6 அக்டோபர், 2009

புவனேஸ்வரி!


ஒரு ஏழெட்டு ஆண்டுகள் ஆகியிருக்கும் என்று நினைக்கிறேன். வடபழனி பக்கமாகப் போனபோது சுவரெங்கும் ஒட்டப்பட்டிருந்த அந்த ‘வாழ்த்து சுவரொட்டிகள்’ கண்ணைக் கவர்ந்தது. “தானைத்தலைவி புவனேஸ்வரிக்கு 21வது பிறந்தநாள் வாழ்த்துகள் – இவண் அகில உலக புவனேஸ்வரி ரசிகர் மன்றம்”

அப்போது புவனேஸ்வரி சினிமாவில் கூட நடித்ததாக நினைவில்லை. ஒரு சில டிவி சீரியல்களில் நெகட்டிவ் கேரக்டர்களில் நடித்துக் கொண்டிருந்தார். ‘பூனைக்கண் புவனேஸ்வரி’ என்று அடைமொழியோடு ஓரளவு அறியப்பட்டிருந்தார். மறுநாள் தினத்தந்தி தொடங்கி எல்லாப் பத்திரிகைகளில் புவனேஸ்வரி பிறந்தநாள் விழா செய்திகளும், அதையொட்டி அவரது ரசிகர்மன்ற நற்பணிகளும் பிரதானமாக இடம்பெற்றிருந்தது. படங்களும் அட்டகாசமாக ‘கவர்’ செய்யப்பட்டிருந்தது.

அடுத்த ஓராண்டுக்குள்ளாகவே விபச்சார வழக்கில் புவனேஸ்வரி கைது செய்யப்பட்டதாக அதே பத்திரிகைகளில் வாசிக்க நேர்ந்தது. புவனேஸ்வரியை பற்றி மட்டுமல்ல, அந்த சீசனில் வினிதாவைப் பற்றியும் கூட இதேமாதிரி ‘விபச்சார வழக்கு’ செய்திகளை காணநேர்ந்தது. ‘விபச்சார வழக்கு’ என்றொரு வழக்கு இருக்கிறதாவென்றே எனக்குத் தெரியவில்லை.

இ.பி.கோ.வில் இதற்கு என்ன செக்‌ஷன்? சரி. புவனேஸ்வரியும், வினிதாவும், ஏனைய சில இரண்டாம் கட்ட நடிகைகளும் விபச்சாரம் செய்தார்கள் என்று வழக்குப் போடப்பட்டிருந்தால், அவ்வழக்குகளில் இதுவரை ஏதேனும் தீர்ப்புகள் வந்திருக்கிறதா? அவர்களிடம் விபச்சாரத்துக்கு போனவர்கள் மீது ஏதேனும் வழக்கு பதியப்பட்டிருக்கிறதா? – இதுபற்றிய செய்திகளை எங்குமே காணநேரவில்லை. சமீபத்தில் கூட பத்மாலட்சுமியோ என்னவோ பெயர். ஒரு நடிகை இதுபோல கைது செய்யப்பட்டிருந்தார். அவரது வழக்கும் என்ன நிலையில் இருக்கிறது என்று தெரியவில்லை. எது எதற்கோ ஃபாலோ-அப் கொடுக்கும் பத்திரிகைகள் இந்த பரபரப்பான செய்திகளுக்கு ஏன் ஃபாலோ-அப் கொடுப்பதில்லை என்பதும் புரியவில்லை.

