26 பிப்ரவரி, 2010

ஆட்டோ ராமர்!


சென்னை ஜெமினி மேம்பாலத்தில் இருந்து சாந்தோமுக்கு செல்ல புகைப்படக் கலைஞரோடு நின்றிருந்தோம். அவசரத்துக்கு பஸ் கிடைக்கவில்லை. வந்த நான்கைந்து ஆட்டோக்களும் சாந்தோம் செல்லத் தயாராக இல்லை. “சாந்தோமா? நூறு ரூபாய் கொடு!” என்று ஒரு ஆட்டோக்காரர் கேட்க, மூன்று கிலோ மீட்டர்தானே, நடந்தே போய்விடலாமா? என்று யோசித்துக் கொண்டிருந்தோம்.

‘CALL AUTO 9941468215’ என்று எழுதப்பட்டிருந்த ஆட்டோ ஒன்று, நாம் கைகாட்டாமல் தாமாகவே அருகில் வந்து நின்றது.

“வணக்கம். நான் ஸ்ரீராமர். ஆட்டோவுக்காக காத்திருக்கீங்களா? எங்கே போகணும்?” என்று அந்த டிரைவர் கேட்டதுமே ஆச்சரியமாகப் பார்த்தோம்.

“சாந்தோம்” என்றதுமே, “உட்காருங்க. போகலாம்” என்றார்.

உட்கார்ந்தவுடனேயே மின்விசிறியின் ஸ்விட்சைத் தட்டினார். “அக்டோபர் மாச வெயில்லு ஏப்ரலையே மிஞ்சிடும் போலிருக்கே?” என்று கமெண்டும் அடித்தார். காசு பற்றி பேசவேயில்லை. சாதாரண ஆட்டோவே நூறு ரூபாய் கேட்கும்போதும், மின்விசிறி வசதியெல்லாம் கொடுக்கும் ஆட்டோவில் சொத்தையே எழுதிவாங்கி விடுவார்களே என்று பயந்தபோது, மீட்டரை சொடுக்கினார்.

“பயப்படாதீங்க சார். மீட்டர் என்ன காட்டுதோ, அந்தப் பணத்தை மட்டும்தான் வாங்குவேன். இருபது ரூபாய்க்குள்ளே தான் ஆகும்!” என்றார் ஆட்டோ நண்பர்.

சென்னையில் மீட்டர் போட்டு ஆட்டோ ஓட்டும் ஓட்டுனர்கள் விரல்விட்டு எண்ணும் எண்ணிக்கையில் தான் இருப்பார்கள். ஸ்ரீராமரும் ஒருவர். “சைட்லே படிக்க பத்திரிகைங்க வெச்சிருக்கேன். தேவைப்பட்டா எடுத்துங்க சார்!” என்றவாறே வண்டியை கிளப்பினார். சில நாளிதழ்களும், வார இதழ்களும், கூடவே நம்ம புதியதலைமுறையும். நிமிர்ந்துப் பார்த்தால் ஒரு டைம்பீஸ். “எல்லாருமே வாட்ச் கட்டுறதில்லை. எவ்வளவு நேரத்துலே போகவேண்டிய இடத்துக்கு போகிறோம்னு பயணிகள் தெரிஞ்சுக்கணுமில்லே?”

சென்னையின் வரைபடம் ஒன்றும் செருகப்பட்டிருக்கிறது. “சென்னை ரொம்ப பெரிய ஊருங்க. புதுசா இங்கே வர்றவங்க குழம்பிடறாங்க. அவங்க வசதிக்காகதான் இந்த மேப்!”
அடுத்தடுத்து சதிஷ்குமார் என்கிற ஸ்ரீராமர் இன்ப அதிர்ச்சி கொடுத்துக்கொண்டே போக, அவரைப் பற்றி மெல்ல விசாரித்தோம்.

“முப்பத்தி மூணு வயசாகுது. எட்டாவது வரைக்கும்தாங்க படிச்சிருக்கேன். என்னோட அக்காவெல்லாம் ரெண்டு, மூணு கிலோ மீட்டர் தூரத்துக்கு ஆட்டோவில் போகுறதுக்கே அநியாயமா காசு கொடுப்பதைப் பார்த்து மனம் வெதும்புவேன். ஆட்டோக்காரங்க கிட்டேருந்து பயணிகளை காப்பாத்தணும், நாமளும் ஏதாவது வேலை பார்க்கணும்னு ஆட்டோ ஓட்ட ஆரம்பிச்சேன். சுயநலத்திலும் ஒரு பொதுநலம்னு வெச்சிக்குங்களேன்.

