6 ஜனவரி, 2010

ஜெயமோகன் - தத்துவம் நம்பர் பத்தாயிரத்து ஒண்ணு!


தோழர் ஜெயமோகன் இதுவரை எவ்வளவோ தத்துவமுத்துகளை உதிர்த்திருக்கிறார். தொடர்ந்து உதிர்த்துக் கொண்டிருக்கும் இருக்கிறார். பிரச்சினை என்னவென்றால் எனக்கென்னவோ அவரை மைடியர் மார்த்தாண்டன் 'ஐடியாமணி' ரேஞ்சுக்கு மட்டுமே பார்க்க முடிகிறது.

பாருங்கள். அவரது லேட்டஸ்ட் தத்துவமுத்தினை : இந்துமதம் பின்நவீனத்துவப் பண்புகளை அதிகமாக கொண்டிருக்கும் மதம்.

மோசமான சாதிய கட்டமைப்பு கொண்ட ஒரு மதத்தை, காலாவதியாகிப் போய்விட்ட அம்மதத்தின் தத்துவங்களை, இப்போதைய சமகால போக்குடன் கஷ்டப்பட்டு ஒட்டவைக்கும் தந்திரத்தை தவிர வேறென்ன இக்கருத்தில் இருக்கிறது. மூன்றாம் உலகநாடுகளின் காலத்திலும் ஆயிரக்கணக்கான மாற்றுமதத்தினரை கொன்று குவிக்கும் மதத்தை, அறிவுஜீவிகள் என்று சொல்லிக் கொள்கிறவர்களே தலையில் தூக்கிவைத்துக் கொண்டு ஆடும் கூத்தை எங்கு போய் அடித்துக் கொள்வது?

'பின்நவீனத்துவம் என்றால் என்ன?'வென்று சிறுபான்மை மதத்தை சேர்ந்த சையது கடிதம் எழுதுவாராம். அதற்கு ஜெமோ ஒரு பதிவு எழுதுவாராம். பின்னூட்டத்தில் பெருமாள் என்பவர் திடீரென உதித்து, அப்படியென்றால் ‘இந்துமதம் ஒரு பின்நவீனத்துவ மதமா?' என்று கேள்வி கேட்பாராம். மைல்டாக ஜெமோ ‘ஆமாம்' என்பாராம். இதுபோன்ற நாடகத்தன்மை கொண்ட இலக்கியச்சேவையை ஜெமோவைத் தவிர வேறு யாரிடமும் நாம் பெற்றுவிட முடியாது. பதிவிலேயே இந்துமதத்தை பின்நவீனத்துவ மதமாக முன்னிறுத்தினால் ‘ஆர்.எஸ்.எஸ். வெறியர்' என்ற விமர்சனத்தை உண்மையாக்கி விடுவோமோ என்ற அச்சம் ஜெமோவுக்கும் இருக்குமில்லையா?

நண்பர்களே, ஒரு விஷயத்தை நீங்கள் உணர்ந்திருக்கலாம். மொட்டைக்கடுதாசி உங்களுக்கும் வந்திருக்கலாம், அல்லது நீங்களும் யாருக்காவது எழுதியிருக்கலாம். உலகிலேயே ‘பெருமாள்' என்ற பெயரில்தான் மொட்டைக்கடுதாசி அதிகமாக எழுதப்படும், தெரியுமில்லையா? அப்பெயருக்கான வலிமையும், தன்மையும் அது அது. ‘இந்து மதம் பின்நவீனத்துவ மதமா?' என்று ஜெமோவை கேள்வி கேட்பதும் பெருமாள்தான் என்பதை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

ஜெமோ அவரது வாசகர்களுக்கு சொல்லித்தர விரும்புவது மதவெறியே தவிர, பின்நவீனத்துவம் அல்ல என்று அவரது முன்னாள் வாசகர்கள் அறிந்திருக்கிறோம். துரதிருஷ்டவசமாக இன்னும் பெருமாள்கள் மட்டுமே ஆட்டுமந்தையாய் அவர் பின்னே சென்றுக் கொண்டிருக்கிறார்கள், பின் தொடரும் நிழல்களின் குரல்களாக, பரிதாபமாய் ‘மே'வென்று கத்திக் கொண்டிருக்கிறார்கள்.

