25 செப்டம்பர், 2009

நான் ஏன் செருப்பு வீசினேன்!

ஜார்ஜ் புஷ்ஷின் மீது செருப்பை வீசியெறிந்த ‘குற்றத்திற்காக’ ஒன்பது மாத சிறை வாசத்திற்குப் பின், கடந்த வாரம் விடுதலையாகியுள்ள முன்தாஜர் அல் ஜெய்தி எழுதிய கீழ்க்காணும் கட்டுரை, கார்டியன் செய்தித்தாளில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டது. அதன் தமிழாக்கம் கீழே தரப்பட்டுள்ளது :


நான் விடுதலையடைந்து விட்டேன். ஆனால், எனது நாடு இன்னமும் போர்க் கைதியாக சிறை வைக்கப்பட்டிருக்கிறது. செயல் குறித்தும், செயல்பட்டவர் குறித்தும், நாயகனைக் குறித்தும், நாயகத்தன்மை வாய்ந்த செயல் குறித்தும், குறியீடு குறித்தும், குறியீடான செயல் குறித்தும் நிறையப் பேச்சுக்கள் அடிபடுகின்றன. ஆனால், எனது எளிமையான பதில் இதுதான். என் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியும், எனது தாயகத்தை ஆக்கிரமிப்பானது எவ்வாறு தனது பூட்சுக் கால்களால் நசுக்கி இழிவுபடுத்த விரும்பியதென்பதும்தான், என்னை செயல்படக் கட்டாயப்படுத்தியது.கடந்த சில ஆண்டுகளில், ஆக்கிரமிப்பின் துப்பாக்கி ரவைகளுக்கு இரையாகி பத்து இலட்சத்திற்கும் மேற்பட்ட தியாகிகள் தமது இன்னுயிரை இழந்தார்கள். கணவனை இழந்த ஐம்பது இலட்சம் பெண்களும், உடல் உறுப்புகளை இழந்த ஆயிரக்கணக்கான மக்களும் நிறைந்து கிடக்கும் தேசம்தான் இன்றைய இராக்.

நாட்டுக்குள்ளும், வெளியிலும் இலட்சக்கணக்கானவர்கள் அகதிகளாய் உழன்று கொண்டிருக்கிறார்கள்.துருக்கியர், அசிரியர், சபியர், யாசித் என அனைவரோடும் தனது அன்றாட உணவை அரபு இனத்தவன் பகிர்ந்துண்ட ஒரு தேசமாக நாங்கள் வாழ்ந்திருந்தோம். சன்னியுடன் ஷியா ஒரே வரிசையில் நின்று வழிபட்ட காலமது. கிறிஸ்துவின் பிறந்தநாளை கிறிஸ்தவரோடு இசுலாமியர் இணைந்து கொண்டாடிய நாட்கள் அவை. இவையனைத்தும் பத்தாண்டுகளுக்கும் மேலான பொருளாதாரத் தடைகளுக்கிடையே, பசியை பகிர்ந்து கொள்ள நேர்ந்த போதிலும் கூட நீடித்திருந்தன.எமது பொறுமையும், ஒற்றுமையும் ஏவப்பட்ட ஒடுக்குமுறையை மறக்கவிடாமல் தடுத்தன.

