16 டிசம்பர், 2009

கிழக்கிலிருந்து வீசப்படும் அணுகுண்டு!


தினமலரில் முன்பெல்லாம் ராஜீவ் கொலைவழக்கு விசாரணையை நக்கலடித்து கார்ட்டூன் வரையப்படும். பீட்டர் வரைவார். பெரும்பாலும் ஒரே விஷயம்தான். வழக்கு விசாரணையின் போக்கைக் கண்டு வானில் இருந்து ராஜீவின் ஆவி தலையில் அடித்துக் கொள்ளும். நையாண்டி கார்ட்டூனாக இருந்தாலும், அவையெல்லாம் எவ்வளவு அர்த்தம் பொதிந்தது என்பதை இப்போது அறிய முடிகிறது. ராஜீவ் கொலைவழக்கை விசாரித்த சி.பி.ஐ.யின் தலைமைப் புலனாய்வு அதிகாரி - சி.பி.ஐ. (ஓய்வு) கே.ரகோத்தமன் ‘ராஜீவ் கொலை வழக்கு - மர்மம் விலகும் நேரம்’ என்ற பெயரில் புத்தகம் எழுதியிருக்கிறார். இதுவரை வெளிவராத, திடுக்கிடச் செய்யும் தகவல்கள் - ஆதாரங்களுடன் என்று அட்டையில் குறிப்பிடப்பட்டிருப்பது நூற்றுக்கு நூறு உண்மை.

’விடுதலைப்புலிகள் செய்தார்களா?’ என்றெல்லாம் கேள்விகளை எழுப்பி, ஆதாரங்களை அடுக்க முனையாமல் ‘அவர்கள்தான் செய்தார்கள், அப்புறம் என்னாச்சுன்னா...’ என்ற ரேஞ்சுக்கு ரகோத்தமன் அடித்து ஆடியிருக்கிறார். வெறுமனே தன் கூற்றாக சொல்லாமல், சி.பி.ஐ. வசமிருந்த ஆதாரங்களையும் சேர்த்து அச்சிட்டிருக்கிறார். கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்களை இதுபோல புத்தகத்தில் ஓய்வுபெற்ற அதிகாரி வெளியிடலாமா? அதில் ஏதேனும் சட்டச்சிக்கல்கள் இருக்கிறதா என்று தெரியவில்லை.

புலனாய்வில் நடந்த குளறுபடிகள் பலவும் அதிர்ச்சியளிக்கக் கூடியவை. விசாரிக்க நினைத்தவர்களை விசாரிக்க முடியாமல் மேலதிகாரிகளால் புலனாய்வுப் பிரிவினரின் கைகள் கட்டப்பட்டிருந்ததை வெட்ட வெளிச்சமாக்கி இருக்கிறார். சி.பி.ஐ. வசம் இருந்த ஹரிபாபுவின் கேமிராவில் பதிவான போட்டோக்கள், இவர்கள் கைக்கு கிடைப்பதற்கு முன்னரே இந்துவில் வெளியான கூத்தையும் எழுதியிருக்கிறார். ரகோத்தமன் புத்தகம் முழுக்க சுட்டிக்காட்ட விரும்பும் விபரம் என்னவென்றால் இந்திய உளவு அமைப்புகளின் அலட்சியம்.

ராஜீவ் படுகொலையானதுமே பிரதமர் சந்திரசேகர் கேபினட் அமைப்பை கூட்டுகிறார். “யார் செய்தது?” என்று கேட்கிறார். கேபினட்டில் இருந்த சுப்பிரமணியசாமி உடனே விடுதலைப்புலிகள் தான் செய்திருப்பார்கள் என்று ஆணித்தரமாக அடித்துப் பேசுகிறார். ரா தலைவரோ ”I have a mole in LTTE. I am sumre it was not done by LTTE" என்கிறார். விடுதலைப்புலிகளுக்குள் ஊடுருவியிருப்பதாக அவர் குறிப்பிடும் இந்திய உளவாளி யார் தெரியுமா? கிட்டு.

