4 பிப்ரவரி, 2010

07.02.10 - படம் பார்க்க இலவச டிக்கெட்!


ஓசியில் யாராவது உங்களுக்காக பிரத்யேகமாக படம் போட்டு காட்டும் வாய்ப்பு என்பது உங்கள் வாழ்க்கையில் எப்போதாவது அரிதாகதான் நிகழும். யாராவது இளிச்சவாயர் மாட்டினால் மட்டுமே இது சாத்தியம். ‘உரையாடல்' அமைப்பு மிக்க மகிழ்ச்சியோடு அந்த இளிச்சவாய் பட்டத்தை ஏற்றுக் கொள்கிறது. வரும் ஞாயிறு உங்களுக்காக இலவசமாக கிழக்கு மொட்டை மாடி அரங்கில் ஒரு ஆங்கிலப்படம் திரையிடப்படுகிறது. யார் வேண்டுமானாலும் வரலாம். படம் பார்க்கலாம். வீட்டில் இருந்து வரும்போது ஒரு தலையணையையும், பாயையும் நீங்கள் கொண்டு வருவதாக இருந்தால் படுத்துக்கொண்டே படம் பார்க்கும் வசதியும் கிழக்கு அரங்கில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. நாமறிந்த அளவில் உலகில் இதுவரை எந்த அரங்கிலுமே இப்படிப்பட்ட வசதி இல்லை.

பெயர்: The Beautiful Country

மொழி : ஆங்கிலம்

வெளியான ஆண்டு: 2004

பட நேரம் : 125 நிமிடங்கள்

நாள் : 07.02.10, ஞாயிற்றுக்கிழமை
நேரம் : மாலை 5.30 மணி
இடம் : கிழக்கு பதிப்பகம் மொட்டைமாடி, எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை.

அனைவரும், ஆர்வமுள்ள தங்கள் இஷ்டமித்திர பந்துக்கள் மற்றும் பேட்டுகளோடு வருமாறு கேட்டுக் கொள்கிறோம். படத்தின் போஸ்டரைப் பார்த்தால் ‘பிட்’ பிட்டாக சூப்பராக இருக்கும் என்று தோன்றுகிறது.

தொடர்புள்ள சுட்டிகள்:

http://naayakan.blogspot.com/2010/02/blog-post_04.html

http://en.wikipedia.org/wiki/The_Beautiful_Country

http://www.imdb.com/title/tt0273108/

10 கருத்துகள்:

 1. anbulla lucky

  thiraipadam parkka azhaithamaikku nandri munbe naayakan l arinthu kondaein

  anal sendra varuda thirayidalukku indru koopidugireerkale ?? (17.1.09)

  blog la ithellam sagajamappa

  anbudan
  sundar g

  பதிலளிநீக்கு
 2. தங்கள் வீட்டில் இருந்து வரும்போது ஒரு தலையணையையும், பாயும், இஷ்டமித்திர பந்துக்கள் மற்றும் பேட்டுகளோடு வருமாறு கேட்டுக் கொள்கிறோம்.

  பதிலளிநீக்கு
 3. அன்புள்ள சுந்தர்,

  யானைக்கு மட்டுமல்ல, சில நேரங்களில் எலிகளுக்கும் அடி சறுக்குகிறது :-(

  தலைப்பை சரி செய்துவிட்டேன் :-)

  பதிலளிநீக்கு
 4. அன்புள்ள ஆசிர்!

  எதை சொன்னாலும், இடக்கு முடக்காக புரிந்துகொள்வது தமிழனின் பாரம்பரிய பெருமை என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறீர்கள்.

  நான் பாக்யராஜ் அல்ல :-)

  பதிலளிநீக்கு
 5. then plz explain

  what do you mean by நான் பாக்யராஜ் அல்ல :-)

  i cant get you here

  பதிலளிநீக்கு
 6. //நாமறிந்த அளவில் உலகில் இதுவரை எந்த அரங்கிலுமே இப்படிப்பட்ட வசதி இல்லை//

  சார்ஜா சத்திரம் திரை அரங்கில் இந்த வசதி இருக்கிறது :-)) சார்ஜா இந்த உலகத்தில்தான் இருக்கிறது :-)

  பதிலளிநீக்கு
 7. லக்கி, கூட்டம் எந்த அளவுக்கு வந்திருந்தது?
  அடுத்த அழைப்பின்போது, கலந்துகொள்ள வாய்ப்பிருக்குமா என்று திட்டமிட உதவும்.

  பதிலளிநீக்கு
 8. கற்பவன் 20 பேர் வரை வந்திருந்தார்கள். 40 பேர் வந்தாலும் அமர்ந்துப் பார்க்கலாம்.

  பதிலளிநீக்கு
 9. //சார்ஜா சத்திரம் திரை அரங்கில் இந்த வசதி இருக்கிறது :-)) சார்ஜா இந்த உலகத்தில்தான் இருக்கிறது :-)
  //

  தகவலுக்கு நன்றி அண்ணாச்சி!

  சார்ஜா வரும்போது மறக்காமல் தலையணையையும், பாயையும் எடுத்து வந்துவிடுகிறேன்.

  பதிலளிநீக்கு