20 மார்ச், 2010

வரலாறு படியுங்க எழுத்தாளரே!

நைஜீரியாவில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை எழுத்தாளருக்கு ஒரு வாசகர் அனுப்பினாராம். உடனே ஞானமரபு துணைகொண்டு எழுத்தாளரும் ஒரு நைஜீரிய-இந்திய ஒப்புமை கட்டுரை வரைந்திருக்கிறாராம். பாழாய்ப்போன தமிழ் இலக்கிய எழுத்துச்சூழலில்தான் இதுமாதிரி நகைச்சுவைகள் நடக்கும். நாவலாசிரியர்கள், பத்தி எழுத்தாளர்கள் எல்லாம் வரலாற்று ஆராய்ச்சியாளர்களாக மாறும் கூத்து இங்கேதான் நடக்கும்.

எழுத்தாளர் நைஜீரியச் சூழலை ஆழமாக ஆற அமர நீண்டகாலமாக அவதானித்து வருகிறாராம். ஏனெனில் அங்கே ‘இஸ்லாம்’ இருக்கிறது. அரேபியாவில் இருந்து இஸ்லாம் அங்கே போனதுதான் இன்றைய நைஜீரிய அவலங்களுக்கு காரணம் என்று வருத்தப்படுகிறார் எழுத்தாளர். எழுத்தாளரின் மனிதநேயத்தை கண்டு நாமெல்லாம் புல்லரித்துப் போகலாம்.

இதோடு விட்டுவிட்டிருக்கலாம் நம் எழுத்தாளர். அடுத்து வரலாற்றினை நோண்டி, நொங்கெடுக்கிறார்.

இந்தியவரலாற்றில் என்ன வேறுபாடு? இங்குள்ள இஸ்லாம் அல்லாத பேரரசுகள் இஸ்லாமை கட்டுப்படுத்தி பேரழிவில் இருந்து இந்தியாவைக் காத்தன என்பதே. தங்குதடையிலா அதிகாரம் இஸ்லாமுக்கு எப்போதுமே கிடைத்ததில்லை. ராஜபுத்திரர்கள், அதன்பின் விஜயநகரம், அதன் பின் மராட்டியர்கள் என வலுவான எதிர்விசை எப்போதும் இருந்தது. எந்நிலையிலும் போர் நிகழ்ந்துகொண்டே தான் இருந்தது. ஆகவே சமரசம் மூலமே இஸ்லாமியர் ஆளமுடிந்தது. நேரடி ஆட்சி அமையவில்லை, கப்பம் கட்டும் நாடுகளின் தொகையாகவே இஸ்லாமிய ஆட்சி நீடிக்க முடிந்தது.

என்ன கொடுமை சார் இது? இதுவரை இந்திய வரலாற்றை ஆராய்ந்த எந்த ஆராய்ச்சியாளருமே இவ்வளவு நுட்பமான விஷயத்தை சொன்னதேயில்லையே?

அவுரங்கசீப் காலக்கட்டத்தில்தான் socalled இந்துஸ்தானம் என்று சொல்லப்படுகிற இந்தியா மிகப்பரந்த நிலப்பரப்பை கொண்டிருந்ததாக தவறாக இதுவரை நாம் வரலாற்றைப் புரிந்துக் கொண்டிருக்கிறோம். தங்குதடையில்லா அதிகாரம் இஸ்லாமுக்கு இங்கே கிடைக்காததால்தான் ஒருவேளை பல இந்திய சிற்றரசர்கள் அவர்களாகவே முன்வந்து இஸ்லாமை தழுவினார்களோ?

ராஜபுத்திரர்கள், விஜயநகரம், மராட்டியர்கள் எல்லாம் இஸ்லாமை இங்கிருந்து ஓட ஓட விரட்டியடித்ததாக இப்போதுதான் நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. இவர்களுக்கு எல்லாம் பயந்து, பணிந்து போய்தான் முகலாயர்களால் நூற்றாண்டுக்கால சாம்ராஜ்யத்தை இங்கே நிறுவமுடிந்தது என்பதையும் எழுத்தாளர் தனது ஞானமரபு தந்த உள்ளொளி தரிசனத்தால் உணர்ந்து நமக்கு எடுத்தியம்புகிறார்.

சொல்வது எழுத்தாளர் ஆயிற்றே? நாமும் நம்பிவிட்டு வாசகர் கடிதம் அனுப்புவோம். பாராட்டி பின்னூட்டம் போடுவோம்.

எழுத்தாளருக்கு அவரது வாசகர் அனுப்பியிருக்கும் நைஜீரிய படத்தைப் போன்று சில படங்களை, நமக்கும் நம் வாசகர் ஒருவர் அனுப்பியிருக்கிறார். அவற்றில் பல படங்களை இங்கே பிரசுரிக்கவே இயலாத வகையில் இருக்கின்றன. யாருக்காவது நேரம் நிறைய இருந்தால் Gujarat atrocity என்று டைப் செய்து கூகிளில் தேடி பார்க்கலாம். ஒரு சில படங்களை மட்டும் இங்கே பிரசுரிக்கிறோம்.

நைஜீரியாவுக்கும், இந்தியாவுக்கும் இந்த விஷயத்தில் என்ன வேறுபாடு என்று எழுத்தாளர் ரேஞ்சில் நாமும் கொஞ்சம் சிந்தித்துப் பார்ப்போம். அங்கெல்லாம் இனக்குழுக்களின் மோதலில் இதுபோன்ற வன்முறைகள் நிகழும். இங்கே மோதலுக்கு காரணமாக இருப்பவரே அப்பகுதியினை ஆளக்கூடிய அதிகாரத்தில் இருப்பார். எதிர்குழு பெண்களின் யோனிகள் நம் குழு இளைஞர்களின் விந்துகளால் நிரம்பட்டும் என்று மேடையில் முழங்குவார்.


கனவில் விமானம் பிடித்து, நைஜீரியாவுக்குப் போய் மனிதநேயம் காட்டும் எழுத்தாளரே, கூரை ஏறிப் பாருங்கள் போதும். குஜராத் தெரியும்.

84 கருத்துகள்:

 1. தெளிவாக எழுதினாலுமே சரியாக புரிந்து கொள்ளமுடியாமை உமது குறையே.

  "From the start of his reign up until his death, Aurangzeb engaged in almost constant warfare. He built up a massive army, and began a program of military expansion along all the boundaries of his empire. Aurangzeb pushed north-west into the Punjab and what is now Afghanistan; he also drove south, conquering Bijapur and Golconda, his old enemies. He attempted to recover those portions of the Deccan territories where the Maratha king Shivaji was sparking rebellions.

  This combination of military expansion and religious intolerance had deeper consequences. Though he succeeded in expanding Mughal control, it was at an enormous cost in lives and treasure. And, as the empire expanded in size, Aurangzeb's chain of command grew weaker. The Sikhs of the Punjab grew both in strength and numbers, and launched rebellions. The Marathas waged a war with Aurangzeb which lasted for 27 years. Even Aurangzeb's own armies grew restive — particularly the fierce Rajputs, who were his main source of strength. Aurangzeb gave a wide berth to the Rajputs, who were mostly Hindu. While they fought for Aurangzeb during his life, on his death they immediately revolted against his successors.

  With much of his attention on military matters, Aurangzeb's political power waned, and his provincial governors and generals grew in authority."

  --Thanks wiki.
  முஸ்லிம் ஆட்சிக்கு எதிர் விசை இருந்தது. விஜய நகர சாம்ராஜ்யத்தை நிறுவிய வித்யாரண்யர் சிருங்கேரி மடாதிபதி ஆவார். சிவாஜி பற்றி சொல்லி தெரிய வேண்டியதில்லை. ஸ்ரீரங்கத்தின் கதை படித்தால் கூட தமிழ் நாட்டில் எதிர்ப்பு எப்படி இருந்தது என்று தெரிய வரும். வல்லாளன் என்ற மன்னன் பற்றியும் தேடி படிக்கலாம்.

  ஜெமோ அவர்களின் அறிவு திறன் வியக்க வைக்கிறது. அர்த்தமுள்ள வாதங்கள். அவரை எனக்கு அறிமுக படுத்திய சாருவிற்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.

  பதிலளிநீக்கு
 2. நன்றி ஜெமோ வாசகரே!

  ஜெமோவைப் போல விக்கிப்பீடியாவில் இருந்து 100 சதவிகிதம் நம்பத்தகுந்த ஆதாரத்தை தந்திருக்கிறீர்கள்.

  இப்போது இந்திய அரசுக்கு கூடத்தான் மாவோயிஸ்டுகள், தமிழ்தேசிய வாதிகள் போன்றவர்களிடம் இருந்து எதிர்விசை இருக்கிறது. இவர்கள் எல்லாம் இந்திய ஆதிக்கத்தை கட்டுப்படுத்தி வைத்திருக்கிறார்கள் என்று என்னால் அர்த்தமில்லாமல் உளறமுடியுமா?

  இஸ்லாமியர்கள் இங்கே ஐந்து நூற்றாண்டுகள் எதிர்ப்புகளை நசுக்கி கட்டி ஆண்டார்கள் என்பது மறுக்க முடியாத வரலாறு. எந்த அரசன் தான் வரலாற்றில் எதிர்விசை இல்லாமல் ஆண்டிருக்கிறான்?

