March 16, 2010

பிரம்மச்சரியம்!


ரு ”கட்டை” பிரம்மச்சாரி பிரம்மச்சரிய விரதத்தை கடுமையாக பேணி காத்து வந்தார். இருப்பினும் அவ்வப்போது மேனகைகள் புண்ணியத்தால் அவரது பிரம்மச்சரிய விரதத்துக்கு கேடு வந்துவிடுமோ என்று அஞ்சினார். ”இவ்வளவு கடுமையாக பிரம்மச்சரிய விரதத்தை கடைப்பிடிப்பதால் என்ன நன்மை?” என்றொரு இயல்பான சந்தேகம் அவருக்கு எழுந்தது.

அகிலம் புகழும் ரிஷியான தன் குருவிடம் இந்த சந்தேகத்தை நிவர்த்தி செய்துகொள்ள சென்றார்.

“குருவே! வணக்கம். உலகிலேயே பாபமான செயல் எது?”

“பெண் தொடர்பு!”

“புரியவில்லை?”

“ஒரு பெண்ணை கூட தொடாமல் வாழ்க்கையில் கடுமையாக பிரம்மச்சரியத்தை கடைப்பிடிப்பவன் மேலுலகத்துக்கு செல்லும்போது மலர்களால் அலங்கரிக்கப்பட்ட, நூறு குதிரைகள் பூட்டப்பட்ட ரதம் ஒன்றில் ராஜமரியாதையோடு அழைத்துச் செல்லப்படுவான்”

“ஆஹா. அருமை!!”

“உடல்தேவைக்காக இல்வாழ்க்கையில் ஒரு பத்தினியோடு இணைபவன் ஒரு சாதாரண ரதத்தில் பத்து பேரோடு ஒருவராக நெருக்கமாக உட்கார வைக்கப்பட்டு அழைத்துச் செல்லப்படுவான்!”

“சரி குருவே!”

“பத்தினி தவிர்த்து பலரோடு உடல்தொடர்பான உறவு வைத்துக் கொள்பவன் பல நூறு பேரோடு நெருக்கமாக அடைக்கப்பட்ட ஒரு மாட்டு வண்டியில் எந்த மரியாதையும் இன்றி அழைத்துச் செல்லப்படுவான்”

“அப்படிப்பட்ட ஒரு பிழைப்பு தேவையா?”

“அடுத்தவன் மனைவியை அபகரித்தவன், ஆயிரக்கணக்கான பெண்களோடு இழித்தொடர்பு வைத்திருந்தவன் கல்லும், முள்ளும் நிறைந்த நெருப்புப் பாதையில், கிங்கரர்கள் சாட்டையால் அடிக்க வண்டியை இழுக்கும் மாடு போல மற்றவர்களின் பாரங்களை சுமந்து செருப்பில்லாமல் நடந்தே மேலுலகத்துக்கு செல்லவேண்டும்”

“அய்யய்யோ. அப்படிப்பட்ட நிலை யாருக்குமே வரக்கூடாது. குருவே! நான் அலங்கரிக்கப்பட்ட ரதத்திலேயே மேலுலகுக்கு செல்ல விரும்புகிறேன்”காலச்சக்கரம் உருண்டோண்டுகிறது.

காலம் முழுக்க பிரம்மச்சாரியாக இருந்தவர் இயற்கையாக மரணம் அடைகிறார். மேலுலகத்துக்கு அழைத்துச் செல்ல மலர்களால் அலங்கரிக்கப்பட்ட நூறு குதிரைகள் பூட்டப்பட்ட ரதம் வந்திருக்கிறது.

தேவகன்னிகைகள் அவரை குளிப்பாட்டி உடலுக்கு நறுமணம் வீசும் வஸ்துகளைப் பூசி, உயர்தர ஆடைகளை அணிவித்து அழைத்துச் செல்கிறார்கள். அவரை அழைத்துச் செல்லவந்த தேவதூதரோ, “அய்யா. பிரம்மச்சரிய விரதம் இருந்த தாங்கள் நேரடியாக சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள். நீங்கள் உலகில் அனுபவிக்க முடியாத சந்தோஷங்களை அங்கே நிரந்தரமாக அனுபவிப்பீர்கள்” என்றார்.

பிரம்மச்சாரிக்கு மெத்த மகிழ்ச்சி. தன்னுடைய கடுமையான விரதத்துக்கு கிடைத்த பலனை எண்ணி மகிழ்ந்தவாறே ரதத்தில் விரைகிறார். வழியில் நிறைய பேரை பார்க்கிறார். சாதாரண ரதங்களில் சில பேரும், மாட்டு வண்டிகளில் ஆடுகள் போல அடைக்கப்பட்டு பல நூறு பேரும், பெரும் பாரங்களை சுமந்து கூன் விழுந்த முதுகோடு நடந்து செல்லும் லட்சக்கணக்கான பேரையும் பார்க்கிறார்.

