January 28, 2010

RSS FEED!

நம் புண்ணியபூமியாம் பாரதத்தில் தோன்றியிருக்கும் இந்து மதத்தின் பெருமைகளை உலகுக்கு பறைஸாற்ற தேஸ விடுதலைக்குப் போராடிய தேஸபக்தர்களால் அமைக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ். அமைப்பினை வகுப்புவாத அமைப்பு என்று சில திம்மிக்கள் அவதூறு பரப்பிய நிலையில் கேரளாவைச் சேர்ந்த ஸ்ரீமான் மருத்துவர் விண்ஸெண்டு என்பவர் ஆர்.எஸ்.எஸ். ஒரு வகுப்புவாத இயக்கம் அல்ல என்று கூறி விஷச்செடிகளின் வேருக்கு வெந்நீரை ஊற்றியிருக்கிறார். அவர் ஆய்வில் விடுபட்ட சில விஷயங்களை ஆய்வு செய்து நாமும் சுட்டிக் காட்ட கடமைப்பட்டிருக்கிறோம்.

- காந்திஜியை கொன்றவர் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த மாற்று மதத்தவர். காந்திஜியை அவ்வளவு காலமாக உயிர்போல காத்துவந்த அவரது மெய்க்காவலரான ஸ்ரீமான் கோட்சே அவர்கள் மீது அநியாயமாக திம்மிக்கள் பழியைப் போட்டு தூக்கு மேடைக்கு அனுப்பி விட்டார்கள்.

- 1992ஆம் ஆண்டு திம்மிக்களே பாபர் மஸூதியை இடித்து விட்டு தேஸபக்தி மற்றும் மதநல்லிணக்கத்தைப் பேணும் இயக்கமான ஆர்.எஸ்.எஸ். மீது பழிபோட்டு விட்டார்கள்.

- பாபர் மஸூதி இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து சுமார் 3,500 மக்கள் தற்கொலை செய்துகொண்டார்கள். வன்முறை, மதக்கலவரம் எதுவும் நம் நாட்டில் நடக்காமல் பதட்டமான அந்தச் சூழ்நிலையில் ஆர்.எஸ்.எஸ்.ஸின் அகிம்ஸை தொண்டர்கள் அமைதி காத்தார்கள்.

- ஒரிஸ்ஸாவில் பாதிரியார் ஒருவர் சென்ற ஜீப் தீவிபத்தில் பற்றி எரிந்தபோது அந்த தீயை அணைக்கத் தான் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் அருகே சென்றார்கள். தங்கள் உயிரைப் பணயம் வைத்து ஆர்.எஸ்.எஸ்.சின் தொண்டர்கள் முயற்சி செய்தும் தீ அணையாமல் பாதிரியாரும், அவரது குழந்தைகளும் அநியாயமாக பலியானார்கள்.

- குஜராத்தில் இஸ்லாமிய சமுதாய மக்கள் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டு கலவரம் ஏற்படுத்திய போது ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் தேசாபிமானி ஸ்ரீமான் நரேந்திர மோடி தலைமையில் அவர்களை ஸமாதானம் செய்து அமைதியாக வாழ வழி ஏற்படுத்திக் கொடுத்தார்கள்.

- தமிழகத்தில் கோயம்பத்தூரில் இஸ்லாமிய ஸகோதரர்கள் ஏதோ கோழித்தகராறு காரணமாக ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டபோது ஆர்.எஸ்.எஸ்.ஸின் அமைதிப் படையினர் தலையிட்டு கோவையைக் காத்தார்கள்.

- பிள்ளையார் ஸதுர்த்தி போன்ற விழா நாட்களில் அமைதியான முறையில் தேச நன்மைக்காக, மதநல்லிணக்கத்துக்காக அமைதி பாதயாத்திரை நடத்தி தியாகம் செய்பவர்கள் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள்.

