17 நவம்பர், 2011

தமிழும், திராவிடமும்!

உலகின் மூத்தமொழி. கல்தோன்றி, மண்தோன்றா காலத்து மனிதர்கள் பேசி மகிழ்ந்த மொழி. ஆரியக் கலாச்சார, சமஸ்கிருத ஊடுருவல், மொகலாய உருது, பார்சி, வெள்ளையரின் ஆங்கிலேய ஊடுருவல்களையும் சமாளித்து நின்று இன்றும் வாழும் ஒரே மொழி தமிழ்மொழி.

சமயம் மட்டுமே இம்மொழியைக் காத்தது என்ற புனையுரைகள் எப்போதும் புனையப்பட்டு வரும் சூழ்நிலையில் இனமான திராவிட இயக்கத்தின் பங்களிப்பு இம்மொழியின் வளர்ச்சிக்கு எத்தகையது என்று விளக்க வேண்டிய அவசியம் நமக்கு இயல்பாகவே எழுகிறது.

பண்டிதர்களும், சமயத் தலைவர்களும் தங்களுக்குள்ளாகவே நம் மொழியின் பயன்பாட்டினை பிரித்து எடுத்துக் கொண்டு சமயம் பரப்ப மொழியைப் பயன்படுத்திய வேளையிலே திராவிடர் இயக்கம் மட்டுமே தமிழை பாமரருக்கும் உரிமை கொண்டதாக்கியது.

தமிழிலே புதிய சொற்களை அறிமுகப்படுத்தியதில் முன்னோடிகளாக மறைமலையடிகளாரும், திரு.வி.க.வும் மற்ற பேராசிரியர்களும் பாடுபட்ட போதிலும், அவர்களது பணி எந்த அளவுக்கு மக்களை அடைந்தது என்பது கேள்விக்குறியே. புதுத்தமிழை சாமானியனும் பயன்படுத்தலாம், படைப்புகளை உருவாக்கலாம் என்ற சூழ்நிலையை உருவாக்கியவர்கள் திராவிட இயக்க முன்னோடிகள்.

தேசிய இன உணர்வானது தேசிய மொழியையே நேசிக்கச் செய்யும் இயல்பு கொண்டது என்ற நிலையில் மண்டல மொழியான தமிழின் தனித்தன்மையை காக்கும் வேலையை திராவிடர் இயக்கம் செவ்வனே செய்தது. சமயங்கள் தமிழை வாழவைத்தது என்ற கருத்தாக்கத்தை நாமும் ஒப்புக் கொண்டாலும் கூட சமயத்தமிழால் அடித்தட்டு தமிழனுக்கு விளைந்த நன்மை என்ன என்ற நியாயமான துணைக்கேள்வியையும் நம்மால் புறந்தள்ள முடியாது.

கூடுமானவரை வடமொழிச் சொற்களை தமிழில் இருந்து அகற்றி திராவிடர் இயக்கம் மக்களுக்குத் தந்த தமிழ் உரைநடைத் தமிழாக இருந்தாலும், அத்தமிழ் மக்களிடையே ஏற்படுத்திய எழுச்சியினை எந்தக் கொம்பனாலேயும் மறுக்க முடியாது.

திராவிடர்கள் நடத்திய பத்திரிகைகளான குடியரசு, விடுதலை, திராவிடன், திராவிடநாடு, முரசொலி, முத்தாரம், தோழன், நகரதூதன், போர்வாள், தாய்நாடு, குயில், இனமுழக்கம், தென்றல், தென்னகரம், தாரகை, தன்னாட்சி, தனியரசு, மாலைமணி, நம்நாடு, பிறப்புரிமை, நக்கீரன், அண்ணா, தென்புலம், மன்றம், முல்லை, நீட்டோலை, புதுவாழ்வு, தம்பி, மக்களாட்சி, அறப்போர், அன்னை, முன்னணி, காஞ்சி, பகுத்தறிவு, உரிமை வேட்கை, மக்களரசு, தீப்பொறி, ஈட்டி, திராவிடஸ்தான், தமிழரசு, தென்னரசு, திராவிட ஏடு, அருவி, பொன்னி, ஞாயிறு, பூம்புகார், வெள்ளி வீதி, கனவு, அமிர்தம், தஞ்சை அமுதம், தென்னாடு, முன்னேற்றம், தீச்சுடர், களஞ்சியம், திருவிடம், பூமாலை, சங்கநாதம், எரியீட்டி, புரட்சிக்குயில், திருவிளக்கு ஆகியவவை எளிய உரைநடையில் புதுத்தமிழ் சொற்களை சாமானிய மக்களிடையே பரப்பியது.

வேறு வழியில்லாமல் கல்கி, ஆனந்தவிகடன், சுதேசமித்திரன் போன்ற பத்திரிகைகளும் தங்களது சொந்த அடையாள நடையை மாற்றவேண்டிய கட்டாயம் இப்பத்திரிகைகளால் ஏற்படுத்தப்பட்டது. பழைய ஆனந்தவிகடன், கல்கி இதழ்களை இன்றைய இதழ்களோடு ஒப்பிட்டுப் பார்த்தோமேயானால் இந்த உண்மை புலப்படும்.

இதுமட்டுமல்லாமல் சிறுகதை, நெடுங்கதை, கவிதை, நாடகம், திரைப்படம் என இலக்கியத்தின் மற்ற கூறுகளிலும் திராவிட இயக்கத்தின் அழகுத்தமிழ் அரசாட்சி மொழியின் பயன்பாட்டை அதற்குரியவர்களுக்கு கொண்டு சென்றது. துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமியே பலமுறை ஒத்துக் கொண்ட ஒரு உண்மை “திராவிட இயக்கத்தினரால் தமிழர்களுக்கு நல்ல தமிழ் கிடைத்தது” என்பது.

புலவர் குழந்தையின் “இராவணக் காவியம்”, அதுவரை இருந்த இதிகாசத் தமிழ் செயற்பாட்டுக்கு மரண அடி கொடுத்தது.

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், பேரறிஞர் அண்ணா முதற்கொண்டு திராவிட இயக்கத்தின் கடைநிலை எழுத்தாளர் வரை இனமான எழுச்சித் தொடரினை தமிழரிடையே தொடக்கி வைத்தார்கள்.

தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனாரின் தினத்தந்தி எளியத் தமிழில் தினச்செய்திகளை தமிழருக்கு தரத் தொடங்கியது.

தமிழர்களின் வாழ்வியல் முறையில் நடக்கும் இயல்பான நிகழ்ச்சிகளின் தலைப்புகள் தனித்தமிழில் மாற்றப்பட்டது திராவிட இயக்கம் தமிழ் மொழிக்கு செய்த மறுக்க முடியாத சாதனை எனலாம்.

