March 31, 2010

அப்படியொன்றும் அழகில்லை!

இருநாட்களுக்கு முன்பாக மதியம் இரண்டரை மணியளவில் அண்ணாசாலை வழியாக இருசக்கர வாகனத்தில் தோழரோடு சென்றுக் கொண்டிருந்தேன். டி.வி.எஸ். பேருந்து நிறுத்தத்துக்கு முன்பாக போக்குவரத்து சிக்கல்.

ஊர்ந்து ஊர்ந்து சென்றுகொண்டிருந்தபோது ஒரு மாதிரியான கவுச்சி வாடை. காவலர்கள் துண்டு எடுத்து முகத்தை மூடிக்கொண்டு போக்குவரத்தை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தார்கள்.

ஒரு ஆயிரம் பேர் சாலையோரம் நின்று வேடிக்கை பார்க்க சாலையோரமாக 'அது' கிடந்தது. ஏதோ கோணி போன்ற சமாச்சாரங்கள் அவசரத்துக்கு மேலே மூடப்பட்டிருக்க அவற்றையும் மீறி சாலையில் கசிந்து கொண்டிருந்தது மனிதக்கூழ்.

காஞ்சிபுரத்தை சேர்ந்த 23 வயது இளைஞர் ஒருவர் சென்னையின் பெரிய பைனான்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தாராம். 54எச் என்ற மாநகர தொடர்பேருந்தில் அன்று அவர் படிக்கட்டில் பயணம் செய்து கொண்டிருந்திருக்கிறார். ஓட்டுநர் சடன்பிரேக் போட தவறி கீழே விழுந்தவரின் மீது அப்பேருந்தின் பின்சக்கரம் ஏறி, அவரது தலை கூழாகியிருக்கிறது. பேருந்தை நிறுத்திவிட்டு ஓட்டுநரும், நடத்துனரும், பயணிகளும் இறங்கிப் பார்த்திருக்கிறார்கள்.

“செத்துடாம்பா. நீ பஸ்ஸை எடு. அவசரமா போவணும்!” என்று பயணிகள் வற்புறுத்த, 54எச் பிராட்வே நோக்கி சென்றிருக்கிறது. ஒரு நாய் சாலையில் அடிபட்டு இறந்து கிடந்தால், எந்த மனோபாவத்தோடு கடந்து செல்வோமோ, அதே மனோபாவத்தோடு 54எச் பயணத்தை தொடர்ந்திருக்கிறது.

இரண்டாவது பத்தியில் வந்த கவுச்சிவாடை எங்கிருந்து வந்தது என்று இன்னேரம் உங்களுக்கு தெரிந்திருக்கும். இன்னும் குறைந்தது ஆறு மாதத்துக்காவது அப்பகுதியை கடக்கும்போதெல்லாம் அதே மனித கவுச்சி வாடையை என் நாசிகள் உணரும். உடல் படபடக்கும். மனம் அச்சத்தால் நடுநடுங்கும்.

வேறு ஒரு இடத்திலும் அதே கவுச்சி வாடையை அன்று மாலையே உணர்ந்தேன். குளிரூட்டப்பட்ட அத்திரையரங்கின் திரையில் அதே மனிதக்கூழை முதல் காட்சியின் முடிவில் கண்டேன். படம் முடியும் வரை வாடை போகவேயில்லை. இரண்டு நாட்களாகிறது இன்னமும் தூக்கத்தில் கூட அவ்வாடை என்னை துன்புறுத்திக் கொண்டிருக்கிறது.

* - * - * - * - * - *

அங்காடித்தெரு அறிவுஜீவிகள் பாராட்டும் வகையில் யதார்த்தப் படமாகவே வெளிவந்திருக்கிறது. அசட்டுஜீவியான எனக்கு என்னவோ அதுகொஞ்சம் ஓவர்டோஸ் யதார்த்தமாகவே படுகிறது. ஏனெனில் படத்தில் அப்பட்டமாக சித்தரிக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படும் கதைமாந்தர்கள் சிலரோடு எனக்கு நேரடிப் பழக்கம் உண்டு.

இயக்குனரின் தொலைக்காட்சிப் பேட்டி பார்த்தேன். ஒருநாள் ரங்கநாதன் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தபோது இந்த கதை மாந்தர்களைப் பார்த்ததாகவும், “எங்க இருந்துடா இவ்ளோ பேரு வர்றீங்க?” என்று ஆச்சரியப்பட்டு அவர்களை பின் தொடர்ந்து, பலவருட அவதானிப்புகளுக்குப் பிறகும், அதற்குப் பின்னரான உழைப்புக்குப் பின்னரும் இப்படியொரு காவியத்தை படைக்க முடிந்ததாக சொன்னார். பிரமிப்பாக இருந்தது.

ஆனால் படம் பார்த்த இன்னொரு நண்பர் வேறு மாதிரியாக சொல்கிறார். 2007லேயே இதே கதைக்களத்தோடு, ரங்கநாதன் தெருவுக்குப் பதிலாக மும்பையின் போக்குவரத்து சிக்னல் ஒன்றினை வைத்து 'டிராஃபிக் சிக்னல்' என்ற பெயரில் ஒரு படம் வந்திருக்கிறதாம். அப்படத்துக்கு தேசியவிருதுகள் கூட கிடைத்திருக்கிறதாம்.

* - * - * - * - * - *

மனிதக் கவுச்சி வாசனையை மட்டுமன்றி அஞ்சலியின் வியர்வை மற்றும் மல்லிகைப்பூ கலந்த கவர்ச்சி வாசனையையும் என்னால் உணரமுடிந்தது. அதுபோலவே மகேஷின் ஆண்மையான வாசனையும்.

கதைநாயகன் மகேஷ், கதைநாயகி அஞ்சலி இருவருமே அப்பட்டமாக திரையில் வாழ்ந்திருக்கிறார்கள். இவர்கள் மட்டுமல்ல. கதையின் மற்ற மாந்தர்களிடமும் - ஓரிருவர் தவிர்த்து - நடிப்பு என்பதாக இல்லாமல் இயல்பான வெளிப்பாடு அமைந்திருக்கிறது. குறிப்பாக சூப்பர்வைசராக நடித்திருக்கும் இயக்குனர் வெங்கடேஷ்.

