12 மே, 2010

எஸ்.எம்.எஸ்.


எஸ்.எம்.எஸ். எனப்படும் குறுஞ்செய்திகளின் அளவு சிறிதானாலும், சிறப்புகள் பெரிது. எந்த மாகானுபவர் இந்த தொழில்நுட்பத்தை கண்டுபிடித்தாரோ பாவம். விஜய் ரசிகர்களிடமும், அஜீத் ரசிகர்களிடமும் மாட்டிக்கொண்டு அல்லல் படுகிறது. கடந்த ஏழெட்டு வருடங்களாக இவர்களின் படங்கள் வெளியாகும்போதெல்லாம் எதிர்தரப்பு ரசிகர்களால் அனுப்பப்படும் குறும்பு எஸ்.எம்.எஸ்.களில் இன்பாக்ஸ் நிரம்பி வழிகிறது. ஒரு கட்டத்தில் இவ்வகையில் மொக்கைவகை எஸ்.எம்.எஸ்.களும் பல்கி பெருக ஆரம்பித்துவிட்டதால் மணி அடித்தாலே கிலியாகும் நிலை ஏற்பட்டுவிட்டது.

அஜீத்தின் மவுசு கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாகிவிட்டதால் சமீபத்தில் அசல் வெளியானபோது அவ்வளவு தொந்தரவில்லை. ஆனால் விஜய் இன்னும் பீக்கில் இருப்பதால் சுறா வெளியானதில் இருந்து எறாவாக வறுத்துத் தொலைக்கிறார்கள். அந்தப் படம் பார்த்த அனுபவமே திராவகக் குளியல் தரும் எரிச்சலை இன்னமும் தந்துகொண்டிருக்கும்போது, இந்த மொக்கை எஸ்.எம்.எஸ்.களால் கூடுதல் எரிச்சல் கிடைத்துக் கொண்டிருக்கிறது.

ஆயினும் கைதேர்ந்த எஸ்.எம்.எஸ்.ஸர்கள் சிலரின் படைப்புத்திறனை எண்ணி மலைக்காமல் இருக்க முடியவில்லை. உதாரணத்துக்கு ஒன்று கீழே. இதுபோல உங்கள் இன்பாக்ஸ்களில் இருக்கும் எஸ்.எம்.எஸ்.களை (இண்டரெஸ்டிங்கா இருந்தா மட்டும்) பின்னூட்டத்தில் தரலாம். சுறாவின் நூறாவது நாள் விழாவின்போது இவற்றை புத்தகமாக அச்சிட்டு விஜய்க்கு வழங்குவதாக உத்தேசம்.

மருத்துவமனையில் ஒரு பெரியவரும், டாக்டரும் பேசும் வசனங்கள்தான் ஒட்டுமொத்த குறுஞ்செய்தியும்.

பெரியவர் : டாக்டர், ப்ளீஸ் எப்படியாவது காப்பாத்துங்க.

டாக்டர் : தற்கொலை பண்ணிக்க அவன் விஷம் குடிச்சிருந்தாலோ, தூக்குலே தொங்கியிருந்தாலோ கூட பரவாயில்லை. விவரமா ‘சுறா'வைப் பார்த்திருக்கான். ப்ச்.. (கண்ணாடியை கழட்டிக்கொண்டே) மனசைத் தேத்திக்குங்க. எல்லாம் முடிஞ்சிடிச்சி...

பெரியவர் (கதறியவாறே) : ஒருவேளை இண்டர்வெல்லேயே தூக்கிக்கிட்டு வந்திருந்தா அவனை காப்பாத்தியிருப்பீங்களா டாக்டர்?

டாக்டர் : சான்ஸே இல்லை. ஓபனிங் சாங் முடிஞ்சதுமே உயிர் போயிட்டிருக்கும்னு நெனைக்கிறேன்!

25 கருத்துகள்:

 1. என் பதிவில் பின்னூட்டம் போடுவது யார் ?

  பதிலளிநீக்கு
 2. ///////டாக்டர் : சான்ஸே இல்லை. ஓபனிங் சாங் முடிஞ்சதுமே உயிர் போயிட்டிருக்கும்னு நெனைக்கிறேன்!//////

  சூப்பர் லக்கியாரே1

  பதிலளிநீக்கு
 3. what makes you think sura will run for hundred days? :-)

  பதிலளிநீக்கு
 4. SMS JOKE நன்றாக தான் உள்ளது ! ஏற்கெனவே சுறா பார்த்து ஏமாந்த விஜய் ரசிகர்களை மேலும் புண் படுத்த வேண்டாம் யுவா ! தங்களின் "சுறா "திரை விமரிசனமும் சற்று கார சாரமாய் உள்ளது .போதும் ! நான் விஜய் ரசிகன் அல்ல ! ஆனால் விஜய் யும் ஒரு காலத்தில் நல்ல காதல் படங்களை கொடுத்தவர் தான் யுவா !