விவாகசுபமுகூர்த்தப் பத்திரிகை – திருமண அழைப்பிதழ்

கர்ணபூஷனம் – காதணிவிழா

ருதுசாந்தி – மஞ்சள்நீராட்டு விழா

கிரஹப்பிரவேசம் – புதுமனை புகுவிழா

உத்தரகிரியை – நீத்தார் வழிபாடு

நமஸ்காரம் – வணக்கம்

இவ்வாறாக அன்றாட வாழ்க்கையில் தமிழன் பயன்படுத்திய வடமொழி வார்த்தைகள் நீக்கப்பட்டு, தமிழின் அழகுச்சொற்கள் பயன்பாட்டுக்கு வர திராவிட இயக்கம் அடிகோலியது.

அதுமட்டுமா? அரசியல் மேடைகளிலும் தமிழ் கொஞ்சத் தொடங்கியது

அக்ரசானர் – அவைத்தலைவர்

காரியதரிசி – செயலாளர்

அபேட்சகர் – வேட்பாளர்

இவ்வாறாகத் துறைதோறும் தனித்தமிழ் வளர்ச்சி திராவிட இயக்கத்தாரால் நித்தமும் நடைபெற்றது.

வேட்பாளர் என்ற சொல்லை திமுக 1957ல் தேர்தலிலே முதன்முறையாக கலந்துகொண்ட போது தான் தமிழகத்திலே பயன்பாட்டுக்கு வந்தது. இம்மாற்றத்தை பாராட்டி அக்காலக்கட்டத்தில் ஆனந்தவிகடன் பத்திரிகை தலையங்கமே எழுதியது.

“சுவாமி வேதாசலம் தன் பெயரை மறைமலையடிகள் என்று மாற்றியபோது எதிர்த்தார்கள். மந்திரிகளை அமைச்சர்கள் என்றபோது எதிர்த்தார்கள். மகாஜனம் வேண்டாம், பொதுமக்கள் போதும் என்றபோது எதிர்த்தார்கள். உபன்யாசத்தை சொற்பொழிவு என்றபோதும் எதிர்த்தார்கள்.

இவர்கள் எங்கேயிருந்து தமிழை வாழவைக்கப் போகிறார்கள். நெருப்பு எரிகிறவரையே குளிர்தெரியாமல் இருக்கும். நெருப்பு அணைந்துவிட்டால் மீண்டும் குளிர் நடுங்க வைக்கும்.

தமிழ்மொழி மீது ஆர்வமும், சுறுசுறுப்பும் தொடர்ந்து இருந்தால் மட்டுமே தமிழ் வாழும். இல்லாவிட்டால் மீண்டும் மகாஜனம் வந்துவிடும். பொதுமக்கள் அழிந்துவிடும்” என்று பேரறிஞர் அண்ணா ஒருமுறை குறிப்பிட்டார்.

அதாவது திராவிடர் இயக்கம் என்ற நெருப்பு அணைந்துவிட்டால், மீண்டும் மணிப்பிரவாள குளிர்நடுக்கம் தமிழனுக்கு ஏற்படும் என்பதையே பேரறிஞர் சூசகமாக குறிப்பிட்டார்.

இன்றைய தேதியிலும் தமிழ்வளர்ச்சி, தமிழ் முன்னேற்றம், தமிழர் வாழ்வாதாரம் போன்ற சொற்களைக் கேட்டாலே ஒரு கூட்டத்துக்கு வலிப்புநோய் கண்டுவிடுகிறது. திராவிடர்கள் தமிழ், தமிழர் நலனில் தனித்தன்மை கெடாமல் எதைச் செய்தாலும் அக்கூட்டம் எதிர்த்து வந்திருப்பதே வரலாறு. மாநில அளவிலும், தேசிய அளவிலும் தற்போது இந்துத்துவாவுக்கும், பார்ப்பனீயத்துக்கும் கிடைத்திருக்கும் தற்காலிக வெற்றிகளைக் கண்டு ஓநாய்கள் ஓங்காரமாக ஓலமிட ஆரம்பித்திருக்கின்றன.

நரித்தந்திரம் மிக்க தமிழ் ரட்சகர் ஒருவர் இருக்கிறார். தமிழுக்கு திராவிடம் என்ன செய்தது? என்ற கேள்வியோடு கிளம்பியிருக்கிறார். இம்மாதிரி ஆட்களின் பிரச்சினையே சாமான்ய மனிதனின் நிலையிலிருந்து பிரச்சினைகளை அணுகுவதை தவிர்த்து, அறிவுஜீவி பாவனைகளோடு யதார்த்தங்களை புரட்டுகிறார்கள். நல்லவேளையாக தமிழகத்தின் கடந்த அரைநூற்றாண்டு இவர்களை தயவுதாட்சணியம் ஏதுமின்றி நிராகரித்தே வருகிறது.

இந்தக் கூட்டம் எதையெல்லாம் எதிர்க்கிறதோ, அதுவெல்லாம் தமிழனுக்கு நன்மை செய்யும் விடயங்கள் என்று அறிந்துக் கொள்ளலாம். அவர்களது எதிர்ப்பு நமக்கெதிராக எப்போதெல்லாம் எழுகிறதோ அப்போதெல்லாம் நாம் சரியான பாதையில் வீறுநடை போட்டு வருகிறோம் என்பதை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.

56 கருத்துகள்:

 1. நீங்கள் சொன்ன பணி அண்ணா காலத்தோடு முற்றுப்பெற்றது.தமிழ் மொழிக்கு இவர்கள் ஆற்றியதை விட அடைந்தவை அதிகம் என்பதையாவது ஒப்புக்கொள்ளுங்கள்.

  பதிலளிநீக்கு
 2. நல்ல பதிவு இளம் கிருட்டிணா!
  (”யுவகிருஷ்ணா”)

  //இனமான திராவிட இயக்கத்தின் பங்களிப்பு//

  பங்கு அதிகம்தான்.பாராட்டவேண்டிய விஷயம்.

  இவர்களுக்குப் பிறகு? நெருடும்
  விஷயம் இவர்கள் வாரிசுகள் எல்லாம்
  கான்வெண்ட்.

  அடுத்து “”ஸ்”டாலின்.சுடாலின் என்று போட்டால் என்னவோ மாதிரி இருக்கிறது.


