8 ஜனவரி, 2010

புத்தகக் காட்சி புத்தகப் பட்டியல்!


பாராமார்த்த குருவும், அவருடைய மொன்னை சிஷ்யர்களும், பின்னே ஒரு குப்பைத் தொட்டியும்!


புத்தகக் காட்சிக்கு போய்வந்து வாங்கிய புத்தகங்களின் பட்டியலை பதிவிடாவிட்டால் வலைப்பதிவர் சமூகத்தில் இருந்து ‘இவனுக்கு யாரும் பின்னூட்டம் போடக்கூடாது' என்று தள்ளி வைத்து விடுவார்களோ என்ற அச்சம் இரண்டு மூன்று நாட்களாக தூங்கவிடாமல் அலைக்கழித்துக் கொண்டிருக்கிறது.

தோழர்கள் வெளியிட்டு வரும் பட்டியல்கள் அனுமார்வால் மாதிரி நீளமாகவும், அதே சமயம் ஞானாம்பிகை மெஸ் சாப்பாடு மாதிரி தரமாகவும் இருப்பது குறித்த மனவுளைச்சலால் மருத்துவம் பார்க்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறேன். காலச்சுவடில் வாங்கிய புத்தகங்கள், உயிர்மையில் வாங்கிய புத்தகங்கள், லெஃப்ட் வேர்ல்டில் வாங்கியவை என்று 'தர'ப்பட்டியல் இடாவிட்டால் சிரச்சேதம் செய்துவிடுவார்களோ என்றளவுக்கு பீதியில் உறைந்துப் போய் நிற்கிறேன். வலைப்பதிவு கலாச்சாரத்தின் நீட்சியாக ஆனந்த விகடனும் கூட வி.ஐ.பி.கள் வாங்கிய புத்தகங்களின் பட்டியலை போட்டிருக்கிறது (அதில் ஒரு வி.ஐ.பி புத்தகக் காட்சிக்கு போகக்கூட இல்லை என்பது வேறு விஷயம்)

சில மொக்கைப் பதிவர்களையே பெரும்பாலும் திரும்ப திரும்ப இந்த சீசனில் புத்தகக்காட்சியில் சந்திக்க முடிந்தது என்றாலும் கூட, அவர்கள் பதிவில் ஏற்றும் பட்டியலும் கூட ஜே.டி.க்ரூஸ், பி.ஏ.கிருஷ்ணன், ஜெயமோகன் என்று ஒருமாதிரியாக பெரிய ரேஞ்சிலேயே நிற்கிறது. வாங்கியதாக இவர்கள் பதிவிட்டிருக்கும் புத்தகங்களை ஒழுங்காக படித்தாலே போதும், பதிவுலகம் அடுத்தாண்டு உருப்பட்டு விடும் என்ற பார்வையற்ற நம்பிக்கை பிறக்கிறது.

நான் வெகுவாக விரும்பித் தேடிய அல்பேனிய புத்தகங்கள் நானூற்றி சொச்சம் ஸ்டால்களிலும் கிடைக்கவில்லை என்பதே என்னுடைய ஒரே வருத்தம். கிழக்குப் பதிப்பகம் ஸ்டாலில் லத்தீன் அமெரிக்க புத்தகங்கள் வந்திருக்கிறதா என்று கேட்டேன். அதை லத்தீன் அமெரிக்கா போய் வாங்கிக் கொள்ளலாமே என்று அசட்டையாக பதில் அளித்தார்கள். இப்படியான ஒரு கசப்பான மனநிலையோடே, இலக்கிய அரிப்பைத் தீர்க்கும் பொருட்டு, ஆபாசங்களை சகித்துக் கொண்டு அரிய புத்தகங்களை தேடித்தேடி வாங்க வேண்டிய சூழல் சென்னை புத்தகக்காட்சியில் நிலவுகிறது.

