April 27, 2010

நிஜமல்ல கதை!

விஜய் தொலைக்காட்சியின் ‘கதையல்ல நிஜம்’ நிகழ்ச்சியை அவ்வப்போது பின்னிரவுகளில் காண்பதுண்டு. இந்நிகழ்ச்சியை பிரத்யேகமாக நான் விரும்பி பார்க்க ஒரே காரணம் லட்சுமி. அவரது ஆளுமை புரட்சித்தலைவியை நினைவுகூறத்தக்கதாக இருப்பதால் இந்நிகழ்ச்சியையும் தொடர்ச்சியாக இல்லாவிட்டாலும், அவ்வப்போது பார்த்து வருகிறேன்.

பத்து பதினைந்து நாட்களுக்கு முன்பாக பார்த்துக் கொண்டிருந்தேன். ஜெரீனாபேகம் என்ற நடுத்தர வயது பெண்ணின் கண்ணீர்க்கதை. சிறுவயதிலேயே தந்தை விட்டு விட்டு ஓடிவிட்டார். சொந்த தாயே கொடுமைப் படுத்துகிறார். பதிமூன்று வயதில் காதலனோடு ஊரை விட்டு ஓட்டம். பின்னர் கணவனே பாலியல் தொழில் செய்யச்சொல்லி வற்புறுத்துகிறான். மூன்று குழந்தைகள்.

ஒரு விளம்பர இடைவேளை.

கணவனிடமிருந்து தப்பி மீண்டும் சென்னைக்கு வருகிறார். அம்மா ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். சோகங்களுக்கு எல்லாம் சிகரம் வைக்கும் முகமாக இடையில் ஒரு குழந்தை காணாமல் வேறு போய்விடுகிறது. இப்படியாக ஜெரீனாபேகம் தன்னுடைய வாழ்க்கைச் சோகங்களை அடுக்கிக் கொண்டே போக ஒருக்கட்டத்தில் லட்சுமியே கண்ணீர் விட்டு அழுகிறார்.

மீண்டும் விளம்பர இடைவேளை.

அடுத்ததாக பிரச்சினைகளை தீர்க்கும் படலம்.

சிறுவயதில் ஜெரீனாவை விட்டு ஓடிப்போன தந்தையை ‘கதையல்ல நிஜம்’ குழுவினர் கண்டுபிடித்து அழைத்து வருகிறார்கள். அவரிடம் லட்சுமி பேசுகிறார். அவரது மகளுக்கு ஏற்பட்ட சோகங்களை உணர்ச்சிப்பூர்வமாக சொல்லி, இனியாவது ஆறுதலாக இருக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறார். தந்தையும், மகளும் பலவருட பிரிவுக்குப் பிறகு ஒன்று சேருகிறார்கள்.

மறுபடியும் விளம்பர இடைவேளை.

அப்பாவும், மகளும் சேர்ந்துட்டாங்க. ஜெரீனாவின் தொலைந்துபோன மகள் எங்கே? நம் குழுவினர் அந்த குழந்தையையும் தேடிக்கிட்டிருக்காங்க என்று லட்சுமி அறிவிக்கிறார்.

பார்வையாளர்கள் பரபரப்படைய விளம்பர இடைவேளை.

ஒரு கன்னியாஸ்திரியோடு சிறு பெண்குழந்தை. அக்குழந்தைதான் ஜெரீனாவின் தொலைந்துபோன மகளாம். ‘கதையல்ல நிஜம்’ குழுவினர் தேடி கண்டுபிடித்து விட்டார்களாம். எப்படி அந்த குழந்தை ஆசிரமத்துக்கு வந்தது என்று கன்னியாஸ்திரி விளக்கமாக சொல்கிறார்.

மீண்டும் ஒரு விளம்பர இடைவேளையைத் தொடர்ந்து

தொலைந்துபோன குழந்தையும், தாயும் ஒன்றுசேரும் கண்ணீர்க் காட்சி. பார்வையாளர்களும் கண்ணீர் சிந்த, விழியோரம் துளிர்த்த நீரை லட்சுமி நாசுக்காக துடைக்க...

அன்றைய எபிஸோடு சுபம்.

இம்மாதிரியான நிகழ்ச்சிகளால் தொலைந்துபோன குடும்பங்கள் ஒன்று சேருகின்றன என்பதை நினைத்தாலே மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால் துரதிருஷ்டவசமாக இந்த ஜெரீனாபேகம் கேஸின் பின்னணி ஏற்கனவே தெரிந்திருப்பதால் எனக்கு அதிர்ச்சியே மேலிட்டது.