  //முன்னோடிகளாக மறைமலையடிகளாரும், திரு.வி.க.வும் மற்ற பேராசிரியர்களும் பாடுபட்ட போதிலும், அவர்களது பணி எந்த அளவுக்கு மக்களை அடைந்தது என்பது கேள்விக்குறியே. //

  தொண்டு உண்மை.ஆனால் தாங்கள் சார்ந்த சைவ மரபைச்சார்ந்துதான் இதைச்செய்தார்கள்.(குஞ்சிதபாதம்-தூக்கிய திருவடி,வேதாசலம் -மறைமலையடிகள்)கழகங்கள்

  இவர்களை அவ்வளவாக கழகங்கள் ஆதரிக்கவில்லை என்று என் யூகம்.

  மக்கள் பேச்சு மொழியில் இந்த மாற்றத்தைக்கொண்டு
  வரமுடியவில்லை.இப்போது இருக்கும் சுழ்நிலையில் இது சாத்தியமா?ரொமப கடினம் என்று நினைக்கிறேன்.

  ராமதாஸ் ஆங்கிலம் மற்றும் வேறு மொழி சொற்களுக்கு இணையாக பல சொற்களை உருவாக்கினார்.
  தேவையில்லாத வேலை.(ஆட்டோ-தானி,சைக்கிள்-இரு உருளை உந்து,காப்பி-கொட்டைவடிநீர்)

  அது அவர் டீவியில் மட்டும்தான் பயன்படுகிறது.கடவுளே வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது.


  க்டைசியாக தமிழ்(ப்)படம்.ரீலிசுக்கு முன்னால்தான் (ப்) சேர்த்தார்கள்.

  பதிலளிநீக்கு
 3. நீண்ட நாட்களுக்குப் பிறகு லக்கியிடமிருந்து ஒரு நல்ல பதிவு. பத்திரிக்கையாளராக மாறிய பின் பழைய லக்கியை பார்க்க முடியவில்லை. இப்பதிவு லக்கிக்கு ஒரு மறுபிறவி. மீண்டும் பழைய லக்கியை வேறு ஒரு புதிய ப்ளாக்கின் மூலமாக வேறு ஒரு பரிமாணத்தில் தன்னுடைய அடையாளத்தை மறைத்து வெளிப்படுத்த வேண்டும் என்பது லக்கியுடன் பழகிய ஒருவனின் வேண்டுகோள்.

  பதிலளிநீக்கு
 4. //இந்தக் கூட்டம் எதையெல்லாம் எதிர்க்கிறதோ, அதுவெல்லாம் தமிழனுக்கு நன்மை செய்யும் விடயங்கள் என்று அறிந்துக் கொள்ளலாம்.//

  :)

  இன்னொன்னு அவர்கள் அவ்வாறு எழுதும் போது தான் அதனை மறுவாசிப்பு செய்து ஒப்பிட்டு திராவிட இயக்கமும் என்னவெல்லாம் செய்து வந்திருக்கிறது என்று அறியத் தரமுடிகிறது

  பதிலளிநீக்கு
 5. பேச்சுத்தமிழிலும், உரைநடைத்தமிழிலும் எளிமையைக் கொண்டுவந்தவர்கள் திராவிட இயக்கத்தினர் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை. அதேநேரம், தனித்தமிழ் வளர்ச்சி மற்றும் கலைச்சொல் உருவாக்கம் முதலிய தளங்களில் செயல்பட்டுவந்த, இயக்கம் சாராத, சில தனிநபர் முயற்சிகளுக்கு (மறைமலை, பாவாணர் மற்றும் பெருஞ்சித்திரனார்), திராவிட இயக்கத்தினர் எந்த அளவுக்கு உறுதுணை நின்றனர் என்பது நாமறிந்ததே, புலவர் குழந்தையின் 'இராவண காவியத்'தடை நீக்கம் போன்ற சிவற்றைத்தவிர தவிர!
  செம்மொழி என்று கூறிக்கொண்டு இவர் செய்துவரும் முயற்சிகள், மொழி ஆர்வலர்கள் மத்தியில் நகைப்புக்கே ஆளாகி வருகிறது., இந்நிலையில் எழுத்து சீர்திருத்தம் என்ற அறிவிப்புவேறு(07-01-2010).

  பதிலளிநீக்கு
 6. எனக்கு ஒரு விஷயம் புரியவில்லை. ‘பேச்சுத்தமிழ்’ என்றால் அவ்வளவு கேவலமா என்ன?

  பேச்சு வழக்கில் ஒரு மொழியை பரவலான பயன்பாட்டுக்கு கொண்டுவருவதை தவிர்த்து, வேறு என்ன பெரிய சேவையை செய்துவிட முடியும் என்று எனக்கு தெரியவில்லை.

  இன்று தெலுங்குமொழிக்கு ஏற்பட்டிருக்கும் அவலமே பேச்சுமொழி தொடர்பானதுதான். இந்தியாவின் மற்ற மண்டலமொழிகளுக்கு இன்று ஏற்பட்டிருக்கும் சிக்கலின் சதவிகிதம் தமிழுக்கு மிகக்குறைவு என்பதிலேயே இங்கே கடந்த ஐம்பதாண்டுகால திராவிடத்தமிழ் சேவையை உணரலாம்.

  அறிவுஜீவிகள் பொத்தாம்பொதுவாக சொல்லித் தொலைப்பதைப் போல தமிழறிவு வளர்ச்சிக்கு திராவிட இயக்கம் எந்த பணியையும் செய்துவரவில்லை என்பது வடிகட்டிய பொய். கடந்த நாற்பதாண்டுகளில் நம் பல்கலைக்கழகங்களில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் ஆராய்ச்சித் தாள்களே இதற்கு சாட்சி.

  தமிழில் இந்திய ஆட்சியர் தேர்வு எழுதக்கூடிய அளவுக்கு கொண்டு வந்திருக்கிறார்கள்.

  ஆட்சிமொழி மாதிரியான இன்னமும் சில கோரிக்கைகள் மிச்சமுண்டு. அவற்றுக்கான நடவடிக்கைகளும் நட்ந்து வருவதை அவ்வப்போது நாம் செய்தித்தாள்களில் வாசித்தறிய முடிகிறது.

  பதிலளிநீக்கு
 7. //இன்றைய தேதியிலும் தமிழ்வளர்ச்சி, தமிழ் முன்னேற்றம், தமிழர் வாழ்வாதாரம் போன்ற சொற்களைக் கேட்டாலே ஒரு கூட்டத்துக்கு வலிப்புநோய் கண்டுவிடுகிறது. திராவிடர்கள் தமிழ், தமிழர் நலனில் தனித்தன்மை கெடாமல் எதைச் செய்தாலும் அக்கூட்டம் எதிர்த்து வந்திருப்பதே வரலாறு. செம்மொழி மாநாடு நடைபெறும் வேளையில் ஓநாய்கள் ஓரமாக ஓலமிட ஆரம்பித்திருக்கின்றன.//

  உண்மைதான் நண்பரே!

