April 3, 2010

பையா!

நீண்டதூர பஸ்/கார்/பைக் பயணம் உங்களுக்கு பிடிக்குமா? சன்னல்வழியாக முகத்தில் மோதி முடி கலைக்கும் சில்லென்ற காற்றை ரசிப்பீர்களா? விர்ரூம்.. விர்ரூம்.. என்று விறுவிறுக்கும் தேசியச்சாலை பரபரப்பை விரும்புவீர்களா? எல்லா கேள்விகளுக்கும் ‘யெஸ்'ஸென்று பதில் சொல்லக் கூடியவராக இருந்தால் உங்களுக்கும் ‘பையா'வை பிடிக்கும்.

போனவாரம் ஒரு அழுமூஞ்சிப் படத்தை பார்த்ததிலிருந்து மூட் அவுட். நல்லவேளையாக இந்த வாரம் ‘பையா' ரிலீஸ் ஆகி, இப்போதுதான் கொஞ்சம் feel good.

அயனுக்குப் பிறகு தமிழில் வந்திருக்கும் அட்டகாசமான மசாலா மாஸ். ஸ்லோவாக தொடங்கி தமன்னாவுக்கு காரில் கார்த்தி லிஃப்ட் கொடுத்ததுமே படம் டாப்கியரில் பரபரக்கிறது. க்ளைமேக்ஸ் வரை பரபரப்புக்கு இரண்டரை மணிநேர கேரண்டி. இண்டர்வெல் ப்ளாக்குக்கும் ஒரு குட்டி க்ளைமேக்ஸ். சரசரவென்று நான்கைந்து சேஸிங் சீன்கள். இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங், கலை என்று தொழில்நுட்பக் கலைஞர்கள் வியர்வை சிந்தி பையாவை சகலகலா வல்லவனாக்கி இருக்கிறார்கள். பீமாவில் கோட்டை விட்ட லிங்குசாமி மறுபடியும் ‘ரன்'ன ஆரம்பித்துவிட்டார்.

நா.முத்துக்குமார் - யுவன்ஷங்கர் ராஜா கூட்டணிக்கு ஏன் என் சொத்து மொத்தத்தையும் எழுதிவைக்கக் கூடாது என்று யோசிக்க ஆரம்பித்திருக்கிறேன். பாடல்கள் அத்தனையும் தேன் தேன் தித்தித்தேன்.

பக்காவான மசாலா படத்தில் நடிப்பது கார்த்திக்கு இதுதான் முதன்முறை. ஆரம்பத்தில் பப்பிள்கம் போட்டுக் கொண்டு அசமஞ்சமாக வருபவர் சீட் பெல்ட் மாட்டியதுமே சீட்டி அடிக்க வைக்கிறார். ‘என் கண்மணி' பாட்டு பாடிக்கொண்டே அனாயசமாக ஸ்டியரிங்கை பிடிப்பது அசத்தல். தமன்னாவைப் பார்க்கும்போது கண்களில் காதலை காட்டுவதைவிட, வில்லன்களை ரிவர்வியூ மிர்ரரில் பார்க்கும்போது காட்டும் வெறிதான் சுவாரஸ்யம். அண்ணனுக்கு அயன். தம்பிக்கு பையா. பல காட்சிகளில் சூர்யா படம் பார்த்துக் கொண்டிருக்கிறோமா என்பது போன்ற பிரமை. அப்பாவையும், அண்ணனையும் தோற்றத்தில் அடிக்கடி ஞாபகப்படுத்துகிறார். Fineயா.

தமன்னா வாவ். சில காட்சிகளில் அட்டு ஃபிகராகவும், பல காட்சிகளில் பேரழகியாகவும் ஒருவரே தெரிவது என்ன மாயமென்று தெரியவில்லை. தொப்புளைத் தவிர்த்து வேறு குறிப்பிடத்தக்க கவர்ச்சி அம்சம் இவரிடம் இல்லையென்பதால் ஒரு பாட்டில் தொப்புளையே பிரதானமாக்கி லைட்டிங் செய்து, கோணங்கள் வைத்து.. ச்சே பாராட்ட தமிழில் வார்த்தைகள் குறைவு. அதிலும் அதே பாடல்காட்சி முடியும்போது கார்த்தியோடு திரும்பி நடந்து கொண்டிருக்கிறார். இடுப்பு பகுதியில் குட்டியூண்டாக திரையில் தெரியும் டயரை பாய்ந்துப் போய் கிள்ளிவிடலாமா என்று விரல்கள் பரபரக்கிறது.