இப்போது மீண்டும் புவனேஸ்வரி ‘விபச்சார வழக்கில்’ கைது செய்யப்பட்டிருப்பதாக பத்திரிகைகள் ஒருவாரமாக பரபரத்துக் கொண்டிருக்கின்றன. காவல்துறையின் விசாரணையின் போது மேலும் சில நடிகைகளின் லிஸ்டை கொடுத்து இவர்களையெல்லாம் கைது செய்யமாட்டீர்களா? என்று கேட்டதாகவும் வாசிக்க நேர்கிறது. காவல்துறை விசாரணை பத்திரிகைகளுக்கு ‘லீக்’ ஆகிறதா, அப்படியென்றால் லீக் செய்த கருப்பாடு காவல்துறையில் இருக்கிறதா என்பதெல்லாம் இயல்பாக எழவேண்டிய துணைக்கேள்விகள். தினமலர் ஒரு படி மேலே போய் புவனேஸ்வரி கொடுத்த லிஸ்டில் இருந்த நடிகைகள் என்று ஷகீலா, அஞ்சு, சீதா, மஞ்சுளா, நமீதா, ஸ்ரீப்ரியா, நளினி என்று படங்களோடு செய்திகள் வெளியிட்டிருந்தது. அனேகமாக தமிழ் பத்திரிகையுலக வரலாற்றிலேயே இவ்வளவு தில்லாக (அது உண்மையா பொய்யா என்பது வேறு விஷயம்) ஒரு செய்தி வெளிவந்திருப்பது இதுவே முதன்முறை என்று நினைக்கிறேன்.

இதையடுத்து நடிகர் சங்கம் அவசரமாக கூடி, ஏதோ முடிவெடுத்து கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்திருப்பதாக இன்றைய செய்தித்தாள்களில் போட்டோவோடு காணமுடிகிறது. (மஞ்சுளா) விஜயகுமார் ஆவேசமாக, “குடும்பப் பெண்களைப் பற்றி இதுபோல செய்திகள் வெளிவந்தால், எப்படி இவர்களோடு குடும்பம் நடத்துவது?” என்று கேட்டிருப்பதாகவும் வாசித்தேன். ஃபுல் மேக்கப்போடு சில நடிகைகள் கமிஷனர் ஆபிஸுக்கு வந்த வண்ணப்படங்கள் பிரதானமாக பல பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. ‘இவங்களா ஏன் ஜீப்புலே ஏறுராங்க!’ என்ற லெவலுக்கே படத்தைப் பார்த்து டீக்கடைகளில் கமெண்டு அடிக்கிறார்கள்.

இந்த மேட்டரை இந்த அளவுக்கு பப்ளிசிட்டி செய்யாமலேயே சம்பந்தப்பட்ட நடிகைகளும், நடிகர் சங்கமும் முடித்துக் கொண்டிருக்கலாம். முன்பு குஷ்புவையும், இயக்குனர் பாலச்சந்தரையும் இணைத்து குமுதம் ஏப்ரல் ஃபூல் செய்தபோது, மானநஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்து பிரச்சினையை முடித்துக் கொண்டார்கள். இந்த விவகாரத்திலும் தினமலர் மீது சம்பந்தப்பட்ட நடிகைகள் மானநஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்திருக்கலாம். அல்லது அவதூறு வழக்கு கூட போட்டிருக்கலாம். கமிஷனர் அலுவலகத்தில் கொடுக்கப்பட்ட புகார் தினமலர் மீதா அல்லது புவனேஸ்வரி மீதா என்பது சரிவரத் தெரியவில்லை. தினமலரில் வந்தது போன்ற விபச்சார லிஸ்ட்டை புவனேஸ்வரி வாக்குமூலத்தில் தரவில்லை என்று கமிஷனர் அலுவலகம் விளக்கியும் இருக்கிறது.

எப்படியிருந்தாலும் அதிகபட்சம் பத்து நாட்களுக்கு தான் இந்த பரபரப்பு இருக்குமென்று கருதுகிறேன். கடந்த கால பரபரப்புகளுக்கு ஏற்பட்ட கதிகளை பார்த்ததின் அடிப்படையில் இந்த முடிவுக்கு உடனே வந்துவிட முடிகிறது. எனது கவலை என்னவென்றால், புவனேஸ்வரிக்கு ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மகன் ஒருவன் இருக்கிறானாம். அவனது பிறந்தநாள் அன்றே புவனேஸ்வரி கைது செய்யப்பட்டிருக்கிறார். அந்த சிறுவனின் இன்றைய மனநிலை என்னவாக இருக்கும்? அவனால் சகஜமாக படிக்க முடியுமா? தன் சக பள்ளித்தோழர்கள், நண்பர்களின் முகத்தில் எப்படி முழிப்பான்? எதிர்காலத்தில் என்ன ஆவான்? - கற்பனை செய்து கூடப் பார்க்க இயலவில்லை.