நாயகனின் தோழனாக வரும் டிவி நடிகரின் நடிப்பு கொஞ்சம் நெருடுகிறது. குறிப்பாக ஸ்னேகா விளம்பரக் காட்சிக்காக அவர் செய்யும் அலப்பறைகள் அக்மார்க் மொக்கை. திரைப்படத்தின் நகைச்சுவை பெரும்பாலும் இவரையே சார்ந்திருப்பதால் நகைச்சுவை அவ்வளவாக வேலைக்கு ஆகவில்லை.

‘நான் கடவுள்' படத்தில் நன்கு எடுபட்ட ‘ப்ளாக் ஹ்யூமர்' இப்படத்தில் இயக்குனரின் காலை வாரி விட்டிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் அருவருப்பாக கூட இருக்கிறது. குறிப்பாக நாயகனின் முதல் காதல் தொடர்பான காட்சிகள். அந்த காதல் உடைவதற்கு காரணமாக சொல்லப்படும் காரணம். உவ்வே!

* - * - * - * - * - *

படத்தின் முதல் காட்சியே க்ளைமேக்ஸ்தான். ஆடியன்ஸை கடுமையான அதிர்ச்சிக்கு உள்ளாக்கப்போகும் ஒரு காட்சிக்கு முன்பாக பாட்டு வைத்தே தொலைத்தாக வேண்டும் என்று இயக்குனருக்கு யார் ஆலோசனை சொல்லியிருப்பார்கள் என்று தெரியவில்லை. நியாயமாக கிடைக்க வேண்டிய அதிர்ச்சியின் சதவிகிதம் வெகுவாக குறைகிறது.

அதற்குப் பின்பும் படம் ‘செல்ஃப்' எடுக்கும் என்று நம்பி, நம்பி இடைவேளை வரை ஏமாந்துக்கொண்டே போகிறோம். திராபையாக, மெதுவாக நகரும் காட்சிகள். ஒருவேளை ‘அங்காடித் தெரு' மெகாசீரியலாக வந்திருக்குமானால் டி.ஆர்.பி. ரேட்டிங்கில் பின்னியிருக்கலாம்.

கலை, ஒளிப்பதிவு, ஒப்பனை என்று இப்படம் முழுக்க தொழில்நுட்ப கலைஞர்களின் ராஜ்ஜியம். இசை மட்டும் படுமோசம். என்ன இருந்து என்ன பயன்? அந்த காலத்து ‘துலாபாரம்' ரேஞ்ச் சோகம் ஒவ்வொரு காட்சியையும் ரசிக்க விடாமல் துன்புறுத்திக் கொண்டேயிருக்கிறது.

கடந்த பத்தாண்டுகளில் பெரும் வெற்றி பெற்ற யதார்த்தப் படங்களில் சிலவான சேது, பிதாமகன், காதல், சுப்பிரமணியபுரம் போன்ற படங்களில் இருந்த ‘எண்டெர்டெயினிங் எலிமெண்ட்' சுத்தமாக இல்லாமல் ராவான தார் பாலைவனம் மாதிரி வறண்டுப் போய் கிடக்கிறது அங்காடித்தெரு.

* - * - * - * - * - *

பதினெட்டு பந்துகளில் நாற்பத்தி ஒன்பது ரன்கள் அடித்த ஹர்பஜன்சிங் மாதிரி அடித்து ஆடியிருப்பவர் உரையாடலாசிரியர் ஜெயமோகன். இவரது உரையாடல்கள் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் படம் ஆரம்பித்த முப்பதாவது நிமிடத்திலேயே எழுந்து வீட்டுக்குப் போயிருப்பேன். ‘கனியிருப்பக் காய் கவர்ந்தற்று' போன்ற வார்த்தை விளையாட்டுகளை உரையாடல் ஆசிரியர் நிகழ்த்தியிருந்ததால் மட்டுமே ஒப்புக்குச் சப்பாணியாய் ஓரளவு படத்தில் சுவாரஸ்யம் கைகூடுகிறது.

தங்கச்சிக்கு நாய் கடிச்சிடிச்சி. அம்மாவுக்கு மஞ்சக்காமாலை. அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக். ஆயாவுக்கு பேதி என்று சகலகவலைகளோடு பொழுதுபோக்க திரையரங்குக்கு வரும் அப்பாவித்தமிழனை நிற்கவைத்து சவுக்கால் அடித்திருக்கிறார் இயக்குனர். இப்படம் முப்பது நாட்களை தமிழகத் திரையரங்குகளில் கடந்தால் அதுவே உலக அதிசயம்.

* - * - * - * - * - *

சில வருடங்களுக்கு முன்பாக உதயம் தியேட்டர் அருகில் சாலையில் படுத்துக் கொண்டிருந்தவர்கள் மீது லாரி ஏறிய விபத்து, சரவணா ஸ்டோர் மாடியில் இருந்து கீழே விழுந்து மரணமடைந்த பெண், ரயில்வே லெவல் கிராஸிங்கில் ஏற்பட்ட லாரி விபத்து என்று செய்தித்துணுக்குகளை சேகரித்து திரைக்கதை அமைத்திருக்கிறார்கள்.

படம் முழுக்க விரவியிருக்கும் சிறுகதைகளை நிறைய பேர் சிலாகிக்கிறார்கள். இதைவிட அருமையான ஓ பாசிட்டிவ் சிறுகதைகளை விக்கிரமன் படங்களில் இருபது வருடங்களாக கண்டு களித்துக் கொண்டிருக்கிறோம்.

அங்காடித்தெரு - அப்படியொன்றும் அழகில்லை!

54 comments:

 1. BOSS,

  அப்படி ஓரே அடியாக இந்த படத்தை ஒதுக்கிவிட முடியாது. வில்லு,ஏகன் போன்ற உலக சினிமாக்களுக்கு மத்தியில் இந்த மாதிரி யாதார்த்த படங்கள் கொஞ்சம் கவனிக்க வைக்கிறது.

  மனோ

  ReplyDelete
 2. ஆஹா... உங்களுக்கு இந்த படம் பிடிக்கவில்லையா தோழர்? எனக்கும்தான். வாட் எ கோ இன்சிடென்ஸ்?

