9 அக்டோபர், 2009

நோபல் பரிசு!


என்ன கொடுமை சார் இது?

கடைசியில் நோபல் பரிசும் கூட கலைமாமணி விருது ரேஞ்சுக்கு போய்விட்டதே?

ஏற்கனவே தமிழகத்தின் தங்கத்தாரகைக்கு நோபல் பரிசு வழங்கவேண்டும் என்றளவில் பெரிய கோரிக்கை ஒன்று சில காலத்துக்கு முன்பாக எழுந்தது. தொல்காப்பியப் பூங்கா எழுதியதற்காக கலைஞருக்கு வழங்கப்படும் என்று திமுகவினரும் எதிர்பார்த்தார்கள். நோபல் கமிட்டியின் நொள்ளைக்கண்ணுக்கு ஏனோ தங்கத்தாரகையும், டாக்டர் கலைஞரும் கண்ணிலேயே படவில்லை.

இப்போது அமைதிக்கான நோபல் பரிசு ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா மற்றும் வியட்நாம் புகழ் அமெரிக்காவின் அதிபருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

அடுத்தாண்டுக்கான நோபல் பரிசாவது பச்சைத் தமிழருக்கு கிடைக்க வேண்டும். கண்ணகி காலத்திலிருந்தே தீயாய் பற்றியெறியும் வன்முறை நகரம் மதுரை. பல நூற்றாண்டுகளாக கத்தியும், இரத்தமும், தீயுமாக பற்றியெறிந்த மதுரை இன்று அமைதிப் பூங்காவாக திகழ்கிறது. இதற்கு காரணம் அண்ணன் அஞ்சாநெஞ்சனார். அவர் பாராளுமன்ற உறுப்பினராக சாதனை வெற்றியடைந்து, இந்தியாவுக்கே அமைச்சரானது உலக சரித்திரம்.

பல்லாயிரம் ஆண்டுகளாக அமைதியிழந்து தவித்த நகரை அமைதியின் மறுபெயராக மாற்றிய அஞ்சாநெஞ்சனாருக்கு அடுத்தாண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்குவதே நியாயமானதாக இருக்க முடியும். அதுவே தமிழுக்கு கிடைக்கும் பெருமையும் ஆகும். ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆஸ்கர் பரிசு வழங்கியதைப் போல, அண்ணனுக்கு நோபல் பரிசு வழங்க வேண்டுமென்று தமிழகமே நோபல் கமிட்டியை இந்தப் பதிவின் வாயிலாக கேட்டுக் கொள்கிறது. தகுதியான ஒருவருக்கு இப்பரிசினை வழங்கி நோபல் தனக்கான கவுரவத்தை காத்துக் கொள்ளுமா என்பதே இப்போது நம் முன் உள்ள பில்லியன் டாலர் கேள்வி!

29 கருத்துகள்:

 1. உங்களது கோரிக்கை குறித்து பரிசீலித்தோம். எங்களது முகாமைத்துவம், இந்த பதிவை கண்ணாபின்னாவென வழிமொழிகிறது. அடுத்த ஆண்டோ அல்லது அதற்கடுத்த ஆண்டோ, நீங்கள் சொல்லியிருக்கும் அஞ்சாநெஞ்சன் அழகிரி அவர்களுக்கு நோபல் பரிசுக்காக துண்டுபோட்டு வைக்கிறோம்.

  பதிலளிநீக்கு
 2. மேற்கானும் என்னுடைய பின்னூட்டத்தை நோபல் பரிசு கமிட்டி என்ற பெயரில் அதர் ஆப்ஷனில் போட்டுவிடுமாறு பணிவன்புடன் வேண்டுகிறேன்

  பதிலளிநீக்கு
 3. லக்கியண்ணா, உங்க வலைப்பூவ யாராவது ஹாக் செய்துட்டாங்களா என்ன? ;)

  பதிலளிநீக்கு
 4. //கடைசியில் நோபல் பரிசும் கூட கலைமாமணி விருது ரேஞ்சுக்கு போய்விட்டதே?//

  ஹி ஹி ஹி... இத ரொம்ப ரசிச்சேன் ;)

  பதிலளிநீக்கு
 5. விருதுகள் மலிவாகிவிட்டன என்பது தெரியும், ஆனா உலக அளவிலேயே இது நடக்குதுன்னு நினைக்கிறப்போ...அய்யோ அய்யோ, சிப்பு தான் வருது!!!

  பதிலளிநீக்கு
 6. அண்ணே..நெசமாத்தான் சொல்லுறீங்களா..நாங்க எல்லாம் மதுரைக்காரயிங்கண்ணே..)))