மீட்டருக்கு மேலே அஞ்சு பைசா வாங்குறதில்லே. பயணிகளை மரியாதையா நடத்துறேன். என்னோட விருந்தோம்பலில் திருப்தியானவங்க சில பேர், அவங்க நண்பர்களுக்கு என்னைப் பத்திச் சொல்லுவாங்க. அதனாலே நிறைய பேர் என் ஆட்டோவைத் தேடி வந்து பயணிக்கிறாங்க. அவங்க வசதிக்காக இந்த ஆட்டோவை ‘கால் ஆட்டோ’வா மாத்தியிருக்கேன். என் செல் நம்பருக்கு போன் பண்ணா, வீட்டுக்கு வந்து பிக்கப் பண்ணிக்குவேன். பொதுவா மேற்கு மாம்பலம், தி.நகர், மயிலாப்பூர் ஏரியாக்கள் தான் நாம வேலை பார்க்குற இடம். என்னைப் பத்தி கமிஷனர் ஆபிஸ்லே கேள்விப்பட்டு கூப்பிட்டு பாராட்டியிருக்காங்க. ரோட்டரி சங்கத்தில் ‘சென்னையின் சிறந்த ஆட்டோ டிரைவர்’னு விருதுகூட கொடுத்திருக்காங்க!” சிக்னல்களை கவனமாக கவனித்தவாறே நம்மிடம் பேசிக்கொண்டிருந்தார்.

“எல்லா ஆட்டோக்காரங்களும் உங்களை மாதிரி இல்லாம ஏன் இப்படி அநியாயமா காசு வாங்குறாங்க?”

“ஒரு பயணியா நீங்க இப்படித்தான் நினைப்பீங்க. பத்துவருஷமா மினிமம் 7 ரூபாய், கிலோ மீட்டருக்கு ரூ.3.50 என்பதுதான் அரசு ஆட்டோக்காரங்களுக்கு நிர்ணயிச்ச கட்டணம். இப்போதான் மினிமம் ரூ.14.00, கிலோ மீட்டருக்கும் ரூ.6.00ன்னு உயர்த்தி இருக்காங்க. பெட்ரோல் விக்கிற விலையிலே இது ரொம்ப ரொம்ப குறைவான நிர்ணயம்.

ஆட்டோ சங்கங்கள் கேட்கிறமாதிரி குறைந்தக் கட்டணம் 30 ரூபாய், கிலோ மீட்டருக்கு 10 ரூபாய்னு நிர்ணயிச்சா, பெரும்பாலான ஆட்டோக்காரர்கள் மீட்டர் போட்டு ஓட்டுவாங்க. அப்போதான் கட்டுப்படியும் ஆகும். எப்படி இருந்தாலும் ‘லாபமோ, நஷ்டமோ’ என்னைப் பொறுத்தவரைக்கும் மீட்டர் போட்டுதான் ஓட்டணும்னு உறுதியா இருக்கேன்!” என்கிறார்.

நாம் செல்லவேண்டிய இடம் வந்துவிட்டது. மீட்டர் காட்டிய இருபது ரூபாயை கொடுத்துவிட்டு விடைபெறும்போது, “இன்னமும் வாடகை ஆட்டோதான் சார் ஓட்டுறேன். பகல் வாடகை 150 ரூபாய், முழுநேரம் ஓட்டுனா 300 ரூபாய். அப்படியிருந்தும் எனக்கு சராசரியா தினமும் 150, 200 ரூபாய் வருமானம் கிடைக்குது. சீக்கிரமா சொந்த ஆட்டோ வாங்கணும். ஆட்டோ வாங்கிட்டா ஈஸியா பர்மிட் கொடுக்கறோம்னு துணை கமிஷனர் சொல்லியிருக்கார். வர்றது வாய்க்கும், வயித்துக்குமே சரியா போகுதே. எங்கிருந்து வாங்குறது?” என்று அங்கலாய்த்தார் ஸ்ரீராமர்.