  என் கருத்துகளை பதிவாக எழுதியிருக்கிறேன். படித்து பார்த்துவிட்டு, கண்டிப்பாக ஓட்டு போட்டுவிட்டு உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்.

  http://www.athishaonline.com/2010/03/blog-post_30.html

  ReplyDelete
 3. ரஷ்யாவுல குண்டு வெடி, ஹைதராபாத்ல கலவரம், மாவோயிஸ்ட் பிரச்னைகள் என்றெல்லாம் படித்து விட்டு நிம்மதியாக வலைப்பதிவு படிக்கலாம் என்று வரும் வாசகனை இப்படிப் படுத்துகிறீர்களே! எடுத்த எடுப்பிலேயே விபத்து, மரணம், கூழ் அது இது என்று படித்தால் கடுப்பாகிறது. சினிமா பற்றி எழுதுகிறீர்கள், ஒரு "நல்ல" புகைப்படம் கூட கிடைக்கவில்லையா போடுவதற்கு? ஒரு எண்டெர்டெயின்மெண்ட் வேல்யூவே இல்லாமல் எழுதினால் என்ன பிரயோசனம்?

  ReplyDelete
 4. ஸ்ரீகா!

  சட்டியிலிருந்தால் தானே அகப்பைக்கு வரும்? :-)

  சட்டி - அங்காடித்தெரு
  அகப்பை - இந்த விமர்சனம்

  ReplyDelete
 5. இந்த விமர்சனத்தை முதல் நாளே எழுதமால் இப்ப வந்து உங்க கிட்டயும் டூ.

  ReplyDelete
 6. // இந்த விமர்சனத்தை முதல் நாளே எழுதமால் இப்ப வந்து உங்க கிட்டயும் டூ. //

  தோழர் இரும்புத்திரை எங்களைப்போன்ற ஏழை பதிவர்கள் நாளு நாள் சாப்பாட்டு காசை மிச்சப்படுத்தி படம் பார்க்கும் கூட்டத்தை சேர்ந்தவர்கள். மாசக்கடைசியில் சாப்பாடே திண்டாட்டம் இதில் முதல் நாளே படம் பார்த்து அவசர அவசரமாக விமர்சனம் செய்து ஹிட்வாங்கி சுவிஸ்வங்கியில் பணம் சேர்க்கவும் விருப்பமில்லை

  ReplyDelete
 7. யுவா, அதிஷா பதிவை படித்ததும் உங்க பதிவையும் ஆவலுடன் எதிர்பார்த்தேன்.

  பகிர்விற்கு நன்றி.

  ReplyDelete
 8. அதிஷா,

  // வாட் எ கோ இன்சிடென்ஸ்? //

  எப்படிங்க சளைக்காம பலகாலமா இப்பூடி?! :)


  லக்கி,

  // சட்டியிலிருந்தால் தானே அகப்பைக்கு வரும்? :-)

  சட்டி - அங்காடித்தெரு
  அகப்பை - இந்த விமர்சனம் //

  அகப்பை சரியா இல்லைன்னாலும் சட்டில இருந்து எடுக்க முடியாதுங் பிரதர்! :)

  ச்ச்சும்மா வார்த்தை வெளாட்டுக்கு சொன்னேங்க.. இது உங்க விமர்சனம் பற்றிய கருத்தல்ல...

  ReplyDelete
 9. //அகப்பை சரியா இல்லைன்னாலும் சட்டில இருந்து எடுக்க முடியாதுங் பிரதர்! :)//


  நாங்க கைய வுட்டு கிண்டி எடுக்கவும் தயார்.
  சட்டியில அவ்வளவு சரக்கு லேது....

  ReplyDelete
 10. //ஆஹா... உங்களுக்கு இந்த படம் பிடிக்கவில்லையா தோழர்? எனக்கும்தான். வாட் எ கோ இன்சிடென்ஸ்?

  என் கருத்துகளை பதிவாக எழுதியிருக்கிறேன். படித்து பார்த்துவிட்டு, கண்டிப்பாக ஓட்டு போட்டுவிட்டு உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்.

  http://www.athishaonline.com/2010/03/blog-post_30.html//


  ஜெமினி பிலிம் கம்பெனி லோகோவுல இருக்கிற பீப்பி ஊதுற பொம்மை உடைஞ்சு போச்சாம். மாடலுக்கு ஆள் தேடிக்கிட்டு இருக்காங்க.நீங்க ரெண்டு பேரும் தான் அதுக்கு சரி

  ReplyDelete
 11. இரும்புத்திரை சார்! இதுக்கு பதிலா எங்க ரெண்டு பேரையும் மொட்டை வெயில்ல அம்மணக்கட்டையா நிக்கவெச்சி வேடிக்கை பார்க்கலாம் :-)

  ReplyDelete
 12. //வில்லு,ஏகன் போன்ற உலக சினிமாக்களுக்கு மத்தியில் இந்த மாதிரி யாதார்த்த படங்கள் கொஞ்சம் கவனிக்க வைக்கிறது./

  NO பேருல இதை வச்சிருக்கிரவங்க எல்லாம் இப்படித்தானா சகா??? :))

  //எங்க ரெண்டு பேரையும் மொட்டை வெயில்ல அம்மணக்கட்டையா நிக்கவெச்சி வேடிக்கை பார்க்கலாம் :-/

  யாராலயும் பார்க்க முடியாது என்ற தைரியமா தோழரே?