* - * - * - * - * - *

உ.போ.ஒருவனுக்குப் பிறகாக உலகநாயகன் தொடர்ந்து இஸ்லாமிய வெறுப்பை கக்கிக் கொண்டிருக்கிறார். திருட்டு டி.வி.டி.க்கு எதிரான ஜக்குபாய் குழுவினரின் அதிரடிக்கூட்டம் நேற்று நடந்திருக்கிறது. எதையாவது கோஷமாய் போட்டுவிட்டு செல்வதில் நமக்கு பிரச்சினையில்லை.

உலகநாயகனின் பேச்சில் குறிப்பாக ஒரு விஷயம் நெருடுகிறது. 'திருட்டு டி.வி.டியில் வருவது கருப்புப் பணம். இப்பணம் தேசவிரோதச் செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. மும்பை குண்டுவெடிப்பு போன்றவற்றுக்கு இப்பணமே செலவழிக்கப்படுகிறது'

ஏதோ பெரிய, அரிய, புதிய கண்டுபிடிப்பை உ.நாயகன் கண்டு சொல்லிவிட்டதாக புல்லரித்துப் போய்விட்டோம். “பர்மாபஜார் பாய்கள் இங்கே திருட்டுத்தனமாக சம்பாதித்து, தீவிரவாத செயல்களுக்கு முதலீடு செய்கிறார்கள்” என்று நேரடியாகவே சொல்லிவிட்டிருக்கலாம். பாய்களுக்கு டிவிடி சப்ளை செய்பவர்கள் காஞ்சிபுரம் தேவநாதன்கள் என்பதையும் கூட சேர்த்து சொல்லியிருந்தாரானால், இன்னமும் அவரை செக்யூலரிஸ்டாகவே நாங்களும் நம்பித் தொலைக்கலாம்.

* - * - * - * - * - *

செல்போன் என்ற வஸ்துவை தமிழனுக்கு பயன்படுத்தத் தெரியவில்லை என்று நினைக்கிறேன். 'முக்கிய' நேரங்களில் வரும் அழைப்புகள் எரிச்சல்படுத்துகின்றன. நாம் ‘முக்கிய' விஷயத்தில் ஈடுபட்டிருக்கிறோம் என்பதை, அழைப்பவருக்கு சொல்லும் முகமாக 'கட்' செய்தாலும், பதினைந்து நொடிகள் கழித்து மீண்டும் ரிங்குகிறார்கள். செல் அழைப்புகள் நல்ல சூழல்களை நாசப்படுத்துகின்றன.

யாராவது மூன்று ரிங்குக்கு மேல் போனை எடுக்கவில்லை, அல்லது எடுத்து கட் செய்கிறார் என்றால், பேச இயலாத சூழலில் இருக்கிறார் என்று பொருள். முக்கியமான விஷயமாக இருந்தால் எஸ்.எம்.எஸ். செய்யலாம். அல்லது மிஸ்ட் கால் பார்த்து அழைத்த நபரே உங்களை திரும்ப அழைத்துத் தொலைப்பார்.

கடந்த வாரம் முழுக்க இதுபோன்ற அழைப்புகளால் கடுமையான மன உளைச்சலை அடைந்தேன். தொடர்ந்து ஐந்து முறை ஒரு நண்பர் ரிங் அடித்துக் கொண்டேயிருக்க, நானும் கட் அடித்துக் கொண்டேயிருந்தேன். ஆறாவது முறையும் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தனாய் அவர் அடிக்க, என்னவோ ஏதுவோவென்று அச்சத்துடனே, வேறுவழியின்றி எடுத்தேன். “ரொம்ப வேலையா இருக்கீங்களா பாஸூ. சும்மாதான் போன் பண்ணேன்” என்கிறார். என்னத்தைச் சொல்ல?

37 கருத்துகள்:

 1. கமல் என்ன சொன்னாலும், அவர் கூறுவதன் பொருளானது, பிறர் அதை அணுகும் விதந்தோறும் வெவ்வேறாக வேறுபட்டுத்தோன்றக்கூடியது என்பதே என் எண்ணம். அவ்விதத்தில் தாங்கள் பொருள்கொண்ட கோணம் சரியானதுதானா என்பதை கமல்தான் சொல்லமுடியும். ஜெயமோகன் அவர்களை சீண்ட இது சரியான தருணம் என்று தோன்றவில்லை!

