20 மே, 2010

ரமணா.. ரமணா..

இவர் சினிமா ரமணா இல்லை. சென்னை வானிலை ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குனர். இவர் பொறுப்பேற்றபின், மழைக்காலங்களில் இவரது பெயர் வானொலியிலும், தூரதர்ஷனிலும் உச்சரிக்கப்படாத நாளே இல்லை எனலாம். மழையை மழை என்று சொல்லலாம். இனி ரமணா என்றும் சொல்லலாம்.

புயல் வருமா மழை வருமா என்று மிகத்துல்லியமாக கணித்துச் சொல்லக்கூடியவர். இவரது கணிப்பு எல்லாம் சயண்டிஃபிக்காக கரெக்ட்டுதான். ஆனால் இவருக்கும் புயல் மழைத் துறைக்கு பொறுப்பேற்றிருக்கும் வருணபகவானுக்கும் ஏழாம் பொருத்தம். நம்மவரை ஏமாற்றி டகால்ட்டி காட்டுவதே வருணபகவானின் பொழைப்பாக போகிறது.

ரமணாவை ஏமாற்றுவதற்காகவே வங்கக்கடல் பகுதியில் கடுமையான மேகமூட்டத்தை வருணபகவான் அவ்வப்போது உருவாக்குவதுண்டு. அதைக்கண்டு உற்சாகமடைந்து அடுத்த இரண்டு நாட்களுக்கு இடைவிடாத மழை பொழியும் என்று ரமணா டிவியில் சொல்வார். உடனே ரமணாவுக்கு பழிப்பு காட்டும் விதமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு 108 டிகிரி வெய்யில் கொல்லு கொல்லுவென கொல்லும் விதமாக வெதரை வருணபகவான் மாற்றி வைத்து விடுவார். வானிலை ஆராய்ச்சி நிலையத்தின் கணிப்பு மாறுவதின் பின்னணி உண்மை இதுதான்.

வருணாவுக்கும், ரமணாவுக்கும் இது காலம் காலமாக நடந்து வரும் மரபுப்போர்.

இரண்டு நாட்களாக 'அழகிய லைலா' வங்கக் கடலோரமாக பிரேக் டான்ஸ் ஆடிக்கொண்டிருக்க, நம் ரமணாவை டிவியிலும், ரேடியோவிலும் காணலாம் என்று ஆவலோடு காத்திருந்த அவரது ரசிகர் மன்றத்தினருக்கு கடுமையான ஏமாற்றமும், மன உளைச்சலுமே பரிசாக கிடைத்தது. ரமணாவுக்கு பதிலாக ஒரு குழந்தை மழைச்செய்திகளை வானிலை ஆராய்ச்சி நிலையம் சார்பாக சொல்லிக் கொண்டிருக்கிறார். குழந்தை என்றால் Child அல்ல. அந்த அதிகாரியின் பெயரே அதுதான்.

கத்தரி வெய்யில் சுட்டெரிக்க வேண்டிய இந்த மே மாதத்தில் அதிசயமாக கோடைமழை, லைலா பிராண்டிங்கில் வந்தது எப்படி என்று நாம் புலனாய்வு செய்து பார்த்ததில் அதிர்ச்சிகரமான பின்னணித் தகவல்கள் நிறைய கிடைத்திருக்கிறது.

மழைக்காலத்தில்தான் வருணா, ரமணாவைக் காய்ச்சிக் கொண்டிருக்கிறார் என்று நினைத்தால் கோடைக்காலத்திலும் தன்னுடைய திருவிளையாடலை காட்ட ஆரம்பித்திருக்கிறார். நல்ல வெயில் காலமாயிற்றே என்று ரமணன் அவர்கள் தன்னுடைய மகள் திருமணத்துக்கு நேற்று தேதி குறித்திருக்கிறார். இது பொறுக்கவில்லை அவரது பரமவைரியான வருணபகவானுக்கு.

விஸ்வாமித்ரனின் தவத்தை மேனகையை வைத்து கலைக்க இந்திரன் முற்பட்ட அதே டெக்னிக்கை வருணபகவான் கையில் எடுத்துக்கொண்டிருக்கிறார். ரமணா இல்லத் திருமணத்தை சொதப்ப லைலாவை அனுப்பி வைத்திருக்கிறார். ரம்பா வந்தால் கூட அசந்துவிடாத மனஉறுதி கொண்ட நம் ரமணா தன்னுடைய வானிலை நுண்ணறிவை பயன்படுத்தி லைலாவை சென்னைக்கு வரவிடாமல் மசூலிப்பட்டணத்துக்கு துரத்தி அனுப்பி விட்டதாக தெரிகிறது.

லைலா மசூலிப்பட்டணத்துக்கு பயணப்பட்டாலும் தன்னுடைய சைடு எஃபெக்ட்டை நேற்று சென்னையில் காட்ட தவறவில்லை. இருப்பினும் கொட்டும் மழைக்கு இடையே ரமணா அவர்களின் மகள் திருமணம் வெற்றிகரமாக நல்லமுறையில் நடந்திருக்கிறது. வருணபகவானின் சதியும் அதிரடியாக முறியடிக்கப்பட்டிருக்கிறது. மாமனாரான வானிலை ஆராய்ச்சி நிலைய அதிகாரி ரமணன் அவர்களுக்கும், புதுமணத் தம்பதிகளுக்கும் நேற்றைய தினம் கொட்டும் மழையில் நனைந்து ஜல்ப்பு பிடித்தோர் சங்கத்தின் சார்பாக வாழ்த்துகள்!