  ஜெமோவின் அறிவுத்திறன் தங்களை வியக்க வைத்திருப்பதில் எனக்கு ஆச்சரியம் ஒன்றுமில்லை! :-)

  பதிலளிநீக்கு
 3. நன்றி யுவா தவறை திருதிதிக் கொண்டேன். நக்சல்கள் அளவுக்கு தான் எதிர்த்திருக்கிறோம். அவர்களுக்கு நமது கோயில்கள் மற்றும் நமது மதத்தின் மீது இருந்த மதிப்பால் ஹிந்து மதம் தப்பிப் பிழைத்திருக்கிறது. அவர்கள் பெரிய வீரர்கள் தான். சூப்பரா சொன்னிங்க.

  ஜெமொ வாசகன்

  பதிலளிநீக்கு
 4. உங்கள் பதிவை படித்ததும் தோன்றிய சில எண்ணங்கள்:

  // நைஜீரியாவில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை எழுத்தாளருக்கு ஒரு வாசகர் அனுப்பினாராம். உடனே ஞானமரபு துணைகொண்டு எழுத்தாளரும் ஒரு நைஜீரிய-இந்திய ஒப்புமை கட்டுரை வரைந்திருக்கிறாராம். பாழாய்ப்போன தமிழ் இலக்கிய எழுத்துச்சூழலில்தான் இதுமாதிரி நகைச்சுவைகள் நடக்கும். நாவலாசிரியர்கள், பத்தி எழுத்தாளர்கள் எல்லாம் வரலாற்று ஆராய்ச்சியாளர்களாக மாறும் கூத்து இங்கேதான் நடக்கும். //
  1. சினிமா கிசுகிசு பாணியில் எழுத்தாளார், ஞான மரபு என்று எழுதுகிறீர்கள். ஏன்? ஜெயமோகன் எழுதி இருப்பது தவறு என்று நேரடியாக எழுதாதது கண்ணியக் குறைவாக உங்களுக்கு தோன்றவில்லையா?

  2. வராலாற்று ஆராய்ச்சியாளராக மாறும் கூத்து என்று எழுதுகிறீர்கள். சரி. அப்புறம் அவுரங்கசீப், விஜயநகரம், குறைந்தபட்சம் ஜெயமோகனின் ஆராய்ச்சி தவறு என்று பத்தி எழுதும், வரலாற்று ஆராய்ச்சியாளர் இல்லாத நீங்கள் எப்படி எழுதுகிறீர்கள்? இதில் உள்ள முரண்பாடு ஆச்சரியப்படுத்துகிறது. வரலாற்றைப் பற்றி "ஆராய்ச்சி" செய்ய, சிந்திக்க, முடிவுகளுக்கு வர தகுதி வேண்டும், ஜெயமோகனுக்கு தகுதி இல்லை என்று நினைக்கிறீர்கள். எனக்கு இசைவில்லை, ஆனால் உங்கள் கருத்தை புரிந்து கொள்ள முடிகிறது. அப்படி நினைப்பவர் அவர் "ஆராய்ச்சி" தவறு என்று சொல்ல உங்களுக்கு உள்ள தகுதியையும் அப்போது நீங்கள் விளக்க வேண்டாமா?

  3. ஜெயமோகன் குஜராத் பற்றி எதுவும் சொல்லவில்லை என்று சொல்கிறீர்கள். எனக்கு பர்சனலாகத் தெரியாது, ஆனால் நீங்கள் சொன்னால் சரி. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று அவரை கேட்கலாமே? குஜராத் கலவரத்தை அவர் நியாயப்படுத்துவார் என்று அவர் பதிவுகளிலிருந்து எனக்கு தோன்றவில்லை. அப்புறம் குஜராத் பற்றி பத்தி எழுதாதவர்கள் அந்த படுகொலைகளை ஆதரிக்கிறார்கள் என்று அர்த்தமா?

  பதிலளிநீக்கு
 5. இதை படிச்சிட்டு ஜெயமோகன் அவர்களின் சைட் பக்கம் போனேன். சரியாக படிக்க முடியல. ரொம்ப உற்று பார்க்க வேண்டியது இருக்கு. ஒரு வேலை ஜெயமோகன் தனது பிளாக்கை படிப்பவர்களுக்கு மந்திர கண்கள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார் போல (எனக்கு கொஞ்சம் பார்வை குறைபாடு )

  ஒரு வேளை நான் இலக்கியவாதி இல்லாததால் எனக்கு அப்படி தெரியுதா ?????

  பதிலளிநீக்கு
 6. என்னது பாபர் மசுதிய இடிச்சுட்டாங்களா ?!!

  பதிலளிநீக்கு
 7. Lucky, if you write continuously like this one sided articles... you will become a joker for sure.
  You love Islam that is fine. You have the religious freedom. I dont understand what you are trying to do by always supporting a religion and yelling at other. Any religion is neither bad nor good. Are you arguing that islam has not done any mistake so far?

  பதிலளிநீக்கு
 8. Lucky, neenga pattu thirunthura case nnu enakku theriyum. Pattu thiruntha vaazhthukkal.

  பதிலளிநீக்கு
 9. Asiriyar varalaru padikkirathu appuram irukkattum.. mudhalla neenga unga ezhulaththa paththi aduththavanga enna ninaikkiraangannu padinga... padichaa thaan konjamaavathu padikiravanga nilamaiyaiyum yosikka mudiyum..... ellana charuvukku "allinall2010" maathiri ungalukku onnu aarambichiduvaanga.

  பதிலளிநீக்கு
 10. Periyaar solli thantha paguththarivai vachchu yochichu paarthaen. Vyaapaara vishayaththula periyaarukkum, nithyanandharukkum endha vithyaasamum theriyala. arasiyal selvaakku periyarukku oru added advantage avlo thaan puriyuthu

  பதிலளிநீக்கு
 11. அன்பின் கூட்டாஞ்சோறு!

  1. இங்கு எதுவுமே கிசுகிசு பாணியில் இல்லை. ஜெயமோகன் ஒரு எழுத்தாளர் என்பது உங்களுக்கு கிசுகிசுவாக தெரிகிறதா?

  2. நான் வரலாற்று ஆராய்ச்சி எதுவும் செய்யவில்லை. ஏற்கனவே பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட வரலாற்றை சுட்டிக் காட்டியிருக்கிறேன்.

  3. ஜெயமோகனுக்கு இந்து தீவிரவாதம் பற்றி எதுவுமே தெரியாது. அப்படி ஒன்று இல்லையென்று அவர் நம்புவதாக அவரது எழுத்துகளை வாசிக்கும்போது அறிய முடிகிறது. மாறாக அவர் எங்கேனும் குஜாராத், மாலேகான், பாபர்மசூதி இத்யாதிகளை கண்டித்திருக்கிறார் என்றால் அறியத் தாருங்கள்.

  பதிலளிநீக்கு
 12. அன்பின் சத்யபால்,

  தாங்கள் எழுதியிருப்பது ஆங்கிலம் போல தெரிகிறது. ஆனால் ஆங்கிலமில்லை. எனவே என்னால் புரிந்துகொள்ள இயலவில்லை. மன்னிக்கவும்.

  பதிலளிநீக்கு
 13. I'm repeating.. JM is way too much for you and you have nothing to do with his articles..You better stick to charu nivethitha...be a writer of interesting articles and don't get into serious things..or else you'll join the band of jokers around here in the blog world...

  பதிலளிநீக்கு
 14. இது மாதிரி குழந்தைகள் படங்களை போட தவிருங்கள், லக்கி

  மனச என்னமோ பண்ணுது :(

  பதிலளிநீக்கு
 15. மோடி கிடைச்சதுக்கு உங்க மாதிரி நடுநிலை ஆய்வாளர்கள் எல்லாம் புண்ணியம் பண்ணியிருக்கணும்...

  எங்க யாரைப் பத்தி எதைச் சொன்னாலும் கடைசியிலே அங்கே கொண்டு வந்து வெச்சு காலரைத் தூக்கிக்க முடியுதே...

  அவனை சொல்லறியே, இவனை சொன்னியா'ங்கறது அருமையான லா- பாயிண்டு.

  ஒரு அநியாயம் கண்ணுக்கு முன்னால நடந்தா போதும்- அதை வெச்சு கணக்கில்லாத அநியாயங்களை நியாயப்படுத்திடலாம்.

  பதிலளிநீக்கு
 16. //இங்கு எதுவுமே கிசுகிசு பாணியில் இல்லை. ஜெயமோகன் ஒரு எழுத்தாளர் என்பது உங்களுக்கு கிசுகிசுவாக தெரிகிறதா?//


  ஜெயமோகன் ஒரு எழுத்தாளர் என்பது பெரிய காமெடியாக தெரிகிறது. கும்பகோணத்தில் தொடங்கி குடியாத்தத்தில் முடியும் பத்திகள்- ச்சே மகா கொடுமையான எழுத்து நடை..
  ரொம்ப கஷ்டம் யுவா.... நீங்கள் எப்படித்தான் வாசிகிறீர்களோ..

  பதிலளிநீக்கு
 17. //இது மாதிரி குழந்தைகள் படங்களை போட தவிருங்கள், லக்கி

  மனச என்னமோ பண்ணுது :(//


  மனது வலிக்கிறது நண்பரே ...படங்களை விட அதை நியாய படுத்தும் / கண்டிக்காத நபர்களை பார்த்து

  பதிலளிநீக்கு
 18. //தாங்கள் எழுதியிருப்பது ஆங்கிலம் போல தெரிகிறது. ஆனால் ஆங்கிலமில்லை. எனவே என்னால் புரிந்துகொள்ள இயலவில்லை. மன்னிக்கவும்.//

  ஐயோ !! ஐயோ!! ...அது ஆங்கிலம் இல்லை நண்பா ..சமஸ்கிருதம் ...

