11 பிப்ரவரி, 2010

இலங்கை - சீனா ஆடும் தில்லாலங்கடி ஆட்டம்!


டெலிகிராப் இணையத்தில் பீட்டர் போஸ்டர் என்பவர் எழுதிய ஒரு கட்டுரையின் சுட்டியை தோழர் பிரகாஷ் மின்னுரையாடல் மூலமாக வழங்கியிருந்தார். முக்கியத்துவம் கருதி, அக்கட்டுரையை தமிழாக்கம் செய்யுமாறு நான் கேட்டுக் கொண்டதற்கு இணங்க தமிழாக்கமும் செய்து தந்திருக்கிறார். தோழர்கள் பார்வைக்கு அக்கட்டுரை...

ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட இலங்கை அரசாங்கம் மீண்டுமொருமுறை தன்னுடைய சகிப்புத்தன்மை இல்லாத வழக்கத்தினை காட்டி வருகிறது. விளைவு, சரத் பொன்சேகாவின் கைது. பொன்சேகா தனது ராணுவ ஜெனரல் பதவியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துவிட்டு, தற்பொழுது நடந்த தேர்தலில் மகிந்தா ராஜபக்சேவிற்கு எதிராக நின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

டீன் நில்சன் என்பவர் பொன்சேகாவின் கைதை ஒட்டி நடந்த சம்பவங்களை இங்கே தொகுத்துள்ளார். பொன்சேகாவை ராணுவ வீரர்கள் விசாரணைக்கு அராஜகமாக இழுத்துச் சென்றிருக்கின்றனர். சமீபத்தில் இலங்கையில் நடந்த மிக மோசமான சம்பவம் இது. கடந்த நான்கு ஆண்டுகளாக இலங்கை ராஜபக்‌ஷே ஆட்சியின் கீழ் சர்வாதிகார நாடாக உருமாறி வருவதற்கு இது சரியான ஒரு உதாரணம்.

அரசாங்கத்துக்கு எதிரான குரல்கள் மோசமான முறையில் ஒடுக்கபட்டு வருகிறது. பத்திரிக்கையாளர்கள் இயங்குவதற்கு மிகவும் ஆபத்தான நாடாக இலங்கை மாறி வருகிறது. இதற்க்கு பிரபல பத்திரிக்கையாளர் லசந்தா விக்ரமதுங்கேவின் மரண சாசனமே தக்க எடுத்துக்காட்டு. அவரது மரணசாசனத்தை வாசிக்காதவர்கள் இங்கே வாசிக்கலாம்.

சரி. சீனாவிற்கும், இலங்கைக்கும் என்ன சம்பந்தம்? சீனாவின் மக்கள் ஜனநாயக சர்வாதிகார அரசு புதிதாக முளைத்திருக்கும் இலங்கையின் ’மக்கள் சர்வாதிகார’ அரசிற்கு பொருளாதார ரீதியில் ஆதரவுக்கரம் நீட்டி வருகிறது. இது உலகளாவிய ரீதியில் சீனாவின் மோசமான நிலைப்பாட்டை காட்டுகிறது.

பூகோள ரீதியில் இலங்கைக்கான முக்கியத்துவம் மிகச்சிறியதுதான். என்றாலும் கிழக்காசியாவில் ஜனநாயக நாடாக இருந்து வந்த இலங்கை இப்போது ஊழல் நிறைந்த எதேச்சாதிகார சர்வாதிகார நாடாக மாறி வருவது எல்லோருக்குமே மிகவும் கவலை அளிக்கக்கூடிய விஷயம்.

பல்லாண்டு காலமாக இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் சீனா தலையிடாமலேயே இருந்து வந்தது. இந்தியா சங்கடப்பட்டு விடக்கூடாது என்பதில் சீனா கவனமாக இருந்தது. ஆனால் 2007 ஆம் ஆண்டு ராஜபக்‌ஷேவின் பீஜிங் பயணத்தில் இருந்து இந்த நிலைப்பாடு கொஞ்சம் கொஞ்சமாக மாறத்தொடங்கியது . அப்பயணத்தின் விளைவாக பொருளாதார ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் சீனாவின் உதவிகளை இலங்கை பெறும் வாய்ப்பு தோன்றியது. இரு அரசாங்கங்களும் ’தீவிரவாதம், பிரிவினைவாதம், பயங்கரவாதம்’ ஆகியவற்றுக்கு எதிராக போராட ஒப்பந்தம் செய்து கொண்டன. இத்தகைய வார்த்தை பிரயோகங்களின் மூலமாகவே ராஜபக்‌ஷே சமீபத்தில் விடுதலை புலிகளுக்கு எதிரான போரை வெற்றிகரமாக முடித்துக் காட்டினார்.