ஒரு மாட்டு வண்டியில் கூட்டத்தோடு கூட்டமாக தன் குருவும் அடைத்துச் செல்லப்பட்டிருப்பதை கண்ட பிரம்மச்சாரிக்கு கடுமையான அதிர்ச்சி.

“என்ன கொடுமை குரு சார் இது? இப்படி ஏமாத்திட்டீங்களே?”

“அடப்போய்யா. நமக்கு முன்னாடி பாரத்தை தூக்கிக்கிட்டு கல்லிலும், முள்ளிலும், நெருப்பிலும் நடந்து போறது யாருன்னு தெரியுதா?”

“தெரியலையே குருவே!”

“ஒருவனுக்கு ஒருத்தி என்ற சொல்லுக்கு இலக்கணமா உலகத்துலே நாம சொல்லிக்கிட்டிருந்த அயோத்தி இராமபிரான் தான். வேற யாரு?”

25 comments:

 1. கடைசி வரி மட்டும் ஒரு சிலர் மனதைப் புண்படுத்தும் யுவா. மத்தபடி நல்லா இருக்கு

  ReplyDelete
 2. நீங்களும் ஒரு போலி பகுத்தறிவுவாதிதானா? இத்தனை நாள் தெரியாமல் போயிற்றே?

  ReplyDelete
 3. இதில் புண்படுத்த என்ன இருக்கு....அப்படி புண் பட்டவர்கள் இந்த இனைப்பை சென்று பார்த்து தங்களின் புண்ணை ஆற்றிக் கொள்ளலாம்.


  http://pangaali.blogspot.com/2007/04/blog-post_22.html

  ReplyDelete
 4. /*காலம் முழுக்க பிரம்மச்சாரியாக இருந்தவர் இயற்கையாக மரணம் அடைகிறார். மேலுலகத்துக்கு அழைத்துச் செல்ல மலர்களால் அலங்கரிக்கப்பட்ட நூறு குதிரைகள் பூட்டப்பட்ட ரதம் வந்திருக்கிறது.*/

  உண்மையாய் இருந்தவன் பலன் அடைந்தான்

  ReplyDelete
 5. KVR said...
  கடைசி வரி மட்டும் ஒரு சிலர் மனதைப் புண்படுத்தும் யுவா. மத்தபடி நல்லா இருக்கு

  //Correct sonninga

  ReplyDelete
 6. உடன்பிறப்புக்களுக்கே உரிய நக்கலுடன் கடைசி வரி :)-

  kvr புரிஞ்சிக்கவே இல்ல போல. இந்த பதிவே கடைசி வரிக்காக தான் :)-

  ReplyDelete
 7. Why cant you go to pakistan and write???

  ReplyDelete
 8. கான மயிலாட கண்டிருந்த வான் கோழி?

  ReplyDelete
 9. அந்த கடைசி வரியில் ராமனுக்கு பதிலா “தாத்தான்னு” இருந்திருந்தா ரொம்பவே appropriate-ஆக இருந்திருக்கும்!

  ReplyDelete
 10. Nice post! I enjoyed it.

  But one thing, I don't understand from people like you, Charu ........ when it comes to other religion you guys talk as if they are all good humans and their gods and godmen really do exist!!!!
  It's double-standard.

  I am saying there is no fu..ing god in any form and all these religious a..holes would make the human race extinct oneday - and all their gods would be dead too as there would be no one to pray to them!!!!!!!!!!!
  God and Religion are the most stupidest inventions that man had ever done.

  ReplyDelete
 11. Mr. Yuva.

  I am not happy with your last line but not for the reason that it is offensive to some. Will you have the same guts to write like this about other religious personalities? If you don't have the guts then don't write like this about a single religion.

  ReplyDelete
 12. Then Karunanithi& Co?
  Publish this question with your answer

  ReplyDelete
 13. உடன் பிறப்பு எழுத்தாளர்களுக்கே உரிய , பினிஷிங் டச் இல்லை....

  பிரமச்சர்யம் என்பது தலைப்பு.... முடிவில், ஒரு பிரமச்சாரி கடவுள் என கருதபடும் அனுமன் ,பிள்ளையார் போன்றவர்களை பயன்படுத்தி, கடைசி வரியை எழுதி இருந்தால், பகுத்தறிவு நகைச்சுவை பளீர் என இருந்திருக்கும்,.,, அல்லது பிரமச்சாரி என் கூறி கொள்ளும் சாமியார்களை, இழுத்து இருக்கலாம் ( of cource , hindu saamiyargal !! )

  ReplyDelete
 14. கடைசி வரி மட்டும் ஒரு புண்படுத்த தலைப்பு.... பகுத்தறிவுவாதி மத்தபடி பளீர் என ஆற்றிக் கொள்ளலாம் பலன் நல்லா

  ReplyDelete
 15. இது எங்கோ படித்த அடல்சு ஒன்லி கதை மாதிரி இருக்கே?