  அண்மையி்ல் சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள், நீதிமன்ற வளாகத்திற்கு எதிரே உள்ள அரங்கு ஒன்றில் தமிழர்களின் மனித உரிமைகள் குறித்த கருத்தரங்கு நடத்த முயற்சித்துள்ளனர்.

  முதலில் மறுக்கப்பட்டது. காவல்துறையின் அனுமதியுடன் வாருங்கள் என்றெல்லாம் காரணம் சொல்லப்பட்டது. (என்ன காரணம் என்று பத்திரிகையாளரான உங்களுக்கு புரிந்திருக்கும்)

  கடைசியில் ஒரு முக்கியமான நிபந்தனையுடன் அரங்கம் வழங்கப்பட்டது. அந்த நிபந்தனை: தமிழ் மொழி, இனம் குறித்து எதுவும் பேசக்கூடாது!

  பதிலளிநீக்கு
 8. நீங்கள் பணிபுரியும் பத்திரிகையில் மெயின்ஸ்ட்ரீம் செய்திகளை பிரசுரிப்பதில்லை என்பதால் அன்றாட செய்தியாளர் சந்திப்புகளை நீங்கள் பார்த்திருக்க வாய்ப்பில்லை என்று நினைக்கிறேன்.

  ஆங்கில ஊடகத்தின் செய்தியாளர்களுக்கு வழங்கப்படும் பணிச் சுதந்திரமோ, முக்கியத்துவமோ, ஊதியமோ, அங்கீகாரமோ தமிழ் செய்தியாளர்களுக்கு கிடைக்கிறதா என்பதை விசாரித்துப் பாருங்கள். (தமிழ் வியாபாரிகளின் செய்தியாளர்களில் சந்திப்புகளிலும் இதுதான் நிலை!)

  நான் தமிழனாக பிறந்து தமிழ்நாட்டில் வாழ்வதற்காக வருத்தப்பட்ட தருணங்கள் உண்டு, மேலே சொல்லப்பட்டதைப்போல சில தருணங்களில்.

  தமிழ் படித்தவர்களின் வாழ்வியலுக்கு உத்தரவாதம் அளிக்கும் சமூகச்சூழல் உருவா(க்)கும்வரை தமிழர்களின் நலனை புறக்கணித்துவிட்டு - தமிழை பாதுகாக்கப் போவதாக கூறுவதெல்லாம் ஏமாற்று வேலையே!

  பதிலளிநீக்கு
 9. Amaichar enbadhu samskritha solle. Amathyar enbadhin maruvu. Samskrithamum thamizhum ondrai ondru azhikum endral, anaadhi kalamaga iru mozhigalum kalandhu uravadiyadhu enganam?
  Brahmanargal thamizh virodhi endral, U.ve. saaminatha iyer vida thamizh thondariyavar yaar endru koorungal?
  Tamizhai kappadhaga solluvadhe oru mollamari thanam. Amirtham pondra mozhiku azhivedhu? Aanal tamazhai vaithu vayiru valarkum dravida thalaivargalai nambinal ippadiye mutaalaga thiriya vendiyadhu dhan.

  En nambarin thatha vaigaiyil vellam vnadha pozhudhu, olai chuvadigaludan karai oram irukum veetilirundhu veliyeramal, thamizh ennai kaakum endru irundhar. Thamizh kathadhu. Adhu patru. Thamaizhai kappadhaga solli kolvadhu ayogya thanam.

  பதிலளிநீக்கு
 10. "ஒரு கூட்டத்துக்கு வலிப்புநோய் கண்டுவிடுகிறது", "ஓநாய்கள் ஓலமிட ஆரம்பித்திருக்கின்றன", "இந்தக் கூட்டம் எதையெல்லாம் எதிர்க்கிறதோ, அதுவெல்லாம் தமிழனுக்கு நன்மை செய்யும் விடயங்கள் என்று அறிந்துக் கொள்ளலாம்."

  அப்ப உருப்டாப்லதான்.

  ARR சொல்வதுபோல், you can choose the path of love, or choose hate. வலிப்பு வரும் கூட்டத்தினரை வசைபாடாமல் அரவணைத்துச் செல்ல பழகுங்கள். அதுவே, தமிழுக்கும், தமிழருக்கும் முன்னேற்றப்பாதையாக அமையும்.

  பதிலளிநீக்கு
 11. dont mix benefit for people and language.what dravidism did for tamil people is different from what tamil language did for the people.

  dravidism placed tamilians in a supreme positions than any other movement. but most of the guys who preach people to learn tamil/tamil only, prefer convent education for their own kids.feeling of supremacy or empty boasting can be created by speaking tamil and tamil only. people in media or tamil based media are one benefited undoubtedly but the common man who believed his kids will excel in tamil met a failure.

  again i am telling tamil people benefitted from dravidism. but not the language did for the masses. even if periyar preached in hindi, he could have made the same social change.

  பதிலளிநீக்கு
 12. லக்கி,
  // கடந்த நாற்பதாண்டுகளில் நம் பல்கலைக்கழகங்களில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் ஆராய்ச்சித் தாள்களே இதற்கு சாட்சி.//
  இப்படி பொத்தம்பொதுவாக கதைவிடுவதட்கு பதிலாக ஒரு பத்து முக்கியமான ஆராய்ச்சிகளையும் அதன் முடிவுகளையும் பட்டியலிட்டிருந்தால் நம்பும்படியாக இருக்கும்.
  உங்கள் பதிவு வாய்பேச்சில் வீரரடிக்கு சிறந்த எடுத்துகாட்டு.

  ஈஸ்வரன்

  பதிலளிநீக்கு
 13. ஈஸ்வரன்!

  புதியதாக கலைச்சொற்களை உருவாக்கி ஐந்து தொகுதிகள் வெளிவந்திருக்கின்றன. தமிழ் மொழி குறித்த ஆராய்ச்சிக் கட்டுரைகள் பலவும் தொகுக்கப்பட்டு தஞ்சை பல்கலைக்கழகத்தால் அச்சிடப்பட்டு விற்பனைக்கும் வைக்கப்பட்டிருக்கிறது.