  பதிலளிநீக்கு
 19. //....don't get into serious things..or else you'll join the band of jokers around here in the blog world...//

  One who writes serious things is a joker? joke of 2010.

  JM also writes serious things and makes others "serious"

  பதிலளிநீக்கு
 20. தோழர் லக்கி,
  அதிர்ச்சியாக இருக்கிறது, நீங்கள் ஞானமரபின் துணை கொண்டு எழுதப்படுபவைகளையும் தொடர்ந்து படித்து வருவதை அறியும் போது.........

  பதிலளிநீக்கு
 21. ஆச்சர்யமடைந்தவன்!9:03 பிற்பகல், மார்ச் 20, 2010

  தோழர் லக்கி,
  ஆச்சர்யமாக இருக்கிறது, அப்படி எழுதப்பட்டவைகளுக்கு, எதிர்வினையாற்றும் அளவிற்கு, அவை உங்களுக்குப் புரிவதை அறியும் போது...........

  பதிலளிநீக்கு
 22. தோழர் லக்கி,
  மகிழ்ச்சியாக இருக்கிறது, இவைகளைப் படித்த பின்னரும் நீங்கள் ஆரோக்கியமான மனநிலையில் இருப்பதைக் கண்டு......

  பதிலளிநீக்கு
 23. தங்களின் எழுத்தில் சிறிது காலமாய் ஏதோ தொய்வு (அல்லது கவனக்குறைவு அல்லது அவசரம் ) தெரிவதாய் படுகிறது. உண்மையைச்சொன்னால் தங்களின் எழுத்து நடை, நகைச்சுவை,ஆங்காங்கே பளிச்சிடும் குறும்பு (உ.தா இதை எம்.ஜி.ஆர் பாணியில் படித்து தொலைத்து விட வேண்டாம் என்கிற தலைப்பு) எல்லாவற்றிற்கும் நான் ஒரு விசிறி. ஒரு வேளை அதிக பதிவுகள் போட முனைவதும் இந்த பிடிப்பின்மைக்கு காரணமாய் இருக்கலாம். குறிப்பாய் தனிமனித தாக்குதல்கள் அல்லது பிடிக்காதவர்களை வசை பாடுதல் அதிகரித்துள்ளது......இதை தங்களின் எல்லா பதிவுகளையும் படிக்கும் என்னால் நம்பகமாய் சொல்ல முடியும். ஜெ. மோ கருத்து பற்றி அவரின் வலைத்தளம் சென்று நான் தெளிவாய் படிக்க வேண்டுமென நினைக்குறேன். மேலே ஒரு நண்பர் சொன்னதுபோல் ஜெ. மோ வை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்த சாருவிற்கும் , மீண்டும் நினைவூட்டிய தங்களுக்கும் மிக்க நன்றிகள்....

  முடிந்தால் ஜெ. மோ வின் ' டார்த்தீனியம்' குறுநாவல் படிக்கவும்.!!!!!!

  பதிலளிநீக்கு
 24. மிகத் தெளிவான பதிவு. இதைப் போன்ற பதிவுகளைத் தான் எதிர்பார்க்கிறேன். பிரம்மச்சரியம் போன்றவை அல்ல.

  ஆலிவர்.

  பதிலளிநீக்கு
 25. ஜெமோ பதிவைப்படிச்சதும் சில சந்தேகங்கள் வந்துச்சு...
  //வைதிகம், வேதாந்தம்,சமணம்,பௌத்தம் போன்ற பெருமதங்களால் மையத்தில் தத்துவார்த்தமாக தொகுக்கப்பட்டு, சமரசப்படுத்தப்படாத இந்துமதப்பிரிவுகள் எப்படி இருந்திருக்குமோ அப்படி இருந்தது அது///
  இப்படி ஜெமோ எழுதியிருக்கிறார்... அப்போ சில ஆயிரம் சமணர்களைக் கழுவில் ஏற்றினதா படிச்சிருக்கோமே அது எந்தத் தத்துவத்தின் அடிப்படையிலான சமரசம் அல்லது நல்ல செயல் அல்லது ஞானமரபின் வெளிப்பாடு???

  இஸ்லாமிய அடிப்படைவாதம் என்று இவர் சொல்வதைப் படிக்கும் போதெல்லாம் இவர் இந்து அடிப்படைவாதி என்றே தோன்றுகிறது. இந்தியாவிலும் பல குலதெய்வ வழிபாடுகள் சிறு தெய்வ வழிபாடுகள் இருந்திருக்கின்றன. ஆனால் இந்துமதம் அவற்றை அழித்து சில தெய்வங்களை மேல்சாதி கடவுள்களாகவும், பல சிறு தெய்வங்களை கீழ் சாதி தெய்வங்களாகவும் மாற்றி மேல்சாதி கடவுள்கள் தான் மேல் அவர்கள் தான் சரி என்ற மிம்பத்தை உருவாக்கி இருக்கிறதே. அப்போ இந்த ஞானமரபும் தப்பு தானே. இஸ்லாம் வாளால் செய்ததாக இவர் சொல்வதை so called இந்துமதம் மூளைச்சலவையால் செய்ததா???? இது பற்றி யாராச்சும் அவர்கிட்ட கேளுங்களேன்.

  பதிலளிநீக்கு
 26. பெரியார் தாசன் ஏற்ப்படுத்திய அரிப்பை செயமோகன் சொறிந்து கொள்கிறார்..

  சரியான் நேரத்தில் 'சரியான' விஷயத்தைப் பற்றிக் கேள்விகேட்கும் 'அவதார' வித்தையை ஞானமரபின் மூலம் கற்றறிந்து, மானம்கெட்ட பிழைப்பு நடத்தும் ஜெமோவிடமிருடந்து தன் அரிப்பு தீரும்வரை, இனியும் இப்படிப்பட்ட விஷக் கிருமிகளை எதிர்ப்பார்க்கலாம்..

  பதிலளிநீக்கு
 27. என்ன லக்கி, ஞான மரபு எழுத்தாளர் எழுதுறதுக்கு எல்லாம் பதிவு போடலாமா ?

  8000 சமணர்கள் கழுவேற்றப்பட்ட விஷயத்துக்கு ஞான மரபு எழுத்தாளரின் விளக்கம் --- " எண்ணாயிரம் என்பது ஒருவரின் குடும்ப பெயராக இருக்கலாம்"

  எப்பூடி?

  பதிலளிநீக்கு
 28. சாப்பிடுவது காய்கறி தான் ஆனா ஒடம்பெல்லாம் 'கொலவெறி',
  இந்த 'சோ/கேப்' மாறி களின் சிம்ம சொப்பனம் எங்க 'லக்கி' நீ வாழ்க எம்மான் :)
  ஆமா ஒம்மேலே இன்னா காண்டு இந்த கஸ்மாலங்களுக்கு ?

  பதிலளிநீக்கு
 29. அன்புள்ள லக்கி
  எங்கள் தலைவர் இலக்கிய மேதை அண்ணன் அவர்களை நீங்கள் இப்படி பேசக்கூடாது. நீங்களும் சாருவும் முஸ்லிம்களை பாதுகாக்க படை திரட்டி புறப்படும்போது ஔரந்கசேப் பின் படைகளால் இன்று அழிக்கப்படும் இந்து ஞான மரபின் சீரிய கூறுகளை ஏழாவது தரிசனமாய் அண்ணன் கட்டிக்காப்பதில் என்ன தவறு கண்டீர்.
  ஆப்பரிக்க கண்டத்தில் ஒரு நாட்டின் உல் விவகாரத்தில் நடந்த சண்டைகளை அண்ணன் எவ்வளவு சீரிய முறையில் இஸ்லாத்தோடு தொடர்பு படுத்தி எழுதி இருக்கிறார் என்பதனை போற்றவிட்டலும் பரவில்ல கொஞ்சம் தூற்றமலவது இருங்கள்.
  மக்களை கொல்லுவது ஜனநாயகத்தில் சர்வ சாதாரணம். அதனால் தன உச்ச நீதிமன்றம் "modern day nero" என்று கூறியும் கூட மோடி இன்று பதவியில் இருக்கிறார்.
  மக்களை கொல்லுவது இஸ்லாத்தின் பெயரால் இல்லை என்றாலும் அமாம் என்றாலும் ஆப்ப்ரிக்காவில் தன அது எல்லாம் குற்றம். இந்தியாவில் இல்லை. இந்தியாவில் இந்து ஞான மரபின் ஆட்சி முறையில் இது தர்ம யுத்தம். இதை நீங்கள் புரிந்து கொள்ள அண்ணன் எழுதிய தலையணை சைஸ் புத்தகங்கள் கொஞ்சம் படிக்க வேண்டும். ஆகவே அண்ணன் எழுதியது முற்றிலும் சரியே சரியே.
  NB: அண்ணனின் அடுத்த புத்தகம் திரிக்கப்பட்ட குஜராத் கலவர ரகசியங்கள் (ஆயிரம் பக்கங்கள் புகைப்பட வரலாற்று ஆதரங்களுடன் ). அண்ணனை புதிதாக தத்து எடுத்திருக்கும் கிழக்கு தான் புத்தகத்தை வெளியிடும். பத்ரி மற்றும் ராகஹவன் அண்ணன்களின் புதையுண்டு போன பூணூல் இதன் மூலம் வெளியே தெரிந்தால் அதற்கு நிர்வாகம் பொறுப்பேற்காது.

