February 22, 2010

கற்றதும், பெற்றதும்!

அண்ணா மூன்றெழுத்து
எம்.ஜி.ஆர் மூன்றெழுத்து
திமுக மூன்றெழுத்து
சுஜாதா-வும் மூன்றெழுத்து’அவரிடமிருந்து கற்றதும், பெற்றதும் எவ்வளவோ!’ என்று ஒருவார்த்தையில் புகழாரம் சூட்டலாம். க்ளிஷேவாக இருந்தாலும் உண்மையும் கூட. என்னுடைய ஹிஸ்டரி வாத்தியார் தண்டபாணியிடம் கற்றதும் கூட, இவரிடம் கற்றதில் பாதியளவுதான் இருக்கும். அவர்மீது சில காட்டமான விமர்சனங்கள் இருந்தாலும்கூட, அவர்தான் எனக்கு ஒரிஜினல் ‘வாத்தியார்’.

70களில் ஏதோ துண்டு துக்கடா கேரக்டர்களில் நடித்துக் கொண்டிருந்த கமல்ஹாசன் பெரிய ஹீரோவாக வருவார் என்று கணித்ததில் ஆகட்டும், எங்கோ மூலையில் முடங்கிக் கொண்டிருந்த மனுஷ்யபுத்திரனின் திறனை உலகுக்கு அறிவித்ததில் ஆகட்டும்.. வாத்தியாரின் தீர்க்கதரிசனம் என்றுமே ‘மிஸ்’ ஆனதில்லை.

‘பெண்களூர்’ என்று விளிப்பதாகட்டும், சமத்துவம் பேசும் ஹீரோயினிடம், “ஆம்பளைன்னா சட்டையோட மேல் பட்டன் ரெண்டை திறந்துவிட்டுப்பேன். நீ செய்வியா?” என்று டயலாக் எழுதிய நக்கலாகட்டும். வாத்தியார் வாத்தியார்தான்! ஆணாதிக்கமாக இருந்தாலும் ரசிக்கக்கூடிய ஆணாதிக்கம்.

எழுத்தில் கணேஷ்-வசந்தில் தொடங்கி, சினிமாவில் விக்ரம், இந்தியன் தாத்தாவென்று பயணித்து ரோபோவரை தொடர்ச்சியாக இயங்கிய ஃபேண்டஸி சிங்கம். ‘கண்ணேதிரே தோன்றினாள்’ படத்தின் பட்டாம்பூச்சி வசனம் நினைவிருக்கிறதா?

எழுத்து, சினிமாவென்று குறுகிவிடாமல் சமூகத்தில் பரவலாக பல தளங்களில் அறிமுகமான சகலகலா வல்லவன். அப்துல்கலாமுக்கு கல்லூரித் தோழர். மின்னணு வாக்கு இயந்திர முறையை நாட்டுக்கு அறிமுகப்படுத்திய முன்னோடிகளில் ஒருவர்.

ஸ்ரீரங்க நாயகன், ஸ்ரீரங்கநாதனோடு அடைக்கலமாகி, அதற்குள்ளாக இரண்டு வருடங்களாகிறதாம். இன்னும் அவர் எழுதிக்கொண்டே இருப்பதைப்போன்ற மாந்திரீக யதார்த்தம். அவரது வீச்சு அத்தகையது. மறைந்தும் மறையாமல் வாழ்பவர்களில் எம்.ஜி.ஆருக்கு அடுத்த இடம் நிச்சயம் இவருக்கு.

அவரிடம் கற்றதையும், பெற்றதையும் அசைப்போட ஒரு சிறிய கூட்டம். பிப்ரவரி 27, சனிக்கிழமை, மாலை 5.30 மணி. காந்தி சிலை அருகில். சென்னை மெரீனா கடற்கரை. நிகழ்வு அமைப்பு : ஐகாரஸ் பிரகாஷ், உருப்படாதது நாராயணன்.

பிரபல (இந்த சொல்லை சொல்லவே அஞ்சவேண்டியிருக்கிறது. மொக்கைகளும், மொன்னைகளும் கூட பிரபலமாக இருக்கிறார்கள்) எழுத்தாளர்கள், வலைப்பதிவர்கள் மற்றும் ட்விட்டர்கள் சிறுந்திரளாக கலந்துகொள்கிறார்கள். யாவரும் வரலாம்.