கடந்த பிப்ரவரி மாதம் ‘புதியதலைமுறை’ பத்திரிகையில் ஜெரீனாபேகம் குறித்த கட்டுரை வெளியிடப்பட்டிருந்தது. அந்த கட்டுரையிலேயே அவரது குழந்தை காணாமல் போன விஷயத்தை படத்தோடும் கட்டுரையாளர் கல்யாண்குமார் வெளிப்படுத்தியிருந்தார்.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த நிர்மலா என்ற வாசகி அக்குழந்தையின் படத்தைப் பார்த்ததுமே புதிய தலைமுறை அலுவலகத்தை தொடர்புகொண்டார். குழந்தை இருக்கும் இடம் அவருக்கு தெரிந்திருந்தது. இதையடுத்து பத்திரிகையின் ஏற்பாட்டின் பேரில் தாயும், சேயும் இணைந்தார்கள். இந்தச் செய்தியும் ‘பிரிந்தோம்.. புதிய தலைமுறையால் சந்தித்தோம்’ என்ற தலைப்பில் மார்ச் 11, புதிய தலைமுறை இதழில் படத்தோடு வெளிவந்திருந்தது.

ஆனால், ஏப்ரல் 13 அன்று ‘கதையல்ல நிஜம்’ நிகழ்ச்சியிலோ மீண்டும் ஒருமுறை ஒன்றுசேர்ந்த வைபவம் நெகிழ்ச்சியான முறையில் படம்பிடித்து காட்டப்பட்டது. குழந்தையை ‘கதையல்ல நிஜம்’ குழுவினர் தேடி கண்டுபிடித்ததாகவும் லட்சுமியே சொன்னார். ஜெரீனாபேகம், கன்னியாஸ்த்ரி, அந்த எட்டு வயதுக்குழந்தை ஆகியோரும் பாத்திரத்துக்கு ஏற்ப தரமான நடிப்பை வழங்கியிருந்ததுதான் புரியாத புதிர். ஒரு மாதத்துக்கு முன்பு தங்கள் வாழ்க்கையில் நடந்தவற்றை மீண்டும் அச்சு அசலாக விஜய் டிவி கேமிராவுக்கு முன்பாக சிறப்பாக நடித்து காட்டியிருந்தார்கள்.

உலகப் படங்களை சீன் உருவி தமிழ்ப்படங்களில் காட்சியமைப்பது பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். சென்னையில் ஏற்கனவே இன்னொரு பத்திரிகையால் நடந்த, படங்களோடு பதிவுசெய்யப்பட்ட ஒரு விஷயத்தை புதியதாக நடத்திக் காட்டியிருக்கும் ‘கதையல்ல நிஜம்’ குழுவினரின் சாமர்த்தியத்தை நாம் மெச்சத்தான் வேண்டும்.பின்னிணைப்பு - புதிய தலைமுறை இதழில் ஏற்கனவே வெளிவந்திருக்கும் கட்டுரை (பெரியதாக வாசிக்க சொடுக்கிப் பார்க்கலாம்) :

27 comments:

 1. ஜரீனா பேகம் புதிய தலைமுறை கட்டுரை குறித்து விஜய் டிவியிடம் சொல்லாமல் இருந்திருப்பாரா? அவர் என்ன சொல்கிறார் இது குறித்து?

  ReplyDelete
 2. //ஒரு விளம்பர இடைவேளை.

  மீண்டும் விளம்பர இடைவேளை.

  மறுபடியும் விளம்பர இடைவேளை//

  எல்லாம் இதற்காகத்தான்.

  ReplyDelete
 3. அதிஷா!

  நிகழ்ச்சி ஒளிபரப்பானபிறகு கட்டுரையாளர் இதுகுறித்து ஜரினாபேகத்திடம் கேட்டிருக்கிறார். தன் குழந்தை புதியதலைமுறையாலேயே தன்னிடம் சேர்ந்ததை தான் விஜய் டிவியிடம் சொன்னதாகவும், அவை மறைக்கப்பட்டு ஒளிபரப்பப் பட்டதாகவும் ஜரீனா சொல்கிறார்.

  ReplyDelete
 4. தம்பி லக்கி,

  இங்கு தயாரிக்கப்படும் ரியாலிட்டி ஷோ-க்களில் பலதும் இப்படி பட்டதே! முன் தீர்மாணித்து, கதை வசனங்களை எழுதி இயக்கப்படுபவையே! ஊடக நண்பர்களிடம் விசாரித்துப் பாருங்கள் இது போல பல உண்மை தெரியவரும். :)

  @அதிஷா// இதில் கலந்துகொள்ள வருபவர்களுக்கும் நினைவுப் பரிசு(!) போன்றவை உண்டு என்பதால்.. ஜரினா பேகம் என்ன சொல்ல முடியும் பாவம். பத்திரிக்கைகள் வெறும் செய்தியை போடும்.. ஊடகங்களோ.. அந்த செய்தியை நிமிட கணக்கில் விற்று காசு பார்க்கும். அதில் கொஞ்சத்தை கலந்துகொண்டவர்களுக்கு பரிசாகவும் சில சமயங்களில் கொடுக்கும்!