ராஜீவை கொல்ல விடுதலைப்புலிகளுக்கு முக்கிய காரணமாக இருந்தது அமைதிப்படையின் நடவடிக்கைகள் என்பது எல்லோருக்குமே தெரிந்த விஷயம்தான். விடுதலைப்புலிகள் காங்கிரஸ் கட்சிக்கு ஐந்து லட்சரூபாய் அந்த தேர்தலில் நிதியாக கொடுத்தது யாருக்காவது தெரியுமா? படுகொலைக்கு சில வினாடிகள் முன்பாக சின்னசாந்தன் காங்கிரஸ் துண்டினை தோளில் போட்டுக்கொண்டு ராஜீவுக்கு கைகொடுத்ததாவது யாருக்காவது தெரியுமா? - விடுதலைப்புலிகளின் திட்டம் மிகத்துல்லியமானதும், யாராலும் சந்தேகிக்கப்பட முடியாததாகவும் இருந்திருக்கிறது. பத்மநாபா கொலைவழக்கின் போது நடந்த சம்பவங்களும் இன்ச்-பை-இன்ச் ஆக விவரிக்கப்பட்டிருக்கிறது. ஏனோ இவ்வழக்கையும் சேர்த்து விசாரிக்க சி.பி.ஐ. அனுமதிக்கப்படவில்லை.

நூலின் பத்தொன்பதாவது அத்தியாயம் தற்கால தமிழக அரசியலில் அணுகுண்டை வீசவல்லது. வைகோவை குறித்த அத்தியாயம். வைகோ கள்ளப்படகில் இலங்கைக்கு சென்று பிரபாகரனை சந்தித்துப் பேசியபோது எடுத்த வீடியோ காட்சிகள் குறித்து விரிவாக சொல்லப்படுகிறது. சிபிஐ அதிகாரிகள் அந்த காட்சிகளை முழுமையாக பார்த்திருக்கிறார்கள். வைகோ அவரது தலைவர் கலைஞரைப் பற்றிப் பேசும்போதெல்லாம் பிரபாகரன் பேச்சை சாமர்த்தியமாக மாற்றியதைப் பற்றியெல்லாம் விஸ்தாரமாக எழுதுகிறார் ரகோத்தமன். தமிழகத்தில் அத்தனை அரசியல்வாதிகளுக்கு இடையே வைகோவை மட்டுமே பிரபாகரன் முழுமையாக நம்பியதாகவும் சொல்கிறார். இப்படி இருக்கையில் இப்படுகொலை குறித்து வைகோவுக்கு முன்கூட்டியே தெரியாமல் இருக்குமா? என்று கேள்வியும் எழுப்புகிறார்.

மே 21க்கு முன்பாக சிவராசன் தன் குழுவுக்கு கொடுங்கையூரில் கொடுத்த மாட்டுக்கறி விருந்துக்கு வெள்ளுடையில் வந்து சென்றவர் வைகோவின் தம்பி ரவிச்சந்திரன் என்று புத்தகம் ஆணித்தரமாக அடித்துச் சொல்கிறது. இதற்குப் பிறகே ஸ்ரீபெரும்புதூரில் அதே தேதியில் நடக்கவிருந்த கலைஞரின் கூட்டம் ரத்தானதாகவும் தெரிவிக்கிறது. வெள்ளுடையில் வந்து சென்றவரும், சிவராசனும் “அடுத்த சி.எம். வைகோதான்!” என்று பேசிக்கொண்டதாக சின்னசாந்தன் வாக்குமூலமும் கொடுத்திருக்கிறார்.

முன்னதாக இந்திய-இலங்கை உடன்பாட்டை வேண்டாவெறுப்பாக ஏற்றுக்கொண்ட பிரபாகரனை குறித்து, பொதுக்கூட்டம் ஒன்றில் 'Prabhakaran thought of committing suicide' என்று வைகோ பேசியதை முன்வைத்து, ராஜீவ் கொலைவழக்கில் வைகோ ஒரு சாட்சியாகவே சேர்க்கப்பட்டிருக்கிறார். 250வது சாட்சியான அவர் நீதிமன்றத்தில் வீடியோவில் இருப்பது நான்தான். ஆனால் குரல் மட்டும் என்னுடையதல்ல என்று பல்டி அடித்திருக்கிறார். பின்னர் தடய அறிவியல் துறையினர் வீடியோவைப் பரிசோதித்து, குரல் வைகோவுடையதுதான் என்று உறுதிப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் இதுபற்றியெல்லாம் மேம்போக்கான விசாரணையே நடந்தது என்று ரகோத்தமன் வருந்துகிறார். மரகதம் சந்திரசேகரை தவிர்த்து மீதி எல்லோருமே இன்றும் உயிருடன் இருப்பதால், அந்த விசாரணையை இப்போதும் மேற்கொள்ள முடியும் என்று ‘பகீர்’ தகவலையும் கொடுக்கிறார்.