ஆனால், ஆக்கிரமிப்போ சகோதரர்களையும், நெருக்கமானவர்களையும் பிரித்துத் துண்டாடியது. எங்கள் வீடுகளை சுடுகாடுகளாக்கியது.நான் நாயகனல்ல. ஆனால் எனக்கு ஒரு கண்ணோட்டம் உண்டு. ஒரு நிலைப்பாடு உண்டு. எனது நாடு இழிவுபடுத்தப்படுவதைக் கண்ட பொழுது, எனது பாக்தாத் நகரம் தீயில் கருகிய பொழுது, எனது மக்கள் படுகொலை செய்யப்பட்ட பொழுது, நான் இழிவுபடுத்தப்பட்டவனாக உணர்ந்தேன். ஆயிரக்கணக்கான துயரம் தோய்ந்த காட்சிகள் எனது மனதில் அலைமோதிக் கொண்டிருந்தன. என்னை போரிடத் தூண்டின. இழிவுபடுத்தப்பட்ட அபுகிரைப்…பலூஜா, நஜாஃப், ஹடிதா, சதர் நகரம், பஸ்ரா, தியாலா, மொசூல், தல் அஃபர் என ஒவ்வொரு இடத்திலும் நடைபெற்ற படுகொலைகள்… ஒரு அங்குலம் குறையாமல் காயமுற்ற எனது நாடு… எரியும் தேசத்தினூடாகப் பயணம் செய்து, நேரடியாக பாதிக்கப்பட்டவர்களின் வலியைக் கண்ணால் கண்டேன். துயருற்றவர்களின் ஓலத்தை, அனாதைகளாக்கப்பட்டவர்களின் அலறலை காதுகளில் கேட்டேன்.

ஒரு அவமானம் என்னை அழுத்தி வாட்டியது. நான் பலவீனனாக உணர்ந்தேன்.அன்றாடம் நிகழ்ந்த துயரங்களை தெரிவிக்கும் ஒரு தொலைக்காட்சி நிருபராக, எனது தொழில்சார்ந்த கடமைகளை முடித்த பின்னால், தரைமட்டமாக்கப்பட்ட இராக்கிய வீடுகளின் இடிபாடுகளின் தூசியையோ அல்லது ஆடைகளில் படிந்த இரத்தக் கறைகளையோ, நான் தண்ணீரால் கழுவிய பொழுதுகளில், பற்கள் நெறுநெறுக்க, பாதிக்கப்பட்ட எனது நாட்டு மக்களின் பேரால் பழிக்குப் பழி வாங்குவேனென நான் உறுதிமொழி எடுத்துக் கொள்வேன்.வாய்ப்பு வழிதேடி வந்தது.

நான் அதனைக் கைப்பற்றிக் கொண்டேன்.ஆக்கிரமிப்பினூடாகவும், ஆக்கிரமிப்பின் விளைவாகவும் சிந்தப்பட்ட அப்பாவிகளின் ஒவ்வொரு இரத்தத் துளிக்கும், வேதனையில் கதறிய ஒவ்வொரு தாயின் ஒலத்திற்கும், துயரத்தில் முனகிய ஒவ்வொரு அனாதையின் கண்ணீருக்கும், பாலியல் வன்புணர்ச்சியால் சிதைக்கப்பட்ட பெண்களின் அலறலுக்கும், நான் செய்ய வேண்டிய கடமையாகக் கருதியதனால்தான் அச்செயலை செய்தேன்.என்னைக் கண்டிப்பவர்களுக்கு நான் சொல்வது: “நான் வீசியெறிந்த காலணி, உடைந்து நொறுங்கிய எத்தனை வீடுகளை தாண்டி வந்திருக்கிறதென்று உங்களுக்குத் தெரியுமா? பலியான எத்தனை அப்பாவிகளின் குருதியைக் கடந்து வந்திருக்கிறதென்று உங்களுக்குத் தெரியுமா?

