29 அக்டோபர், 2009

வானிலை ஆராய்ச்சி நிலையம்!


வானிலை ஆராய்ச்சி நிலையம்! - என்றப் பெயரைக் கேட்டாலே வர வர கடுப்பாக இருக்கிறது. என்னத்தை ஆராய்கிறார்களோ தெரியவில்லை.

இரண்டு நாட்களுக்கு முன்பாக மண்டையைப் பிளக்கும் வெயில் அடித்துக் கொண்டிருந்தது. நம் வானிலை ஆராய்ச்சி நிலையம் மூடிக்கொண்டு சும்மா இருந்தது. நேற்று மேகமூட்டம் லைட்டாக வந்ததுமே ஆராய ஆரம்பித்து விட்டார்கள். மாலை இடியும் காற்றுமாக மழை ஜமாய்த்ததுமே, அடுத்த இரண்டு நாட்களுக்கு கனத்த மழை, காற்றழுத்த தாழ்வு மண்டலம் என்று அடித்து விட்டார்கள்.

இவர்கள் ஆராய்ச்சிக் குறிப்பை நம்பி ரெயின் கோட் போட்டுக் கொண்டு வந்தால், வெயில் சுட்டெரித்துக் கொண்டிருக்கிறது. சாலையில் நடந்துச் சென்றால் அயல்கிரகவாசியைப் பார்ப்பது போல, சக சாலைப்போக்கர்கள் வினோதமாக பார்க்கிறார்கள். நாய்கள் குலைக்கின்றன, துரத்துகின்றன. இனிமேல் மழை வருமா, வராதா என்று தெரிந்துகொள்ள வானிலை ஆராய்ச்சி நிலையத்தை நம்பித் தொலைப்பதைவிட தெருவோர கிளிஜோசியக்காரனிடம் சீட்டு பார்த்துக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறேன்.

இப்போது என்றில்லை. எப்போதுமே இந்த கிராக்கிகள் இப்படி குன்ஸாகதான் அடித்து விட்டுக் கொண்டிருக்கிறார்கள். எப்போதாவது லேசாக தூறல் போட்டுத் தொலைத்தாலே புயல், மழை, சுனாமி என்று பீதியைக் கிளப்பி பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் இலவச விடுமுறை வாங்கித் தந்து விடுகிறார்கள். நான் படிக்கும்போது மழைக்காக விடுமுறை விடப்பட்ட ஒரு நாளில் கூட மழை வந்ததே இல்லை. இன்றும் இந்த நிலை மாறியதாக தெரியவில்லை. இனிமேலும் மாறாது என்ற அவநம்பிக்கை ஏற்பட்டு விட்டது.

இவர்கள் ’இடியுடன் கூடிய மழை வரும்’ என்று குறிப்பிட்டு சொல்லும் நாட்களில் கடுமையான வெயிலும், சம்மந்தமில்லாத மற்ற நாட்களில் பேய்மழையும் சுளுக்கெடுக்கிறது. பத்திரிகைகள் எவ்வளவு கேலி ஜோக் எழுதினாலும் இத்துறை திருந்துவது போல தெரியவில்லை. இந்த ஆபத்பாண்டவர்களை நம்பி மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லாமல் அவர்களது பிழைப்பும் கெடுகிறது.

புயல் வந்துவிட்டால் போதும். இப்போ கரையைக் கடக்கும், அப்போ கரையைக் கடக்கும், சென்னைக்கு அருகில், கடலூருக்கு எதிரில் என்று ரஜினியின் அரசியல் பிரவேசம் மாதிரி மாறி, மாறி கும்மியடித்துக் கொண்டிருப்பார்கள். இவர்கள் சொன்ன நேரத்தில், சொன்ன இடத்தில் இதுவரை புயல் கரையை கடந்ததாக சரித்திரமேயில்லை. நம்மூரில் குழந்தையைக் கேட்டால் கூட சரியாகச் சொல்லும். புயல் என்பது கடப்பதற்காகவே இறைவனால் படைக்கப்பட்ட ஊர் மசூலிப்பட்டினம் என்று.

அறிவியல் எவ்வளவோ முன்னேறிவிட்ட காலக்கட்டத்திலும் கூட ‘லொள்ளு சபா’ டீம் போல காமெடி செய்துக் கொண்டிருக்கிறார்கள் நம் வானிலை ஆராய்ச்சியாளர்கள். சில நேரங்களில் நான் நினைப்பதுண்டு. மழை வருமா வராதா என்று இவர்கள் டாஸ் போட்டு நியூஸ் சொல்லுகிறார்களோ என்று. நம் அரசாங்கம் இந்த துறையை உருப்படியான வல்லுனர்களை கொண்டு சீரமைக்க வேண்டும். இல்லையேல் கிளி ஜோசியக்காரர்களை, இவர்களுக்குப் பதிலாக பணியில் அமர்த்த வேண்டும்.

20 கருத்துகள்:

 1. வானிலை ஆராய்ச்சி நிலையத்தில் சாட்டிலைட் படங்களை கொண்டுதான் தகவல் சொல்கிறார்கள்.