  நீங்கள் ஒத்துக்கொண்டாலும் சரி. ஒப்புக்கொள்ளா விட்டாலும் சரி. இன்றைய தேதியில் திரள்மக்களால் இங்கே ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரே இயக்கம் திராவிட இயக்கம் மட்டுமே. ஏன் மக்கள் தொடர்ந்து திராவிட இயக்கங்களையே தெரிவு செய்கிறார்கள் என்று ஆராயுங்கள்.

  பதிலளிநீக்கு
 14. திரு. சுந்தரராஜன்!

  நீங்கள் சொல்லும் நிலையை உணர்ந்திருக்கிறேன். திராவிட இயக்கங்களை நிராகரிக்க போதுமான காரணம் அதுமட்டுமே அல்ல.

  திராவிட இயக்கங்கள் அதிகாரத்துக்கு வந்த சூழலிலேயே இவ்வளவு மோசமான நிலை என்றால், முன்பிருந்த நிலை தொடர்ந்திருந்தால் என்னவாகியிருக்கும் என்பதை நினைத்துப் பார்க்கவும்.

  பதிலளிநீக்கு
 15. நல்ல பதிவு
  யுவகிருஷ்ணா
  தொடருங்கள் ....
  வாழ்த்துக்கள் .

  பதிலளிநீக்கு
 16. //தேவையில்லாத வேலை.(ஆட்டோ-தானி,சைக்கிள்-இரு உருளை உந்து,காப்பி-கொட்டைவடிநீர்)

  அது அவர் டீவியில் மட்டும்தான் பயன்படுகிறது.கடவுளே வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது.
  //

  அவரது தொலைக்காட்சியிலும், ரவிசங்கரின் எழுத்திலும், யுவகிருஷ்னாவின் பதிவிலும் பயன் படுகிறதே சார்

  :) :)

  பதிலளிநீக்கு
 17. திராவிட இயக்கங்களின் ஆட்சியில் தான் கோவிலில் தமிழுக்கு உரிமை கொடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையில் 'தமிழிலும் அர்சனை செய்யப்படும்' என்ற அளவுக்காவது வந்தது

  பதிலளிநீக்கு
 18. ”திராவிட இயக்கங்களை நான் ஏன் நிராகரிக்கிறேன்” என்று ஜெயமோகன் எழுதியக் கட்டுரையைப் படித்து வெகுண்டெழுந்திருக்கிறீர்கள். அதை நேரடியாகவே சொல்லியிருக்கலாம். என்னளவில், திராவிட இயக்கங்கள் இல்லையென்றால், தமிழ் எப்போதோ செத்துப்போயிருக்கும். காங்கிரஸோ, பி.ஜே.பி.யோ தமிழகத்தை ஆண்டால், ஹிந்தி கட்டாயமொழி ஆக்கப்படுவதுடன், தமிழின் முக்கியத்துவம் குறைக்கப்படக்கூடும்.

  பதிலளிநீக்கு
 19. பாராட்டுக்கள்.. திராவிட இயக்க்கங்களே தமிழை வளர்த்தன . நானும் பல நேரங்களில் நினைத்து பார்ப்ப துண்டு- அண்ணாவும் பிறரும் இல்லையேல் நம் மொழியும் மாநிலமும் எப்படி இருந்திருக்கும் என்று..

  பதிலளிநீக்கு
 20. '''''ஒரு கூட்டத்துக்கு வலிப்புநோய் கண்டுவிடுகிறது", "ஓநாய்கள் ஓலமிட ஆரம்பித்திருக்கின்றன", "இந்தக் கூட்டம் எதையெல்லாம் எதிர்க்கிறதோ, அதுவெல்லாம் தமிழனுக்கு நன்மை செய்யும் விடயங்கள் என்று அறிந்துக் கொள்ளலாம்'''''''


  உண்மைதான் நண்பரே!

  S.Ravi
  Kuwait

  பதிலளிநீக்கு
 21. தமிழ் மொழியின் வளர்ச்சியில் திரவாவிட இயக்த்தின் பங்கு மறுக்க முடியாதது தான்.

  உலகமயமாக்கலுக்குப்பிறகும் தமிழ்,பேச்சுத்தமிழ் அழியாதிருக்க இப்போதைய திராவிட இயக்கம் பெரிதாக ஒன்றும் செய்யவில்லை (தற்போது)

  பதிலளிநீக்கு
 22. ஷான்!

  திமுக ஆட்சி அமையும்போதெல்லாம் தமிழுக்கு முக்கியத்துவம் தரப்படுவது பெரிய குறையாகவே பார்ப்பனீயப் பத்திரிகைகளால் எழுதப்படுவது வழக்கம்.

  பள்ளிக் கல்வியில் தொடங்கி, கல்லூரியில் பொறியியல் பாடங்களை தமிழில் நடத்துவது வரை தமிழ்ப்புரட்சியை திமுக நடத்திக் கொண்டுதான் இருக்கிறது.

  கடைப்பலகைகளின் பெயர்களை கூட தமிழில் எழுதவேண்டும் என்று திமுக ஆட்சிக்கு வந்துதான் வற்புறுத்த வேண்டியிருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

  பதிலளிநீக்கு
 23. ஆழ்வார்களும் நாயன்மார்களும் வளர்த்த தமிழைவிட திராவிட இயக்கம் ஒன்னும் பண்ணலை

  பதிலளிநீக்கு
 24. ஊடுருவல்களையும் சமாளித்து நின்று இன்றும் வாழும் ஒரே மொழி தமிழ்மொழி.

  தெலுங்கு,மலையாளம் ,கன்னடம் போன்ற நிறைய மொழிகள் இதே நிலை தானே .அது என்ன ஒரே மொழி ?

  பதிலளிநீக்கு
 25. அந்த கூட்டத்திற்கு தமிழ் என்றாலே எப்போதுமே வேப்பங்காய் தான் ....