  ReplyDelete
 13. தோழர்,
  இரும்புகுதிரையின் கமெண்டும் உங்க மறுமொழியும் வெடிசிரிப்பை தந்தது.
  நானும் ரெம்ப நாளா ரெண்டு பேருக்கும் எதிர் கருத்து உள்ள இடுகை எதாவது வரும்னு பாக்கறேன், வரமாட்டேன்குதே :(

  ReplyDelete
 14. //இப்படம் முப்பது நாட்களை தமிழகத் திரையரங்குகளில் கடந்தால் அதுவே உலக அதிசயம்//

  முப்பது நாட்களுக்கு பிறகு ஒரு உலக அதிசயம் உறுதி என்றே எனக்கு படுகிறது(உங்கள் கூற்றின் படி). இந்த முப்பது நாட்களுக்குள் நீங்க நாப்பது பதிவு எழுதி விடுவீர்கள். அதனால் என்னைப் போன்ற உங்களது வாசகர்கள் இதை சுலபமாக மறந்து விடுவார்கள் என்ற எண்ணமா?? நான் கேட்பனே!! :-)

  கண்ணாடித் தொழுவத்தில் சிக்கியவர்கள்: http://3.ly/9miQ

  ReplyDelete
 15. manasula kettavartha pottu thittitu thaan itha ezhuthuren!Gilliyayum,vettaikaranayumrasikkira sadharana cinema rasigan thaan naan ! aana..indha padatha paartha naanum en nanbarkalum romba impress aayitttom ! 1.jayamohanin uyirottamana vasanam,2.vasantha balanin uzhaippu 3.yella kathapathirankalum 4.kathaiyin unmai!
  platformla ninnu vikkaravan yen appidi kashtapdurannu yosikka vacha padam! aana sambandhame illama kudikaaran ularal pondra lucky matrum athishavin vimarsanangal 'karungaliyin' kodumaiyai vida verukka vachathu ! i'll be surprised if you publish this comment!ur review is a disaster and not the movie! hats off to vasanthabalan!

  ReplyDelete
 16. பிஸாரே!

  இதையேன் பப்ளிஷ் பண்ண மாட்டேன் என்று நினைத்தீர்கள்? நீங்கள் மனதில் நினைத்த கெட்ட வார்த்தைகளை டைப் செய்திருந்தாலும் கூட பப்ளிஷ் செய்திருப்பேன்!

  ReplyDelete
 17. thanks lucky for publishing! :)
  Btw,I read/heard reviews of this movie from various sources.but,found that only you and athisha've given negative remarks! have you ever tried to know the life of ppl from Nazareth,udankudi,thisayanvilai,sathankulam,peikulam,poochi kadu and adjoining areas and how they survive in the super stores at Ranganathan street.thank God,there is someone who can even look into their lives and made others feel what they are.I am sure ppl who saw this movie will undastand their pain.I remember Vijay's dialogue in vettaikaran on being 'different'(in)as you both have reviewed it differently from others...looks like you ppl want to show others that you are 'different'!!

  ReplyDelete
 18. பிஸாரே!

  இந்தப் படத்தின் நோக்கம் மோசமானது. சரவணா ஸ்டோரை நேரடியாக பிளாக்மெயில் செய்வது. சரவணாவின் போட்டியாளரான சவுந்தரபாண்டியன் ஸ்டோர்ஸுக்கு நன்றி போட்டு படத்தை ஆரம்பிக்கிறார்கள். இதிலேயே இயக்குனரின் உள்நோக்கம் தெளிவாகி விடுகிறது.

  தொழிலாளிகளின் சிரமங்களை படமெடுத்துக் காட்டுவதெல்லாம் ஓக்கே. ஆனால் இது பார்த்து சிலாகிக்க கூடிய படமல்ல என்பது என் கருத்து. அதே நேரத்தில் மோசமான படமென்றும் சொல்லவில்லை.

  தலையில் தூக்கி வைத்து கரகாட்டம் ஆடக்கூடிய அளவுக்கு இதில் ஒன்றுமேயில்லை என்றுதான் சொல்லியிருக்கிறேன்.

  ஒரு ஆவணப்படம் பார்த்த உணர்வைத்தவிர வேறெதையும் இது ஸ்பெஷலாக தந்துவிடவில்லை.

  ReplyDelete
 19. @பிசாரே

  நீங்கள் பட்டியலிட்ட ஊர்களிலிருந்து டிநகருக்கு வந்து கஷ்டப்படும் மாந்தர்களின் துயரங்கள் உங்களுக்கும் உங்கள் நண்பர்களுக்கும் உணர்த்தப்பட்டதால். இப்போது என்ன செய்யப்போகிறீர்கள், ரங்கநாதன் தெருவை தீயிட்டு கொழுத்தப்போகிறீர்களா?

  ReplyDelete
 20. @athisha:
  ungalin pathil sariyaanadhaga padavillai! I din't like ur 'attitude'!

  @lucky
  I agree with ur point as u have noted 'thanks' card to soundrapandian stores!

  masala,comedy endru different genre irukkiradhu ! vasanthabalan avarin genreil padam eduthullar !

  Nanbar athishavukkaka kacheri aarambam endru oru padam odukiradhu! leave sakkadai movies like 'angadi theru'

  ReplyDelete
 21. அங்காடித்தெருவிலேயே வருஷக்கணக்கா குடியிருந்த என்னை கேட்டிருக்கலாம். பி.ஆர்.எஸ் மேன்ஷன் பக்கத்து மொட்டை மாடியில படுத்தா மூனு மணிக்கு மேல கைலிக்குள்ள கையை விடுவானுங்க. அந்த கதையையும் சொல்லியிருப்பேன்...

  ReplyDelete
 22. //masala,comedy endru different genre irukkiradhu ! vasanthabalan avarin genreil padam eduthullar !//

  டிராஃபிக் ராமசாமி படம் எடுத்தார்னா இப்படித்தான் படம் எடுப்பார் :-)


  @செந்தழல்!

  தூள்!!!

  ReplyDelete
 23. // இதையேன் பப்ளிஷ் பண்ண மாட்டேன் என்று நினைத்தீர்கள்? நீங்கள் மனதில் நினைத்த கெட்ட வார்த்தைகளை டைப் செய்திருந்தாலும் கூட பப்ளிஷ் செய்திருப்பேன்!//

  இதெல்லாம் சரி... அப்புறம் எதுக்கு கமெண்ட் moderation எல்லாம் enable பண்ணிவச்சிருக்கீங்க? directஆ display பண்ணலாம்ல?

  ReplyDelete
 24. உங்களுக்கு தொழிளாலர்களின் பார்வை இல்லை போல தெரியுது....இல்லேன்னா....இப்படி...விமர்ஸனம் செய்ய மாட்டீங்க?

  ReplyDelete
 25. soundarapandi vs saravana equals Charu vs Jeyamohan.....
  I like your loyalty and committment to one cause..

