10 பிப்ரவரி, 2010

அசல் - ஜக்குபாய்


அஜித்துக்கு விடிவே கிடையாது போலிருக்கிறது. இன்னமும் பில்லா ஃபீவரிலேயே அலைகிறார். கிட்டத்தட்ட வரலாறு கெட்டப்பில் அப்பா கேரக்டர். பில்லா டைப்பில் மகன் கேரக்டர். இரட்டை வேடத்தில் நடித்ததால் வாலி ஹிட் ஆகவில்லை. அதில் கதையும் இருந்தது என்பதை யாராவது அஜித்துக்கு எடுத்துச் சொல்லலாம்.

சரண், அஜீத், யூகிசேது என்று மூன்று பேருடைய பெயர் டைட்டிலில் ‘கதை’ என்று வருகிறது. இல்லாத ஒரு சமாசாரத்துக்கு மூவரின் பெயரை போட்டிருப்பதை பின்நவீனத்துவம் என்று பாராட்டலாம். ’தல’ இணை இயக்கம் வேறு செய்திருக்கிறாராம். அவர் எதிர்காலத்தில் எதையும் இயக்கிவிடக்கூடாது என்று கர்த்தரிடம் ஜெபிப்பதை தவிர நமக்கு வேறுவழியில்லை.

படத்தில் அசலான சமாச்சாரம் அஜீத் மட்டுமே. இவ்வளவு மட்டமான படத்தில் கூட மிடுக்காக கவர்கிறார். சண்டைக்காட்சிகளில் சுறுசுறுப்பு. இருந்தாலும் யார் அடித்தாலும் தல அசராது அடித்துக் கொண்டேயிருக்கும் என்பது தெரிந்துவிடுவதால் விறுவிறுப்பு சுத்தமாக இல்லை. ஆனால் அங்கிள் தோற்றத்தில் இருக்கும் அஜித்தை, நான் பாவனாவாக இருக்கும் பட்சத்தில் காதலிப்பது என்ன, சைட் கூட அடிக்க மாட்டேன். இளைய தளபதிக்கு ஆண்டுக்கு ஆண்டு வயது குறைந்து கொண்டே போகிறது. தலைக்கோ வருடா வருடம் நான்கைந்து வயது கூடுகிறது.

அஜித் பஞ்ச் டயலாக் எதையும் பேசவில்லை என்பது ஆறுதல் என்றாலும், கண்ட கேரக்டர்களும் தல, கொல என்று அச்சுபிச்சாக பேசுவது அக்குறும்பு. மொட்டையடித்த சுரேஷ் ஸ்மார்ட்டாக இருக்கிறார். பிரபுவின் தமிழ் சினிமா உலக வாழ்க்கை ஆராயப்பட வேண்டிய ஒன்று. சின்னத்தம்பி மாதிரி எவர்க்ரீன் ஹிட் படத்தில் நடித்தவர், இப்படியெல்லாம் கூட பரிதாபமான கேரக்டர்களில் நடிக்கிறாரே என்று ஆச்சரியம் ஏற்படுகிறது. முன்பு காதலிக்க நேரமில்லை ரவிச்சந்திரன் இதுபோன்ற அக்கடா துக்கடா கேரக்டர்களில் ரஜினி படங்களில் நடிப்பார்.

துஷ்யந்தா பாட்டு சூப்பர். டொட்டடாய்ங்கும் கலக்கல். மற்றபடி பின்னணி இசை பில்லா-2007வையே மீண்டும் மீண்டும் ரீமேக்குகிறது. சமீரா ரெட்டி ஸ்டைலாக டிரெஸ் செய்கிறார். உயரமாக இருக்கிறார். பாவனாவுக்கும், சமீரா ரெட்டிக்கும் இடையேயான டெக்னிக்கல் டயலாக்ஸ் படமாக்கப்பட்ட காட்சிகளில் மட்டும் பழைய சரண் தெரிகிறார்.