  1. ஆலய வழிபாட்டில் தமிழ் என்றாலும் அந்த ஜாதி கும்பலிடமிருந்துதான் எதிர்ப்பு வரும்
  2. அலுவலக மொழியாக தமிழ் என்றாலும் அந்த ஜாதி கும்பலிடமிருந்துதான் எதிர்ப்பு வரும்
  3. நீதிமன்றங்களில் வழக்காடு மொழியாக தமிழ் என்றாலும் அந்த ஜாதி கும்பலிடமிருந்துதான் எதிர்ப்பு வரும்
  4. சங்கீத மேடைகளில் தமிழுக்குத்தான் முதல் இடம் என்றாலும் அந்த ஜாதி கும்பலிடமிருந்துதான் எதிர்ப்பு வரும்
  5. பள்ளிகளில் தமிழ் ஒரு கட்டாய பாடம் என்றாலும் அந்த ஜாதி கும்பலிடமிருந்துதான் எதிர்ப்பு வரும்
  6. தமிழ்நாட்டு கடை தெருவில் தமிழில் பெயர்பலகை வைக்கவேண்டும் என்றாலும் ஏளனம் கலந்த எதிர்ப்பு
  7. தமிழுக்கு செம்மொழி அங்கீகாரம் என்றதும் வயிறு எரியும்...
  8. தமிழ்மொழி வளர்சிக்கு உருவகபட்ட செம்மொழி ஆராய்ச்சி நூலகத்தை மூட செய்யும்

  இப்போது அந்த கும்பலின் பார்வை சென்ற திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட முத்தமிழ் மன்றத்தை நோக்கி திரும்பியுள்ளது...திருவாடுதுறை ராஜரத்தினம் பெயரில் அமையபெற்ற அந்த புதிய அரங்கத்தை (அடையாறு பாலம் அருகில்) இடிக்க திட்டம் போல...

  பதிலளிநீக்கு
 26. //என்னளவில், திராவிட இயக்கங்கள் இல்லையென்றால், தமிழ் எப்போதோ செத்துப்போயிருக்கும்.//

  +1

  பதிலளிநீக்கு
 27. காலத்துக்கு ஏற்ற கட்டுரை, படித்து முடித்தவுடன் இனம் புரியாத இறுக்கமும் நமது அடுத்த தலைமுறையை மொழிப்பற்றோடு எப்படி உருவாக்க போகிறோமோ என்ற சிந்தனை தான் மேலோங்குகிறது

  பதிலளிநீக்கு
 28. ஸ்ஸ்ஸ் அப்பா கிருஷ்ணா, நான் நீங்கள் தூற்றும் "பார்பனிய" சமுதாயத்தை சேர்த்தவன். பிறந்தது ரோஹிணி நட்சத்திரம். இயல்பாகவே கிருஷ்ணன் என்று பெயர் வைப்பார்கள். ஆனால் எனக்கு கண்ணன் என்று பெயர் சூட்டினார்கள். என் தந்தையிடம் (உரிய வயது வந்தவுடன்) கேட்டேன், "ஏன் கிருஷ்ணா என்று வைக்கவில்லை என்று!" அவர் சொன்னார் "கண்ணன் தான் கரெக்டா இருந்தது!" என்று. ஆனால் உங்களுடைய புனை பெயரே "யுவ" "கிருஷ்ணா".

  பதிலளிநீக்கு
 29. தமிழால் திராவிடம் வளர்ந்ததா.. இல்லை.. திராவிடத்தால் தமிழ் வளர்ந்ததா??
  இரண்டுமே இல்லை.. இங்கே திராவிடம் என்ற ஒன்றே அரசியலுக்காக மட்டும் தான் தேவை படுகிறது.. மற்றபடி திராவிட கோட்பாடுகள் தெரிந்தவர்கள்.. அதன் படி நடப்பவர்கள் இந்த தலைமுறையில் நிறைய பேர் இல்லை.. இது தான் உண்மை..


  கல் தோன்றி மண் தோன்ற காலத்தே முன் தோன்றிய ஒரு மொழியை எப்படி 50 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய திராவிடம் வளத்திருக்க முடியும்.. அதற்கு முன்னால் யார் வளர்த்தார்கள்... எப்படி அவ்வளவு ஆண்டுகள் நிலைத்து இருந்தது.. அப்படி இந்த 50 ஆண்டுகளில் என்ன பெரிய வளர்ச்சி அடைந்து விட்டது..திராவிடம் அந்த வளர்ச்சிக்கு உரிமை கொண்டாடும் வகையில்..

  பதிலளிநீக்கு
 30. "தமிழ்ப்புரட்சியை திமுக நடத்திக் கொண்டுதான் இருக்கிறது. "

  நிச்சயமாக . . . .

  Red Giant . . .
  Cloud nine . . .
  Sun pictures ...
  Funnny Videos . . .(Chittiram TV)
  Spectrum . . .

  போன்ற அழகிய tamil கலைசொற்களை அறிமுகபடுத்திய புண்ணியம்
  அவர்களுக்கே . . .

  நன்றி

  பதிலளிநீக்கு
 31. யுவா,

  தமிழர், திராவிடம் என்ற சொற்களை கேட்டால் அவாளுக்கும், அவர்களின் அடிமைகளுக்கும் வரும் குளிர் ஜுரத்திற்கு சாட்சியே இங்கு நாம் காணும் பிதற்றல்கள்! அவாளே மேலானவர்கள் என்ற நினைப்பிலிருக்கும் அடிமைகள் தான் பார்ப்பனர்களைவிட அதிகமாக பிதற்றுகிறார்கள். இவர்கள் இல்லாவிட்டால் தினமலர் மாதிரி கழிசடை எல்லாம் இத்தனை காலம் தமிழ்நாட்டில், தமிழர்களையும் தமிழுணர்வையும் கேவலப்படுத்திக்கொண்டு காலம் தள்ள முடியுமா? ஜெயலலிதா சாராய வியாபாரியின் சொகுசு விமானத்திலே பறப்பதைப்பற்றி இவர்கள் கேட்க மாட்டார்கள், ஆனால் கலைஞர் சக்கர நாற்காலி வாங்கினால் கூட "கதை வசனம் எழுதியா வாங்கினார்?" என வம்பு வளர்ப்பார்கள்.

  இந்த கூட்டத்தை வேரறுக்கும் வரை நமக்கு உறக்கம் என்பதே கூடாது!

  பதிலளிநீக்கு
 32. இதில் கவனிக்கத்தக்க இன்னொரு விஷயம்.. இதுவரை நடந்த எந்த ஒரு திராவிட இயக்கத்தின் ஆட்சியிலும் தமிழ் கட்டாய கல்வி ஆக்கப்படவில்லை. அது மட்டும் நடந்திருந்தால் இவர்கள் வளர்க்காமலேயே தமிழ் வளரும். இவர்கள் தமிழ், தமிழன் என்று கூவுவதெல்லாம் வெறும் ஓட்டுவங்கி அரசியலுக்கு மட்டும்தான்.

  பதிலளிநீக்கு
 33. மகேந்திரன் சார் சொன்னதி போல இன்று உள்ளவர்கள் ஆற்றியதை விட அடைந்தது தான் அதிகம்.

