April 6, 2010

ஏப்ரல் 10 - வாயாடிகள் வரலாம்!

அங்காடி தெரு, பையா, கலைஞர், பெண்ணாகரம், பாமக, சங்கம், சுவிங்கம், உலகப்படம், உள்ளூர் படம், மொக்கைப் பதிவர்கள், எழுத்தாளர்கள், எழுத்தாளர் ஆக ஆசைப்படுபவர்கள், சுகுணா திவாகர், தண்டோரா, பராக் ஒபாமா, ஐ.பி.எல், சச்சின் டெண்டுல்கர், யூசுப் பதான், சானியா மிர்ஸா, நித்தியானந்தர், சாருநிவேதிதா, ஜெயமோகன், தமிழ்ப்படம், கோவா, சுறா, விஜய், அஜீத், அசல்...

பேசவா நமக்கு விஷயம் இல்லை?

எதுவேண்டுமானாலும், எவ்வளவு வேண்டுமானாலும் ஆந்திரா மெஸ் மீல்ஸ் மாதிரி அன்லிமிட்டெட் ஆக பேசிக்கொண்டேயிருக்கலாம். இங்கே தலைவர் இல்லை. செயலாளர் இல்லை. மேடை இல்லை. மைக் இல்லை. எனவே யார் வேண்டுமானாலும் யாரிடம் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் தயக்கமே இல்லாமல் லொடலொடக்கலாம். கூடுதல் கவர்ச்சி அம்சமாக சந்திப்புக்கு பின்னான ஸ்பெஷல் டீக்கடை சந்திப்பும் நடக்கும்.

எனவே தைரியமாக முகமூடியின்றி, திறந்தமனதோடு வாருங்கள்.

மேட்டர் என்ன?

கெரகம். வேறென்ன?

பதிவர்சந்திப்பு!

எங்கே?

அரசு இலவசமாக அனுமதிப்பதால் மெரீனா கடற்கரை காந்தி சிலைக்கு அருகில்.

எப்போது?

நல்ல ராகுகாலத்திலா என்று தெரியாது. ஆனாலும் எந்நேரமும் நமக்கு நல்ல நேரம்தான். மாலை 5.30 மணி முதல் 7.30 மணி வரை.

தேதியை சொல்ல மறந்துவிட்டோம். நோட் பண்ணிக்குங்க.

ஏப்ரல் 10, சனிக்கிழமை. முன்னர் ஏப்ரல் 11 என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஞாநி மற்றும் பாஸ்கர்சக்தி இணைந்து நடத்தும் கேணியும் அதே நேரத்தில் நடைபெறும் என்பதால் ஒருநாள் முன்னதாக நடைபெறுகிறது.

மேலதிக விவரங்களுக்கு :
பாலபாரதி @ 99402 03132

ஆர்வமுள்ள, ஆர்வமில்லாத பதிவர்கள்/வாசகர்கள்/வி.ஐ.பி.க்கள் வரலாம். யாரும் தனியாக வெத்தலைப்பாக்கு வைத்தெல்லாம் அழைக்கப்பட மாட்டார்கள். அழைக்கப்படுவது ரஜினிகாந்தாகவே இருந்தாலும் இந்தப் பதிவு மட்டும்தான் அழைப்பு. சந்திப்புக்கு வர எண்ணியவர்கள் மற்றும் சந்திப்பில் ஆர்வம் கொண்டவர்கள் இந்த அறிவிப்பினை அவரவர் பதிவில் போட்டால் எண்ணி மூன்றே நாளில் மூன்று கோடி ரூபாய் லாட்டரி அடிக்கும் என்று இமயமலையில் நித்யயோகத்தில் இருக்கும் நித்தியானந்தர் திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார்.

பதிவர்கள் பயன்பெற ஒரு நீதிமொழி : வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!

19 comments:

 1. அன்று மெளனவிரதம் இருப்பவர்களுக்கு அனுமதியில்லையா?

  ReplyDelete
 2. நான் வாயடிப்பதற்கு பதிலாக வாலாட்டுகிறேன்!

  ரெண்டு பின்னூட்டத்துக்கு மாப்பு கேட்டுகிறேன்!

  ReplyDelete
 3. மவுன விரதம் இருப்பவர்கள் காந்தியோடு உரையாடலாம். அவரும் மவுனமாகவே இருப்பார்.

  ReplyDelete
 4. தகவலுக்கு நன்றி யுவா.

  ReplyDelete
 5. சாப்பாடு போடுவாய்ங்களா ?

  ReplyDelete
 6. //சாப்பாடு போடுவாய்ங்களா ?//

  யாராவது பீச்சுக்கு வர்ற பொண்ணுங்க கைய கிய்ய புடிச்சி இழுத்தா ஜீப்புலே ஏத்துக்கிட்டு போயி மாமியாரு வீட்டுலே உட்காரவெச்சி மூணுவேளை சோறு போடுவாங்க தோழரே!

  ReplyDelete
 7. சார்... ஏரோபிளேனு டிக்கெட்டு கிடைக்குங்களா?..

  one Way-யா இருந்தாலும் பரவாயில்ல..

  ReplyDelete
 8. இந்த பதிவில் உங்கள் ஆதிக்க தோனி தெரிகிறது.. ஒட்டுமொத்தமாக பதிவர்களை தனிபட்ட முறையில் தாக்கும் லக்கி டவுன் டவுன்....

  ReplyDelete
 9. வாயில்லாத பிள்ளைகள் வரலாமா? :O

  ReplyDelete
 10. ரஜினிய விட்டுதள்ளுங்க... தல சாரு வருவாரான்னு சொல்லுங்க... அப்ப நம்ம ஆஜர்

  ReplyDelete
 11. " சந்திப்புக்கு பின்னான ஸ்பெஷல் டீக்கடை சந்திப்பும் நடக்கும்."


  எத்தனை மணிக்கு ? ஹி ஹி

  ReplyDelete
 12. Athisha Touch

  ReplyDelete
 13. நல்ல பதிவு நன்றி பத்ரி

  ReplyDelete
 14. யங்..மங்..சங்..!

  ReplyDelete
 15. ஈரோடு வலை ரசிகர் மன்றத்தினர் அலை திரளாக கலந்து கொள்வார்கள் என அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம். (சாறு உஷார் !!!)

  ReplyDelete
 16. /யூசுப் பதான், சானியா மிர்ஸா//

  ஷோயிப் மாலிக்?

  / சுகுணா திவாகர், தண்டோரா, //

  ஏற்கனவே சொன்னது போல் ,இலக்கிய பரிச்சயத்துடன் நகைச்சுவையும் மிளிர்கிறது.

  ReplyDelete
 17. //எனவே யார் வேண்டுமானாலும் யாரிடம் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் தயக்கமே இல்லாமல் லொடலொடக்கலாம்//

  எனக்கென்னவோ பாதி பேர் வால்பையனாட்டம் காந்தியோடு மௌன உரையாடலை மேற்கொள்ளுவாங்கன்னு தோணுது :-)

  ReplyDelete
 18. " ஆர்வமுள்ள, ஆர்வமில்லாத பதிவர்கள்/வாசகர்கள்/வி.ஐ.பி.க்கள் வரலாம் "

  அதெல்லாம் சரி.. என்னை போன்ற பிரபல பதிவர்களுக்கு விசேஷ கவனிப்பு உண்டா... ? விசேஷ அழைப்பு அனுப்பப்படுமா?

  ReplyDelete
 19. சந்திப்பு எப்படி இருந்தது????

  ReplyDelete