  சைக்கிள்,கார்,நடந்து செல்லுதல் என்று ஆரம்பித்து காரில் செல்லும் நபர் பாதிரியார் சைக்கிளில் சொர்க்கம் செல்வதை கேள்வி கேட்கும் பொழுது மெதுவா பேசுய்யா பின்னால ஏசுநாதர் சிலுவையை தூக்கிகிட்டு நடந்தேவரார் என்று படித்த அந்தமாதிரி கதையை கொஞ்சம் இந்திய சூழலுக்கு மாற்றி இருக்கீங்க என்று நினைக்கிறேன்.

  இது உண்மையிலேயே உங்கள் கற்பனை என்றால் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 16. யார் பிரம்மச்சாரி? காமத்தை கடந்தவனா இல்லை அடக்கி வைத்திருப்பவனா? தெளிவா சொல்லுங்க தல.

  ReplyDelete
 17. புரியல. இராமபிரான் எந்தப்பெண்ணை அபகரித்தான்? எந்தப்பெண்ணிடம் இழிதொடர்பு வைத்திருந்தான்?

  சும்மா சேறு வீசுவதற்காக சொன்ன வார்த்தை என்றால், என்னை மன்னிக்கவும். என் பின்னூட்டம் பற்றியும் கவலைப்பட வேண்டாம்

  அப்படி இல்லை என்றால், தயவு செய்து புரிய வைக்கவும்.

  ReplyDelete
 18. If you look at the Epics and Puranas, they uniformly point out that the married householder aka Grihasta is the one who is accorded the best position.

  He is the best among householders,Brahmacharis, Vanaprastras and Sanyasis. In fact, the first chapter in Mahabharata states that "As Grihasta is the best among four Asramas, so is this epic (Mahabharata) among all poems"

  There are several reasons it is accorded the highest place
  - people have to reproduce to maintain, if not grow, the population, and preserve familial customs
  - People have to willingly embrace Grihasta without any qualms. Else there will be several phony Brahmacharis.

  (Think why we do have so many phonies in politics)

  ReplyDelete
 19. ////“ஒருவனுக்கு ஒருத்தி என்ற சொல்லுக்கு இலக்கணமா உலகத்துலே நாம சொல்லிக்கிட்டிருந்த அயோத்தி இராமபிரான் தான். வேற யாரு?”////
  என்ன சொல்ல வரீங்க‌....??
  ராமன் மனதில் நிறைய பெண்களை வைதிருந்தான் என்கிறிர்களா????

  ReplyDelete
 20. Guys,
  This writer is phony...can he replace 'Rama' by 'allah'?. In fact i find many muslims are in need of help from Ramasamy Naicker. Today Mr. Ramasamy Naicker is an Industry which is well exploited by many parties in Tamil Nadu. Writer is one amongst many who ridicule only one religion and pose as a 'rationalist'

  ReplyDelete
 21. இதனால் தமிழ் கூறும் நல்லுலகிற்கு தாங்கள் கூற விழைவது யாதாக இருக்கக்கூடும் மன்னா :)

  ReplyDelete
 22. Why did you use sri ram name at last , could you give explanation , else remove that line.

  ReplyDelete
 23. யார் பகுத்தறிவாளி ?
  பதிலை சரியாக தெரிந்துகொண்டுதான் உங்களுக்கு மறுமொழி தருகிறேன் என்ற நம்பிக்கையுடன் .....
  "" மதம் என்பது நம் வாழ்க்கை சரியாக சுவையாக சமைக்க உதவும் ஒரு சமையல் கலை. இந்த கலையில் நாளடைவில் புகுந்த களையை களைய தேவைபட்டதுதான் பகுத்தறிவு, தேவைப்பட்டவர்கள் தான் பகுத்தறிவாளர்கள் .
  கடவுள் இருக்கிறார் என்று சொல்பவர்களும் இல்லை என்று சொல்பவர்களும் உண்மையில் ஆன்மீகவாதிகள் என்ற வார்த்தைக்குள் அடங்குபவர்கள் தான் . இல்லை என்று சொன்னாலும் இருக்கிறார் என்று சொன்னாலும் வாழ போவது மனித வாழ்க்கை தான்,
  தேவை என்றால் கடவுளை தொடரலாம் . தேவை இல்லை என்றால் கடவுள் இல்லை என்ற பாதையில் தொடரலாம். ஆனால் வாழ்கையை சரியாகவும் சுவையாகவும் வாழ தெரிந்துகொண்டிருக்க வேண்டும் ........:"

  யாரையும் புண்படுத்தாதீர்கள் ....
  (புன்படுத்துவதுதான் நோக்கமென்றால் நல்ல அர்த்தமான கதைகளுடன் பதிவிடுங்கள்...)

  ReplyDelete