சீன அரசிற்கு சொந்தமான China Harbour Engineering Company (CHEC) என்னும் கட்டுமான பெருநிறுவனம் ஒன்று தற்போது இலங்கையின் தென்மூலையில் உள்ள ஹம்பண்டோடாவில் புதிய துறைமுகம், விமான நிலையம் மற்றும் தலைநகர் கொழும்புவுடன் மற்றப் பாதைகளை இணைக்கும் ஒரு எக்ஸ்பிரஸ் பாதையையும் அமைத்து வருகிறது.

சில ஆப்ரிக்க நாடுகளுடன் ஏற்கனவே செய்து வருவதைப் போல, நேரடியாக ஈடுபடாமல் நாட்டுடைய ஆளுங்கட்சியின் கையை பலப்படுத்துவது என்ற உத்தியின் மூலமாகவே இதை சீனா செய்துவருகிறது. ஹம்பண்டோட்டா ராஜபக்‌ஷேவின் சொந்தத் தொகுதி என்பதையும் நாம் இங்கே நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் இலங்கைக்கு எதிரான கண்டனகள், இலங்கையின் மீது சரியான அழுத்தம் கொடுக்காமல் இருக்க, சீனாவின் பணம் மற்றும் மனிதத் தன்மையற்ற செயல்பாடுகளும் முக்கியக் காரணிகளாக இருக்கின்றன.

இலங்கை அரசின் சமீபக்கால போர்க் குற்றங்களை விசாரிக்க நடந்த ஐநா சபை விவாதத்தின் போதும் கூட அந்நாட்டின் புதிய நண்பரான ரஷ்யா இலங்கைக்கு ஆதரவுக்கரம் நீட்டியது. இப்போது இலங்கைக்கு ரஷ்யா 300 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு நிகரான ஆயுதம் கொடுப்பது பற்றியும் பேச்சு வார்த்தை மும்முரமடைந்திருக்கிறது. சீனாவின் பங்காளியான ஈரானும் மலிவு விலைக்கு எண்ணெய் மற்றும் சில பொருளாதார உதவிகளை இலங்கைக்கு செய்துத்தர முன்வந்திருக்கிறது .

பிரிட்டன், இலங்கைக்கு எதிராக குரல் கொடுப்பதோடு மட்டுமில்லாமல், பொருளாதார உதவிகளை ரத்தும் செய்து வருகிறது. ஆயினும் முன்பு கிடைத்து வந்த பிரிட்டனின் பொருளாதார உதவி சொற்பமானது என்பதால், இலங்கை உதறித்தள்ளிவிட்டு போய்க்கொண்டே இருக்கிறது. பெரியண்ணன் அமெரிக்காவோ அடிக்கடி, ’நிலைமை மோசம்’ என்று முணங்கிக்கொண்டே இருக்கிறதே ஒழிய, அதன் பங்கிற்கான ஆக்கப்பூர்வமான முயற்சிகள் எதையும் முன்னெடுக்கவில்லை.

கடந்த வாரம் ஐரோப்பிய கூட்டமைப்பு, மனித உரிமை மீறல்களை காரணம் காட்டி, இலங்கையுடனான வர்த்தகங்களை ரத்து செய்துள்ளது. எப்படியிருந்தாலும் இதை நடைமுறைப்படுத்தும் தாமதத்தை சீனாவின் பொருளுதவி ஈடுகட்டிவிடும் என்பதாக தெரிகிறது.