எல்லா மதிப்பீடுகளும் மீறப்படும்பொழுது செருப்புதான் சரியான பதிலடியாகத் தோன்றுகிறது.”குற்றவாளியான ஜார்ஜ் புஷ்ஷின் மீது செருப்பை வீசியெறிந்த பொழுது, எனது நாட்டின் மீதான ஆக்கிரமிப்பை, எனது மக்களைப் படுகொலை செய்ததை, எனது நாட்டின் வளத்தை கொள்ளையடித்ததை, அதன் கட்டுமானங்களை தரைமட்டமாக்கியதை, அதன் குழந்தைகளை அகதிகளாக்கியதை, நான் ஏற்க மறுக்கிறேன் என்பதையே தெரிவிக்க விரும்பினேன்.ஒரு தொலைக்காட்சி நிருபராக, நிர்வாகத்திற்கு தொழில்ரீதியாக ஏற்பட்ட சங்கடத்திற்கும், ஒருவேளை நான் பத்திரிக்கை தருமத்திற்கும் ஊறு விளைவித்திருப்பதாகக் கருதினால், அத்தகைய நோக்கம் எனக்கு இல்லாத போதும், எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒட்டுமொத்தத்தில், ஒவ்வொரு நாளும் தனது தாயகம் இழிவுபடுத்தப்படுவதைக் காணச் சகியாத ஒரு குடிமகனின் அணையாத மனசாட்சியை வெளிப்படுத்தவே நான் விரும்பினேன். ஆக்கிரமிப்பின் அரவணைப்பிற்குள்ளிருந்து தொழில் தர்மம குறித்து முனகுவோரின் குரல் நாட்டுப்பற்றின் குரலை விடவும் ஓங்கி ஒலிக்கக் கூடாது. நாட்டுப்பற்று பேச விரும்பும் பொழுது, அதனோடு தொழில் தர்மம இணைந்து கொள்ள வேண்டும்.எனது பெயர் வரலாற்றில் இடம் பெறுமென்றோ, காசு, பணம் கிடைக்குமென்றோ, நான் இதனைச் செய்யவில்லை. நான் எனது நாட்டைக் காக்க மட்டுமே விரும்பினேன்.

நன்றி – http://porattamtn.wordpress.com/

12 கருத்துகள்:

 1. //....“நான் வீசியெறிந்த காலணி, உடைந்து நொறுங்கிய எத்தனை வீடுகளை தாண்டி வந்திருக்கிறதென்று உங்களுக்குத் தெரியுமா? பலியான எத்தனை அப்பாவிகளின் குருதியைக் கடந்து வந்திருக்கிறதென்று உங்களுக்குத் தெரியுமா?....//

  மிகத் தெளிவான வேதனையின் துயரை வெளிப்படுத்தும் வார்த்தைகளின் கனம்..

  உலகமும், மனித சமூகமும் மிகப் பரந்தது. நாம் நமது கூரையின் மேல்நின்று ..............

  பதிலளிநீக்கு
 2. //"நான் ஏன் செருப்பு வீசினேன்!//

  ஒவர் நைட்ல famous ஆகிறதுக்காக கூட பண்ணியிருப்பாங்க

  பதிலளிநீக்கு
 3. 100 percent corect.america will pay for this assacination.we will pray for iraq,afganisthan/palestine.and all over innocent people.

  பதிலளிநீக்கு
 4. //
  என் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியும், எனது தாயகத்தை ஆக்கிரமிப்பானது எவ்வாறு தனது பூட்சுக் கால்களால் நசுக்கி இழிவுபடுத்த விரும்பியதென்பதும்தான்
  //

  சதாம் ஹூசெய்ன் ஆணைப்படி இராக் ராணுவம் குவைத்தில் ஊடுருவிய போது அந்த மக்கள் இழிவு படுத்தப்படவில்லை....கொண்டாடப்பட்டார்கள்???

  //
  சன்னியுடன் ஷியா ஒரே வரிசையில் நின்று வழிபட்ட காலமது. கிறிஸ்துவின் பிறந்தநாளை கிறிஸ்தவரோடு இசுலாமியர் இணைந்து கொண்டாடிய நாட்கள் அவை. இவையனைத்தும் பத்தாண்டுகளுக்கும் மேலான பொருளாதாரத் தடைகளுக்கிடையே, பசியை பகிர்ந்து கொள்ள நேர்ந்த போதிலும் கூட நீடித்திருந்தன.
  //

  ஆக, ஹியா சன்னி கொலைகளுக்கு புஷ் தான் காரணம்....வேறு எந்த காரணமும் இல்லை....