36 comments:

 1. He is man of excellence !!!

  ReplyDelete
 2. //பிரபல (இந்த சொல்லை சொல்லவே அஞ்சவேண்டியிருக்கிறது. மொக்கைகளும், மொன்னைகளும் கூட பிரபலமாக இருக்கிறார்கள்)//

  இதில் என்ன பகடி என்று புரியவில்லை சகா. மொக்கைகள் மொக்கைக்காக பிரபலமாக இருந்தால் அதிலென்ன ஆச்சரியம்? அவர்கள் சிறுகதை மன்னர்கள், நவீன கவிஞர்கள் என்று பிரபலமானால் உங்கள் வருத்தம் நியாயம். டிமாண்ட், சப்ளைதான், மொக்கைக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. படிக்க ஆள் இருக்காங்க. அது எழுதினால் அச்சச்சோன்னு இலக்கிவாதிகள் கொந்தளிப்பது ஏன் என்று தெரியவில்லை. நீங்களும் இலக்கியவாதிகாவோ, அபப்டி ஒரு தளத்திற்கோ சென்று விட்டமைக்கு வாழ்த்துகள். :))

  ReplyDelete
 3. கருத்துக்கு நன்றி கார்க்கி!

  ‘பிரபல தொழிலதிபர்’ என்ற சொல்லாடல் கவுண்டமணியால் பிரபலம் ஆனதில்லையா? அதுபோன்ற பிரபலம் எழுத்தில் ஈடுபட்டவர்களுக்கும் ஏற்பட்டு விட்டதே என்ற கவலைதான். பகடி அல்ல.

  ReplyDelete
 4. //பிரபல (இந்த சொல்லை சொல்லவே அஞ்சவேண்டியிருக்கிறது. மொக்கைகளும், மொன்னைகளும் கூட பிரபலமாக இருக்கிறார்கள்) எழுத்தாளர்கள், வலைப்பதிவர்கள் மற்றும் ட்விட்டர்கள் சிறுந்திரளாக கலந்துகொள்கிறார்கள். யாவரும் வரலாம்.//

  இதற்கு என்ன அர்த்தம் லக்கி? மொக்கை மொன்னை எனத் தீர்மானிப்பது யார்? என்னவிதமான அளவுகோல் அது?

  சரி உங்கள் பார்வையில் யார் சரியான பிரபலம்? லக்கியா? இல்லை இன்னார்தான் பிரபலம் என நீங்கள் அடையாளம் காட்டுங்களேன்.

  ReplyDelete
 5. நீங்கள் ஆளப்பிறந்தவர் - ஆத்திரப்படாதீர்! ;-}

  ReplyDelete
 6. //சமத்துவம் பேசும் ஹீரோயினிடம், “ஆம்பளைன்னா சட்டையோட மேல் பட்டன் ரெண்டை திறந்துவிட்டுப்பேன். நீ செய்வியா?” என்று டயலாக் எழுதிய நக்கலாகட்டும். வாத்தியார் வாத்தியார்தான்//

  இது படத்துக்காக மாற்றின வசனம். குமுதத்திலே விக்ரம் தொடரா வந்தப்போ எழுதின வசனம் ஞாபகம் இருக்கா?

  “ஆம்பள நான் நிண்ணுகிட்டு செவுத்துல ஒண்ணுக்கடிப்பேன், உன்னால முடியுமா?”ன்னு கேட்டிருப்பார்.

  //(இந்த சொல்லை சொல்லவே அஞ்சவேண்டியிருக்கிறது. மொக்கைகளும், மொன்னைகளும் கூட பிரபலமாக இருக்கிறார்கள்) //

  அநாவசியத் திணிப்பு - கூல்ல்ல்ல்ல்ல்

  ReplyDelete
 7. வேலன் அண்ணாச்சி!

  //இதற்கு என்ன அர்த்தம் லக்கி? மொக்கை மொன்னை எனத் தீர்மானிப்பது யார்? என்னவிதமான அளவுகோல் அது?//

  ஒவ்வொருவருக்கும் ஒரு அளவுகோல். உங்கள் அளவுகோலில் நான் மொக்கையாகவோ, மொன்னையாகவோ இருக்கலாம்.