  பதிலளிநீக்கு
 2. சாருவைப் பற்றிய சிவராமனின் பதிவிற்கு (ஹிட்லர் ரிட்டர்ன்ஸ்-2) உங்கள் எதிர்வினையை எதிர்பார்த்தேன். பின்னூட்டத்துடன் நிறுத்திக்கொண்டு விட்டீர்கள் போலிருக்கிறது.

  செல்போன் விஷயத்தில் அப்படியே உடன்படுகிறேன். இப்போதெல்லாம் முக்கியமான நேரங்களில் ஸ்விட்ச் ஆஃப் செய்து விடுகிறேன்.

  \\துரதிருஷ்டவசமாக இன்னும் பெருமாள்கள் மட்டுமே ஆட்டுமந்தையாய் அவர் பின்னே சென்றுக் கொண்டிருக்கிறார்கள்\\

  நச்....!

  கமலைப் பற்றி...... ஒன்றும் சொல்வதற்கில்லை.... :-)

  உங்களுக்கு ஏன் பின்னூட்டங்கள் அதிகம் வருவதில்லை.. ஆனால் எப்போது வந்தாலும் குறைந்தது 15 பேராவது ஆன்லைனில் இருக்கிறார்கள்.

  Comment Moderation கூட காரணமாய் இருக்குமோ?

  (நான் உங்களை, தொடர்ந்து வாசித்து வருகிறேன். ஆனால் இதுதான் என் முதல் பின்னூட்டம்)

  --சுந்தர்
  ருவாண்டா

  பதிலளிநீக்கு
 3. Celebrity ஆகிட்டா இதெல்லாம் சகிச்சுதான் ஆகணும், கிருஷ்ணா. :) [கடைசி பத்திக்கான பின்னூட்டம்]

  பதிலளிநீக்கு
 4. ஜெயமோகன் பத்தாயிரம் தத்துவம் சொல்லி இருக்காரா .....

  பதிலளிநீக்கு
 5. Nice one Lucky, looks like you are back with punching posts...keep going..

  பதிலளிநீக்கு
 6. மொதல்ல உள்ளது ஏதோ இலக்கிய மேட்டராட்டம் தெரியுது...நமக்கு அம்புட்டு தெரோசு போறாதுங்களே...

  செல்போன் ரிங் முழுசும் போய் எதிர்பார்ட்டி எடுக்கலைன்னா...ஏதோ வில்லங்கம்னு அர்த்தமாவுதுங்கோ...
  ரிங் அடிச்ச ஒடனே கட் பண்ணீங்கன்னாத்தான் தல முக்கிய மேட்டரா கீறாருன்னு அர்த்தமாவுதுங்கோ...

  பதிலளிநீக்கு
 7. நீங்களா உலகநாயகனை விமர்சித்திருப்பது?
  ம்ம் கமல் வாழ்வில் ஏதும் ஆன்மிக அற்புதங்கள் நடந்திருக்குமோ சாருவுக்கு நடந்ததைப் போல் கொஞ்சம் குழப்பமாய் இருக்கிறார் போலும் இப்போதெல்லாம் அவர் ஒரு Agnostic ஆகத்தான் தன்னை வெளிப்படுத்த முனைகிறார். தசாவதாரம் தொடங்கியே அவருக்கு கொஞ்சம் இந்து "மதம்" பிடித்துவிட்டது என நினைக்கிறேன். அல்லது ஐம்பதுகளைக் கடந்த பின் வரும் ஏதோ ஒன்றா? இல்லை பெரும்பான்மையைத் திருப்திப் படுத்தும் மோசமான வியாபார உத்தியா?

  பதிலளிநீக்கு
 8. அவர் என்ன சொல்றாரு...நீங்க என்ன புரிஞ்சுகுரீங்க?