ஓக்கே, நான் வாங்கிய புத்தகங்களின் லிஸ்ட் :

1. காமசூத்ரா (எ) கொக்கோக சூத்திரம் (ஹார்ட்பவுண்ட் பைண்டிங், ரூ.160, நர்மதா)

2. புஷ்பா தங்கதுரையின் தாய்லாந்து அனுபவங்கள் (நக்கீரனின் பினாமி பதிப்பகம்)

3. இன்னொரு கில்மா புக் - பெயர் நினைவில்லை (இதுவும் நக்கீரனின் பினாமி)

4. ராஜேந்திரகுமாரின் நகைச்சுவைக் கதைகள் (பதிப்பகம் பெயர் தெரியவில்லை)

5. அப்புசாமியும், கலர் டிவியும் (காமிக்ஸ் - மணிமேகலை)

6. டெக்கான் கிரானிக்கிள் (ஓசியில் கொடுத்தார்கள்)

7. புதிய தலைமுறை இதழ் எண் 2 (ஓசியில் கொடுத்தார்கள்)

8. தமிழ்நாடு மேப் (ரூ.20 - ஏதோ பதிப்பகம்)

9. ஒல்லியாக இருக்கும் நீங்கள் குண்டாவது எப்படி? (கிழக்கா மணிமேகலையா நினைவில்லை)

10. ஓவர் குண்டாகிவிட்டால் மீண்டும் ஒல்லியாவது எப்படி? (இதுவும் கிழக்கா மணிமேகலையா நினைவில்லை)

11. வலைப்பதிவர்களிடமிருந்து தொகுத்த மொக்கை கதைகள் (ரிசர்வ் செய்திருக்கிறேன்,
இன்னும் ப்ரிண்ட் ஆகவில்லை)

12. வலைப்பதிவர்களிடமிருந்து தொகுத்த ஆகச்சிறந்த மொக்கை கவிதைகள் (ரிசர்வ் செய்திருக்கிறேன், இன்னும் ப்ரிண்ட் ஆகவில்லை)

13. சரோஜாதேவி கதைகள் - முழுத்தொகுப்பு (புத்தகக் காட்சிக்கு எதிரிலிருக்கும் பிளாட்ஃபார்மில்)

14. விருந்து - மருதம் - திரைச்சித்ரா உள்ளிட்ட பழைய செவ்விலக்கிய இதழ்கள் தனித்தனியாக (புத்தகக் காட்சிக்கு எதிரிலிருக்கும் பிளாட்ஃபார்மில்)

15. இன்னும் சில மொக்கை மற்றும் கில்மா புத்தகங்கள் (பெயரை கூட நினைவில் வைத்துக் கொள்ள இயலா மொக்கைத்தன்மை கொண்டவை)

எனக்கும் கூட புலிநகக்கொன்றை, விஷ்ணுபுரம், பிரமிளின் முழுத்தொகுப்பு, சுந்தரராமசாமி சிறுகதைகள், நகுலன் கவிதைகள், அ.மார்க்ஸ், துருக்கித் தொப்பி என்றெல்லாம் பட்டியலிட ஆசையாக இருந்தாலும், வாங்கித் தொலைத்தவற்றையே பட்டியலிட வேண்டும் என்ற நேர்மையும், அறமும் இருப்பதால் இப்பட்டியலை வெளிப்படையாக நீதிபதி சொத்துக் கணக்கு வெளியிடுவது மாதிரி வெளியிடுகிறேன்.

31 கருத்துகள்:

 1. "நான் வெகுவாக விரும்பித் தேடிய அல்பேனிய புத்தகங்கள் நானூற்றி சொச்சம் ஸ்டால்களிலும் கிடைக்கவில்லை என்பதே என்னுடைய ஒரே வருத்தம்"
  --
  அருமை...அருமை..
  -மயில்வண்ணன்

  பதிலளிநீக்கு
 2. கொழுப்புதானே, இதெல்லாம்?. :-) என்றாலும் ரசித்துப் படித்தேன்.

  பதிலளிநீக்கு
 3. சொத்துக் கணக்கு (சொத்தை கணக்கு?) காட்டிய அண்ணன் லக்கி நீடூழி வாழ்க.

  நீதிமான் லக்கி வாழ்க.