  பதிலளிநீக்கு
 30. ஒருவர் ஜெமோ வின் சைட் இல் எழுத்துக்கள் சரியாக தெரியவில்லை என்று சொன்னார் .அவருடைய சைட் இல் font size increase or decrease பண்ண வைப்பு இருக்கிறது என்று தெளிவு படுத்தி கொள்கிறேன் .மந்திர கண்கள் தேவை இல்லை நண்பரே.

  பதிலளிநீக்கு
 31. தமிழ் நாட்டில் எதிர்ப்பு இப்படி பர்சனலாக,தெளிவாக, விஜய நகர எதிர்விசை இருக்கிறது .

  நக்சல்கள் பற்றியும் கதை படித்தால் கூட அர்த்தமில்லாமல் உளறமுடியுமா,
  அவர்களின் அறிவு திறன் பற்றி மாவோயிஸ்டுகள் எழுதி இருப்பது தவறு.

  தமிழ்தேசிய வாதிகள் போன்றவர்களிடம் இருந்த மதிப்பால் பாழாய்ப்போன மாவோயிஸ்டுகள் ஆங்கிலமில்லை விளக்க வேண்டாமா
  கண்டித்திருக்கிறார்கள்

  ஆனால் நீங்கள் சொன்னால் சரி. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்

  பதிலளிநீக்கு
 32. NGOs, Teesta spiced up Gujarat riot incidents: SIT

  NEW DELHI: The Special Investigation Team responsible for the arrests of those accused in Gujarat riots has severely censured NGOs and social activist Teesta Setalvad who campaigned for the riot victims.

  In a significant development, the SIT led by former CBI director R K Raghavan told the Supreme Court on Monday that the celebrated rights activist cooked up macabre tales of wanton killings.

  Many incidents of killings and violence were cooked up, false charges were levelled against then police chief P C Pandey and false witnesses were tutored to give evidence about imaginary incidents, the SIT said in a report submitted before a Bench comprising Justices Arijit Pasayat, P Sathasivam and Aftab Alam.

  The SIT said it had been alleged in the Gulbarg Society case that Pandey, instead of taking measures to protect people facing the wrath of rioteers, was helping the mob. The truth was that he was helping with hospitalisation of riot victims and making arrangements for police bandobast, Gujarat counsel, senior advocate Mukul Rohtagi, said quoting from the SIT report.

  Rohtagi also said that 22 witnesses, who had submitted identical affidavits before various courts relating to riot incidents, were questioned by the SIT which found that they had been tutored and handed over the affidavits by Setalvad and that they had not actually witnessed the riot incidents.

  The SIT also found no truth in the following incidents widely publicised by the NGOs:

  * A pregnant Muslim woman Kausar Banu was gangraped by a mob, who then gouged out the foetus with sharp weapons

  * Dumping of dead bodies into a well by rioteers at Naroda Patiya

  * Police botching up investigation into the killing of British nationals, who were on a visit to Gujarat and unfortunately got caught in the riots  Rohtagi said: "On a reading of the report, it is clear that horrendous allegations made by the NGOs were false. Stereotyped affidavits were supplied by a social activist and the allegations made in them were found untrue."

  Obviously happy with the fresh findings of the SIT which was responsible for the recent arrests of former Gujarat minister Maya Kodanani and VHP leader Jaideep Patel, Rohtagi tried to spruce up the image of the Modi administration, which was castigated in the Best Bakery case by the apex court as "modern day Neros". He was swiftly told by the Bench that but for the SIT, many more accused, who are freshly added, would not have been brought to book.

  The Bench said there was no room for allegations and counter-allegations at this late stage. "In riot cases, the more the delay, there is likelihood of falsity creeping in. So, there should be a designated court to fast track the trials. Riot cases should be given priority because feelings run high having a cascading effect," it said and asked for suggestions from the Gujarat government, Centre, NGOs and amicus curiae Harish Salve, who said the time had come for the apex court to lift the stay on trials into several post-Godhra riot cases.

  While additional solicitor general Gopal Subramaniam agreed with the court that public prosecutors should be selected in consultation with Raghavan, counsel Indira Jaising said there should be a complete regime for protection of witnesses as the same government, which was accused of engineering the riots, was in power now.

  Salve said that he would consult Raghavan and let the court know about a witness protection system for post-Godhra riot cases. The court asked the parties to submit their suggestions within a week.

  dhananjay.mahapatra@timesgroup.com

  பதிலளிநீக்கு
 33. வரலாறு மிகவும் முக்கியம் அமைச்சரே என்று லேட்டாக புரிந்துக் கொண்டு வரலாற்றை திரிக்க முயற்சி செய்கிறார்கள். செய்யட்டும்! செய்யட்டும்!.

  என்ன செய்வது எழுத்தாளருக்கு முன்னாடியே ரோமிலா தாப்பர், கொசாம்பி போன்றவர்கள் வரலாற்றை நன்றாக ஆய்ந்து படித்த (கல்வியறிவு பெற்றவர்கள் அல்ல) மக்களின் வரலாற்று அறிவை கொஞ்சம் முன்னேற்றியுள்ளார்கள்.

  மேலும் தனக்கு படியளக்கும் அரைடவுசர்களுக்கு விசுவாசமாக இருக்கும் கடமை எழுத்தாளருக்கு இருக்கிறது. அவர் பிழைப்பை கெடுக்க வேண்டாமே!

  பதிலளிநீக்கு
 34. மாறாக அவர் எங்கேனும் குஜாராத், மாலேகான், பாபர்மசூதி இத்யாதிகளை கண்டித்திருக்கிறார் என்றால் அறியத் தாருங்கள்

  Yes,more than once.You better read his articles before aking such questions.He is worldly wise and intelligent.He did not promote anyone as God.We all know who burnt his fingers in this.
  Moghuls faced tough resistance in the area now known as Rajasthan.Pratap Rana Singh fought against them and defended his kingdom.In Deccan they faced wrath of Marathas.Aurangzeb tried his best to crush them but failed.
  His empire withered away after his death.I think you learnt history from Charu Nivedita, TMMK and PJ.
  Your ignorance is too much, dont reveal it too often.

  பதிலளிநீக்கு
 35. Lucky, Your strengths are bringing out achievements of individuals who have struggled and succeeded in life. And giving out inspiring stories. This is what I like the most about your blog.

  What I do not cherish are articles like these. JM has given an interesting explanation from the 'philosophical evolution' point of view - while you can counter his thoughts, don't make it personal. In short, mature people "comment about the writing, not the writer". As a consolation for you, I'll say that even Jeyamohan is flawed in this respect. In his words "எஸ்.வி.ராஜதுரைக்கு இலக்கியமென்றால் என்னவென்றே தெரியாது என்பது என் எண்ணம். அவரை தூண்டிவிடுவதற்கு ஒரேயொரு ஆங்கிலக் கட்டுரையே போதுமானது". Other bloggers like Charu & Vinavu also do this a lot. I request you to stay away from mud-slinging practiced by folks like this, and get us more inspiring stories and satire.

  பதிலளிநீக்கு
 36. i don't think people who goes to election booth will read your blogs..so blindly supporting one religion will not fetch anything to you...if you decide to look for a MLA or MP or Ward member seat..your party would ask your "caste" before giving you seat though
  By the way i don't find anything wrong in Sathyabal's first comment which is written in English...

  பதிலளிநீக்கு
 37. மிக அருமையான கட்டுரை..இது போன்ற எதிர்வினைகளின் அவசியமான ஒன்று..இல்லையெனில் ஜெமோ போன்ற விஷமிகள் மக்களின் மனதை பாழ்படுத்தி விடுவார்கள் ...

  பதிலளிநீக்கு
 38. நல்ல அருமையான சிந்தனை யுவா! எங்கயோ போயிட்டீங்க! நீங்க இங்க இருக்க வேண்டியவரே இல்லை! உஸ்ஸ் அப்பா.....முடியல

  பதிலளிநீக்கு
 39. ஜெயமோகனை பத்தி பதிவு போட்டால் ஜெயமோகனை மட்டும் திட்டுங்க பின்னூட்டர்ஸ்....

  ராகவன், பத்ரியை எல்லாம் இங்கே திட்டிவிட்டு நமக்கு ஆப்பு அடிச்சிடாதீங்க :-(

  இவன்சிவன்!

  ஜெமோவின் அளவில் சிறிய புனைவுகள் கிட்டத்தட்ட அனைத்தையும் படித்திருக்கிறேன். ஐநூறு, அறுநூறு பக்கங்களாக எழுதியவற்றை மட்டும் படிக்க நேரம் கிடைக்கவில்லை.

  டார்த்தீனியம், கிளிக்காலம் குறுநாவல்களை பத்துமுறைக்கும் மேல் வாசித்திருக்கிறேன். ஏழாவது உலகம் கூட எனக்குப் பிடித்த நாவல்தான். இப்போது காடு வாசித்துக் கொண்டிருக்கிறேன்.

  புனைவுகளைப் பொறுத்தவரை அவர் நிஜமாகவே ராஜா. புனைவு தாண்டிய அவரது அரசியல், ஞானமரபு, உள்ளொளி தரிசன சிந்தனை இத்யாதிகளை நான் வெறுக்கிறேன்.

  ஜெயமோகனுக்கு பெரியாரை பிடிக்காது. எனவே எனக்கும் அவரை பிடிக்காது. மேட்டர் சிம்பிள்!