  //சரி உங்கள் பார்வையில் யார் சரியான பிரபலம்? லக்கியா? இல்லை இன்னார்தான் பிரபலம் என நீங்கள் அடையாளம் காட்டுங்களேன்.//

  பிரபலம் என்ற சொல்லாடலை துரதிருஷ்டவசமாக தவறான அர்த்தத்தில் பயன்படுத்தி வருகிறோம். என்னையும் சிலர் அன்புகாரணமாக பிரபலம் என்று விளிக்கிறார்கள். நிச்சயமாக இது தவறான போக்கு.

  நிஜமான ஒரு பிரபலத்தை காணும்போதோ, வாசிக்கும்போதோ நம்முடைய இத்தகைய செயல்களுக்கு நாம் வெட்கி தலை குனிந்தாக வேண்டும். நான் தலைகுனிந்திருக்கிறேன்.

  ReplyDelete
 8. சுஜாதா குறித்தான கட்டுரையில் “மொக்கை மொன்னை” அநாவசியம். மற்றபடி அளவுகோல் அவரவர் இஷ்டப்படியே.

  அஜித் பேசியதற்கு கை தட்டியவர்கள் “மொக்கை” கமெண்ட்டிற்குக் குகநாதன் ஆகாமல் இருக்கக்கடவதாக :-)

  ReplyDelete
 9. கே.வி.ஆர்!

  பிரபல - என்ற வார்த்தையை தட்டச்சும்போது அந்த கமெண்டு இயல்பாகவே வந்துவிட்டது. எரிமலையை கூட அடக்கிவிடலாம். இயல்பை அடக்குவது கடினமல்லவா? வெளிப்பட்டு விட்டது!

  ReplyDelete
 10. happy to read about sujatha sir...

  ReplyDelete
 11. this is not enough.. except more

  ReplyDelete
 12. பள்ளி கல்லூரி வயதில் சுஜாதாவின் எழுத்தே என் வாசிப்பில் முதன்மை வகித்தது.
  அவரைப் பற்றிய பதிவு வசிக்கக் கிடைத்ததில் மகிழ்ச்சி

  விருக்ஷம்

  ReplyDelete
 13. //நிஜமான ஒரு பிரபலத்தை காணும்போதோ, வாசிக்கும்போதோ நம்முடைய இத்தகைய செயல்களுக்கு நாம் வெட்கி தலை குனிந்தாக வேண்டும். //

  அதுதான் நான் கேட்கிறேன் யார் நிஜமான பிரபலம்?

  ReplyDelete
 14. //அதுதான் நான் கேட்கிறேன் யார் நிஜமான பிரபலம்?//

  இதென்ன தொல்லையாப் போச்சி? :-(

  வடிவேலு கூட பிரபலம்தான்!

  உங்களிடம் வடிவேலு என்று சொன்னால் உங்களுக்கு தெரியும். வடிவேலுவிடம் உங்களை சொன்னால், அவருக்கு தெரியுமா?

  பிரபலம் என்பதே இம்மாதிரி வெவ்வேறு தளங்களில் பரவலாக அறியப்படுவதே.

  இப்படியிருக்க, ஒரு மிகச்சிறு வட்டத்துக்குள் அமர்ந்துகொண்டு எதிரிலிப்பவரை நாமும், நம்மை எதிரிலிருப்பவரும் மாற்றி மாற்றி பிரபலம் என்று சொல்லிக் கொள்வது அபத்தமான விஷயம் இல்லையா?

  ‘பிரபல’ என்று கூகிளில் தட்டச்சி விட்டு வருகிற பக்கங்களை பாருங்கள். யாருக்குமே தெரியாத எத்தனை பிரபலங்களை நாம் உருவாக்கித் தொலைத்திருக்கிறோம் என்பது புரியும்.

  ReplyDelete
 15. விளக்கத்திற்கு நன்றி லக்கி.

  இனிமேல் யாராவது எங்கிட்ட பிரபலம்னு சொல்லட்டும் இருக்கு பாத்துக்கிறேன்.

  ReplyDelete
 16. புரிதலுக்கு நன்றி அண்ணாச்சி!