23 கருத்துகள்:

 1. இந்த படம் நல்லா இருக்கு, பத்ம லஷ்மி மேல் போட்டது தவறான வழக்கு என்று நீதிமன்றத்தில் விடுதலை செய்யப் பட்டார். பிறப்பிலே பணக்கார பெண் ஆன அவர் ஒரு மோசமானவனை காதலனாக தேர்ந்து எடுத்ததால் வந்த வினை அது. என்ன ஆகும் ஒரு ஆறு மாத தண்டனைக்கு பின் மீண்டும் கலைச்சேவையில் ஈடுபடுவார். எல்லாம் தெரிந்ததுதான.

  பதிலளிநீக்கு
 2. லக்கி, புவனேஸ்வரி விபசாரம் செய்ததற்காக கைது செய்யப்படவில்லை, பல பெண்களை வைத்து விபசார விடுதி நடத்தியதற்காக கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

  சட்டரீதியான விஷயங்களைப் பற்றித் தெரிந்துகொள்ள http://marchoflaw.blogspot.com/2006/05/blog-post_114656610593585166.html

  பதிலளிநீக்கு
 3. Dinamalar has removed the report in asp form. But in epaper it was there. Link here

  http://3.bp.blogspot.com/_sb9yp2CsJVU/Ssm_05T0xeI/AAAAAAAAI28/8pUpJEdRWfc/s1600-h/Bhuvaneshwari-prostitute-list.jpg

  பதிலளிநீக்கு
 4. //
  அந்த சிறுவனின் இன்றைய மனநிலை என்னவாக இருக்கும்? அவனால் சகஜமாக படிக்க முடியுமா? தன் சக பள்ளித்தோழர்கள், நண்பர்களின் முகத்தில் எப்படி முழிப்பான்? எதிர்காலத்தில் என்ன ஆவான்? - கற்பனை செய்து கூடப் பார்க்க இயலவில்லை.
  //

  இதைப்பத்தி எல்லாம் கவலைப்பட்டிருக்க வேண்டியது அந்த பையனோட அம்மா.. அவங்களே டேக் இட் ஈஸின்னு இருக்குறப்ப, நீங்க ஏன் தல இவ்வளவு கவலைப்படுறீங்க?

  பதிலளிநீக்கு
 5. இயல்பாகவே, எது விபச்சாரம், எங்கே செய்தால் விபச்சாரம் என்ற கேள்வி எழுகிறது.

  அதே சமயம், மும்பையிலும், கொல்கத்தாவிலும் அதனை சட்டம் எதுவும் செய்யாதாம், சென்னையில் மட்டும் அது பாவமாம்.

  கணவன் அல்லாத ஒரு பெண்ணுடன் உடல் ரீதியான தொடர்பை பணம் கொடுத்து பெறுவது விபச்சாரம் என்றால், சினிமாவில் நடிக்கும் அத்தனை நடிகைகளும் பணம் பெற்றுக்கொண்டு கதாநாயகனையும், சிலசமயம் வில்லனையும் கட்டிப்பிடிக்கிறார்கள். உரசுகிறார்கள். மோகிக்கிறார்கள். பம்பரம் விடுகிறார்கள், ஆம்லேட் போடுகிறார்கள், அணுகுண்டு வெடிக்கிறார்கள். அதெல்லாம் என்ன சாரம் ? இதன் சாரமே புரியவில்லை ?

  பணத்தை பெற்றுக்கொண்டு நாம் ஒரு விடயத்தை செய்தால் அதனை சேவை (service) என்கிறோம். அப்படி பார்த்தால் விபச்சார சேவையும் ஒரு சேவைதானே ? ஒரு மண்ணும் விளங்கவில்லை. தயவு செய்து டீட்டெயிலாக பதிவு எழுதவும். அல்லது வினவை எழுதசொல்லவும்.