  அவர் பத்தி பேசுறாரு...நீங்கல் கூரும் சாதீய அமைப்பை நிராகித்து இன்றைய இந்துக்கள் இந்துக்களாக இருக்க முடிகிறது...ஏன்..உருவ வழிபாடு முதல் பல்வேறு விடயங்களில் வெவ்வேறு சித்தாந்தங்கள் இந்து மதத்தில் இருக்க முடிகிறது..

  அதத்தான் அவர் சொல்றாரு

  பதிலளிநீக்கு
 9. ஜெமோ சொன்னது தவறாக இருந்தால் அதற்காக இந்து மதத்தை எதுக்குய்யா வம்புக்கு இழுக்கிறீங்க. மற்ற மதத்தினரை கொன்று குவிக்காத மதம் இருக்கா என்ன. அவ்வளவு ஏன், ஒரே மதத்துக்குள்ளேயே வேறு பிரிவினரை அடித்துக்கொள்ளும் மக்கள் இருக்கிறார்கள். இதுதான் மஞ்சள் துண்டு போடும் பகுத்தறிவாளர்களின் (மற்றும் வாரிசுகளின்) பிரச்சனை. அம்மன் கோவில் கூழ்னா ஒத்துக்காது, அதுவே ரம்ஜான் கூழ்னா சூப்பரு. pseudo secularism. அரசியல்வாதிகளுக்கு சரி, உங்களுக்கு ஏன்யா இந்த வேலை.

  பல pseudo-க்களின் கலவைதான் கமல். முஸ்லிம்னாலே தீவிரவாதிதான். தப்பித்தவறி ஒரு இந்து இருந்தா, அவன் ஒரு சிவபக்தன். (உ.ம். அன்பே சிவம், தசாவதாரம்). நான் ஒன்னும் சாதாரண இந்து இல்லை, அதுக்கும் மேல... அய்யங்காராக்கும்னு சொல்ற ஒரு திமிர். இவ்வளவு குறுகிய மனசு உள்ள ஆளுக்கு உலக நாயகன் பட்டம் வேற. என்ன கொடுமை சார் இது. உண்மையான காமன் மேனுக்கு பிரச்சன வந்தா, கோவிலுக்குப்போயி அர்ச்சனையும் பண்ணிக்குவான், தர்க்காவுக்குபோயி தண்ணியும் தெளிச்சுக்குவான். பிரச்சன ஒன்னும் இல்லைன்னா கனவுலகூட கடவுளப்பத்தி நினைக்கமாட்டான்.

  செல்போனுங்கறது அந்தக்காலத்து(?) தந்தி மாதிரி, போன் வந்த உடனே நடுரோட்டுல வண்டிய நிப்பாட்டி உடனே பேசியாகணும். இந்தமாதிரி ஆட்களுக்கு மத்தில நீங்க என்னடான்னா...

  பதிலளிநீக்கு
 10. hello set... moo..... saa.... gra....

  1) thirunavukarasara sunnabu kalaivail a pottadu idnhu madhama jain a madhama?

  2) gnana sambandhar irunda edathukku evan thee vachan?

  3) gajini mohammed la aarambichu ella muslim rajavum vaila viral vacha soopa theriyadhavununga paru?

  4) November 26 2008 entha hindu theeviravadi taj hotel, oberaila gundu vachan?

  6) dei hindu madathula mattum than jathiya? appa csi nadar, vellala christian idellam enna?

  7) lappai, ravuthar, sunni, shia a lam enna ?

  vanthutanga pesa periya pud.... madiri.

  பதிலளிநீக்கு
 11. I dont think it is fair to box Hinduism as post-modernist. While it embraces the marginalized, it also advocates firm structure based on one's interests. In short, it has both modernist and post-modernist elements.

  Christianity is predominantly modernist, though it has a few post-modern elements. Muslim faith is the most modernist of the three.

  பதிலளிநீக்கு
 12. Sorry Yuvakrishna better luck next time..

  உங்காளுதான் கிறுக்குத்தனமா உளர்ரதுல மொத ஆளுன்னா, நீங்களுமா?

  பதிலளிநீக்கு
 13. தலைவரையே இப்படி கொச்சைப் படுத்தாதீர்கள் யுவா !