  இந்த ‘பிரபல’ போதையால் நான் பட்டு, தெளிந்த விஷயங்கள் ஏராளம். இப்போதுதான் கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறேன் :-)

  போகிறவன், வருகிறவன் எல்லாம் ‘பிரபல பதிவர் யுவகிருஷ்ணாவுக்கு’ என்று பதிவு போட்டு திட்டிக் கொண்டிருப்பார்கள். ‘நான் எப்போடா என்னை பிரபலம்னு சொன்னேன்?’ என்று மனதுக்குள் நொந்துகொள்வேன்.

  எப்போதாவது யாராவது ‘பிரபல’ அடைமொழி போட்டு வாழ்த்தும்போது லைட்டாக கிறுகிறுப்பு இருக்கும் என்பதையும் ஒப்புக் கொள்கிறேன் :-)

  ReplyDelete
 17. யுவா,

  உங்கள் எழுத்துக்கள் கவர்ச்சியானவை. வாசகர்களை சுண்டி இழுக்கக்கூடியவை. அடுத்த தளத்திற்கு சென்று விட்டீர்கள். நீங்கள் தொட வேண்டிய தூரம் நிறைய. அதற்கான வயது உங்களுக்கு இருக்கிறது. திறமையும் இருக்கிறது. இந்த பதிவில் எழுதிய கடைசி பாரா நீங்கள் எழுதியிருக்கக் கூடாதுதான். சில சமயம் உங்களை அறியாமல் உணர்ச்சி வசப்படுகின்றீர்கள். அனைவரையும் அரவணைத்து செல்லுங்கள் யுவா.

  நேற்றைய பதிவு கூட எனக்கு படிக்க கஷ்டமாக இருந்தது. அவரை நீங்கள் அறிமுகப் படுத்தியது சரிதான். ஆனால் அதற்காக ஏழு மலை, கடல்.....

  உங்களின் நீண்ட நாள் வாசகன் என்பதாலும், ஒரு நல்ல எழுத்தாளன் அனைவருக்கும் பிடிக்கப்பட வேண்டியவனாக இருக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்துடன் இதை எழுத எனக்கு முழு உரிமை இருக்கிறது.

  நம்மை வெறுப்பவர்கள் என்று யாருமே இருக்கக்கூடாது யுவா.

  ஏதோ சொல்ல வேண்டும் எனத் தோன்றியதால் சொன்னேன்.

  என்றும் அன்புடன்
  என்.உலகநாதன்.

  ReplyDelete
 18. இந்தப் பதிவின் பின்னூட்டங்கள் தடம்மாறி போய்க்கொண்டேயிருப்பது அயர்ச்சியாக இருக்கிறது.

  அன்புள்ள உலகநாதன்!

  நீங்கள் என்னுடைய நண்பர். நீங்கள் எழுதுவது எனக்கு பிடிக்க வில்லையெனில், நட்புக்காக நான் உங்களுக்கு சொம்பு அடித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று விரும்புவீர்களா?

  //நேற்றைய பதிவு கூட எனக்கு படிக்க கஷ்டமாக இருந்தது. அவரை நீங்கள் அறிமுகப் படுத்தியது சரிதான். ஆனால் அதற்காக ஏழு மலை, கடல்.....//

  நிஜமாகவேதான் எழுதினேன். தமிழ்மணத்தை இப்போது திறந்துப் பாருங்கள். ‘சுமார்’ என்று சொல்லக்கூடிய எத்தனை பதிவுகளை உங்களால் உடனே அடையாளம் காட்ட முடியும்?

  கடந்த ஓரிரு ஆண்டுகளாகவே தமிழ் வலையுலகின் போக்கை கண்டு வெறுத்துப் போயிருக்கிறேன். ஒழுங்காக எழுதிக் கொண்டிருந்த ஒரு சிலரும் கூட பதிவெழுதுவதை விட்டு விட்டு போட்டோ எடுக்க போய்விட்டார்கள். சிலர் ட்விட்டர் பக்கம் ஒதுங்கிவிட்டார்கள். என்னைப் போன்ற மொக்கைகள்தான் இங்கே தொடர்ச்சியாக இயங்கி வருகிறோம்.

  ReplyDelete
 19. பாஸ் ...சுஜாதா பற்றி தானே இந்த பதிவு ??????