இப்படியாக அதிரடியான தகவல்களுடனேயே சுவாரஸ்யமான க்ரைம் நாவலைப்போல நூல் எழுதப்பட்டிருக்கிறது. ராஜீவ் கொலைவழக்கு என்ற இந்த க்ரைம் நூலிலும் கூட உருக்கமான இரண்டு காதல் கதைகள் உண்டு. ஒன்று ராஜீவோடு மரணமடைந்த போட்டோகிராபர் ஹரிபாபுவின் காதல். மற்றொன்று நளினி முருகன் மீது வைத்திருந்த தெய்வீக காதல்.

ராஜீவ் கொலைவழக்கின் மர்மங்கள் விலகுகிறதோ இல்லையோ, பல மர்ம மனிதர்களின் முகமூடி கிழிகிறது!

கட்டாயம் வாசிக்க வேண்டிய புத்தகம்!


நூலின் பெயர் : ராஜீவ் கொலை வழக்கு - மர்மம் விலகும் நேரம்

நூல் ஆசிரியர் : கே.ரகோத்தமன்

விலை : ரூ.100

பக்கங்கள் : 232

வெளியீடு : கிழக்கு பதிப்பகம், 33/15, எல்டாம்ஸ் சாலை,
ஆழ்வார்ப்பேட்டை, சென்னை - 600 018.
தொலைபேசி : 044-42009601/03/04
தொலைநகல் : 044-43009701

நூலினை ஆன்லைனில் வாங்க இங்கே சொடுக்கவும்.

23 கருத்துகள்:

 1. நல்ல சுவாரசியமான தகவல்கள்.

  பல்லு பிடிங்கின பாம்பு மாதிரி தான்.....அணுகுண்டுலாம் ஒன்னும் இல்லை சார்.

  பதிலளிநீக்கு
 2. வியாபாரம் எண்டால் என்னவும் எழுதுவாங்கள் ஈழத்தின் இரத்த வரலாறுகளை எழுதி விற்று பிழைக்கும் கேவலமான தொழில் அணமைக்காலமாக தமிழ்நாட்டில் நன்றாக நடக்கிறது இவர் எழுதினதெல்லாம் உணமையெண்டு எவனுக்கு தெரியும்
  ஆனால் தயவு செய்து வீரத்தமிழன் என்றால் அவன் ஈழத்தில் தான் இருந்தான் இந்தியாவில் இருப்பவனெல்லாம் தமிழன் உணர்வுகளை விற்றுப்பிழைக்கும் கோழைகள் உங்களால்தான் நாங்கள் இப்படி அழிந்து போனோம் இல்லாவிடில் என்றோ இலங்கையையே வென்றிருப்போம்

  பதிலளிநீக்கு
 3. இந்த புத்தகத்தின் மூலம்... கிழக்கு பதிப்பகம்... ஜெ... கட்சி... காங்கிரஸ் கூட்டணி ஏற்ப்பட வேண்டும்... அச்சாரம் போட விரும்புவது போல் தெரிகிறது...

  பத்பநாபா கொலை வழக்கில் முன்னாள் தமிழக உள் துறை செயலர் நாகராசன் தடாவில் கைது செய்யப்பட்டாரே? ஜெ... ஆட்சியில்... அதனால் அப்போதைய தமிழக உள்துறை அமைச்சருக்கு தொடர்பு உண்டு... என்கிறாரா? ரகோதமன்...

  1991 இல் தமிழக சட்டமன்றத்தில் பேசிய ஜெ... சில அரசியல் தலைவர்களை கைது முடியவில்லை என்பதை வேறு குரலில் ரகோதமன் சொல்லி இருக்கிறார்...

  எப்படியோ... கிழக்கு பதிப்பகம் போன்ற பார்ப்பனர்கள்...

  ராஜிவ் எனும் நவீன நீரோ மன்னன் செத்தாலும்... அதன் பலன்... பார்ப்பன ஜெவுக்கு செல்ல வேண்டும்...

  பிரபாகரன் மறைந்து விட்டதாக சொன்னாலும்... அதன் பலன் ஜெவுக்கு செல்ல வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறார்கள்...

  பதிலளிநீக்கு
 4. இது பெரும் வெடி என்று ஆங்கிலத்தில வந்த ஒரு வரியே போதும் தயவு செயது உதவிதான் செய்யவிலை இன்னும் எங்களை எங்கள் வீரத்தை கேவலப்படுத்தாதீரகள்

  பதிலளிநீக்கு
 5. இந்த புத்தகத்தில் குறிப்பிட்டு இருக்கும் மாட்டு கறி விருந்து என்றால் என்ன அர்த்தம்...

  அங்கே...கோழி கறி இருந்து இருக்காதா? இல்லை ஆட்டு கறி இருந்து இருக்காதா?