  இப்படித்தான் இருக்கிறது இந்தியாவின் நான்காவது தூண்! :(

  ReplyDelete
 5. அண்ணே!

  அதே ‘காண்டு கணேசன்' தயாரிப்பாளர்தான் இதற்கும் தயாரிப்பாளராம் :-)

  ReplyDelete
 6. நானும் இந்த நிகழ்ச்சியை பார்த்ததும் வர்த்தக நோக்கம் அதிகமிருந்தாலும் இதுபோன்ற விளைவிக்கும் சில நல்ல பலனுக்காகவாது தொடர வேண்டும் என நினைத்தேன்.

  ஆனால் விஜய் டிவி இதிலும் விளையாடி இருக்கிறதா..?!

  ReplyDelete
 7. எல்லா தொலைகாட்சி சேவைகளும் இப்படித்தானா... வெட்கம்...

  ReplyDelete
 8. This can be called as real time Mega serial.They are making money by selling sentiments. We are all after all sentimental idiots.

  Congrats Lucky and team.I'm getting lot of positive feedback about Pudhiya thalaimurai.

  ReplyDelete
 9. ஜெஸிலா எழுதிய நாடகமே உலகம் ஞாபகத்துக்கு வருகிறது. இவர்கள் ஏற்படுத்தும் பரபரப்பில் சம்பந்தப்பட்டவர்களின் மேல் நம்பகத்தன்மை போய்விடுகிறது.

  ReplyDelete
 10. :)

  உணர்ச்சிகர கட்டத்துக்கு ஒரு பேக் கிரவுண்ட் மீசிக் கொடுத்திருப்பாங்க.. அதைக் கேட்டதில்லையா லக்கி..

  ReplyDelete
 11. அப்பட்டமான மோசடிங்க இது.. இனிமே அது கதையல்ல நிஜம் இல்லை அத்தனையும் பொய்.... டி.ஆர்.பி ரேட்டிங்காக என்னவெல்லாம் பன்றாங்க பாருங்க... உங்கள் ஆதங்கம் நியாயமானது நண்பரே.... விஜய் டி.வியின் முகத்திரையை கிழிக்க இது ஒன்னே போதும்....

  ReplyDelete
 12. என் கைவசம் இரண்டு கண்களையும் கசக்கி பிழிந்து நூறு மில்லி அளவுக்கு கண்ணீர் வரவழைக்கும் செண்டி கதைகள் 211 இருக்கிறது.

  அனைத்தும் சீரியல் பார்க்கும் குடும்ப பெண்களிடம் சொல்லி ஒரு டம்ப்ளர் அளவுக்கு கண்ணீர் உருக்கி நிரூபிக்கபட்டவை.

  ஒரு டம்ப்ளர் கிரேண்டி. குறைவாக இருக்குமானால் அதற்கேற்ப பணம் கொடுத்தால் போதும்.

  விஜய் டி.வி. அணுகவும். திரைக்கதையும் அமைத்து கொடுக்கப்படும். வேண்டுமானால் கதாபாத்திரமாக மாறி நடிக்கவும் தயார்.

  நல்ல பதிவு
  நன்றி
  பத்ரி
  இது எப்புடி....:)

  ReplyDelete
 13. யுவா,

  விஜய் டிவிதான் நல்ல தரமான நிகழ்ச்சிகளை ஒளிப்பரப்புகிறது என்று எண்ணிக்கொண்டிருந்தேன்.

  கடைசியில் அங்கேயும் அப்படியா?

  ReplyDelete
 14. இதை எல்லாம் விட காமெடி அரட்டை அரங்கம் தான்.
  கடைசியில நாகு 1000 ரூபாய் பெயர் சொல்ல விரும்பாதவர் 2000 ரூபய்....


  தாயே உன் பெயர் சொல்லும் போது இதயத்தில் மின்னலை பாயுதே......

  இனி வரும் வசூல் ஏழைகளுக்காக ஏழை என்ற வுடன் கண்ணீர் விடு....

  ReplyDelete
 15. //இந்நிகழ்ச்சியை பிரத்யேகமாக நான் விரும்பி பார்க்க ஒரே காரணம் லட்சுமி.//

  :-)

  நான் பிரச்சனையே இல்லாமல் லட்சுமியின் மிட் ஏஜ் படங்களைப் பார்த்திடுவேன்

  ReplyDelete
 16. why don't you file case against vijay tv and lakshmi? Then every one knows, and also lesson for all tv. it is completely steeled information from PT.

