2 அக்டோபர், 2009

விழித்துக் கொள்; விடியப் போகிறது!


உடன்பிறப்பே!

இரவு நேரம் இரண்டுமணி, இதை எழுதிக் கொண்டிருக்கும்போது. உறக்கம் கண்களை தழுவுகிறது. அவ்வப்போது இணையத்தில் நீ எழுதியவற்றை தம்பி சண்முகநாதன் அச்செடுத்து தருவதுண்டு. உனது எழுத்துக்களை நேரம் கிடைத்தபோதெல்லாம் வாசித்திருக்கிறேன். சோர்வுற்ற போதெல்லாம் குளிர்தருவை கண்டு மனம் மகிழ்ந்த அடிகளாரை போல அரசியல், ஆட்சி கடமைகளால் எப்போதாவது சலிப்புறும் என் நெஞ்சம் எதையாவது வாசிக்கும்போது மீண்டும் களிப்புறும். சில நேரங்களில் நீ எழுதியவற்றை வாசித்ததுண்டு. மகிழ்ந்ததுண்டு. நகைத்ததுண்டு. சிந்தித்ததுண்டு.

இதயங்களை இணைக்கும் இதயமான இணையத்தில் உதயசூரியனாய் ஒளிவீசப்போகும் உடன்பிறப்பு யுவகிருஷ்ணாவுக்கு எனது வாழ்த்துக்கள்.

சகாதேவன் தர்மன் மீது வைத்திருந்த விசுவாசத்தின் அளவையும், விபீடணன் இராவணன் மீது வைத்திருந்த விசுவாசத்தின் அளவையும் பலமேடைகளிலே நான் முழங்கியிருக்கிறேன். விபீடணன்கள் என் முதுகில் குத்திய போதெல்லாம் அறிஞர் அண்ணா தந்த எதையும் தாங்கும் என் இதயத்துக்கு ஆறுதல் அளித்தவர்கள் என் உடன்பிறப்புகள். என் உண்மையான உடன்பிறப்புக்கள் சகாதேவன்கள்.

மந்த மதியினர் மந்தைகளை போல நம்மிடத்திலே மேடைகளில் மோதியது ஒருகாலம். ஊத்தை மொழி கொண்டு ஊடகங்களில் நம்மை ஏசியது ஒருகாலம். இன்று உலகை உள்ளங்கையில் சுருக்கும் இணையங்களிலே நம்மை இழிமொழிகளால் ஏசிவருகிறார்கள். உள்ளங்கை நெல்லிக்கனி போன்ற உண்மை நாறுகின்ற மட நம்பிக்கைக் குட்டையில் ஊறுகின்ற மட்டையாகி, சூத்திரனாய் பிறந்தவன் நாடாண்டால் நாடு நாசம் ஆகும் என்பது சனாதானம் பேசும் வருணமகரிஷிகளின் எண்ணம். அவர்கள் தருமத்தை அவர்கள் பேணுகிறார்கள். நம் கடமையை கண்ணியத்தோடு நாம் செய்வோம்.

சனாதான சாதிவெறி வர்க்கம் புரிகின்ற தந்திரங்களைத் தோலுரித்து அறியாமை நீக்கி ஆர்த்தெழுவீர் அடலேறே! மயங்கி உறங்க இதுகாலமல்ல. அடக்குமுறைகளுக்கு எதிராக அடங்கமறுத்து எழு. ஏகலைவன் வித்தை கற்க எந்த சாத்திரமும் அனுமதிக்கவில்லை. அவனாய் கற்றான். பாரில்வாழும் மாந்தர்களின் உள்ளத்தை வென்றான். ஆயின், கட்டை விரலையோ, தலையையோ, காணிக்கையாக இந்நாளில் எவனும் கேட்டால் அவன் பட்டையை உரித்துவிடு.

முதலுக்கே மோசம் வந்தால் முயலாக, ஆமையாக கிடத்தல் நன்றல்ல. ஆயிரம் அடி பள்ளத்தில் வீழ்ந்தவனை கைதூக்கி கரையேற்றும் இந்நேரத்தில், இணையத்திலே கனமான பாறை கொண்டு உன் தலையை சுக்குநூறாக்க எத்தனிக்கும் சூழ்ச்சியாளர்களை கண்டால் உதை. ஓட ஓட விரட்டு. ஆறிலும் சாவு. நூறிலும் சாவு. ஆனது ஆகட்டும்.