  பதிலளிநீக்கு
 4. காமசூத்ரா (எ) கொக்கோக சூத்திரம் ,
  சரோஜாதேவி கதைகள்

  அருமையான புத்தகங்கள்

  பதிலளிநீக்கு
 5. இ லைக் தி லிஸ்ட்..அஹ்ஹ, வெரி குட் ஆபீசர்...(கவுண்டமணி குரலில் படிக்கவும் )
  ஏங்க, அப்படியே விஜயகாந்த் புக்கையும் காசு குடுத்து வாங்கி லிஸ்ட்ல சேர்க்கறது தானே..

  பதிலளிநீக்கு
 6. நான் குரும்பூர் குப்புசாமியின் "வாராந்தரி ராணி அல்லி பதில்கள் தொகுப்பு" (paperback hardbind எடிஷன்) ரெகமண்டு செய்கிறேன்.

  பதிலளிநீக்கு
 7. நான் வெகுவாக விரும்பித் தேடிய அல்பேனிய புத்தகங்கள் நானூற்றி சொச்சம் ஸ்டால்களிலும் கிடைக்கவில்லை //

  எங்கேயாவது விருந்து எழுத்தாளர்களின் படம் இருக்கிறதா? லியோனிலோ , போர்தோவிலோ இது நடக்குமா , இதை தான் நான் ஃபிலிஸ்டைன் என்கிறேன்,ஆங்.

  பதிலளிநீக்கு
 8. உங்கள் நேர்மையும் அறமும் வாழ்க! உங்களிடமிருந்து இரவல் பெற்றுப் படித்து மகிழவேண்டிய புத்தகங்கள் நிறைய இருக்கிறது இந்தப் பட்டியலில்!

  பதிலளிநீக்கு
 9. >>நான் வெகுவாக விரும்பித் தேடிய அல்பேனிய புத்தகங்கள் நானூற்றி சொச்சம் ஸ்டால்களிலும் கிடைக்கவில்லை என்பதே என்னுடைய ஒரே வருத்தம்.
  - உங்க இன்னொரு குரு (அதாங்க சாரு) தலையிலேயே கை வச்சிட்டிங்களே?! உங்களைத் திட்டி ஒரு பதிவு விரைவில் வரும் :)

  பதிலளிநீக்கு
 10. \\ஒல்லியாக இருக்கும் நீங்கள் குண்டாவது எப்படி?//

  பாஸ் இது பதில் வேற ஏதாவது உருப்படியா வாங்கி இருக்கலாம்.

  பதிலளிநீக்கு
 11. //12. வலைப்பதிவர்களிடமிருந்து தொகுத்த ஆகச்சிறந்த மொக்கை கவிதைகள் (ரிசர்வ் செய்திருக்கிறேன், இன்னும் ப்ரிண்ட் ஆகவில்லை)//

  வெய்ட்டீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்....

  பதிலளிநீக்கு
 12. புத்தகக் காட்சி புத்தகப் பட்டியல்!
  January 8, 2010
  எனக்கும் கூட புலிநகக்கொன்றை, விஷ்ணுபுரம், பிரமிளின் முழுத்தொகுப்பு, சுந்தரராமசாமி சிறுகதைகள், நகுலன் கவிதைகள், அ.மார்க்ஸ், துருக்கித் தொப்பி என்றெல்லாம் பட்டியலிட ஆசையாக இருந்தாலும், வாங்கித் தொலைத்தவற்றையே பட்டியலிட வேண்டும் என்ற நேர்மையும், அறமும் இருப்பதால் இப்பட்டியலை வெளிப்படையாக நீதிபதி சொத்துக் கணக்கு வெளியிடுவது மாதிரி வெளியிடுகிறேன்.

  லிச்சி ஜூஸ்!
  January 2, 2010

  உ.வே.சா. நூலகத்தின் ஸ்டாலில் அய்யரின் ‘என் சரிதம்' சல்லிசாக ரூ. 300/- (டிஸ்கவுண்ட் போக ரூ.270/-) கிடைக்கிறது. சுமார் 90 வருடங்களுக்கு முன்பாக எழுதப்பட்டிருந்தும் உரைமொழி ஆச்சரியப்படுத்துகிறது. அரிய புத்தகம் என்பதால் வாங்கி ஸ்டாக் வைத்துக் கொண்டேன்.