  பதிலளிநீக்கு
 40. வாங்க சார் வாங்க....
  பதிவின் ஹிட்ஸ் அதிகப்படுத்தலாம் வாங்க...
  ரகசியம் - உங்களுடனே வைத்துக் கொள்ளவும்.
  ஜெமோ என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும்.
  எதிர்த்து ஒரு பதிவு போடுங்க.
  சாருவின் அல்லக்கை என்பதை செம்பு தூக்கியாவது நிரூபித்து
  அதன் பின் அவர் எழுத்தில் இது சரியில்லை அது சரியில்லை என்று
  கூறுங்க....
  ஹிந்து மதம் என்னன்னவோ சொல்லி விட்டுப் போகட்டும்....
  சிம்பிளா அதை பார்ப்பனீய மதம் என்று கூறி பார்ப்பனரை லிங்க்
  ெசெய்து போட்டுத் தாக்குங்க...
  இஸ்லாமிய தீவிரவாதிகளை எப்பாடுபட்டாவது
  போராளிகளாக்குங்க...
  பாதிரிகளின் வக்கிர பாலியல் புணர்ச்சிகளை கண்டும் காணாமல்
  இருப்பது முக்கியம்.
  அப்பப்போ நானும் திராவிடன் தான் என்பதை உரக்கச் சொல்ல
  வேண்டும்.
  சில சமயம் நாத்திகன் மாதிரி வேஷம் போடுங்க....
  அவ்ளோ தான்
  ஹிட்ஸ் எகுறுவதற்கு நான் உத்திரவாதம்

  பதிலளிநீக்கு
 41. இலக்கியமென்றால் சரியாக புரிந்து எதைச் சொன்னாலும் பர்சனலாக லேட்டாக புரிந்துக் கொண்டு படியளக்கும் அரைடவுசர்களுக்கு விசுவாசமாக கண்ணுக்கு முன்னால கண்ணியக் குறைவாக உளற வேண்டும்.

  பதிலளிநீக்கு
 42. அட விடுங்க பாஸ், சில அரை-வேக்காடுங்க இசைய பத்தி இப்பிடி ஜம்பமா விமர்சனம் எழுதுறதில்லையா , அது மாதிரி எடுத்துகிட்டு ப்ரீயா விடுங்க !!!!

  பதிலளிநீக்கு
 43. //
  ஜெயமோகனுக்கு பெரியாரை பிடிக்காது. எனவே எனக்கும் அவரை பிடிக்காது. மேட்டர் சிம்பிள்!
  //

  இவ்வளவு சிம்பிள் ஈக்குவேஷனில் அனைவரையும் fit செய்து வாழ்ந்தீர்கள் என்றால் உங்களைவிட வாழ்க்கையில் நிம்மதியாக வாழக்கூடியவர்கள் கீழ்ப்பாக்கத்தில் மட்டுமே காண முடியும்.

  விரைவில் உங்களை அங்கு பார்க்கவேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 44. உங்கள் துணிபுக்கு வாழ்த்துக்கள். நாம் என்ன வேன்டுமானாலும் எழுதலாம் யாருக்கும் வரலாறு தெரியாது என்ற மதப்பு அந்த இரத்த வெறி பிடித்த -----களுக்கு,கண்முன்னே அநியாயங்களை நடாத்தி கொண்டிருக்கும் ஒரு இரத்த வெறி கும்பல்,சம்பந்தமே இல்லாத ஒரு விசயத்திற்கு மத சாயம் பூச முற்படுகிறது.
  எழுதி வைத்துக்கொள்ளுங்கள் இவர்களுக்கு எல்லாம் அழிவு காலம் நெருங்கி விட்டது. இவனுக்கு சப்போர்ட் பண்ண எத்தனை பேர் ரெடியாக இருக்கிறார்கள்,மனசாட்சியே இல்லாத மாக்கள்.
  இவனை எல்லாம் எழுத்தாளன் என்று தூக்கி வைத்து கொண்டாடும் சமதாயம் கண்டிப்பாக பாவப்பட்ட சமுதாயமே.

  பதிலளிநீக்கு
 45. லக்கி, சமீப நாட்களில் உங்களுடைய வலை பதிவில் தனி மனித தாக்குதல் அதிகமாக உள்ளது. உங்களை போல திறமை உள்ள எழுத்தாளர்களுக்கு அது ஏற்புடையது இல்லை. தயவு செய்து தவிர்க்கவும்.

  These kind of personal attacks does not prove any point. :)

  பதிலளிநீக்கு
 46. இவ்வளவு சிம்பிள் ஈக்குவேஷனில் அனைவரையும் fit செய்து வாழ்ந்தீர்கள் என்றால் உங்களைவிட வாழ்க்கையில் நிம்மதியாக வாழக்கூடியவர்கள் கீழ்ப்பாக்கத்தில் மட்டுமே காண முடியும்.

  :-)

  விரைவில் உங்களை அங்கு பார்க்கவேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
  :-(

  பதிலளிநீக்கு
 47. குஜராத் இனப்படுகொலை, பாபர் மசூதி இடிப்பு, மாலேகான், ப்ரக்யாசிங், புரோகித், தென்காசி குண்டுவெடிப்பு இத்யாதி இத்யாதி.. இவைகளைக் கண்டித்து ஜெமோ எங்காவது எழுதி தன் நடுநிலையை நிலைநாட்டியுள்ளதை எந்த ஒரு ......புடுங்கிகளாவது எடுத்துக் காட்டட்டும் முதலில்.

  வெல்டன் லக்கி. இரத்தவெறி கலந்த அதிகார வெறிபிடித்த இந்த அரை டவுசர்கள், அதற்காக வரலாறு என்ன, தேவையெனில் அதையும் வளைப்பார்கள்.. மானங்கெட்டதுகள்!

  - பார்த்திபன்

  பதிலளிநீக்கு
 48. ஜெயமோகன் கட்டுரையை எதிர்த்து ஒரு மொக்கை கட்டுரை. இதை ஜெயமோகன் அவர்களுக்கு அனுப்பினீர்களா? அனுப்பி பாருங்கள் அப்போது தெரியும் உங்கள் டவுசர் கிழிந்து குண்டி தெரியும்.

  பதிலளிநீக்கு
 49. //
  குஜராத் இனப்படுகொலை, பாபர் மசூதி இடிப்பு, மாலேகான், ப்ரக்யாசிங், புரோகித், தென்காசி குண்டுவெடிப்பு இத்யாதி இத்யாதி.. இவைகளைக் கண்டித்து ஜெமோ எங்காவது எழுதி தன் நடுநிலையை நிலைநாட்டியுள்ளதை எந்த ஒரு ......புடுங்கிகளாவது எடுத்துக் காட்டட்டும் முதலில்.
  //

  பருத்திபன் ஐயா,
  அவர் எந்த _________புடுங்கிக்கும் தன் நடுநிலை, சைடுநிலை, மேல்நிலை, கீழ் நிலையெல்லாம் நிலைநாட்டிக்காட்டத் தேவையில்லை. இங்கு அவருக்கு சப்போர்ட் செய்பவர் எவரும் உங்கள் நடுநிலை சர்டிஃபிக்கேட்டுக்கு மெனக்கெடத் தேவையில்லை. ஏனென்றால், நீங்கள் எழுதுவதும் உங்கள் நடுநிலைவாத சர்டிஃபிக்கேட்டும் கு. துடைக்கத்தான் லாயக்கு.

  பதிலளிநீக்கு
 50. Welldone Krishan!

  Your posting is correct & 'Fact n Fact' only.
  Don’t care about others.Go ahead >>>>>

  S.Ravi
  Kuwait

  பதிலளிநீக்கு
 51. //
  Anonymous Tamil MA said...

  ஜெயமோகன் கட்டுரையை எதிர்த்து ஒரு மொக்கை கட்டுரை. இதை ஜெயமோகன் அவர்களுக்கு அனுப்பினீர்களா? அனுப்பி பாருங்கள் அப்போது தெரியும் உங்கள் டவுசர் கிழிந்து குண்டி தெரியும்.
  //

  டமில் எம்.ஏ வலைப்பக்கத்தைச் கிளிக்கினால் குண்டி மட்டுமல்லா என்னென்னமோவெல்லாம் தெரிகிறது. :D

  பதிலளிநீக்கு
 52. VARALARU PADITHATHU POTHUM . GOORI MUHAMMED 17 MURAI PADAIYEDUTHHAN ETHARKKAKA INDIYAVILULLA SELVANGALAI SURANDA ITHU PONRA MANNARGAL INDIYAVAI KOLLAIYADITHAVARGAL INGULLAMAKKALAI KATTAYA MATHAMATRAM SEITHARGAL ATHAI PATRI ORU ELUTTHALA THAYOLIGALUM ELUTHAVILLAI ENBATHE UNMMAI

  FAROOK

  பதிலளிநீக்கு
 53. Please leave Kutputhin Ansaari to live. Avoid publishing his photo.

  http://www.uyirmmai.com/contentdetails.aspx?cid=2627

  பதிலளிநீக்கு
 54. பரூக் என்ற இஸ்லாமிய பெயரில் பின்னூட்டமிட்டிருக்கும் நண்பரே!

  நீங்கள் முதலில் வரலாறு படிக்க வேண்டும். பதினேழு முறை படையெடுத்தவர் கோரி முகம்மது அல்ல கஜினி முகம்மது.