தம்பி யுவகிருஷ்ணா! நீயும் விழித்துக் கொள்; விடியப் போகிறது!

அன்புடன்
மு.க.

16 கருத்துகள்:

 1. //இணையத்திலே கனமான பாறை கொண்டு உன் தலையை சுக்குநூறாக்க எத்தனிக்கும் சூழ்ச்சியாளர்களை கண்டால் உதை. ஓட ஓட விரட்டு. ஆறிலும் சாவு. நூறிலும் சாவு. ஆனது ஆகட்டும்.

  தம்பி யுவகிருஷ்ணா! நீயும் விழித்துக் கொள்; விடியப் போகிறது!//

  யின்னப்பா இது..........?????

  பதிலளிநீக்கு
 2. யுவகிருஷ்னா . இத்தனை நாளா நீங்க தூங்கிட்டா இருந்தீங்க

  பதிலளிநீக்கு
 3. உங்களுக்கு தலைக்கனம் வந்த மாதிரி இருக்குது. கொஞ்சம் பார்த்து சார்

  பதிலளிநீக்கு
 4. ஒ இவ்வளவு நாளும் கண்ணை மூடி கொண்டு தான் இருக்கிறீர்களோ . அதனால் தான் நான் கலைஞருக்கு பிரபல் வலை பதிவர் விருது கொடுத்திருக்கிறேன்

  பதிலளிநீக்கு
 5. கரகாட்டகாரன் கவுண்டமணி ஜோக்குதான் ஞாபகத்துக்கு வருது.....!!


  " நாம வாங்குற.... பைவ் ... டென்னுக்கு.... எதுக்கு__ இந்த விளம்பரம் ....."

  பதிலளிநீக்கு
 6. அசலோ, நகலோ என்றே ஐயம் கொண்டேன்.பின், வகையில் கதை என்ற சொல் கண்டே தெளிவுற்றேன். இணையத்தில் உம் பணியை இறுமாப்புடன் தொடர வாழ்த்துகின்றேன்.வாழ்க பல்லாண்டு!

  பதிலளிநீக்கு
 7. Me the First!

  கலைஞர் போலவே நீங்கள் எழுதுவது புதியதல்ல. அது அசலா கற்பனையா என்று அடுத்தவர்கள் மண்டையை பிய்த்துக்கொள்ள வைக்க போகிறது என்பதும் ஆச்சரியமல்ல.

  வாழ்த்துக்கள் லக்கி!

  அதுசரி, என்ன பிரச்சினை பதிவுலகில் உங்களுக்கு?!?!?!

  அன்புடன்

  பதிலளிநீக்கு
 8. Idhan moolam thaangal koora virumbuvadhu ? Palasa nenachu paaru pa... madipaakam MLA seat uku adi podriya ? thalaivar ward councilar ku kooda sooruku paiya aviltha thaan edhavadhu seivaar...

  பதிலளிநீக்கு
 9. Enapa elathayum meratriya ? Mudhalvaruku blog padikiradhu mattum than velaya enna ? illa yaaru kita solli ipdi kenji letter vanguna ?

  பதிலளிநீக்கு
 10. தூங்கும்போதும் உங்களுக்கு இந்த மாதிரி தான் கனவு வருதா ?..ரொம்ப வயசாயிடுச்சு உங்களுக்கு

  பதிலளிநீக்கு
 11. குழம்பிட்டேன் முதல்வர் ஒருவேளை வாழ்த்து மடல் அனுப்பிருப்பாரோன்னு.... மற்ற தோழர்கள் பின்னூட்டம் கன்டு என்னத்தை மாற்றிகொன்டேன்...

  உன்மையை சொல்லனும்னா முதல்வரின் எழுத்து நடை கொன்டுவந்த திறமையை பாரட்டியே தீர வேன்டும்..

  வாழ்த்துக்கள்.... பதிவுலகில் என்ன பிரச்சினை என்று ஒருவர் கேட்கிறார்.... எனக்கு யுகிக்க முடிகிறது அது என்னவென்று.....

  பதிலளிநீக்கு
 12. //Truth 7:54 AM, October 03, 2009
  Idhan moolam thaangal koora virumbuvadhu ? Palasa nenachu paaru pa... madipaakam MLA seat uku adi podriya ? thalaivar ward councilar ku kooda sooruku paiya aviltha thaan edhavadhu seivaar...

  ம்ம்ம், இப்போ என்னோட பேருலயுமா? நல்லா இருங்க போலி ட்ரூத். :-)

  பதிலளிநீக்கு