  பதிலளிநீக்கு
 13. -----------
  நீங்களா , இப்படி
  ச்சே ..
  இது எல்லாம் ஒரு புத்தகங்களா ?
  -----------
  இப்படி யாரவது உங்களை நோக்கி கேட்டால்,
  "நான் வாங்கினது பாதிதான் , இன்னொருத்தன் இருக்கான் ,
  இது போல 4 மடங்கு வாங்கினவன் " அப்படின்னு என்னைப் பற்றியும் கொஞ்சம்
  சொல்லிடுங்கோ ...

  பதிலளிநீக்கு
 14. இதில் ரசிபதற்கோ, சிறிபற்த்கோ ஒன்றும் இல்லை,
  ஆணவம் தான் தெரிகிறது, இதற்கு வாழ்த்துக்கள் வேறு, வெட்கம் தான்!!!!

  பதிலளிநீக்கு
 15. லக்கின்னு சொல்லி பின்னூட்ட முடியுது! :))))))))))

  பதிலளிநீக்கு
 16. இதற்கு நீங்கள், புத்தகக்கண்காட்சியின் எதிரில் உள்ள பிளாட்ஃபார்ம்க்கு மட்டுமே சென்றுவந்து இருக்கலாம்.
  "சரோஜாதேவி கதைகள் - முழுத்தொகுப்பு" என்று அதனை சுருக்கிவிடாதீர்கள்; அது பல தொகுப்பு வரிசைகளாக நீளக்கூடியது !

  பதிலளிநீக்கு
 17. அல்பேனிய புத்தகங்கள் ஈபே, அமேசானில் ஆர்டர் செய்தால் வீடு தேடி வரும் காலம் இது.

  மருதம், கிளாமர் இப்போது வருகிறதா.

  என் பெயர் சுமதி வயது 26, பார்ப்பதற்கு நடிகை கனகா போல இருப்பேன், என் எதிர் வீட்டில் இருப்பான் ரமேஷ், நல்ல உடல் வாகு....

  பதிலளிநீக்கு
 18. அன்புள்ள யுவகிருஷ்ணா!
  சிரிப்பு முட்டுகிறது.
  நானும்தான் தேடினேன்; “காராசேவ் செவேரா”, காஸ்ட்ரோ பூலித்தேவன்” யோஷிமோடோ ஹ்வான்சாங்” ஆகியோர் எழுதி முன்நவீனத்துவ பின்நவீனத்துவ வியாதிகள் படித்துக் கிழித்த நூல்கள்.
  அகப்படவில்லை. எல்லாம் தீர்ந்துபோய்விட்டது என்கிறார்கள்.

  பதிலளிநீக்கு
 19. லக்கி நாம் இருவரும் சேர்ந்து ஆரம்பிப்பதாய் இருக்கும்பதிப்பகத்தை பற்றியும் அதில் வரப்போகும் புத்தகத்தை பற்றியும் ஒரு வரி சேர்த்திருக்கலாம்.:))