விரைவில் சொந்த ஆட்டோ வாங்கி சிறப்பான சேவைபுரிய வேண்டுமென வாழ்த்தி விடைபெற்றோம்.

எக்ஸ்ட்ரா மேட்டர் : சென்னையில் மட்டுமே அறுபதாயிரத்துக்கும் அதிகமான ஆட்டோக்கள் ஓடுகிறது. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஆட்டோ ஓட்டுனர்களாக பணிபுரிகிறார்கள். இவ்வளவு பேருக்கு வேலைவாய்ப்பு தரும் இத்தொழில் புரையோடிப் போயிருப்பதற்கு ஆட்டோ ஓட்டுனர்கள் மட்டுமே காரணமல்ல. யாரெல்லாம் சொந்த ஆட்டோ வாங்கி வைத்து, ஓட்டுனர்களுக்கு வாடகைக்கு விடுகிறார்கள் என்றொரு புலனாய்வு மேற்கொண்டால் பல திடுக்கிடும் விஷயங்கள் வெளிவரும். சென்னைக்கு வரும் பயணிகளும், வெளிநாட்டவர்களும் சென்னைவாசிகளை தங்கள் ஆட்டோ அனுபவங்களை வைத்தே மட்டமாக எடைபோடுகிறார்கள். போக்குவரத்து அமைச்சகம் உடனடியாக செயல்பட்டு, சீர்த்திருத்த வேண்டிய உடனடி பிரச்சினை இது.

அக்டோபர் 29, 2009 ‘புதிய தலைமுறை’ இதழில் வெளியான செய்தி இது.

இரண்டு மாதங்கள் கழித்து ஒருநாள் ராமர், புதிய தலைமுறை அலுவலகத்துக்கு நேரில் வந்திருந்தார். ஆசிரியரை சந்தித்து, தன்னுடைய புதிய சொந்த ஆட்டோவை காட்டவேண்டுமென்பது அவரது வருகையின் நோக்கம். இப்போது ராமர் வங்கியில் கடன் பெற்று வாங்கிய சொந்த ஆட்டோ அது. கட்டுரையை வாசித்த பெங்களூர் வாசகர் ஒருவர் இதற்கான ஏற்பாடுகளை ராமருக்கு செய்துத்தந்தார். வங்கியில் கட்டவேண்டிய முன்பணத்தையும் அவரே கட்டியிருக்கிறார்.

எழுதுவதால் மட்டுமே எப்போதாவது இதுபோன்ற மனதுக்கு திருப்தி தரும் ஓரிரு நல்ல விஷயங்களாவது நடைபெறுகிறது.

37 கருத்துகள்:

 1. வாழ்த்துகள்.. ராமா.

  நன்றிகள். கிருஷ்ணா.

  பதிலளிநீக்கு
 2. நிஜமாகவே நல்ல பதிவு

  பதிலளிநீக்கு
 3. யுவா,

  Autos should run on meters in Chennai

  முகப்புத்தகத்தில் இந்த பிரிவில் உங்கள் பதிவை சேர்த்திருக்கிறேன்.

  நன்றி யுவா.

  பதிலளிநீக்கு
 4. ithu mathiri nalla pathivellam thodarnthu ezhutha vazthukkal.

  appreciations to Sri ramar also

  Virutcham

  பதிலளிநீக்கு
 5. அருமையான பதிவுங்க, இது மாதிரி நீங்க நிறைய மனிதர்களை வெளிய கொண்டுவரணும்.வாழ்த்துகள் ..... நன்றி,

  திரு.ஸ்ரீராமர் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகள் ........... நன்றி,

  //கட்டுரையை வாசித்த பெங்களூர் வாசகர் ஒருவர் இதற்கான ஏற்பாடுகளை ராமருக்கு செய்துத்தந்தார். வங்கியில் கட்டவேண்டிய முன்பணத்தையும் அவரே கட்டியிருக்கிறார்.//
  - இவர் இப்பொழுது உயர்ந்த இடத்தில் நிற்கிறார் மற்றவர்களுக்கு ஒரு உதாரணமாய்...... வாழ்த்துகள் ..... நன்றி

  பதிலளிநீக்கு
 6. ந்ல்லோர் ஒருவர் உலர் எனில் அவர்பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை.
  - பகிர்வுக்கு நன்றி கிருஷ்ணா

  பதிலளிநீக்கு
 7. good one, great service by sriramar and good that he get such an appreciation.

