15 பிப்ரவரி, 2012

’தாலியக் கட்டு!’ - காதலர்தின எச்சரிக்கை!

ஏதோ ஒரு காதலர் தினத்துக்கு அடுத்தநாள் எழுதியது இது. இனி எல்லா காதலர் தினத்துக்கும் அடுத்தநாள் இதை அப்படியே பதிந்துவிடலாம் போல தெரிகிறது. வாழ்க காதல்!


நேற்று காதலர் தினம் தமிழகத்தில் விமரிசையாக கொண்டாடப்பட வில்லை என்றாலும் ஏதோ பரவாயில்லை என்ற அளவில் கொண்டாடப்பட்டிருக்கிறது. இதுவரை பிகர் கிடைக்காமல் அல்லல்பட்ட கொலைவெறி காதலர்கள் ஏதோ ஒரு தைரியத்தில் நேற்று சூப்பர் பிகர்களை பிரபோஸ் செய்து, அந்த பிகர்களும் பாவப்பட்டு காதலை ஏற்றுக் கொண்டார்கள் என்றெல்லாம் செய்திகள் வெளிவருகிறது.

இவ்வாறாக மக்கள் மகிழ்ச்சியோடு காதலர் தினத்தை கொண்டாடி மகிழ்ந்ததை கண்டு வயிறெரிந்து குழப்பத்தை விளைவித்திருக்கிறார்கள் பொந்துமுன்னணியினர். தங்களை கலாச்சாரக் காவலர்களாக காட்டிக் கொள்ளவும், சாதிமறுப்பு - மதமறுப்பு திருமணங்கள் காதலால் விளைந்து தாங்கள் இதுவரை கட்டிக் காத்த வருணாசிரமக் கோட்டை இடிந்துவிடுமோ என்ற பயத்தில் நூதனப் போராட்டம் என்ற பெயரில் காதலர்களையும், பொதுமக்களையும் துன்புறுத்தியிருக்கிறார்கள்.


கும்பகோணம் பகுதியில் தெருவில் அதுபாட்டுக்கு காதலர் தினத்தை கொண்டாடி அலைந்துகொண்டிருந்த ஜோடி நாய்களை பிடித்துவந்து அந்த நாய்களின் கழுத்தில் பிப்ரவரி-14 காதலர் தினம் என்று போர்டு மாட்டி துன்புறுத்தியிருக்கிறார்கள். இதனால் கும்பகோணம் சுற்றுவட்டாரத்தில் அலைந்துகொண்டிருக்கும் தெருநாய்கள் பொந்துமுன்னணியினரை கண்டாலே கிலி பிடித்து, குலைத்து ஓடுவிடுகின்றன. இச்செய்தியை கேள்விப்பட்டு தமிழ்நாட்டில் இருக்கும் எல்லா தெருநாய்களும் அதிருப்தியடைந்திருப்பதாக தெரியவருகிறது. நாய்களுக்கு கூட தமிழ்நாட்டில் காதல் செய்ய உரிமையில்லையா என்று மக்கள் கொதிப்பில் இருக்கிறார்கள்.

திருச்சி மாவட்டத்தில் காதலர் தினம் கொண்டாடி மகிழ்ந்த காதலர்களை 'தாலி கட்டிக் கொள்ளுங்கள்' என்று கூறி மஞ்சள் கயிறு ஒன்றை கொடுத்து காதலர்களை மறித்து வன்முறை வெறியாட்டம் ஆடித்தீர்த்திருக்கிறார்கள் பொந்துமுன்னணியினர். காதலர் தின சிறப்பு பூஜை செய்யவந்த காதலர்கள் தாலி கட்டிக் கொண்டுதான் கோயிலுக்குள் நுழைய வேண்டும் என்று கூறி கோயில் வாசலில் அராஜகம் செய்திருக்கிறார்கள் இந்த காவாலிகள்.