  தமிழகத்தின் ஒரே பெரியாரிஸ்ட், பெயரிலேயே இஸ்லாமிய பெயரைக் கொண்டுள்ள ஒரே செக்யுலரிஸ்ட் தலைவர் மட்டும்தான். நடக்கின்ற உண்மையை அப்படியே பேசியுள்ளார்கள்.

  யுவகிருஷ்ணா... நீங்களுமா..?

  - இதயம் உள்ளவன்.

  பதிலளிநீக்கு
 14. ஜெமோ சொன்னதை படித்ததில் எனக்கு தவறேதும் இருப்பதாக படவில்லை. பிறப்பாலும் வளர்ப்பாலும் இந்துவாக இருக்கும் எனக்கு இதுவரை இந்துமதம் எந்த ஒரு கட்டுப்பாடும் விதித்ததில்லை. நான் நானாக இருக்க அனுமதிக்கிறது. இதைவிட வேறு என்ன வேண்டும். மற்ற மதங்களில் இயல்பாகவே இருக்கும் கட்டுப்பாடுகள் எதுவும் எனக்கு போதிக்கப்படவில்லை. சாதீய கட்டமைப்புக்கும், இந்து மதத்திற்கும் என்ன தொடர்பென்று சற்று விளக்க முடியுமா. சுன்னி மற்றும் ஷியா பிரிவின் சண்டைக்கு நீங்கள் இஸ்லாமைத்தன் குறை கூறுவீர்களா ?

  பதிலளிநீக்கு
 15. சத்தியமா சொல்றேன் தலைவா! இந்த செல்ஃபோன் மேட்டரு சொன்னீங்களே!! அய்யோ அய்யோ. எனக்கு அதை நினைச்சாலே அவ்ளோ ஒரு கொலைவெறி!!! எவ்ளோ சொன்னாலும்.... ம்ம்ஹூம்... பொருத்து பொருத்து பார்த்தேன். இப்போல்லாம் ரெண்டுவாட்டிக்கு மேல விடாம அடிச்சா... அப்றம் ரெண்டு நாளாவது அவங்க நம்பரை மட்டும் ரிங்டோன் ல நோ டோன் செட் பண்ணி சாவடிக்காம விடுறதில்லை நானு

  பதிலளிநீக்கு
 16. //“பர்மாபஜார் பாய்கள் இங்கே திருட்டுத்தனமாக சம்பாதித்து, தீவிரவாத செயல்களுக்கு முதலீடு செய்கிறார்கள்” என்று நேரடியாகவே சொல்லிவிட்டிருக்கலாம். பாய்களுக்கு டிவிடி சப்ளை செய்பவர்கள் காஞ்சிபுரம் தேவநாதன்கள் என்பதையும் கூட சேர்த்து சொல்லியிருந்தாரானால், இன்னமும் அவரை செக்யூலரிஸ்டாகவே நாங்களும் நம்பித் தொலைக்கலாம்.//


  நச்சுன்னு சொன்னிங்க....

  பதிலளிநீக்கு
 17. ஜெயமோகன் பதிவின் சாராம்சதை விடுங்கள் ( ஒன்னும் புரியவில்லை என்பது வேறு விஷயம் ) அவரது எழுத்து நடை இருக்கே .... ஹையோ ஹையோ

  //நவீனத்துவம் என்றால் புதுமை உருவாவது அல்ல. அதை நவீனத்தன்மை என்றுதான் சொல்கிறார்கள். அது எப்போதுமே நடப்பது. நவீனத்துவம் என்றால் கிட்டத்தட்ட இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உருவான ஒரு பொதுப்போக்கு. அதை சில சமூக இயல்புகளை வைத்தும் சிந்தனைப்போக்குகளை வைத்தும் அடையாளப்படுத்துகிறார்கள்.//

  எதாவது புரியுதா?

  பதிலளிநீக்கு
 18. //செல்போன் என்ற வஸ்துவை தமிழனுக்கு பயன்படுத்தத் தெரியவில்லை என்று நினைக்கிறேன்//

  என்ன லக்கி இது ஒரு புலோவில் வந்ததா?