- இவ்வாறாக மும்பை, கோவை, ஒரிஸ்ஸா, அயோத்தி, டெல்லி, குஜராத் என்று பாரத தேஸமெங்கும் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களால் அமைதிப்பூங்காவாக விளங்குகிறது.

18 comments:

 1. லோக க்ஷேமத்தையும் பாரத தேஸத்தின் க்ஷேமத்தையும், ஷாந்தியையும் மட்டுமே நித்யஸ்மரனையாக கொண்டு, ஹிந்து-முஸல்மான் ஒற்றுமைக்காக தன் ஜீவனையே த்யாகம் செய்ய ஸதா ஸர்வகாலமும் தயாராய் இருக்கும் அத்யோன்னத ஜீவிகளான ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவகர்கள் பற்றிய அதி-உண்மையான அற்புதமான பதிவு...
  இதேப்போல பாரத தேஸத்தின் ஸம்ஸ்க்ருதியையும் ஸப்யதையையும் காக்கும் காவலர்களான ஸ்ரீ ராம சேனை பற்றியும் ஒரு உண்மையான வியாசம் எழுத கோருகிறேன்.

  அநேக நமஸ்காரங்கள்.

  ரமேஷ், பெங்களூரு.

  ReplyDelete
 2. 1.பறைஸாற்ற தேஸ

  2.ஸ்ரீமான் கோட்சே

  3.தேசாபிமானி

  Super appu...

  ReplyDelete
 3. கற்பவன்5:01 PM, January 28, 2010

  களத்தில் இறங்கி நாசவேலைகளில் ஈடுபடுபவர்களைக்காட்டிலும், அவர்களை ஊக்குவிக்கும் வண்ணம் பேசுகின்ற அல்லது எழுதுகின்ற இத்தகு நபர்களைத்தான் முதலில் காயடித்துப்போட வேண்டும்.

  ReplyDelete
 4. இலைக்காரன் பதிவு இருப்பது மறந்து விட்டதா?

  - யாரோ ஒருவன்

  ReplyDelete
 5. நீவிர் ந‌ம‌து இய‌க்க‌த்தின் அருமை பெருமைக‌ளை இவ்வுல‌கிற்கு ப‌றைசாட்டிய‌ப‌டியால்
  த‌ங்க‌ளது இந்த‌ ப‌திவிற்கு ஆட்டோ மூல‌ம் பின்னுட்ட‌ம் வ‌ரும் என‌ தெரிவித்து கொள்ளுகிறோம்.

  Boss ithu mathiri reply lam varum .. asanthurathenga.. summa poothu vilayadunga

  ReplyDelete
 6. 45 users online 1608312

  Up ^ Up ^


  Come on Lucky

  ReplyDelete
 7. உன்னையெல்லாம் அந்த நங்கநல்லுர் சாமி தாண்டாப்பா காப்பத்தனும்.
  சேமமா இருந்துக்கோ படவா.

  ReplyDelete
 8. அநேக நமஸ்காரங்கள்...
  அதே...அதே.

  ReplyDelete
 9. Hello boss what happend to you? i was praising you in my friends circle because of your different variety of post. now you are praising this RSS. The whole India knew what happend during Babri masjid incident and Gandhiji assasination case. Do you think we are stupid? Please write something useful else you will no more after a year. i am very to say this. usually i wont write comment but you made me to write. thank youu.

  ReplyDelete
 10. ஹாஹாஹா!

  படித்தவுடன் உண்மையில் இப்படி தான் சிரித்தேன்!

  ReplyDelete
 11. திம்மிக்கள்? யார் அவர்கள்?

  ReplyDelete
 12. //வால்பையன் said...
  ஹாஹாஹா!

  படித்தவுடன் உண்மையில் இப்படி தான் சிரித்தேன்!//

  நானும் இப்படித் தாங்க சிரிச்சேன்.