இப்பிரசினையில் சீனாவின் மூக்கு நுழைப்பைப் பற்றி நிருபர்கள் கேட்ட கேள்விக்கு, அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் மா சாவோக்சு, ”இலங்கை தனது சமூக ஸ்திரத்தன்மையை பேண வேண்டும்” என்று மட்டுமே சொல்லியிருக்கிறார். இவ்வகையில் எல்லாம்தான் வெள்ளை வேன்களுடன் பாசிஸம் புரிந்துவரும் ராஜபக்‌ஷே அரசிற்கு ஆதரவாக சீனா சப்பை கட்டு கட்டுகிறது.

இலங்கையில் நடக்கும் மனித உரிமை மீறல்களை தடுத்து நிறுத்த இந்த உலகம் விழித்துக்கொண்டால் மட்டுமே முடியும், ஆனால் அது நடக்குமா என்பது சந்தேகமே.

9 கருத்துகள்:

 1. இவ்விஷயத்தில், இந்தியாவின் நிலைப்பாட்டையும் ஒருவர் கவனத்தில் கொள்ளவேண்டும். இலங்கைக்கு இன்று கிட்டியிருக்கும் நேசக்கரமும், அதன்பொருட்டு அங்கு நிகழ்த்தப்படும் சாதக நடவடிக்கைகளுமே, சீனாவால் நாளை இந்தியா எதிர்கொள்ளபோகும் இடர்ப்பாடுகளுக்கு முகாந்திரமாய் விளங்கப்போகிறது என்பதில் ஐயமில்லை. இனப்படுகொலை புரிந்தவனுக்கு துணைநின்றதற்கான பிரதிபலனையும், துரோகத்தின் விலையையும் விரைவில் நாம் அறியப்போகிறோம். சீனாவே அதற்கு சாட்சி.

  சர்வாதிகாரிகள் வீழ்ந்தழிவர் என்பதே வரலாறு நமக்கு விட்டுச்சென்றுள்ள பாடம். இவன் மட்டும் விதிவிலக்கா என்ன?

  பதிலளிநீக்கு
 2. Oh man, what a care about Sri Lanka. When there is a problem for India, you guys publish a article like this. When there were killing of people no one in India was talking about that. When things are going against you, then you start to talk. Is it a selfishness or what.....

  When you translate please use the proper names for cities.... if you dont what is the proper name, ask people....

  பதிலளிநீக்கு
 3. நீங்கள் வெளியிட்டுள்ள கட்டுரை சீனாவின் பங்கை மட்டும் கவனப்படுத்துகிறது. அமெரிக்கா, அதன் வழியே இந்தியாவின் பங்கை, நிலைப்பாட்டை இந்தக் கட்டுரையில் அறிய முடிகிறது. இதையும் படித்துப் பாருங்கள்.

  பதிலளிநீக்கு
 4. No tears for Fonseka
  H. L. D. Mahindapala

  Retired General Sarath Fonseka is one of those tragic Shakesperean heroes who is doomed to dig his own grave through a fatal flaw in his character. In short, he was virtually asking for what he got last night. He was challenging the government to arrest him if they have any charges against him and when the Military Police went to arrest him he resisted. He had to be dragged out initially though he walked the last steps to the van in which he was taken to quarters at Sri Lankan Navy.

  The irony is that Fonseka who was challenging the government to arrest him was reluctant to walk out like a gentlemen and an officer to face his accusers. This is typical of Fonseka. He should have honoured his own words and, knowing the law, cooperated with the Military Police as there was no point in resisting arrest. He may have been putting up a show for Soma-hansa Amerasinghe, Rauf Hakeen, Mano Ganesan and a couple of retired officers but what good would that do to him?

  The resistance he put up at his flat/office was unworthy of a man who holds the rank of a General. That is the behaviour of a kudu karaya. It is as if he was admitting guilt even before he is taken to trial. Besides, there was no bravery in resisting officers who are trained to carry out orders and he should know that because he was one of them. Fonseka is sinking deeper and deeper into his own mire.