  சொந்த அனுபவத்துகெல்லாம் “தமிழன்” என்று எழுதுவது

  பதிலளிநீக்கு
 19. ரொம்ப சூடா இருக்கும் போது பதிவு எழுதீட்டீங்க போல

  பதிலளிநீக்கு
 20. கற்பவன்
  கமல் என்ன சொன்னாலும், அவர் கூறுவதன் பொருளானது, பிறர் அதை அணுகும் விதந்தோறும் வெவ்வேறாக வேறுபட்டுத்தோன்றக்கூடியது என்பதே என் எண்ணம். அவ்விதத்தில் தாங்கள் பொருள்கொண்ட கோணம் சரியானதுதானா என்பதை கமல்தான் சொல்லமுடியும்.//

  நல்ல பதில்.

  போன் குறித்த உங்கள் எரிச்சலை ஏற்கலாம். :‍-)

  பதிலளிநீக்கு
 21. பா.ரா பதிவுக்கு அப்புறம் உங்களின் பதிவுகளை படிக்க ஆரம்பித்தேன்.
  உங்களை பா.ரா எதை வைத்து நன்றாக எழுதுவதாக சொன்னார் என்று புரியவில்லை :(

  பதிலளிநீக்கு
 22. செல்போனை மீட்டிங் போன்ற முக்கியமான் நேரத்தில் silent mode அல்லது meeting modeல் வைத்தால் பிரச்சினை தீர்ந்தது..

  இதற்கு ஏன் இம்புட்டு டென்ஷன்..

  போன் பண்றவருக்கு நீங்க பிஸியா இருக்கீங்கன்றது எப்படி தெரியும் :)

  அன்புடன்,
  சுவாசிகா
  http://ksaw.me

  பதிலளிநீக்கு
 23. Hinduism is post-modernist thats why you and your team are able to say whatever you like. Can you do it with any other religion, being modern will they accept your ideas. I dont think so.....
  May be you could try and see...

  பதிலளிநீக்கு
 24. கமல் இப்போது அதிகமாக தீவிரவாதம் பேசுகிறாரே? இவருக்கும்... சோவின் தாக்கம் வந்து விட்டது என்றே கொள்ள முடியும்...

  அடுத்த பார்ப்பனர்கள் சங்க கூட்டத்தில் கமலை எதிர்பார்க்கிறேன்...

  பதிலளிநீக்கு
 25. ஜெமோவின் பின் நவீனத்துவம் படித்தேன்.
  அதில் மறைமுகமாக ஹிந்து மதத்தை இழுத்துவிட்டிருப்பது
  குமட்டிக்கொண்டு வருகிறது. அப்படியானால் பின் நவீனத்துவம் எல்லா மதங்களிலும் இருக்கிறதென்று அந்தந்த மதத்துகாரர்கள் சொல்லலாமே. அப்படி சொல்லப்போனால்
  உள்ளத்தை அள்ளித்தா படத்தில் "நான் தான் விஸ்வநாதன் "
  "நான் தான் விஸ்வநாதன்" ஜோக் மாதிரி அல்லவா ஆகிப்போகும்.
  எழுத்தாளர்கள் தங்கள் மதத்திற்கு பிராண்D அம்பாஸிடர் ஆகிவிட்டால் என்ன செய்வது.

  சரி ஒரு கேள்வி சாரு ஒரு சாமியாரை பற்றி எழுதியதை பற்றி உங்கள் கருத்து என்ன?

  பிறகு கமல் அய்யயோ ரஜினி அய்யயோ சினிமா காரங்களே வேண்Tஆம்பா...அவங்கள மாதிரி ஒரு பவர்புள் ஆப்பர்சியூனிஸ்டிக் கம்யூனிட்டி(ஜாதி) தமிழ்நாட்டுல இல்ல. சரி தமிழன் எல்லாம் கட் அவுட்டுக்கு பாலபிஷேகம் பண்ணுற கும்பலாய் போயிட்டோம் என்ன பண்றது.
  மக்கள் திருந்Tஹினா சரி.

  பதிலளிநீக்கு
 26. Yeah, Hate Kamal Haasan because he is the real reason for all the religious troubles and yeah, he is an "islam hater"!

  Long live the most secularist leader of all time Dr. Kalaigner - he has always done great things for the minority.

  Right?!