  பதிலளிநீக்கு
 55. இங்கு யார் யரை திட்டுகிறார்கள் யாரை புகழ்கிறார்கள், யார் யாருக்கு கூஜா!!! என்று புரிந்து கொள்ளவே நாலு நாளாகும் போலிருக்கிறதே!!
  விடுங்க. மதத்தின் பேரால் இன்னும் எத்தனை காலம் அடித்துக் கொள்வீர்கள்?
  நீங்கள் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் ஒரு மதத்தின் தீவிரவாதம் உலகுக்கு தெரிந்துவிட்டது. உலகம் இரு கூறுகளாக பிரிந்துவிட்டது. போராட்டம் தொடங்கிவிட்டது. இத்தனைநாள் மறைமுகமாக நடந்து கொண்டிருந்த உள்குத்து இனி முடியாது. சரித்திரங்களை எத்தனைமுறை திரித்து கூறினாலும் வாளின் மூனையில் வளர்ந்த மதம் வாளை தூக்கியெறியத்தான் வேண்டும்.

  பதிலளிநீக்கு
 56. you did not write explicitly that, Muslims are the most accommodative and really soft individuals. Did i miss it?

  பதிலளிநீக்கு
 57. இதன்ன வம்பா இருக்குது. ஜெமோவை விட உங்கள் பார்வையில் நடு நிலை இல்லையோ என்று தோன்றுகிறது.

  இது ஒரு சின்ன மேட்டர் இது கூட புரிய வில்லையா ? இஸ்லாம் கிறிஸ்தவம் உலகில் உள்ள முக்கால் வாசி மக்களை மாற்றி விட்டது. இந்தியாவை அப்படி மாற்ற முடியவில்லை அதற்கு முக்கிய காரணம் ஆதிவாசி மதம் மாதிரி இல்லாமல் தத்துவம் சார்ந்த பெருமதமாக மாறி இருந்தது. என்னை முட்டாள் என்று சொன்னால் மட்டும் போதாது என்னை உணர வைக்கணும், அதை இந்த மதங்களால் இங்கு அதிகம் செய்ய முடியவில்லை. நாங்கள் ஒன்றும் சளைத்தவர்கள் இல்லை என்பதே எதிர் விசை.

  நானும் சாரு'வோட தீவிர வாசகன் தான். ஆனா அதுக்காக இப்படி காரணம் இல்லாமல் சொல்வது - மஞ்சள் காமாலை வந்தால் மஞ்சளாக தெரிவது போல இருக்குது.

  அடிப்படைவாதம் எல்லா மதத்திலும் உள்ளது இந்து மதத்திலும். மோடியை நான் வெறுக்கிறேன். ஆனா அது ஏன் நடு நிலையாளர்'நு சொல்லி கிட்டு இஸ்லாமிய அடிப்படை வாதம் பற்றி யாரும் வாயை திறக்க மாற்றீங்கன்னு தான் தெரியலை. சரி முகமது நபியை கார்டூன் வரைந்து கேலி பண்ணின Danish பத்திரிகயாளர் மேல் கொலை வெறி சரியா தவறா ?

  பதிலளிநீக்கு
 58. அவர் சொல்றது பிஸ்கோத்து மேட்டர். நம்ம ஊருல ஒரு குஜராத் கலவரம். மத்த ஊருல போய் பாருங்க. எனக்கு எப்படி இத்தனை மதம் , மொழி வச்சிக்கிட்டு இத்தன நாளா அடிச்சிகிட்டு சாகாம இருக்கோம்னு நெனச்சா தான் ஆச்சர்யமா இருக்குது. சாகனும்னு சொல்லல. அதுவே பெரிய மேட்டர். நிகழ் காலத்தை பாருங்க. நீங்களும் நானும் குஜராத் கலவரத எதிர்க்கிறோம் , இந்த மாதிரி எத்தன ஊருல நடுநிலையா இருகானுங்கனு சொல்லுங்க பாப்போம். இந்த விஷயத்தில நம்மள நாமே மட்டம் தட்டிக்றது சரி இல்லைன்னு தோணுது.

  பதிலளிநீக்கு
 59. It was so very unfortunate that people like youalways jump to Gujarat. We can also talk about what happened in Pakistan and Bangaldesh ( written by Susan Miller, Unfortunately she is not Iranian or South American writer !!). We all ( those who have read a bit of History ) know that Aurangazeb spent most of his time in Warfield walking between Deccan Plataue and Kashmir. After him the entire Mughal empire disintegrated. Our history could also point out definetly because of Maratha and Vijayanagar empire the Onslaught of Islam is moderated. If you have any doubts read the following events ( May be not in wiki but you can google or find some South American Author)
  a) Nadirsha invasion of Delhi
  b) Nalanda University destruction by Bakhtiyar Khilji.

  You may be wondering why I point this.. Hope you can use some intuitive analysis and arrive at a conclusion truthfully.

  Last but not the least, Jey Mo is a very versatile, deep and intuitive writer. You may not like him but if you avoid reading him the loser is not Jeyamohan.

  With Warm Regards
  S Baskar

  பதிலளிநீக்கு
 60. யுவா,
  திருவிழா மஞ்சள் கண்ணாடி போட்டுக் கொண்டது போல இந்த திராவிட, பார்ப்பன எதிர்ப்பு கண்ணாடியை கொஞ்சம் கழட்டி வையுங்கள். கிட்டதட்ட 40 ஆண்டு காலம் ஊடக, அரசியல், சமூக புறக்கணிப்பிற்கு ஆளான நிலையில் இன்று வரை இலக்கிய, அரசியல் வாயில் நுழையும் எவருக்கும் மிதி படியாய் இருக்கும் ஒரு சமூகத்தை இன்னும் எவ்வளவுதான் மிதிப்பீர்கள்? உங்கள் பாட்டன், பூட்டன் செய்த தவறுகளுக்கு உங்களைத் தண்டிப்பது எத்தனை நியாயம்? இப்போதைய இளைய எழுத்தாளர்களுக்கு பெரியாரிஸம் என்பது முதற் கட்ட தேர்வு வெற்றி போலும். அறிவதன் எல்லைகள் பெரியாருடன் நின்று விடுவதில்லை. அவரையே அளவுகோலாகக் கொண்டு பிறவற்றை அளக்கவும் தேவையில்லை. உங்கள் எழுத்தின் தரம் உயர பாடுபடுங்கள். பிறர் எழுதுவதை .... எழுதுகின்ற பிறரை தரம் தாழ்த்தி அல்ல.
  அன்புடன்,

  பதிலளிநீக்கு
 61. குஜராத் படுகொலை -குறித்து எழுதுகி றாயா?
  நீ நேர்மையானவன் என்றால் கோவை வெடிகுண்டு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை(பாதிக்கப்பட்ட ஹிந்துகளை) குறித்து எழுது

  http://www.ndtv.com/news/india/coimbatore_blasts_madras_hc_acquits_21

  _life_convicts.php#

  http://www.topnews.in/court-resume-pronounce-sentences-1998-coimbator

  e-blasts-case-23099

  http://en.wikipedia.org/wiki/1998_Coimbatore_bombings

  http://www.rediff.com/news/1998/feb/14blast.htm

  பதிலளிநீக்கு
 62. இதை ஏன் பயந்துபோய் அனானியாக வந்து சொல்கிறீர்கள்?

  கோவை குண்டுவெடிப்பின் போது அருகிலிருந்து பார்த்த, பங்கேற்ற நண்பர் ஒருவர் எப்போதும் என் கூடவே இருக்கிறார். ஊடகங்களில் நான் உண்மையை தேடி அலைவதில்லை.

  பதிலளிநீக்கு
 63. My 2 cents (3 in fact) YuvaKrishna, if I may !

  1. Don't get addicted to the intoxication at THIS early stage; so very dangerous and you'll regret it when you've gone long enough.

  2. Go a little slow in your thought process and don't be in a hurry and importantly, don't get carried away.

  3. Last but not the least, don't get influenced.

  Regds.
  Muthu

  பதிலளிநீக்கு
 64. தோழ‌ர் ல‌க்கி,

  இந்த‌ குறியீட்டை ச‌ரியாக‌ உப‌யோக‌ப் ப‌டுத்துங்க‌ள்,
  `ஆளப்பிறந்தவன் - ஆத்திரப்பட மாட்டேன்` ஏன் இந்த‌ கூரிய‌ வார்த்தைக‌ள்?
  ச‌ரிவில் கிட‌க்கும் சில‌ருக்கு அவ‌ர‌து ப‌ர‌ம‌ வைரிக‌ளை தாக்கி, உங்க‌ள் சுய‌த்தை இழ‌க்காதீர்க‌ள்.

  ஒழுங்க‌ ச‌ரித்திர‌ பாட‌ம் ப‌டின்னு, வாத்தியார் (ஹிந்தி எதிர்ப்பு _ முன்னும் பின்னும்) சொன்ன‌தை
  ந‌ம்ம‌ கேட்டிருந்த‌ இப்ப‌டி எல்லார்கிட்டேயும் இவ்வ‌ள‌வு கேட்டுக்கிட்டு இருக்க‌ வேணாம்.