  பதிலளிநீக்கு
 5. விஜய் ரசிகர்கள் எமனையும் ஏமாற்றுவார்கள்! போல!

  பதிலளிநீக்கு
 6. எனக்கு வந்த எஸ் எம் எஸ்;

  வாடிக்கையாளர்: எனக்கு விஷ பாட்டில் ஒண்னு வேணும், கொடுங்க?

  கடைக்காரர்: அதெல்லாம் தர முடியாதுங்க?

  வாடிக்கையாள்ர்: (சுறா பட டிக்கட்டை எடுத்துக் காட்டுகிறார்..)

  கடைக்காரர்: அட, ப்ரெஸ்கிரிப்ஷன் வெச்சிருக்கிங்களா... முதலிலேயே காட்டலாம்ல..

  பதிலளிநீக்கு
 7. ஆமாம் ஆமாம் நல்லா சொன்னீங்க

  பதிலளிநீக்கு
 8. டி. ஆர்.: டேய் சிம்பு, மார்க்கெட் போய் காய்கறி வாங்கிட்டு வாடா.
  சிம்பு: இப்போ நிலைமை சரி இல்லை. படம் பிளாப். அதனால ரசிகர்கள் கோவமா இருகாங்க. நான் போக மாட்டேன்.
  டி. ஆர்.:சேலை கட்டிட்டு போடா, யாருக்கும் தெரியாது.
  (சிம்பு சேலையில் மார்க்கெட்டில் போறார்)
  ஒரு பொண்ணு: நீங்க சிம்பு தானே?
  சிம்பு: எப்படி கண்டு பிடிச்சீங்க?
  பொண்ணு: நான் தன விஜய்.
  ----------------------------------
  ரன் எடுக்காமல் போனால் duck out
  டிக்கெட் எடுக்காம போனா without,
  கொசு கடிக்காமல் இருக்க Allout சுறா படத்துக்கு போனால் மவனே நீ Spot out.
  _--------------------------------
  Russians: We are living in -50 deg cool temp we are great

  Africans: We are living in 50 deg heat v are great

  Tamilan: We are living even after seeing 50 vijay films. Goyala yarkitta......
  -----------------------------------
  Ajit - chess vilaiyaada povom varingala?
  vijay - neega pou ground la wait pannunga naan shoe pottutu varean
  vijay rocks
  ----------------------------------
  Viajy to prabhudeva: Indha patu superah Iruke idha Namba Padathula
  Remake panalama
  Prabu Deva: Dei nasama ponavane Adhu Desiya Geetham da

  -----------------------------------
  Difference between kamal & vijay:
  Kamal acts in 10 diff role in one film(original).
  but vijay acts in same role in 10 different dupping films.
  -----------------------------------
  Ajith & vijay writing semester exam:
  vijay : Thala konjam answer kattunga
  Ajit: Hindi paper da idhu unnaku tamil exam da
  vijay: Parravala adha kattunga na tamila remake pannikuraen
  Thala: Idhuku picha edukalaam
  vijay: yevalavo panrom idhu panna maatomaa......
  -------------------------------
  vijay : Namma suntv mela case podanum

  Manager : Ethukku sir

  vijay : Ennoda aduthapadam hit aagumnu sonnatha, vilayatu seithil la pottu irukanga ....
  -----------------------------------Customer. Intha TV velai enna?

  Salesman: 1,00,000 sir

  Cus: Appadi enna special?

  Salesman: Tv la "vijay" program vanda aduve thana vera channel maridum

  பதிலளிநீக்கு
 9. Resume
  Ilaya Thalapathy Dr.Vijay Email: killthepeople@suicide.com
  Phone: +910000000000
  ________________________________________

  Career Object : To make the audience run away from theaters, gradually reduce the normal death rate and increase the suicide deaths.

  Preofessio'nil' Experience:
  • 21 years in Tamil Industry.
  • Junior Artist - 1988 (with 1 hit, 9 flops)
  • Mass roles- 1989(4 flops)
  • Lead role- 1996- till date( 4 hits, 46 flops)

  Acting Skills:
  • Jumping From One Big Building to another in Air (KURUVI)
  • Flying from inside the Sea (SURA)
  • Going With Lift inside the sea bed.Never ever seen Hollywood flick stunts. (KURUVI).
  • Reaching Finals witjout winnning semifinals (GHILLLI)
  Expected CTC: Min. 5 crores for each film

  Achievements: World Record, Limca Record and Pepsi Record in flops

  Role Model: My Self and Captain Vijayakanth,the Tiger of Tamil Nadu

  Project Details:
  1. Bike riding on ground to running Train and go to Pakistan from India with Parachute only.
  2. Climbing any mountain with hands.
  3. Pulling chair front and catching the runing flight.

