடி கேட்கும் கேள்வி… ‘ஒரு பெண்ணாக இயக்குனர் பணியில் வேலை செய்வது கஷ்டமாக இல்லையா?’ என்பதுதான். நான் வேலையில் ஈடுபட்டிருக்கும் போது என் gender’ரைப் பற்றி யோசிப்பதில்லை. ஒரு பெண்ணாக, பெண்ணின் பார்வையில் மட்டும் படங்களை இயக்குவதில்லை. ஒரு படத்தின் எல்லா கடினமான வேலைகளையும் மற்ற இயக்குனர்கள் செய்வது போல் நானும் இயல்பாக செய்கிறேன். ஒரு படப்பிப்பில் ஒரு இயக்குனர் எந்த அளவு தைரியத்துடன், நிதானத்துடன், ஆளுமையுடன் மற்றவர்களிடம் வேலை வாங்க வேண்டுமோ, நானும் அவ்வாறே செய்கிறேன். அதானால் மற்றவர்கள் எனக்கு எந்தப் பிரச்சனையும் கொடுத்ததில்லை. ஆரம்பத்தில் அஜ்மலுக்கோ மற்ற ஆண் பாத்திரங்களுக்கோ நான் ‘ஆண்’ போல் நடித்துக் காட்டும் போது, சுற்றியிருந்த எல்லோரும் வித்தியாசமாக வேடிக்கை பார்த்தார்கள். பின்பு அவர்களுக்கே பழகிப்போய் எல்லாம் சகஜமாகி விட்டது. முதலில் சந்தேகப்பட்டவர்களுக்குக் கூட என்னோட உழைப்பையும், உறுதியையும், திறமையையும் பார்த்த பிறகு நம்பிக்கை வந்து விட்டது.”

இதை வாசிக்கும்போது, அனேகமாக அவர் சந்தித்த பிரச்சினைகளை மிகவும் எளிமைப்படுத்தி சொல்வதாக எனக்குப் படுகிறது. ஒரு இயக்குனராக உருவெடுக்க பெண் சந்திக்கும் மன உளைச்சல்கள் கட்டுக்கடங்காததாக இருக்குமென்று நினைக்கிறேன். ஜே.எஸ்.நந்தினி இயக்கிய முதல் படம் எனக்கு பிடித்திருந்தது. விளம்பரத்துறை குறித்த சுமாரான அறிமுகத்தை வசந்த் ‘ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே!' படத்தில் கொஞ்சம் நெகடிவ்வாகவே கொடுத்திருந்தார். கிரியேட்டிவ் பிரிவில் பணிபுரியும் ஒரு தொழிலாளியின் பிரச்சினைகளை நகைச்சுவையாகவும், கொஞ்சம் விஸ்தாரமாகவும் நந்தினி வெளிப்படுத்தியிருந்தார்.

சமீபத்தில் வாசித்த மிக நல்ல கட்டுரையை அறிமுகப்படுத்துவதற்காகவே இந்த பில்டப். தோழர் ஒருவர் தொடங்கியிருக்கும் புதிய பல்சுவை இணையத்தளமான நறுமுகையில் ஜே.எஸ்.நந்தினியின் சுவாரஸ்யமான ஒரு பிரத்யேகக் கட்டுரை இடம்பெற்றிருக்கிறது. சினிமா ஆர்வலர்கள் மட்டுமன்றி எல்லோருமே வாசிக்கலாம்.

3 கருத்துகள்:

 1. எங்களை அறிமுகபடுத்தியற்கு நறுமுகை களம் நன்றி தெரிவித்துக்கொள்கிறது. நன்றி தோழர்!

  அன்புடன்,
  நறுமுகை.காம்

  பதிலளிநீக்கு
 2. நறுமுகை.காம் பெருவெற்றியடைய எனது வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 3. படம் பராவாயில்லை.க்ளைமேக்ஸ் காட்சிய பார்த்தால் இயக்குனரில் ஆண் என்ன பெண் என்ன என்று தான் சொல்லத்தோன்றும். சாதாரன மசாலா படம் போல தான் க்ளைமேக்ஸ் இருந்தது.

  பதிலளிநீக்கு