September 9, 2009

படைப்பும், படைப்பாளியும்!

ஒரு படைப்பாளிக்கு இருக்கும் மிகப்பெரிய சங்கடம் தன் படைப்பு சரியானதுதான் என்று நிரூபிக்க வேண்டிய நிலையே. யாரும், எதையும், யாருக்காகவும் நிரூபிக்க வேண்டியதில்லை. தன்னுடைய குறிப்பிட்ட ஒரு படைப்பின் நியாயத்தை, பரிணாமத்தை மற்றொருவருக்கு எடுத்துச் சொல்லிக் கொள்ளும் நிலையில் இருக்கும் படைப்பாளி, தனது அடுத்த படைப்புக்கான நேரத்தையும், உழைப்பையும் செலவழிக்கிறான், வீணடிக்கிறான்.

ஆசிரியன் செத்துவிடும் பின்நவீனத்துவ சூழலில் ஒரு படைப்பை வாசகனிடம் வைத்துவிட்டபின், அதை விமர்சிக்கும், நியாயப்படுத்தும் உரிமை வாசகனுக்கே உண்டு. ஒரு ஓரமாக உட்கார்ந்து கொண்டு படைப்பாளி வேடிக்கை பார்க்க வேண்டியதுதான். இல்லை நானும் வாசக மனோபாவத்தில் என் கருத்துகளை முன்வைக்கிறேன் என்று படைப்பாளி கிளம்பிவிட்டால், அவனது எதிர்கால படைப்புகளை எழுதுவது யார்?

எதையும் நிரூபிக்காமல் சும்மா இருப்பதே சுகம்.

ஒரு நெருங்கிய தோழருக்கு சொல்ல விரும்பிய அட்வைஸ். நேரில் சொல்ல தயக்கமாக இருப்பதால் பதிவு மூலம் சொல்கிறேன்.

19 comments:

 1. வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. என்ன மண்ணள்ளிப் போட்ட நெருங்கிய தோழர்ன்னே தெரியலியே? இதைக்கூட அவர் முகத்துக்கு முன்னால சொல்ல முடியலேன்னா அவர் உங்களுக்கு நிச்சயமா நெருங்கிய தோழர் இல்லை அல்லது அவர் உங்களுக்கு நெருக்கமானவர் இல்லை. இதெல்லாம் கூடத் தெரியாம பதிவெல்லாம் போட்டுக்கிட்டு.. அட தேவுடா!!என்னாச்சுய்யா உமக்கு??

  ReplyDelete
 3. நல்லதொரு ஆலோசனை யுவகிருஷ்ணா அவர்களே. மிகவும் பயனுள்ளதாகவே இருக்கிறது.

  இங்கே ஒன்றைக் கவனித்தீர்களா? ஒரு தோழருக்கு மட்டுமே சொல்ல வேண்டிய ஆலோசனையை ஒரு படைப்பாளியாகிய நீங்கள் பலருக்கும் பயனுள்ள வகையில் சொல்லி இருக்கிறீர்கள்.

  இதுதான் படைப்பாளியின் முக்கிய பங்கு. தன் வீட்டுக்கு மட்டும் சொல்ல வேண்டியதை சமூகத்தின் பார்வைக்கும் சொல்கிறான் படைப்பாளி.

  தனது படைப்புகள் குறித்த விளக்கம் தேவைப்படும்போது மட்டும் சொல்லிக் கொள்ளலாம், அதையும் அடுத்த படைப்பின் மூலம்!

  மிக்க நன்றி.

  ReplyDelete
 4. சரியாய் சொனீங்க லக்கி.
  //எதையும் நிரூபிக்காமல் சும்மா இருப்பதே சுகம்.// சூப்பர்.
  Opinion differs.

  ReplyDelete
 5. உங்ககிட்ட நா இந்தமாதிரி இன்னும் நெறியா எதிர்பாக்குறேன்....!! ம்ம்ம்..... கமான் .... !! உங்களால முடியும் ....!!