  பதிலளிநீக்கு
 8. வாவ்.. என்று ஆசைதீர ராமரை பாரட்டும் அதே வேளை ஒரு கேள்வி.

  ஆந்திராவிலும், கர்நாடகத்திலும் இதே பெட்ரோல் விலைதான். அவர்களால 7 ரூபாய்க்கே லாபமாக ஓட்டும்போதொ இவர் 10 ரூபாய் என்பது டூ மச் இல்லையா?

  ஒரு ஆட்டோ 25 கி.மீ மைலேஜ் தரும். பெட்ரோலும் ஆயிலும் 53 ரூபாய். எனில், கி.மீக்கு 2.20 தான்.வாடகை, பராமரிப்பு, ஓட்டுநர் பங்கு என எல்லாம் சேர்த்தாலும் 8 ரூபாய் நல்ல விலை.எ.பி.ஜி ஆட்டோ என்றால் இன்னும் குறைவு. 10 என்பது கால் டேக்ஸீகள் ரேட்.

  பதிலளிநீக்கு
 9. கார்க்கி!

  இந்த கால்குலேஷன் எனக்கு தெரியலை.

  ஆனால் பெங்களூர் ஆட்டோக்களை பெரியதாக பாராட்டுவார்கள். நான் அங்கே போயிருந்தபோது எனக்கு பெரீய்ய வித்தியாசம் எதுவும் தெரியவில்லை.

  பதிலளிநீக்கு
 10. பெட்ரோல் விலை இருக்கட்டும். ஒரு சில இடங்களில் (தாம்பரம்/ சானடோரியம் அருகில்) 1.5 கி.மி. தொலைவில் இருக்கும் ரயில் நிலையம் செல்ல ரூ.30 ((இது நடந்தது ஒரு 12 வருடங்களுக்கு முன்பு) வைக்கவில்லை என்றால் நிறுத்தத்திலிருந்து வண்டி நகராது. சில ஆட்டோரிக்ஷா ஓட்டுனர்கள் பகலில் உட்கார்ந்து சீட்டு ஆடுவார்களே தவிர ஒருவருக்கு 10-நிமிட உதவி செய்து தொழிலில் ரூ.15ஓ 20ஓ சம்பாதிக்கலாம் என்று நினைக்க மாட்டார்கள்.

  ஏன் இப்படி இருக்கிறார்கள், தொழிலில் அக்கறை இல்லையா என்று நினைக்கத் தோன்றும்.

  பதிலளிநீக்கு
 11. தாங்க்ஸ் யுவா! நான் தி.நகரில்தான் பிஸினஸ் செய்கிறேன். டூவீலர் நன்றாக ஓட்டுவேன் என்றாலும் லைசென்ஸ் இன்னும் எடுக்கவில்லை என்பதால் இன்னும் சிட்டிக்குள் ஆட்டோதான். மாதம் சராசரியாக 3000 ரூபாய்....! ஆட்டோவுக்கு மட்டும்...!!! இனி ராமருக்கு ஜே!

  பதிலளிநீக்கு
 12. பணம் மட்டுமே பிரதானமாகப்போன இந்த சமூகத்தில் நிச்சயமாக ஆட்டோ ராமர் பாராட்டப்படவேண்டியவர்தான் சந்தேகமேயில்லை. அவர் வாழ்வில் சமூக, பொருளாதார மேம்பாடு அடைவதற்கு எமது மனமார்ந்த வாழ்த்துகள்.

  ஒரு ஆட்டோ டிரைவர் சொன்னது.....

  'ஒவ்வொருத்தரும் அவர்களுக்காகத்தான் சம்பாதிக்கிறார்கள். ஆனால் நாங்கள்
  1. ஆட்டோவுக்கு டிவு (due EMI) கட்டுவதற்காகவும்,
  2. பெட்ரோல் டீசல் விலையேற்றத்திற்காகவும்,
  3. போலீஸ் மாமூலுக்காகவும்
  4. ஆட்டோ தேய்மானம் (பழுது மற்றும் பராமரிப்புக்காகவும்)
  இதெல்லாம் போக எங்களுக்காவும் சம்பாதிக்கவேண்டியிருப்பதால்தான் வாடிக்கையாளருக்கு நிறைந்த சேவை அளிக்க முடிவதில்லை என கூறுகிறார்.

