29 ஏப்ரல், 2010

அஜால் குஜால் டிவி!

ஜோதியில் இப்போதெல்லாம் ‘பிட்டு' படங்கள் போடுவதில்லையே என்று நாம் ஏங்கிக் கொண்டிருக்க, கனடா அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துவிட்டது. உலகின் முதல் நேக்ட் நியூஸ் (அம்மணக்கட்டை செய்திகள் - செய்திவாசிப்பாளர்கள் 0% உடை அணிந்திருப்பார்கள்) சேனலை உலகத்துக்கு அர்ப்பணித்த நாடு. அடுத்ததாக முழுக்க முழுக்க அஜால்-குஜால் மேட்டருக்காகவே ஒரு டிவி சேனலையும் ரசிகர்களுக்கு தாரைவார்க்கப் போகிறதாம்.

வரும் அக்டோபர் மாதம் முதல் விண்ணிலிருந்து ‘பிட்டு' மண்ணுக்கு ஒளி-ஒலிபரப்பாகும். குஜாலுக்கு மொழி ஒரு தடையில்லை. எனினும் முதற்கட்டமாக கனாடாவில் வாழும் பிரெஞ்சு பேசும் க்யூபிக் மக்களுக்காக பிரெஞ்சு மொழியில் தனது ஒளிபரப்பை துவக்குகிறது வேனஸ்ஸா டிவி. அடுத்த ஆண்டிலிருந்து ஆங்கிலமும். ”பிரெஞ்சோ, ஆங்கிலமோ. குருமா ருசியா இருந்தா சரிதான்” என்று நாக்கை சப்பு கொட்டுகிறார் அந்த ஊரில் வசிக்கும் ஒரு உண்மை பிரெஞ்சுக்காரன்.

ஹை-டெபனிஷனில் வேனஸ்ஸா டிவியின் ஒளிபரப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டிருப்பதால் பலரும் கண்களை அகல விரித்துக் கொண்டு பெருத்த எதிர்ப்பார்ப்புகளோடு தயாராக இருக்கிறார்கள். நாடகங்கள், ஆவணப் படங்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்களாக நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டிருக்கின்றன. செக்ஸ் டிவியில் ரியாலிட்டி ஷோக்கள் என்று கேள்விப்பட்டதிலிருந்து பரபரப்புடன் கூடிய சூடு கோக்குமாக்காக க்யூபிக் வட்டாரத்தில் ஏற்பட்டிருக்கிறது.

”இவ்வளவும் ஓசியா?” என்று ஓசியில் ஒட்டடை அடித்துக் கொள்ளும் ஆர்வத்தோடு டொரண்டோவை சேர்ந்த கஞ்சன் ஜங்கா என்பவர் எழுப்பியிருக்கும் கேள்விக்கு, “இல்லை. மாதத்துக்கு பதினைந்து டாலர்” என்று ஆப்பு அடித்திருக்கிறது டிவி நிர்வாகம்.

நாட்டின் முதல் அஜால் குஜால் தொலைக்காட்சிக்கு க்ரீன் சிக்னல் காட்டிவிட்டாலும், வயிற்றில் கொஞ்சம் நெருப்பை கட்டிக்கொண்டே நடப்பவற்றை கவனத்தோடு பார்த்து வருகிறது Canadian Radio-Television and Telecommunications Commission. ”வன்முறையை காமிக்க கூடாது. அப்புறம் செக்ஸை ரீஜண்டா காமிக்கோணும்னு கண்டிஷன் போட்டிருக்கோம்” என்கிறார் அந்நிறுவனத்தை சேர்ந்த உயரதிகாரி ஒருவர். ஆயினும் இவரும் வரப்போகும் டிவி நிகழ்ச்சிகளை காணப்போவதில் பணிதாண்டிய ஆர்வத்தில் இருப்பதை அவரது உற்சாகத் துள்ளலின் மூலமாக அறியமுடிகிறது.

நிகழ்ச்சிகளுக்கான காண்டெண்ட் எங்கிருந்து பெறப்போகிறார்கள் என்பதில்தான் சிக்கல் நீடிக்கிறது. இருபது சதவிகிதம் லோக்கல் ஆட்களுக்கு இடஒதுக்கீடு கொடுத்தே தீரவேண்டுமாம். மீதியிருக்கும் எண்பது சதவிகிதத்தை கலிஃபோர்னியா அஜால் குஜால் இண்டஸ்ட்ரியான சாண் பெர்ணாண்டோ பள்ளத்தாக்கு பகுதியிலிருந்து இறக்குமதி செய்ய நிர்வாகம் திட்டமிட்டிருக்கிறது. அந்த பள்ளத்தாக்குதான் அமெரிக்காவின் பலான பொழுதுபோக்குத் தேவையை ஈடு செய்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை அமெரிக்க பலான சேனல்களை கேபிள் டிவி மூலமாக பார்த்து ரசித்து வந்த கனடிய ஜொள்ளர்கள் அக்டோபருக்காக வயது வித்தியாசமில்லாமல் தவமிருக்கத் தொடங்கியிருக்கிறார்கள். நம்ம ஊருக்கு இதெல்லாம் எந்த காலத்தில் கிடைக்குமோவென்று ஷகிலா, ரேஷ்மா மற்றும் மரியா ரசிகர்மன்ற கண்மணிகள் வாயில் விரலை சப்பிக் கொண்டு ஏங்கிக் கிடக்க வேண்டியதுதான்!