  ReplyDelete
 26. லக்கி.. நன்றி.. முதல் நாள் இந்த படத்தை பார்த்துட்டு நானும் இதையேதான் சொன்னேன்.. அடுத்தடுத்து என் நண்பர்கள் எல்லோருமே படம் நல்லா இருக்கு உனக்கு படம் பார்க்க தெரியலன்னு சொல்லிட்டாங்க.. அதுலயும் படம் ஆரம்பிச்சதும் மதர் தெரஸாவ எல்லாம் காண்பிச்சு பாட்டு போட்டதும் எனக்கு தாவு தீர்ந்து போச்சு.. இந்த படம் ஓடும்ங்கற நம்பிக்கை எனக்கும் இல்லை காரணம்னா இந்த படத்தோட இசை அமைப்பாளரும், டைரக்டரும்தான்.

  ReplyDelete
 27. தனிப்பட்ட நட்பை திருப்தி செய்ய , அல்லது ஒருவரிடம் நல்ல பேர் வாங்க , ஜெயமோஹனை தேவை இல்லாமல் , சீண்டுவதாக உங்கள் மேல் ஒரு தவறான எண்ணம் இருந்தது....

  அதெல்லாம் சும்மா ஜாலிக்கு எழுதியது என்பதை உணர்கிறேன் ( நடிப்பில் சிறந்தவர் ரஜினிய , கமலா..- அஜித , விஜய என் ர பாணியில் )

  உங்கள் மீதான மதிப்பு, அதிகரித்து உள்ளது

  ReplyDelete
 28. இட்லிவடை2:32 PM, April 01, 2010

  சட்டியிலிருந்தால் தானே அகப்பைக்கு வரும்? :-)

  சட்டி - சாரு
  அகப்பை - இந்த விமர்சனம்

  ReplyDelete
 29. //ஸ்ரீகா!

  சட்டியிலிருந்தால் தானே அகப்பைக்கு வரும்? :-)

  சட்டி - அங்காடித்தெரு
  அகப்பை - இந்த விமர்சனம்//

  Srikanth has done a parody of your review. Read your review. Then read his review of your review, you'll understand.

  ReplyDelete
 30. அந்தக் கடையில் வேலை பார்த்தவர்களோடே படம் பார்த்த எனக்கு யதார்த்தமான படம் என்றே தோன்றுகிறது..!! தங்களைப் போன்ற அறிவு ஜீவிகளுக்கு வேறு விதமாகத் தெரிகிறது போலும்..!!

  ReplyDelete
 31. நாம முவரும் ஒரே புள்ளியில் இணைகிறோம்.

  வாட் அ கோ இன்சிடென்ஸ் லக்கி அண்ட் அதிஷா!

  //கதைநாயகி அஞ்சலி............ வாழ்ந்திருக்கிறார்கள்//

  பார்க்கவும் அஞ்சலியை.

  http://raviaditya.blogspot.com/2010/03/blog-post_31.html

  ReplyDelete
 32. யுகி

  நீங்கள் சொல்லும் அளவிற்கு அதெரு மோசம் இல்லை!

  வேட்டைக்காரன் / அசல் / (சுறா?) / (சிங்கம்?) / படங்களுக்கு மத்தியில் "அங்காடித் தெரு" பாராட்ட பட வேண்டிய படம்...

  ஏதாவது தேசிய விருது கிடைக்கும் என்ற நம்பிக்கையில்...

  மயிலாடுதுறை சிவா...

  ReplyDelete
 33. எதிர்பார்த்த விமர்சனம்.:) D.A

  கேபிள் சங்கர்..

  ReplyDelete
 34. //தனிப்பட்ட நட்பை திருப்தி செய்ய , அல்லது ஒருவரிடம் நல்ல பேர் வாங்க , ஜெயமோஹனை தேவை இல்லாமல் , சீண்டுவதாக உங்கள் மேல் ஒரு தவறான எண்ணம் இருந்தது....

  அதெல்லாம் சும்மா ஜாலிக்கு எழுதியது என்பதை உணர்கிறேன் ( நடிப்பில் சிறந்தவர் ரஜினிய , கமலா..- அஜித , விஜய என் ர பாணியில் ) //

  உளறுவது என்று முடிவெடுத்துவிட்டால் அப்புறம் சிந்திக்கவே கூடாது !!

  பார்வையாளன் , பிச்சை வெளுத்துக்கட்டுப்பா

  ReplyDelete
 35. படம் பார்த்தேன் படம் நல்லாத்தான் இருக்குது.

  ReplyDelete
 36. ஒரு அருமையான படத்தை அது சரியில்ல, இது சரியல்ல என நொட்டாரம் மட்டும் சொல்லத் தெரிந்திருக்கிறது. வந்துட்டார் 'டிராஃபிக் சிக்னல்' படத்தை ஒப்பிட. இப்படியெல்லாம் ஒப்பிட்டு, நீங்கள் அறிவுக்கொழுந்து என காட்டிக்கொள்வது வேடிக்கை. குறை குடம் கூத்தாடுவது போல இருக்கு உம் விமர்சனம் பார்த்தால்.

  பா.ராகவனின் விமர்சனத்தை படியுங்கள். ஒரு படைப்பை எப்படி, எந்த விதத்தில் விமர்சனம் செய்யவேண்டும் என்பது விளங்கும். ஜெயமோகனின் இணையத்தளத்தில் அங்காடித் தெருவைப் பற்றிய கட்டுரைகளுக்கு எழுதப்பட்ட பல பின்னூட்டங்கள் உங்கள் விமர்சனத்தை விட, கருத்துச் செறிவுள்ளத்தாக காணப்படுகிறது.

  ReplyDelete
 37. பொதுவாகவே மனித மனம் துன்பியலை வெறுக்கத்தான் செய்கிறது. அவ்வகையில் பார்த்தால் இந்த படத்தில் வரும் இறுதிக் காட்சி படத்தின் ஒட்டுமொத்த தன்மையையும் மாற்றிவிடுகிறது. நாயகனும் நாயகியும் கடையில் இருந்து துரத்தப்பட்டவுடன் படத்தை முடித்து இருக்கலாம். அதன் பிறகு ரசிகனுக்கு அதிர்ச்சி கொடுக்க வைக்கப்பட்டிருக்கும் லாரி விபத்து படத்தின் ஒட்டுமொத்த அழகியலையும் கெடுத்து படத்தை துன்பியல் படமாக மாற்றி விடுவதால் படத்தின் நோக்கம் அமுங்கி போய் விடுகிறது. நாயகனின் முதல் காதல் முறிவதற்க்கான காரணமாக காண்பிக்கப்படும் காட்சி மட்டமான ரசனை என்பதில் எந்த மறுப்பும் இல்லை. இந்த இரு காட்சிகளையும் தவிர்த்து பார்த்தால் இந்த படம் நிச்சயமாக ஒரு வாழ்க்கை பதிவுதான். படத்தின் போக்குக்கு தொடர்பு இல்லாமல் வரும் காட்சிகள் சுவாரஸ்யமாகவே உள்ளன.