  பதிலளிநீக்கு
 27. தலைவரே, நேரிடையாக சாருவை ஆதரித்து பதிவு போட்டிருக்கலாம். சுத்தி வளைச்சு ஜெமோவை திட்டு பதிவு போட்டு குளிர வைக்க வேண்டுமா? அதுவும் யுத்தம் இப்படி வெடித்த போது?

  :))

  பதிலளிநீக்கு
 28. கார்க்கி!

  காமெடியாக இருக்கிறது. நீங்களெல்லாம் சாருவோடு யுத்தம் செய்வதாக நினைத்துக் கொண்டு செய்துக் கொண்டிருப்பவற்றை நினைத்தால் :-)

  பதிலளிநீக்கு
 29. துரதிருஷ்டவசமாக இன்னும் பெருமாள்கள் மட்டுமே ஆட்டுமந்தையாய் ஜெமோ பின்னே சென்றுக் கொண்டிருக்கிறார்கள், பின் தொடரும் நிழல்களின் குரல்களாக, பரிதாபமாய் ‘மே'வென்று கத்திக் கொண்டிருக்கிறார்கள்.

  100 % correct!

  S.Ravi
  Kuwait

  பதிலளிநீக்கு
 30. Who are these people - Jeyamohan and Charu? Do they have 3 heads and 4 legs and 2 more in between..
  Great article Mr Lucky

  பதிலளிநீக்கு
 31. யுவகிருஷ்ணா! உங்களிடமிருந்து இப்படி ஒரு அபத்தமான பதிவை நான் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை. இந்து மதம் சகிப்புத்தன்மை உள்ள மதம். அதனால்தான் இங்கே உங்களைப் போன்ற, மஞ்சள்துண்டரைப் போன்ற, கருஞ்சட்டையரைப் போன்ற கோடரிகளும் எந்த ஆபத்துமின்றி உலவி வருகின்றன. வேற்று மதத்தில் இருந்துகொண்டு இப்படி எழுதினால் வெட்டிவிடுவார்கள்! அடுத்த பதிவு அடிக்க விரல் இருக்காது! இதுதான் உண்மை!

  உண்மை நண்பன்!

  பதிலளிநீக்கு
 32. அப்துல் சலாமுக்கு! ஜெ.மோ மேற்கோள் புரியாததற்கு காரணம் உங்களுக்கு அவர் பேசும் தத்துவ கலாச்சார இயக்கத்தின் பின்னணி விளங்காததனாலே. ஒரு விசயம் நவீனமாக இருக்கிறது எனும் போது புதுமையை சொல்கிறோம். நவீனத்துவம் எனும் போல் இயக்கத்தை குறிக்கிறோம். ஜெ.மோ தீவிரத் தளத்திலிருந்து வெகுஜன வாசிப்புக்கு குதித்துள்ள டார்ஜான் என்பதால் சில சமயம் இத்தகைய குழப்பங்கள் பழக்கமற்ற வாசகருக்கு ஏற்படலாம்.

  அடுத்து யுவகிருஷ்ணாவுக்கு! உங்கள் ஜெ.மோ பகடி அருமை. ஆனாலும் ஜெ.மோ போன்றவர்களின் மதச்சாய்வை வாசகர் கண்டிப்பதற்கு ஒரு அரசியல் கலாச்சார காரணம் உள்ளது. ஒரு எழுத்தாளன் தீவிர வலதுசாரியாகவும் இருக்கலாம். தவறில்லை. உலக இலக்கியத்தில் இவர்களை விமர்சகர்கள் பொங்கி வடிப்பதில்லை. உதாரணமாக, ஷேக்ஸ்பியர் கலகத்தை வெறுத்தவர்; முடியாட்சியை, அதன் எண்ணற்ற குறைகளுடன் சேர்த்தே, ஆதரித்து எழுதியுள்ளார். எனக்குத் தெரிந்து இடதுசாரிகள் இவருக்கு எதிராக கோஷம் இட்டதில்லை. ஆனால் இங்கு திராவிட பாரம்பரியம் அதன் எழுத்தாளர்களிடத்து இந்து மதத்தை கண்டிக்கும் போக்கை வளர்த்து விட்டது. நாகர்கோவில் பகுதியிலுள்ள ஒரு மிகப்பிரபலமான இடதுசாரி நாவலாசிரியர் குமாரகோவிலுக்கு ரகசியமாய் சென்று வருபவர். மேலும் பல தமிழ் எழுத்தாளர்கள் இப்படியான கொரில்லா பக்தியாளர்களே. அவர்கள் தங்கள் ’பக்தியை’ வெளிப்படையாக எழுத முடியாததற்கு மேற்சொன்ன திராவிட கலாச்சாரம் காரணம். மனுஷ்யபுத்திரன் தனது சமீபத்திய அகநாழிகை பேட்டியில் சொல்லியுள்ளது போல் எழுத்தாளர்கள் தங்கள் வக்கிரங்களை அல்லது மறைவான எண்ணங்களை நாற்சந்திக்கு கொண்டு வரவேண்டும். அதுவே உகந்தது.