கார்த்தி, தமன்னாவை தவிர்த்து முக்கிய பாத்திரமாக நடித்திருப்பது அந்த கருப்பு கலர் கார். மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி படத்தில் பஸ் எப்படி ஒரு பாத்திரமோ அதுபோல பையாவில் இந்த கார். சகதியில் முன்டயர் இறங்கிவிடும் காட்சியில் கார்த்தி, தமன்னாவை விட கார் அற்புதமாக நடித்திருக்கிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

தமன்னாவுக்கு சித்தி மூலம் வில்லன்களால் பிரச்சினை. ஆனால் கார்த்திக்கும் இன்னொரு தரப்பு மும்பை வில்லன்களால் பிரச்சினையென்றதுமே ‘பாட்ஷா.. பாட்ஷா..' என்று ரசிகர்கள் மனசுக்குள்ளேயே தீம் மியூசிக் போடுகிறார்கள். துரதிருஷ்டவசமாக சண்டைக்கோழி ரேஞ்சுக்கு சப்பை ப்ளாஷ்பேக். எல்லா சண்டையிலுமே ஹீரோதான் ஜெயிப்பார் என்று தெரிந்தாலும், சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்ட விதமும், இசையும் ஜிவ்வென்று நம் நாடிநரம்புகளை முறுக்கேற்றுகிறது.

சினிமா விமர்சனம் என்றால் ஏதாவது குறியீடு கண்டுபிடிக்க வேண்டுமாமே? ம்ம்... ஆங்... ஹீரோயின் பெயர் சாரு. இப்படம் கொண்டாட்ட பாபிலோன் தொங்கும் தோட்டம் என்பதற்கு இதைவிட வேறென்ன பெரிய குறியீடு வேண்டும்?

பையா - அநியாயத்துக்கு அழகாக இருக்கிறான்!

29 comments:

 1. I SEEN THIS FILM. INTRESTING. GOOD ENTERTAINMENT.

  ReplyDelete
 2. ஆங்... ஹீரோயின் பெயர் சாரு.

  மிக ரசித்தேன்

  ReplyDelete
 3. அங்காடி தெரு படத்தையே ஒரு வழி ஆக்கிட்டீங்க. இந்த படத்தை பிளந்து கட்டுவீங்க னு பாத்தா... அட சே.....

  ரொம்ப குப்பையான படம். தமிழ் சினிமா எந்த திசையில் போக கூடாது னு நினைக்கிறோமோ அதே திசையில் ....

  அங்காடி தெரு மாதிரி படங்கள் வரலைனாலும் பரவா இல்லை. இந்த மாதிரி படங்கள் வரவே கூடாது..........

  ReplyDelete
 4. வில்லு, வேட்டைக்காரன், பையா போன்ற படங்கள் உங்களுக்கு ஏன் பிடிக்கின்றன என்பதையும், அங்காடித்தெரு படம் உங்களுக்கு ஏன் பிடிக்காமல் போனது என்பதையும் 5 நாளா யோசிச்சி... யோசிச்சி... தலகாஞ்சி போச்சி...
  - சென்னைத்தமிழன்

  ReplyDelete
 5. PAIYA TAMIL FILM IS VERY JOLY MOVIES
  MUSIC, EDITING ,CINEMOTOGRAPHY,STUND,DIALOUGE,ALL OF BEST! BEST !! BEST!!!

  ReplyDelete
 6. // கொண்டாட்ட பாபிலோனிய தொங்கு தோட்டம் //

  இளமை ஜொள்ளுது :)

  தோழா ! you are a wrong man in frowny land :)

  ReplyDelete
 7. ஒரு மொக்க படத்துக்கு இந்த பில்டப்பா !!!. நீங்க செம காமெடி பாஸ்

  ReplyDelete
 8. பதிவர்களுக்குள்ள ஒரு ஒற்றுமை என்னான்னா நடிகை படத்த மட்டும் முதல்ல போட்டுவாங்க...

  ReplyDelete
 9. Padamaa ithu. Kuppayilum kedu ketta kuppai. Padam aarambam mudhal kadaisi varai oru viruviruppe illai. car ai thavira.Idha poi nalla masala padam nuu solliteengala yuva. Unga rasanai mela enakkiruntha mathippe poitadhu.

  ReplyDelete
 10. Yuva is going back...

  And ur standard is too low nowadays.......

  ReplyDelete
 11. machi, enna da review yaeluthurae? A.thaeru oothikichu.. paiya hit ah?