  //
  ஒரு அங்குலம் குறையாமல் காயமுற்ற எனது நாடு… எரியும் தேசத்தினூடாகப் பயணம் செய்து, நேரடியாக பாதிக்கப்பட்டவர்களின் வலியைக் கண்ணால் கண்டேன். துயருற்றவர்களின் ஓலத்தை, அனாதைகளாக்கப்பட்டவர்களின் அலறலை காதுகளில் கேட்டேன்.
  //

  இந்த பயணத்தை இந்த உண்மை விளம்பி சதாம் ஹூசேன் காலத்தில் குர்திஸ் பகுதியில் செய்து அதைக் குறித்தும் எழுதியிருக்கலாமே??

  //
  “நான் வீசியெறிந்த காலணி, உடைந்து நொறுங்கிய எத்தனை வீடுகளை தாண்டி வந்திருக்கிறதென்று உங்களுக்குத் தெரியுமா? பலியான எத்தனை அப்பாவிகளின் குருதியைக் கடந்து வந்திருக்கிறதென்று உங்களுக்குத் தெரியுமா?
  //

  அமெரிக்க படைகளால் ஏற்பட்ட சேதம் உண்மையான ஒன்று...அதை மறுப்பதற்கில்லை...ஆனால், சதாம் ஹூசேனின் பல வருட ஆட்சிக் காலம் பலி வாங்கிய உயிர்கள் எத்தனை??

  //
  நாட்டுப்பற்று பேச விரும்பும் பொழுது, அதனோடு தொழில் தர்மம இணைந்து கொள்ள வேண்டும்.எனது பெயர் வரலாற்றில் இடம் பெறுமென்றோ, காசு, பணம் கிடைக்குமென்றோ, நான் இதனைச் செய்யவில்லை. நான் எனது நாட்டைக் காக்க மட்டுமே விரும்பினேன்.
  //

  Ballocks!

  Lucky, as some one in media, you know it very well.. There is no such thing as bad publicity!

  பதிலளிநீக்கு
 5. //
  Anonymous said...
  100 percent corect.america will pay for this assacination.we will pray for iraq,afganisthan/palestine.and all over innocent people.

  4:21 PM, September 26, 2009
  //

  Just open up your eyes!

  It's not just America's making....Think about this...

  Saddam was ruling Iraq for more than 10 years...What progress he made? What benefits people of Iraq got? He was filthy, one self interested dictator who killed then president of Iraq to come to power, and interested only in promoting himself....And at the height of stupidity, he chose to invade Kuwait....Now, who prayed for people of Kuwait??

  And Afganistan, After murdering and publicly hanging President Najibullah, the Taliban shits took hold of Afghanistan. And they ruled the country for years. And what they did to people? They even banned girls attending schools, making a whole generation illiterate. And that's their biggest achievement!!!!

  Talking about Palestine, the issue can be resolved, if and only if the Palestine warlords agree that Israel has every right to exist. If they think the country of Israel is illegitimate and continue bombing coffee shops, there is no solution. Period!!!

  பதிலளிநீக்கு
 6. //குற்றவாளியான ஜார்ஜ் புஷ்ஷின் மீது செருப்பை வீசியெறிந்த பொழுது, எனது நாட்டின் மீதான ஆக்கிரமிப்பை, எனது மக்களைப் படுகொலை செய்ததை, எனது நாட்டின் வளத்தை கொள்ளையடித்ததை, அதன் கட்டுமானங்களை தரைமட்டமாக்கியதை, அதன் குழந்தைகளை அகதிகளாக்கியதை, நான் ஏற்க மறுக்கிறேன் என்பதையே தெரிவிக்க விரும்பினேன்//

  உண்மை.

  ஆனால் அந்த கேடு கேட்ட நாய் ராஜபக்ஷே மேல் என்னத்தை வீசி எறிய?

  வெங்கட்,
  வெடிகுண்டு வெங்கட்

  பதிலளிநீக்கு
 7. //சதாம் ஹூசெய்ன் ஆணைப்படி இராக் ராணுவம் குவைத்தில் ஊடுருவிய போது அந்த மக்கள் இழிவு படுத்தப்படவில்லை....கொண்டாடப்பட்டார்கள்???//

  கண்ணுக்கு கண். பல்லுக்கு பல். சரியா?