  பதிலளிநீக்கு
 20. லக்கி,
  நீங்கள் பகடி செய்து எழுதியிருக்கிறீர்களா இல்லை உண்மையாகவே எழுதியிருக்கிறீர்களா என்பது தெரியவில்லை. புத்தக சந்தையில் வாங்கியது குறித்தும், வாங்கியதாக பாவனை செய்வதும் அவரவர் விருப்பம் சார்ந்தது. அதை ஏன் குற்றப்பார்வை பார்க்க வேண்டும். அதற்கு ஏன் மன உளைச்சலுக்குள்ளாக வேண்டும். பொதுவாக அம்புலிமாமா வாசித்துதானே நாம் ஆனந்த விகடன் வாசிக்க வருகிறோம். அதைப் போன்றதுதான் இது. வாசிப்பில் பெரும் புரட்சி ஏற்பட்டு விட்டது போன்ற பொய் தோற்றத்தை புத்தக சந்தை 10 நாட்கள் ஏற்படுத்துகிறது. ஆனால் உண்மை என்ன என்று எல்லோருக்கும் தெரியும். அதே போல காலச்சுவடு உயிர்மை ஆனந்த விகடன சரி மற்ற பிரபல வெளியீட்டாளர்களை ஏன் விட்டு விட்டீர்கள் அதையும் தொகுத்திருக்கலாம். மற்றொரு வருத்தம், பதிவுலகிலிருந்து எழுதியவர்களின் படைப்புகள் தொகுக்கப்பட்டு இருப்பதை (அது மொக்கையாகவே இருக்கும் பட்சத்திலும்) நீங்கள் கிண்டலடித்திருக்கக்கூடாது. உங்கள் தகுதிக்கு அதை கண்டு கொள்ளாமல் இருந்துவிடவேண்டும். அதுதான் சரி, அதை விட்டுவிட்டு நீங்கள் வாங்கியதாக குறிப்பிட்டிருக்கும் உங்கள் விருப்பப்புத்தகப் பட்டியலில் அது இடம் பெற்றிருக்கக்கூடாது என்பது என் கருத்து. லத்தீன் அமெரிக்க சிறுகதைகளையும் முதன்முதலில் தொகுத்தவர்கள் நீங்கள் குறிப்பிட்டிருக்கும், பதிவர்களின் புத்தகங்களை தொகுத்தவர்கள்தான் என்ற தகவலையும் உங்களுக்கு தருகிறேன். அதேபோல அல்பேனிய படைப்புகளும் தமிழில் விடியல் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறார்கள்.

  பதிலளிநீக்கு
 21. //பாராமார்த்த குருவும், அவருடைய மொன்னை சிஷ்யர்களும், பின்னே ஒரு குப்பைத் தொட்டியும்//

  டைரக்டர் சே ரைட்டர் டச்!!

  //சில மொக்கைப் பதிவர்களையே பெரும்பாலும் திரும்ப திரும்ப இந்த சீசனில் புத்தகக்காட்சியில் சந்திக்க முடிந்தது என்றாலும் கூட//

  நல்ல வேளை..நான் உங்களை புத்தக கண்காட்சியில் சந்திக்கவில்லை :-)

  அன்புடன்,
  சுவாசிகா
  http://ksaw.me

  பதிலளிநீக்கு
 22. விருந்து - மருதம் - திரைச்சித்ரா அந்த நாள் நாபகம் வந்ததே...

  பதிலளிநீக்கு
 23. புத்தகங்களை முதல்ல மலிவு விலையில விற்க சொல்லுங்க. கேட்டா காகித விலை ஏகிறிடுச்சி.... அப்ப எதுக்கு 30 சதவீதம் விலைத் தள்ளுபடி சில்லறை வியாபாரிகளுக்கு தருகின்றனர். வரி வேறக் கிடையாது அப்புறம் எதற்கு புத்தகத்தில் பிரின்ட் பண்ண விலையிலேய எப்போதும் விற்பது தேவையற்றது. புத்தகத்தை இனிமேல் ஏழைகள் தான் படிப்பார்கள். மற்றவர்கள் அழகுக்குத்தான் வாங்கிச் செல்வார்கள். இன்னும் கொஞ்ச நாளில் இதையும் வாங்க மாட்டாங்க எல்லாம் இணையத்திலேயே வந்துடும்.

  பதிலளிநீக்கு
 24. பட்ஜெட் பிரட்சனை பெரிய பிரட்சனை. பதிப்பகங்களில் புத்தக பட்டியலை மட்டுமே வாங்க முடிகிறது. அவை இலவசம் என்பதால்.

  சாருவின் தேகம், எஸ்.ராவின் காண் என்பது இயற்கை புத்தகங்கள் எல்லாம் ராஜேஸ்குமார் நாவல் வடிவில் இருக்கின்றன. ஆனால் ரூ 90.

  பதிலளிநீக்கு
 25. பட்,உங்க நேர்மை எனக்குப் பிடிச்சிருக்கு

  பதிலளிநீக்கு
 26. உங்க நேர்மையை பாராட்டாமல் இருக்க முடியல

  பதிலளிநீக்கு