  பதிலளிநீக்கு
 34. sam


  // கடைப்பலகைகளின் பெயர்களை கூட தமிழில் எழுதவேண்டும் என்று திமுக ஆட்சிக்கு வந்துதான் வற்புறுத்த வேண்டியிருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்//

  லக்கி, திமுக நேத்துதான் ஆட்சிக்கு வந்த மாதிரி பேசறீங்க. ராமடோச்ச்க்கு பயந்து தான் இதை செய்தார்கள். மேலும் நெடுந்தோர் தொடர் , ஊடகம் போன்ற நல்ல வார்த்தைகள் பயன்பாட்டுக்கு வந்தது மக்கள் டிவி வந்த பின் தான். ஆனாலும் நல்ல கூவூறீங்க

  பதிலளிநீக்கு
 35. திராவிட இயக்கங்கள் மிகப் பெரிய மாற்றங்களுக்குக் காரணமென்பதை மறுப்பதற்கில்லை...ஆனால் இன்று தலைவர்களின் வீட்டிற்குள்கூட தமிழ் முதன்மொழியாக இருக்கிறதா

  பதிலளிநீக்கு
 36. Yuva,
  Really did DMK fight hard for tamil?
  When is that? Ayooyooo sollave illae??

  பதிலளிநீக்கு
 37. உலகின் மூத்தமொழி. கல்தோன்றி, மண்தோன்றா காலத்து மனிதர்கள் பேசி மகிழ்ந்த மொழி ....... ................. .................... ................... . அப்பிடீனா .... உலகின் அனைத்து மக்களும் தமிழரின் வழித்தோன்றல்களே ..... அனைத்து மொழியும் தமிழில் தொடங்கிய உடன்பிறப்புக்கள் .... அப்புறம் ஏன் .... உள் மொழி, வெளி மொழி , எம்ஜி ஆர் மலையாளத்தான், விஜயகாந்து தெலுங்கன் என்றெல்லாம் அரசியல் செய்யுறிங்க ???? யாதும் ஊரே யாவரும் கேளிர்ன்னு ஏத்துக்கிட்டுப் போவ வேண்டியதுதான ? நமக்கு வசதியா வாதப் பெருமை வேணுமின்னா கல் தோன்றி மண் தோன்றான்னு ஆரம்பிக்க வேண்டியது .... அப்புறம் மாற்றான், வெளியான்னு பெணாத்த வேண்டியது .... எது உண்மை ??

  பதிலளிநீக்கு
 38. உ.வெ. சாமிநாதன்ற பூணூல் போட்ட பாப்பான் இல்லேன்னா ... இன்னைக்கு நீங்க திராவிடம், திராவிடம்னு மார் தட்ட சிலம்பும் கெடையாது, மணி மேகலையும் கெடையாது .... ஊர் ஊராப் போயி தமிழ்ச்சுவடிகளைக் காப்பாத்தியவன் பாப்பான் .... திராவிட வியாபாரிகள் ஒரு பாப்பான் காப்பாற்றிய சங்க இலக்கியங்களை வைத்துப் பிழைப்பு நடத்தினார்கள் என்பது அழிக்க முடியாத உண்மை .... தமிழுக்கு உயிர் கொடுத்தவன் பார்ப்பான் .... சும்மா என்னவேணாலும் சொல்லக்கூடாது .... பார்ப்பனரல்லாதார் பல பேர வரிசைல நிக்க வெச்சு எங்க தமிழின் சிறப்பு ழகரத்த ஒழுங்கா சொல்லச்சொல்லுங்க பாப்போம்?? வாளப்பள கேசுங்க ....

  பதிலளிநீக்கு
 39. ஆக சிறந்த பதிவு, உங்கள் சினம் (கோபம்) புரிகிறது

  சில வார்த்தைகளை சம்ஸ்கிருத வார்த்தைகள் கொண்டு தான்(சினம் - கோபம் போல ) சிலருக்கு அதுவும் தமிழர்களுக்கு புரியவைப்பது கொடுமையிலும் கொடுமை

  சிலர் கூறுவது போல இம்மாதிரியான விடயங்களில் அன்பு கொண்டால், தின மலம் போல, தி இந்து போல நம்மை, நம் மண்ணிலிருந்தே, நம் மொழியிலேயே நம்மை இகழ்வார்கள்

  தொடர்க உங்கள் தமிழ் தொண்டு, வாழ்க உங்கள் தமிழ் பற்று

  வாழ்க உம்மால் தமிழ்மொழி!

  பதிலளிநீக்கு
 40. நீர் சொல்வது எல்லாம் பழைய தி.மு.க (2000 முன்) செய்தது.

  ஆனால் புதிய தி.மு.க (2000 பின்) செய்தது எல்லாம் தமிழ் இன அழிப்பு தான். இதை நீர் ஒத்துகொள்ள வேண்டும்.

  இப்பொது புதிய தி.மு.காவுக்கு தேவை ஒரு மாற்று தலைமை.

  பதிலளிநீக்கு
 41. இவ்வளவு பேசும் நீங்கள் உங்களுக்கு ஒரு பெயர் தேவைப்பட்டபோது ஒரு வடமொழி பெயரைத்தான் " yuvakrishnaa "-
  வைத்திருக்கிறீர்கள் !!!!!!!!!!!!!!!!!!! ஏன் ஒரு நல்ல தமிழ்ப்பெயர் தோன்றவில்லை?

  பதிலளிநீக்கு
 42. நல்ல பதிவு லக்கி. தமிழ் வளர்ச்சியின் திராவிட இயக்கங்களின் பங்கை குறைத்து மதிப்பிட
  முயலும் எல்லா ஆர்யா சக்திகளும் படிக்க வேண்டிய பதிவு.

  கருணாநிதிதான் தமிழகத்திலிருந்து தமிழை விரட்டினார் என்று சாரு எழுதி இருக்கின்றாரே
  இதற்கு உங்கள் பதில் என்ன?

  பதிலளிநீக்கு
 43. நல்ல பதிவு லக்கி. தமிழ் வளர்ச்சியின் திராவிட இயக்கங்களின் பங்கை குறைத்து மதிப்பிட
  முயலும் எல்லா ஆர்யா சக்திகளும் படிக்க வேண்டிய பதிவு.

  கருணாநிதிதான் தமிழகத்திலிருந்து தமிழை விரட்டினார் என்று சாரு எழுதி இருக்கின்றாரே
  இதற்கு உங்கள் பதில் என்ன?

  பதிலளிநீக்கு
 44. திராவிட இயக்கமாவது மண்ணாங்கட்டியாவது. எல்லாம் ஏமாற்று வேலை. சுயலாபத்துக்காகக் கூடிய கூட்டம் அது. பார்ப்பான் தமிழைக் கெடுத்தான். திராவிட இயக்கம் ’தமிழ் தமிழ்’ என்று சொல்லி ஏமாற்றி, தமிழின் வளர்ச்சியை நீர்த்துப் போகச் செய்து விட்டது. தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு இந்த திராவிட இயக்கம் என்ன செய்தது?