  கறி விருந்து என்றால் போதாதா? மாட்டு கறி விருந்து என ஏதோ வக்கிர தனமாக எழுதி இருப்பது இருக்கிறதே?

  ஏனோ ரகோதமன்... ராஜிவின் பயண திட்டங்களை பார்த்து கொண்ட மார்கெரட் ஆல்வா பற்றி எழுதி இருக்கிறார்?

  இவ்வளவு எழுதி இருக்கும் ரகோதமன்... அந்த பாதுகாப்பு பணியில் டிஐஜி ஆக இருந்து பணி இடை நீக்கம் ஆன ராகவன் பின்னாளில் சிபிஐ இயக்குனர் ஏன் ஆனார் சொல்லாமல் விட்டது ஏனோ? ராகவன் பார்ப்பனர் என்பதாலா?

  அந்த இடத்தில் எஸ்பி ஆக இருந்த நாஞ்சில் குமரன்... பணி இடை நீக்கம் பெற்று... பின்னாளில் டிஜிபி ஆக முடியாமல் போனது... அவர் பார்ப்பனர் இல்லை என்பதாலா?

  டி.கார்த்திகேயனை குற்றம் சாட்டும் ரகோதமன்... அந்த இடத்தின் பாதுகாப்பு அதிகாரி ராகவன் என்ன மயிறை புடுங்கினார் என கேட்க மாட்டாரே?

  டி.கார்த்திகேயன் பார்ப்பனர் இல்லையே?

  பதிலளிநீக்கு
 6. தமிழ்குரல்!

  புத்தகத்தைப் படியுங்கள் என்பதே நான் உங்களுக்கு கூறும் பதில்!

  பதிலளிநீக்கு
 7. தமிழ்குரல்!

  புத்தகத்தைப் படியுங்கள் என்பதே நான் உங்களுக்கு கூறும் பதில்!

  லக்கி,

  நான் புத்தகத்தை படித்து விட்டு... மேலும் சொல்ல முடியும்...

  இதே போல் கிழக்கு... பார்ப்பர்களுக்கு ஆதரவாக தூக்கி பிடிக்க... எத்தனை புத்தகங்கள் வேண்டுமானாலும் வெளியிடலாம்...

  பதிலளிநீக்கு
 8. வடிவேலுவுக்கு போட்டிய தமிழ்நாட்டில ரொம்ப பேர்தான் கிளம்பிட்டாகலைய...

  பதிலளிநீக்கு
 9. அண்ணா.. எதுங்கண்ணா வீரம்? இவ்வளவு ஆதாரம் இருந்தும் இன்னும் இந்த கொலைக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லைன்னு சொல்றதா? நீங்க தப்பான ஒரு தலைவரால தோந்துட்டு எங்களை கை காட்டுவீங்களா? நல்லா இருக்குலே!

  பதிலளிநீக்கு
 10. புத்தகத்தை பற்றி நீங்கள் எழுதியதை படிக்கும்போதே திடுக் திடுக்...

  புத்தகம் எப்படி இருக்குமோ...
  கண்டிப்பாய் படிக்கிறோம்..

  பதிலளிநீக்கு
 11. ஒரு தகவல்... ரகோத்தமன் பார்ப்பனர் இல்லை.

  பதிலளிநீக்கு
 12. இந்த பதிவிற்கு சற்றும் தொடர்பில்லாத ஒரு சர்ச்சை எதற்கென்று தெரியவில்லை. இருந்தாலும் சும்மா இருக்க முடியுமா. இலவசமாக இடம் கிடைத்தால் பாப்பானை திட்டுபவர்களுக்கு ஓர் கேள்வி. இன்னும் கோவிலுக்குள் செல்ல முடியாமல் இருக்கும் தலித்துகளுக்காக நீங்கள் என்ன செய்தீர்கள். இதை சரி செய்யவேண்டிய தலைவருக்கு இலங்கையில் என்ன வேலை. தலித்துகள் இன்னும் இங்கே முன்னேரமால் இருக்க, அட அதைவிட முக்கியம், தலித் என்று ஒருவர் இருக்கவே, யார் காரணம். பாப்பான் மட்டும் தான் பாப்பானை சப்போர்ட் செய்கிறானா, மற்ற ஜாதியினர் நியாயமா. ஞானி பாணியில் சொன்னால் இது உங்களுக்கான கேள்வி, எனக்கு எந்த பதிலும் தேவையில்லை.

  மற்றபடி புத்தகம் இன்னும் படிக்கவில்லை. உங்கள் விமர்சனம் புத்தகத்தை வாங்க தூண்டுவதேன்னவோ உண்மைதான்.

