February 4, 2010

கோவா!


அந்த காலத்தில் சுந்தர்ராஜன் படம் இயக்கும் ஸ்டைலைப் பற்றி சினிமாப்பெருசுகள் சிலாகிப்பதுண்டு. படப்பிடிப்புத் தளத்துக்கு போய்விட்டு யூனிட் ஆட்களோடு கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருப்பாராம். தலையில் போட்ட துண்டோடு தயாரிப்பாளர் வந்து, “நிலத்தை அடமானம் வெச்சி காசை போட்டிருக்கேன். ஏதாவது சீன் ஷூட் பண்ணு அப்பு!” என்று கெஞ்சியபிறகே, உட்கார்ந்து ‘சீன்’ எழுதுவாராம். இப்படியெல்லாம் சுந்தர்ராஜன் எழுதிய படங்கள் பலவும் வெள்ளிவிழா கண்டவை என்பது குறிப்பிடத்தக்கது. விஜயகாந்த் என்ற ஆக்‌ஷன் ஹீரோவை, பெண்களுக்கு பிடித்த நூன்ஷோ ஹீரோவாக்கியதும் அவர்தான். மோகனை வெள்ளிவிழா நாயகன் ஆக்கியதும் அவர்தான்!

ஷூட்டிங்குக்கு போய் கிரிக்கெட் விளையாடுபவர்கள் எல்லாம் சுந்தர்ராஜன் ஆகிவிடமுடியாது என்பதற்கு வெங்கட்பிரபு நல்ல உதாரணம். தனக்கு சுத்தமாக சரக்கில்லை என்பதை சுத்தபத்தமாக நிரூபித்திருக்கிறார். எந்தவித முன் திட்டமும் இல்லாமல்தான் அவர் ’கோவா’வுக்கு ஹாலிடே போயிருக்கிறார் என்பதை பத்து ரூபாய் கொடுத்து முதல் வரிசையில் உட்கார்ந்து படம் பார்க்கும் பாமரன் கூட உணர்கிறான்.

தமிழ்பட ஸ்ஃபூபாக வரும் முதல் அரைமணிநேரக் காட்சிகள் மட்டுமே சுமார். ஜோக் என்ற பெயரில் கடி கடியென ஒவ்வொரு கேரக்டராக கடிக்க, ரசிகர்கள் சிரிப்பார்கள் என்று நினைத்து எடுத்த இயக்குனரை நினைத்து பாவமாக சிரித்துத் தொலைக்க வேண்டியிருக்கிறது. துண்டு, துண்டாக எடுத்தக் காட்சிகளை எடிட்டிங்கில் கோர்த்துக் கொள்ளலாம் என்று இயக்குனர் நினைத்திருக்கலாம். இதற்குப் பதிலாக ஃபியாவுக்கு ஒரு துண்டாவது வாங்கிக் கொடுத்திருக்கலாம். அம்மணியின் இடுப்புக்குக் கீழே உடை தொடர்பான வறுமை தலைவிரித்து ஆடுகிறது.

இளையராஜா பாடும் பாடலைத் தவிர்த்து, வேறெந்த காட்சியிலும் இசை யுவன்ஷங்கர்ராஜா என்பதற்கு எந்த அடையாளமும் இல்லை. துள்ள வைக்கவில்லை, துவளவைக்கிறார். ரசிக்கும் வகையில் படமாக்கப்பட்டிருந்தாலும் சம்பத் சம்பந்தப்பட்ட ஹோமோசெக்ஸ் காட்சிகளுக்கு தியேட்டர்களில் நெளிகிறார்கள். நடிப்பில் சம்பத்தும், அவரது பார்ட்னரும் மட்டுமே தேறுகிறார்கள். தம்பி பிரேம்ஜிக்கு அண்ணன் வெங்கட்பிரபு கொடுக்கும் ஓவர் பில்டப் காட்சிகள் கடுப்போ கடுப்பு.

அந்த ஃபாரின் ஃபிகர் அழகாக இருக்கிறார். ஃபியாவின் கண்கள் ஷார்ப்னராய் நம் இதய பென்சிலை சீவுகிறது. பிளாக்கில் டிக்கெட் வாங்கி பார்த்ததற்கு இதைத் தவிர்த்து உருப்படியாக வேறெந்தப் பயனுமில்லை. ரஜினியின் மகள் சவுந்தர்யாவின் முதல் தயாரிப்பே குப்பையாக வந்திருக்கிறது. துரதிருஷ்டவசமாக இந்த குப்பையை கொண்டு மின்சாரம் என்ன சம்சாரம் கூட தயாரிக்க முடியாது.