சிவாஜி பிலிம்ஸ் தயாரிப்பு, அஜித் நடிப்பு, சரண் இயக்கம் என்றெல்லாம் புரொஃபைல் பக்காவாக இருந்ததால் இந்தப் படத்துக்கான எதிர்ப்பார்ப்பு ஏக்குமாக்காக இருந்தது. ஓபனிங்கில் நல்ல கல்லா கட்டியிருக்கிறது. இருந்தாலும் அசல் தமிழ் சினிமாவுக்கு இன்னுமொரு அடாசு என்பதை ஒப்புக்கொண்டே ஆகவேண்டும்.

* - * - * - * - *

அசல் அடாசு ஆக்கிவிட்டாலும், ஜக்குபாய் மக்குபாயாக இல்லாமல் ஆச்சரியப்படுத்துகிறார். சமீபத்தில் பார்த்த தமிழ் மசாலாக்களில் உருப்படியான மசாலா. நீண்ட நெடிய காலமாக ஹிட்டே கொடுக்காத சரத் நடித்திருப்பது மட்டுமே இப்படத்துக்கு வசூல்ரீதியாக மைனஸ் பாயிண்டாக இருக்கலாம். ஒரு வேளை இதே கேரக்டரில் அஜித் நடித்திருந்தால் அசலான ஹிட்டை நிஜமாகவே அடித்திருக்கலாம்.

பட்டதாரி இளைஞராக விஜயகாந்த் நடித்துக் கொண்டிருக்கும் இந்த காலக்கட்டத்திலும் கூட, தன் வயதுக்கு ஏற்ற கேரக்டரை ஏற்று நடிக்க முன்வந்திருக்கும் சரத்குமாருக்கு, ஞாநி சார் ஒரு பூச்செண்டை ‘ஓ’ பக்கங்களில் வழங்கலாம். ஏற்றுக் கொண்ட பாத்திரத்துக்கு ஏற்ற சிரத்தையையும் முழுவீச்சில் தருகிறார் சரத்.

படத்தின் ஆரம்பக் காட்சிகள் கொஞ்சம் குளறுபடியாக இருந்தாலும், சரத் ஆஸ்திரேலியாவுக்கு ஃப்ளைட் ஏறியதில் இருந்து ஜெட் வேகத்தில் பயணிக்கிறது. ஆங்கிலப்பட விறுவிறுப்போடு அமைக்கப்பட்ட திரைக்கதைக்கு பாடல்கள்தான் ஸ்பீட் பிரேக்கர். ஸ்ரேயாவின் குழந்தமையான வேடம் புளித்தமாவு. ஜெனிலியா நடித்த எல்லாப் படத்திலும் அவர் இப்படித்தான் நடித்திருந்தார். ஜக்குபாயின் மகள் இண்டெலக்ச்சுவலாகவே இருந்திருக்கலாம்.

சரத்தோடு மோதுமளவுக்கு வில்லன் வெயிட்டாக இல்லை என்பதும் இன்னொரு மைனஸ். பெரிய இடைவெளிக்குப் பிறகு கவுண்டமணி. வயிறு வலிக்குமளவுக்கு சிரிக்க வைக்கவில்லையென்றாலும் தனது வழக்கமான நக்கல், நையாண்டியில் எந்த குறையும் வைக்கவில்லை. சிங்கல் ஈஸ் ஆல்வேஸ் சிங்கம்.

’இயக்கம் : கே.எஸ்.ரவிக்குமார்’ என்று டைட்டில் போட்டிருந்தால் போதும். எதைப் பற்றியும் யோசிக்காமல் டிக்கெட் வாங்கிக்கொண்டு தியேட்டருக்குள் நுழைந்துவிடலாம் என்ற நம்பிக்கையை மீண்டும் மீண்டும் தக்கவைத்துக் கொள்கிறார் கே.எஸ்.ஆர்.

14 கருத்துகள்:

 1. பின்னூட்ட ரிலீசர்11:39 முற்பகல், பிப்ரவரி 10, 2010

  ;-) திருட்டு டிவிடிலதான ஜக்குபாய் பார்த்தீங்க?

  பதிலளிநீக்கு
 2. நல்ல பதிவு. நன்றி பத்ரி.

  பதிலளிநீக்கு
 3. இன்னுமொரு அடாசு /// ரைட்டு.

  =======

  ’இயக்கம் : கே.எஸ்.ரவிக்குமார்’ என்று டைட்டில் போட்டிருந்தால் போதும்...