  ஏதோ பதிவுலக விவாத மேடை மாதிரி இருக்கு .....

  என்ன ஒரு கொடுமைன்ன இன்று தமிழ் நாட்டில் நிறைய பேருக்கு தெரிந்தவர்களை தானே பிரபலம் என்று சொல்லி கொண்டு இருக்கிறார்கள் .....

  ReplyDelete
 20. அது எப்படின்னே தெரியல ..... பதிவுலக நாட்டாமைகள் எங்கேயாவது யாரையாவது யாராச்சு மொக்கை மொன்னை ன்னு சொல்லிட்ட உடனே ஓடி வராங்க ன்னு


  இதற்க்கு தான் நான் பிரபலம் ஆகவில்லை ......


  ====

  சுஜாதாவை எனக்கும் பிடிக்கும் ...முடிந்தால் வருகிறேன்

  ReplyDelete
 21. //அன்புள்ள உலகநாதன்!

  நீங்கள் என்னுடைய நண்பர். நீங்கள் எழுதுவது எனக்கு பிடிக்க வில்லையெனில், நட்புக்காக நான் உங்களுக்கு சொம்பு அடித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று விரும்புவீர்களா?//

  சத்தியமாக இல்லை. நண்பர் என்ற முறையில் நிறை குறை சொல்வதில் எந்த தவறும் இல்லை. நானும் சொம்பு அடிக்க வேண்டும் என்று சொல்லவில்லை.

  யுவா,

  என்னுடைய கேள்வி இதுதான். உங்கள் கோபம் உங்களைப் பொறுத்தவரை நியாயமாக இருந்தாலும், அதை ஏன் பொதுவில் எழுதி உங்கள் பெயரை கெடுத்துக் கொள்கிறீர்கள் என்றுதான் கேட்கிறேன்?

  நீங்கள் அப்படி எழுதியதால் சில நண்பர்களின் மனது புண்படும் அல்லவா?

  பதிவின் நோக்கம் மாறிவிடக்கூடாது என்பதால் இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்.

  உங்கள் அடுத்த இடுகையில் சந்திப்போம்.

  ReplyDelete
 22. டம்பிமேவீ!

  //அது எப்படின்னே தெரியல ..... பதிவுலக நாட்டாமைகள் எங்கேயாவது யாரையாவது யாராச்சு மொக்கை மொன்னை ன்னு சொல்லிட்ட உடனே ஓடி வராங்க ன்னு //


  இதுவரை நான் பெற்றதை இனி நீங்கள் பெறுவீர்கள் :-)

  எப்படியோ நான் எஸ்கேப் ஆனால் சரிதான்!

  ReplyDelete
 23. @ லக்கி : நாங்க எல்லாம் காமெடி பீஸ் பாஸ் ...... என்னையும் ரௌடி ஆக்காதிங்க

  ReplyDelete
 24. ஒவ்வொரு முறையும் இதே போல் தெரிந்தோ தெரியாமலே ஒரு சர்ச்சையை உருவாக்கினாலும், அசராமல் வரும் பந்தை அடித்து விளையாடும் தைரியம் + கருத்து வியக்க வைத்தது.

  ReplyDelete
 25. I'm not a blogger. but looks like the 'prabhala' comment has hurt the self respect of several mokkai and monnai bloggers who consider them semi- or full-ilakkiyavaadhis.

  neenga ellarum evlavo pagadi panreenga.. lucky vilayaatukku oru vaarthai solitta ippadiyaa?

  when the first few of the comments started pouring in, lucky must have thought 'kelambittaaingayaa kelambittainga'

  ReplyDelete
 26. பிரபலம் இல்லாத யுவாவிற்கு .!.
  சந்தோசமா லக்கி ( கடுப்பாக வேண்டாம், எப்போதும் போல் சிரித்து வைப்போம் )

  ReplyDelete
 27. உங்கள் பதிவு சுஜாதா பற்றிய நினைவுகளைக் கிளறி விட்டது.. நன்றி.. :)

