5 பிப்ரவரி, 2010

கேமிரா ஜாக்கிரதை!

பின் ஹோல் கேமிரா (Pinhole Camera) பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

அதை டெக்னிக்கலாக விளக்குவது எனக்கு கொஞ்சம் சிரமமான விஷயம். நாம் எதிர்பாராத இடங்களில், எதிர்பாராத வடிவங்களுக்குள் அதை வைத்து நமக்குத் தெரியாமலேயே படமெடுக்க முடியும் என்றவகையில் புரிந்துகொண்டால் போதும். நமக்கு தெரியாமலேயே நம்மை படம்பிடிப்பதை ‘கேண்டிட் கேமிரா’ என்கிறார்கள். பலருக்கு இது வெறித்தனமான பொழுதுபோக்கும் கூட.

இந்த வகை கேமிராக்களில் ரொம்பவும் அட்வான்ஸான தொழில்நுட்பம் எந்த காலத்திலேயோ வந்துவிட்டது. பத்திரிகையாளர்கள் சட்டைப் பாக்கெட்டில் செருகி வைத்திருக்கும் பேனாவில் கூட கேமிரா உண்டு. சமீபத்தில் ஜூனியர் விகடன் இதழ் இந்த கேமிராவை பயன்படுத்தி, ஒரு பரபரப்பு ஸ்டோரி எழுதியது கூட உங்களுக்கு நினைவிலிருக்கலாம்.

இப்போது மின்னஞ்சல்களில் சுற்றிக்கொண்டிருக்கும் ஒரு மடல் பகீர வைக்கிறது.

மிகப்பெரிய சில ஷாப்பிங்மால்களில் பெண்கள் உடைமாற்றிப் பார்க்கும் ‘டிரையல் ரூம்களில்’ இதுபோன்ற பின் ஹோல் கேமிரா மூலமாக படம் பிடிக்கிறார்களாம். இது நிர்வாகத்துக்குத் தெரிந்து நடக்கிறதா அல்லது அங்கு பணியாற்றும் வக்கிரமனதுக்காரர்கள் யாராவது செய்கிறார்களா என்பது பற்றி உறுதியாகத் தெரியவில்லை.

‘பெரிய சந்தை’ ஒன்றில் சமீபத்தில் படம் பிடித்ததாக கூறி ஒரு எம்.எம்.எஸ். சுற்றிக் கொண்டிருக்கிறதாம். ‘வாடிக்கையாளர் நிறுத்தத்தில்’ கூட இதுபோன்ற கசமுசா ஒருமுறை நடந்திருப்பதாகவும் வதந்தி உலவுகிறது. அயல்நாடுகளில் பெரிய ஷாப்பிங் மால்கள் பலவற்றிலும் நடப்பதாக கட்டுரைகள் வாசித்திருக்கிறேன். ’டூவே மிர்ரர்’ போன்றவை அங்கே சகஜமாக இருந்ததாகவும் கேள்விப்பட்டிருக்கிறேன்.

நம்மூருக்கும் இந்த கலாச்சாரம் வந்துவிட்டது என்பது நட்சத்திர ஓட்டல் குளியலறையில் நடிகை படம் பிடிக்கப்பட்டதாக சொல்லப்பட்ட சம்பவத்தின்போதே உறுதியாகிவிட்டது.

டிரையல் ரூம்களில் ஆண்களை படம் பிடித்து ஒன்றும் ஆகப்போவதில்லை. ஆனால் பெண்கள் இனி கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது. பெரிய ஷாப்பிங் மால்களில் இதுபோன்ற கசமுசாக்கள் நடக்க வாய்ப்பில்லாத வண்ணம் காவல்துறையும் முடுக்கி விடப்பட வேண்டியது அவசியமாகிறது.

தமிழ் பத்திரிகைகளுக்கு சமீபகாலமாக கவர்ஸ்டோரி பஞ்சம் ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது. இந்த மேட்டரை பயன்படுத்திக் கொள்ளலாம்.

8 கருத்துகள்:

 1. காவல்துறையினரின் பங்களிப்பு தேவைதான் என்றாலும், சுய விழிப்புணர்வும், எச்சரிக்கையும் கொள்வோமானால், இத்தகைய வில்லங்கங்களில் சிக்காமல் தப்ப முடியும்.

  பதிலளிநீக்கு
 2. தோழர் லக்கி,
  கேரள-தமிழக எல்லை மாவட்டங்களில், நெடுந்தூரப் பேருந்துகள் இடைநிறுத்தப்படக் கூடிய உணவகங்களில்(மோட்டல்கள்) உள்ள கழிவறைகளில் படப்பதிவுக் கருவிகள் பொருத்தப்பட்டுப் பதிவு செய்யப்பட்ட ஆபாசக் கட்சிகள், குறுந்தட்டுகளில் பதியப்பட்டு, கடைகளில் அக்குறுந்தகடுகள் விற்பனையே செய்யப்பட்ட சம்பவம் ஓராண்டுக்கு முன்னர் அரங்கேறியதே, அது உங்களுக்குத் தெரியும்தானே?.... அதைவிடவா?.....

  பதிலளிநீக்கு
 3. இதெல்லாம்... "பின்நவீனத்துவ முற்போக்கு" கலாச்சாரம். இதைப்போலவே .... 'GOவாதே' என்றெல்லாம் "பிற்போக்குவாதம்" புரிவதை தவிர்க்கலாமே... லக்கி சார்.

  இப்போதாவது புரிகிறதா?

  பதிலளிநீக்கு
 4. என்ன கொடுமைசார் இது..நினைக்கவே பயமாக இருக்கின்றது.காவல்துறையின் கடும் நடவடிக்கை இவரைபோன்றவர்களுக்கு தேவை. வாழ்க வளமுடன், வேலன்.

  பதிலளிநீக்கு
 5. லக்கி,
  சமூக விழிப்புணர்வு கட்டுரை.

  பதிலளிநீக்கு
 6. How to detect hidden camera in trail room .check your cell make sure that your cell can make a call before u enter the trail room and, after entering in to room if u r cell cant make a call (this is due to interference of fiber optic implementation )it means that there is a hidden camera.

  பதிலளிநீக்கு
 7. மிக சமீபத்தில் தான் உங்களுடைய வலைத் தளத்தை
  படிக்க கூடிய சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது.
  ஒவ்வொரு பதிவுகளும் அழுத்தமாகவும், ஆழமாகவும்,
  கருத்துகளை சொல்கின்றன.

  பதிலளிநீக்கு