  ReplyDelete
 12. சொல்வதை பார்த்தால் ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ விற்கு பரவாயில்லை போல. அந்த படம் கொடுத்த ஹாங்கோவர் இன்னும் போகல...

  ReplyDelete
 13. arumaiyana vimarsanam... random thoughts neenga sollaradhu onnum puriyalai..

  "அங்காடி தெரு மாதிரி படங்கள் வரலைனாலும் பரவா இல்லை."

  angadi theru half an hour kooda paaka mudiyalai...

  ReplyDelete
 14. பேரரசு அசிஸ்டெண்ட் ஆக எது டிரை பண்ணுறீங்களா..அல்லது எல்லாரும் நல்லா இல்லைன்னு எழுதுனதுக்காக “சூப்பர் படம்” னு சொல்லுறீங்களா..அல்லது இதுதான் பின்நவீனத்துவ விமர்சனமோ..)))

  ReplyDelete
 15. யுகி

  நான் கேள்வி பட்டவரையில் "பையா" குப்பை என்று!

  உங்கள் விமர்சனம் சற்று ஓவராக உள்ளது!

  மயிலாடுதுறை சிவா...

  ReplyDelete
 16. குப்பை படத்திற்க்கு மொக்கை பதிவு கொடுத்தமைக்கு நன்றி, இனிமேல் உங்களுடைய விமர்சனம் படிப்பதில் ஆர்வம் காட்ட மாட்டேன். நன்றி

  ReplyDelete
 17. ஆஹா.. உங்கள் பதிவிற்கும் என் என் பதிவிற்கும் விசுவல் ஒற்றுமை உன்று உள்ளது. முடிந்தால் கண்டு பிடித்து கூறவும்.

  http://www.cpraveen.com/suvadugal/paiyya-tamil-movie-review/

  பீமா தந்த தோல்வியை சரி கட்ட, லிங்கு மிகவும் கஷ்டப்பட்டு கலக்கிய ஒரு மசாலா கலவை. அவ்வளவே. தினமும் தயிர் சாதம், புளி சாதம், சாம்பார் சாப்பிடும் போது காரமா ஹைதராபாத் பிரியாணி பொட்டலத்தை பிரித்து வைத்து சாப்பிடற மாதிரியான ஒரு படம்.

  ReplyDelete
 18. படம் சரியான மொக்கை. ஊருக்கு வந்த காதலியை அழைத்துக் கொண்டு போனேன். அவ என்னை திட்டித் தீர்த்துட்டா. இயக்குனர்கள் தங்களின் முந்தைய படங்களில் இருந்து காட்சிகளைத் திருடக்கூடாதுன்னு சட்டம் போடனும்

  ReplyDelete
 19. மிக மிக தவறான விமர்சனம்..

  அங்காடி தெரு படத்தை மட்டம் தட்டுவதற்காக , இப்படி எழுதி இருப்பதாக தோன்றுகிறது...

  ReplyDelete
 20. boss neengalum athishavum ore mathri

  feel pannurenga oru blog pathicha


  podhumo nu thoonuthu ple change

  ReplyDelete
 21. ஹாய் லக்கி ! பையா பார்த்தேன் பிடித்தது ! என் ராங்கிங் :1.யுவனின் இசை மற்றும் பாடல்கள் 2.கேமரா 3.கார் (இது தான் சூப்பர் ஹீரோ) 4. கார்த்தி 5. லிங்கு 6.ஷரவந்தி(நிஜ பெயர் தெரியாது ..படத்தில் கார்த்தியின் நண்பி 7.மற்றும் அனைவரும்
  btw i saw ur thalaivar charu at savera yesterday night!though not cent percent sure

  ReplyDelete
 22. Hey Yuva,

  When I read your review, I was mad. Then, when I watched the movie yesterday I realized that your review is apt.

  Superb movie! Not a tear jerker - you can watch it with your family, dance for the songs with your kids.

  The real hero for the movie is Na.Muthukumar.

  Best,

  Puthumugam,
  USA.

  ReplyDelete
 23. karthi is unfit for this role. he acted very artificially. i don't know how you enjoy this film. heroin is ok. for karthi the graph is slowly down.

  ReplyDelete
 24. லிங்குசாமிய மல்லாக்க போட்டு மிதிக்கணும் போல இருந்தது...

  தொடர்ந்து இந்த மாதிரி (அயன், அபியும் நானும்..) சனியன்கள
  பாராட்டி தள்ளுற உங்கள என்ன பண்றதுனுதான் தெரியல...

  ReplyDelete