  பதிலளிநீக்கு
 6. //
  அந்த சிறுவனின் இன்றைய மனநிலை என்னவாக இருக்கும்? அவனால் சகஜமாக படிக்க முடியுமா? தன் சக பள்ளித்தோழர்கள், நண்பர்களின் முகத்தில் எப்படி முழிப்பான்? எதிர்காலத்தில் என்ன ஆவான்? - கற்பனை செய்து கூடப் பார்க்க இயலவில்லை.
  //

  அப்படியே அந்த அசோக்நகர் பாட்டு டீச்சர் அனந்தலட்சுமி கொலை பத்தியும் பதிவு போடுங்கண்ணா.

  பாவம் அந்த (கொலையான) சின்னப் பையன் மற்றும் அவனது (உயிருடன் இருக்கும்) சகோதரி, அந்தப் பெண்ணின் தந்தை.

  உங்கள் கருத்து இந்தப் பெண்ணுக்கும் பொருந்தும்

  பதிலளிநீக்கு
 7. மிகவும் பொறுப்புணர்வுடன் அந்தப் பையனைப் பற்றிக் கவலைப்பட்டிருக்கிறீர்கள் லக்கி. வழக்கமான நக்கல் நையாண்டி, கிண்டல் ஏதுமின்றி. I feel sorry for that boy.

  பதிலளிநீக்கு
 8. //இயல்பாகவே, எது விபச்சாரம், எங்கே செய்தால் விபச்சாரம் என்ற கேள்வி எழுகிறது.

  அதே சமயம், மும்பையிலும், கொல்கத்தாவிலும் அதனை சட்டம் எதுவும் செய்யாதாம், சென்னையில் மட்டும் அது பாவமாம்.

  கணவன் அல்லாத ஒரு பெண்ணுடன் உடல் ரீதியான தொடர்பை பணம் கொடுத்து பெறுவது விபச்சாரம் என்றால், சினிமாவில் நடிக்கும் அத்தனை நடிகைகளும் பணம் பெற்றுக்கொண்டு கதாநாயகனையும், சிலசமயம் வில்லனையும் கட்டிப்பிடிக்கிறார்கள். உரசுகிறார்கள். மோகிக்கிறார்கள். பம்பரம் விடுகிறார்கள், ஆம்லேட் போடுகிறார்கள், அணுகுண்டு வெடிக்கிறார்கள். அதெல்லாம் என்ன சாரம் ? இதன் சாரமே புரியவில்லை ?

  பணத்தை பெற்றுக்கொண்டு நாம் ஒரு விடயத்தை செய்தால் அதனை சேவை (service) என்கிறோம். அப்படி பார்த்தால் விபச்சார சேவையும் ஒரு சேவைதானே ? ஒரு மண்ணும் விளங்கவில்லை.//

  அப்படியே வழிமொழிகிறேன்.

  செந்தழல் ரவின் இந்த கருத்தை ஒட்டி நீங்கள் எழுதியிருப்பீர்கள் என நினைத்து வந்தேன் .

  பதிலளிநீக்கு
 9. புவனேஸ்வரி பாவங்க..!

  பாரதி சொல்லுவார்..

  ஒரு ஊரில் ஒருத்தி விபசாரி என்றால்.
  எத்தனை குடும்ப ஆண்கள் கற்பிழந்திருக்கிறார்கள் என்று பார்க்கவேண்டும்னு...!

  அதுமாதிரி..யார் யார் வாடிக்கையாளர்க்ன்னு அவுங்க சொல்ல ஆரம்பிச்சா..அந்தம்மாவை உடனே வெளில விட்டுருவாய்ங்க!

  ஏன்னா இவனுங்க வண்டவாளம் தெரிஞ்சுருமே!

  அதுமாதிரி..அந்த பையன் மனநிலையை யோசிச்சீங்களே..
  நீங்க நல்லவர் தலைவரே!

  பதிலளிநீக்கு
 10. புவனேஸ்வரி பாவங்க..!

  அவங்க கிட்ட போனவர்களின் பட்டியல் எடுத்து எல்லோரையும் உள்ளே தள்ள வேண்டும்.