  பதிலளிநீக்கு
 13. ரகோத்தமன் பார்ப்பனர் இல்லைன்னு சொன்னதும் எல்லாமே அடங்கிடுச்சு போல இருக்கு! பொழப்பு இல்லாத பசங்க..

  பதிலளிநீக்கு
 14. இதைப் படிங்க தமிழ் குரல்.. சீமான் உள்ளிட்ட ‘முற்போக்கு’ நரிகளின் தேவர் சாதிவெறி

  அதை விட்டுட்டு எவன் உன்னை அடிக்க மாட்டானோ, அவனை மட்டும் வீரமா தாக்குறது பேர் வீரம் இல்லை. பேடித்தனம்! தில் இருந்தா உண்மையான ஆதிக்க வர்க்கத்தை எதிர்க்க கொஞ்சம் உப்பு போட்டு சாப்பிடுங்க!!

  மத்தபடி I have nothing personal against you.

  பதிலளிநீக்கு
 15. யோவ்.. லக்கி.. இந்த கமெண்டை ரிலீஸ் பண்ண வேண்டாம். நல்லா இருக்கீரா?

  பதிலளிநீக்கு
 16. லக்கி.. வேட்டைக்காரன் எப்படி?

  பதிலளிநீக்கு
 17. இந்தியன்,

  நான் எங்கும் ரகோதமனை பார்ப்பனர் என சொல்ல வில்லை...

  இந்த தலைப்பை பார்த்தாலே புரியும்...

  இது ரகோதமனின் அணுகுண்டு அல்ல... கிழக்கில் இருந்து வீசப்படும் அணுகுண்டு...

  கிழக்கு தொடர்ந்து பார்ப்பனீயத்திற்கு ஆதரவாக செய்யும் வேலைகளை கண்டும் கணாமல் இருக்க முடியாதே?

  என்னாலும் சொல்ல முடியும்... ராஜிவ் கொலையில் இன்னும் பலருக்கு தொடர்பு இருக்கலாம்... உதாரணம் சு.சாமி, நரசிம்மராவ்...

  இவர்களை பற்றி என்ன வந்துள்ளது படித்து விட்டு சொல்கிறேன்...

  பதிலளிநீக்கு
 18. இந்தியன்,

  சீமான் கண்டிக்கபட வேண்டியவரே... அதில் எந்த சந்தேகமும் இல்லை... சில ஆண்டுகளுக்கு முன் சீமானின் பேச்சுக்கும் செயலுக்கும் தொடர்பில்லை என... அவரை பற்றி அறிந்துள்ளேன்... இப்போது அவரது பேச்சும்... செயலும் ஒன்றாகி போய் இருக்கலாம்....

  சாதியத்தை யார் உயத்தினாலும் அவர்களை ஆதரிக்க முடியாது...

  பார்ப்பனீயத்தை பிடித்து தொங்கி கொண்டு இருக்கும்... நீங்கள் சீமானை திட்டுவது... சாத்தான் வேதம் ஓதுவது போல் இருக்கிறதே?

  பதிலளிநீக்கு
 19. லக்கி என்னுடைய பின்னூட்டத்தை நீங்கள் தடை செய்துவிட்டீர்கள். நான் கேட்ட கேள்விகள் நியாயமானதே.

  பதிலளிநீக்கு
 20. சங்கரராமன் கொலை வழக்கு, அனுராதாரமணனின் பாலியல் துன்புறுத்தல் பற்றி கிழக்கு பதிப்பக்கத்தாருக்கு புத்தகம் எழுத ஆசிரியர் வேண்டுமானல் சொல்லட்டும். ஆனால் அதைப் பற்றி கிழக்குப் பதிப்பகம் கண்டுகொள்ளாதே. நீங்களும் வழக்கம் போல என் பின்னூட்டத்தை தடை செய்துவிடுங்கள் லக்கி!

  பதிலளிநீக்கு
 21. Why this CBI Bureaucrat is silent about Su Swamy , Cha Swamy and some of the congress leaders ? Dont support the wrong book it might be right book for you as it speaks against Vaiko

  பதிலளிநீக்கு
 22. hi yuva ,

  i am new one to ur blog .., very nice !!! ragothaman book should take a quake to all over india

  பதிலளிநீக்கு
 23. இது குறித்து திருச்சி வேலுச்சாமியின் பேட்டியினைக் கேளுங்கள் http://rajivgandhi-assassination.blogspot.com/
  நன்றி

  பதிலளிநீக்கு