  ஏதாவது ஒரு தமிழ் நூலை உலக அளவுக்குக் கொண்டு சென்றிருக்கிறார்கள். குறுகிய வட்டத்துக்குள் அமர்ந்து தங்களைத் தாங்களே குறுக்கிக் கொள்ளும் எண்ணம் கொண்ட இக்கூட்டத்தினரால் இரண்டு தலைமுறையை தமிழைத் தவிர வேறு ஏதும் கற்றுக் கொள்ளாமல் நாசமாய்ப் போய் விட்டது.

  அறிஞர் அண்ணா மட்டும் இருந்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது.

  திராவிடர்கள், ஆரியர்கள் இரண்டு பேருமே அயோக்யர்கள். தமிழை தங்கள் சுயலாபத்துக்குப் பயன்படுத்திக் கொண்டவர்கள்.

  உண்மைத்தமிழர்கள் தான் தமிழின் வளர்ச்சிக்கு அன்று முதல் இன்று வரை காரணமாக அமைந்துள்ளனர்.

  பதிலளிநீக்கு
 45. தமிழுக்கு பார்பனிய சமுதாயத்தை சேர்ந்த உ.வே.சாமிநாத ஐயரால் முடிந்தது இவ்வுளவு..

  http://uvesalibrary.org/publication.htm

  பதிலளிநீக்கு
 46. //தேவையில்லாத வேலை.(ஆட்டோ-தானி,சைக்கிள்-இரு உருளை உந்து,காப்பி-கொட்டைவடிநீர்)

  அது அவர் டீவியில் மட்டும்தான் பயன்படுகிறது.கடவுளே வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது.
  //

  அப்போ பீருக்கு தமிழ் தொலைக்காட்சியில் என்ன சொல்கிறார்கள்?

  பதிலளிநீக்கு
 47. அருமையானக் கட்டுரை ...உங்களிடமிருந்து பல அரசியல் கட்டுரைகளை எதிர்பார்கிறேன் - அருண் சொக்கன்

  பதிலளிநீக்கு
 48. தமிழைப் பயன் படுத்துவது வட மொழிச் சொற்கள் கலப்பு குறைந்து கூடிய வரை
  தூய தமிழ்ச் சொற்களைப் பயன் படுத்துவது அதிகம் ஆனதற்கு ஒரு காரணம்
  திராவிட முன்னேற்ற கழகம் என்பது முற்றிலும் உண்மை.
  திராவிடக் கழகம் தமிழை இகழ்ந்தோ ( 'தமிழ் காட்டுமிராண்டி மொழி": பெரியார்;
  இவ்வாறு "அவாள்" கூட சொன்னதில்லை), அல்லது
  தமிழை ஒரு பொருட்டாக கருதாமலோ இருந்திருக்கிறது.

  ஆனால் ஒரு விஷயம் பற்றி பின்னூட்டம் வரவில்லை : தமிழை பயிற்று மொழியாக
  உள்ள பள்ளிகளில் கற்பது குறைந்து , குறிப்பாக நகர மற்றும் மாநகர மாணவர் ஆங்கிலத்தை பயிற்று மொழியாக
  கிண்டர் கார்டனில் இருந்து துவங்கி விடுவதால், இந்த தலைமுறைக்கு தமிழ் பற்று
  என்பதே என்ன என்று தெரியாமல் போனதற்கு இரு திராவிடக் கட்சிகளின்
  கல்வி/மொழிக் கொள்கையே என்பது என் குற்றச்சாட்டு.

  பதிலளிநீக்கு
 49. Boss,

  பேச்சு வாக்குல நக்கீரனையும் திராவிட பத்திரிக்கை நு சொல்லிடீங்களே

  பதிலளிநீக்கு
 50. //கடைப்பலகைகளின் பெயர்களை கூட தமிழில் எழுதவேண்டும் என்று திமுக ஆட்சிக்கு வந்துதான் வற்புறுத்த வேண்டியிருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.//

  VA QUARTER CUTTING!

  பதிலளிநீக்கு
 51. @யுவகிருஷ்ணா : பழய பதிலை ஒட்டி,

  கடைகளில் பெயர் பலகைகளில் எல்லாம் வலியுறுத்துவது சரி தான். ஆனால் பொறியியலை தமிழில் படிப்பது முட்டாள் தனம்.

  உதாரணமாக நாளை ஒரு தொழில் நுட்பம் (JAva போல Pearl போல ஒரு கணினி மொழி என வைத்துக்கொள்ளுங்கள்)

  அதை தமிழில் படிப்பதை விட பேசாமல் ஒரு சைக்கிள் கடையில் வேலைக்கு சேர்ந்து விடலாம்.

  பதிலளிநீக்கு
 52. @yuvakrishna,

  //பள்ளிக் கல்வியில் தொடங்கி, கல்லூரியில் பொறியியல் பாடங்களை தமிழில் நடத்துவது வரை தமிழ்ப்புரட்சியை திமுக நடத்திக் கொண்டுதான் இருக்கிறது.//
  Sema comedy. What kind of revolution did Dravidian parties create in education.
  Okay tell me any ground breaking research by those who studied engg in "Tamil medium". Oru Iyakatha thooki pidikarthu oru thondana seiyarthu sagajam but the above statements is funny and person like you giving such farcical support is laughable. Tell me a philosophy that was created by "Dravida iyakkam", can it withstand to other world philosophies. This shows people can be easily drawn towards "populist ideas".

  பதிலளிநீக்கு
 53. அருமையான பதிவு. மேலும் இந்த நேரத்தில், அதாவது புதுப்புது இளைஞர்கள் இணையத்திற்குள் நுழைந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இந்தப் பதிவு மிக அவசியமான ஒன்று. திராவிடம் செய்த மிகப்பெரிய தவறு தங்கள் சாதனைகளை சரியாக விளம்பரம் செய்யாமல் விட்டது தான். தேவையிருந்த தலைமுறை பயன்பெற்றது... அடுத்து வந்த தலைமுறைக்கு அதைக் கொண்டு வந்தது யார் என்ற வராலாறு தானாக தெரியவேண்டும் என்று தேமே இருந்து விட்டது திராவிடம். சொல்ல வேண்டும், திரும்பத்திரும்ப சொல்ல வேண்டும், நன்றி லக்கி.

  பதிலளிநீக்கு