  ReplyDelete
 38. //ஊர்ந்து ஊர்ந்து சென்றுகொண்டிருந்தபோது ஒரு மாதிரியான கவுச்சி வாடை.
  //அவற்றையும் மீறி சாலையில் கசிந்து கொண்டிருந்தது மனிதக்கூழ்.

  உங்களோட blog படிக்கும் போது கூடத்தான் எனக்கு ரொம்ப அருவருப்பா இருந்தது அதுக்காக நீங்க சொன்னது உண்மை இல்லை என்றாகிவிடுமோ!
  அதே போலதான் இந்த படமும். மனித வாழ்கையில் நடக்கிற விஷயங்கள் தான் அனைத்தும், அப்படி ஒன்றும் இல்லை என்று சொல்ல முடியுமா?
  இந்த படம் பார்க்கும் போது நான் யோசிச்சதேல்லாம் ஒன்றுதான்! இவ்வளவு கஷ்டங்களை பார்க்கவே முடியலையே ஆனா அத அனுபவிக்கிறார்களே அவர்களை பற்றிதான்!

  //மனிதக் கவுச்சி வாசனையை மட்டுமன்றி அஞ்சலியின் வியர்வை மற்றும் மல்லிகைப்பூ கலந்த கவர்ச்சி வாசனையையும் என்னால் உணரமுடிந்தது. அதுபோலவே மகேஷின் ஆண்மையான வாசனையும்.

  தப்பாவே போட்ட யாரும் நம்ப மாட்டங்க என்பதற்காக சும்மா பேருக்கு சில வரி அதுவும் நீங்க நடுநிலைமையா இருக்குற மாதிரி காட்டனுங்கிறதுக்காக போட்டிருக்கீங்க ! எதுக்குடா இந்த மானம் கெட்ட பொழப்பு
  இத ஒரு வேளை நீங்க அனுபவிச்சதுனால ஏத்துக்க முடியுது மற்றது முடியல! அது போலதான் இந்த படம் முழுவதும் எல்லாருடைய அனுபவம்
  அனுபவிச்சவங்களாலதான் ஏத்துக்க முடியும்.. உன்ன மாதிரி மேதாவிங்களுக்கு புரியாது....

  உங்களுக்காகவே பேரரசு போன்ற கமர்சியல் டைரக்டர் இருக்காங்க அவங்க படமா போயி பார்க்க வேண்டியதுதானே! வசந்த பாலன்
  படம்னா எதற்தமாதான் இருக்குமுன்னு தெரியுமுல்ல அப்புறம் எதுக்குடா இந்தமாதிரி படத்துக்கு வர்றீங்க! அப்படி உன்னக்கு தெரியலேனா நீ சினிமாவ பத்தி விமர்சனமே பண்ணவே தகுதி இல்லாதவன்..... உங்களமாதிரி கூட்டம் எந்த விஷயத்திலேயும் இருக்குற நல்லதா எடுத்துக்க தெரியாதஞானீங்க!

  சில இடத்தில 'நீங்க' , 'உங்க' மரியாத கொடுத்தது உங்க மனச கஷ்ட்ட படுத்த கூடாதுங்கிறதுக்குதான்! அதே போல தான் சிலரு நல்ல படம் எடுக்கும் போது அத ஆதரிக்கலேனாலும் பரவாயில்ல அசிங்கபடுத்தாதீங்க

  ReplyDelete
 39. Ramesh Manivannan,sariyana nethi adi kudutheenga! luckyin fan aana enakke indha vimarsanam avar mel ulla abhiprayathai matra seidhadhu!
  romba aacharyamaaana vishayam ennenna blog in tharpodhaiya 'meals'matter romba manithathanmaiyai membaduthum paaraattum pathivaga ullathu! ivvalavu (soft n senitive)menmaiyana manathudaya lucky eppadi agadi theruvai rasikkavillai enbadhe en aacharyam!

  ReplyDelete
 40. Nee type senjiripiya? dei.. baadu. unaku enna theriyumnu nee ellam vimarsanam panra..

  Do u know how much effort involved in movie making.. ? nee enna pudingiya?

  ReplyDelete
 41. நண்பர்களே!

  இந்த விமர்சனத்தில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது?

  அங்காடித் தெரு கதாநாயகனுக்கும், எனக்கும் பெரியளவில் வித்தியாசமில்லை. நான் குடும்பச் சூழலால் 16 வயதில் பணிக்கு வந்தவன். படத்தில் காட்டப்படுவதைப் போல பணியிடங்களில் கசக்கிப் பிழியப்பட்டவன். என்னுடைய நட்பும், உறவுகளும் இன்றும் இதே நிலையில் இருப்பவர்கள். நான் மிகக்கொஞ்சம் மட்டுமே அந்நிலையிலிருந்து முன்னேறியிருக்கிறேன்.

  நியாயமாக பார்க்கப் போனால் உங்களையெல்லாம் போல என்ஜினியரிங் முடித்து இன்று பல்லாயிரங்களில் சம்பளம் வாங்குகிறவர்களை விட எனக்குதான் இப்படம் அதிகமாக பிடித்திருக்க வேண்டும்.

  ஏன் பிடிக்கவில்லையென்று தெளிவாகவே எழுதியிருப்பதாக நினைக்கிறேன். மிகை யதார்த்தம் என்பது அமெச்சூர்த்தனத்துக்கு நேரெதிர் எக்ஸ்ட்ரீம் கார்னர். இப்படம் அந்த கார்னரை தொட்டிருக்கிறது என்பது என் அபிப்ராயம்.