  ReplyDelete
 17. லக்கி சார், இந்த நிகழ்ச்சியை நான்கைந்து வருடங்களுக்கு முன்னால் முதல் தடவை பார்த்த போதே இது வசனம் திரைக்கதை எழுதி ஒப்புவிக்கும் நாடகம் என கண்டு கொண்டேன். விசுவின் “அரட்டை அரங்கம்” பார்க்கும் போதும் இது போன்ற எண்ணம் எழுந்ததுண்டு. They are just thinking that we r all sentimental fools

  ReplyDelete
 18. கருத்து :1

  நடக்கும் கொடுமைகளுக்கு இது ஒண்ணும் அவ்வளவு மோசமில்லைனுதான் நினைக்கிறேன்.

  கருத்து :2

  சும்மா செமையா ஸ்கிரீன் பிளே எழுதி கேப் விட்டு அடிச்சது சுவாரசியம். சினிமாக்காரங்க இவங்ககிட்ட டிரெயினிங் எடுக்கலாம்.

  கருத்து :3

  அரட்டை அரங்கம் என்றதும் நினைவுக்கு வருது. என்னால் நிஜமாகவே முடியலை. விருதுநகரில் நடக்கும் நிகழ்ச்சிக்கு டிஆர் ஏறத்தாழ இப்படி துவக்குகிறார். "யாருக்கும் இல்லாத ஒரு சிறப்பு இந்த ஊருக்கு இருக்கிறது. எல்லோரும் பிறந்த பின்னர் வாங்குவார்கள். எதையாவது சாதித்த பின்னர் வாங்குவார்கள். ஆனால் உங்கள் ஊர் பிறக்கும்போதே வாங்கியிருக்கிறது. அது அது அதுதான் விருது" இதை அவர் நரம்பு புடைக்க சீரியஸாக உரத்துக்கூறுகிறார். கூட்டம் ஆர்ப்பரிக்கிறது. பக்கத்துல டம்ளர்ல இருந்த தண்ணிக்குள்ள விழுந்து செத்துடலாமான்னு வந்தது. :-(

  ReplyDelete
 19. கதை என்பது நிஜம் ,.,.....
  கதை கேட்கும் பழக்கம் இன்னும் மக்களிடம் இருக்கிறது. அதனால் தான் அவர்களும் கதை சொல்கிறார்கள்.

  ReplyDelete
 20. நல்ல பதிவு நன்றி பத்ரி

  ReplyDelete
 21. இதுக்கு தான் அவ்வளவு பில்ட் அப் குடுத்து அந்த ப்ரோக்ராம் திரும்ப ஆரமிச்சாங்களா??
  என்ன கொடுமையா இது .

  ReplyDelete
 22. //விஜய் டிவிதான் நல்ல தரமான நிகழ்ச்சிகளை ஒளிப்பரப்புகிறது என்று எண்ணிக்கொண்டிருந்தேன்.

  கடைசியில் அங்கேயும் அப்படியா?//

  Vijay TV's so called reality/live/talk shows (including neeya naana, nadanthathu, anu alavum, nijamalla etc.,) are all staged/manipulated with no regard for journalistic integrity. They should be shamed of themselves!

  ReplyDelete
 23. வேதனை வேடிக்கையையாக்கப் படுகிறது

  ReplyDelete
 24. ரொம்ப அப்பாவியா இருக்கீகளே சார் !!!!
  உலகமே அப்படித்தாம்ல நடந்துகிட்டு இருக்கு !!!

  ReplyDelete
 25. இதே ஜெரினா குழந்தையைத் தேடிக்கொண்டிருந்ததை வேறொரு சஞ்சிகையிலும் வாசித்திருக்கிறேன்.

  அப்புறம் தேடிக்கொடுத்த புதிய தலைமுறை

  இப்போது விஜய் டிவி.

  //இவர்கள் ஏற்படுத்தும் பரபரப்பில் சம்பந்தப்பட்டவர்களின் மேல் நம்பகத்தன்மை போய்விடுகிறது//

  என்னத்த சொல்ல.... விஜய் டிவியின் முகத்திரையை கிழித்ததற்கு நன்றி யுவா

  ReplyDelete
 26. லக்கி நல்ல அமவுண்ட் கிடைக்கும் என்றால் சொல்லுங்க நானும் பிரிஞ்சு போன மகனா நடிக்க ரெடி:)))

  ReplyDelete
 27. http://musicshaji.blogspot.com/2009/07/blog-post.html

  Read this article too where shaji has written about these tv programmes way back in 2007 itself

  with love,
  N.Parthiban

  ReplyDelete