  பதிலளிநீக்கு
 11. அவங்க கிட்ட போனவர்களின் பட்டியல் எடுத்து எல்லோரையும் உள்ளே தள்ள வேண்டும்////////////

  அப்படியே காய்கறி கடையில் கத்தரிக்காய் வாங்கியவர், மளிகை கடையில் பெருங்காயம் வாங்கியவர் என்று எல்லாரையும் உள்ளே தள்ளிவிடுவோம்.

  அப்படி பார்த்தால் தமிழகமே மிகப்பெரிய சிறைதான். தமிழகத்தை சிறை என்று அறிவிவித்துவிட்டு, புழல் சிறையில் இருப்பவர்கள் எல்லாம் விடுதலையானவர்கள் என்று அறிவிக்கலாம். போங்கய்யா !!

  பதிலளிநீக்கு
 12. //அந்த சிறுவனின் இன்றைய மனநிலை என்னவாக இருக்கும்? அவனால் சகஜமாக படிக்க முடியுமா? தன் சக பள்ளித்தோழர்கள், நண்பர்களின் முகத்தில் எப்படி முழிப்பான்? எதிர்காலத்தில் என்ன ஆவான்? - கற்பனை செய்து கூடப் பார்க்க இயலவில்லை.//

  There you are lucky.i really like your finishing touch.

  manasu baarama irykku.

  பதிலளிநீக்கு
 13. //அப்படியே காய்கறி கடையில் கத்தரிக்காய் வாங்கியவர், மளிகை கடையில் பெருங்காயம் வாங்கியவர் என்று எல்லாரையும் உள்ளே தள்ளிவிடுவோம்.

  அப்படி பார்த்தால் தமிழகமே மிகப்பெரிய சிறைதான். தமிழகத்தை சிறை என்று அறிவிவித்துவிட்டு, புழல் சிறையில் இருப்பவர்கள் எல்லாம் விடுதலையானவர்கள் என்று அறிவிக்கலாம். போங்கய்யா !!//


  ஆசை... எனக்கொரு டவுட்டு....

  அதே டவுட்டுதான் எனக்கும்......


  என்ன mr.ravi.... "எங்கப்பன் குதிருக்குள்ள இல்லை"ன்னு சொல்றீங்களா :-) ?

  பதிலளிநீக்கு
 14. “உங்களில் ஒரு பாவம் செய்யாதவன் இந்தப் பெண்மேல் முதல் கல்லை எறியட்டும்…”

  :-)))

  பதிலளிநீக்கு
 15. In the same Dinamalar Report, there was a mention about some Minister's photo and his son's photo alongwith Bhuv. Looks to me one of them got pissed off and put Bhuv into trap. Not sure about the age of Son...think about it, if the son is adult, then father and son going to same pros...I wonder who is that politician, anybody has any clue???

  பதிலளிநீக்கு
 16. ஏன் பெரிய நடிகைகளுக்கு இதில் சம்பந்தம் இல்லையா ..............கற்புக்கு அரசிகள் போன்று குதிக்கின்றனர்....ஏன் சின்ன நடிகைகள் மட்டும் தான் சிக்க வேண்டுமா

  பதிலளிநீக்கு
 17. புவனேசுவரியின் பையனுக்காக மட்டும் கழிவிரக்கம் கொள்பவர், இப்படி ஏராளமான பெண்கள் விபச்சாரம் செய்ததாக போலீசாரால் கைது செய்யப்படும் போது, அவர்களுக்கு எத்தனை குழந்தைகள் அவர்கள் மனங்கள் என்ன பாடுபடும் என ஏன் கழிவிரக்கம் கொள்ளவில்லை?

  விபச்சாரத்திலும் ஏற்ற தாழ்வு! ஏழை பணக்காரன், உயர்ந்த ஜாதி, தலித்து (முன்னவருக்கு பணம் அதிகம்). அரசியல் தொடர்புடைய புள்ளிகள், பாவப்பட்டவர்கள் - என்றுதான் எத்தனை வேறுபாடுகள்!