  //இந்த பயணத்தை இந்த உண்மை விளம்பி சதாம் ஹூசேன் காலத்தில் குர்திஸ் பகுதியில் செய்து அதைக் குறித்தும் எழுதியிருக்கலாமே??//

  சதாம் ஒரு தனிமனிதர். ஈராக்கின் சர்வாதிகாரி. அவரது செயல்கள் அனைத்துக்கும் ஈராக்கின் அத்துணை மக்களும் பொறுப்பேற்க வேண்டுமா?

  நமது மத்திய அரசு எது செய்தாலும் அதற்கெல்லாம் நீங்களும் பொறுப்பு ஏற்றுக் கொள்வீர்களா?

  //அமெரிக்க படைகளால் ஏற்பட்ட சேதம் உண்மையான ஒன்று...அதை மறுப்பதற்கில்லை...ஆனால், சதாம் ஹூசேனின் பல வருட ஆட்சிக் காலம் பலி வாங்கிய உயிர்கள் எத்தனை??//

  சதாமை யாராவது குவைத் பத்திரிகையாளர் செருப்பால் அடித்திருந்தாலும் அதை நான் வரவேற்று இருப்பேன்.


  கடைசியாக, அமெரிக்கா ஈராக் விஷயத்தில் மட்டும் அத்துமீறவில்லை. அணு ஆயுத ஒப்பந்தம் என்ற பெயரில் இந்தியாவின் இறையாண்மைக்குள் கூட அத்துமீறியிருக்கிறது.

  இன்றைய நிலையில் உலகில் அமெரிக்கா அத்துமீறாத பிரச்சினைகளே இல்லை என்று நம்புகிறேன்.

  பதிலளிநீக்கு
 8. //
  யுவகிருஷ்ணா 12:11 PM, September 27, 2009
  //சதாம் ஹூசெய்ன் ஆணைப்படி இராக் ராணுவம் குவைத்தில் ஊடுருவிய போது அந்த மக்கள் இழிவு படுத்தப்படவில்லை....கொண்டாடப்பட்டார்கள்???//

  கண்ணுக்கு கண். பல்லுக்கு பல். சரியா?
  //

  லக்கி,

  நான் அமெரிக்கா செய்ததை நியாயப்படுத்த வரவில்லை...ஆனால் அமெரிக்க ஊடுருவல் குறித்து எழுதும் இவர், குர்திஸ்தானில் மக்கள் தங்கள் சொந்த அரசாங்காத்தாலேயே விஷ வாயு பாய்ச்சி கொல்லப்பட்டதை குறித்து சதாம் இறந்த பிறகும் கூட எதுவும் எழுதியதாக தெரியவில்லை...


  //இந்த பயணத்தை இந்த உண்மை விளம்பி சதாம் ஹூசேன் காலத்தில் குர்திஸ் பகுதியில் செய்து அதைக் குறித்தும் எழுதியிருக்கலாமே??//

  சதாம் ஒரு தனிமனிதர். ஈராக்கின் சர்வாதிகாரி. அவரது செயல்கள் அனைத்துக்கும் ஈராக்கின் அத்துணை மக்களும் பொறுப்பேற்க வேண்டுமா?

  நமது மத்திய அரசு எது செய்தாலும் அதற்கெல்லாம் நீங்களும் பொறுப்பு ஏற்றுக் கொள்வீர்களா?
  //

  மக்கள் பொறுப்பேற்க வேண்டும் என்று நான் சொல்ல வரவில்லை...குறிப்பாக அந்த மக்களே சதாமுக்கு அடிமையாக இருக்கும் போது அவர்கள் மீது எந்த குற்றச்சாட்டும் சொல்ல முடியாது...