  ReplyDelete
 28. பிரபலத்தை விடுங்கள்.  தலைவரின் ஏன் எதற்கு எப்படி போல் யாராவது எழுத முடியுமா? என்ன ஒரு வீச்சு. அவர் தொடாத சப்ஜெக்ட் உண்டா. இப்பொழுது எடுத்து உட்க்கார்ந்தலும் நாட்கணக்கில் மூழ்கிவிடுவேன். எவ்வளவு எழுத்து அப்பப்பா சிலிர்க்குது. ஆனாலும் எவ்வளவு எளிமை.  இந்தப்பதிவில் தேவையில்லாத சர்ச்சை :(:(:(:(:(:(:(:(:(

  ReplyDelete
 29. Interesting read:

  http://thoughtsintamil.blogspot.com/2010/02/in-defence-of.html

  ReplyDelete
 30. நான் அதிகமா பின்னூட்டங்கள் போட்டதில்லை. அதற்கு என் காழ்ப்புணர்ச்சியோ,காலமின்மையோ காரணமாக இருக்கலாம். இங்கே சுஜாதாவை பற்றி எழுதியதால் இந்த பதிவுக்கு பின்னூட்டம் போடுதல் எனது கடமையாகிறது. தலைவருக்கு இன்னும் சிறப்பான முன்னுரை எழுதியிருக்கலாம்.அது ஏன் அவரை பற்றி விளக்க சினிமாவுக்குள்ளேயே வட்டமடிக்கிறீர்கள். தவறாக எடுத்துக்கொள்ளாதீர், இந்த நினைவூட்டல் விளக்கம் காந்தி படத்தை பேரரசு எடுத்தது போல் இருக்கிறது. பாவத்துக்கு பிரயோஜனமாய் தயவு செய்து தலைவரை பற்றி ஒரு நல்ல பதிவு போடுங்கள்,படிக்க ஆவலாக இருக்கிறேன்.
  //அண்ணா மூன்றெழுத்து
  எம்.ஜி.ஆர் மூன்றெழுத்து
  திமுக மூன்றெழுத்து
  சுஜாதா-வும் மூன்றெழுத்து//
  இந்த வரியை படித்தால் கண்டிப்பாய் சுஜாதாவே சிரித்திருப்பார்.

  பிரச்சனையை கிளப்பும் கடைசி பத்தி பற்றி எனக்கு அக்கறை இல்லை. ஏனெனில் பதிவரசியல் நான் அறிந்தவனில்லை. நல்ல எழுத்து எங்கிருந்தாலும் சென்று படிக்கிறேன்/ ரசிக்கிறேன். நம் எழுத்தில் தரம் இருக்கும் பட்சத்தில் தைரியமாய் பகடி செய்யலாம். ஆனால் சுஜாதாவை தீவிரமாய் வாசித்திருந்தால், அவர் சக எழுத்தாளர்களை நாகரீகமாகவே விமர்சித்ததை நீங்கள் உணர்ந்திருக்கலாம்.

  ReplyDelete
 31. //மறைந்தும் மறையாமல் வாழ்பவர்களில் எம்.ஜி.ஆருக்கு அடுத்த இடம் நிச்சயம் இவருக்கு.
  //

  அசத்தல் வரி பிரபல எழுத்தாளரே

  ReplyDelete
 32. தகவலுக்கு நன்றி யுவகிருஷ்ணா. சந்திக்கலாம்.

  ReplyDelete
 33. //தலைவருக்கு இன்னும் சிறப்பான முன்னுரை எழுதியிருக்கலாம்//

  தலைவர்?? you too siva?

  ReplyDelete
 34. Lucky,

  I know he is like a Ilayaraja or Rajini to many..I was also a regular reader and like his Katrathum petrathum..He is an entertaining writer..I have read his stories in Teen years..But I found them to be less impressive direct copies of English novels..

  I understand he was needed for tamil literature..I am reminded of Thevar Magan dialogue of Sivaji to Kamal, "namma allunga mellathan varuvanga"..He does serve as a bridge to better writing..

  But can you show me one story of his which is exemplary..It might have seem impressively in our growing years but after reading other good stories and movies, can you still find any of his story to be exemplary?

  ReplyDelete
 35. கடைசி காலத்தில் சுஜாதா செய்த... ஜாதி வெறி ஆட்டங்களையும் பதிவு செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்...

  தமிழிலேயே... தமிழர்களை இழிவுபடுத்திய சுஜாதாவை இவ்வளவு தூக்கி கொண்டாட தேவையில்லை...

  ReplyDelete