  அவர் சொல்வது சரியா என புரிந்து கொள்ளும் அளவிற்கு எனக்கு புத்தியில்லை.

  அதுசரி ஒரு விஷயம்தான் புரியவில்லை லக்கி...

  ஆட்டோ டிரைவர் 10ரூ. அதிகமாக கேட்டால் ஹின்டுவில் எழுதுபர்கூட தன் மகனின்/மகளின் ஒரு என்ஜினியரிங் சீட்டுக்கு 5 லட்சமும், ஒரு டாக்டர் சீட்டுக்கு 40 லட்சமும் வாங்கும் ‘கல்வித்தந்தைகளை’ நோக்கி ஒரு புகார்கூட கொடுக்க ஏன் மறுக்கிறார்கள் என்பதுதான்.

  (ஆட்டோடிரைவர் 10ரூ அதிகமா கேட்டா அநியாயம்,
  ஆனா... கதவு இல்லாத பஸ்சுல 4ரூ. டிக்கட், கதவு போட்ட பஸ்சுல 12ரூ. டிக்கட். அரசு சொன்னா நியாயம்.

  10ரூ. அதிகம் கேட்டால் ஆட்டோ டிரைவர் – கேடி

  ஆட்டோ டிரைவரா வேஷம் போட்டால் ரஜினிக்கி – 10 கோடி. பேஷ். பேஷ்.

  இந்த லாஜிக்கை புரிஞ்சுக்க போதுமான புத்தியில்லாத எனக்காக நீங்கள் வணங்கும் கடவுளிடம் பிராத்தித்து கொள்ளவும்.

  - சென்னைத்தமிழன்.

  பதிலளிநீக்கு
 13. என்ன சாரே... நீங்கள் ராமர் என்று சொன்னீர்கள். ஃபோட்டோவில் சதிஷ்குமார் என்று ஓட்டுநர் பேட்ச் சொல்கிறதே. ராமர் எங்கே போனார்?
  அவரைக் காட்ட மாட்டீர்களா..??

  பதிலளிநீக்கு
 14. இதுபோல சில பதிவுகளுக்கு மட்டும்தான் மனநிறைவோடு பின்னூட்டமிட முடியும்.. :-)

  பதிலளிநீக்கு
 15. Madras Nalla Madras which was once famous (infamous) for Auto Shankar is now proud about Auto Ramar thanks to Krishna(r)'s blog. As I was reading the blog, I was contemplating how best I could help this gentleman within the resources possible from my end and I was hoping will he not be having his residence (ration card) around the area where I am a Bank Manager so that I will have a sense of "Athma Thirupthi" and my Bank will also feel proud in having lent this gentleman. But before the end of the blog itself, I was very happy to know that he has already been lent financial assistance from a Bangalore good samaritan with margin money. The next time when I go in my 2/4 wheeler, if I happen to notice Ramar I will get down and give him hand shake. You have said generally he drives near West Mambalam. My residence is at West Saidapet. If you hire an autorickshaw from West Saidapet Station Auto Stand near the western entrance (ticket counter) for an 1.6 km journey they will charge you Rs.25/- but for the same destination, if you hire an auto rickshaw near the new northern subway of Saidapet station which is not very far, you have to pay Rs.30/- (In other words if you catch an auto using staircase you pay Rs.5 less than the one you catch by using a new subway) I remember my Mumbai days wherein after accepting the 10-rupee note, the auto drivers there will return me back one rupee balance without forgetting. In Mumbai the auto drivers will never sit idle. They will keep on driving. But in Chennai they either want more money or avoid routes or long journeys which they don't prefer. Summa ukkanthalum ukkaruvanga aana savari vara mattargal. A few days back in a newspaper I read about another Auto Driver who has an email id and is preferred by foreigners who visit Chennai. Naan Autokkaran autokkaran song reverberates in my ears. Interesting fascinating You can keep on writing about Chennai Auto Drivers. Have any one thought as to why a majority of the Auto Drivers at Chennai behave the way they do? - Ashok email: rajashokraj@yahoo.com

  பதிலளிநீக்கு
 16. மிக்க மகிழ்ச்சி. நல்ல விஷயங்கள் ஆங்காங்கே அப்பப்போ நடக்கின்றன.