எங்கே தங்கள் காதலிகளின் கழுத்தில் இவர்களே மஞ்சள் கயிறு கட்டிவிடுவார்களோ என்ற அச்சத்தில் பல காதலர்கள் காதலிகளை கூட்டிக்கொண்டு சிதறிஓடியிருக்கிறார்கள். திருச்சி மலைக்கோட்டை, முக்கொம்பு போன்ற இடங்களுக்கு காதலர்தினத்தை கொண்டாடி மகிழ வந்த ஜோடிகள் இதனால் பாதிக்கப்பட்டதாக தெரிய வருகிறது.


அதுபோலவே காதலர்தின வாழ்த்து அட்டைகளை விற்ற கடைகளை சூறையாடி, வாழ்த்து அட்டைகளையும் கிழித்தெறிந்திருக்கிறார்கள்.

மாறாக பொந்துமுன்னணியினரின் இந்த செயல்கள் கள்ளக்காதலர்களுக்கு வசதியாக அமைந்திருக்கிறது. அடுத்தவன் மனைவியை தள்ளிக் கொண்டு வந்தவன், பொருந்தாக்காதல் செய்தவன் போன்ற காமக்கொடூரன்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு பொந்துமுன்னணியினர் அளித்த மஞ்சக்கயிற்றை தங்கள் ஜோடிகளுக்கு கட்டி தங்கள் இழிச்செயல்களுக்கு அங்கீகாரம் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்த இவர்கள் மீது காவல்துறை எந்தமாதிரியான நடவடிக்கைகளை எடுத்தது என்று தெரியவில்லை. காதலர்களுக்கு தனி இடஒதுக்கீடே தரவேண்டும் என்ற ரேஞ்சில் சிந்தனையாளர் ஞாநி போன்றவர்கள் கருத்து தெரிவித்துக் கொண்டிருக்கும் வேளையில் இதுபோன்ற கேலிக்கூத்தான விஷயங்களை நடத்திய பொந்துமுன்னணியினரின் போராட்டங்கள் குறித்து துக்ளக்கின் அட்டைப்படத்தில் கேலிச்சித்திரம் வரையப்படுமா? தலையங்கம் எழுதப்படுமா? என்று பொதுமக்கள் கேட்கிறார்கள்.


நானும் கூட கவர்ச்சி பெருங்கடல் சன்னி லியோனை உயிருக்குயிராக காதலித்து வருகிறேன். பொந்துமுன்னணியினர் என்னை கட்டாயப்படுத்தி சன்னியின் கழுத்தில் மஞ்சக்கயிறு கட்டவைத்துவிடுவார்களோ என்று இன்பமாக பயந்துபோயிருக்கிறேன் :-(

21 கருத்துகள்:

 1. //பொந்துமுன்னணியினர் என்னை கட்டாயப்படுத்தி அனுஷ்காவின் கழுத்தில் மஞ்சக்கயிறு கட்டவைத்துவிடுவார்களோ என்று இன்பமாக பயந்துபோயிருக்கிறேன்//

  ரைட்டு...

  :-)

  பதிலளிநீக்கு
 2. சார் ஏன் இப்படி.... ஆல்ரெடி அனுஷ்கா பிஸி...

  பதிலளிநீக்கு
 3. வடியிது பாஸ். தொடச்சிக்குங்க.

  பதிலளிநீக்கு
 4. //அடுத்தவன் மனைவியை தள்ளிக் கொண்டு வந்தவன், பொருந்தாக்காதல் செய்தவன் போன்ற காமக்கொடூரன்கள்//

  இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். அவர்கள் அனைவரும் பிறர் நலன் குறித்தே சிந்திப்பவர்கள்.

  பதிலளிநீக்கு
 5. /////இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். அவர்கள் அனைவரும் பிறர் நலன் குறித்தே சிந்திப்பவர்கள்.////


  ;-)

  பதிலளிநீக்கு
 6. பழைய பதிவில் அனுஷ்காவை மட்டும் அப்டேட் செய்துவிட்டீர்கள் போலத் தெரிகிறது.. ஹிஹி

  பதிலளிநீக்கு
 7. பாசு, நீங்க புத்தக ரிலீஸ் நிகழ்ச்சிக்கு அவசியம் வரணும், நாங்கள அனைவரும் உங்கள் திருமுகத்தை பார்க்க வேண்டும்.. சவால்?