  அமெரிக்க படைகளால் ஐம்பது லட்சம் விதவைகள் என்று குமுறும் இவர் குர்திஸ்தான் பற்றியும், ச்தாமின் ரகசிய போலீசால் விதவையாக்கப்பட்டவர்கள் பற்றியும் எழுதியிருந்தால் மிகத் துணிச்சலான, நேர்மையான பத்திரிக்கையாளர் என்று சொல்லலாம்.....ஆனால்???


  //
  கடைசியாக, அமெரிக்கா ஈராக் விஷயத்தில் மட்டும் அத்துமீறவில்லை. அணு ஆயுத ஒப்பந்தம் என்ற பெயரில் இந்தியாவின் இறையாண்மைக்குள் கூட அத்துமீறியிருக்கிறது.

  இன்றைய நிலையில் உலகில் அமெரிக்கா அத்துமீறாத பிரச்சினைகளே இல்லை என்று நம்புகிறேன்.
  //

  ம்ம்ம்...அணு ஒப்பந்தம் பற்றி பலரும் பல விதமாக எழுதிவிட்டார்கள்...நான் படித்தவரை, என்.பி.டி.யில் கையெழுத்திடாத எந்த நாடும் அணு உலைக்கான எரிபொருளை லீகலாக வாங்க முடியாது....

  இந்த ஒப்பந்தம் இந்தியாவை விதிவிலக்காக்குகிறது...அதே சமயம் அப்படி வாங்கப்படும் எரிபொருளை அணுகுண்டு தயாரிக்க பயன்படுத்தவில்லை என்று கண்காணிக்க அனுமதிக்க வேண்டும் என்பது கன்டிஷன்...அதிலும் கூட, இந்தியாவின் ராணுவ சம்பந்தப்பட்ட அணு உலைகள் இந்த கண்காணிப்பில் வராது...

  எனக்கு புரிந்த வரை, இது கிவ் அன்ட் டேக்...தனக்கு விருப்பமில்லாத பட்சத்தில் இந்தியா எப்பொழுது வேண்டுமானாலும் ஒப்பந்தத்திலிருந்து வெளி வந்து விடலாம்...

  இந்த ஒப்பந்தம் இந்தியாவிற்கு சாதகாமாகத் தான் இருக்கிறது....அதனால் அமெரிக்கா நல்லவர்கள் என்று சொல்ல வரவில்லை....அவர்களின் நோக்கம் வேறு...குறிப்பாக இந்தியாவின் பேங்கிங்/இன்சூரன்ஸ் செக்டார்...

  அமெரிக்கா மட்டும் அத்து மீறவில்லை....சைனா, இந்தியா, இலங்கை, பர்மா, தாய்லான்ட், ஆஸ்த்ரேலியா, ஃப்ரான்ஸ், ப்ரிட்டன் என்று எல்லாரும் தங்கள் சக்திக்கு முடிந்த வகையில் அத்துமீறித் தான் கொண்டிருக்கிறார்கள் இல்லையா??

  பதிலளிநீக்கு
 9. நான் அமெரிக்கா செய்ததை நியாயப்படுத்த வரவில்லை...ஆனால் அமெரிக்க ஊடுருவல் குறித்து எழுதும் இவர், குர்திஸ்தானில் மக்கள் தங்கள் சொந்த அரசாங்காத்தாலேயே விஷ வாயு பாய்ச்சி கொல்லப்பட்டதை குறித்து சதாம் இறந்த பிறகும் கூட எதுவும் எழுதியதாக தெரியவில்லை...


  ///


  ஹலப்ஜா நடந்த பொழுது எல்லாம் அமெரிக்கா ஆயுதம் தூக்கி கொடுத்து கொண்டிருந்ததே? சி.ஐ.யெ வின்கையில் நடை பழகிய குழந்தை சதாம்.

  ஈஸீ , நான் கூட சதாம் செய்ததை எல்லாம் ஆதரிக்க வில்லை. ஒரு ப்ரச்ச்னை அதன் ஆதியில் இருந்து பார்க்கபட்டால் தேவலை

  பதிலளிநீக்கு