  The charges read to him include

  1. Engaging in political activity targeting and undermining the state which he was sworn to serve whilst in uniform

  2. Conspiring against his Commander-in-Chief whilst holding the highest rank in the Army

  3. Creating a private army of more than 1,500 deserters whilst holding the office of the Army Commander in pursuit of his self-serving politics, and

  4. Engaging in corrupt practices in procuring arms for the forces.

  It is not surprising that Ranil Wickremesinghe was not there last night to hand him tissues for his tears. The move of the government to arrest Fonseka is a boon to Wickremesinghe though he will shed copious tears. Government has done what he could not do: removed Fonseka from the political scene which, Wickremesinghe hopes, would resolve his main problem of emerging as the sole rallying point for the opposition coalition now in total disarray.

  The government move to try Fonseka in a military court is justified and valid. He is not tried for his politics as a presidential candidate but for engaging covertly and even overtly at times to undermine the authority of the democratically elected state whilst holding the highest office in the Army. As everyone knows, he was making overseas call from America to Tilvin Silva to get his advice on how to go ahead with his moves to put the Rajapakses in the dock with accusations of war crimes. .

  It is the JVP that gave him this dead rope. The Soma-hansas who were just tall enough to lick the boots of the general, were leading him down the path of self-destruction. Their manipulations and promises of greatness to come fed the hate and ego of Fonseka who was trying to bring down the Rajapakses who gave him everything. Even now his statements are soaked in his bitter bile. That is not the stuff of democratic and humane politics.

  As long as he is immersed in hate he will never redeem himself. It is difficult to shed tears for a man who hates so much and has no compunction in letting down his own forces for the sake of his petty self-interest.

  பதிலளிநீக்கு
 5. இந்தியா தனிப்பட்ட காரணிகளை முன் வைத்தே விடுதலைப் புலிகளை ஒழிப்பது என்ற போர்வையில் மகிந்தர் முன்னெடுத்த இன அழிப்புப் போருக்கு துணை நின்றது!ஆனால் நடந்ததோ வேறு!கையறு நிலையில் தான்,முள்ளி வாய்க்கால் கொடூரங்களை வாய் பொத்தி பார்த்திருந்தது.ஈனவும் முடியாமல், நக்கவும் முடியாமல் இப்போது தவிப்பதில் அர்த்தமில்லை!எங்கள் கதறல்கள் காதுகளில் வீழ மறுத்தது! நாராயணன்களும்,மேனன்களும் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார்கள்! சீனாக்கரன் அருணாசல பிரதேசத்தை ஆக்கிரமித்து விடப் போகிறான்,பார்த்து!!!!!

  பதிலளிநீக்கு
 6. Every country be it China or Russia or anyone cares only about their national interest.
  Only Exception India, our bloody idiotic non-alignment policy of Chacha Nehru plagues us in every step of the way in foreign relations.
  We are supposed to having good relations atleast with Russia, but we are not able to leverage that strength and as Russia to stop that non-sense.
  The permanent 5 members of UN security council was formed immediately after WWII, but the reality of the globe is different right now, all the players except China is so weak, and still they rule, and what is India doing...nothing...corrupt and selfish politicians, greedy bureaucrats can sell their soul for one paisa...thats our sorry state.

  பதிலளிநீக்கு
 7. Cleverly you've avoided India's part in genocide.

  India is no different from China in this case.

  Anga kothu kothaaga manidhargal saagum podhu inga Sonias, Menons, Karunanidhis nadathiya nadagam thaan ethanai ethanai.

  Adhuvum Karunanidhiyin 3 hours unnaviradham secures top spot in those dramas. Inaiku Karunanidhi thanaku thaanae ethan pattangal sooti kondaalum ulaga Thamilar mathiyil Karunanidhi-ku kidaitha pattam "TAMILINA THROGI".

  No matter DMK rules Tamilnadu for ever from now onwards, but the label TRAITOR cannot be erased from history.

  Thani Eelam kidaikudho illayo tamilar varalaatril ettapan, karuna(from Lanka) varisayil Karunanidhiyum inlcude panni thaan ini varalaaru paesum.

  Irony is both the traitors with same name KARUNA.

  பதிலளிநீக்கு
 8. Well said anony!

  But Lucky wont reply(as he doesn't have an answer)for this.

  பதிலளிநீக்கு
 9. There is another one country called India.It helped Srilanka a lot while the Tamil holocaust was going on last year i.e. May 2009. Please correct the title " Ilankai-China and India aadum thillalangadi aaddam. Sathi

  பதிலளிநீக்கு