  ReplyDelete
 13. 15ஆம் நூற்றாண்டில் இந்து மன்னர்கள் பிற்காலத்தில்
  மாற்று மதத்தவர்கள் மீது பிரச்சனைகள் வர வேண்டும்
  என்று அயோத்தியில் இருந்த கோயிலை இடித்து அந்த
  இடிபாடுகளுக்கிடையில் மசூதியைக் கட்டினர். 1992ல் அவகள் நினைத்தது நடந்தது.

  பழங்குடி இன மக்கள் தாங்கள் ஆபிராமிய மதத்தைச் சேர்-
  ந்தவர்கள் தான் என்று உணர்ந்த பாதிரி தன் குடும்பத்தி-
  னருடன் அவர்களுடன் பழகி தங்கள் உயிரை மாய்த்துக்
  கொண்டு சமுதாயப் பணியாற்றி பழியை மாற்று மதத்தவர் மீது
  போட்டார்.

  குஜராத் ரயிலில் சென்று கொண்டிருந்த கரசேவகர்கள்
  இஸ்லாமியர்கள் தங்களைச் சூழ்ந்துள்ளார்கள் என்பதை
  அறிந்து தங்களைத் தாங்களே தீ வைத்துக் கொண்டனர்.
  தீயை ரயில் பெட்டி முழுவதும் பரப்ப இங்கும் அங்கும்
  ஓடி, தங்களை மாய்த்துக் கொண்டு அதனைத் தொடர்ந்து
  ஏற்பட்ட கலவரங்களுக்கு காரணமாகி அவர்களின் நோக்க-
  ம் நிறைவேறியது.

  கோவையில் 100 ரூபாய் லஞ்சம் கேட்ட போலீஸ்காரர்
  செல்வராஜ் தான் குற்றம் செய்தவர். தட்டிக் "கொன்றவர்கள்" அல்ல என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

  இந்தியா முழுவதும் தங்கள் பகுதிகளை ஒரு தனி ராஜ்ஜியமாக கொண்டிருக்கும் மாற்று மதத்தவரை அமைதி இழக்கச் செய்யும் பிள்ளையார் சதுர்த்தி போன்ற விழாக்களை தடை செய்ய வேண்டும்.
  --------------------------------------------------------------
  ஹிம்.... இதெல்லாம் ஒரு பதிவு.
  இதுக்கு 14 பின்னூட்டங்கள் வேறு.
  அதிலும் 'லூசு' டாக்டர் வேறு "நல்ல பதிவு" என்கிறார்.

  இதற்கு முன்பு தமிழ்ப் பதிவர்கள் வெகுஜன மக்களிடமிருந்து
  விலகியே இருக்கிறார்கள் என்பது என்று நீங்கள் முன்பு கூறியது இப்பதிவிற்கும் பொருந்தும்.


  முதலில் தேசிய நீரோட்டத்தில் கலந்து என்ன நடக்கிறது
  என்பதை அறிந்து கொள்ளுங்கள் கிருஷ்ணகுமார்.

  ReplyDelete
 14. நீங்கள் இதை விட்டு விட்டு சினிமாவிற்கு கதை எழுதலாமே.. நல்ல கற்பனை உங்களுக்கு..
  வெறி நாய்க்குத்தான் பிடிக்கும் .. உங்களுக்கும் பிடித்திருக்கிறது.

  ReplyDelete
 15. கண்ணை மூடிக் கொண்டோ தூங்கிக் கொண்டோ சில பேர் இன்னமும் நீங்கள் சொல்லும் நக்கல் கலந்த உண்மையை உணர்ந்து கொள்ள விருப்பமில்லாமல் இருக்கிறார்கள். அச்சிலேற்றி விட்டால் எல்லோரும் பொய்யை உண்மையாக ஏற்றுக் கொண்டு விடுவார்கள் என்று உறுதியாக நம்புகிறார்கள்.

  எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே...

  ReplyDelete
 16. Lucky .... you are just another pseduo secularist.

  நீங்கள் காஸ்மீர் இந்துக்கள் பற்றி பேசலாமே

  ReplyDelete