என்னுடைய ஆச்சரியமெல்லாம் என்னவென்றால், கறாரான விமர்சனத்தையும், நியாயமான நிராகரிப்பையும் எனக்கு கற்றுத்தந்த எழுத்துலக சூப்பர் ஸ்டார் இதை உலகளவிலான படமாக எப்படி ஏற்றுக்கொண்டார் என்பதே. இப்படம் கீழ்த்தட்டு இளைஞர்களை எந்தக் காரணமுமின்றி ஒட்டுமொத்தமாக நிராகரிக்கிறது. மேல்த்தட்டு இளைஞர்களையும் கொஞ்சம் கூட பிரதிபலிக்கவில்லை என்பதே சோகம்.

என் உயிருக்கு உயிரான தமிழ் உடன்பிறப்புகளின் காலில் விழுந்து கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன். GOவாதே!

22 comments:

 1. When Ayirathill Oruvan can be claimed and hailed as a novel attempt on movie making (in Tamil, of course), why don't you see 'Goa' breaking the barriers of "Big No" on portraying LGBT? Why are you not giving that credit to Venkat? I agree with your mentor Charu on that.

  ReplyDelete
 2. ஆங்கிலத்தில் பின்னூட்டம் இடும் அன்பவர்களுக்கு நான் பதில் சொல்வதில்லை என்பதால் என்னை ஆணவம் மிகுந்தவனாக சித்தரிக்கிறார்கள்.

  உண்மையில் எனக்கு ஆங்கிலம் தெரியாது என்பதாலேயே பதில் அளிக்க இயலுவதில்லை என்பதை பெருமையோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

  ReplyDelete
 3. Not that I (rather we) don't want to comment in English. Frankly, i don't know to type in tamil. Tamil is 4th language that i learnt by virtue of settling down here. Guess, you should start replying to English comments too.

  ReplyDelete
 4. அனானி பின்னூடத்திற்கும் இதே பதிலை சொல்லலாம்

  ReplyDelete
 5. //என் உயிருக்கு உயிரான தமிழ் உடன்பிறப்புகளின் காலில் விழுந்து கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன். GOவாதே!//

  :(

  ப்ச்.... ரிலீஸ் அன்னிக்கே பாத்துத் தொலைச்சிட்டேன்.

  ReplyDelete
 6. அய்யா! மொட்டைக்கடுதாசி ரேஞ்சுக்கு இந்த நலம் விரும்பி பின்னூட்டங்கள் எல்லாம் தயவுசெய்து வேண்டாம்.

  ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்
  சாரு ஈஸ் ஆல்வேஸ் சூப்பர் ஸ்டார்!

  ReplyDelete
 7. naanga ellam unga oorukku vandhu unga language kathuttu padikirome...neenga oru kelvi-ku reply pannama nakkal adikireenga...too much pa...

  ReplyDelete
 8. என்னுடைய ஆச்சரியமெல்லாம் என்னவென்றால், கறாரான விமர்சனத்தையும், நியாயமான நிராகரிப்பையும் எனக்கு கற்றுத்தந்த எழுத்துலக சூப்பர் ஸ்டார் இதை உலகளவிலான படமாக எப்படி ஏற்றுக்கொண்டார் என்பதே.--

  யாருப்பா அது..

  ReplyDelete
 9. ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்
  சாரு ஈஸ் ஆல்வேஸ் சூப்பர் ஸ்டார்!


  Karpavan kethare ?

  ReplyDelete
 10. கற்பவன்1:36 PM, February 04, 2010

  சுந்தர்ராஜனை வெகுவாக சிலாகிக்கும் உங்களுக்கு, வெங்கட்பிரபுவைப் பிடிக்காமல்போனதில் வியப்பேதும் இல்லை.

  நீங்கள் ஆச்சரியப்பட இதில் என்ன இருக்கிறது? வெங்கட்பிரபு அல்ல, விஜய டி.ராஜேந்தர் எடுத்திருந்தால்கூட, 'gay content' இருக்குமானால், உங்கள் ஆசானுக்கு, அதுவும் உலகளவிலான படமாகத்தான் தோன்றும்.

  மாற்று நகைச்சுவைக்கு வித்திட்டு வெற்றிகண்ட வெங்கட்பிரபு, தமிழ்த்திரையுலகின் தவிர்க்கமுடியாத இயக்குநர்களில் ஒருவராக வலம்வருவார் என்பது திண்ணம்.

  ReplyDelete
 11. எனக்கு உங்கள் விமர்சனம் பிடித்திருந்தது.

  எனக்கும் படம் அவ்வளவாக பிடிக்கவில்லை.

  கதை என்ற வஸ்துவை படம் ஆரம்பித்ததில் இருந்து தேடி வெறுத்துவிட்டேன்.

