30 நவம்பர், 2009

யோகி!


உங்களுக்கு குழந்தைகளைப் பிடிக்குமா?

அதிலும் குறிப்பாக பெண் குழந்தைகளை ரொம்பப் பிடிக்குமா?

குழந்தையின் சில்லென்ற பாதத்தை எடுத்து உங்கள் கண்களில் ஒற்றிக்கொள்ளப் பிடிக்குமா?

உங்கள் புதுச்சட்டையின் மீது உச்சா போனாலும், கோபித்துக் கொள்ளாமல் குழந்தையை ‘அம்முக்குட்டி, தாச்சிக்குட்டி’ என்று கொஞ்சக் கூடியவரா?

குழந்தைக்கு கொஞ்சமே வளர்ந்த லேசான முடியை உச்சிமுகர்வீர்களா?

எங்கோ தூரத்தில் ஏதோ ஒரு குழந்தையின் அழுகைக்குரலை கேட்டாலே உங்கள் இதயவீணையின் நரம்புகள் அறுந்துவிடுமா?

நீங்கள் ஐந்தரை மாத பெண் குழந்தைக்கு அப்பாவாகவோ / அம்மாவாகவோ இருக்கக் கூடும். இல்லையா?

உங்களுக்கு இன்னமும் குழந்தையில்லை. ‘அட இன்னும் கண்ணாலமே ஆகலைப்பா’ என்றும் சொல்லக்கூடும். பரவாயில்லை. ஆனாலும் உங்களுக்கு உங்கள் அக்காள் மகளோ, எதிர்த்த வீட்டு குழந்தையையோ, பக்கத்து வீட்டு குழந்தையையோ அல்லது டிராஃபிக் சிக்னல்களில் பிச்சையெடுக்கும் தாயின் மடியிலுள்ள குழந்தையையோ பிடிக்கும் இல்லையா?

- மேற்கண்ட கேள்விகளில் ஏதேனும் ஒன்றுக்காவது ‘யெஸ்’ என்று நீங்கள் பதில் சொல்லக் கூடுமானால், தயவுசெய்து ‘யோகி’ பார்க்காதீர்கள்.

இந்த எச்சரிக்கையை மீறி ஆவல்மேலிட நீங்கள் படம் பார்க்கலாம். பிரச்சினையில்லை. ஆயினும் நீங்கள் மனநோயாளி ஆகிவிடக்கூடிய சாத்தியம் அதிகம். பரவாயில்லையா?

”இந்தப் படத்தை பார்க்காதீர்கள்!” என்ற என்னுடைய பரிந்துரையே படத்தை இயக்கிய இயக்குனருக்கும், அமீருக்குமான உண்மையான பாராட்டு. எந்தத் தமிழ் படத்துக்கும் இல்லாத Uniqueness இப்படத்துக்கு உண்டு. மிகத்தரமான உருவாக்கத்தில் உருவாக்கப்பட்ட மிகச்சிறந்த திரைப்படம். சந்தேகமேயில்லை. அமீர் நடிகராகவும் வெற்றி கண்டிருக்கிறார்.

இருந்தாலும் ’இம்சை அரசன் 23ஆம் புலிகேசி’ படத்தில் ராஜா குதிரை ஓட்டினார் என்று தடை செய்ய முன்வந்த தணிக்கைக்குழு, ‘யோகி’யை எப்படி U/A சான்றிதழோடு அனுமதித்தது என்று புரியவில்லை.

மீண்டும் என்னுடைய வேண்டுகோள் : தயவுசெய்து இப்படத்தை பார்க்காதீர்கள். இப்படம் வசூல்ரீதியாக வெற்றியடையும் பட்சத்தில், திரைத்தொழிலில் ஈடுபட்டுள்ள குழந்தைகளை மேலும் கொடுமை செய்யும் கொடுமையான ட்ரெண்ட் தொடரக்கூடும்.

13 கருத்துகள்:

 1. என்ன லக்கி.. இப்படி பயமுறுத்தறீங்க :)))

  /’இம்சை அரசன் 23ஆம் புலிகேசி’ படத்தில் ராஜா குதிரை ஓட்டினார் என்று தடை செய்ய முன்வந்த தணிக்கைக்குழு, ‘யோகி’யை எப்படி U/A சான்றிதழோடு அனுமதித்தது என்று புரியவில்லை.
  //

  க்ரீன் சைல்ட்களை இன்னும் ப்ளூ கிராஸ் அமைப்பு அங்கீகரிக்கலை போலருக்குது.

  பதிலளிநீக்கு
 2. unga vimarsanam onnumae puriyala... padam pathadan puriyum pola... ana padam parungannu solliringala illa pakka vaenamnnu solluringala... ayoo mandai kayuthae...

  பதிலளிநீக்கு
 3. Dinesh,

  படம் பாக்குறதா இருந்தா திருட்டு வி.சி.டில பாருங்க, படத்த கமர்சியலா ஹிட்டாக்கிடாதீங்க, அப்புறம் திருவிழாக்காட்சி மாதிரி எல்லா சினிமாலயும் குழந்தையக் கொடுமப் படுத்துற சீன் வச்சிடுவாங்கன்னு சொல்றார்..

  பதிலளிநீக்கு
 4. குழந்தைகள் தொடர்பான கேள்விகளை வரிசையாகக் கேட்டுவிட்டு, அதிலிருந்து நூல் பிடித்து சினிமா விமர்சனம் செய்த தங்கள் பாணி புதுமையாக இருந்தது.

  பதிலளிநீக்கு
 5. எறும்புகள அந்த கொழந்த மேல ஊற விடுற ஸீன்... பாம்பு அந்த கொழந்தைய கொத்த வர்ற ஸீன் ...
  toooo much...

  பதிலளிநீக்கு
 6. //மீண்டும் என்னுடைய வேண்டுகோள் : தயவுசெய்து இப்படத்தை பார்க்காதீர்கள். இப்படம் வசூல்ரீதியாக வெற்றியடையும் பட்சத்தில், திரைத்தொழிலில் ஈடுபட்டுள்ள குழந்தைகளை மேலும் கொடுமை செய்யும் கொடுமையான ட்ரெண்ட் தொடரக்கூடும்//

  அதிர்ச்சி ஏற்படுத்திய பத்தி...நான் பார்க்க போவதில்லை...

  அன்புடன்,
  சுவாசிகா
  http://ksaw.me

  பதிலளிநீக்கு
 7. \\இந்த எச்சரிக்கையை மீறி ஆவல்மேலிட நீங்கள் படம் பார்க்கலாம். பிரச்சினையில்லை. ஆயினும் நீங்கள் மனநோயாளி ஆகிவிடக்கூடிய சாத்தியம் அதிகம். பரவாயில்லையா?// இப்படிப் பயமுறுத்தினீங்கன்னா எப்படிங்ணா நா படம் பார்க்குறது! அவ்வ்வ்வ்வ்வ்வ்...!

  பதிலளிநீக்கு
 8. This is a remake of a south african movie TSOTSI.

  http://www.imdb.com/title/tt0468565/

  பதிலளிநீக்கு
 9. hello lucky,

  cannot find ur articles now a days in tamilmanam and tamilish.

  what happened?

  பதிலளிநீக்கு
 10. யாசவி!

  எல்லா திரட்டிகளிலிருந்தும் விலகியிருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 11. Y?

  Hope u r the one among the pioneer in this blogging and most entertaining too.

  Reading blog since 2005. Observed u long time. ( my old blog is kadaisipakkam.blogspot)

  If it is serious reason, I don't touch. Otherwise just join the party :)

  பதிலளிநீக்கு