  பதிலளிநீக்கு
 8. //பொந்துமுன்னணியினர் என்னை கட்டாயப்படுத்தி அனுஷ்காவின் கழுத்தில் மஞ்சக்கயிறு கட்டவைத்துவிடுவார்களோ என்று இன்பமாக பயந்துபோயிருக்கிறேன்//

  அட!

  பதிலளிநீக்கு
 9. நான் இருக்கும் போது அனுஷ்காவ யாருக்காகவும் விட்டு குடுக்க மாட்டேன்... !!!!@@@###$$$$

  பதிலளிநீக்கு
 10. சொக்கும் எழுத்துகளால் சோர்வுதனைப் போக்குபவன்
  மொக்கைப் பதிவுகளும் முன்வைப்பான்-லக்கி
  லுக்கெட்டும் புகழொருநாள் புலர்வானின் கதிரொளியாய்
  திக்கெட்டும் பரவிடுமே திண்ணம்!

  பதிலளிநீக்கு
 11. ஜாதி ஒழிய வேண்டும் என்றால் காதல் திருமணங்கள் தான் அதற்க்கு சரியான தீர்வாக இருக்க முடியும்.

  நான் நேற்று வீட்டை விட்டு வெளியே வரவேயில்லை. போனை எல்லாம் சுவிட்ச் ஆப் பண்ணி வைத்துவிட்டேன். ஏகப்பட்ட ப்ரப்போஷ்ங்க! ( சத்தியமாக ) . என்ன செய்யறது. எனக்குதான் திருமணமே பிடிக்காதா, வெளியே வந்து எவளாவது பிரப்போஷ் பண்ணி தொலைச்சு, இந்த பொந்து முன்னனி கண்ணில் பட்டு தாலி கீலி கட்ட வெச்சுட்டானுங்கன்னா?!! என்ன ஆகறது?!!!.

  பதிலளிநீக்கு
 12. //பொந்துமுன்னணியினரை//

  நல்ல பெயர். இதையே இனி பயன்படுத்தவும்

  பதிலளிநீக்கு
 13. //பொந்துமுன்னணியினரை//

  நல்ல பெயர். இதையே இனி பயன்படுத்தவும்///

  எனக்கென்னவோ பொந்து பின்னணியினர் என்று வைத்துகொள்வது தான் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். ''.........தை'' விரும்புவர்களை தான் இவர்கள் விரும்புவதில்லையே!

  பதிலளிநீக்கு
 14. நானும் கூட கவர்ச்சி பெருங்கடல் சன்னி லியோனை உயிருக்குயிராக காதலித்து வருகிறேன். பொந்துமுன்னணியினர் என்னை கட்டாயப்படுத்தி சன்னியின் கழுத்தில் மஞ்சக்கயிறு கட்டவைத்துவிடுவார்களோ என்று இன்பமாக பயந்துபோயிருக்கிறேன்||

  வேண்டாம் பாஸ் நமக்குள்ள சண்டை வேண்டாம் …….விட்டுக்கொடுத்துருங்க

  பதிலளிநீக்கு
 15. அனுஷ்கா போய் சன்னிலியோன்..
  உங்களோட ”உயிருக்கு உயிரான” காதல் புரியுது.

  பதிலளிநீக்கு
 16. "பொந்துமுன்னணியினர்" its good term for those fools.

  பதிலளிநீக்கு
 17. எலேய், நீர் தெனமும் ஒருத்திய நெனப்பீரு, ஒடனே கல்யாணம் பண்ணி வெக்கனுமாக்கும். தெகிரியம் இருந்தா சன்னிய கணக்கு பண்ணி கோவிலுக்கு கூட்டிவந்து பந்தா குடுத்துப்பாரும். தாலி கயிரு ப்ரீ.

  பதிலளிநீக்கு