  ஜெ.மோவை நாம் அரசியல் ரீதியாக அணுகக் கூடாது; வழுக்கி விடுவார். அதற்கு அவரது ஆயுதத்தையே எடுக்க வேண்டும்: தர்க்கம்.

  பதிலளிநீக்கு
 33. //இப்படியான கொரில்லா பக்தியாளர்களே//

  வாவ்!!! அற்புதமான வார்த்தை பிரயோகம். பாராட்டுக்கள்.
  உங்கள் ப்ளாக் நோக்கி இனி படைஎடுக்க வேண்டியதுதான் ( கொரில்லா படை எடுப்பு அல்ல )

  பதிலளிநீக்கு
 34. இந்துமதத்தை பற்றி பெருமையாக பேசினாலே எல்லோருக்கும் கோபம் வருகிறதே ஏன்?

  மற்ற மதத்தை தூக்கி வைத்து கொண்டாடும் போது கமலை செக்யூலரிஸ்டாக உங்களால் பார்க்க முடிந்தது, அதே சமயம் அவர்களை கண்டித்தாலோ, இந்து மத பெருமைகளை பேசினாலோ உடனே திட்ட ஆரம்பித்து விடுகிறீர்கள்,

  நம் நாட்டின் செக்யூலரிஸ்ட் வேஷம் உங்களுக்கும் பொருந்துகிறது பெருமாளே....!

  பதிலளிநீக்கு
 35. மும்பை பொறுத்தவரை piracy கண்ட்ரோல் செய்வது underworld தாவூத் இப்ராகிம்,
  தனக்கு பிடித்த டைரக்டர் சுபாஷ் கய் என்றால் லேட்டாக cd ரிலீஸ் செய்வான் என்று
  படித்திருக்கிறேன்,piracy பணம் தீவிரவாதத்துக்கு பயன்படுகிறது என்பது உண்மை, தமிழ்நாட்டுக்கு வேண்டுமானால் பொருந்தாது.

  பதிலளிநீக்கு
 36. //நண்பர்களே, ஒரு விஷயத்தை நீங்கள் உணர்ந்திருக்கலாம். மொட்டைக்கடுதாசி உங்களுக்கும் வந்திருக்கலாம், அல்லது நீங்களும் யாருக்காவது எழுதியிருக்கலாம். உலகிலேயே ‘பெருமாள்' என்ற பெயரில்தான் மொட்டைக்கடுதாசி அதிகமாக எழுதப்படும், தெரியுமில்லையா? அப்பெயருக்கான வலிமையும், தன்மையும் அது//

  அறிவழகன் சாரு நிவேதிதாவின் பெரும்பாலான செக்ஸ் கதைகளில் அவர் தன்னை பெருமாள் என்றே அழைத்துக் கொல்வார் .

  சாருவை மொட்டைகடுதாசி எழுத்தாளர் என அழைப்பதை கண்டிக்கிறோம் ,

  ஹிட்ஸ் வேண்டி எழுதப்பட்ட பதிவு , அவ்வளவுதான்

  பதிலளிநீக்கு
 37. மிஸ்டு கால கண்டுபிடிச்சவனுங்களுக்கு செல் யூஸ் பண்ணத்தெரியலனு சொல்வது ஏற்புடையது அன்று... மற்ற கருத்துக்களுக்கு நான் ஆமாஞ்சாமி..

  பதிலளிநீக்கு