  பதிலளிநீக்கு
 17. உண்மையிலேயே உங்கள் பதிவு மிக சிறப்பாக உள்ளது. மனதை தொட்டுவிட்டது. நான் தூரத்தில் இருக்கிறேன்...எனவே எனக்காக ராமருக்கு எனது வாழ்த்தைக் கூறுங்கள்.
  நட்புடன்- ஜீவேந்திரன்.

  பதிலளிநீக்கு
 18. வாழ்த்துக்கள்.நானும் ஒரு சக பத்திரிக்கையாளனாக பெருமை அடைகிறேன்.தொடரட்டும் எழுத்து பணி.

  பதிலளிநீக்கு
 19. Best wishes to Sriramar.
  //I remember my Mumbai days wherein after accepting the 10-rupee note, the auto drivers there will return me back one rupee balance without forgetting.//
  Very true.

  பதிலளிநீக்கு
 20. நல்லவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்....

  அவர்களை தேடுவது தான் சிரமமாக இருக்கிறது...

  பதிலளிநீக்கு
 21. நல்லவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்....

  அவர்களை தேடுவது தான் சிரமமாக இருக்கிறது...

  இந்த ஆட்டோ டிரைவர் தமிழகத்தில் இருக்கும் அனைத்து ஆட்டோ டிரைவருக்கும் ஒரு பாடமாகிறார்.

  பதிலளிநீக்கு
 22. நல்லவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்....

  அவர்களை தேடுவது தான் சிரமமாக இருக்கிறது...

  இந்த ஆட்டோ டிரைவர் தமிழகத்தில் இருக்கும் அனைத்து ஆட்டோ டிரைவருக்கும் ஒரு பாடமாகிறார்.

  பதிலளிநீக்கு
 23. இதை படிக்கும் போதே மிகவும் சந்தோசமா இருக்கு லக்கி.

  உண்மையில் அவர் கிரேட்.

  இப்படிதான் அதிஷ்டவசமா நல்லவங்க மாட்டிக்கிறாங்க :) அருமையான பதிவு.

  பதிலளிநீக்கு
 24. God Bless You Ramar. You r the Best Example to all the Other Auto Drivers in Chennai. We appreciate your Service. All The Best Sir.
  Best Regards - Anthony.

  பதிலளிநீக்கு
 25. Superb !!! am reading you for the first time.....nalla pathivu...
  'எழுதுவதால் மட்டுமே எப்போதாவது இதுபோன்ற மனதுக்கு திருப்தி தரும் ஓரிரு நல்ல விஷயங்களாவது நடைபெறுகிறது.'

  நீங்கள் சொல்வது போல எழுதுவதால் மனதுக்கு திருப்தி மட்டும் அல்ல , மிக பெரிய relief kooda...

  பதிலளிநீக்கு
 26. Yuva ! Excellent narration in all your blogs !! Oru common man enna enna yosippano ...athe pola , your writings are without any exaggeration , and close to reality ! Thats y its very interesting !!! Auto Ramar - padikkira engalukku ,lifela oru discipline ,meaning venummnu unarthuthu ! Congrats for your writing Style and keep it up !!! - Sudhaangan.

  பதிலளிநீக்கு
 27. Good Article. Keep it UP. Hats Off to both of U -Anwar

  பதிலளிநீக்கு
 28. endha appreciate pandravanga ellarum call taxi madheree 'call auto' business start panna nalla oodum nu business instinct thareenga... if possible, lets all help this Ramar to start this buisness.Im sure this bank manager is also there to help. Edhuku extara vah he can very well charge Rs. or Rs.10/- per trip as service charge and people will be more happy to pay it instead of paying bomb. Also adhu Mumbai, Bglr, Hydr madheree LPG yah erundha ennum useful and profit aah erukkum. All the best Ramar.

  பதிலளிநீக்கு
 29. ivar innum auto driver-a irukkiraara ?

  பதிலளிநீக்கு
 30. I was just looking for this info for a while. After six hours of continuous Googleing, finally I got it in your website. I wonder what is the Google's problem that doesn't rank this kind of informative web sites closer to the top. Normally the top web sites are full of garbage.

  பதிலளிநீக்கு