  கேப்பே இல்லாமல் டைட்டாக உருவாக்கப்பட்டிருக்கும் இப்படத்தை தமிழக சாமானியர்கள் நிராகரிப்பார்கள் என்றும் கணித்திருக்கிறேன். அக்கணிப்பு மெய்யாகுமா பொய்யாகுமா என்று அடுத்த சில தினங்களில் தெரிந்துவிடும்.

  உங்களுக்கெல்லாம் பிடித்த ஒரு சமாச்சாரம் எனக்கும் பிடித்தே ஆகவேண்டும் என்பது எனக்கு தலையெழுத்தா என்ன?

  ReplyDelete
 42. Athisa & Yuva,

  you fucking cheerleeders of charu.
  Everybody knew,Just to get attention, you are posting different opinion.

  Continue your efforts.

  ReplyDelete
 43. யாருடன் போய் படம் பார்க்கிறோம் ,எந்த நிலைமையில் படம் பார்க்கிறோம் என்பதும் படம் பார்க்கும் கண்ணோட்டத்தை மாற்றுகிறது ! சும்மா சலம்பிக்கொண்டிருக்கும் சில புத்திசாலி என்று தன்னை நினைத்து கொண்டிருக்கும் நண்பர்கள் நல்ல படத்தை கூட கிழித்து தொங்க போட்டு விடுவார்கள்!உங்கள் கருத்து இது என்பதை ஒப்பு கொண்டாலும் இதில் நேர்மை இல்லைyo என்று அஞ்சுகிறேன் ! மேலும் உங்களுக்கு நிறைய வாசகர்கள் இருப்பதால் கூட கொஞ்சம் யோசித்து விமர்சனம் பண்ணினால் தேவலை என்றே தோன்றுகிறது !

  ReplyDelete
 44. ஆம் அங்காடித் தெரு ஒரு வகையில் மிகைபடுத்தபட்ட நாடகம் தான். பி, சி செண்டரில் 30 நாட்கள் ஓடினாலே பெரிய சாதனை. என் குடும்பத்தார் தேனியில் இருந்த தியேட்டருக்கு போன போது, தியேட்டரில் மொத்தம் 50 பேர் கூட இல்லை என, என் தந்தை கூறினார்.

  இது போன்ற படங்களில் கலகலப்பு ஊட்டும் அம்சங்கள் குறைவாக இருப்பின், படம் நகர்வது நத்தை ஊர்வது போல் தான். சுப்ரமணியாபுரம், பிதாமகன் போன்ற படங்கள் பி, சியில் பல நாட்கள் ஓடியதற்கு இதுவும் ஒரு காரணம்

  நானும் ‘ட்ராஃபிக் சிக்னல்’ படம் பார்த்தேன். இந்த படத்திற்கும், அங்காடித் தெருவிற்கும் பொதுவானது, சமூகத்தில் அதிகமாக நிராகரிக்கபட்டவர்களை சித்தரிக்கபட்டது மட்டுமே. மற்றபடி இரு படங்களுக்கும் பொதுவான வேறு கூறுகள் இல்லை என்பதே என் கருத்து...

  ReplyDelete
 45. //“செத்துடாம்பா. நீ பஸ்ஸை எடு. அவசரமா போவணும்!” என்று பயணிகள் வற்புறுத்த, 54எச் பிராட்வே நோக்கி சென்றிருக்கிறது.//
  ரொம்பக் கொடுமையா இருக்கே. இம்மாதிரி விபத்துகளில் வண்டியை அப்படியே அதேஇடத்தில் நிறுத்தி போலீசார் வந்து கோடு போடும்வரை பஸ்ஸை எடுக்கவியலாதே.

  ஓட்டுனரும் நடத்துனரும் செய்தது சட்டப்படி குற்றம் ஆயிற்றே.

  என்ன நடக்கிறது இங்கே?

  அன்புடன்,
  டோண்டு ராகவன்

  ReplyDelete
 46. என்ன நடக்கிறது இங்கே?

  அன்புடன்,
  டோண்டு ராகவன்

  டோண்டு சார்,

  ஜெ... ஆட்சியில் இருந்தால் எல்லாம் சரியாக இருக்கும்.. இதனால்தான் சோ... ஜெ... ஆட்சிக்கு வர வேண்டும் என்கிறார் என நீங்கள்தானே சொல்ல வேண்டும்...

  ReplyDelete
 47. நண்பர்களே!

  இந்த விமர்சனத்தில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது?

  நியாயமாக பார்க்கப் போனால் உங்களையெல்லாம் போல என்ஜினியரிங் முடித்து இன்று பல்லாயிரங்களில் சம்பளம் வாங்குகிறவர்களை விட எனக்குதான் இப்படம் அதிகமாக பிடித்திருக்க வேண்டும்.

  ஏன் பிடிக்கவில்லையென்று தெளிவாகவே எழுதியிருப்பதாக நினைக்கிறேன். மிகை யதார்த்தம் என்பது அமெச்சூர்த்தனத்துக்கு நேரெதிர் எக்ஸ்ட்ரீம் கார்னர். இப்படம் அந்த கார்னரை தொட்டிருக்கிறது என்பது என் அபிப்ராயம்.

  கேப்பே இல்லாமல் டைட்டாக உருவாக்கப்பட்டிருக்கும் இப்படத்தை தமிழக சாமானியர்கள் நிராகரிப்பார்கள் என்றும் கணித்திருக்கிறேன். அக்கணிப்பு மெய்யாகுமா பொய்யாகுமா என்று அடுத்த சில தினங்களில் தெரிந்துவிடும்.

  உங்களுக்கெல்லாம் பிடித்த ஒரு சமாச்சாரம் எனக்கும் பிடித்தே ஆகவேண்டும் என்பது எனக்கு தலையெழுத்தா என்ன?

  லக்கி,

  படத்தின் குறைகளை கொஞ்சம் விவரமாக உங்கள் விமர்சனத்தில் சொல்லி இருக்கிறீர்கள்...

  இப்போது வரும் வேட்டைகாரன், அசல் போன்ற கழிசடை படங்களை விட இந்த படம் எவ்வளவோ மேல்... மேலும் படம் நடிகையின் தொடையையும், சதையும் நம்பி எடுக்கப் பட வில்லை...

  இந்த படத்தின் மூலம் நாம் சொல்ல வேண்டிய செய்தி... எல்லா பணிகளிலும் பணியாளர்கள் அடிமையாக்கப் பட்டு... அறிவு நசுக்கபடுகிறார்கள் என்பதே உண்மை...