  இப்ப‌ கூரை ஏறி பாத்த‌ அண்ணாமாலை ப‌ல்க‌லையில‌, போலிசுக்கு ப‌ய‌ந்து ஓடி செத்த‌ 5 பேர்க‌ளைதான் தெரியுது.
  ஆப்பிரிக்க‌வுல, அப்ப‌, வெள்ளைகார‌வுங்க‌ வ‌ந்து `புத்த‌க‌த்தை கைல‌ கொடுத்துப்புட்டு,
  க‌ண்ணை முடிக்கேங்க‌ன்னாங்க‌ளாம். ம‌ந்திர‌ம் சொல்லிப்புட்டு, க‌ண்ண‌ திற‌க்க‌ச்சே, புத்த‌க‌ம்
  ம‌ட்டும், இவ‌ங்க‌ கிட்டே இருந்திச்சாம், இட‌ம் அவுங்க‌kitta போயிருச்ச‌ம். (வ‌டை போச்சா)
  இப்ப‌டியே, ந‌ம்ம‌க்குள்ளேயே ச‌ண்டையிட்டு கொள்வ‌தால், ப‌ள்ளிபால‌ய‌ம் வேலுசாமி ம‌ர‌ண்ங்க‌ள்
  அத‌ன் கார‌ண‌ங்க‌ள் எல்லாம் விரைவில் ம‌ற‌க்க‌ப‌ட்டு, ம‌றுப‌டியும் ந‌ட‌க்கின்ற‌ன‌.

  அறிவு பொங்கும் உங்க‌ளை போன்ற‌வ‌ர்க‌ள், இங்கு கூவ‌த்தை சுத்த‌ப‌டுத்த‌ முன்னெடுங்க‌ள்,
  க‌ங்கையை, ரெயின் பாரெஸ்டை அங்கிருப்ப‌வ‌ர்க‌ள் பார்த்துக் கொள்வார்க‌ள்.

  பதிலளிநீக்கு
 65. Ok, Gujarat is one of the greatest atrocity , then what about the people killed in godra, what do you say about the people killed in mumbai. You are fake people's just hiding the facts. Don't you know the hindu people killed & converted in Bangladesh (http://en.wikipedia.org/wiki/Hinduism_in_Bangladesh). In that country hindu population is decreased dramatically(I don't even want to talk about Pakistan you idiot will know about that). You don't even want to speak about that. Hindu People's living in this countries daily facing things like these so called "Gujarat Riots". So Just SHUT your shit mouth.

  பதிலளிநீக்கு
 66. முகலாயர்கள் நிஜமாகவே மதவெறியோடு இருந்திருந்தார்கள் என்றால் இன்றைக்கு முஸ்லிம்கள் இந்தியாவில் மைனாரிட்டியாக இருக்கமாட்டார்கள். பிராமனர்களின் இஸ்லாமிய எதிர்ப்பு என்பது பலகாலமாகவே இருந்து வந்து கொண்டிருக்கிறது. இப்போது இஸ்லாமியத்தீவிரவாதம் என்று ஒரு அருமையான விவாதப்பொருள் கிடைத்துவிட்டதால் அதைக் கிழித்துத் துவைத்து அலசி அலசிப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இதனாலெல்லாம் இந்து மதம் உண்மையானது, மேன்மையானது, தொன்மையானது...அதானது, இதானது என்று ஆகிவிடாது. உண்மையில் இந்து மதம் என்று ஒன்று இருந்தே இல்லை. புத்தம், சமணம் தோன்றிய பின்புதான் இந்த ஆரியர்கள் திராவிடர்கள் மேலான தங்கள் பிடி நழுவுவதைத் தடுக்கவும், தங்களுடைய உடல் உழைப்பில்லாத சுகபோக வாழ்க்கையைத் தக்க வைக்கவுமே இந்து மதம் என்ற ஒரு கொள்கையை உருவாக்கினார்கள்.
  ஒரு காலத்தில் இந்தியாவின் பெரும்பான்மை மதமாக இருந்த புத்த மதம் என்னவானது? எப்படி அனைவரும் மிகத்திறமையாக மூளைசலவை செய்யப்பட்டு மீண்டும் இந்துக்களானார்களா? இனறைக்கு இந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகளில் புத்த மதம் பெரும்பான்மையாக விளங்கி வருவதைப் பாருங்கள், புத்த மதம் இந்தியாவில் அது அழித்தொழிக்கப்பட்டு விட்டது. அது எப்படி நிகழ்ந்தது என்று ஒரு சரித்திரக் குறிப்புகூடக் கிடைக்கவில்லை (அப்பல்லாம் எழுதப் படிக்கத் தெரிஞ்சவனுங்க யாருன்னு உங்களுக்குதெரியுமில்லையா)
  இப்போதெல்லாம் காவிகூட்டத்தினர் மேலும் ஒரு பொய்க் கருத்தைப் பரப்பி வருகின்றனர். அதாவது, இந்தியா 5000 வருடங்களாக எந்த நாட்டையும் ஆக்கிரமித்ததில்லை, மாறாக நாங்கள்தான் ஆக்கிரமிக்கப்பட்டு வந்திருக்கிறோம் என்று. எவ்வளவு பெரிய கயமைத்தனமான தகவல் இது. போய் பாருங்கள் பர்மா, இந்தோனேசியா, தாய்லாந்து, நாடுகளில் இந்துக் கோவில்கள் இருப்பதை. இவையாவும் இங்கிருந்து படையெடுத்துப் போன மன்னர்கள் கட்டியதே.
  இந்திய மன்னர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக்கொள்ளவே நேரம் இருக்கவில்லை. மேலும், இமயமலையையும், கடலையும் தாண்டி பெரும்படை நடத்திச் செல்லும் அளவிற்கு படைபலமோ, தைரியமோ இருந்திருக்கவில்லை என்பதே உண்மை.
  வெறும் குஜராத் எடுத்துக்காட்டிற்கே இவ்வளவு பேர் பின்னூட்டக்குதி குதிக்கிறார்களே,இந்தியாவில் ஒவ்வொறு முஸ்லிம்கள் அதிகமாக வாழக் கூடிய நகரங்களிலும் (மீரட், மொராடாபாட், பிவாண்டி, பாகல்பூர், கான்பூர், லக்னோ இன்னும் எத்தனையை சொல்வது?...அப்போதெல்லாம் எந்த குண்டும் வெடிக்கவில்லை, ஞாபகம் வையுங்கள்) குஜராத் போன்ற கலவரங்கள் தொடர்ச்சியாக காவிப் பரிவாரங்களால் திட்டமிட்டு நடத்தப்ப் பட்டு வந்துள்ளன, அதற்கு என்ன சொல்வார்கள் (என்ன சொல்வார்கள்,கலவரங்களை நடத்துவதே அவர்கள்தானே!). அது என்னது..ஞானமரபா...? இவனுங்களுக்கெள்ளாம்...?

  பதிலளிநீக்கு
 67. Dravidan,

  You are absolutely right.. Islam spread in India with atmost peace. They just came and at that time the Aryans were massacring the majority dravidians. When the Islam peace lovers entered ,people saw a spiritual awakening and became Mohammadeans. Majority could not change because there were not enough mullas to the ceremony. So it is still continuing. Hinudism is never a religion. Upanishad is inferior to Kuran and Bible. Tamil race was taught by St Thomas and Periyar. During early Tamil sangam even Black smith could create a Classical poem but fortunately he was taught by St Thoma. What happened in Dacca ( Hindus were butched, raped ) is just an aberation. Islam is such a peace loving. Islam was there even before Mohammed. It is because of Safron Brigades that History was written Mohammed was born in 7th Centura AD. He was born exactly 4096 BC. There was no collective memory of Aryan invasion because Aryans killed every Dravidians and the current neo Dravidians were brought out by St Thoma and Periyar. They are such a nice people that they erased all the memory when they are brought up. Some religion not Hinduism were there through out. Even some of the Persian history talks about God Mitra.. All these are myths specially created by Aryans. They invented a Timemachine placed these evidence, Like GOD placed the fossils that looked old. I am a DRavidian and a very learned man .. Learnt everything from St Thoma and Periyar .. Kudos.

  With Warm regards
  S Baskar

  பதிலளிநீக்கு
 68. சரித்திரம் முக்கியம் பாஸ்கர் அவர்களே.
  உங்கள் எழுத்துக்களில் உள்ள விஷ(ம)ம் வியக்க வைக்கின்றது. உங்களுக்கும் இஸ்லாமியத் தீவிரவாதிகளுக்கும் எந்த வேறுபாடும் இருப்பதாகத் தெரியவில்லை. உங்களுக்கு வாய்ப்பு கிடைக்காததால் சும்மா இருக்கிறீர். குஜராத் போல, மும்பை போல, கோயமுத்தூர் போல மீண்டும் ஒரு வாய்ப்புக்காக காத்துக் கொண்டு இருக்கிறீர் வேட்டை நாய்களைப் போல நாக்கைத் தொங்க விட்டபடி! தூங்குபவர்களை எழுப்பிவிடலாம், உங்களைப் போன்ற கள்ள வேஷதாரிகளை எழுப்ப முடியாது. நீங்களாகவே அழிந்து போங்கள் என்று விட்டுவிடுவதுதான் சரி.
  எப்படியோ தான் யார் என்று தெளிவாகக் காட்டியதற்கு பாஸ்கர் அவர்களுக்கு நன்றிகள்!

  பதிலளிநீக்கு
 69. Thanks Dravidian for:

  a) Answering all my Vishamam.
  b) Thanks for equating me to some Terrorism. Please read my response again and use your left brain to invalidate it. Please do not use your right brain. Already enough of it.
  c) Where from my response you have concluded that I am waiting for the repeat of Mumbai and Coimbatore.
  d) I accept my post is sarcastic and I meant it that way. But what right do you have to tell that I must be destroyed ? May be there is your philosophy that anybody whoc argues should be destroyed and we should over the roof talk about only Gujarat ?
  e) The fundamental tenet of Hinduism is Pan Theism whereas the fundamental tenets of Islam and Christianity is Mono theism. You cannot dent this fact.. May be you are an Ostrich to deny this.