  பதிலளிநீக்கு
 7. //செந்தழல் ரவி 10:44 PM, October 09, 2009

  மேற்கானும் என்னுடைய பின்னூட்டத்தை நோபல் பரிசு கமிட்டி என்ற பெயரில் அதர் ஆப்ஷனில் போட்டுவிடுமாறு பணிவன்புடன் வேண்டுகிறேன்
  ///

  LOL :)))))))))))))

  பதிலளிநீக்கு
 8. அமைதியை விரும்பும் அண்ணன் அழகிரி அவர்களுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும்...

  பதிலளிநீக்கு
 9. //கத்தியும், இரத்தமும், தீயுமாக பற்றியெறிந்த மதுரை இன்று அமைதிப் பூங்காவாக திகழ்கிறது. இதற்கு காரணம் அண்ணன் அஞ்சாநெஞ்சனார். அவர் பாராளுமன்ற உறுப்பினராக சாதனை வெற்றியடைந்து//


  என்ன பாஸ் அவரு வெற்றி பெற்று டெல்லி போனதால அமைதி பூங்காவா மாறிடுச்சா!? :)))


  //பல்லாயிரம் ஆண்டுகளாக அமைதியிழந்து தவித்த நகரை அமைதியின் மறுபெயராக மாற்றிய அஞ்சாநெஞ்சனாருக்கு அடுத்தாண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்குவதே நியாயமானதாக இருக்க முடியும்.//

  எது எப்படியோ ஒரு தமிழனுக்கு நோபல் பரிசு கிடைச்சா சந்தோஷம் தான் :))

  பதிலளிநீக்கு
 10. வரலாறு முக்கியம் அமைச்சரேன்னு நீங்க போட்ட பதிவை, இங்கேயும் போடலாம்

  பதிலளிநீக்கு
 11. அண்ணனுக்கு கிடைக்கா விட்டால் தம்பிகள் மீண்டும் மதுரையை எரித்து அடாவடித்தனம் பண்ணி அண்ணன் எப்புடி இருந்த ஊரை எப்புடி மாத்தினாருன்னு காட்டுவார்கள் என்பதை விளக்கமாக நாம் நோபால் பரிசுக் குழுவுக்கு அனுப்ப வேணும்.

  பதிலளிநீக்கு
 12. உம் ஹும் இது ஆவறதுக்கு இல்ல ! உங்க வீட்டுக்கு ஆட்டோ இல்ல லாரி தான் வர போகுது

  பதிலளிநீக்கு
 13. பாஸ்... கொஞ்சம் சூதானமா இருந்துகோங்க அவிங்க மோசமானவைங்க. வழக்கம்போல உன்னைபோல ஒருவன் இந்துத்துவா படம், புவனேஸ்வரி கவர் ஸ்டோரி னு எதாவுது எழுதிட்டு போங்க ... இந்த மாதிரி அஞ்சா நெஞ்ஜன halfboil போட்டா "சட்டம் தன் கடமைய" செஞ்சுரும்... கையில்லாம ப்ளாக் எழுத முடியும்னு நெனைக்றீங்க???

  பதிலளிநீக்கு
 14. இப்போது அமைதிக்கான நோபல் பரிசு ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா மற்றும் வியட்நாம் புகழ் அமெரிக்காவின் அதிபருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.///

  நிர்கதியாக பாலச்தீனர்களை குண்டு போட்டு கொன்ற பொழுது அமைதியாக இருந்தார்.இவரே இச்ரேலிடம் காசாவின் ஆக்கரமிப்பை நிறுத்துங்கள் என்று கூறிய பொழுது இச்ரேல் மதிக்கவில்லை , அமைதியாக இருந்தார். Guantanamo சிறை சாலையை மூடுகிறேன் என்றீர்களே , ஏன் அதில் மனித உரிமை மீரல்களின் மீது நடவடிக்கை எடுக்கவில்லை? எப்பொழுது மூடுவீர்கள் என்ற தெளிவான காலத்தை கூறுங்கள்? இது போன்ற கேள்விகளுக்கு அமைதியாக இருந்தார்.இது போல் நிறய நேரம் அமைதியாக இருந்ததால் அமைதிக்கு பரிசு கிடைத்திருக்கிரது.

  தக்காளி வாய்லயே பாயசம் காய்ச்சுரது இந்த ஆள்ட்ட தான் கத்துக்கனும்.

  பதிலளிநீக்கு
 15. You guys are clueless. You will cry if we award a person after his death. Look at the Nobel peace prize committee's statements, "No one in the recent past as inspired people come together", read Obama's acceptance speech, that he sees this as a "Call to action". So please do not undermine the prize or the person who receives it. Let appreciate the fact that he has words to turn the world around, gives hope to peace. He has run the wars, its not like, you can just cut and run, because you dont agree with the wars.

  பதிலளிநீக்கு
 16. இப்போது அமைதிக்கான நோபல் பரிசு ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா மற்றும் வியட்நாம் புகழ் அமெரிக்காவின் அதிபருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.//

  அதிபர் என்னவோ அமெரிக்க அதிபர் தான்!