  அந்தச்சிறுவனுக்கு வருவோம். இதற்கு முன் அவன் தாய் இப்படிப்பட்ட வழக்கில் சிக்கியுள்ளார். எனவே அவனுக்கு இது புதிய விடயமல்ல. அஃதாவது, இவ்விடயம் ஒரு பேரதிர்ச்சியைத்தராது. மேலும், அப்படியே இது நடவாதிருந்தாலும், அவன் தன் தாயின் அரைகுறை ஆடைகளணிந்த புகைப்படங்களை பார்த்து, ஒரு மனப்பக்குவத்திற்கு வந்திருப்பான்.

  எனவே, அவன் ஒரு முடிவுக்கு வந்திருப்பான்: ‘தன் தாயின் வாழ்க்கை’ இதுவே.

  மேலும் புவனெசுவரியின் வாக்குமூலத்தின்படி தன் மகனின் நல்வாழ்வுக்காக தான் இதைச்செய்ததாகக் கூறியிருக்கிறார். இதை அவன் அறிந்திருப்பான்.

  இது உண்மையாகயிருப்பின், தன் தாய் தனக்காக இப்படி வாழ்வது நல்லது இல்லயென்று இருந்தாலும்கூட, அவன் தன் தாயை மறுதலிக்கமாட்டான்.

  சு. சமுத்திரத்தின் சிறுகதையில் இப்படி ஒன்று நடக்கும். ஆசிரியர், ஒரு குழந்தைக்கு தன் தாய் எப்படியிருப்பினும் ஒரு சுப தேவதையே என முடிப்பார்.

  நான் இப்படிப்பட்ட சிறுவர்களைக்கண்டதுண்டு. பிறர் தன் தாயைக்கேலி செய்யும் போது மனம் வருந்துவர். சண்டையிடுவர். அவவளவே. எக்கரணியத்தைக்கொண்டும் தன் தாயை மறுப்பதில்லை.

  எங்கு மறுப்பு நேரிடுமென்றால், தன் தாய், தன் தன் தந்தைக்குத் துரோகம் செய்யும் வண்ணம், கள்ளக்காதலனை வைத்துக்கொள்ளும்போதுதான் (அனந்தலட்சுமி போல) தாயை வெறுப்பான், மறுப்பான். இப்படிப்பட்ட சமயங்களில் தாயைக் கொலை செய்வதுமுண்டு (பாரதக்கதையில், பலராம் செய்வதைப்போல).

  டெல்லி, பம்பாய் போன்ற நகரங்களில் இத்தொழில் அரசால் அனுமதிக்கப்பட்டிருக்கிறது ஒரு தனித்தெருவில். அவர்கள் மாடங்களில் நிறபர். வாடிக்காளர்கள் செல்லலாம். கைகாட்டி அழைப்பதும், கட்டாயப்படுத்துவதுமே சட்டப்படி குற்றம். இவர்களை விபச்சாரிகள் என அழைப்பது politically incorrect; and also, arrogance on your part. ஆங்கிலத்தில் sex workers.

  இவர்கள் குழந்தைகள் அப்பகுதியிலேதான் விளையாடுவர். இவர்களெல்லாம் பள்ளி செல்லாமல் இருந்ததைக்கண்ட ஒரு NGO அரசிடம் சொல்லி, அங்கே அவர்களுக்காக பள்ளியைக் கட்டிகொடுத்திருக்கிறது. அவர்களுக்காக சிறப்பு மருத்துவர்கள்.

  ஒருமுறை, தமிழ் நடிகை மாதுரி விபச்சார வழக்கில் கைதான போது, அவர் மகன் பள்ளி செல்லவில்லை. அவன் சென்ற பள்ளி அக்‌ஷயா. திருமதி இரசனிகாந்த் அவர்களால் நடாத்தப்படும்பள்ளி. திருமதி இரசனி, பதறிப்போய், மாதுரியிடம், ‘ஏன் நிறுத்திவிட்டாய்’ எனக்கேட்க, அவன் வர மறுக்கிறான்’ எனச்சொல்ல, திருமதி, ‘நான் பார்த்துக்கொள்கிறேன்’ அவனை அனுப்பு’ எனசொல்லி, அவன் பள்ளி சென்றான். அப்பள்ளியில் நடிகர்களில் குழந்தைகள் பலர். அவனை யாரும் ஒன்றும் சொல்லவில்லை. ஏனெனில், அவர்களும் சிறுவயதில் பக்குவப்பட்டவர்களே.