  ReplyDelete
 6. //எதையும் நிரூபிக்காமல் சும்மா இருப்பதே சுகம்//

  மிக்க சரி நண்பா.

  ReplyDelete
 7. அப்படி ”பின்நவீனத்துவ” சூழலில் ஒரு படைப்பை வாசகனிடம் வைத்துவிட்டவர் யார்?
  புல்லரிக்கிறது.மண்டைக் குடைகிறது.

  //ஆசிரியன் செத்துவிடும் பின்நவீனத்துவ சூழலில்//

  அந்தப் படைப்பைப் படித்து விட்டு வாசகனும் சில சமயம் இறந்துவிடுறான்.ஆனைக்கு பானை சரி.

  ReplyDelete
 8. //
  ஒரு ஓரமாக உட்கார்ந்து கொண்டு படைப்பாளி வேடிக்கை பார்க்க வேண்டியதுதான். இல்லை நானும் வாசக மனோபாவத்தில் என் கருத்துகளை முன்வைக்கிறேன் என்று படைப்பாளி கிளம்பிவிட்டால், அவனது எதிர்கால படைப்புகளை எழுதுவது யார்?

  எதையும் நிரூபிக்காமல் சும்மா இருப்பதே சுகம்.
  //

  வரும் பின்னூட்டங்களுக்கு பதில் சொல்லாமல் இருக்கும் ரகசியம் இதுதானோ?

  கலக்குங்க!

  ReplyDelete
 9. பின் குறிப்பு போடலாமில்லையா? அதுவும் இதுல சேருமா? ஹிஹி..

  ReplyDelete
 10. That looks close to my heart.
  Thanks Krishna!
  I have added it to படித்தது / பிடித்தது the series in my site:
  http://www.writercsk.com/2009/09/65.html

  ReplyDelete
 11. எதையும் நிரூபிக்காமல் சும்மா இருப்பதே சுகம்//

  வேறொரு இடத்தில் எனக்கு பிடித்த கவிதையின் வரிகள்

  ReplyDelete
 12. படைப்பதோடு அவன் பணி முடிவடைந்து விடுகிறது.

  உண்மைதான்

  வாழ்த்துக்கள்
  அன்புடன்
  ஆரூரன்

  ReplyDelete
 13. புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
  http://www.ulavu.com
  (ஓட்டுபட்டை வசதிஉடன் )
  உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….

  இவண்
  உலவு.காம்

  ReplyDelete
 14. //ஒரு ஓரமாக உட்கார்ந்து கொண்டு படைப்பாளி வேடிக்கை பார்க்க வேண்டியதுதான்.

  என்ன வேணும்னாலும் சொல்லலாம் போல இல்ல இருக்கு இது. சரியா அது? நான் பதிவி உலகத்திற்கு புதுசு, சரியான்னு தெரியல யுவகிருஷ்ணா. சொல்லுங்களேன்.

  ReplyDelete
 15. நேரில் சொல்ல தயக்கமாக இருந்தால் மெயில் அனுப்ப வேண்டுயதுதானே

  ReplyDelete
 16. படைப்பாளிகளுக்கு மட்டுமல்ல.... பொதுவாழ்க்கையில் இருக்கக்கூடிய எல்லோருக்குமே பொருந்துகிற வாசகம் இது ... “சும்மா இருப்ப்தே சுகம்...” உண்மை என்றுமே தன்னை நிரூபித்துக் கொள்ள ஆதாயம் / ஆதாரம் திரட்ட வேண்டிய அவசியமில்லை... in fact... உண்மை தன்னை நிரூபித்துக் கொள்ள வேண்டிய அவசியமே இல்லை ....

  ReplyDelete
 17. //எதையும் நிரூபிக்காமல் சும்மா இருப்பதே சுகம்//

  சரிதான் நண்பா.

  ReplyDelete
 18. edharkku neril sollaamal padhivu moolam 'paaraa'mugam kaatukireerkal?

  ReplyDelete