  மாறிவரும் க்ளைமேட் சேஞ்ச் சூழ்நிலையில் ப்ரெடிக்ட் செய்யப்பட்ட வானிலை அடிக்கடி பொய்த்துவருகிறது.

  இது சென்னையில் மட்டுமில்லை, உலகெங்கும். அரசுத்துறையாக இருப்பதால் சற்று மெத்தனமாக இருக்கலாம். மற்றபடி அவர்களால் கண்டிப்பாக சிறந்த சேவையை செய்யமுடியும்.

  பத்து பைசா லஞ்சத்துக்கு வழியில்லாம மொக்கையான அந்த துறையில் வேலை பார்ப்பதே சாதனை என்று சொல்கிறார் வானிலை ஆராய்ச்சியாளர் குமணன்.

  பதிலளிநீக்கு
 2. //பத்து பைசா லஞ்சத்துக்கு வழியில்லாம மொக்கையான அந்த துறையில் வேலை பார்ப்பதே சாதனை என்று சொல்கிறார் வானிலை ஆராய்ச்சியாளர் குமணன்.//

  :-)

  அவரு பேரு ரமணன் இல்லை?

  பதிலளிநீக்கு
 3. இவர்கள் ஆராய்ச்சிக் குறிப்பை நம்பி ரெயின் கோட் போட்டுக் கொண்டு வந்தால், வெயில் சுட்டெரித்துக் கொண்டிருக்கிறது. சாலையில் நடந்துச் சென்றால் அயல்கிரகவாசியைப் பார்ப்பது போல, சக சாலைப்போக்கர்கள் வினோதமாக பார்க்கிறார்கள். நாய்கள் குலைக்கின்றன, துரத்துகின்றன. //

  இந்த அனுபவம் தான் இந்தப் பதிவிற்குக் காரணமா.... :)

  பதிலளிநீக்கு
 4. டென்ஷன் ஆகாதீங்க குருஜி... மாத்தி செய்யுங்க... அவ்வளவுதான். சொல்றதுக்கு மாத்திதானே நடக்குது!

  பிரபாகர்.

  பதிலளிநீக்கு
 5. குன்ஸாகதா//

  என்ன அர்த்தம் இதுக்கு?

  பதிலளிநீக்கு
 6. குமணனும் இல்லை ரமணனும் இல்லை..இப்பொழுது குழந்தைவேலு என்று நினைக்கிறேன்.

  லக்கி..பதிவு ரசித்துப் படித்தேன்.காரம் கரெக்ட்டான விகிதத்தில் இருந்தது.

  பதிலளிநீக்கு
 7. எவண்டா,

  லக்கிய டென்சன் ஆக்குறது,மருவாதியா மழைய கொண்டாங்க.

  பதிலளிநீக்கு
 8. லக்கி
  www.weather.com ன்னு ஒரு வெப்சைட் இருக்கு, எங்க ஊரைப்பத்தின கணிப்பு 90-90% சரியா இருக்கு. இந்த தளத்துக்கு போயி Chennai, Indiaன்னு Location கொடுத்துப் பாருங்க.
  இப்போதைக்கு நாளைய சென்னை நிலவரம் மழைன்னு போட்டிருக்கு, சரியா இருந்தா இதை follow பண்ணவும்.
  அப்புறம் என்னாதிது
  //புயல் என்பது கடப்பதற்காகவே இறைவனால் படைக்கப்பட்ட ஊர் மசூலிப்பட்டினம் என்று//
  எப்போலேருந்து நம்பிக்கை வந்தது??
  என்றும் அன்புடன்
  பாஸ்டன் ஸ்ரீராம்

  பதிலளிநீக்கு
 9. அப்படி எல்லாம் இல்ல லக்கி.
  புனேவில் இருக்கும் ஒரு வானிலை ஆராய்ச்சியின் தலையின் ஒரு பேட்டியில் அவர் சொன்னது - 'அமெரிக்கா, இங்கிலாந்துலிருந்து இருக்கும் நவீன கருவிகளும், அங்கிருக்கும் வானிலை ஆராய்ச்சியாளர்களும் இங்கு அழைத்து வந்தாலும் அவர்களால் கண்டு பிடிக்க முடியாது. இந்தியாவிலுள்ள க்ளைமேடிக் கண்டிஷன்ஸ் அப்படி. மேலும், எத்தனை சதவிகத மாணவர்கள் வானிலை ஆராய்ச்சி படிக்க விரும்பிகிறார்கள்? அப்படி படிக்க விரும்பும் மாணவர்கள், பெரும்பாலும் மற்ற degree படிக்க வாய்ப்பின்றி படிக்க வருகிறார்கள்', என்றார்.


