12 அக்டோபர், 2009

கேத்தரீன் குண்டலகேசி+ சில்வியா பழநியம்மாள்..

கேத்தரீன் குண்டலகேசி+ சில்வியா பழநியம்மாள்..100 % மொக்கை..! - இதை படித்து தொலைத்துவிட்டு இங்கே வரவும்.


"நீதான் கேத்தரின் பழனியம்மாளா?" ஆவேசமடைந்தவன் போல கேட்டவன் அடுத்த நொடியே என் முகத்தில் காதலை காட்டினேன்.

என் ஆவேசத்தையும், உடனே மாறிய முகபாவத்தையும் கவனித்தவள், "உன் பேரென்ன?" என்றாள்.

"பேரு கெடைக்குது கழுதை, உங்கிட்டே பேச எனக்கு நிறைய விஷயம் இருக்கு"

"எங்கிட்டேயா? என்ன பேசப்போறே?"

"உன்னை பத்தி, உன் கவிதைகளை பத்தி, என்னை பத்தி, என் காதலை பத்தி"

"என்னை பத்தி சரி.. என் கவிதைகளை பத்தி எதுக்கு? நானே அதெல்லாம் கவிதைன்னு ஒத்துக்க மாட்டேன். உன்னை பத்தியும், உன் காதலை பத்தியும் தெரிஞ்சுக்க எனக்கு எந்த ஆர்வமும் இல்லே!"

"உனக்காக ஏழு கடல் தாண்டி, ஏழு மலை தாண்டி வந்திருக்கேன்"

சாந்தி பாக்கு ஒன்றை கையில் எடுத்தாள். வாயாலேயே பாக்கெட்டை கடித்து திறந்தாள். பாக்கை வாயில் கொட்டிக் கொண்டவள், "அதுக்காக" என்றாள் கொஞ்சம் சத்தமாக.

சக சரக்குவண்டிகள் எங்களை விநோதமாக பார்க்க, கொஞ்சம் சங்கடமாக உணர்ந்தேன். "வெளியே போய் பேசலாமா?"

மெதுவாக வெளியே நடந்தோம். என்னைவிட அதிகமாக சரக்கடித்திருந்தாலும் கேத்தரீனா ஸ்டெடியாக இருந்தாள். என் கால்கள் தான் கொஞ்சம் தடுமாறியது. சாலையில் இருவரும் நடந்து செல்லும்போது எதிர்பட்ட பார்வைகள் கொஞ்சம் வித்தியாசத்தை காட்டியது. ஒரு போலிஸ்காரர் கேத்தரீனுக்கு வைத்த சல்யூட் என்னை கொஞ்சம் ஆச்சரியப்படுத்தியது.

"தாயோளி, போனவாரம் வந்து ஓசிலே மேஞ்சிட்டு போன நாயி சல்யூட் வைக்குது. இவன் சல்யூட் வெச்சாலே மறுபடியும் ஓசிக்கு வருவான்னு அர்த்தம்" என்றவள் பாக்கு எச்சிலை புளிச்சென்று துப்பினாள்.

"உங்களை கவிதைகள் வாயிலாக அறிந்தவன் நான்" என்றேன்.

"அதுக்கு என்னா இப்போ? நேருல பார்த்துட்டே இல்லே. என்னா வேணும்?"

"உங்களை காதலிக்கிறேன்" கொஞ்சம் சத்தமாகவே சொன்னேன். சாலையில் நடந்துகொண்டிருந்த கூட்டம் ஒரு நொடி நின்றது. என்னை ஆச்சரியத்தோடும், கிண்டலோடும் பார்த்தவர்கள் மறுகணம் தத்தம் வேலையைப் பார்க்க ஆரம்பித்தார்கள்.

மவுனித்தாள் கேத்தரீன். அவள் முகத்திலும் வெட்கம் தோன்றியதைப் போல இருந்தது. அவளது கால் கட்டைவிரல் தரையில் கோலம் போட ஆரம்பித்ததை நானே எதிர்பார்க்கவில்லை.

"உன் பேரு என்னா?" பெண்மையின் மென்மை முதல் தடவையாக அவளிடம் இழையோட, மெல்லிய குரலில் கேட்டாள்.

"சத்யா.. என்னை பொட்"டீ"க்கடைன்னு கூப்பிடுவாங்க. அவுஸ்திரேலியாவிலிருந்து வருகிறேன்" என்று பதிலளித்தேன்.

6 கருத்துகள்:

 1. கடைசி வரி புரியவில்லை பொட்டிக்கடைனா என்ன? ஓசி கிராக்கிகளை பற்றிய குறிப்பிடல் நன்று. நல்ல கதை. விபச்சாரி சொல்வது போல இருந்தாலும் பதிவில் கெட்ட வார்த்தைகளை தவிர்ப்பது நலம். இது மாதிரி பேசாதவர்கள் படிக்க சங்கடப் படுவார்கள். பெண் பதிவர்கள் மறுமுறை உங்கள் பதிவை படிக்க சங்கடம். இலை மறை காயாக கூறவும்.

  பதிலளிநீக்கு
 2. //
  "சத்யா.. என்னை பொட்"டீ"க்கடைன்னு கூப்பிடுவாங்க. அவுஸ்திரேலியாவிலிருந்து வருகிறேன்" என்று பதிலளித்தேன்.
  //

  ஹி..ஹி.. சூப்பரு.. நான் கூட "என் பேரு யுவகிருஷ்ணா, என்னை லக்கிலுக்குன்னு கூப்புடுவாங்க"ன்னு எழுதுவீங்கன்னு நெனச்சேன். :)))

  பதிலளிநீக்கு
 3. //
  "சத்யா.. என்னை பொட்"டீ"க்கடைன்னு கூப்பிடுவாங்க. அவுஸ்திரேலியாவிலிருந்து வருகிறேன்" என்று பதிலளித்தேன். //

  Mr.இளைய கண்ணன் ... உங்களுக்கு எப்பவுமே ரொம்ப குசும்பு போங்க.....

  பதிலளிநீக்கு
 4. இது இலங்கை தமிழர்கள் பற்றிய கதையா?

  பதிலளிநீக்கு
 5. இதுக்கு ஏன் பொட்டீய இழுக்குறீங்க? என்ன விதம்னு தெரியல.. அதனால “ரொம்ம்பா நல்லவங்க” மாதிரியே,

  பதிவு நல்லா இருக்கு, அருமையான புனைவு.. இப்படித் தொடர்ந்து எழுதுங்கள்..

  பதிலளிநீக்கு