  Leadership Skills:
  • Led a knife to attack the enemy hanging on the plane's shield.(VILLU)
  Special Attraction:
  1. Shoot People not only in movie, but outside also
  2. Having powerful eyes. (AADHI)
  3. Senseless talking in functions, interviews
  4. Hitting thigh and talking without opening the mouth(PUNCH DIALOGUES)


  Personal Details:

  Name: Vijay Joseph
  Father [WINDOWS-1252?](uncle)’s name: SA Chandrasekaran
  Age : 21yrs in Industry
  Weight: I Dont know Exactly.
  Sex: Intrested
  Hobbies: I am Not a Man to have Hobbies
  Languages known: English ( Eg: One day I went to a library and asked for a book "Psycho The Rapist".
  The Librarian searched for hours and came back ...slapped me and said,
  "Idiot, the book is called Psychotherapist ").

  பதிலளிநீக்கு
 10. காஸ்டமர்:இந்த டிவி என்ன விலை
  கடைக்காரர்:1 லட்ச்சம்
  கஸ்டமர்:ஏன்இவ்வளவு விலை

  காஸ்டமர்:இதில் விஐய் படம் போட்டால் ஆப் ஆகி விடும்

  பதிலளிநீக்கு
 11. :))))

  ஒரு காலத்தில் கங்குலி கூட இதற்கு இரையாகினார்...

  ஆனா ஹிஸ்டரி என்ன சொல்லதுன்னு, இதனால அவரக்ளின் புகழுக்கு அந்த பங்கமும் வரவில்லை. உச்சியில் இருப்பவரக்ளை இப்படி கேவலப்படுத்தி அதில் ஆனந்தபப்டுவது மனநோயாம்..

  ஹிஹிஹிஹி.. என்னலாம் சொல்ல வேண்டியிருக்கு????

  பதிலளிநீக்கு
 12. விஜய் படம் ரிலிஸ் ஆன, இந்த மாதிரி ஜோக்ஸ் தான் ஒரே லாபம்

  எனக்கு வந்த இரண்டு சுறா ஜோக்ஸ் எனது ப்ளாக் இல்...

  http://kanaguonline.blogspot.com

  பதிலளிநீக்கு
 13. வேட்டைக்காரன் பாத்து செத்தவன இப்போதான் கண்டு பிடிச்சீங்களா?

  பதிலளிநீக்கு
 14. //செந்தழல் ரவி 4:56 PM, May 12, 2010
  என் பதிவில் பின்னூட்டம் போடுவது யார் ?
  /

  நீங்க தான் ரொம்ப வருஷமா அதத்தானே பண்ணுறீங்க

  பதிலளிநீக்கு
 15. சமீபத்தில் என்னுடைய Exclusive நெருங்கிய தோழி ஒருவரை செல்போனில் தொடர்புகொண்டேன்.

  அதற்கு வந்த ரெக்கார்டட் மெஸ்ஸேஜ்.

  "நீங்கள் அழைக்கும் வாடிக்கையாளர் வேறு ஒருவருடன் தொடர்பில்
  இருக்கிறார். சிறிது நேரம் கழித்து முயற்சிக்கவும்."

  முதலுக்கே மோசமான்னு வண்டிய எடுத்துட்டு அவ வீட்டுக்கே போயிட்டேன்.
  நல்ல வேளை அப்படி எதுவும் இல்லை.

  ஆனால் தற்சமயம் அவள் நிஜமாகவே வேறு ஒருவருடன் தொடர்பிலிருக்கிறாள். கண்டுகாதீங்க!!!

  பதிலளிநீக்கு
 16. சமீபத்தில் என் நண்பர் ஒருவரை செட்டிநாடு ஹோட்டலுக்கு
  அழைத்துக்கொண்டு போய் "சுறா" புட்டு வாங்கி கொடுத்தேன்.

  பாதியிலே திடு திடுப்பென எழுந்து போய்விட்டார்.

  என்ன ஏது என்று விசாரித்ததில்

  பழக்க தோஷமாம்.

  பதிலளிநீக்கு
 17. orumura sura pakkarathumunnadi 100 murai yosi !

  pakka poita magane yosikka mudiadhu

  பதிலளிநீக்கு
 18. டாக்டர்: என்னப்பா? எப்படி அடி பட்டுச்சு?

  நோயாளி: பஸ்ல போறப்ப விஜய் படம் போட்டாங்க, தியேட்டர்னு நெனச்சு வெளிய வந்துட்டேன்..

  டாக்டர்: ????

  பதிலளிநீக்கு