17 டிசம்பர், 2009

ஞாநியின் பூச்செண்டு!


சாரு எழுதிய 'ஞாநி பூச்செண்டு' மேட்டர் பற்றி எழுதியதற்கு ஞாநியின் விளக்கம் அல்லது மறுப்பு. நண்பர் ஒருவருக்கு ஞாநி அனுப்பிய மடல் இங்கே...

என் பேச்சு திரித்தும் வெட்டியும் போடப்பட்டு அவதூறு செய்யப்படுகிறேன், இலக்கிய புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சிகளில் பரிசுகளாக புத்தகங்களைத்தான் தரவேண்டுமென்பதே என் பேச்சின் அழுத்தம். எல்லா நிகழ்ச்சிகளிலுமே நூல்களை நினைவுப்பரிசுகளாகத்தருவதையே நான் வக்லியுறுத்துகிறேன் வலியுறுத்துகிறேன். எனக்கு மேடையில் தரப்படும் பூச்செண்டை நான் எடுத்துப் போய் ப்யன்படுத்த வழியில்லை. அவற்றில் உள்ள பூக்களை பூ வைக்கும் பழக்கத்தில் உள்ள பெண்களுக்குக் கொடுத்துவிடுவது வழக்கம். அதைத்தான் அன்றும் செய்தேன். எனக்குப் பயன்படாத பூச்செண்டை தருவதற்கு பதில், பொன்னாடை என்று பொய் சொல்லிப் போர்த்தும் கைத்தறி துண்டு தந்தால் கூட டவலாகப் பயன்படுத்துவேன் என்று சொன்னேன்.

எழுத்தில் தரும் பூச்செண்டு என்பது ஓர் அடையாளம் . பாராட்டின் அடையாளம். ஆஹா, பேஷ் பேஷ் , பலே என்பது போல அது ஒரு சொல் குறியீடு அவ்வளவுதான். எழுத்தில் தரும் குட்டு என்ன அசல் குட்டா ? அதுவும் கண்டனத்தின் குறியீடு மட்டுமே.

நான் பூச்செண்டுக்கு எதிரி அல்ல, அது பயன்படக்கூடியவர்களுக்கு மட்டும் கொடுத்தால் எனக்கு ஆட்சேபனையில்லை. நான் அந்தக் காசில் புத்தகம் வாங்கித்தரவே விரும்புவேன்.

ஞாநி

(நன்றி : இட்லிவடை.பிளாக்ஸ்பாட்.காம்)

5 கருத்துகள்:

 1. \\பொன்னாடை என்று பொய் சொல்லிப் போர்த்தும் கைத்தறி துண்டு...// பொன்னாடை என்பதுகூட ஒரு குறியீடுதான், பொய்யல்ல என்பது ஞாநிக்குத் தெரியாதா?

  பதிலளிநீக்கு
 2. லக்கி, நானும் இட்லிவடை பதிவில் நேற்று படித்தேன். நண்பருக்கு எழுதிய கடிதத்தை இப்படிப் பிரசுரிக்கலாமா என்பது ஒருபுறமிருக்கட்டும்.

  1. பொக்கே யாருக்கு உபயோகமாயிருக்கும்? அதைத் தலையிலா வைத்துக் கொள்ள முடியும்? அதை ஒரு பெண்மணிக்குக் கொடுத்தது குறித்த சாருவின் விமர்சனத்திற்கு இவரிடம் பதிலில்லை.

  2. சாருவின் மற்ற விமர்சனங்கள் (மனுஷ்ய புத்திரன், எஸ் ரா...) குறித்தும் இதில் ஒன்றும் இல்லை.

  பதிலளிநீக்கு
 3. ***
  1. பொக்கே யாருக்கு உபயோகமாயிருக்கும்? அதைத் தலையிலா வைத்துக் கொள்ள முடியும்? அதை ஒரு பெண்மணிக்குக் கொடுத்தது குறித்த சாருவின் விமர்சனத்திற்கு இவரிடம் பதிலில்லை.
  ***

  பெண்மணியிடம் பொக்கேயை கொடுத்தால் என்ன தவறு ? எனக்குத் தெரிந்தவரை பல பெண்களுக்கு விருப்பமானதும் கூட. (இதைத் தவிர ஞானி அங்கு பேசியது குறித்தோ / சாருவின் பதில் குறித்தோ எனக்கு எந்த கருத்தும் இல்லை.

  பதிலளிநீக்கு
 4. ஞாநியை திட்ட சாரு... ரொம்ப காலமா காரணம் தேடி கொண்டு இருந்திருப்பார் போல் தெரிகிறது...

  ஞாநியும்... பொக்கேவை வாங்க மறுத்து மாட்டி கொண்டார்... பாவம்...

  எங்காவது போய் சரக்கை ஏற்றி கொண்டு... வந்தி எடுத்து கொண்டே... சாரு... ஞாநியை திட்டி எழுதி விட்டு... நிம்மதியாக தூங்கி இருப்பார்...

  பதிலளிநீக்கு
 5. இது தீராத பிரச்சனை - யார் பெரியவர் என்ற ஈகோவும் அது சார்ந்த விவாதங்களும்..!!

  பதிலளிநீக்கு