  ReplyDelete
 12. கற்றவன்4:36 PM, February 04, 2010

  கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு தலைநகரின் பெயரோடு, ஒரு தபால் குறியீட்டு எண்ணையும் சேர்த்து, தலைப்பாக வைத்து எடுக்கப்பட்டு வெற்றிகரமாக ஓடிய திரைப்படம் கூட அண்ணனின் சொந்த சரக்கில்லை என்று, எனக்கு எழுதும் ஆர்வத்தைத் தூண்டிய வலையுலக-எழுத்துலக-சூப்பர் ஸ்டார்- இணையத்தின் ராசா முன்னமே சொல்லிவிட்டார்.

  ReplyDelete
 13. \\மின்சாரம் என்ன சம்சாரம் கூட தயாரிக்க முடியாது.// உலகில் உள்ள அத்தனை சம்சாரங்களின் சார்பிலும் இதை வன்மையாகக் கண்டிக்கிறேன்! :)

  ReplyDelete
 14. நாலு பேர்8:13 PM, February 04, 2010

  GOவாதே என்று அருமையாக வார்த்தை விளையாட்டு எல்லாம் ஆடிவிட்டு ஆங்கிலம் தெரியாது என்று பெருமை அடிச்சுக்கிறது இடிக்குது.இன்னும் படம் பார்க்கலை. GAY ISSUES வியாபார சினிமாவில் பேசுவதால் சாருவிற்கு பாராட்ட தோன்றியிருக்கலாம். தியேட்டரில் நெளிகிறார்கள் என்பது போன்ற 'குமுதம் ரக' விமர்சனம் இந்த விஷயத்தில் உங்கள் பார்வையயும் பிரதிபலிக்கிறதோ என்ற அச்சம் தோன்றுகிறது. Say it aint so, Lucky!

  ReplyDelete
 15. charu nakkaladiththirukkirrar lucky..

  ReplyDelete
 16. >>
  இளையராஜா பாடும் பாடலைத் தவிர்த்து, வேறெந்த காட்சியிலும் இசை யுவன்ஷங்கர்ராஜா என்பதற்கு எந்த அடையாளமும் இல்லை
  <<

  காதுல ஈயத்த காய்ச்சி தான் ஊத்தணும்

  http://www.youtube.com/watch?v=29aoaQ-Vezk

  ReplyDelete
 17. GOAway என்றும் முடித்திருக்கலாம்.

  ReplyDelete
 18. உங்களை பார்த்தால் பாவமாக இருக்கிறது. நான் சென்ற சமயம் ஓரினசேர்க்கை காட்சிகளிலோ வேறு எந்த காட்சியிலோ யாரும் நெளியவும் இல்லை ஊஊ என்று கத்தவும் இல்லை. கடைசி சினேகா வைபவ் காட்சி மட்டும் மொக்கையாக இருந்தது. அதையும் வெங்கட் பிரபுவே பிரேம்ஜி டீ பாப்கார்ன் வாங்குவதாக காட்டி ஓட்டிவிட்டார். ஒரு வேளை நீங்கள் சென்ற சமயம் எல்லாம் ஸ்ட்ரெய்ட் ரசிகர்களும், உலக பட ரசிகர்களும் வந்திருப்பாங்க. நான் சென்ற சமயம் கே ரசிகர்களும், ரசனையே இல்லாதவர்களும் வந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். இது இளைஞர்களுக்கான படம். கிழவர்களுக்கு பிடிக்காததில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை. ஹா ஹா. ஆனாலும் நீங்க வேட்டைக்காரன் படத்தை சூப்பர் படம்னு சொன்னீங்க. அத விடவா இது நல்லா இல்லை ? கோவாவை வேட்டைக்காரனுடன் ஒப்பிட்ட பாவத்தை எங்கே கொண்டு தொலைப்பேனோ ?

  ReplyDelete
 19. Goa is a movie for youngsters.
  Venkat Prabu's movies will be appreciated by age group 15-35 only.
  I remember vijaykanth's comment on Saroja'indha padatha patthuttu en pasanga vilunthu vilunthu sirikkiraanga...namaaku than pidipada maatenguthu'nnu.
  Mandhil ilaignaraana chaaruvukku pidiththadhil viyappillai.

  ReplyDelete
 20. கோவா பார்த்தேன்... நீங்க தயவு செஞ்சு இனிமே சினிமா விமர்சனம் எழுதாதீங்க.உங்க குரு சொன்னதுதான் சரி.

  ReplyDelete
 21. goa padathil varum "idhu varai' paattu ketteergala ? Piavin kadhal pidithadha ?
  I am a fan of Goa for the above 2 things!!

  ReplyDelete