  இந்த போர்களில் ஒபாமாவின் பங்கு என்ன?

  பதிலளிநீக்கு
 17. எல்லாருக்கும் கிடா வெட்டி பிரியாணி போட்டா எல்லோரும் ஒன்னு சேர்ந்து பரிந்துரை பண்ணியற்லாம்.

  ஆனா பாருங்க, கிடா வெட்டுறது பிராணிகளைத் துன்புறுத்துதல் ஆச்சே, வன்முறை ஆச்சே...

  அமைதிக்கான நோபல் பரிசு கொடுப்பாங்களா நாம கிடா வெட்டி பிரியாணி போட்டது தெரிஞ்சா!?

  :)))

  பதிலளிநீக்கு
 18. //கடைசியில் நோபல் பரிசும் கூட கலைமாமணி விருது ரேஞ்சுக்கு போய்விட்டதே?//

  விருதுகளில் கலைமாமணி என்ன நோபல் என்ன- எல்லா எழவும் ஒரே குட்டையில் ஊறிய மட்டை தான்..

  பதிலளிநீக்கு
 19. அன்புள்ள யுவகிருஷ்ணா, கலைமாமனியுடன் எல்லாம் நோபலை ஒப்பிட்டு கிண்டல் பண்ணாதீர்கள். அவை எல்லாம் மாட்டுத்தாவணியில் ஏற்படுத்தப்படும் அமைதிக்கு வேண்டுமானால் தரப்படலாம்!?. வேறு கோணத்தில் சிந்தித்தால் இப்படி விளங்கலாம்.

  இதுவரை, உலக அமைதிக்கான நோபல் பரிசு, அமெரிக்க ஐரோப்பிய ஏகாதிபத்திய சுயநலன்களுக்காக மட்டுமே பெரும்பாலும் வழங்கப்பட்டுள்ளன.

  மாறாக, இம்முறை ஒரு உலகப்பொதுநல தூர நோக்குடன், 'உலக அமைதிக்கு ஒருகாலும் அமெரிக்க அதிபரால் குந்தகம் ஏற்படுத்தப்படக்கூடாது' என்ற கண்டிப்பான நிர்பந்தத்தை அமெரிக்காவுக்கு ஏற்படுத்தவேண்டியும், எந்தவித சந்தேகத்திற்கும் இடமின்றி தரப்பட்டுள்ளது.

  இது எப்படிஎன்றால், கிட்டத்தட்ட 'திருடன்' என்று நன்கு அறியப்பட்டவனிடம், அனைத்து சாவிகளையும் கொடுத்து, ஒரு பிரபல வங்கிக்கு காவல் வைத்து, அவனின் காவல் திறனை காண அனைத்து தொலைக்காட்சியிலும் நேரடி ஒளிபரப்புக்கு ஏற்பாடு செய்திருந்தால், அவன் எப்பேர்பட்ட திருடனானாலும், திருடும் எண்ணம் வரவே வராதல்லவா? அதைத்தான்-அந்த கடிவாளம் போடுவதைத்தான்- நோபல் பரிசுக்கமிட்டி சமயோசிதமாக செய்துள்ளது.

  என்னை கேட்டால் இந்த அமைதிக்கான நோபல் பரிசை உண்மையிலேயே பெற தகுதியானவர், இந்த அமெரிக்க அதிபர் ஒபாமாவை தேர்ந்தெடுத்த அந்த நோபல் பரிசுக்கமிட்டி தான். வாழ்க அவர்களது அறிவும், பொதுநல சேவையும்.

  பதிலளிநீக்கு
 20. //கடைசியில் நோபல் பரிசும் கூட கலைமாமணி விருது ரேஞ்சுக்கு போய்விட்டதே?//

  வெள்ளி மதியம் விஷயம் கேள்விபட்டப்போது எனக்கும் இதேதான் தோன்றியது.

  கொடுமைகள் நமக்கு சாதாரணமாகிவிட்து

  பதிலளிநீக்கு
 21. அடுத்த ரைசிங் ஸ்டார் ரித்தீஸ் குமார் ரெடி ! உசுப்பேத்தி உசுப்பேத்தியே நல்லா இருக்கறவனையும் கோமாளி ஆக்கிருங்க..... நடக்கட்டும் நடக்கட்டும் !!!

  பதிலளிநீக்கு
 22. அட... இவுரு இப்போ வரலாற்றுத் துறை அமைச்சரா...?

  பதிலளிநீக்கு
 23. ரீடரில் உங்கள் பதிவுகளை வாசிப்பேன். தடுக்கவே முடியாமல், உங்கள் பதிவுக்கு நான் இடும் முதல் பின்னூட்டம். ஹி ஹி ஹி ...

  -வித்யா

  பதிலளிநீக்கு