  உங்களுக்கு நன்றாக தெரிந்திருக்கும்... 20 ஆண்டுகளுக்கு முன் சென்னை அரங்கநாதன் தெருவில் இருந்த நிறுவனங்கள் எப்படி காணமல் போனது என்பதை எல்லோரும் மறந்து விட்டோம்...

  நீங்கள் நியாயப்படுத்தும் அளவிற்கு... அண்ணாச்சிகள் ஒன்றும் யோக்கியர்கள் இல்லை என்பதும் உண்மை...

  ReplyDelete
 48. //நியாயமாக பார்க்கப் போனால் உங்களையெல்லாம் போல என்ஜினியரிங் முடித்து இன்று பல்லாயிரங்களில் சம்பளம் வாங்குகிறவர்களை விட எனக்குதான் இப்படம் அதிகமாக பிடித்திருக்க வேண்டும்.//

  மீண்டும் பாருங்களேன் உங்களுடைய கூற்று தவறாகவே உள்ளது.... சொல்லப்போனால் நானும் இன்ஜினியரிங் தான்.... ஆனால் நீங்கள் சொல்லுமாறு
  பல்லாயிரங்களில் சம்பளம் வாங்கவில்லை.... முதலில் வேலை கிடைக்கா திண்டாட்டம், இத்தனைக்கும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றும்.... அப்பாடா வேலை கிடைத்தது என்றால்
  முதல் இரண்டு மாதங்கள் சம்பளம் இல்லா வேலை, பிறகு 1k per month....
  1k என்றால் ஆயிரம் ரூபாய், படிப்படியாக உயர்ந்து நல்ல சம்பளம் வாங்க கிட்டதட்ட 3 to 4 வருடங்கள் ஆகிவிட்டது....

  // உங்களுக்கெல்லாம் பிடித்த ஒரு சமாச்சாரம் எனக்கும் பிடித்தே ஆகவேண்டும் என்பது எனக்கு தலையெழுத்தா என்ன? //

  அதே தான் நண்பரே, இந்த படம் 'எனக்கு பிடிக்கவில்லை', ' எனக்கு அங்காடி தெரு அப்படியொன்றும் அழகில்லை' என்று குறிப்பிட்டிருக்க வேண்டும்....
  பொதுவாக சொல்லக்கூடாது.... நீங்கள் அதோடு நிறுத்தவில்லையே? இந்த படம் 30 நாட்கள் ஓடினாலே பெரிய சாதனை என்றல்லவா சொல்லியிருகிரீர்!
  அப்படி 30 நாட்களை தாண்டி ஓடி விட்டால்? இந்த படத்தை பற்றிய என்னுடைய கருத்து தவறு என்று ஒத்துகொள்ள முடியுமா?
  இந்த படத்தை பற்றிய என்னுடைய விமர்சனம் தவறு என்று விமர்சனத்தின் மேலே போடா முடியுமா?

  ReplyDelete
 49. மனிதர்களிடம் உள்ள குருரம் அ.தெரு வின் விமர்சனங்களில் தெரிகிறது.இது ஒரு சமுகத்தின் மிக முக்கிய பிரச்சனைய,வெயிலில் வெந்து எடுத்து அ.தெரு மழையில் நனைய வைக்கிறார். 20 ஆண்டுகள் எனக்கு தி.நகர் பரிச்சயம் உண்டு.ஏறக்குறைய 25000 பேர் இப்பகுதியில் பணிபுரிகின்றனர். ச.ச ஊழியர்கள் தினசரி கடையில் வீணாக்கும் பொருட்கள் பல ஆயிரங்களை தாண்டும். மேலும் பாத்ரூம் அதிக நேரம் இருக்கும் பெண்களையும் பார்த்ருக்கிறேன்.No Vacancy போர்டுகள் மாட்டப்பட்ட பழைய படங்களை நாம் பார்த்திருப்போம். இன்று இப்பகுதியில் உள்ள வேலை வாய்ப்புகள் அதிகம். ஹுண்டாய் கார் தொழிற்சாலையில் பணிபரியும் ஊழியர் எண்ணிக்கை எவ்வளவு? ஒரு கொடி நட முடியவில்லை அங்கு.மேன்சன்களில் மெய்ந்து நள்ளிரவில் திரும்பும் குடி மன்னர்களாகிய இயக்குனர்களின் மூளையில் உதித்ததுதான் அ.தெரு. சாருவின் விமர்சனம். மற்றும் இந்த விமர்சனம் நன்று.கொஞ்சம் மார்க்சியம், கொஞ்சம் பார்ப்பனிய எதிர்ப்பு,கொஞ்சம் அழகியல்,வலிந்து திணிக்கப்படுதல். போன் மிக்சிங் சினிமா தற்போது அதிக அளவில் வந்து கொண்டுருக்கின்றன. சினிமாவில் வாய்ப்பை தேடி அலையும் வ.கர்த்தாக்களூக்கு இது ஒரு சாட்டையடி.

  ReplyDelete
 50. //இப்படம் முப்பது நாட்களை தமிழகத் திரையரங்குகளில் கடந்தால் அதுவே உலக அதிசயம்//

  கோவை, வேலூர், சென்னை என்று பல ஊர்களிலும் நாற்பதாவது நாள் சுவரொட்டியைக் காண முடிகிறது..

  ReplyDelete
 51. லக்கி,இந்த படம் அறிவு ஜீவிகளுக்கான படம் இல்லை.
  மட ஜீவிகளுக்கான படம்.உங்கள் குருவின் விமர்சனம் எனக்குத் தந்த ஆறுதலை என்னால் சொல்ல இயலாது...வசந்த பாலன் போன்ற நோய் பிடித்த, மர மண்டைகளிடமிருந்து
  தமிழ் சினிமாவை காப்பாற்ற வேண்டும். இந்தக் கேவலத்துக்கு
  குருவி, கழுதை போன்ற படங்களே தேவலை....

  ReplyDelete
 52. I'm new one to your blog.,Just now i read your review about this movie.,
  "செத்துடாம்பா. நீ பஸ்ஸை எடு. அவசரமா போவணும்" This lines creates more impace than the movie..,

  Sorry

  ReplyDelete