புலனாய்வு செய்திக்கு உதவி : தட்ஸ்தமிழ்.காம்

16 கருத்துகள்:

 1. பாடாவதி, டகால்ட்டி போன்ற வார்த்தைகளின் யூசேஜ் அசரடிக்கிறது சகா...

  (பாடாவதி இதுல இல்ல.. வேம்புலியில்)

  பதிலளிநீக்கு
 2. ஜல்ப்பு பிடித்தோர் சங்கம், கோவை கிளையில் இருந்து - வாழ்த்துகள்(?????)

  பதிலளிநீக்கு
 3. நட்சத்திரம் பற்றிய பதிவோட எழுத்து நடையில பழைய துள்ளல் தெரியுதே.. நல்லாயிருக்கு :)

  பதிலளிநீக்கு
 4. பாடாவதி, டகால்ட்டி போன்ற வார்த்தைகளின் யூசேஜ் அசரடிக்கிறது சகா...

  (பாடாவதி இதுல இல்ல.. வேம்புலியில்)

  பதிலளிநீக்கு
 5. நல்ல நகைசிசுவை நடை.சுவாரஸ்யமாக இருந்தது.ரமணா படித்திருந்தாலும் விழுந்து விழுந்து சிரித்திருப்பார்.

  பதிலளிநீக்கு
 6. உங்க கட்டுரை அருமையாக உள்ளது. உங்ககிட்ட இருந்து எழுத்துநடையை கற்றுக்கொள்கிறேன்.நல்லா இருக்கு.

  பதிலளிநீக்கு
 7. அவர் பெயர் குழந்தை சாமி.

  பெரும்பாலும், வானிலை நிலையம், போஸ்ட் மாஸ்டர் ஜெனரல், அகில இந்திய வானொலி நிலையம் போன்றவற்றில் ஸ்ரீனிவாசன், ராமகிருஷ்ணன், காயத்ரி, ஷ்யாமளா போன்ற பெயர்களே கேட்டுப் பழகிய எனக்கு , குழந்தை சாமி, இசக்கி அம்மாள் பேரை கேட்டதும் மன மகிழ்ச்சி,

  எல்லாப் புகழும் வீ பி சிங்கிற்கே போய் சேரட்டும்.

  பதிலளிநீக்கு
 8. ராம்ஜி!

  இதுபோலவே இன்னொன்றையும் நீங்கள் கவனித்திருக்கலாம்.

  இந்த வருடம் +2வில் முதலிடம் வந்த மாணவன் தூத்துக்குடி பாண்டி.

  பத்து வருடங்களுக்கு முன்பாக சங்கரராமன், ரங்கராஜன், வித்யாஸ்ரீ போன்ற பெயர்களைதான் இந்த லிஸ்டில் பார்த்துக் கொண்டிருந்தோம்.

  பதிலளிநீக்கு
 9. //எல்லாப் புகழும் வீ பி சிங்கிற்கே போய் //சேரட்டும்.
  VP Singh 90 PM irunthar.

  Mr Kuzhunathaiku 50+ irrukum pola, so he might of joined in 80.

  Kannku Iddikuthuae

  பதிலளிநீக்கு
 10. //சங்கரராமன், ரங்கராஜன், வித்யாஸ்ரீ போன்ற பெயர்களைதான் இந்த லிஸ்டில் பார்த்துக் கொண்டிருந்தோம்.//

  விடுபட்ட சில பெயர்கள்.

  ராகவன்
  ராமசாமி
  சுந்தரேஷன்
  சேஷசன்
  கணபதி
  சுப்பிரமணியன்
  கிருஷ்ணமூர்த்தி
  பார்த்தசாரதி
  சாமிநாதன்
  சடகோபன்
  கிருஷ்ணமாச்சாரி
  குப்புசாமி (அய்யர் பேர் தான் ஒய்)

  இன்னும் நெறைய ... இருக்கு

  பதிலளிநீக்கு
 11. ரமணாவின் மகள் திருமணத்திற்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 12. சகா, யாரோ என்னுடைய கமெண்ட்டை போலி ஐடியில் போட்டு இருக்காங்க. பிளாகர் சிம்பல் கவனிங்க... :))

  பதிலளிநீக்கு
 13. Thanks for the comments on Director.
  [1] Well before the marriage itself Dr.Ramanan, Director, indicated the probability of rain in May. But 'KALYANA MANDABAM' was available on that day only
  [2] The other Director is Shri.KULANTHAIVELU. He is the first Tamilian participated in the Antartica Expedition.
  [3] VP Singh has nothing to do with Shri,Kulanthaivelu, since he joined department well before VP Singh regime.
  [4] any how very interesting indeed.

  பதிலளிநீக்கு