13 கருத்துகள்:

 1. ////ஆயினும் இவரும் வரப்போகும் டிவி நிகழ்ச்சிகளை காணப்போவதில் பணிதாண்டிய ஆர்வத்தில் இருப்பதை அவரது உற்சாகத் துள்ளலின் மூலமாக அறியமுடிகிறது.////

  நல்லாத்தான போயிட்டு இருந்துச்சு.

  அந்த டிவியின் இந்திய கிளை திறப்பு பற்றி ஏதேனும் செய்தி தெரிந்ததா?

  பதிலளிநீக்கு
 2. Lucky, canada adutha kattathuku poiducha? Apo any changes in their time zone? Add on info. Netla ithe pola thirantha veli live news channel irukku.but that also paid service than.

  பதிலளிநீக்கு
 3. நமக்கு தான் சன் டிவி இருக்கே... நித்தியானந்தா நிகழ்ச்சி போல அப்பப்ப காண்பிப்பாங்க.

  பதிலளிநீக்கு
 4. //ஷகிலா, ரேஷ்மா மற்றும் மரியா ரசிகர்மன்ற கண்மணிகள் வாயில் விரலை சப்பிக் கொண்டு ஏங்கிக் கிடக்க வேண்டியதுதான்!//

  சரிதானுகண்ணா...........
  இந்த தமிழ் பண்பாட்டு காவலர்கள் இருகரானுகளே .....இவனுகளும் எதையும் அனுபவிகமாட்டாணுக .....மத்தவனுகளையும் அனுபவிக்க விட மாட்டாணுக ............
  தமிழ் நாட்ல பொறந்தது ஒரு குத்தமா ............
  எப்படியோ இந்த இன்டர்நெட் யுகத்துல பொறந்ததால தப்புச்சமடா சாமி ..........
  சரி பல்லு இருக்கறவன் விதவிதமா பகோடா சாப்பிடறான்....இந்த பண்பாடு காவலர்கள் ..ஒரே ஒரு மெது வடைய காலம் பூரா சாப்பிடுகராணுக..........இதெலாம் கேக்க ஆளே இல்லையா ...........என்ன ஏன்டா இந்த கலுசடை பசகளோட படச்சே ஆண்டவா ............

  சரி இங்க இப்படி ஒரு டிவி ஆரம்பிச்சா ......... அதுல கூட கேமரா வைப்பானுக .......

  பதிலளிநீக்கு
 5. //செக்ஸை ரீஜண்டா காமிக்கோணும்னு கண்டிஷன்//


  ட்ரெஸ்சு போட்டு பண்ண சொல்லுவாங்களோ!
  காம்பயரிங்!

  பதிலளிநீக்கு
 6. கனடா.. எனடான்னு கேட்கிற தூரத்துல இருந்தா எவ்ளொ நல்லா இருக்கும்..

  ஆனா எனக்கு என்ன தோணுதுன்னா.. நிகழ்ச்சியை யாராவ்து ரெக்கார்ட் செய்து யூட்ய்பில் ஏற்றத்தான் போகிறார்கள். அடஹ்ற்குல் டிவி நிர்வாகம் யூட்யூபிடம் பேசி அழிக்காமல் இருக்கனும்

  பதிலளிநீக்கு
 7. வெளிநாடுகளில் ஸ்ட்ரிப் டீஸ் போர்னோ என்று பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாக நிறைய வழிகள் உண்டு. இந்தியாவில் தான் கலாசாரத்துக்கு உட்பட்டு சம்பாதிக்க வேண்டியிருக்கிறது. இலலியென்றால் கலாசார காவலர்கள் சும்மா விட மாட்டார்கள்

  1.நமது மருத்துவ கவுன்சில் தேசாயை போல்
  2. ஐ.பி.எல் இப்படி ......

  குஷ்புவுக்கு எதிராக 23 வழக்கு தொடர்ந்தவர்கள் மருத்துவ கவுன்சில் தேசாய்க்கு எதிராக குரல் கொடுக்கவில்லையே ஏன் தொண்டை கட்டிவிட்டதா?

  அதிக புகழ், குறைந்த செல்வாக்கு உள்ளவர்களை சீண்டி அரசியல் பண்ணும் தாக்கரே ராமதாஸ் அரசியல்வாதிகளால் நாட்டுக்கு என்ன பயன்?

  ரொம்ப ஓவரா எழுதிட்டனோ?

  பதிலளிநீக்கு
 8. mudila sagaa mudiyalaaa..! canadaa ku tharai vali maarakam illayaamae..! itha neenga sollavae illa..!

  பதிலளிநீக்கு
 9. yuva,
  when i was staying in UK.London and southampton for nearly 6 months we applied and got SUN+KTv connections.There ,with that ,they are giving 1325 channels of which nearly 90 channels are porno/adult/A/live sex channels.All our Indian parents are locking those channels first of all..No other way.Such a way the democracy??and freedom?? going on unitedly..What to do Krishna O Krishna>>>OOo krishna

  பதிலளிநீக்கு
 10. ayyyyyooo ennaky ippave antha TV pakanum pola irruke....

  பதிலளிநீக்கு