  நான் விபச்சாரிகள் என எள்ளலாக அழைக்கப்படும் sex workers களோடு பழகியதுண்டு. அவர்கள் நல்லவர்கள். அவர்கள் தனிப்பட்ட குணங்கள் சிறிது பழக்கத்திலேயே எனக்குப் பிடிக்க ஆரம்ப்பித்தது என்றால், அவர்கள் குழந்தைகளுக்குப் பிடிக்காமலிருக்குமா? எனவே, சு.சமுத்திரம் சொன்ன ‘சுப தேவதைகள்’ அவர்கள் அவர்களுக்கு. எனக்கு, நல்ல பெண்கள்.

  புவனேசுவரியின் குழந்தை பக்குவப்பட்டவன் என் நம்பலாம்.

  பதிலளிநீக்கு
 18. //பணத்தை பெற்றுக்கொண்டு நாம் ஒரு விடயத்தை செய்தால் அதனை சேவை (service) என்கிறோம். அப்படி பார்த்தால் விபச்சார சேவையும் ஒரு சேவைதானே ? //

  அண்ணா customer care வேற. இது வேற. உங்களை ஒருவன் கத்தியால் குத்த வேண்டும் என்றால் பணம் வாங்குவான். அது அவன் customer care. அது சரி என்கிறீர்களா

  பதிலளிநீக்கு
 19. 2005 ஆம் ஆண்டு வடபழனியில் நான் பார்த்த ஒரு போஸ்டரில்... அக்டோபர் 30 ஆம் தேதி தேவர் பிறந்த நாள் விழாவிற்கு வரும் தேவரின தலைவி புவனேஸ்வரியை வரவேற்று இருந்தார்கள்.

  மற்றபடி இதனை ஒரு சாதாரண வழக்காக பார்க்கலாம். கொஞ்ச காலத்தில் இவர் குற்றம் நிரூபிக்கபடாமல் விடுதலை செய்யபடலாம். ஏற்கெனவே வினிதா போன்றவர்கள் குற்றம் நிரூபிக்கபடாமல் விடுதலை செய்யப்பட்டார்கள்.

  பதிலளிநீக்கு
 20. most of the guys said prostitution is acceptable, thats y most of the coutries agrees.

  Sex is a human feelings, if u try to control that becomes social problems like rape and eve teesing, sex workers are really help to resolve this problems

  in our country, lots of crime are happening against threaten to humans and countries.

  but Dinamalar does not worry about that, dinamalar is 100% business minded,

  they are following the police evidence, if police does not give any information dinamalar is empty,

  my point of view never follow dinamalar, Dinamalar is like to be a prostitute.

  in our country we need good media like bbc, gaurdians in uk

  பதிலளிநீக்கு
 21. தினமலரின் டாப்-டென் புளுகுகள்

  http://ganeshwrites.blogspot.com/2009/07/blog-post_21.html

  பதிலளிநீக்கு
 22. //எனது கவலை என்னவென்றால், புவனேஸ்வரிக்கு ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மகன் ஒருவன் இருக்கிறானாம். அவனது பிறந்தநாள் அன்றே புவனேஸ்வரி கைது செய்யப்பட்டிருக்கிறார். அந்த சிறுவனின் இன்றைய மனநிலை என்னவாக இருக்கும்? அவனால் சகஜமாக படிக்க முடியுமா? தன் சக பள்ளித்தோழர்கள், நண்பர்களின் முகத்தில் எப்படி முழிப்பான்? எதிர்காலத்தில் என்ன ஆவான்? - கற்பனை செய்து கூடப் பார்க்க இயலவில்லை.//

  Dont worry for that boy.
  He knew pretty well the situation.
  He is proud about what his mother is doing.
  Police will release Bhuvaneswarees sooner or later... and the Boys will grow as proud as their mothers.

  Boy knew that he is better off than many poor and middle class boys. Thanks to Bhuvaneswari he is well off today.

  பதிலளிநீக்கு