  போதும்.. போதும்.

  பதிலளிநீக்கு
 4. அருமையான விமர்சனம் லக்கி. விமர்சனகளுக்கு அப்பாற்பட்ட பதிவு. இன்னொருமுறை நீங்கள் இளைய தளபதியின் ரசிகர் என்பதை நீருபித்து உள்ளீர்கள். அசலை விட வேட்டைக்காரன், குருவி போன்றவை தமிழின் மிக சிறந்த படங்கள்.

  பதிலளிநீக்கு
 5. சிங்கம் ஈஸ் ஆல்வேஸ் சிங்கம்.

  சரியா சொன்னீங்க

  பதிலளிநீக்கு
 6. This write up shows that you are in 'full form', and obviously we could witness the "lucky touch" only in these types of articles.
  In my opinion, Ajith has to really take the path of Arvindswamy, else, could concentrate on motor race.

  பதிலளிநீக்கு
 7. இரண்டு படங்களுக்கு ஒரே விமர்சனம் எழுதியதை பார்த்தவுடனேயே தெரிந்துவிட்டது படங்கள் எப்படி இருக்கும் என்று, நன்றி தல

  பதிலளிநீக்கு
 8. அசல் இன்னொரு ஆழ்வாராக இல்லாத வரை மகிழ்ச்சி..

  ஆயிரம்தான் சொல்லுங்கள் அசல் படத்தை ஒரு முறை தாராளமாக பார்க்கலாம்..

  பதிலளிநீக்கு
 9. அன்புத்தோழர்,

  ஒரு தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன். பதின்ம வயதுகளை நினைவு கூறும் ஒரு பதிவினை நீங்கள் எழுதவேண்டும் என்பது என் ஆசை. மறுக்கமாட்டீர்களென நம்புகிறேன். நன்றி.

  http://www.aathi-thamira.com/2010/02/blog-post_11.html

  பதிலளிநீக்கு
 10. Vettaikkaran Review Pakkombothey oru doubt irundhadhu Ippo athu clear Ayiduchu

  பதிலளிநீக்கு
 11. அதிகப்பிரசங்கித்தனத்துக்கு மன்னிக்கவும் லக்கி. பத்திரிகையுலகிற்கு முன்னேறிய பிறகு நிறைய.. நிறையவே எழுத்தில் நல்மாற்றம் தெரிகிறது. நல்ல பத்திரிகையாளனுக்கு ஒவ்வொரு வரியும் பிரதானம். இந்தப்பதிவின் ஒவ்வொரு வரியையுமே எடுத்துக்காட்ட விழைகிறேன். அத்தனையும் ரசனை. நல்ல படம் எப்படி நல்லது? மொக்கை எப்படி மொக்கை? என ரெண்டு படங்களையுமே பார்க்கும் ஆவலைத்தூண்டியிருக்கிறீர்கள்.

  பதிலளிநீக்கு
 12. என்னாது வாலி ஹிட் படம் இல்லையா ? அப்போ குருவி அழகிய தமிழ் மகன் இதெல்லாம் ஹிட் படமா என்ன ?. அனுஷ்கா இளைய தளபதியுடன் ஒரு படம் நடித்துவிட்டார் என்பதற்காக தலயை அவமானப்படுத்துவது சரியா ?

  பதிலளிநீக்கு
 13. தோழர் லக்கி!
  \\அசல் ஓபனிங்கில் நல்ல கல்லா கட்டியிருக்கிறது.\\ அப்படி ஒன்றும் தகவலில்லையே.........

  \\அசல் தமிழ் சினிமாவுக்கு இன்னுமொரு அடாசு \\
  அது.............

  பதிலளிநீக்கு
 14. இப்பதிவின் பின்னூட்டத்தில், அஜித் என்னசெய்யலாம் என நான் குறிப்பிட்டிருந்தேனோ, அதில் இரண்டாவதைச்செய்யும் ஆவல் அவருக்கும் உண்டுபோலும் என்பதை இன்று நேரில்பார்த்தபோது அறிந்துகொண்டேன்(இருங்காட்டுக்கோட்டையில்).

  பதிலளிநீக்கு