  With Warm regards
  S Baskar

  பதிலளிநீக்கு
 70. நன்றி பாஸ்கர். இந்த மதவெறி பிடித்த நிகழ்வுகளுக்குக் காரணமே தங்களைப் போன்றவர்கள் செய்து வரும் விஷம பிரச்சாரங்கள் தான். எனவேதான் அவ்வாறு கூறியிருக்கின்றேன். நான் சொன்னது சரியே!. உங்களைக் கொல்ல வேண்டும் என்றோ அழிக்க வேண்டும் என்றோ நான் கூறவில்லை. தங்களுடைய விஷம சித்தாந்தங்கள் தவறு என்று தெரிந்தும் செய்து கொண்டிருக்கின்றீர்கள் அல்லவா? எனவே உங்களைத் திருத்த முயல்வதைவிட அப்படியே விட்டு விட்டால் தானே அழிந்து விடுவீர்கள் என்றேன். அது சித்தாந்தத்தையும் சித்தாந்தவாதிகளையும் சேர்த்தே குறிக்கின்றது. மற்றபடி, தனிநபர்களை அவர்களின் குறிப்பிட்ட சாதி/மதத்திற்காக அவர்களைத் தேடிப்பிடித்து அழிப்பது என்பது எனது வேலையுமல்ல, சித்தாந்தமுமல்ல. மனித உரிமை ஒன்றே எனது கொள்கை. அதைக்காப்பதற்காக வேறெந்தக் கொள்கையையும் தளர்த்திக்கொள்ளலாம்.
  மேலும், மோனோதிஸம், பாலிதிஸம் பற்றிக் குறிப்பிட்டு இருக்கிறீர்கள். நாம் கூறியது, இந்து மதம் என்ற ஒன்றே இருந்திருக்கவில்லை என்பதே! அது மற்ற சமயங்களைப் பார்த்து தந்திரமாக சிலரால் ஏற்படுத்தப்பட்டது. மக்கள் தெளிவு பெறப் பெற, அறிவியல் சார்ந்த சமூகம் அமையும் போது இந்து மதம் தனது அழிவை நோக்கிப் பயணப்பட தொடங்கியிருக்கும். அது இன்றில்லையென்றாலும் பிற்காலத்தில் நடந்தே தீரும்.

  நன்றி
  திராவிடன்

  பதிலளிநீக்கு
 71. //மனித உரிமை ஒன்றே எனது கொள்கை

  ஹிட்லர் முதற்கொண்டு எல்லோரும் தான் நல்லது செய்கின்றோம் என்று நினைத்து கொண்டு தான் படு பாதகம் செய்தனர். யாரும் தன்னை வில்லன் என்று நினைத்து கொள்வதுமில்லை.
  அடுத்தவர்களை விரல் நீட்டுவது மிக சுலபம். இந்து மதத்தை பற்றி உளறுவதை முதலில் நிறுத்தவும். இரண்டு முட்டாள் இஸ்லாமியர்கள் குண்டு வைத்தால், அதற்கு குரான் காரானமல்ல, அந்த முட்டாள்களே காரணம். அது போல தான் இந்து மதமும். மதம் பிடித்தவர்களின் செயலால் இந்த சமயத்தையே வேண்டாம் என்று சொல்வது உங்கள் உரிமை, ஆனால் அதை பொதுவில் திட்டுவது உங்கள் உரிமை அல்ல. பல சமய நூல்களில் படித்து, எல்லாவற்றின் இதயமும் ஒரே மொழியை பேசுகிறது. அதை புரிந்து கொள்ள முயற்சிக்கவும். எதையும் மட்டம் தட்டுறது, நெகடிவ்'ஆகா பார்ப்பது சுலபம். கூரை ஏறி பாருங்கள் கூவம் தெரியும், அதை சுத்த படுத்தலாம் வாருங்கள்.
  உங்களின் தடித்த நாக்கு பாஸ்கரை பொதுவில் வைத்து சொல்வது மனதுக்கு சரியாக இல்லை - என் மனதும் புண்பட்டது. உங்களை யார் இப்படி சொன்னாலும், அப்படியே என் மனம் புண் படும். எந்த சைடு என்பது முக்கியம் இல்லை. என்ன பேசுகிறோம் என்பதே மனதை பாதிக்கிறது.

  பதிலளிநீக்கு
 72. Dravidian,

  Mistake again.. I meant Pan Theism and not Poly theism. If you have done this mistake intentionally, good atleast understood my intention. Coming back to you accusation, you have blatantly told that Safron Brigade is responsible for all the problems.. I have not even said it is all because of Green Brigade or Red(s) brigade. I have only pointed out the flaws in your argument. I do not condone the Gujrat incidents. I do not see many people condoning what is happenning in Kashmir and streets of Delhi during 1984. I do not see any body condoning what is happening in Bangladesh and Pakistan with the same fervour as it happens in Boznia and Iraq.. Any how come back following are my questions:

  a) Buddha did not like some parts of Vedas and henece stardted to hsi own truth? Who was holding Vedas as sacred , religious people or Egalatrian(s)?

  b) Buddha lived during 263BC. Hence even when think that Hinduism stared after that, even then it is before 1BC and 640 AD ? so with the same arguments will you say other religiions also do not exist?

  c) Buddha met Mahavira and Jainism was there even before Buddism ( I am not telling this; Rahul Sangarthiyayan has written about this ) Can we conclude Budhhism does not exist with same argument because Buddha has seen Jaininsm and started Buddhism..

  Any how.. It is never ending. Truth will Triumph or that is what I think.

  With warm regards
  S Baskar

  பதிலளிநீக்கு
 73. திரு. பிரகாஷ், யார் மனதையும் புண்படுத்துவது எனது நோக்கமல்ல. உங்களுக்கும் திரு. பாஸ்கருக்கும் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். மதங்கள் அனைத்தும் மனிதனின் கற்பனையே. நமது அறிவால் விளக்க முடியதவற்றை சமாளிப்பதற்கு கடவுளை உருவாக்கி இருக்கிறோம். அவ்வளவுதான். மனித சமுதாயம் அறிவு வளர்ச்சியில் உச்சத்தை நெருங்க நெருங்க இந்த மாயக் கற்பனைகள் விலகும் என்பதே நான் சொல்ல வந்தது. இந்து மதத்தை நான் ஒரு உதாரணமாக எடுத்துக்கொண்டேன். மற்றபடி எல்லாம் ஒன்றுதான்!

  நன்றி
  திராவிடன்

  பதிலளிநீக்கு
 74. அன்புள்ள பாஸ்கர், நீங்கள் சொல்வது முழுக்க முழுக்க உண்மை. நானும் பகுத்தறிவு பாசறையில் இருந்து வந்தவன் தான். ஓரளவிற்கு மேல் நம்மால் சிந்திக்க முடியவில்லை. அதற்கு மனிதன் ஆயிரெத்தெட்டு தத்துவம் கொண்டு வந்தான். ஆனாலும் இந்த பிரபஞ்சம் எப்படி தோன்றியது - அது எப்படி ஆதியும் அந்தமும் இல்லாமல் என்று யோசித்தால், "கடவுள் இல்லை" என்று அப்பட்டமாக எனக்கு தெரிந்த மாதிரி "இல்லை" என்று முடிவு பண்ண முடியாது . "எனக்கு தெரியாது" என்பதே நெஞ்சத்தின் உண்மையான பதிலாக இருக்கும். இப்படி ஆரம்பித்த என் பயணம் பௌத்தம் படித்து வேறு திசை நோக்கி பயணிக்கிறது ( புத்தர் கடவுள் என்று யாரையும் சொல்ல வில்லை - மூளை அதிகம் உபயோகிபவற்கு ஏற்ற சமயம் இது என எண்ணுகிறேன்).

  "கடவுள் மறுப்பு" கொள்கையும் ஒரு வித 'Escapism' தானே ? இருக்குனு சிலர் சொல்லிட்டு அவன் வேலைய பார்த்துட்டு போறான், இல்லைனுட்டு இன்னொருத்தன் வேலைய பார்த்துட்டு போறான். இதில் உண்மைலேயே தேடல் இருபவனை இவர்கள் இருவரும் பாதிகின்றனர். பழத்தை விட்டு விட்டு தோலுக்காக சண்டை போடும் மக்களே மத வாதிகளும், கடவுள் மறுப்பு கொள்கையாளர்களும்.

  பதிலளிநீக்கு
 75. மன்னிக்கவும் அது அன்புள்ள திராவிடற்கு , பாஸ்கர்'கு அல்ல :)

  பதிலளிநீக்கு
 76. எழுத தெரியும் உங்களூக்கு . இன்னும் எழுதுங்கள்

  பதிலளிநீக்கு
 77. இந்துத்துவ மதவெறி மற்றும் மோடி பற்றி ஜெயமோகன்
  http://www.jeyamohan.in/?p=677

  http://www.jeyamohan.in/?p=682

  பதிலளிநீக்கு
 78. Duraivel,

  Very very sorry. In that article Jeymo has condemned Modi. But he has also condemned A.Marx, Aundati Roy and Rajdeep. So he cannot be a secularist. We should first remove 3500 years Safron terror. Once the safron terror is removed automatically rest will live in Peace.. See Afganistan and Pakistan Hinduism ( sorry dravidian could not get any new word) was removed and then the egalatrian society lived in Peace thereafter. Cant you understand this Simplest Truth.

  With Warm regards
  S Baskar

  பதிலளிநீக்கு