  நான் தினமும்
  http://bbc.co.uk/weather மற்றும் http://weather.co.uk/ பார்த்துக் கொண்டு தான் இருக்கிறேன். ஒவ்வொரு மணி நேரத்துக்கு அவர்கள் வானிலை அறிக்கையை மாற்றிக் கொண்டு தான் இருக்கிறார்கள். சில முறை, 'நாளை பலமான மழை பெய்யும்' என்று சொல்கிறார்கள். ஆனால் அந்த 'நாளை' வெய்யில் அடித்துக் கொல்லும். அந்த 'நாளையன்று' மறுபடியும் அந்த வெப்சைட் பார்த்தால் 'வெய்யில் பலமாக அடிக்கும்' என்றிருக்கும். இதற்கு எதற்கு வானிலை ஆராய்ச்சி? நானே வானத்தைப் பார்த்து தெரிந்துக் கொள்ளலாம் தானெ?

  ஆல் சேம் குட்டை, சேம் மட்டை சார் :-)

  பதிலளிநீக்கு
 10. And that is the reason why we call it as weather 'forecast' and not weather 'news' :-)

  பதிலளிநீக்கு
 11. இங்கே லக்ஸம்பெர்க் இல் வானிலை ஆராய்ச்சி மையம் கூறும் தகவல்கள் 100 % அப்படியே நடக்கிறது. எப்போதும் பொய்ப்பதில்லை." பெய் எனில் பெய்கின்றது மழையும் பனியும் ". இவர்களுக்கு Software ஏற்றுமதி செய்யும் நம்மால், பல நூற்றாண்டுகளுக்கு முன்னாலேயே வான் சாஸ்திரங்களை கரைத்து குடித்த நம்மால் சப்பை வானிலையை சரியாக கணிக்க முடியாத என்ன? எல்லாம் நமது government job attitude தான் காரணம்!. Everyone needs an extra push to change the attitude. அது என்றைக்கு வரும் என்று நினைக்கும் போது பெருமூச்சு தான் வருகிறது :(

  பதிலளிநீக்கு
 12. Malai padathula vadivelu ipdithan kepparu...Athuku mathan babu virala thottu answer pannuvaru...So, Naan enna solrenna vanilai aaraichi nilayathula vela seiravanga viralukku....... Solla matteney......

  பதிலளிநீக்கு
 13. //சாலையில் நடந்துச் சென்றால் அயல்கிரகவாசியைப் பார்ப்பது போல, சக சாலைப்போக்கர்கள் வினோதமாக பார்க்கிறார்கள்//
  It seems you are the only person listen them

  பதிலளிநீக்கு
 14. 8.15 க்கு வர வேண்டிய மாநகரப்பேருந்து 88சி எப்ப வரும் ?

  கடல் நீர் குடிநீராக்கும் திட்டம் எப்ப முடியும்?

  மெட்ரோ ரயில் திட்டம் கட்டுமான பணி எவ்வளவு நாள்ள முடியும்?

  முல்லை பெரியாறு பிரச்சனை எப்ப தீரும்?

  டி.ஆர். பாலுவுக்கு ராஜபக்க்ஷே கொடுத்த பார்சலில் என்ன இருந்தது?

  எடியூரப்பா ஒகேனக்கல் கூட்டு குடிநீர் பிரச்சணைக்கு எதிரா இருக்கிறாரா? சாதகமா இருக்காறா?

  இத கண்டுபிடிச்சி சொன்னாலே போதும்.

  மழவந்தா அத நாங்கபாத்துகறோம். வெள்ள நிவாரம் எப்ப கொடுக்கப்போறாங்க அத சொல்லுங்க மொதல்ல...

  - சென்னைத்தமிழன்

  பதிலளிநீக்கு
 15. http://weather.weatherbug.com/India/Tiruppur-weather.html?nav_section=1&zcode=z6286

  இதுல போய்ப் பாருங்க ஓரளவுக்கு தெளிவா இருக்கும்

  பதிலளிநீக்கு
 16. வரும் ஆனா varaathu..... இது எப்படி இருக்கு.....?

  பதிலளிநீக்கு
 17. //அவரு பேரு ரமணன் இல்லை?//

  தெரியும்.

  அன்புடன்
  நொந்தழல் கவி

  பதிலளிநீக்கு
 18. இப்பொழுது குழந்தைவேலு என்று நினைக்கிறேன்.
  &&&


  ஓ. ஒரு குழந்தையிடம் போயா இந்த துறையை கொடுத்திருக்கிறார்கள் ? அவ். ஒருவேளை குழந்தை மூசாவை மழை என்று நினைத்திருக்குமோ ?

  பதிலளிநீக்கு
 19. I live in Denver, where the common saying is, "You dont like the weather", "just wait for an hour". Its that variable on a daily basis, and I am amazed at the accuracy at which the local news station can predict weather upto the hour. They will say the temperature will be around 70 degrees around 2pm, and the thermometer will exactly around 70s.

  +++++++++++++++=========++++++++===
  Again I wish to emphasis, my friend, that prediction of weather is a tedious job in tropical areas. I wish you must ask your American weatherman about the tropical weather. I am to say that even the best weather expert in America may find it difficult in evolving a consensus [repeat consensus] forecast for the tropical regions. This is a truth. At the same time I do agree that more technology need to be adopted for enhancing the weather prediction.

  பதிலளிநீக்கு